கொல்கத்தா: கொரோனா பரவலை கட்டுபடுத்தும் பொருட்டு ஜூலை 9 முதல் கடுமையான கொரோனா ஊரடங்கை அமல்படுத்த கொல்கத்தா அரசாங்கம் செவ்வாய் கிழமை முடிவு செய்துள்ளது.
வியாழன் மாலை 5 மணி முதல் தீவிர கொரோனா ஊரடங்கு
கட்டுபாட்டு பகுதிகள் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளையும் சேர்த்து சற்று பெரிய கட்டுபாட்டு பகுதிகளாக மாற்றியமைக்கப்பட்டு வியாழன் மாலை 5 மணி முதல் தீவிர கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க முடிவு
அதிகாரிகள் வீட்டிற்கே சென்று அத்தியாவசிய பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர் என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஆனால் இந்த தீவிர ஊரடங்கு எத்தனை நாட்கள் நீடிக்கும் என தெரிவிக்கப்படவில்லை.
தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு ஜூலை 31 வரை அறிவிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கட்டுபாட்டுபகுதிகளில் தீவிர ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாக தெரிகிறது.