Home Blog Page 138

18 மணி நேரம் சண்டை செஞ்ச விக்ரம்: இயக்குநர் பாராட்டு!

0
Chiyaan Vikram Action Scene

Vikram; 18 மணி நேரம் சண்டை செஞ்ச விக்ரம்: இயக்குநர் பாராட்டு! கோப்ரா படத்திற்காக சியான் விக்ரம் கிட்டத்தட்ட 18 மணிநேரம் சண்டைக் காட்சியில் நடித்ததாக இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

கோப்ரா படத்திற்காக விக்ரம் தொடர்ந்து 18 மணி நேரம் சண்டைக் காட்சியில் நடித்தார் என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து தெரிவித்துள்ளார்.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் அஜய் ஞானமுத்து. தற்போது சியான் விக்ரமை வைத்து கோப்ரா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய கோப்ரா படத்தில் விக்ரமுக்கு 10க்கும் மேற்பட்ட அவதாரங்கள் என்று கூறப்படுகிறது. இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ரஷ்யாவில் நடந்தது.

கொரோனா காரணமாக படப்பிடிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்ட படக்குழுவினர் இந்தியா திரும்பினர்.

கொரோனா பாதிப்பிலிருந்து மீண்ட பிறகு எஞ்சியுள்ள படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், சியான் விக்ரம் நேற்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து சொல்லும் வகையில், ஏன் விக்ரமை அனைவருமே நேசிக்கிறார்கள் என்பது குறித்து பிரபலங்கள் பேசிய வீடியோ ஒன்றை படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதையடுத்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து விக்ரம் குறித்து முக்கியமான தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்தப் படத்திற்காக தொடர்ந்து 18 மணி நேரம் சண்டைக் காட்சியில் நடித்தார். தொடர்ந்து மேலும், பல காட்சிகள் எடுக்க வேண்டும் என்று கூறியதும், சற்றும் முகம் சுளிக்காமல் ஓகே சொன்னார் என்று அவர் மகிழ்ச்சியோடு கூறியுள்ளார்.

3

கடற்கரையில் பிகினி உடையில் கணவரோடு காத்து வாங்கும் பூஜா!

0
Pooja Ramachandran

மாடல், விஜே, நடிகை என்று கலக்கியவர் பூஜா ராமச்சந்திரன். கடந்த 2004 ஆம் ஆண்டு கோயம்புத்தூர் நடந்த அழகிப் போட்டியில் கலந்து கொண்டு டைட்டில் வெற்றி பெற்றார்.

ஆனால், 2005 ஆம் ஆண்டு மிஸ் கேரளா அழகிப் போட்டியில் 2 ஆம் இடம் பிடித்தார். அதன் பிறகு எஸ் எஸ் மியூசிக் சேனலில் விஜேவாக அறிமுகமானார்.

பீட்சா, நண்பன், காதலில் சொதப்புவது எப்படி, காஞ்சனா 2, நண்பேன்டா, காலம் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாமல், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

கடந்த 2010 ஆம் ஆண்டு விஜே கிரேக் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு, 2017 ஆம் ஆண்டு இருவரும் விவாகரத்து பெற்றனர். பின்னர், 2019 ஆம் ஆண்டு நடிகர் ஜான் கோக்கன் என்பவரைத் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது முதல் ஆண்டு திருமண நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மேலும், பூஜாவின் கடற்கரை ஆல்பம் என்ற ஹலோ ஹேஷ்டேக்கில் பூஜாவின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

ஏர்டெல் வோடஃபோன் இலவச சேவை யார் யாருக்கெல்லாம் தெரியுமா?

0
ஏர்டெல் வோடஃபோன் இலவச சேவை

ஏர்டெல் வோடஃபோன் இலவச சேவை யார் யாருக்கெல்லாம் தெரியுமா? ஊரடங்கு முடியும் வரை ஏர்டெல் வோடஃபோன் இலவச சேவை வழங்க முடிவு.

உலகம் முழுவதும் கொரோனா மின்னல் வேகத்தில் பரவி வரும் நிலையில் அனைவரும் ஊரடங்கில் இருந்து சமூக விலகலை கடைபிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் டெலிகாம் சேவைகளின் பயன்பாடு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தொலைத் தொடர்பு சேவை வழங்கி வரும் பொதுத் துறை நிறுவனங்களான பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் ஆகியவை ப்ரீபெய்டு செல்லிடப்பேசி சேவையை வரும் ஏப்ரல் 20-ம் தேதி வரை நீட்டிப்பதாகத் தெரிவித்தது.

ஏப்ரல் 17ம் தேதி வரை வாடிக்கையாளர்களுக்கு இன்கமிங் வசதி இலவசம் என்றும் ரூ.10 டாக் டைம் வழங்கப்படும் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவித்தது.

3

வீட்டில் மது தாயாரிக்க முயன்றவர்கள் போலீஸ் வலையில் சிக்கினார்கள்

0

வீட்டில் மது தாயாரிக்க முயன்றவர்கள் போலீஸ் வலையில் சிக்கினார்கள், இணையத்தில் வீடியோ பார்த்து வீட்டில் மது தாயாரிக்க முயன்ற இருவர் கைது.

மே 3ஆம் தேதி வரை நாடே ஊரடங்கில் இருப்பதால் மது பானங்கள் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் குடிக்கு அடிமையாகி இருந்தோர் அனைவரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இதனால் மாற்று போதை பொருட்கள் பயன்படுத்தி வருகின்றனர். இதில் சிலர் தேவை இல்லாததை குடித்து உயிரும் போகிறது சிலர் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

அந்த வகையில் சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரையை அடுத்த சின்ன நீலாங்கரை குப்பத்தை சேர்ந்தவர் ராகுல்.

ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து இவருக்கு வினோத் ராஜா என்ற நண்பர் உள்ளார். இருவரும் மது பிரியர்களாக இருக்கும் நிலையில் ஊரடங்கால் கடைகள் இல்லாததால் விரக்தியில் இருந்து வந்துள்ளனர்.

இருவரும் இணைந்து யூடியூப் பார்த்து மதுபானம் தயாரிக்க முடிவு செய்து திராட்சை, நாட்டு சர்க்கரை, பட்டை இலை மற்றும் சில பொருட்களை வைத்து மதுபானம் தயாரிக்க முயன்றுள்ளனர்.

இதுகுறித்து தகவலறிந்த நீலாங்கரை போலீசார் ராகுல் மற்றும் நண்பர் வினோத் ராஜா இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

World Heritage Day 2020 Theme; உலகப் பாரம்பரிய தினம் 2020 தீம்

0
World Heritage Day 2020 Theme

World Heritage Day 2020 Theme; உலகப் பாரம்பரிய தினம் 2020 தீம், International Day for Monuments and Sites 2020 theme, History of World Heritage Day.

உலகின் வெவ்வேறு பகுதிகளில் வெவ்வேறு இன மக்கள் தங்களுக்கென தனித் தனி கலாச்சாரம், பாரம்பரியமென கடைபிடித்து வருவதை பேணி பாதுகாப்பதே உலகப் பாரம்பரிய தின நோக்கம்.

நம் முன்னோர்கள் நமக்கு விட்டுச் சென்ற பல அறிய உயர்ந்த கலைகள் மற்றும் அதை கொண்டுள்ள புண்ணிய தலங்கள் ஆகியை பற்றி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

History of World Heritage Day

1982ஆம் ஆண்டு துனிசியாவில் நடைபெற்ற மாநாட்டில் ஏப்ரல் 18ஆம் தேதி சர்வதேச நினைவிடங்கள் (International Day for Monuments and Sites) நாளாக கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

அடுத்த வருடம் யுனெஸ்கோ இதை அங்கீகரித்தது. இதுவே பின்னாளில் உலக பாரம்பரிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

உலகப் பாரம்பரிய தினத்தை கொண்டாடுவது எப்படி

நினைவிடங்கள், அதிசய தலங்களுக்கு இலவசமாக விருப்பமுள்ளவர்களை அனுப்பி அதன் முக்கியத்துவம் வரலாறு பற்றி எடுத்துரைப்பது.

நமது பாரம்பரிய காலாச்சாரங்களை பற்றி விழிப்புணர்வு முகாம்கள், நிகழ்ச்சிகள் நேரிலோ அல்லது இணையத்திலோ நடத்துவது.

புத்தகங்கள், தபால் மற்றும் பிரபலமான வலைத்தளங்களில் இதை பற்றி குறிப்பிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது.

today what special day in world – india – tamilவரலாற்றில் இன்று  இன்றைய நாள் சிறப்புthe day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.

3

18/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

18/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

உங்களின் மன விருப்பங்கள் நிறைவேறும் நாளாக இருக்கும். செய்யப்படும் காரியங்கள் அனைத்தும் வெற்றி பெறும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகி இருக்க கூடிய நாளாகும். உடல்நிலை சமநிலையில் இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று உங்களின் இலட்சியம் நிறைவு பெரும் நாளாக இருக்கும். தனலாபம் சிறந்து விளங்கும். குடும்ப சொத்து பிரச்சனைகள் தீரும். கணவன் மனைவி அன்பு மேம்பட்ட நாளாக இருக்கும். நற்செய்தி தேடி வரும் நாளாக இருக்கும்.

மிதுன ராசிபலன்

இன்றைய பணிகளை பொறுமையாக செய்ய வேண்டிய நாளாகும். கணவன் மனைவியிடையே சண்டை வர வாய்ப்புகள் அதிகம். தொழில் மந்தமானதாக இருக்க கூடிய நாளாகும்.

கடக ராசிபலன்

இன்று உங்களின் மூலைக்கு வேலை தர வேண்டிய நாளாகும். தங்களை தாங்களே உற்சாகமாக வைத்து கொள்ள வேண்டும். நண்பர்களின் உதவியை நாட வேண்டாம். அருகில் உள்ள கோவிலுக்கு சென்று வரவும்.

சிம்மம் ராசிபலன்

இன்று உங்களின் சாதகமன நாளாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் கவனமாக இருப்பீர்கள். உங்களின் பேச்சால் மற்றவர்களை கவருவீர்கள். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்கும் நாளாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று எதிர்கால தேவைகளை நிறைவு செய்யும் நாளாக இருக்கும். பணியில் பாராட்டுகள் தானே தேடி வரும். திருமண பேச்சுகளை முடிப்பீர்கள். நல்ல வளர்ச்சியான நாளாக இருக்கும்.

துலாம் ராசிபலன்

இன்று எண்ணங்கள் மனதை குழப்பிக் கொண்டே இருக்கும். உத்தியோகத்தில் கவனமாக இருக்கவும். மனதில் போராட்டத்தை குறைக்க குழந்தைகளுடன் நேரத்தை செலவு செய்யுங்கள். காக்கைக்கு எள் அன்னம் வைக்கவும்.

விருச்சிக ராசிபலன்

இன்று வெற்றி பெற கடின உழைப்பு அவசியம். அதனால் கூடுதல் வருமானம் தேடி வரும். தொழிலில் நேர்மையான அணுகுமுறை அவசியமாகும். பணத்தை மிச்சப்படுத்தி சேமிக்க வேண்டிய நாளாகும்.

தனுசு ராசிபலன்

உங்களின் முயற்சி நல்லபடியாக முடியும். தங்க நகை சேர்க்கை ஏற்படும். தாத்தா வகையறா சொத்து பிரச்சனைகள் இருந்தால் தீரும். பணியில் நற்பலன்கள் காணப்படும். மொத்ததில் பொன்னான நாளாக இருக்கும்.

மகரம் ராசிபலன் 

இன்று தேவையற்ற மன குழப்பங்களை தவிர்க்கவும். தியானம் மூலம் மன அமைதி பெறவும். கடன்களை வாங்க வேண்டாம். குடும்ப பாரம் அதிகமாக இருக்கும் நாளாகும். ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும்.

கும்ப ராசிபலன்

இன்று நம்பிக்கையான எண்ணத்தை வளர்க வேண்டிய நாளாகும். உணர்ச்சி வசப்படுதலை குறைக்க வேண்டிய நாள். காரியத்தில் கவனமாக இருங்கள். வெற்றி நிச்சயம் கிடைக்கும்.

மீனம் ராசிபலன் 

இன்று உங்களின் வளர்ச்சிக்கு தடைகள் பல ஏற்படும். வியாபாரத்தில் விரயம் ஏற்படலாம். தகவல் தொழில்நுட்ப துறையில் பணிபுரியும் மக்கள் கவனமாக நடந்து கொள்ள வேண்டும். பணவரவு மந்தமாக காணப்படும் நாளாகும்.

18/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

சீனாவிலிருந்து 24,000 டெஸ்டிங் கிட் தமிழகம் வந்தடைந்தது!..

0

சென்னை: சீனாவிலிருந்து இன்று காலை 24,000 ராபிட் டெஸ்டிங் கிட் எனப்படும் கொரோனா பாதிப்பை 30 நிமிடத்தில் உறுதி செய்யக்கூடிய கருவிகள் வந்தடைந்தது.

24,000 ராபிட் டெஸ்டிங் கிட் (Rapid Testing Kit) தமிழகம் வந்தடைந்தது

சில நாட்கள் தாமதத்திற்க்கு பிறகு சீனா இதை வியாழக்கிழமை இந்தியாவிற்க்கு அனுப்பிவைத்திருக்கிறது.
முதலில் 3,00,000 கருவிகள் வியாழக்கிழமை அன்று டெல்லி வந்தடைந்தது.பிறகு 24,000 கருவிகள் விமானம் மூலம் சென்னை வந்தது.

அடுத்த சில வாரங்களில் தமிழ்நாட்டிற்க்கு மேலும் 3,75,000 எண்ணிக்கையிலான கருவிகள் சீனாவிலிருந்து வந்தடையும் என தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக(TNMSC) அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இந்திய மற்றும் தமிழக நிறுவனங்களும் இத்தகைய கருவிகளை உற்பத்தி செய்தால் மேலும் அதிக எண்ணிக்கையிலான கொரோனா பாதிப்பு பரிசோதனைகளை செய்யமுடியும் என எதிர் பார்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் கொரோனோவால் பாதிப்படைந்தவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த அனைவருக்கும் கொரொனா பாதிப்பு பரிசோதனை செய்யப்படும்

மற்றும் இருமல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் இருப்பவர்களுக்கும் இப்பரிசோதனை செய்யப்படும் என்று சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள பாலிமெரஸ் செயின் ரியாக்சன்(PCR)படி கொரோனா பரிசோதனை செய்ய 5 மணி நேரம் ஆகும் எனவும்

இந்த ராபிட் டெஸ்ட் கருவிகள் மூலமாக மேலும் எளிமையாக மற்றும் அதிக பாதுகாப்பான முறையில் 30 நிமிடத்தில் பரிசோதனையை செய்து முடிக்கலாம் என மூத்த வைரஸ் ஆராய்ச்சியாளர் ஒருவரால் தெரிவிக்கப்பட்டது.

3

வீட்டுக்குள்ளேயே இப்படி செய்யும் பிக் பாஸ் ரைசா!

0
Raiza Wilson Squash Court

Raiza Wilson; வீட்டுக்குள்ளேயே இப்படி செய்யும் பிக் பாஸ் ரைசா! லாக்டவுனில் வீட்டிலேயே இருக்கும் நிலையில், ரைசா வில்சன் வீட்டிற்குள்ளேயே ஸ்குவாஷ் விளையாடி வருகிறார்.

வீட்டிற்குள்ளேயே நடிகை பிக் பாஸ் ரைசா வில்சன் ஸ்குவாஷ் விளையாடி வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பீதி காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வரும் மே 3 ஆம் தேதி வரையில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது.

இதன் காரணமாக அப்பாவி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா நிவாரண நிதி வழங்கப்பட்டு வருகிறது.

கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக சினிமா பிரபலங்கள் பலரும் வீட்டிற்குள்ளேயும் பிஸியாகவே இருக்கின்றனர்.

வீட்டு வேலைகள் சமையல், துணி துவைப்பது, வீட்டை சுத்தம் செய்வது என்றும், தோட்ட வேலை பார்ப்பது, உடற்பயிற்சி செய்வது, யோகா, ரசிகர்களுடன் உரையாடுவது என்றும் பிஸியாக இருக்கின்றனர்.

இந்த நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரைசா வில்சன் தொடர்ந்து விஐபி 2, பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, அலைஸ், காதலிக்க யாருமில்லை, எஃப்.ஐ.ஆர், ஹேஷ்டேக் லவ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், கொரோனா காரணமாக வீட்டில் இருக்கும் ரைசா வில்சன், தனது வீட்டின் உள்புற சுவரை ஸ்குவாஷ் விளையாட்டு தளமாக மாற்றி அவர் ஸ்குவாஷ் விளையாடுவது போன்று ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

மேலும், வீட்டில் எனது சொந்த சிறிய ஸ்குவாஷ் கோர்ட்டை உருவாக்கியுள்ளேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக் கவசம்….ரைமிங்கா விவேக் கொரோனா ஐடியா!

0
Vivek Corona Idea

உடலுக்கு மிளகு ரசம்; உயிருக்கு முகக் கவசம்….ரைமிங்கா விவேக் கொரோனா ஐடியா! காமெடி நடிகர் விவேக் கொரோனா அறிவுரை வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

காமெடி நடிகர் விவேக் கொரோனா ஐடியா வீடியோ ஒன்றை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

கொரோனா பீதியில் அனைத்து உலக நாடுகளும் என்ன செய்வது என்று தவித்து வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட உலக நாடுகளையும் தாண்டி கொரோனா எப்படியோ இந்தியாவிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

எப்படியோ ஊரடங்கு உத்தரவு என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் என்னவோ அவ்வளவு ஒன்றும் பாதிப்பில்லை என்று கூறப்படுகிறது. எனினும், கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத்தான் செய்கிறது.

இந்த நிலையில், காமெடி நடிகர் விவேக் கொரோனா ஐடியா என்று புதுவிதமாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், அவர் கூறியிருப்பதாவது:

கிட்டத்தட்ட 25 நாட்களாக் நாம் லாக்டவுனில் இருந்திருக்கிறோம். இன்னும் கொஞ்ச நாட்கள் இருக்கப்போகிறோம். இவ்வளவு நாட்கள் இருந்தது முக்கியமில்லை. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கப் போகிறோம் என்பதுதான் முக்கியம்.

காரணம், மற்ற நாட்களுடன் ஒப்பிடுகையில், 130 கோடி மக்கள் தொகை கொண்ட நமது நாட்டில் ஏற்பட்டுள்ள தொற்று என்பது, மிகவும் குறைவு.

அதற்கு காரணம், முழு ஊரடங்கை கடைபிடித்ததால்தான். ஆகையில், அரசு கூறிய வழிமுறைகளின் படி நாம் ஓரளவு பின்பற்றி நடந்து கொண்டுள்ளோம் என்பதுதான் இந்த குறைவான தொற்று.

இதை இன்னமும் குறைந்து முற்றிலும் இதிலிருந்து வெளியில் வருவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? அடுத்து இருக்கப்போகிற 20 நாட்கள் நாம் கண்டிப்பாக முகக்கவசம், அணிய வேண்டும். வாய் மற்றும் மூக்கு இரண்டையும் மூடியிருக்கும்படியான முக்கவசத்தை அணிய வேண்டும்.

அப்போ கண்ணிற்கு பாதிப்பு வராதா என்று கேட்டால்? அப்படியில்லை. அது வெறும் வெண்படமாக (conjunctivities) இருந்துவிட்டு போய்விடும். ஆதலால் அது ஆபத்தில்லை. மிகவும் முக்கியமானது மூக்கு மற்றும் வாய் இரண்டையும் முகக்கவசத்தால் மூடிக் கொள்ள வேண்டும்.

வீட்டை விட்டு வெளியில் செல்லும் மக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து கொள்ள வேண்டும்.

இரண்டு சம் மிகவும் முக்கியம். சாப்பாட்டுக்கு மிளகு ரசம். முகத்துக்கு முகக் கவசம். இரண்டும் இருந்தால் வாழ்க்கை ஆசம் (awesome) என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

விக்ரமுக்காக சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட கோப்ரா படக்குழு!

0
Chiyaan Vikram Birthday

Cobra; விக்ரமுக்காக சர்ப்ரைஸ் வீடியோ வெளியிட்ட கோப்ரா படக்குழு! சியான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு அவரது நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படத்தின் குழுவினர் வீடியோ வெளியிட்டு அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கோப்ரா படக்குழுவினர் சியான் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

சியான் விக்ரம் இன்று தனது 54 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில், அவரது நடிப்பில் உருவாகி வரும் கோப்ரா படக்குழுவினர் வீடியோ வெளியிட்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் சியான் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா. இப்படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி நடித்து வருகிறார்.

7 ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனமும், வியாகாம் 18 ஸ்டுடியோஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.

இப்படத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லன் வேடத்தில் நடிக்கிறார். ஆக்‌ஷன், திரில்லர் கதையில் உருவாகும் இப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வருகிறது.

அதோடு, இந்தப் படத்தில் விக்ரம் 10க்கும் அதிகமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் விக்ரம் இன்று  தனது 54-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள், நண்பர்கள் மற்றும் ரசிகர்கள் என்று அனைவரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், கோப்ரா படக்குழு “தங்களுக்கு ஏன் விக்ரமை பிடிக்கும்” என்பதை கூறி பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில், சர்ப்ரைஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

3