National award winning tamil movie: வாகை சூட வா திரைவிமர்சனம் | vaagai sooda vaa Movie Review. நாம் நிச்சயம் பார்க்க வேண்டிய திரைப்படம்.
என்றுமே தமிழ் சினிமாவில் மண் சார்ந்த , வாழ்வியல் சார்ந்த , எதார்த்தம் நிறைந்த திரைப்படங்களுக்கு மரியாதையும் மவுசும் உண்டு . அந்த வகையில் இந்தப்படமும் மதிக்கத்தக்க ஒரு தரமான , தேசிய விருதுப் பெற்ற சிறந்த திரைப்படம்.
சற்குணம் என்கிற எதார்த்தப் படைப்பாளியின் சமரசமற்ற கிராமிய படைப்பு , இப்படத்தின் மூலமே இனியா என்கிற நல்ல நடிகையும் , ஜிப்ரான் என்கிற திறமையான இசை அமைப்பாளரும் அறிமுகம் ஆகினர் .
அண்ணாமலை என்பவர் பத்திரம் எழுதும் வேலை செய்பவர் , அவரின் மகனான வேலுத்தம்பியை எப்படியாவது அரசாங்க வேலையில் அமர்த்திவிட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.
கிராம சேவா என்கிற அமைப்பு கிராமங்களில் இருக்கும் சிறுவறுகளுக்கு ஆறு மாத காலம் பாடம் சொல்லித்தருபவருக்கு ஊக்க ஊதியமும் , ஆறுமாத நிறைவில் ஒரு சான்றிதழும் வழங்கும்.
அந்தச் சான்றிதழ் அரசாங்க ஆசிரியர் ஆக உதவும். இதை அறிந்த அண்ணாமலை தனது மகனை எழுத்தறிவே இல்லாத வறுமையில் வாடும், செங்கல் செய்யும் குக்கிராமத்திற்கு அனுப்புகிறார்.
அங்கோ யாருமே படிக்க முன்வரவில்லை , சிறுவர்களோ வேலைக்கு செல்லவே விரும்புகின்றனர் , ஊரோ வேலுத்தம்பியை வெறுக்கிறது, ஏளனமாக பார்க்கிறது.
அங்கு டீக்கடை வைத்திருக்கும் மதியும் அவனிடம் காசு வாங்கிக்கொண்டு சாப்பாடு தராமல் ஏமாற்றுகிறார். அவளின் தந்தையோ அவனிடம் அர்த்தமற்ற புதிர் கணக்குகளை கேட்டு வெறுப்பேற்றுகிறார்… எப்படியாவது ஆறுமாதத்திற்கு சமாளித்துவிட்டு ஓடி விடலாம் என்று நினைக்கிறான் நாயகன்.
ஆனால் நாட்கள் செல்லச்செல்ல அவர்களின் நிலையைக்கண்டு மனம் மாறுகிறான், முடிந்த அளவு கற்றுத்தருகிறான். மதியோ இவனை ஒருதலையாய் காதலிக்க துவங்குகிறாள்.
ஆறுமாதம் நெருங்கும் வேளையில் , அந்த ஊரின் முதலாளி ஜேபி இத்தனை நாள் கணக்கறிவு , எழுத்தறிவு இல்லாததால் தான் அந்த ஊரையே அடிமைப் படுத்தி வைத்ததை அறிந்து படிப்பின் அருமையை உணறுகின்றனர் .
நாயகனும் அவர்களுக்காகவே கிடைத்த அரசாங்க வேலையை உதறுகிறான் .
அண்ணாமலையாக பாக்யராஜ் மிக சிறப்பாகவே நடித்துள்ளார் , இறுதிக்காட்சிகளில் அரசாங்க விதிமுறைகளை விளக்குவது மிக அருமை.
வேலுத்தம்பியாக விமல், இது தான் அவரின் சிறந்த நடிப்பு. கதாப்பாத்திரத்தை உணர்ந்து சற்றும் மிகை இல்லாமல் , நம்மை சிரிக்கவும் வைத்து, சிந்திக்கவும் வைக்கிறார்.
அறிமுக நாயகி இனியா , மதியாகவே மாறியுள்ளார் , அவரின் பாவனைகள் மிகவும் ரசிக்கும்படி அமைந்துள்ளது .
தம்பி ராமையா தனக்கு அளிக்கப்பட்ட குழப்பவாதி வேலையை சிறப்பாகவே செய்துள்ளார் .
கதையின் காலம் , களம் , பின்னணி இசை , ஒளிப்பதிவு , பாடல்கள் என அனைத்துமே அழகாய் அமைந்தப்படம் இது.
மீண்டும் இது போல சற்குணம் எப்போது படம் எடுப்பார்? விமல் எப்போது இனி இது போல் நடிக்கப்போகிறார்? கடவுளுக்கே வெளிச்சம் .
உலகமே இன்று வாய் ஓயாமல் மிகவும் எதிர்பார்த்து பேசிக்கொண்டிருப்பது இந்த விஷயமாகத்தான் இருக்கும் , அதுதான் செயற்கை நுண்ணறிவு ( ARTIFICIAL INTELLIGENCE).
செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன ? நாம் பயன்படுத்தும் ஒரு எந்திரமோ, மென்பொருளோ நாம் இடும் கட்டளைகளுக்கு ஏற்ப சிந்தித்து செயல்பட்டால் அதுவே செயற்கை நுண் அறிவு.
இன்றே நாம் அத்தகைய அறிவின் ஆரம்ப நிலைகளை பயன்படுத்தத் துவங்கி விட்டோம் , உதாரணமாக பாதைகளின் போக்குவரத்து நெரிசல்களை துல்லியமாக கூறும் கூகிள் நேவிகேட்டர்.
நம் கட்டளைகளை செவிசாய்த்து கேட்டு விடை அளிக்கும் “ அலெக்சா “ , “ கூகிள் வாய்ஸ் “ .
ஆனால் இன்னும் அந்த கடலில் சில அலைகளே இவை…!
செயற்கை நுண்ணறிவு என்பது முக்கியமான மூன்று நிலைகளைக் கொண்டது அவை.
இயந்திர கற்றல் ( machine learning ), இயந்திர அனுபவம் ( machine experience ), முடிவெடுக்கும் திறன் ( Decision based on AI ).
இயந்திர கற்றல் :
என்னதான் அதிதுல்லிய இயந்திரமாக இருந்தாலும் , அதை நாம் தானே உருவாக்க வேண்டும். பொறுமையாக ஒரு ஆசிரியர் போல அந்த இயந்திரத்திற்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
அதற்கு கால அளவுகள் இல்லை , சில நிறுவனங்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இதைத்தான் செய்து வருகின்றனர்.
இயந்திர அனுபவம் :
சராசரி மனிதன் படித்துமுடித்து வேலைக்கு செல்வதைப்போல அந்த எந்திரமும் சில வருடங்கள் அனுபவத்தைப் பெற்று , அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கும். ஆனால் அனுபவம் மட்டும் துல்லிய முடிவுகளை எடுக்கப்போதுமா என்ன ?
எனவே முடிவெடுக்கும் திறன் கடைசி நிலை , மனிதனாகிய நம்முடைய மூளையைப்போல அந்த எந்திரத்தின் மூளையும் மாறும் நிலை அது.
என்று உங்கள் மொபைல் செயல் படாத பேட்டரியை தானாக கழட்டிவிடுகிறதோ அதுதான் உண்மையான செயற்கை நுண்ணறிவு.
ஆகவே இதுவரை AI ஒரு சிறு குழந்தை தான். நீ இன்னும் வளரனும் பாப்பா…
எனவே உலகம் பரப்பும் எந்த வதந்திகளையும் நம்பாமல் நிம்மதியாக இருங்கள் . மாற்றம் வரும் , நாமும் மாறுவோம் . அதற்க்கு சற்று கால அவகாசம் உண்டு.
முன்னாள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான ஜாஃபர் சர்பராஸ் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு உயிரழந்தார். 50 வயதான இவர் கடந்த மூன்று நாட்களாக தீவிர சிகிச்சையில் இருந்துள்ளார்.
சர்பராஸ் 1988-ம் ஆண்டு அறிமுகமானார். மேலும் பெஷாவருக்காக 15 முதல் தர ஆட்டங்கள் விளையாடி 616 ஓட்டங்கள் எடுத்தார்.
1994ம் ஆண்டு ஓய்வு பெறுவதற்கு முன்பு ஆறு ஒருநாள் ஆட்டங்களில் 96 ஓட்டங்கள் எடுக்க முடிந்தது. 2000ஆம் ஆண்டில் பெஷாவர் அணிக்கு பயிற்சியாளராக பணிபுரிந்தார்.
பாகிஸ்தானில் மொத்தம் 5500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், தொற்றுநோயால் சுமார் 100 பேர் இறந்துள்ளனர். அதில் பெஷாவர் பகுதியில் மட்டும் 744 தொற்றுக்கள் பதிவாகியுள்ளன.
Google Doodle Greets Doctors, Nurses and Medical Workers. Google once again honor the doctors, nurses and other medical workers using google doodle.
Google wrote, “As COVID-19 continues to impact communities around the world, people are coming together to help one another now more than ever. We’re launching a Doodle series to recognize and honour many of those on the front lines.”
The entire world is shutdown due to corona spread. In these hard times we need to greet and honor whoever risking their lives for saving us like doctors, medical workers and defenses.
There are nearly 20lakh peoples affected due to coronavirus and more than 1.25 lakh people deceased. Its our time to unite with govt decision and do follow social distancing.
We’ve got nothing to do it. Just stay home stay safe with your family and encourage others to stay home. So Google came up with idea once again using google doodle.
Doodles animated emoji shows a heart emoji being sent to all healthcare workers. Previous time google greeted all the workers whoever risking their lives during this corona pandemic.
Google Doodle used to appreciate historic events, other ongoing events and some of the great peoples birth and anniversary.
எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை நிருபிப்போம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
கரோனா வைரஸ் உலகம் முழுவதும் அச்சுறுத்தி வருகிறது. தற்போது இந்தியாவிலும் நாளுக்குநாள் அதிகரித்து அதிக இழப்புகளை சந்தித்து வருகிறது.
இதனால் பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
நேற்று ஏப்ரல் 14 வது நாள் பிரதமர் அறிவித்த 21 நாள் ஊரடங்கு நிறைவடையும் நிலையில் பிரதமர் மோடி மீண்டும் மக்கள் முன்பு வந்து மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவை நீடித்தார்.
ஊரடங்கு உத்தரவை எதிர்கொள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட தயாரானார்கள்.
திமுக சார்பில் அனைத்து கட்சி கூட்டம் நடத்த தமிழக அரசிடம் மனு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு காவல்துறையினரால் மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பல கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தார்கள். குறிப்பாக திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக அரசை வன்மையாக கண்டித்தார்.
தற்போது மறுமலர்ச்சி முன்னேற்ற திராவிடர் கழகத் தலைவர் திரு வைகோ அவர்கள் சமூக வலைத்தளங்களில் பல கேள்விகளை எழுப்பி பதிவிட்டுள்ளார்.
அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது :
எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டவர்கள் நாங்கள் என்பதை நிருபிப்போம் – வைகோ #Vaiko #MDMK
திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் கூட்டத்திற்கு தடை?
பிரதமர் மோடி எப்படி அமைச்சர்களின் கூட்டத்தை நடத்தினார்?
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் எப்படி நடத்த முடிந்தது?
இந்தியாவின் பல மாநிலங்களில் முதல் அமைச்சர்கள் கூட்டம் நடத்துகின்றனரே, தமிழ்நாட்டில் நடப்பது பாசிச ஆட்சியா? சர்வாதிகார ஆட்சியா?
எந்த அடக்குமுறையையும் சந்திக்கும் நெஞ்சுரம் கொண்டாடுவது என்பது நாங்கள் நிரூபிப்போம்.
இன்று பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். பணியிடத்தில் சாதகமான சூழல் நிலவாது. குடும்பத்தில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. பேச்சில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.
நீங்கள் இன்று நாள் முழுதும் உற்சாகமாக இருப்பீர்கள். வீட்டில் சந்தோசம் பொங்கும். துணையிடம் புரிதல் மேம்பட்டு இருக்கும். தொழில் லாபகரமான அமையும் நாளாக இருக்கும்.
இன்று வளர்ச்சி சிறப்பாக இருக்கும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். காதலுக்கு சாதகமான நாளாக இருக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும் நாளாகும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
உங்களின் வெற்றிக்கு மிகவும் போராட வேண்டி இருக்கும். அமைதியான அணுகுமுறை அவசியம் தேவையாகும். பிரச்சனைகள் தானாக வந்து சேர வாய்ப்புகள் அதிகம். பொறுமையாக இருக்க வேண்டிய நாளாகும். உடல் நலத்தில் அக்கறை தேவையாகும்.
இன்று உங்கள் மனதில் எதிர்மறையான எண்ணங்கள் தோன்றும். அதனால் சோர்வாக காணப்படுவீர்கள். தைரியமான மனநிலையை தாங்களே உருவாக்கி கொள்ள வேண்டும். சற்று சிரமமான நாளாக இருக்கும்.
நீங்கள் இன்று பணிகளை மிக விரைவில் முடிப்பீர்கள். நாள் முழுதும் சுறுசுறுப்பாக இருப்பீர்கள். குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு அதனால் மகிழ்ச்சியும் பெறுவீர்கள். சிறந்த நாளாக இருக்கும்.
இன்று உங்களின் செயல்களில் கவனமாக இருக்க வேண்டும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும்.
இன்றைய நாள் உங்களுக்கு உகந்த பலன்களை தருவதாக இருக்கும். செல்வ செழிப்புடன் இருக்க போகும் நாளாகும். முன்பிருந்த பிரச்சனைகள் அனைத்தும் மறைந்து போய்விடும். ஆனந்தமான நாளாக இருக்க போகும் நாளாக இருக்கும்.
இன்று சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டிருக்கும். பண பிரச்சனை இருக்க போகிறது. அதனை சமாளிக்க தைரியம் மற்றும் உழைப்பு அவசியமாகும். நேரத்தை வீணடிக்காமல் உழைக்க வேண்டிய நாளாகும்.
இன்றைய நாள் வளர்ச்சி மிகுந்த நாளாக இருக்கும். சாதகமான பலன்களை பெறுவீர்கள். பயணங்கள் நன்மையில் முடியும். ஞானத்தை பெற குருமார்கள் தரிசனம் கிடைக்கும். புதனால் இன்று கல்வி மேன்மை பெறும்.
இன்று உங்களின் புத்தி கூர்மையால் நன்மைகள் கிடைக்கும். பணியில் பாராட்டுகள் வந்து சேரும். பிறருக்கு உதவிகள் செய்வீர்கள். பண வரவு சிறப்பாக இருக்கும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் நன்றாக இருக்கும்.
உங்களின் விருப்பங்கள் நிறைவேறும். வீட்டு உறவுகளில் அன்பு பெருகும். குழந்தைகள் ஆரோக்கியம் மேம்படும். அனுகூலமான நாளாக இருக்கும். பொருளாதார நிலை மேம்படும்.
15/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
தமிழ் புத்தாண்டை சிறப்பித்த சன் டிவி: சும்மா கிழி தர்பார் கொண்டாட்டம்! தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சன் தொலைக்காட்சியில் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த தர்பார் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
தர்பார் படம் சன் டிவியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் – ரஜினிகாந்த் முதல் முறையாக இணைந்த படம் தர்பார். ரஜினியின் 167 ஆவது படமாக கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியானது.
ரஜினிகாந்த் மும்பை போலீஸ் கமிஷனராக தர்பார் (Darbar) படத்தில் நடித்திருந்தார். இவருக்கு மகளாக நிவேதா தாமஸ் நடித்திருந்தார். ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார்.
மும்பையில் போதைப் பொருள் கும்பலை என்கவுண்டர் மூலம் சுட்டுத்தள்ளும் ஒரு டான் போலீஸ் தான் ரஜினி.
லைகா புரோடக்ஷன் தயாரித்திருந்த இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார்.
என்னதான் ரஜினியின் வயதான தோற்றம் தர்பார் (Darbar) படத்தில் தெரிந்திருந்தாலும், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்தது.
பாடல்களும் சொல்லவே வேணாம். அந்தளவிற்கு குத்தாட்டம் போடும் அளவிற்கு இருந்தது. அதுல சும்மா கிழி பாடல் சமூக வலைதளங்களில் வைரலானது.
பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்ததாக விக்கிப்பீடியாக தகவல் தெரிவிக்கின்றது.
திரைக்கு வந்து கிட்டத்தட்ட 3 மாதங்கள் ஆன நிலையில், தர்பார் (Darbar) படம் டிவியில் வெளியாகி இருக்கிறது.
ஆம், உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு காரணமாக வரும் ஏப்ரல் 14 பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அதன் பிறகு மேலும் 2 வாரங்களுக்கு ஏப்ரல் 30 ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இதையடுத்து, பிரதமர் மோடி மேலும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.
இந்த நிலையில், சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டு 27 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில் புது படங்களை ஒளிபரப்புகிறது.
அதோடு தமிழ் புத்தாண்டு தினத்தையும் சிறப்பிக்கிறது சன் டிவி நிறுவனம். அந்த வகையில், ரஜினிகாந்த் நடித்த தர்பார் படத்தை இன்று ஒளிபரப்பு செய்துள்ளது.
சன் டிவியில் (SunTV, 14th April at 6.30 PM) ஒளிபரப்பு செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னதாக, கடந்த ஏப்ரல் 5 ஆம் தேதி தர்பார் படம் ஸ்டார் கோல்டு இந்தியா என்ற ஹிந்தி சேனலில் ஒளிபரப்பு செய்துள்ளது.
தொடர்ந்து ஜெமிமினி டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது சன் டிவியில் தர்பார் படம் ஒளிபரப்பு செய்யப்படுவதைத் தொடர்ந்து ஹலோவில் தர்பார் சன் டிவியில் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
கொசக்சிக் பசப்புகழ்,தமிழ் பெயரா,இந்த பெயரின் அர்த்தம் என்ன என்பது எனக்கு தெரியாது.ஆனால் இந்த கதாபாத்திரம் யாரால் ஈர்க்கப்பட்டது என்பதை அறிவேன்.சற்று பொறுமையாக படிக்கவும்,ஸ்வாரஸ்யம் மிகுந்த கதை தான்:
நண்பன் திரைப்படம்,ஹிந்தியில் வெளியான 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பது அனைவரும் அறிந்ததே.
இங்க நம்ப விஜய்க்கு,பஞ்சவன் பாரிவேந்தன் என்கிற கொசக்சிக் பசப்புகழ் கதாபாத்திர பெயர்,அங்க அமீர் கானுக்கு ரன்சோட்தாஸ் சஞ்சட் என்கிற புண்சுக் வாங்குடு கதாபாத்திர பெயர்.
நண்பன் படத்துல இறுதி காட்சில பஞ்சவன் பாரிவேந்தன் நடத்துற பள்ளிக்கூடம் பார்த்திருப்போம் அல்லவா,அது போன்ற ஒரு பள்ளிக்கூடம் உண்மையாகவே இருக்கிறது.
அட ஆமாங்க,லடாக்ல தான் அந்த பள்ளிக்கூடம் இருக்கிறது. இந்த பள்ளிக்கூடத்துல சேர முக்கியத்தகுதி,Fail ஆகிருக்கணும். நீங்க பாஸ் ஆகிருந்தா Waiting லிஸ்ட் ல தான் உங்க பெயர் இருக்கும்.
இந்த பள்ளிக்கூடத்துல சேர,முழுக்க முழுக்க பரிட்சையில் தோற்றவருக்கே முன்னுரிமை.ஆச்சர்யமாக உள்ளதல்லவா!
சரி பதிலுக்கு வருவோம், லடாக் என்ற பெயரை கேட்டவுடன்,நம் மனதிற்கு தோன்றுவது ஹிமாலய மலை தொடர்,பனிப்பொழிவு,ரம்மியமான இயற்கை காட்சிகள்…
இது ஒரு புறம் தான்,மறுபுறத்தில் இங்கு வாழும் மக்களின் அவலநிலை யாரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. குளிர் காலத்தில் வெட்பநிலை -35 டிகிரி,காணும் அனைத்தும் உறைந்து போயிருக்கும்,விவசாயம் செய்ய இயலாது,அதே வெயில் காலத்தில், தண்ணீர் தட்டுப்பாடு… நம் ஹீரோ பிறந்ததும் இங்கு தான். ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில், லேஹ்(Leh ) மாவட்டத்தில் உள்ள ஒரு குக்கிராமம்.
அங்கு பள்ளிக்கூடம் இல்லாத காரணத்தினால்,அவருடைய ஒன்பது வயது வரை, அவரது அம்மா தான் அவருக்கு ஆசிரியர்.அவரது வீடு தான் பள்ளிக்கூடம்.அவரது அம்மா,அடிப்படை கல்வி அனைத்தையும் தனது தாய்மொழியில் அனுபவ பாடமாக கற்றுக்கொடுத்துள்ளார்.
தன்னுடைய பத்தாவது வயதில் முதல் முதலில் பள்ளியில் சேர்ந்ததும்,இவரை அனைவரும் ஒரு வேற்றுகிரகவாசிபோல் பார்த்தனர்.காரணம்,இவர் படிப்பை அணுகும் முறை மற்ற மாணவர்களை காட்டிலும் மிகவும் வித்தியாசமாகவும்,புதுமையாகவும் இருந்தது.
ஒரே ஆண்டில்,இரண்டு முறை வகுப்பு தேர்ச்சி பெற்றார்.காலங்கள் உருண்டோடியது… தன்னுடைய மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படிப்பை ஸ்ரீநகர், NIT கல்லூரியில் படித்து கொண்டிருந்த சமயம்,குடும்ப சூழல் காரணமாக,தன்னுடைய கல்லூரி செலவுகளை தானே சம்பாதித்து கட்ட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.கல்லூரி படிப்பு நேரம் போக மீதி நேரத்தில் குழந்தைகளுக்கு Tuition எடுத்து அதன் மூலம் வருவாயை ஈட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது தான்,அந்த திருப்புமுனை நடந்தது.இவர் tuition நடத்தும் பள்ளி மாணவர்கள் தேர்ச்சியின் சதவிகிதம் 5% கும் குறைவாக இருந்துள்ளது.குறிப்பாக சில பள்ளியில் தேர்ச்சி சதவிகிதம் 0%.இது அவருக்கு பெரும் அதிர்ச்சியையும்,ஆச்சர்யத்தையும் உண்டாக்கியது. இதன் காரணத்தை உற்று நோக்கியபோது,இவருக்கு ஒன்று புரிந்தது.
இந்த தோல்விக்கான காரணம் மாணவர்கள் அல்ல,நமது கல்வி முறையே என்று.தன் கல்லூரி படிப்பை முடித்து,தன் நண்பர்கள் சிலரை சேர்த்துக்கொண்டு The Students’ Educational and Cultural Movement of Ladakh (SECMOL) என்ற இயக்கத்தை ஆரம்பித்தார்.
பிறகு கிராம மக்கள் மற்றும் அரசாங்கத்தின் உதவியோடு அரசாங்க பள்ளிக்கூடங்களில் Operation New Hope என்ற திட்டத்தின் கீழ் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கப்பட்டது.1988 ஆம் ஆண்டு ஆரம்பித்த இந்த முயற்சி கொஞ்சம் கொஞ்சமாக படி படியாக வளர்ந்து,2015இல் மாணவர்களின் தேர்ச்சி சதவிகிதம் 75% ஆக உயர்ந்தது.
மீதம் 25% தோல்வியுற்ற மாணவர்களை அப்படியே விட முடியுமா என்ன ? அவர்களுக்காக பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பள்ளி தான்,நான் மேலே குறிப்பிட்ட பள்ளி. இந்த பள்ளி சற்று அல்ல மிகவும் வித்தியாசமான பள்ளி,இங்கு மின்சாரம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை முற்றிலும் சோலார் எனர்ஜியால் இயக்க படும் பள்ளி.செங்கல்,சிமெண்டால் ஆன கட்டிடங்கள் இல்லை,முற்றிலும் களிமண்ணால் கட்டப்பட்ட பள்ளிக்கூடம்.
இங்கு பாடம் நடத்தப்படும் விதமும் வித்தியாசமானது.நாம் பள்ளியில் படித்த அனைத்து விடயங்களும் இங்கு செயல் முறையில் நடத்தப்படுகிறது.நாம் நண்பன் படத்தில் பார்த்தது போலவே தான். பனி ஸ்தூபங்கள் (Ice Stupa) :
புவி வெப்பமயமாதல் காரணத்தினால்,ஆர்டிக்,அண்டார்டிக் பனி பாறைகள் உருகி,பூமியின் தட்பவெட்ப நிலை அதிகரித்து,பூமியின் சில நாடுகள் நீரில் மூழ்கும் அபாயம் நாம் அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் வந்த ஆய்வின் படி ஹிமாலய பனி பாறைகள்,1975-2000 வரை ஒப்பிடுகையில்,கடந்த 20 ஆண்டுகளில்,இரண்டு மடங்கு அதிகமாக உருகுகிறதாம். இதன் காரணமாக,நமது ஹீரோவும்,அவரது பள்ளி மாணவர்களும் சேர்ந்து கூட்டு முயற்சியில் ஒரு புதுமுறையை கண்டுபிடித்தனர்.
அதாவது,குளிர்காலங்களில்,மலை சரிவில்,4அடி ஆழத்தில் பைப்களை பொருத்தி,சரி எதற்கு 4 அடி ஆழம் என நீங்கள் நினைப்பது புரிகிறது,பொறுமையாக படியுங்கள்,அனைத்திற்கும் விடை உண்டு.
சரி கமிங் பேக் டூ தி பாயிண்ட்,4அடி ஆழத்தில் பைப்களை பொருத்தி,மலை மேலிருந்து குளிர் நீரை தரை மட்டத்திற்கு கொண்டு வரும் பொழுது,அழுத்தம் காரணமாக,மேலிருந்து கீழ் வந்த நீர் அனைத்தும்,நீரூற்று போல் மேல் எழும்பும்,மேலே கூறியது போல்,குளிர் காலங்களில் வெட்பநிலை -35 டிகிரி என்பதால்,மேல் எழும்பிய நீர் அனைத்தும் உறைந்து முக்கோண வடிவை பெரும்.
முக்கோண வடிவின் சிறப்பம்சம் பற்றி நாம் பள்ளிகளில் படித்ததே,அதாவது, குறைந்தபட்ச பரப்பளவு(Minimum Surface Area),அதிகபட்ச கொள்ளளவு(Maximum Volume).இதன் காரணமாக,இது அவ்வளவு எளிதாக உருகாது.
இதை தான் பனி ஸ்தூபங்கள் (Ice Stupa ) என்று அழைக்கின்றனர். குளிர் காலம் முடிந்து,வசந்த/வெயில் காலம் வந்ததும்,மற்ற ஐஸ் பாறைகள் முழுவதுமாக உருகினாலும்,இந்த பனி ஸ்தூபங்கள் படிப்படியாக உருக ஆரம்பித்து,இதன்வாயிலாக வரும் நீர் அனைத்தும் சேகரிக்கப்பட்டு,விவசாயத்திற்கு உபயோகப்படுத்தப்படுகிறது.
மலை சரிவில் இருந்து,கீழே நீரை கொண்டு வர இவர் எந்த மோட்டாரையும் பயன் படுத்தவில்லை.காரணம் நாம் படித்த புவிஈர்ப்பு (gravity ). அதே மாதிரி,நான்கு அடியில் பைப்பை பொறுத்த காரணம்,நீர் மேலிருந்து கீழே வரும் வரை உறையாமல் இருக்க.
நாம் அனைவரும் பள்ளியில் படித்த இயற்பியலை தான் இவர் உபயோகப்படுத்திக்கிறார்,ஆனால் பலனை பாருங்கள்!! இந்த கண்டுபிடிப்பிற்கு இவருக்கு ரோலெக்ஸ் விருது,மற்றும் இந்த செயற்கையாக இவர் உருவாக்கின Ice Stupa உயரத்திற்காக காக கின்னஸ் புத்தகத்திலும் இவர் பெயர் இடம் பெற்று இருக்கிறது.
நம் ஹீரோவின் பெயர்,சோனம் வாங்சுக் (Sonam Wangchuk): இவர் தான் நாம் கொண்டாடப்பட வேண்டியவர்.