Home நிகழ்வுகள் இந்தியா இதுவரை இல்லாத அளவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது

இதுவரை இல்லாத அளவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது

308
0
இதுவரை இல்லாத அளவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது

இதுவரை இல்லாத அளவில் கொரோனா உச்சம் தொட்டுள்ளது. தொடர்ந்து இந்தியாவில் அதிகளவில் உயர்ந்துவரும் கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை பேரும் சவாலாகவே உள்ளது.

புதுடெல்லி: இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,502 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. ஒரே நாளில் 325 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையா 3,32,424 ஆக அதிகரித்துள்ளது. 1,53,106 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 1,69,798 பேர் இதுவரை குணமடைந்துள்ளனர்.

இதுவரை நோய் தொற்றுக்கு 9,520 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 57,74,133 இரத்தமாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளன.

கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,15,519 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. 1,69,798 பேர் இதுவரை கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.

நாட்டிலேயே அதிகப்படியாக டெல்லியில் கொரோனா தொற்றால் இதுவரை 41,182 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 1,327 ஆக உள்ளது.

Previous articleபெண்களை தொடர்ந்து அதிகளவில் தாக்கும் கொரோனா
Next articleசட்ட விரோதமாக தத்தெடுக்கப்பட்ட 8 வயது சிறுவன் மதுரையில் மீட்பு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here