Home Blog Page 139

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கோரிய மனு தள்ளுபடி!..

0

நாடுமுழுவதும் கொரோனா பரவலைத் தடுப்பதற்க்காக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டு உள்ளதால் மதுப்பிரியர்கள் மதுபானம் அருந்த முடியாமல் தவித்து வருகின்றனர்.

திடீர் என்று மது அருந்துவதை நிறுத்த முடியாமல் சாயம் பூச பயண்படும் வார்னிஷ்போன்ற திரவங்களைக் குடித்து உயிர் இழந்தச் சம்பவங்களும் நிகழ்ந்தன.

சில இடங்களில் அரசு டாஸ்மாக் கடைகள் உடைக்கப்பட்டூம், குடோன்களிலிருந்து மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவங்களும் நடந்தன.

இவ்வாறு தொடர்ந்து மது அருந்தியவர்கள் திடீர் என அருந்தாமல் விட்டால் உடல் நிலை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும்.

டாஸ்மாக் கடைகளை திறக்கக் கோரிய மனு

இது போன்ற காரணங்களாலும், கள்ளச்சாராயம் பெருக வாய்ப்பு உள்ளதாலும் அரசு குறைந்த பட்சம் 2 மணி நேரம் திறக்கவேண்டும் என ஸ்டாலின் இராஜா என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வாதிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுப்பையா மற்றும் பொங்கியப்பன் அடங்கிய அமர்வு , “பிற மாநிலத்திலும் இதுபோன்ற மதுக்கடைகளைத் திறக்க அனுமதித்த உத்தரவுகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளதை

சுட்டிகாட்டிய அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்டு டாஸ்மாக் கடைகளைத் திறக்க வலியுறுத்திய மனுவைத் தள்ளுபடி செய்தனர்.

மது அருந்தும் சிலர் இந்த ஊரடங்கு நாட்களை பயண்படுத்தி மது அருந்தாமல் வாழ முயற்றி மேற்கொள்ள முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

3

அடுத்து அதிகமக்களை இழக்கப்போறது ஆப்ரிக்காதான் – உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

0
அடுத்து அதிகமக்களை இழக்கப்போறது ஆப்ரிக்காத்தான் - உலகசுகாதார நிறுவனம் எச்சரிக்கை

Coronavirus in Africa : உலகில் கொரோனவைரஸ் அடுத்து அதிக மக்களை பழிவாங்கப்போறது ஆப்ரிக்காவில்தான் என உலக சுகாதாரநிறுவனம் எச்சரித்துள்ளது.

கொரோனாவைரஸ் சீனாவில் வூஹான் மாகாணத்தில் தோன்றினாலும், இதுவரை உலகில் அதிக மக்களை பாதித்தது அமெரிக்காவில்தான்.

உலகம் முழுவதும் பல நாடுகள் பலவிதமான கட்டுப்பாடுகளுடன் கொரோனாவினை எதிர்த்து வரும் இந்தவேளையில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக ஆப்ரிக்கத்தான் கொரோனவினால் அதிகமாக பாதிக்கப்படப்போவதாக உலக சுகாதாரண நிறுவனம் எச்சரித்துள்ளது.

வல்லரசு நாடுகளான அமெரிக்கா, ஸ்பெயின் போன்ற நாடுகளே கொரோனாவினை கட்டுப்படுத்த முடியாமல் தவிக்கும் இந்நேரத்தில், பெரிதளவு மருத்துவவசதி இல்லாத நாடுகள் இதனை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான ஒன்று.

Coronavirus in Africa

கடந்த சில வாரங்களாக ஆப்ரிக்காவில் கொரோனாவைரஸின் தாக்கம் வேகமாக அதிகரித்துளள்ளது. இதுவரை 1000 பேர் இருந்ததோடு மட்டுமல்லாமல் 18000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டே போனால், ஆப்ரிக்க அரசாங்கத்திற்கு மருத்துவ கருவிகள் தட்டுப்பாடு வரலாம் எனவும் மேலும் இதனை குறைக்க முடிந்தளவு சமூக இடைவெளியினை கடைபிடிக்கவும் என்று கூறியுள்ளது WHO.

அரசாங்கம் என்னதான் கூறினாலும் மக்களுக்கு இதன் தீவிரம் தெரியாமல் வழக்கம்போல நடமாடுகின்றனர். அதோடு ஆப்பிரிக்காவில் பல இடங்களில் சமூக இடைவெளி கடைபிடிக்கமுடியாத சூழ்நிலைகளும் உள்ளது.

அது மட்டுமல்லாமல் ஆப்ரிக்காவில் இறந்த ஒரு நபருக்கு வெண்டிலேட்டர் இல்லாததால் மருத்துவம் செய்ய முடியவில்லை என்று கூறியுள்ளது அந்நாட்டு அரசு.

இப்பொழுதும் நீங்கள் இதன் தீவிரத்தை உணர்ந்து கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை என்றால், உலகில் எந்த நாடுகளிலும் இல்லாத அளவுக்கு மனிதர்கள் பலியாகலாம் என்று உலக சுகாதார நிறுவனம் ஆப்ரிக்க அரசினை எச்சரித்துள்ளது.

3

புருஷனை கலாய்த்த பொண்டாட்டி: மாடர்ன் திருவள்ளுவரான சாந்தனு!

0
Shanthanu Bhagyaraj Wife Keerthy

Shanthanu; புருஷனை கலாய்த்த பொண்டாட்டி: மாடர்ன் திருவள்ளுவரான சாந்தனு! சாந்தனுவை மாடர்ன் திருவள்ளுவர் என்று குறிப்பிட்டு கீர்த்தி போட்டு கலாய்த்துள்ளார்.

சாந்தனு திருவள்ளுவர் போன்று இருப்பதாக அவரது மனைவி கீர்த்தி மீம்ஸ் போட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் தன்க்கென்று தனி அடையாளம் பதித்தவர் பாக்யராஜ். இவரது மகன் சாந்தனு பாக்யராஜ் சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார்.

தற்போது விஜய்யின் மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார். விரைவில் மாஸ்டர் படம் அதாவது விஜய்யின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்று கூறப்படுகிறது.

இவரும், டி.வி. தொகுப்பாளர் கீர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.

இந்நிலையில், சாந்தனுவின் மனைவி கீர்த்தி, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில், திருவள்ளுவர் போன்று நீண்ட தாடியுடன் இருக்கும் தனது கணவர் சாந்தனுவின் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

மேலும், சாந்தனுவை மாடர் திருவள்ளுவர் என்று குறிப்பிட்டுள்ளார்.

3

டுவிட்டரில் மோதிக்கொண்ட தல, தளபதி ரசிகர்கள்: சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு வைரல்!

0
Ajith

Vijay Ajith Fans Fight; டுவிட்டரில் மோதிக்கொண்ட தல, தளபதி ரசிகர்கள்: சகட்டுமேனிக்கு மீம்ஸ் போட்டு வைரல்! அஜித், விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் மோதிக் கொண்டு சகட்டுமேனிக்கு மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

டுவிட்டரில், #மே1அஜித்குபாடைகட்டு, #June22BlackdayForVijay ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

என்னும் எத்தனை காலத்திற்குத்தான் அஜித், விஜய் ரசிகர்கள் மோதிக் கொள்வார்களோ தெரியவில்லை.

அஜித் ரசிகர்கள் விஜய் பற்றியும், விஜய் ரசிகர்கள் அஜித் பற்றியும் மீம்ஸ் உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.

விஜய்க்கு வரும் ஜூன் 22 ஆம் தேதி பிளாக்டே என்றும், அஜித்துக்கு மே 1 ஆம் தேதி பாடை கட்டு என்றும் டுவிட்டரில் ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

Ajith Fans

சினிமாவில் அறிமுகமான காலங்களில் இருந்து அஜித் மற்றும் விஜய் இருவருமே நண்பர்களாக இருக்கின்றனர். அஜித்துக்கு, விஜய் பரிசு கொடுப்பதும், விஜய்யை அஜித் பாராட்டுவதும் என்று அவர்கள் இருக்கிறார்கள்.

அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் அஜித்தைப் போன்று உடை அணிந்து வரவேண்டும் என்பதற்காகத்தான் இப்படி கோட் சூட்டில் வந்ததாக விஜய் கூறினார்.

தற்போது கூட கனடாவில் இருக்கும் விஜய் மகன் சஞ்சய் எப்படி இருக்கிறார் என்று அஜித், விஜய்க்கு போன் செய்து நலம் விசாரித்துள்ளார் என்று தகவல் வெளியாகி வருகிறது.

Thalapathy Fans

அப்படியிருக்கும் போது, விஜய் ரசிகர்கள் அஜித்தைப் பற்றியும், அஜித் ரசிகர்கள் விஜய்யைப் பற்றியும் சகட்டுமேனிக்கு மீம்ஸ் உருவாக்கி டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். ஏன், திடீரென்று இப்படி செய்கிறார்கள் என்பது குறித்து தெரியவில்லை.

வரும் மே 1 ஆம் தேதி அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாட இருக்கிறார். இன்னும் 13 நாட்கள் இருக்கும் நிலையில், அஜித் குறித்து இப்படி மோசமான டுவிட்டர் #மே1அஜித்குபாடைகட்டு ஹேஷ்டேக் உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர்.

இதே போன்று மாஸ்டர் படம் விஜய்யைன் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் தேதி வெளியாக இருப்பதாக கூறப்படும் நிலையில், #June22BlackdayForVijay என்ற டுவிட்டர் ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

Vijay Fans

Director Siva

3

இனிமேலும் ஊரடங்கு வேலைக்கு ஆகாது – அமெரிக்காவை மீண்டும் திறக்க புதிய முறைகளை அறிவித்த டிரம்ப்

0
இனிமேலும் ஊரடங்கு வேலைக்கு ஆகாது - அமெரிக்காவை மீண்டும் திறக்க புதிய முறைகளை அறிவித்த டிரம்ப்

Trump Phase plan to reopen america :

உலகத்திலேயே அமெரிக்காவில் தான் கொரோனாவைரஸ் வேகமாக பரவிவருகிறது. 6 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொரோனவினால் பாதித்திருந்தாலும், கொரோனாவினை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கை தளர்த்தப்போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்.

இந்த மாதமே அமெரிக்காவில் பல நகரங்கள் திறக்கப்படும் என்றும் அதற்கான பல புதிய விதிமுறைகளையும் கூறிய டிரம்ப், லாக்டவுன் திறந்த பின்பு மக்களை அந்தந்த மாகாண கவர்ணர்கள், பெடரல் அரசு உதவியோடு கண்காணித்துக்கொள்ளவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தடுப்பதற்காகவும் மேலும் அதனை முற்றிலுமாக ஒழிக்கவே ஊரடங்கினை பிறப்பித்தது அரசு, ஆனால் அந்த ஊரடங்கினால் எந்த பயனும் இல்லை.

இனிமேலும் இந்த ஊரடங்கு வேலைக்கு ஆகாது என்றும், அமெரிக்காவிற்கும், அமெரிக்க மக்களுக்கும் ஊரடங்கு இனி தேவை இல்லை என்று கூறினார் டிரம்ப்.

அமெரிக்காவினை திறக்க டிரம்ப் கூறிய வழிமுறைகள் (Phase plan to reopen america) : 

ஆனால் தற்போது இருக்கும் ஊரடங்கு உடனடியாக முற்றிலுமாக நீக்கப்படாது, ஊரடங்கு மொத்தம் மூன்று கட்டங்களாகத்தான் தளர்த்தப்படும் என்றும், அந்த மூன்று கட்டங்களினை பற்றி தெளிவான முழு உரையும் கொடுத்துள்ளார்.

முதல் கட்டத்தில் வெளியில் கூட்டமாக 10 நபர்களுக்கு மேல் இருக்கக்கூடாது என்றும், கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள் வெளியே வரவேகூடாது என்றும் கூறியுள்ளார். அதுபோக வேலைக்கு செல்லும் நபர்களுக்கும் ஒருசில விதிமுறைகள் உண்டு.

இரண்டாம் கட்டத்தில் வெளியில் கூட்டமாக 50 நபர்களுக்குமேல் எங்கும் இருக்கக்கூடாது என்றும், ஜிம்கள் சரியாக சமூக இடைவெளிகளை கடைபிடித்தால் திறக்கலாம் என்றும் கூறியுள்ளார்.

மூன்றாம் கட்டத்தில் வழக்கம்போல் நகரம் மாறிவிடும் என்றும், கொரோனா அறிகுறிகள் இருக்கும் நபர்கள் வெளியில் வராமல் இருக்கவேண்டும் என்று கூறியுள்ளார்.

6 லட்சத்திற்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை கொண்டுள்ள அமெரிக்க அரசு, லாக்டவுன் வேலைசெய்யாது என்று அதனை தளர்த்தபோவதனை பார்த்து பலர் அச்சப்படுகின்றனர்.

3

அறிகுறிகள் இல்லாத அனைவருமே பரிசோதனை செய்யவேண்டும் – மத்திய அரசின் அதிரடி முடிவு

0
அறிகுறிகள் இல்லாத அனைவருமே பரிசோதனை செய்யவேண்டும் - மத்திய அரசின் அதிரடி முடிவு

ஏப்ரல் 20 முடிந்தபின் ஊரடங்கில் பல தளர்வுகள் இருப்பதாக கூறுகிறது மத்திய அரசு.

கொரோன வைரஸ் பரவலை தடுக்க உலகநாடுகள் அனைத்தும் பலவிதமான முயற்சிகள் எடுத்துவருகின்றன. இந்திய கடந்த 21 நாள் இருந்த ஊரடங்கினை மேலும் 14 நாட்கள் நீட்டித்து முழுதீவிரத்துடன் கொரோனாவினை கட்டுப்படுத்தி வருகிறது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிக அளவில் ஏற்படவில்லை என்றாலும், தினமும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகமாகிக்கொண்டேதான் சென்றது.

இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை உள்ள நாட்டில் எப்போதுவேண்டுமானாலும் இதன் தீவிரம் அதிகமாகுமென்று அரசு மிக கவனமாக முடிவுகளை எடுத்துவருகிறது.

ஊரடங்கினை மேலும் நீடித்தது மட்டுமல்லாமல், பாதிக்கப்பட்ட இடங்களை மிகவும் தீவிரமாக கண்காணித்து கொரோனாவின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு முழு ஈடுபாட்டுடன் செயல்படுகிறது.

கடந்த மூன்று நாட்களாக கொரோனாவின் தீவிரம் இந்தியாவில் குறைந்துவருகின்ற காரணத்தால், ஏப்ரல் 20க்கு பின்னர் ஊரடங்குகளில் சில விதிமுறைகளோடு, சில தளர்வுகளும் கிடைக்கும் என்று அரசு கூறியுள்ளது.

விவசாயம், குறு சிறு தொழில்கள் மற்றும் கட்டிடத்தொழில், 100 நாட்கள் வேலைவாய்ப்பு போன்ற தொழில்கள் எல்லாம் நடக்கலாம் என்று கூறியுள்ளது. கிராமப்புற பகுதிகளில் இருக்கும் ஒரு சில தொழிற்சாலைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனாவின் தாக்கத்தினை நன்றாக பரிசீலித்த மத்தியஅரசு, 170 மாவட்டங்களை மட்டும் ஹாட்ஸ்பாட்டாக அறிவித்துள்ளது.

ஏப்ரல் 20 முடிந்த பின் இந்த மாவட்டங்கள் தற்போது உள்ளபடியே இருக்கும் என்றும் அதில் பல புதிய கட்டுப்பாடுகளும் விதித்துள்ளது.

இந்த மாவட்டங்களுக்கு வெளியில் இருந்து யாரும் உள்ளேயும், உள்ளே இருந்து யாரும் வெளியேயும் செல்ல கூடாது என்று விதிமுறைகளை கூறியுள்ளது.

ஹாட்ஸ்பாட்டாக உள்ள மாவட்டங்களில் கொரோனா பாதித்த பகுதிகளில் அறிகுறிகள் இருக்கும் அனைவருமே பரிசோதனைக்கு வரவேண்டும் என்றும், கொரோனா பாதித்த நபர்களுடன் தொடர்பில் இருந்த அனைவருமே அறிகுறிகள் இல்லையென்றாலும் பரிசோதனைக்கு வரவேண்டும் என்று கட்டளை விடுத்துள்ளது.

இதன்மூலம் கொரோனா விரைவில் கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று மத்தியஅரசு உறுதியுடன் கூறியுள்ளது.

3

தமிழ்நாட்டில் பெருநகரங்கள் உட்பட 22 மாவட்டங்கள் கொரோனா ஹாட்ஸ்பாட்!

0

புதுடெல்லி: ஊரடங்கு நாடெங்கும் அமல் படுத்தப்பட்டுள்ள நிலையில் மத்திய அரசு நாடுமுழுவதுமான 170 ஹாட்ஸ்பாட் மாவட்டங்களின் பெயர்களை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில்  முக்கிய பெருநகரங்கள் உட்பட 22 மாவட்டங்கள் ஹாட்ஸ்பாட்

முக்கிய நகரங்களாகிய புதுடெல்லி, மும்பை, பெங்களூரூ, சென்னை, கொல்கத்தா மற்றும் ஐதராபாத் ஆகிய பெரு நகரங்களும் இதில் அடக்கம்.

இதில் தமிழ்நாடு 22 மாவட்டங்களுடன் முதல் இடம் உள்ளது அதைத்தொடர்ந்து ராஜஸ்தான் மற்றும் மராட்டியம் முறையே 11 மாவட்டங்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளன.

அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒரு ஹாட்ஸ்பாட் எனப்படுவது சிகப்பு மண்டலம் எனவும் அது ஒரு மாநிலத்தின் அல்லது நாட்டின் கொரோனா பாதிப்பில் 80 விழுக்காட்டை கொண்டிருக்கும், அது ஒரு நகரமாகவோ அல்லது ஒரு மாவட்டமாகவோ இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத்தவிர கொரோனாவல் அதிக பாதிப்புக்குள்ளான பகுதிகளில் நான்கு நாட்களுக்குள் பாதிப்பு இரட்டிப்பாக வாய்ப்புள்ள பகுதிகளையும் இந்த பிரிவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சிகப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட தமிழ்நாட்டின் பகுதிகள்

  • சென்னை
  • திருச்சிராப்பள்ளி
  • கோயம்புத்தூர்
  • ஈரோடு
  • திருநெல்வேலி
  • திண்டுக்கல்
  • விழுப்புரம்
  • நாமக்கல்
  • தேனி
  • செங்கல்பட்டு
  • திருப்பூர்
  • வேலூர்
  • மதுரை
  • தூத்துக்குடி
  • கரூர்
  • விருதுநகர்
  • கன்னியாக்குமாரி
  • கடலூர்
  • திருவள்ளூர்
  • திருவாரூர்
  • சேலம்
  • நாகப்பட்டிணம்

இவ்வாறு சிகப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தொடர்ந்து 28 நாட்கள் எந்த புதிய பாதிப்புகளும் வரவில்லை என்றால் கொரோனா நீங்கிய பகுதிகளாக பிறகு அறிவிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

3

அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பு: அந்தகாரம் டிரைலர் புதிய சாதனை!

0
Andhaghaaram Trailer Hits 1 Million Views

Andhaghaaram; அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணிக்கு கிடைத்த வரவேற்பு: அந்தகாரம் டிரைலர் புதிய சாதனை! அட்லீ – அர்ஜூன் தாஸ் கூட்டணியில் உருவாகி வரும் அந்தகாரம் படத்தின் டிரைலர் வெளியாகி புதிய சாதனை படைத்துள்ளது.

அந்தகாரம் டிரைலர் வெளியாகி 2 நாட்களில் 1 மில்லியன் வியூஸ் வரை பெற்று சாதனை படைத்துள்ளது.

அட்லீ தயாரிப்பில் வில்லன் நடிகர் அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார்.

பிரமாண்ட இயக்குநர் என்று போற்றப்படும் ஷங்கர் இயக்கத்தில் வந்த எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றியவர் இயக்குநர் அட்லீ.

இவர், ஆர்யா, நயன்தாரா, ஜெய் ஆகியோரது நடிப்பில் வந்த ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார். இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே குறிப்பாக காதலர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என்று அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார்.

தொடர் வெற்றிக்குப் பிறகு ஏ ஃபார் ஆப்பிள் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி ஜீவாவை வைத்து சங்கிலி புங்கிலி கதவ தொற படத்தை கொடுத்தார்.

அடுத்ததாக அட்லீ தயாரிக்கும் புதிய படத்தில் கைதி மற்றும் மாஸ்டர் படத்தில் நடித்த அர்ஜூன் தாஸ் ஹீரோவாக நடிக்கிறார். அண்மையில், இப்படத்திற்கு அந்தகாரம் என்று டைட்டில் வைக்கப்பட்டது. மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியானது.

அந்தகாரம் போஸ்டர் தூரத்தில் யாரோ ஒருவர் உட்கார்ந்திருப்பது போன்றும் புத்தகம் அருகில் வைக்கப்பட்டிருப்பது போன்றும், பழைய வீடு போன்றும் காட்டப்பட்டுள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் விக்னராஜன் இயக்குகிறார்.

இந்த நிலையில், அந்தகாரம் படத்தின் டிரைலர் கடந்த 14 ஆம் தேதி வெளியானது. இதையடுத்து, வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில், 1 மில்லியன் வியூஸ் வரை பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனவை தடுக்க உருவான அதிபயங்கரமான மருந்து – ஜெர்மன் விஞ்ஞானிகள் பெருமிதம்

0
கொரோனவை தடுக்க உருவான அதிபயங்கரமான மருந்து - ஜெர்மன் விஞ்ஞானிகள் பெருமிதம்

Coronavirus Medicine : கொரோனாவினை தடுப்பதற்கான மருந்தினை கண்டுபிடித்துவிட்டதாக ஜெர்மன்நாட்டு விஞ்ஞானிகள் ஊடங்களில் பேசி வருகின்றனர்.

தற்போது உலகில் உள்ள அனைத்து வல்லுனர்களுமே, கொரோனா எனும் நோய்க்கான மருந்துகண்டுபிடிக்கும் நோக்கத்தில் மட்டுமே இருக்கின்றனர். பல நாடுகள் இதில் முன்னேற்றம் கண்டாலும், உறுதியான மருந்தாக இன்னும் எதுவுமே கண்டுபிடிக்கப்படவில்லை.

பல நாடுகளைப்போலவே தற்போது ஜெர்மனிநாட்டு விஞ்ஞானிகளும் ஒரு மருந்தை கண்டுபிடித்துள்ளனர். அது கொரோனாவினை எளிதாக ஏமாற்றி அதன் தொற்றிலிருந்து மனிதர்களை விடுவித்துவிடும் என்றும் நம்பிக்கையுடன் கூறுகின்றனர்.

ஜெர்மனியின் புதிய மருந்து ( Coronavirus Medicine )

கொரோனாவைரஸ் மனித உடல்களில் இருக்கும் செல்களின் சுவாசப்பாதையான ACE2 எனும் துவாரம் வழியாகவே உடலினுள் நுழைகிறது. நுழைந்தபின் அது நேரடியாக நுரையீரலில் இருக்கும் செல்களினை பாதித்து தொற்றினை ஏற்படுத்துகிறது.

தற்போது ஜெர்மானியர்கள் கண்டுபிடித்திருக்கும் மருந்தானது, செல்களில் இருக்கும் ACE2வினை பலப்படுத்துவதோடு மட்டுமல்லலால், கொரோனா போன்ற வைரஸ்களிடமிருந்து விலகிருக்கவும் செய்யுமாம்.

கொரோனா வைரஸை தன்பக்கம் ஈர்க்கும் புரதமான டீகாய் எனும் புரத்தினை மனித உடலில் செலுத்துவதன் மூலம், ACE2வினை தாக்கவரும் கொரோனவைரஸ் டீகாய் புரதத்தோடு சேர்ந்துவிடும்.

அது மட்டுமல்லாமல் இந்த டீகாய் புரதம், கொரோனாவின் அறிகுறிகள் ஏற்படும் முன்பே அந்த கிருமிகளை அழித்துவிடும் என்றும் கூறுகின்றனர்.

உலகில் பல விஞ்ஞானிகள் இந்த முறை மிகவும் ஆபத்தானது என்பதால் முயற்சிக்கும்முன் நிராகரித்துவிட்டனர். இந்த மருந்தினால் கொரோனா பாதிப்படைந்தவருக்கு வேறு ஏதாவது பெரிய பிரச்சனைகள் ஏற்படலாம் என்று பலர் கூறுகின்றனர்.

இருப்பினும் இந்த மருந்து மக்களை கொரோனாவிடமிருந்து காக்கும் என்று நம்பிக்கையுடன் ஜெர்மன் விஞ்ஞானிகள் அந்த நாட்டு ஊடகங்களில் கூறியுள்ளனர்.

3

எம்ஜிஆர், ரஜினிகாந்த் சாதனையை முறியடித்த விஜய்யின் கில்லி!

0
16YearsOfBlockBusterGhilli

Ghilli; எம்ஜிஆர் சாதனையை முறியடித்த விஜய்யின் கில்லி! விஜய், த்ரிஷா நடிப்பில் வந்த கில்லி படம் திரைக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகள் கடந்துள்ளது.

கில்லி படம் திரைக்கு வந்து இன்றுடன் 16 ஆண்டுகளை கடந்துள்ளது.

இயக்குநர் தரணி இயக்கத்தில் தளபதி விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ் ஆகியோரது நடிப்பில் கடந்த 2004 ஆம் ஆண்டு, ஏப்ரல் 17 ஆம் தேதி திரைக்கு வந்த படம் கில்லி.

ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இந்தப் படம் திரைக்கு வந்து 200 நாட்களுக்கு மேல் ஓடியது. அதோடு, கில்லி விஜய்யின் சினிமா வரலாற்றில் முக்கியமான படமாக அமைந்தது.

கபடி, காதல் இரண்டுக்கும் முக்கியத்தும் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படம் திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆகியுள்ளது.

கில்லி திரைக்கு வந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் 16YearsOfBlockBusterGhilli என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

கில்லி சாதனைகள்:

  • தமிழைத் தவிர, கன்னடம், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஒடியா ஆகிய மொழிகளில் கில்லி படம் ரீமேக் செய்யப்பட்டது.
  • முதல் முறையாக விஜய் – த்ரிஷா கில்லி படத்தின் மூலம் இணைந்து நடித்தனர். இவர்களது கெமிஸ்டரி இன்றும் பேசப்படுகிறது.
  • முதன் முதலில் கில்லி படம் தான் ரூ.50 கோடி தமிழ்நாடு பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இணைந்தது.
  • ஆனால், ரஜினிகாந்தின் படையப்பா படம் வெளியாகி 5 ஆண்டுகள் ஆன நிலையில் தான் தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்தது.
  • ஆனால், விஜய் படம் வெளியாகி ரூ.50 கோடி வசூல் செய்து ரஜினியின் சாதனையை முறியடித்தது.
  • கடந்த 2010 ஆம் ஆண்டு நடந்த ஆசிய கபடி விளையாட்டு போட்டியின் இறுதிப் போட்டியில் கபடி கபடி என்ற பாடல் ஒலிக்கப்பட்டது.
  • எம்ஜிஆர் நடித்த அடிமைப்பெண் படத்தை முதல் வாரத்தில் பார்த்த ரசிகர்களை விட விஜய்யின் கில்லி படத்தை அதிக ரசிகர்கள் பார்த்துள்ளனர்.
  • 200 நாட்களுக்கும் மேலாக ஓடிய படம் கில்லி.
  • மதுரையில் அதிக நாடிகள் ஓடிய அதோடு உலகம் சுற்றும் வாலிபன் படத்தின் சாதனையை விஜய்யின் கில்லி படம் முறியடித்துள்ளது.
  • இன்றும் டிஆர்பியில் முதலிடம் பிடித்துள்ளது கில்லி.
  • கில்லி படத்தில் உள்ள அப்படி போடு பாடல் இந்தியா முழுவதும் ஹிட் கொடுத்தது.
  • தான் ஃபாக்ஸ் ஆபிஸ் கிங் என்று விஜய் நிரூபித்துள்ளார்.

படம் மட்டும் ஹிட் கொடுக்கவில்லை படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் ஹிட் கொடுத்துள்ளன. ஒவ்வொரு வசனமும் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு அமைந்துள்ளது.

தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு காரணமாக கில்லி படம் மீண்டும் ஒளிபரப்பு செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு கில்லி படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், கில்லி படம் வெளியாகி 16 ஆண்டுகள் ஆன நிலையில், ஹலோவில் 16YearsOfBlockBusterGhilli என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3