Home நிகழ்வுகள் தமிழகம் தமிழ்நாடு அரசு ஊரடங்கை முழுவதும் தளர்த்துவதாக இல்லை

தமிழ்நாடு அரசு ஊரடங்கை முழுவதும் தளர்த்துவதாக இல்லை

541
0
தமிழ்நாடு அரசு ஊரடங்கை முழுவதும் தளர்த்துவதாக இல்லை

சென்னை: கொரோனாவால் தினமும் பாதிப்பிற்கு உள்ளாகும் நபர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறையாததால், தமிழ்நாடு அரசு ஊரடங்கை இப்போது முழுவதும் தளர்த்துவதாக இல்லை என தெரிகிறது.

திங்கட்கிழமை பிரதமர் மோடியுடன் காணொளிக்காட்சி மூலம் தொடர்பில் பேசிய மாநில முதல் அமைச்சர்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, இல்லை என தெரிகிறது. ஆனால் தமிழக அரசு தற்போது ஊரடங்கை தளர்த்துவதாக இல்லை அதற்கு பதிலாக ஊரடங்கை பகுதியாக குறைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.

படிப் படியாகவே தளர்த்தும்

மூத்த அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், “மத்திய அரசு ஊரடங்கை நீடித்தால் , மாநில அரசும் அதை பின்பற்றி ஆகவேண்டும் என்பது பேரிடர் மேலாண்மை சட்டத்தின் விதி ஆகும். அதுபோல் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தினால் , மாநில அரசு தமிழகத்தில் ஊரடங்கை தளர்த்துவது குறித்து முடிவு செய்யும். மேலும் மத்திய அரசு ஊரடங்கை தளர்த்தினாலும் தமிழக அரசு முழுவதுமாக ஊரடங்கை தளர்த்தாமல் படிப் படியாகவே தளர்த்தும்.”

உதவி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம்

தமிழக முதல்வர் பிரதமருடன் மார்ச் 20 முதல் தொடர்பில் உள்ளார், மேலும் காணொளிக்காட்சி முடிவில் மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு மருத்துவ சாதனங்கள் வாங்க கூடுதல் நிதி வேண்டும் எனவும், அதிக வேலையாட்களை கொண்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகளுக்கு தேவையான பிசிஆர் சோதனை கருவிகள் அதிக அளவில் வேண்டும் எனவும் கடிதம் எழுதினார்.

குணமடைபவர்களின் சதவிகிதம் ஊக்கத்தை தருகிறது

மேலும், தமிழகத்தின் தரமான மருத்துவ சிகிச்சையின் காரணமாக இறப்பு விகிதம் 1.2% ஆக உள்ளதெனவும், 1020 பேர் குணமாகி வீடுதிரும்பிஉள்ளனர்.
” இதனால் நோயிலிருந்து குணமடைந்து வீடு திரும்புபவர்கள் எண்ணிக்கை 54% ஆக உள்ளது ஊக்கம் அளிக்கும் வகையில் உள்ளது”, என முதல்வர் தெரிவித்தார்.

Previous articleவிஜய் டிவி புகழ் விஜே பிரியங்கா தேஷ்பாண்டே பர்த்டே டுடே!
Next articleவெறும் லுங்கியோடு லண்டனில் டான்ஸ்: போலீசை கண்டு மிரண்ட சாண்டி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here