Home Blog Page 146

தாமதமான நீதியும் அநீதியே – பொன்மகள் வந்தாள் 3ஆவது லுக் போஸ்டர் வெளியீடு!

0
Ponmagal Vandhal Third Look Poster

Ponmagal Vandhal Third Look Poster; தாமதமான நீதியும் அநீதியே – பொன்மகள் வந்தாள் 3ஆவது லுக் போஸ்டர் வெளியீடு! ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் 3 ஆவது லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது.

தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில், இவருடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த நிலையில், தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு பொன்மகள் வந்தாள் படத்தின் மூன்றாவது லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த போஸ்டரில் கோர்ட் காட்சிகள் இடம்பெற்றிருந்தது. அதோடு, தரமான நீதியும் அநீதியே என்று அந்த போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், பொன்மகள் வந்தாள் போஸ்டரில் பார்த்திபன், ஜோதிகா, பிரதாப் போத்தன் ஆகியோர் வழக்கறிஞராக வலம் வருகின்றனர்.

இவர்களுடன் இணைந்து தியாகராஜன், பாக்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் வருகின்றனர்.

தற்போது இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

பொன்மகள் வந்தாள் படம் பெண்களை மையப்படுத்திய படமாக உருவாக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக சமூகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொன்மகள் வந்தாள் மூன்றாவது லுக் போஸ்டர் வெளியாவதைத் தொடர்ந்து டுவிட்டரில் #Jyotika என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

பொன்மகள் வந்தாள் படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3

அந்த கண்ண பாத்தா லவ்வு தானா வரும்: விஜய்யின் க்யூட் எக்ஸ்பிரசன்ஸ்!

0
Thalapathy Vijay Cute Expressions

அந்த கண்ண பாத்தா லவ்வு தானா வரும்: தளபதி விஜய்யின் க்யூட் எக்ஸ்பிரசன்ஸ்! இப்போதான் தெரியுது விஜய்க்கு ஏன் பெண்களை அதிகளவில் பிடிக்கிறது என்று. ஆமாம், அவருடைய கியூட் எக்ஸ்பிரசன்ஸ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய்யின் ஒவ்வொரு க்யூட் எக்ஸ்பிர்சன்ஸையும் விஜய் ரசிகர்கள் ஹலோவில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். இவருக்கு ரசிகர்கள் இல்லாத உலகமே இல்லை. ஆம், குழந்தைகள், பெரியவர்க, பெண்கள், இளைஞர்கள் என்று அனைத்து வயதினரும் விஜய்க்கு ரசிகர்களாக இருக்கின்றனர்.

விஜய்யின் டான்ஸ் எப்படி குழந்தைகளுக்கு பிடிக்குமோ அதை விட விஜய்யின் ஒவ்வொரு க்யூட் எக்பிரசன்ஸ் ஒவ்வொன்றும் பெண்களை கவரும் வகையிலே அமைந்துள்ளது.

அந்த விஜய்யின் க்யூட் எக்ஸ்பிரசன்ஸ் ஒவ்வொன்றையும் விஜய் ரசிகர்கள் Vijay Cute Expressions என்ற ஹலோ ஹேஷ்டேக்கில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

விஜய்யின் ஆக்‌ஷன் காட்சிகள் இளைஞர்களுக்கு பிடிக்கும். சென்டிமெண்ட் காட்சிகள் பெரியவர்களை பிடிக்கும். இப்படி விஜய்யின் ஒவ்வொரு அசைவையும் ரசிகர்கள் ரசித்து வருகின்றனர்.

அவரது சிரிப்பு, சிம்பிள், கம்பிள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றிற்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இன்று ஒரே நாளில் மட்டுமே விஜய்க்கு இப்படியொரு சிறப்புகள் நடந்துள்ளது. ஆம், விஜய் மனைவி சங்கீதா பிறந்தநாள், தெறி ஆல்பம் 275 மில்லியன் வியூஸ், தெறி வெளியாகி 4 வருடம், சச்சின் படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டது.

இதன் காரணமாக Vijay Cute Expressions, 4YearsOfATBBTheri, TheriAlbum275MViews, HBD Sangeetha Vijay ஆகிய ஹலோ ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

3

கல்லூரி மாணவனாக விஜய் அடித்த லூட்டி: சச்சின் 15 வருடங்கள் ஓவர்!

0
Sachein Movie 15 Years Release

தளபதி விஜய் சச்சின் திரைக்கு வந்து 15 வருடம் கடந்தது! விஜய் நடிப்பில் வெளியான சச்சின் படம் திரைக்கு வந்து இன்றுடன் 15 வருடங்கள் கடந்துவிட்டது.

சச்சின் படம் திரைக்கு வந்து 15 வருடங்கள் கடந்துவிட்டது.

இயக்குநர் ஜான் மகேந்திரன் இயக்கத்தில் விஜய், வடிவேலு, ஜெனிலீயா, பிபாசா பாசு, சந்தானம் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2005 ஆம் ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தன்று திரைக்கு வந்த படம் சச்சின்.

ரொமான்டிக் காமெடி கலந்த காதல் ஈகோ கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் விஜய் கல்லூரியில் படிக்கும் ஒரு மாணவனாக நடித்திருந்தார்.

கல்லூரியில் படிக்கும் விஜய் (சச்சின்), தன்னுடன் படிக்கும் ஜெனிலீயா (ஷாலினி)யை நேசிப்பார். ஆனால், ஜெனீலியா அவரை விரும்பமாட்டார். முதலில் எதிரிகளாக இருந்து பின்னர் நண்பர்களாக பழகுவார்கள்.

ஒரு கட்டத்தில் விஜய்க்கு, ஜெனிலீயாவிற்கு 30 நாட்கள் டைம் கொடுப்பார். அதற்குள்ள தன்னை காதலிக்க வைப்பதாக சபதம்.

ஆனால், அடுத்த கொஞ்ச நாட்களிலேயே விஜய் மீது காதல் கொண்ட ஜெனிலீயா அவரிடம் தனது காதலை வெளிப்படுத்தமாட்டார். காரணம் ஈகோ.

ஒரு கட்டத்தில் கல்லூரி வாழ்க்கையும், முடிந்து, ஜெனிலீயாவிற்கு விஜய் கொடுத்த 30 நாட்கள் கால அவகாசமும் முடிந்து விஜய் கோயம்புத்தூரிலிருந்து கிளம்ப விமான நிலையத்திற்கு வருவார்.

அவரை பாலோ பண்ணி ஜெனீலியாவும் வருவார். இறுதியாக காதலை வெளிப்படுத்தி இருவரும் ஒன்று சேர்வார்கள் இதுதான் படத்தின் கதை.

ஆனால், என்ன இந்தப் படத்திற்கு அப்படி ஒன்றும் வரவேற்பு கிடைக்கவில்லை. எனினும் படத்தில் இடம்பெற்ற ஒரு சில பாடல்கள் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

அதில், குண்டு மாங்கா தோப்புக்குள்ள, வா வா வா என் தலைவா, கண்மூடி திறக்கும்போது, வாடி வாடி ஆகிய பாடல்கள் ரசிகர்கள் ரசிக்கும்படியாக அமைந்தது.

இந்த நிலையில், இந்தப் படம் திரைக்கு வந்து இன்றுடன் 15 ஆண்டுகள் கடந்துவிட்டது. இதன் காரணமாக 15YearsOfSachein என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, இன்று விஜய்யின் மனைவி சங்கீதா தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

மேலும் தெறி படம் 4 ஆண்டுகள் கடந்துவிட்டது. அதோடு, தெறி படத்தின் ஆல்பம் 275 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

இந்த ஆண்டு தல தீபாவளி இல்லையா? வலிமை எப்போ ரிலீஸ்?

0
Valimai Pongal Release

Valimai Release Date; இந்த ஆண்டு தல தீபாவளி இல்லையா? வலிமை எப்போ ரிலீஸ்? அஜித் நடிப்பில் உருவாகி வரும் வலிமை படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வலிமை படம் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியுடன் இணைந்து அஜித் நடித்து வரும் தல60 படம் வலிமை.

போலீஸ் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

இதுவரை அஜித்திற்கு யார் ஜோடி என்று அறிவிக்கப்படவில்லை. ஒருவேலை மங்காத்தா படம் போன்று என்பதால், அஜித்திற்கு ஹீரோயின் இல்லை என்று கூறப்படுகிறது.

வலிமை படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்தது. இதன் காரணமாக இந்த வருடம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வலிமை படம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக வலிமை படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

ஸ்பெயின் நாட்டிலும் சண்டைக் காட்சி படமாக்கப்பட இருந்தது. அதுவும், பாதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக ஏற்கனவே புது படங்களின் ரிலீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த மாதம் திரைக்கு வர வேண்டிய படங்கள், இந்த மாதம் வெளியாகும் படங்கள், அடுத்த மாதம் ரிலீஸ் ஆகும் படங்கள் என்று ஒட்டு மொத்த படங்களின் ரிலீஸும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து, இந்த படங்களின் ரிலீஸ் இனிவரும் மாதங்களில் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்பிருப்பதால், வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வலிமை திரைக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாக ValimaiPongal2021 என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

ஏற்கனவே சிவா – ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகி வரும் அண்ணாத்த படமும் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது.

இதன் காரணமாக் ஒரே நாளில் இரு படங்களும் வெளியாவதால், படங்களின் வசூல் பாதிக்கப்படுவதோடு, ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே கடந்தாண்டு பேட்ட படமும், விஸ்வாசம் படமும் ஒரே நாளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

3

யூடியூப்பில் 275 மில்லியன் வியூஸ் வாங்கிய தெறி ஆல்பம்!

0
TheriAlbum275MViews

Theri Album 275 Million Views; யூடியூப்பில் 275 மில்லியன் வியூஸ் வாங்கிய தெறி ஆல்பம்!  விஜய் நடிப்பில் வந்த தெறி படத்தின் பாடல் யூடியூப்பில் மட்டும் 275 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

தெறி ஆல்பம் 275 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது.

அட்லி – விஜய் கூட்டணியில் உருவான முதல் படம் தெறி. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தெறி படத்தைத் தயாரித்திருந்தது.

தெறி படத்தில் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், சமந்தா, பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட தெறி படம் ரூ.150 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.

விஜய் டிஎஸ்பி அதிகாரியாக நடித்திருந்தார். ஒரு பாலியல் பலாத்கார வழக்கை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி.

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை அரசியல்வாதியின் மகன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார். இந்த கொலையை கண்டுபிடித்து, அரசியல்வாதியின் மகனை விஜய் கொலை செய்கிறார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் விஜய்யின் அம்மா மற்றும் மனைவியை கொலை செய்கிறார்கள். அப்போது உயிருக்கு போராடும் சமந்தா விஜய்யிடம் தனது மகளுக்காக இந்த போலீஸ் வேலையை விட வேண்டும் என்று சத்யம் வாங்குகிறார்.

மனைவியின் சத்யத்திற்காக ஒதுங்கியிருக்கும் விஜய் ஒரு கட்டத்தில் தன் அம்மா, மனைவியை கொலை செய்தவர்களை பழிவாங்குகிறார். இதுதான் படத்தின் கதை.

இந்த கதை விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கு பிடித்துப் போக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

படம் மட்டுமல்ல படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களும் தான். குறிப்பாக ஜித்து ஜில்லாடி என்ற பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் குத்தாட்டம் போடுவார்கள்.

அதோடு, தெறி ஆல்பம் யூடியூப்பில் மட்டும் 275 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக TheriAlbum275MViews என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, என்ற 4YearsOfATBBTheri ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

இதற்கு முன்னதாக யூடியூப்பில் மெர்சல் படத்தின் பாடல் 400 மில்லியன் வியூஸ் பெற்றது. மேலும், பிகில் படமும் 300 மில்லியன் வியூஸ் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.

3

விஜய் குமார் டிஎஸ்பி: தெறி வந்து 4 வருசம் ஓவர்!

0
4YearsOfATBBTheri

Theri; ஜித்து ஜில்லாடி தெறி வந்து 4 வருசம் ஓவர்! விஜய் நடிப்பில் உருவான தெறி படம் திரைக்கு வந்து இன்றுடன் 4 வருடம் ஆகிவிட்டது.

தெறி படம் திரைக்கு வந்து 4 வருடங்கள் கடந்துவிட்டது.

அட்லி – விஜய் கூட்டணியில் உருவான முதல் படம் தெறி. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். ஏஜிஎஸ் நிறுவனம் தெறி படத்தைத் தயாரித்திருந்தது.

தெறி படத்தில் விஜய் உடன் இணைந்து எமி ஜாக்சன், சமந்தா, பேபி நைனிகா, மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

சுமார் ரூ.75 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட தெறி படம் ரூ.150 கோடி வரையில் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குவித்ததாக கூறப்படுகிறது.

விஜய் டிஎஸ்பி அதிகாரியாக நடித்திருந்தார். ஒரு பாலியல் பலாத்கார வழக்கை கண்டுபிடிக்கும் போலீஸ் அதிகாரி.

ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் ஒரு பெண்ணை அரசியல்வாதியின் மகன் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்கிறார். இந்த கொலையை கண்டுபிடித்து, அரசியல்வாதியின் மகனை விஜய் கொலை செய்கிறார்.

இதற்கு பழிவாங்கும் நோக்கத்தில் விஜய்யின் அம்மா மற்றும் மனைவியை கொலை செய்கிறார்கள். அப்போது உயிருக்கு போராடும் சமந்தா விஜய்யிடம் தனது மகளுக்காக இந்த போலீஸ் வேலையை விட வேண்டும் என்று சத்யம் வாங்குகிறார்.

மனைவியின் சத்யத்திற்காக ஒதுங்கியிருக்கும் விஜய் ஒரு கட்டத்தில் தன் அம்மா, மனைவியை கொலை செய்தவர்களை பழிவாங்குகிறார்.

இதுதான் படத்தின் கதை. இந்த கதை விஜய்க்கு மட்டுமல்ல, விஜய் ரசிகர்களுக்கு பிடித்துப் போக விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கொடுத்தது.

படம் மட்டுமல்ல படத்தில் இடம் பெற்றுள்ளபாடல்களும் தான். குறிப்பாக ஜித்து ஜில்லாடி என்ற பாடலுக்கு இன்றும் ரசிகர்கள் குத்தாட்டம் போடுவார்கள்.

அதோடு, தெறி ஆல்பம் யூடியூப்பில் மட்டும் 275 மில்லியன் வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக TheriAlbum275MViews என்ற ஹலோ ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. அதோடு, என்ற 4YearsOfATBBTheri ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.

3

சந்திரமுகி படம் வெளியாகி இன்றுடன் 15 வருடம்

0

படையப்பா என்கிற மாபெரும் வெற்றி படத்தை தமிழ் சினிமாவிற்கு ரஜினி யும் கே.எஸ். ரவிக்குமாரும் கொடுத்தனர்.

அந்த வெற்றியை ஒரு வருடத்திற்கு மேலாக தமிழ் ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதற்கு அடுத்ததாக வந்த படம்தான் பாபா.

பாட்ஷா அண்ணாமலை, வீரா போன்ற படங்களை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா.

மீண்டும் பாபா படத்தில் இணைந்தார். ரஹ்மான் இசையில் மனிஷா கொய்ராலா ரஜினியுடன் இணைந்து நடிக்க, படத்தில் அரசியலும் ஆன்மிககமும் கலந்து வெளியானது.

ஆனால் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதனால் ரஜினிக்கு கட்டாயம் ஒரு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தே ஆகவேண்டும் காத்திருந்தார்.

ரஜினியை வைத்து ஏற்கனவே இரண்டு படங்கள் இயக்கிய, அதாவது மன்னன் போன்ற படங்களை இயக்கிய பி. வாசு மீண்டும் ரஜினியுடன் இணைந்தார்.

ஆப்தமித்ரா படத்தை ரீமேக் செய்ய ரஜினியும் வாசும் திட்டமிட்டனர். இந்த படத்தை சிவாஜி புரோடக்ஷன் சார்பில் ராம்குமார் தயாரித்தார்.

ஜோதிகா, பிரபு, நயன்தாரா, வடிவேலு மற்றும் பலர் நடித்து இருந்தனர். இந்த படத்துக்கு வித்யாசாகர் இசை அமைத்தார்.

படத்தில் காமெடி நிறைந்த பேய் திரைப்படம். ரஜினியின் வடிவேலும் இணைந்து படத்தில் காமெடியில் கலக்கி இருப்பார்கள்.

இது ஒரு ரஜினியின் நல்ல கமர்ஷியல் படமாகவும் அமைந்தது. பாடல் தமிழகம் எங்கும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.

‘தேவுடா தேவுடா’, ‘அத்திந்தோம்’, ‘கொக்கு பரபர’, ‘அண்ணனோட பாட்டு’ போன்ற பாடல்கள் மிகப்பெரிய ஹிட் அடித்தது.

குறிப்பாக ‘ரா ரா சரசுக்கு ராரா’ என்ற இறுதியாக வரும் பாடல் குழந்தைகளை வெகுவாக கவர்ந்தது. அந்த வருடம் முழுதும் இந்த பாடல் எல்லா இடங்களிலும் ஒளித்துக் கொண்டிருந்தது.

படம் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டாக அமைந்தது. படத்தில் பேய் பிடித்து வரும் ஜோதிகா அருமையாக நடித்திருந்தார். அவருக்கு கணவனாக வரும் பிரபுவும் தன் கதாபாத்திரத்தை தாங்கிப் பிடித்தார்.

ரஜினி வடிவேலுடன் காமெடியாகவும், வில்லன்களுடன் சண்டைகளாகவும் மற்றவர்களிடம் எதார்த்தமாகவும் நடித்து இருந்தார்.

இந்த படம் அனைவரையும் கவர்ந்தது. விநியோகஸ்தர்களுக்கு லாபம் தந்த படமாகவும் அமைந்தது.

இந்த படம் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாகி மாபெரும் வெற்றியைப் பெற்றது. தற்போது இந்த படம் வெளியாகி 15 வருடங்கள் ஆகிவிட்டன.

இன்னமும் இந்த படத்தை சன் டிவியில் ஒளிபரப்பினால் 90ஸ் கிட்ஸ் அமர்ந்து பார்க்கும் அளவிற்கு இந்த படத்தின் திரைக்கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும்.

சிவாஜியின் சாந்தி தியேட்டரில் ஆயிரம் நாட்களை கடந்து ஓடியது. இதற்காக ஆயிரமாவது விழா கூட எடுத்தனர்.

அதில் பேசிய ரஜினி நான் யானை அல்ல குதிரை என்று கூட பேசி பெற்றிருந்தார். எனது தோல்வியால் நான் துவண்டுவிடாமல் அடுத்த செகண்டில் எழுந்து ஓடுவேன் என்ற அர்த்தத்துடன் பேசியிருந்தார்.

இந்த விழாவில்தான் டைரக்டர் சங்கர் ‘சிவாஜி’ என்ற படத்தை இயக்கப் போவதாக அறிவித்தார்.

3

விஜய்யை பார்க்க ஓடோடி வந்த சங்கீதாவின் பர்த்டே டுடே!

1
Sangeetha vijay Birthday

Sangeetha Vijay Birthday; விஜய்யை பார்க்க ஓடோடி வந்த சங்கீதாவின் பர்த்டே டுடே! விஜய்யின் மனைவி சங்கீதா இன்று தனது 48ஆவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதன் காரணமாக #HBDSangeethaVIJAY என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

விஜய்யின் மனைவி சங்கீதா இன்று தனது 48ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் தளபதி விஜய். இவருக்கு ரசிகர்கள் இல்லாத நாடே, உலகமே இருக்க முடியாது. பட்டி தொட்டியெல்லாம் பிரபலமான விஜய்க்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம்.

பெரும்பாலும் இவரது படங்களில் குழந்தைகளுக்கு பிடிக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருக்கும்.

குழந்தைகளைத் தொடர்ந்து விஜய்யின் நடிப்பி, டான்ஸ் ஆகியவற்றிற்கு என்று தனி ரசிகைகளும் உண்டு. அந்த வகையில் தன் விஜய்யின் மனைவி சங்கீதா விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்துள்ளார்.

இலங்கையை பூர்விகமக கொண்ட சங்கீதா குடும்பத்துடன் லண்டனில் வசித்து வந்துள்ளார்.

நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும்…அவருடன் எப்படியாவது பேச வேண்டும் வேண்டும் லண்டனில் இருந்து புறப்பட்டு சென்னைக்கு வந்தார்.

விஜய் படத்தின் படப்பிடிப்பு நடக்கும் இடங்களுக்கு எல்லாம் சென்று வந்துள்ளார். ஆனால், அவரை சந்திக்க முடியவில்லை.

தனக்கு இப்படியொரு ரசிகை இருப்பதை அறிந்த விஜய் சங்கீதாவை வீட்டிற்கு அழைத்து சென்று, அனைவரிடமும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். விஜய்யின் குடும்பத்தோடு சங்கீதா பேசி மகிழ்ந்துள்ளார்.

மறுபடியும் விஜய்யைப் பார்க்க சென்னை வந்துள்ளார் சங்கீதா. இதையறிந்த விஜய் சங்கீதாவை வீட்டிற்கு அழைத்துச் சென்று விருந்து கொடுத்துள்ளார்.

இறுதியாக, விஜய்க்கு சரியான ஜோடி சங்கீதாதான் என்பதை அறிந்த விஜய்யின் பெற்றோர்கள், அவரிடமே விஜய்யை திருமணம் செய்து கொள்ள சம்மதமா? என்று கேட்டுள்ளனர்.

இதற்கு எந்த தயக்கமும் இன்றி சங்கீதா ஓகே சொல்ல. உடனே சங்கீதாவின் பெற்றோரிடம் சம்மதம் வாங்க விஜய்யின் குடும்பத்தினர் லண்டன் சென்றுள்ளனர்.

கடைசியாக சங்கீதாவின் பெற்றோர்களும் ஓகே சொல்ல, கடந்த 1999 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி விஜய் – சங்கீதா திருமணம் நடந்தது. இதையடுத்து, தற்போது சஞ்சய் என்ற மகளும், திவ்யா என்ற மகளும் இருக்கின்றனர்.

இந்த நிலையில், இன்று சங்கீதா இன்று தனது 48 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய் மட்டுமல்ல, தளபதி விஜய்யின் ரசிகர்களும் சங்கீதாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சங்கீதா விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDSangeethaVIJAY என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

விஜய் படம் கூட மறந்துபோச்சு போல: நடிகர் விவேக் தப்பான டுவீட்!

0
Vivek Wrong Tweet

Vivek Wrong Tweet; விஜய் படம் கூட மறந்துபோச்சு போல: நடிகர் விவேக் தப்பான டுவீட்! விஜய் நடித்த ஷாஜகான் படத்திற்குப் பதிலாக இது ப்ரியமானவளே படம் என்று நினைப்பதாக டுவிட்டரில் புகைப்படம் ஒன்றை ரிவீட் செய்து தெரிவித்துள்ளார்.

ஷாஜகான் படத்திற்குப் பதிலாக ப்ரியமானவளே என்று நடிகர் விவேக் டுவிட்டரில் பதிவிட்டு வசமாக மாட்டிக்கொண்டுள்ளார்.

இயக்குநர் கே எஸ் ரவி இயக்கத்தில் விஜய், ரிச்சா பாலோட் (அறிமுகம்), மீனா, விவேக், கிருஷ்ணா, கோவை சரளா ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் ஷாஜகான்.

காதலுக்கும், நட்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

காதலிக்கும் ஜோடிகளுக்கு பெற்றோரையும் மீறி விஜய் அவர்களுக்கு திருமணம் செய்து வைப்பார். அதே போன்று தான் காதலித்த பெண், தன்னை காதலிக்கவில்லை, தனது நண்பனை தான் காதலிக்கிறார் என்று தெரிந்தும், அவர்களை சேர்த்து வைக்கும் ரோலில் விஜய் நடித்திருந்தார்.

சாதி, மதம், மொழி, நாடு இவற்றை கடந்து வரும் காற்றைப் போல காதலையும் சுவாசிப்போம்… என்று காதலுக்கே மரியாதை கொடுத்த படம் ஷாஜகான். காதலி மும்தாஜிற்காக ஷாஜகான் தாஜ்மஹால் கட்டினார்.

காதலுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படம் என்பதால், ஷாஜகான் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இப்படத்தில் வரும் ஒரு காட்சியை கோலிவுட் ஸ்ட்ரீட் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தது. அதனை ரீடுவிட் செய்த விவேக், இது எந்த படம் என்று நினைவில்லை! May b priyamanavale?!? என்று பதிவிட்டு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

சார் இது ப்ரியமானவளே படம் இல்லை. விஜய் நடித்த ஷாஜகான் என்று குறிப்பிட்டு டுவீட் செய்து வருகின்றனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு அஜித், விஜய் ரசிகர்களுக்கு விவேக் ஒரு வேண்டுகோள் வைத்திருந்தார். அதில், இனிமேல், யாரும் என்னை டேக் செய்து டுவீட் பதிவிட வேண்டாம் என்று அவர் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Love Mocktail Movie Review; Adi’s Journey of Multiple Love let him Learn True Love

0

Love Mocktail Movie Review; Adi’s Journey of Multiple Love let him Learn True Love. Love Mocktail (2020) Film Review, Love Mocktail is written & directed by Krishna Nagappa who’s also acted lead role in this film.

Films starts with Adhi (Krishna Nagappa) accidentally met with College girl Aditi (Rachana Inder). He started telling his love encounters of several stages to her.

Adi’s first love in his teenage seems very amusing. Director wants to narrate it comical way rather than emotional. The Second Love was happened quite unexpectedly with Joo (Amrutha Iyengar) when he was studying at college.

Here is also the narration takes place more humourous way than emotional. After their college finished when He find a job & both of them living different cities lead to arise problems.

This situation taught him something about true love & actual character of his girlfriend about money & luxurious life.

Like every love failures, this too comes to an end when there is marriage proposal for his girlfriend from her family side.

Before the wound of his second love dry He Proposes to another girl who’s friends of friend Nidhi (Milana Nagraj) by emphasize of his close friend Vijay (Abilash)

He learned lot of things from his third relationship with Nidhi. He understands what’s actually true love from Nidhi.

If the director let the film go like this way till the end it would be an average film. What makes this film above average, will takes place after this.

They’re are few good dialogues from this film which I really like. These dialogues you might heard already some other movies. Every movie one or another way resembles other movies.

When Adi’s Second love broke up, His close friend said ‘when there’s problem in love you can solve but there’s a problem in your lover, you can’t.’

This meant lot for me. If you have problems in your love apart from both of you. Somehow you can find a way to solve and overcome from it but if one of you have issues in your love you can’t rectify it.

Another dialogue seems more familiar, Nidhi Said ‘the times you spent with me are valuable than the amount you earn for us.’

What we need to understand from this film is when you’re really experienced or lived in true love. you’ll never fall for another girl.

Your mind will never accept another love that that’s what they’re trying to tell us in the end.

What I don’t really like in this film is some unnecessary fights which seems very amusing, doesn’t make any sense.

The background scores are good but not really impressing I witnessed more long & wide shots which looks stunning. When it comes to performance I don’t find any flaw in it. The lead characters did really.

Love Mocktail will be great entertainer if put yourself to watch.

3