புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இந்திய – சீன எல்லையில் உள்ள லடாக் பகுதியை பார்வையிட்டு, இந்திய இராணுவ வீரர்கள் முன் உரையாற்றினார்.
கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் உள்ள இடம் நிமு
இராணுவ தலைமை அதிகாரிகள் பிபின் ராவத் மற்றும் எம்.எம். நாராவானே ஆகியோருடன் பிரதமர் மோடி இராணுவத்தினர் இருக்கும் கடல் மட்டத்தில் இருந்து 11,000 அடி உயரத்தில் இமாலயத்தில் இருக்கும் நிமு என்ற இடத்திற்கு உலங்கு வானூர்தியில் சென்றார்.
சீனாவுடனான மோதலில் 20 இராணுவ வீரர்கள் உயிர் இழந்த சம்பவம்
இந்த திடீர் பயணத்தில் அங்குள்ள இராணுவ வீரர்களிடம் கடந்த ஜூன் 15 இல் சீனாவுடன் நடந்த மோதலில் 20 இராணுவ வீரர்கள் உயிர் இழந்த சம்பவம் குறித்து உரையாற்றினார்.
திருக்குறளை சுட்டி காட்டிய மோடி
அவ்வாறு உரையாற்றும் பொழுது “மறமானம் மாண்ட வழிச்செலவு தேற்றம் எனநான்கே ஏமம் படைக்கு” என்ற படைமாட்சி அதிகாரத்தில் உள்ள திருக்குறளை சுட்டி காட்டி அதற்கு இந்தியில் விளக்கம் அளித்து பேசினார்.
மேலும் அந்த உரையாடலில் கிருஷ்ணரிடம் உள்ள புல்லாங்குழலை பற்றியும் சுதர்சன சக்கரத்தை பற்றியும் சுட்டி காட்டி பேசினார்.