இந்தியா: கொரோனாவால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களின் எண்ணிக்கை 1,568 ஆக உயர்வு மற்றும் தொற்று ஏற்பட்டவர்களின் எண்ணிக்கை 46,433 ஆக உள்ளது. இதில் 12,726 பேர் குணமடைந்து வீடுதிரும்பி உள்ளனர்.
அதிகரிக்கும் கொரோனா பரவல்
திங்கட்கிழமை மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 195 ஆக இருந்தது இதனால் செவ்வாய் கிழமை மொத்த 1,568 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இல்லாத அளவிற்கு இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. மேலும் கடந்த் 24 மணி நேரத்தில் புதிதாக 3850க்கும் அதிகமானவர்களை கொரோனா தாக்கியுள்ளது.
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நோபல் பரிசு பெற்ற அபிஜித் பேனர்ஜி உடன் கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை எப்படி சமாளிப்பது என்பது குறித்து காணொளியில் ஆலோசனை நடத்தினார். இதற்கு “நாம் மாநில அரசுகளுக்கு அதிக நிவாரணத்தொகை கொடுக்க வேண்டும், அதை வைத்து மாநில அரசுகள் புதிய கொள்கை முடிவுகளை எடுப்பார்கள்.” என தெரிவித்தார்.
மூன்றாம் கட்ட கொரோனா ஊரடங்கின் முதல் நாள் கொரோனா வைரஸ் பரவலின் எண்ணிக்கையை பார்க்கும் பொழுது வரும் நாட்களில் அதிகமாக பரவல் இருக்கக்கூடும் என்று தெரிகிறது.
அனேக இடங்களில் கூட்டம்
மதுபான கடைகள் முன் மட்டும் இல்லாமல் பெரும்பாலான இடங்களில் அதிக கூட்ட நெரிசலை பார்க்க முடிகிறது மேலும் சமூக விலகல் கடைபிடிக்கப்படுவதை மக்கள் தவிர்பது போல் தெரிகிறது. மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் நிலையும் இதேபோல் உள்ளது.
உலக அளவில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 35 இலட்சத்தையும் தாண்டி உள்ளது மேலும் 2,52,510 பேர் உலக அளவில் உயிர் இழந்து உள்ளனர். இதில் அமெரிக்கா அதிகம் பாதித்த நாடாக தற்போதுவரை உள்ளது அங்கு 11,66,083 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டும் 67,913 பேர் இறந்தும் உள்ளனர்.