Vadivelu Corona Song; வடிவேலு கொரோனா சோக பாடல்: வைரலாகும் வீடியோ! காமெடி நடிகர் வடிவேலு கொரோனா குறித்து சோகமான பாடல் ஒன்றை பாடி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வடிவேலு சோகமாக கொரோனா பாடல் பாடிய வீடியோவை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிடுள்ளார்.
கொரோனா வைரஸ் குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணவு வீடியோ வெளியிட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், நகைச்சுவை நடிகர் வடிவேலு கொரோனா வைரஸ் குறித்து பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
அந்தப் பாடலை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தற்போது அந்தப் பாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
2022 வரை சமூக விலகல் நீடிக்கலாம்; 2022 Social Distancing Harvard, கொரோனா தடுப்பூசி இல்லையெனில். 2022 வரை சமூக விலகல் கடைபிடிக்கும் நிலை ஏற்படுமாம்.
ஹார்வர்ட் பல்கலை கழகம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் கொரொனாவிற்கு முறையான சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ வரதாவரை சமூக விலகலே ஒரே தீர்வு என கூறியுள்ளது.
இதனால் குறிப்பாக அமெரிக்கா 2022 வரை சமூக விலகலை கடைபிடிக்கும் நிலை ஏற்படலாம் என கூறியுள்ளது. அமெரிக்காவில் கொரோனா தீ போல் பரவி வருகிறது.
கடந்த செவ்வாய் கிழமை அமெரிக்காவில் ஒரே நாளில் 2200 பேர் உயிரழந்துள்ளனர். மேலும் ஒட்டுமொத்தமாக 29000க்கும் மேற்பட்டோர் உயிரழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கு பிறகு மக்கள் நல ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிக்கையில் கொரோனா தடுப்பூசி அல்லது முறையான சிகிச்சை இல்லையெனில் 2022 வரை சமூக விலகல் நீடிக்கும் என தெரிவித்துள்ளது.
Raghava Lawrence; தூய்மை பணியாளர்களுக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி! கொரோனா பாதிப்பு நிவாரண நிதிக்கு முதலில் ரூ.3 கோடி வழங்கிய நடிகர் ராகவா லாரன்ஸ் தற்போது தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25 நிதியுதவி வழங்கியுள்ளார்.
நடிகர் ராகவா லாரன்ஸ் தூய்மை பணியாளர்களுக்கு ரூ.25 நிதியுதவி வழங்கியுள்ளார்.
நாட்டையே உலுக்கிய கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கொரோனா நிதியுதவியாக ரூ.3 கோடி கொடுத்துள்ளார்.
மேலும், பலர் தங்களுக்கு உதவுமாறு கோரிக்கை வைத்து வருவதாக அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும், தன்னார்வலர்கள் மூலமாக அவர்களுக்கு உதவ இருந்தார் ராகவா லாரன்ஸ்.
இந்த நிலையில், தன்னார்வலர்கள் நேரடியாக எந்த உதவியும் செய்யக்கூடாது என்று அரசு அறிவித்தது. இது குறித்து ராகவா லாரன்ஸ் அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தார்.
அதில், இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில், அரசால் நேரடியாக அனைவருக்கும் உதவி செய்ய முடியாது.
அந்த வகையில், தன்னார்வலர்கள் மீண்டும் உதவி செய்யும் வகையில் அரசு விதித்த தடையை மறுபரீசிலனை செய்ய வேண்டும் என்று கேட்டிருந்தார்.
இந்த நிலையில், தற்போது தூய்மை பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரூ. 25 லட்சம் கொடுத்துள்ளார்.
ஆம், தான் நடிக்க இருக்கும் அடுத்த படத்திற்காக வாங்கும் சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சம் பணத்தை கொடுத்துவிடும் படி தயாரிப்பாளர் கதிரேசனிடம் கூறியுள்ளார்.
இது குறித்து பைவ் ஸ்டார் புரோடகஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் கதிரேசன் கூறுகையில், லாரன்ஸுக்கு புத்தாண்டு வாழ்த்து சொல்ல அழைத்த போது அவர் சம்பளத்தில் இருந்து ரூ.25 லட்சம் தூய்மை பணியாளர்களுக்கு நேரடியாக வங்கிக் கணக்கு மூலமாக கொடுத்துவிடுங்கள் என்று கூறியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தூய்மை பணியாளர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் வங்கி கணக்கின் விவரங்களை வாட்ஸப் எண் 6382481658 க்கு அனுப்புங்கள் என்று கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
போலி இன்ஸ்டாகிரம் கணக்கில் பெண்களுடன் மன்மதலீலை; இன்ஜினியர் கைது, பெண்களை ஆபாசமாக சித்தரித்து அவர்களிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர்.
சமூக வலைத்தளங்களில் போலி கணக்குகளும் அதனால் பெண்களுக்கும் ஏற்படும் விபரீதங்களுக்கும் பஞ்சமில்லை. தற்போது இதற்கு பேஸ்புக் தளத்தை விட இன்ஸ்டாகிரம் பிரபலமாகி வருகிறது.
சென்னையில் இருக்கும் பெண்ணிடம் நண்பராகி பழகி அவரின் புகைப்படங்களை ஆபாசமாக சித்தரித்து 50000 வரை பணம் கேட்டு மிரட்டிய ராமநாதபுரத்தை சேர்ந்த வாலிபர் கைது.
பணம் தராவிட்டால் புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் அவரை மிரட்டியுள்ளார். இதனால் பயந்த அந்த பெண் தன் கணவரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
சென்னை புதுப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அவர்கள், ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமாருக்கு இ-மெயில் மூலம் ஒரு புகார் அளித்துள்ளனர்.
இது ராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் கிழக்கு தெருவைச் சேர்ந்த சிவக்குமார் என்பது தெரிய வந்தது. கம்பியூட்டர் என்ஜினீயரான அவரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
சிவக்குமார் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது பெயரில் ஒரு கணக்கும், சுகன்யா, பிரியா என்ற பெயர்களில் போலி கணக்கும் வைத்து இந்த மிரட்டல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார்.
நட்பாக அக்கறை உணர்வுடன் பழகி பிறகு அவர்களையே தனக்கு சாதகமாக பயனபடுத்தி இவ்வாறு லீலை வேலைகளில் ஈடுபட்ட அவரை போலீஸ் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
வைரலாகும் கேரம் போர்ட் சிறுவன் வேடிக்கையும் விழிப்புணர்வும், Tirupur carrom borad viral video, திருப்பூர் போலீசாரிடம் கேரம் போர்ட் விளையாடி சிக்கிய சிறுவர்கள்.
டிரோன் மூலம் அவர்களை கதறவிட்ட போலீஸ். ஒரு பக்கம் பார்க்க வேடிக்கையாக இருந்தாலும் மறுபக்கம் விழிப்புணர்வாக அமைகிறது.
இந்தியா முழுவதும் மே 3ஆம் தேதி வரை ஊரடங்கில் இருக்கிறது. இதனால் வீட்டினுள் முடங்கியே இருக்க முடியாமல் சிறுவர்கள் விளையாட சென்று விடுகின்றனர்.
திருப்பூரில் பொதுமக்கள் கூடுவதை தவிர்க்க ட்ரோன் மூலம் போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
திருப்பூர் ஊத்துக்குளி சாலை மண்ணரை பகுதியில் சிறுவர்கள் ஒன்றிணைந்து கேரம் விளையாடியது தெரிந்தது. இதனையடுத்து ட்ரோன் மூலம் ஓட ஓட விரட்டினர்.
இவ்வாறு போலீஸிடம் சிக்கியவர்களை டிரோனில் வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் ட்ரெண்ட் ஆக்கிய திருப்பூர் போலீஸ்.
அதில் ஒரு சிறுவன் கேரம் போர்டை தூக்கிக் கொண்டு ஓட, சற்று தூரம் சென்று அதன் பின்னால் மறைந்து கொண்டான். பின் விட்டால் போதும் என போர்டை தூக்கி எறிந்து விட்டு தலைதெறிக்க ஓடினான்.
கேப்டன் விஜயகாந்த்; வாழ்வாதாரம் பாதிக்கபட்டோருக்கு 5 கோடி நிதி, கொரோனோவால் வாழ்வாதாரம் தே.மு.தி.க. தலைவர் கேப்டன் விஜயகாந்த் 5 கோடி நிதியுதவி.
இந்தியாவில் ஊரடங்கு மே 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் அன்றாடம் வேலை பார்க்கும் சாமானிய மக்களின் வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் வேலைக்கு சென்றால் தான் வீட்டில் அடுப்பெரியும் நிலை இருக்கிறது. இவ்வாறு வாழ்வாதாரம் பாதிக்கபட்டோருக்கு விஜயகாந்த் 5 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
இதன் மூலம் அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்கள் தேமுதிக கட்சியினர் மூலம் வழங்கப்படும்.
1853ஆம் ஆண்டு இந்தியாவின் முதல் பயணிகள் தொடருந்து சேவை கிரேட் இந்தியன் பேணின்சுலார் ரயில்வே மும்பையில் போரி பந்தருக்கும் தானேக்கும் இடையில் ஆரம்பித்தது.
1444ஆம் இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் இடையில் ஐந்து ஆண்டுகள் போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டது.
1346ஆம் ஆண்டு செர்பியப் பேரரசு பால்கன் குடாவின் பெரும் பகுதிகளை கைப்பற்றியதுடன் இசுடெபான் துசான் பேரரசராக அறிவிக்கப்பட்டார்.
Today Birthdays in History
1813- திருவிதாங்கூர் சமத்தான மன்னர் சுவாதித் திருநாள் ராம வர்மா பிறந்த தினம் வரலாற்றில் இன்று.
1848- இந்தியா எழுத்தாளர் செயற்பாட்டாளர் கந்துகூறி வீரேசலிங்கம் பிறந்த தினம் இன்று.
1851- இலங்கை தமிழ் அரசியல்வாதி பொன்னம்பலம் ராமநாதன் பிறந்த தினம் இன்று.
1867- விமானம் கண்டறிந்த ரைட் சகோதரர்களில் ஒருவரான வில்பர் ரைட் பிறந்த தினம் இன்று.
1889- ஆங்கிலேய இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகர் ஆகிய சார்லி சாப்ளின் பிறந்த தினம் இன்று.
Today Deaths in History
2010- இந்தியா அமெரிக்க மேலாண்மை வல்லுனர் கோயம்பேத்தூர் கிருஷ்ணராவ் பிரகலாத் இறந்த தினம் இன்று.
2007- இந்தியா அமெரிக்கா பொறியியலாளர், கல்வியாளர் கோ.வோ. உலோகநாதன் இறந்த தினம் இன்று.
1828- எசுப்பானிய பிரான்சிய ஓவியர் பிரான்சிஸ்கோ கோயா இறந்த தினம் இன்று.
மே 3ம் தேதிக்குப் பிறகு கரோனா வைரஸ் வானத்திற்கு செல்லுமா என்ன? நடிகை ஸ்ரீ ரெட்டி ஊரடங்கை விமர்சித்துள்ளார்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் தற்போது உலகையே அச்சுறுத்தி வருகிறது.
குறிப்பாக அமெரிக்காவில் 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளனர். அங்கு 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த வைரசால் இறந்துள்ளனர்.
பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகள் பல இழப்புகளை சந்தித்து வருகிறது.
இந்த கரோனா வைரஸுக்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. தற்போது இந்தியாவில் 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதித்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட மக்கள் இறந்துள்ளனர்.
பிரதமர் மோடி 21 நாள் ஊரடங்கு உத்தரவை அறிவித்தார். அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே மக்கள் வெளியிடும்படி அறிவுறுத்தினார்.
பின்பு அந்த 21 நாள், 40 நாளாக மாற்றப்பட்டது. மே 3ஆம் தேதி வரை மக்கள் ஊரடங்கு பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
தற்போது சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டி சமூகவலைதளத்தில் பிரதமரின் இந்த ஊரடங்கு விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
“மே 3ற்கு பிறகு கரோனா வானத்திற்கு செல்லுமா என்ன?? முதலில் ஏழை மக்களைக் காப்பாற்ற நினைத்துப் பாருங்கள்.. குறைந்தபட்சம் உணவுப் பொருட்கள் வாங்கவாவது பணத்தை வழங்குங்கள். ஒருவேளை மே 3ஆம் தேதிக்கு பிறகு கரோனா வைரஸ் ஒரே ஒரு நபருக்கு பரவி, அது இலட்சக்கணக்கான மக்களுக்கு மீண்டும் பரவினால் என்ன செய்வது..?”
கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்கா பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது.
இதை மீட்டெடுக்கும் விதமாக அமெரிக்க பொருளாதார புத்தாக மீட்டெழுச்சி தொழில்துறை குழு (Great American Economic Revival Industry Group) என்ற ஒன்றை உருவாக்கியுள்ளார் டொனால்ட் ட்ரம்ப்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வரும் நிலையில் அமெரிக்காவை புரட்டிப் போட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையிலும் சரி, இறப்பு எண்ணிக்கையிலும் சரி அமெரிக்கா முதலிடத்தில் இருக்கிறது.
அமெரிக்காவில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பார்த்துள்ளனர். 26 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர்.
டொனால்ட் ட்ரம்ப் என்ன செய்வதறியாமல் திணறி வருகிறார். அமெரிக்காவின் பொருளாதாரம் அதி பாதாளத்திற்கு சென்றுவிட்டது.
தற்போது அதை மீட்டெடுக்கும் விதமாக ஒரு குழு ஒன்றை உருவாக்கியுள்ளார். அந்த குழுவிற்கு அமெரிக்க பொருளாதார மீட்டெழுச்சி தொழில்துறை குழு பெயர் வைத்துள்ளார்.
இந்த குழுவில் ஆறு இந்திய-அமெரிக்கர்கள் இடம்பெற்றுள்ளனர். குறிப்பாக கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை, மைக்ரோசாப்ட் சிஇஓ சத்யன் நாதெள்ளா உட்பட 6 அமெரிக்க கார்ப்பரேட் கம்பெனிகளின் இந்திய தலைவர்களை நினைத்துள்ளார்.
இவர்கள் டிரம்புக்கு பொருளாதார புத்துணர்ச்சியான ஆலோசனைகளை வழங்குவார்கள்.
இந்தக் குழுவில் 200 பலதரப்பட்ட அமெரிக்க வர்த்தக தொழில்துறை அதிபர்களை ட்ரம்ப் சேர்த்துள்ளார்.
“இவர்கள்தான் இந்த பெயர்கள், இவர்கள்தான் புத்திசாலியானவர்கள், பிரகாசமானவர்கள், இவர்கள் தான் நமக்கு புதிய யோசனை வழங்க உள்ளனர்” என்று ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இந்த மகா கார்ப்பரேட் குழுவில் சுந்தர் பிச்சை சத்யா, நாதெள்ளா, அரவிந்த் கிருஷ்ணா, சஞ்சய் மெஹ்ரோத்ரா ஆகிய இந்தியர்கள் மற்றும் ஆப்பிள் டிம் குக், ஆரக்கிள் லாரி எலிசன், பேஸ் புக் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோர் தொழில்நுட்ப ஆலோசனை குழுவில் உள்ளனர்.
நியூயார்க்: யூஎஸ்ஸில் கோவிட்-19 பரவலின் மையப்புள்ளி ஆக மாறிய நியூயார்க் நகரம். இப்போது மட்டும் 100000-த்திற்க்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது சீனா மற்றும் யுகேயில் உள்ள அதிகாரப்பூர்வமாக பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையை விட அதிகம்.
நியூயார்க் நகர அரசு தரவுகளின்படி, ஞாயிற்று கிழமை மட்டும் 5,695 பேர் புதிதாக பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்,
ஆக மொத்தமாக ஏப்ரல் 12 வாக்கில் 104,410 பேர் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர் மற்றும் 27,676 மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
நகரத்தின் இறந்தவர்களின் எண்ணிக்கை 6,898 ஆக தற்பொழுது உள்ளது.
யூஎஸ் ஸில் தற்பொழுது வரை 557,300 பேர் பாதிக்கப்பட்டும் 22,000 க்கும் அதிகமான மக்கள் இறந்தும் உள்ளனர்.
உலக அளவில் கோவிட்-19 ஆல் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை 1.8 மில்லியனாக உள்ளது மற்றும் 1,14,185 மக்கள் இந்நோயால் இறந்துள்ளனர்.
யூஎஸ்ஸில், 202,200க்கும் அதிக மக்கள் நியூயார்க் மாகணத்தில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 10,834 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.
கடந்த வாரம் “மிக மிக கடினமான” சூழலை மருத்துவமனைகளில் சந்தித்ததாக நியூயார்க் நகர தலைவர் பில் டே பிலாசியோ ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் கூறினார்.
“ மற்றும் நாங்கள் எதிர்கொள்ளும் இத்தகைய எதிரியை எப்போதும் குறைவாக எண்ணமாட்டோம். கொரோனா வைரஸ் என்பது வரலாறு காணாத கடுமையான சவால்களை எங்கள் முன் நிறுத்தியுள்ளது.
மற்றும் உறுதியாக இதுபோன்ற நிலைமையை இந்த நுற்றாண்டில் எப்போதும் கண்டதில்லை”. என அவர் தெரிவித்தார்