குடியுரிமை திருத்த சட்டம் 2019: இந்தியாவின் சமீத்திய அடையாளமாக போராட்டங்கள் மாறுவதற்கு காரணமான குடியுரிமை திருத்த சட்டம் குறித்த உண்மை தகவல்களைதெரிந்து கொள்வோம்.
குடியுரிமை திருத்த சட்டம் கடந்த 2019 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பட்டது. குடியுரிமை சட்டம் 1955 இல் மேற்கொண்ட திருத்த சட்டம்
இந்திய குடியுரிமை:
இந்த புதிய திருத்தத்தின் படி அண்டைநாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களால் 2014 டிசம்பர் 31 க்கு முன் வரை இந்திய எல்லைக்குள் நுழைந்த இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவம் ஆகிய சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.
இஸ்லாமிய நாடுகள்:
பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய சட்டத்தின் படி இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது .
இந்த புதிய சட்டதிருத்தமானது இதற்கு முன்னர் குடியுரிமை சட்டத்தில் செய்யபட்ட மாற்றங்களில் இருந்து வேறுபடுவதற்கு காரணம் வரலாற்றில் முதல் முறையாக மதத்தை ஒரு காரணியாக கொண்டிருப்பது எனலாம் .
இந்த புதிய குடியுரிமை சட்டம் கடந்த ஜனவரி மாதம் 10 தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது
பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதி:
முன்னதாக குறிப்பிட்ட இந்த திருத்தமானது கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது ஆளும் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு வழங்க பட்டிருந்தது என்பது மிக முக்கிய காரணமாகும் .
இந்த புதிய சட்டத்திருத்தம் காரணமாக புதியதாக இயல்பு குடியுரிமை பெற தேவையான காலம் 11 ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைந்துள்ளது
இதன் காரணமாக தற்போதைய உளவுப்பிரிவின் தகவல்படி சுமார் 30000 பேர் உடனடியாக குடியுரிமை பெற தகுதி பெறுகின்றனர்
குடியுரிமை திருத்த சட்டம் 2016 மசோதா:
பாரதிய ஜனதா கட்சியால் முதன்முதலில் கடந்த 2016 ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் 2016 மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது .
இந்த மசோதா பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது .
மேற்சொன்ன மசோதா கீழ்வையில் நிறைவேற்றப்பட்டு மேலவைக்கு அனுப்பப்பட்டது , இருப்பினும் அப்போது இருந்த அரசியல் சூழ்நிலைகளால் ராஜ்ய சபையில் கிடப்பில் போடப்பட்டது .
இதனையடுத்துதான் கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு தற்போது நிறைவேற்ற பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது
பொது சிவில் சட்டம் :
பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளான காஷ்மீர் பிரிவு 370 நீக்கம் , ராமர்கோயில் கட்டுதல் , குடியுரிமை சட்டம் , விவசாய வருமானம் இரட்டிப்பு , பொது சிவில் சட்டம் போன்ற முக்கிய ஐந்து திட்டங்களில் நான்கு அம்சங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அடுத்ததாக பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்க படுகிறது
இந்த சட்டத்தில் மேலும் மியான்மர் நாட்டின் ரொஹின்யா அகதிகள் , திபெத்திய அகதிகள் , இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது குறித்து எந்த அம்சமும் இல்லை .
ஈழத்தமிழ் அகதிகள்:
குறிப்பாக இலங்கை இந்துக்களான ஈழத்தமிழ் அகதிகள் கடந்த 1980 முதல் 1990 வரையான காலத்தில் இந்தியாவில் தங்க அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது .
அதே போன்று திபெத்திய புத்த மத அகதிகளுக்கு கடந்த 1950 முதல் 1960 வரையான காலத்தில் இந்தியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டது
தேசிய குடிமக்கள் பதிவேடு:
குடியுரிமை சட்டமானது தேசிய குடிமக்கள் பதிவேடு உடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது,இருப்பினும் தேசிய குடிமக்கள் பதிவேடானது அமல்படுத்தப்படும் இந்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது .
குடியுரிமை சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த எந்த மதத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது