குடியுரிமை சட்டம் அமல். நிறைவேற்ற முடியாது எனக் கூறும் மாநில அரசுகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா எச்சரித்துள்ளார்.
குடியரசுச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றிவிட்டால் அந்தச் சட்டத்தை மாநில அரசுகள் செயல்படுத்த முடியாது எனக் கூற வாய்ப்பில்லை என முன்னாள் ஹரியானா மாநில முதல்வரும் மூத்த காங்கிரஸ் தலைவருமான பூபேந்தர் சிங் ஹூடா தெரிவித்துள்ளார் .
குடியுரிமை சட்டம் அமல்
ஆளும் பாஜக அரசு குடியுரிமைச் சட்டத்தில் திருத்தம் செய்துள்ளதை அனைவரும் அறிந்ததே..!
இந்தச் சட்டமானது, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் இருந்து இந்தியாவில் அகதிகளாக ஆவணங்கள் இன்றி குடியேறும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், ஜெயின் மதத்தினர், பவுத்த மதத்தினர் போன்றவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்பதே.
இந்தச் சட்டத்திற்கு பல மாநிலங்கள் போர்க்கொடி தூக்கியுள்ளன.குறிப்பாக வடகிழக்கு மாநிலங்களான மேற்கு வங்கம், டெல்லி, பீஹார் போன்ற மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்தியாவில் பல பகுதிகளில் போராட்டங்கள் பலதரப்பட்ட மக்களால் நடத்தப்படுகின்றன. எதிர்க் கட்சியான காங்கிரஸும் தனது பங்குக்கு எதிர்ப்பைக்காட்ட தவறவில்லை.
மேற்கு வங்கம், கேரளா மட்டுமின்றி காங்கிரஸின் ஆட்சி அதிகாரத்தில் உள்ள பஞ்சாப் மாநிலமும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக பஞ்சாப் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
இதன் தொடர்ச்சியாக காங்கிரஸின் பிடியில் உள்ள ராஜஸ்தான், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களும் குடியுரிமைச் சட்டத்திற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆதரவுக்குரல்
ஆனால் இதுகுறித்து முன்னாள் ஹரியானா மாநில முதல்வர் கூறியிருப்பது இதற்கு காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாற்றிக்கு எதிர்மாறாக உள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பூபேந்தர் சிங் ஹூடா இதுகுறித்து கூறியதாவது,
“குடியுரிமைச் சட்டத்தை மத்திய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி விட்டால் மாநில அரசுகள் அதனை செயல்படுத்த முடியாது என கூற முடியாது. இதுவே இந்திய சட்ட விதிமுறை. மாறாக நீதிமன்றத்தின் மூலமாக மட்டுமே தீர்வு காண வாய்ப்புள்ளது” எனக் கூறியுள்ளார்.
குடியுரிமை சட்டத்திற்கு ஆதரவாக, காங்கிரஸ் பக்கம் இருந்து முதல் ஆதரவுக்குரல் நீண்டுள்ளது. எனவே பாஜக இன்னும் மும்முரமாக சட்டத்தை செயல்படுத்த வாய்ப்புள்ளது.