இந்தியாவை அடித்து துவைத்த மேக்ஸ்வெல்: ஆஸ்திரேலியா வெற்றி
இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி தொடரை சமன் செய்யுமா என்று அனைவரும் எதிர்பார்த்தோம்.
முதலில் பேட் செய்த இந்திய அணி அதிரடியாக ஆடி 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது.
இந்தியா சார்பில் அதிரடியாக ஆடிய கோலி 72, ராகுல் 47 ரன்களும் சேர்த்தனர். போன ஆட்டத்தில் சொதப்பிய தோனி இந்த ஆட்டத்தில் 3 சிக்சர்களுடன் 40 ரன்கள் எடுத்தார்.
பின்னர் கலம் இறங்கிய ஆஸ்திரேலியா தொடக்கத்தில் தடுமாறினாலும் மேக்ஸ்வெல்லின் அதிரடி ஆட்டத்தில் எளிதாக இலக்கை எட்டியது.
அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 55 பந்துகளில் 113 ரன்கள் அடித்தார். இதில் 9 சிக்ஸர் அடங்கும். இதன் மூலம் ஆஸ்திரேலிய அணி தொடரை வென்றது.
11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவை டி20 தொடரில் வீழ்த்தியுள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்திய மண்ணில் கேப்டன் கோலி முதல்முறையாக தொடரை இழந்தார்.
40 மாதங்களுக்கு பிறகு இந்திய மண்ணில் தொடரை இழந்தது இந்திய அணி. மேலும் சர்வதேச டி20 போட்டியில் 50 சிக்ஸெர்கள் அடித்த பட்டியலில் கோலி மற்றும் தோனி இடம் பெற்றுள்ளனர்.
டி20 போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் 350 சிக்சர்களுடன் தோனி முதல் இடம் பிடித்துள்ளார்.