Home நிகழ்வுகள் தமிழகம் ஃபானி புயல் தாக்கம்: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை உண்டு

ஃபானி புயல் தாக்கம்: தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மழை உண்டு

0
753
ஃபானி புயல் தாக்கம்

ஃபானி புயல் தாக்கம் காரணமாக தமிழகம் முழுவதும் இந்த வருடம் மிகஅதிக அளவு பெய்ய இருந்த கோடை மழை பொய்த்து போனது.

தமிழக வானில் இருந்த மொத்த காற்றின் ஈரப்பதத்தையும் ஃபானி புயல் ஒரிசாவை நோக்கி ஈர்த்துக்கொண்டு சென்றுவிட்டது.

எனவே தமிழகத்தின் வெப்பநிலை அதிகரித்து உள்ளது. வெயிலின் தாக்கம் பல மாவட்டங்களில் அதிகமாக இருந்தது.

இந்த வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி ஆகிய 6 மாவட்டங்களில் மழைபெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here