Home நிகழ்வுகள் இந்தியா நிர்பயா குற்றவாளிகள்: தூக்கிலிட முடியாது – நீதிமன்றம்

நிர்பயா குற்றவாளிகள்: தூக்கிலிட முடியாது – நீதிமன்றம்

1355
0
நிர்பயா குற்றவாளிகள் தூக்குதண்டனை

நிர்பயா குற்றவாளிகள்: நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிடமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை பயன்படுத்தி தப்பிப்பு

எந்த வழக்கிலும் இல்லாத அளவிற்கு நிர்பயா பாலியல் குற்றவாளிகள் சட்டத்தின் சலுகைகளைப் பயன்படுத்தி தப்பித்துக்கொண்டே உள்ளனர்.

நான்கு பேரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும் என்ற ஒரு உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றுவிட்டனர்.

இதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதிக்கு கருணை மனு அளிப்பது, உடல்நலக்குறைவு எனக் காரணம் சொல்வதுமாக இருந்து வருகின்றனர்.

எல்லாம் முடிந்து மார்ச் 2-ம் தேதி நேற்று இவர்களை தூக்கிடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நால்வரில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவால் தள்ளிப்போய் விட்டது.

கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் மறுதேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றவாளிகள் உந்துகோல்

பாலியல் குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தூக்கிலிருந்து தப்பமுடியும் என இந்த வழக்கு உதாரணமாக அமைந்துவிட்டது.

நிர்பயா குற்றவாளிகளைப் போன்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் கருணை மனுவை காரணம் காட்டி தப்ப முடியும் என மற்றவர்களுக்கும் இது உந்துகோலாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here