மீசை இல்லா விஜய், மாஸ்டர் படத்தில் முதல் முறையாக விஜய் மீசை இல்லாமல் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மாஸ்டர் கதை, மாஸ்டர் ப்ளான் செய்த இயக்குனர்.
அரும்பு மீசை
அரும்பு மீசையுடன் நாளைய தீர்ப்பு படத்தில் அறிமுகமானார் விஜய். அதனைத் தொடர்ந்து சில படங்களுக்குப் பிறகு விஜய்யின் மீசைக்கு என ஒரு ரசிகர் கூட்டம் உருவானது.
பங்க் தலைமுடி, சின்ன உதடுகள், அதன் மேல் குட்டி மீசை என ஆண்கள் பலருமே ‘விஜய் மீசை’ நமக்கில்லையே என விஜய்யைப் பார்த்து ஏங்கியது உண்டு.
காலப்போக்கில் வயது முதிர்ச்சி காரணமாக பழைய விஜய்யை எந்த ஒரு படத்திலும் பார்க்கவே முடிவதில்லை.
கெட்டப் சேஞ்ச்
விஜய் பொதுவாக ‘கெட்டப் சேஞ்ச்’ செய்து கொள்வது இல்லை. அப்படியே கெட்டப் சேஞ்ச் செய்து கொண்டாலும் பெரிய வித்யாசம் இருக்காது.
சமீப காலமாக விஜய், டோப்பா வைத்து ஹேர் ஸ்டைலை மாற்றி நடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். அது சற்று பாசிடிவ் கமெண்ட் வரவே; மாஸ்டர் படத்தில் மேலும் சில மாற்றங்களை செய்துள்ளாராம்.
மீசை இல்லா விஜய்
மாஸ்டர் படத்தில் விஜய் மீசை இல்லாமல் சுத்தமாக கிளீன் சேவ் செய்து சில காட்சிகள் நடித்துள்ளாராம். இதுவரை விஜய் மீசையை சுத்தமாக எடுத்து படத்தில் நடித்ததே இல்லை.
மீசை இல்லா விஜய் பார்க்க எப்படி இருப்பார். இதுவரை விஜய் மீசை இல்லாமல் இருக்கும் ஒரே ஒரு புகைப்படம் மேலே உள்ளது மட்டுமே. அதிலும் மீசை ட்ரிம் மட்டுமே செய்துள்ளார்.
எனவே, மாஸ்டர் படம் ஒரு வித்யாசமான படமாக விஜய்க்கு அமையும் என படப்பிடிப்பில் வேலை செய்த தொழிலாளி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மாஸ்டர் கதை
விஜய் படம் என்றால் ஏதாவது ஒரு உதவி இயக்குனர் என்னுடைய கதை என படம் வெளியாகும் கடைசி நிமிடத்தில் நீதிமன்றம் செல்வது வழக்கம்.
இந்த முறை அப்படி எந்த ஒரு இயக்குனரும் கதை என்னுடையது என்று வரவில்லை. அதேநேரம் படத்தின் கதை கொரியன் படத்தின் தழுவல் என தகவல்கள் கசிந்துள்ளது.
லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் ப்ளான்
சமீபத்தில் இரும்புத்திரை படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்த P.S. மித்ரன், ஹீரோ படத்தில் கதை திருட்டு புகாரில் சிக்கிக்கொண்டார்.
முருகதாசுக்கே ஷட்டர் போட்ட பாக்கியராஜூக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு நேக்காக படத்தை ரிலீஸ் செய்துவிட்டார் P.S. மித்ரன்.
அதேபோன்ற பிரச்சனை தன் படத்திலும் வந்து விடக்கூடாது என்பதற்காக லோகேஷ் கனகராஜ் இது கொரியன் படத்தில் இருந்து சுடப்பட்டது என ஒரு புரளியை உதவியாளர்கள் மூலம் கிளப்பிவிட்டதாகக் கூறப்படுகிறது.
எந்த உதவி இயக்குனரும் புகார் தெரிவிக்க வராத வண்ணம், மாஸ்டரை காப்பாற்ற மாஸ்டர் ப்ளான் செய்துள்ளார் லோகேஷ் கனகராஜ்.
பார்க்கலாம் மாஸ்டர் படம் காப்பியா? அல்லது செய்தி புரளியா? என்று.