பானி புயல் ஆக்ரோசம் மிக கொடூரமாக இருந்தது. நின்று கொண்டு இருந்த பள்ளிப் பேருந்தை அல்லேக்காக புரட்டிப்போட்டது.
மாடி மீது இருந்த க்ரில் கூரையை அப்படியே தூக்கிகொண்டு பறந்தது. பெட்ரோல் பங்க் கூரையையும் விட்டு வைக்கவில்லை.
டார் டாராக கண்ணில்பட்ட கூடாரங்களை கிழித்து எறிந்தது. 200 கிலோமீட்டர் வேகத்தில் ஒரிஸா மாநிலத்தை துவம்சம் செய்தது.
புயலின் கோரத்தாண்டவம் பலமாக இருந்தும், அங்கு உயிர் பலிகள் பெரிய அளவில் ஏற்படவில்லை. இதுவரை 12 பேர் மட்டுமே உயிரிழந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புயல் வரும் முன்பே 11 லட்சம் சுற்றுலா பயணிகளை வெளியேற்றினர். விமான நிலையம், ரயில்நிலையங்களை மூடி புதிதாக யாரும் உள்ளே வராத வண்ணம் தடுத்தனர்.
மேலும் புயல் கரையைக் கடக்கும் இடங்களில் வாசித்த 8 லட்சம் பேரை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றினர்.
உடமைகளை விட்டு வர மறுத்தவர்களை கூட போலீசார் கெஞ்சிக் கூத்தாடி அழைத்துச் சென்று பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர்.
அதையும் மீறி புயல் கரையைக் கடக்கும் இடங்களில் வாசித்த சிலர் மட்டுமே படுகாயம் அடைந்தனர். சிலர் உயிரிழந்தனர்.
இந்தியாவில் கோரத்தாண்டவம் ஆடிய ஃபானி புயல் பெயர் வைத்த நாடான வங்கதேசம் சென்றவுடன் வேகத்தை குறைத்து வலுவிழந்து கப்சிப் என மாறிப்போனது.