டெல்லி கலவரம்; இந்தியாவிற்கு அவமானம், அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ், டெல்லி கலவரம் காரணம் யார்?
அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த வேட்பாளர் பெரின் சந்தர் டெல்லி வன்முறை குறித்து மிகவும் கடுமையாக விமர்சம் செய்துள்ளார்.
அரசுமுறை பயணமாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு கடந்த 24 தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத் நகருக்கு வருகை புரிந்தார்.
அவர் இந்தியாவுக்கு வந்த சில மணி நேரங்களில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பிரிவினருக்கும் ஆதரவு பிரிவினருக்கும் இடையே நடந்த வன்முறை ஏற்பட்டு பின் பெரும் கலவரமாக மாறியுள்ளது.
இந்த கலவரம் காரணமாக இதுவரை 46 பேர் கொல்லப்பட்டனர் மேலும் 300 நபர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்
இருப்பினும் இதுவரை பதற்றம் தனியாததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இயல்பு வாழ்க்கை பெரும் சிரமமாக உள்ளதாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்
இந்த வன்முறை தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் இந்த பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்
இதனிடையே வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த வேட்பாளர் பெரின் சந்தர் டெல்லி வன்முறை குறித்து மிகவும் கடுமையாக விமர்சம் செய்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் இந்தியாவில் தலைமை பண்புகளில் ஏற்பட்ட தோல்வியின் வெளிப்பாடு டெல்லி வன்முறை ஆகும் என்று கூறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்
டெல்லி கலவரம் காரணம் யார்?
உலகின் முதல் நிலைநாட்டின் அதிபர் வருகையின் போது உள்நாட்டு சுயநல அரசியல் வாதிகளின் வெறுப்புணர்வால் திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித்திட்டம் என்றும் அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இதனிடையே கலவரம் குறித்த நிலவரம் தொடர்பாக விவாதிக்க டெல்லி சட்டமன்றம் நேற்று கூடியது இதில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வன்முறை என்பது முட்டாள்களின் செயல் என்று கலவரக்காரர்களை கண்டித்துள்ளார்.
கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட உத்தரவிட்ட நிலையில் நேற்று இரவு பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்
மேலும் வன்முறை உருவாக்கும் வகையில் பேசியதாக பாஜக தலைவர் மீது வழக்கு தொடர டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்
இதன் காரணமாக நீதிபதி இரவோடு இரவாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது
டெல்லி கலவரம் குறித்த நிலவரத்தை ஐநா பொதுச்செயலாளர் கூர்ந்து கவனித்து வருவதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்
மேலும் வன்முறையில் உயிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி அளித்துள்ளார் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க பரிசீலிப்பதாக டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்
எனினும் டெல்லியில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்க பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ்
டெல்லி வன்முறை தொடர்பாக இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் பல அரசியல் தலைவர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது .
ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறைகள் குறித்து மனித உரிமையை மதிக்காத தலைமைகளால் உருவானதாக தெரிவித்துள்ளார்.
இன்னொரு வேட்பாளரான செனேட்டர் மார்க் வார்னர் மதப்பாகுபாட்டை தவிர்க்க வேண்டும் எனவும் கருத்து கூறி வருகின்றனர்.
இதனால் டெல்லி வன்முறை உள்நாட்டிலும் மட்டுமல்லாமல் உலகளவில் பேசு பொருளாகி உள்ளது இந்தியாவிற்கு தலைகுனிவாக அமைத்துள்ளது