சிவகுமாரை வெளுத்து வாங்கிய சரத்குமார்: இப்பொழுது வைரலாகும் பழைய வீடியோ! நடிகர் சிவகுமாரை கடுமையான விமர்சித்த நடிகர் சரத்குமாரின் வீடியோ இப்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
நடிகர் சிவகுமாரை கடுமையாக சாடும் சரத்குமாரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் உலா வருகிறது.
கடந்த சில வாரங்களாக ஜோதிகா, சூர்யாவைப் பற்றிய செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.
பொன்மகள் வந்தாள்
கொரோனா காரணமாக ரிலீசாகாமல் இருக்கும் ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தை நேரடியாக டிஜிட்டல் பிளாட்பார்மில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
இது திரையரங்கு உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இனிமேல், சூர்யா மற்றும் அவரது தயாரிப்பில் வரும படங்கள் திரையரங்குகளில் வெளியிடப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டது.
ஜோதிகா தஞ்சை பெரிய கோயில்
இது ஒரு புறம் இருக்க, ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானதோடு இல்லாமல், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருது வழங்கும் விழாவில், பேசிய நடிகை ஜோதிகா, நான் தஞ்சை பெரிய கோயிலுக்கு சென்றிருந்தேன்.
படப்பிடிப்பிற்காக தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். அப்போது, தஞ்சை பெரிய கோயிலை பார்க்காமல் செல்லாதீர்கள் என்றார்கள். ஆனால், நான் ஏற்கனவே அந்தக் கோயிலைப் பார்த்திருக்கிறேன்.
உதய்பூரில் இருக்கும் அரண்மனைகளைப் போல அவ்வளவு அழகான கோயில் அது. தஞ்சையில் இருக்கும் அரசு மருத்துவமனையில் எனக்கு ஷூட்டிங் இருந்தது.
அந்த கோயிலுக்கு நேர் எதிராக அந்த மருத்துவமனை பராமரிக்கப்பட்டிருந்தது. நான் பார்த்ததையெல்லாம் இந்த இடத்தில் என்னால் சொல்ல முடியாது.
அவ்வளவு வேதனை மிகுந்த நிகழ்வு அது. அதன் பிறகு, அந்த கோயிலுக்கு செல்ல எனக்கு தோன்றவேயில்லை. கோயில்களுக்காக அவ்வளவு செலவு செய்கிறீர்கள், பராமரிக்கிறீர்கள். உண்டியல்களில் பணம் கொட்டுகிறீர்கள்.
அதே அளவு பணத்தை பள்ளிக்கூடங்களுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுத்து உதவுங்கள். கோயில்களைப் போலவே மருத்துவமனைகளும், பள்ளிக்கூடங்களும் முக்கியத்துவம் தரப்பட வேண்டியவை என்று பேசினார்.
அவர் எப்போதோ பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. கூடவே சர்ச்சையாகவும் ஆனது. ஜோதிகாவின் பேச்சுக்கு பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்தனர்.
சூர்யா அறிக்கை
தஞ்சை பெரிய கோயில் பற்றி பேசிய ஜோதிகாவின் கருத்தில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம் என்று அவரது கணவர் சூர்யா அறிக்கை வெளியிட்டார்.
சிவகுமார்
இவ்வளவு ஏன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு, நடந்த ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பேசிய சிவகுமார் நான் கோயில்களுக்கு அதிகமாக போக மாட்டேன். அதற்கு காரணம், கோயில்களில் இன்னும் தீண்டாமை, ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடு இருக்கிறது.
தஞ்சை பெரிய கோயில்
தஞ்சை பெரிய கோயிலின் ஆயிரமாவது ஆண்டு கொண்டாடினார்கள். அந்த கோயிலைக் கட்ட ஆயிரக் கணக்கான சிற்பிகளும், கொத்தனார்களும் வேலை செய்திருப்பார்கள்.
ஒரு சிற்பி 15 அடி உயரமுள்ள ஒரு கல்லை எடுத்து அதன் மீது ஏறி அமர்ந்து கொத்தி செதுக்கி சிவலிங்கமாக்கியிருக்கிறான்.
அந்த சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் செய்துவிட்டால், அந்த சிற்பியாலேயே சிவலிங்கத்தை தொட முடியாது.
இதை நான் தவறாக சொல்வதாக நினைக்க வேண்டாம். செம்மொழி மாநாட்டில் நான் பேசும்போது, தஞ்சாவூரில் வாழ்ந்துகொண்டிருக்கிற அந்த சிவலிங்கத்தை செய்த சிற்பியின் 12வது தலைமுறையைச் சேர்ந்தவர், எனக்கு போன் செய்து, இன்னும் அந்த நிலைமைதான் இருக்கிறது என்று கூறியதாக சிவக்குமார் பேசியுள்ளார்.
நடிகர் சங்க தலைவர் தேர்தல்: சரத்குமார்
இதே போன்று நடிகர் சங்க தலைவர் தேர்தலின் போது, நடிகர் சரத்குமார், சிவகுமார் பற்றி இழிவாக பேசினார்.
சிவக்குமார் எனது மனைவியிடம் வந்து உனது கணவர் சொத்தை எல்லாம் வித்து கடன் எடுத்து அழித்துவிட்டாராமே என்று கேட்டதாக சரத்குமார் குறிப்பிட்டார்.
ஒரு பெண்ணைப் பார்த்து கேட்க வேண்டிய கேள்வியா இது? எனது சொத்தை எல்லாம் எழுதி கொடுத்து எனது மனைவி சிறப்பாக வாழ வேண்டும் என்று நினைப்பவன் இந்த சரத்குமார்.
சொந்த பந்தம், உறவுகள், நண்பர்கள் ஆகியோர் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக எனது சொத்தை கொடுத்தவன் நான். உண்மையான கர்ணன் நான் தான்.
கேவலம் நான் எனது மனைவியின் சொத்தை விற்பவனா? 61 வயதான நான் 25 வயது இளைஞன் முன்பு நேருக்கு நேர் நிற்கும் தைரியம் இருக்கிறது. உடலில் வலிமை இருக்கிறது.
நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனா? உனக்கு எப்படி அப்படி எல்லாம் கேட்க தோன்றியது. உன்னை போய் அண்ணன் அண்ணன் என்று வாய் நிறைய நான் கூப்பிட்டுள்ளேனே!
தைரியம் இருந்தால் நேரடியாக வந்து என்னிடம் கேள்? ஏன்ப்பா தங்கச்சி சொத்தையெல்லாம் வித்துவிட்டயாக்கும் என்று என்னிடம் கேள்.
எனது பொண்டாட்டி கிட்ட எதற்கு கேட்கிறாய்? தைரியம் இருந்தால் ஆம்பிளைக்கு ஆம்பிளையா வந்து கேள். பொம்பிளைகிட்ட கேட்காதே.
எனது சொத்தை விற்று நண்பர்கள், உறவினர்களை காப்பாற்றுபவன்நான். நான் கட்டையில் போகும் போது கூட எனது சொந்த பந்தம் ரோட்டில் நிற்க மாட்டார்கள் கோடான கோடி கோபுரத்தில் தான் நிற்பார்கள்.
கார்த்தி
என்ன பார்த்து கேட்கிறார். அவரெல்லாம் ஒரு மனுசன்? அவரது மகன் கார்த்தி. எந்த பலம் இருக்கிறது என்று அவருக்கு தெரியவில்லை என்னைப்பற்றி பேசியிருக்கிறான்.
நான் பொதுக்குழு, செயற்குழு செல்லவில்லை என்றும், நடிகர் சங்கம் கட்டிடம் தொடர்பான Demolition பத்திரம் கிடையாது, இடத்த வித்துட்டீங்கனு சொன்னீங்க, அது கிடையாது, இது கிடையாது, வருமான வரிய பத்தி சொன்னீங்க என்றெல்லாம் கார்த்தி பேசியதாகவும், அதற்கெல்லாம் தான் பதில் கூறியதாகவும் பேசினார்.
தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து நடிகர் சிவகுமாரும், அவரது குடும்பத்தினர் பேசியதும், செய்வதும் சர்ச்சையாகி வருகிறது.
சிவகுமாருடன் செல்ஃபி
கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிவகுமாருடன் செல்ஃபி எடுக்க சென்ற இலைஞரின் செல்போனை சிவகுமார் தட்டிவிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதற்குப் பதிலாக சிவகுமார் குடும்பத்தினர் புதிதாக மொபைல் போன் வாங்கிக் கொடுத்தனர்.
இப்படி பல சர்ச்சைகள் சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினரை சுற்றி சுற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.