புதுடெல்லி: ஜுன் 23 இல் நடக்கவிருக்கும் பூரி ஜகன்நாத் கோயில் இரத யாத்திரைக்கு உச்ச நீதிமன்றம் திங்கள் கிழமை கட்டுபாடுகளுடன் அனுமதி அளித்து உத்தரவு.
தகுந்த முன்னேற்பாடுகளுடன் நிகழ்ச்சியை நடத வேண்டும்
கோவில் நிர்வாகம், மத்திய மற்றும் ஒடிசா மாநில அரசுகள் தகுந்த கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு தகுந்த முன்னேற்பாடுகளுடன் இந்த நிகழ்ச்சியை நடத்துமாறு கேட்டுக் கொண்டன.
ஜீன் 18 இல் இந்த ஆண்டு இரத யாத்திரையை கொரோனா பரவல் காரணமாக நிறுத்திவைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்ததை அடுத்து செய்யப்பட்ட மேல் முறையீட்டில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேல் முறையீட்டில் தீர்ப்பு
மேல் முறையீட்டில் பல நூறு ஆண்டுகளாக இந்நிகழ்வு கடைபிடிக்கப்பட்டு வருவதால் கொரானாவை கருத்தில் கொண்டு பக்தர்கள் இன்றி இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து இந்த தீர்ப்பு வந்துள்ளது.
பொதுவாக இந்த பூரி ஜகன்நாத் ரத யாத்திரையில் உலகில் இருந்து இலட்சக்கணக்கான மக்கள் வந்து கலந்து கொல்வது வழக்கமாகும்.
பக்தர்கள் இன்றி இவ்விழா கொண்டாடப்படும்
இம்முறை கொரோனா பரவலால் வந்துள்ள நீதிமன்ற தீர்ப்பால் மிக மிக குறைந்த எண்ணிக்கையிலான பக்தர்கள் அல்லது பக்தர்கள் இன்றி இவ்விழா கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.