Home Blog Page 143

தென்பாண்டி சீமையிலே: அப்பாவின் பாட்டை தனது ஸ்டைலில் பாடிய ஸ்ருதி ஹாசன்!

0
Shruti Haasan Thenpandi cheemayile Song

தென்பாண்டி சீமையிலே: அப்பாவின் பாட்டை தனது ஸ்டைலில் பாடிய ஸ்ருதி ஹாசன்! நாயகன் படத்தில் வரும் தென்பாண்டி சீமையிலே என்ற பாடலை ஸ்ருதி ஹாசன் தனது ஸ்டைலில் பாடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஸ்ருதி ஹாசன் பாடிய தென்பாண்டி சீமையிலே பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கமல் ஹாசனின் மகள் ஸ்ருதி ஹாசன் படங்களில் நடித்து வருவதும் பாடல் பாடுவதிலும் ஆர்வம் கொண்டவர் என்பது அனைவரும் அறிந்தது.

கமல் நடித்த ஹேராம் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்தார். ஆனால், சூர்யா நடிப்பில் வந்த 7 ஆம் அறிவு படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார்.

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் படங்களில் நடித்துள்ளார். அதோடு லண்டனில் இசை கச்சேரியும் நடத்தியுள்ளார்.

தற்போது உலகத்தையே ஆட்டிபடைக்கும் கொரோனா வைரஸ் காரணமாக, வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரது சகோதரியும் தனி வீட்டில் வசிக்கிறார்.

இந்த நிலையில், தனியாக இருக்கும் ஸ்ருதி ஹாசன் அன்றாடம் தான் செய்யும் வேலைகளை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அப்படி ஒன்று தான் தென்பாண்டி சீமையிலே பாடல் வீடியோ.

கடந்த 1987 ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிப்பில் வந்த நாயகன் படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். இவரது இசையில் வந்த முக்கியமான பாடல் தென்பாண்டி சீமையிலே தேரோடும் வீதியிலே என்ற பாடல் தான் அது.

இந்த பாடல் பட்டி தொட்டியெங்கும் வைரலானது. யூடியூப்பில் அதிக வியூஸ் பெற்றது. என்றும் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம்பெற்ற பாடல்களில் இதுவும் ஒன்று.

தற்போது இந்த பாடலுக்கு ஸ்ருதி ஹாசன் இசையமைத்தவாறு, கீ போர்டு வாசித்துக் கொண்டு பாடல் பாடியுள்ளார். அவருக்கே உரிய ஸ்டைலில் இந்தப் பாடல் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தென்பாண்டி சீமையிலே… எனக்கு எப்போதும் பிடித்த பாடல் என என்று இன்ஸ்டாகிராமில் குறிப்பிட்டுள்ளார்.

3

LOVE and LOVE only: சன் டிவியில் காதலுக்கு மரியாதை!

0
Kadhalukku Mariyadhai

விஜய் நடிப்பில் திரைக்கு வந்த காதலுக்கு மரியாதை படம் இன்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

சன் தொலைக்காட்சியில் காதலுக்கு மரியாதை படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இயக்குநர் ஃபாசில் இயக்கத்தில் விஜய், ஷாலினி, சார்லி, ராதாரவி, சிவக்குமார் ஆகியோர் பலர் நடிப்பில் கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் காதலுக்கு மரியாதை.

காதலுக்கு மரியாதை Aniathipravu என்ற மலையாள படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. Aniathipravu இந்த மலையாள படத்தையும் இயக்குநர் ஃபாசில் தான் இயக்கியிருந்தார்.

ஃபாசில் இயக்கத்தில் வந்த மலையாள வெற்றிப் படங்களில் Aniathipravu என்ற படமும் ஒன்று.

இந்தப் படத்தைத் தான் ஃபாசில் காதலுக்கு மரியாதை என்ற டைட்டிலில் தமிழில் ரீமேக் செய்துள்ளார்.

காதலை மையப்படுத்திய இந்தப் படம் இன்றும் ரசிகர்களிடையே கொண்டாடப்படும் ஒரு படமாக திகழ்கிறது.

ஜீவானந்தம் என்ற ரோலில் வரும் விஜய்யும், மினியாக வரும் ஷாலினியும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். இவர்களது காதல் விவகாரம் ஷாலினியின் 3 அண்ணன்களுக்கு தெரியவர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

இதன் காரணமாக விஜய்யையும், அவரது நண்பர்களான சார்லி மற்றும் தாமுவை அடித்து துன்புறுத்துகிறார்கள்.

ஒரு கட்டத்தில் வீட்டை விட்டு ஓடிவரும் ஷாலினி, சார்லியின் உதவியுடன் அவரது அப்பா மணிவண்ணன் குப்பத்திற்கு செல்கிறார்கள்.

அவர்களுக்கு கல்யாண ஏற்பாடுகள் நடக்க, மீண்டும் வீட்டிற்கே செல்ல இருவருமே முடிவு செய்கிறார்கள். இறுதியாக விஜய், தனது அப்பா, அம்மாவுடன் ஷாலினியின் வீட்டிற்கு சென்று அவர்களை பார்த்துவிட்டு வரலாம் என்று செல்கிறார்கள்.

ஆனால், அவர்களே ஷாலினியை மருமகளாக தங்களது வீட்டிற்கு அழைக்கிறார்கள். இறுதியில், விஜய் மற்றும் ஷாலினி இருவரும் ஒன்று சேர்கிறார்கள்.

ஆரம்ப காலங்களில் தொடர்ந்து காதலுக்கு முக்கியத்துவம் கொண்ட படங்களில் விஜய் நடித்து வந்துள்ளார். அதில், முக்கியமான படம் காதலுக்கு மரியாதை. இந்தப் படம் விஜய்க்கு திருப்பு முனையாக அமைந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து மீண்டும் விஜய் – ஷாலினி இருவரும் இணைந்து கண்ணுக்குள் நிலவு என்ற படத்தில் நடித்துள்ளனர். இந்தப் படத்தையும் ஃபாசில் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், காதலுக்கு மரியாதை படம் மட்டுமல்ல, இளையராஜாவின் இசையில் வந்த பாடல்களும் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்ற பாடல்களாக அமைந்துள்ளன.

என்ன தாலாட்ட வருவாளா, ஆனந்த குயிலின் பாட்டு, ஒரு பட்டாம் பூச்சி, இது சங்கீத திருநாளோ, ஓ பேபி பேபி, அய்யா வீடு திறந்துதான் என்று அனைத்து பாடல்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில், காதலுக்கு மரியாதை படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகள் ஆன நிலையில், எத்தனையோ முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், இன்றும் சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது. ஆம், இன்று காலை 9.30 மணிக்கு சன் தொலைக்காட்சியில் காதலுக்கு மரியாதை படம் ஒளிபரப்பு செய்யப்பட்டுள்ளது.

இதனை விஜய் ரசிகர்கள் #KadhalukkuMariyadhai என்ற ஹேஷ்டேக்கில் கொண்டாடி வருகின்றனர். படம் குறித்து காட்சிகளை இந்த ஹேஷ்டேக்கில் பதிவிட்டு வருகின்றனர்.

3

ஆளப்போறான் தமிழன் பாடலாசிரியர் விவேக் பர்த்டே டுடே!

0
Lyricist Vivek Birthday

Lyricist Vivek Birthday Today; ஆளப்போறான் தமிழன்: பாடலாசிரியர் விவேக் பர்த்டே டுடே! பாடலாசிரியர் விவேக் இன்று தனது 35ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

பாலாசிரியர் விவேக் பிறந்தநாள் இன்று…

கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த எனக்குள் ஒருவன் படத்தின் மூலம் பாடலாசிரியராக அறிமுகமானவர் விவேக்.

தற்போது வரை 100க்கும் அதிகமான பாடல்களை எழுதி அசத்தியுள்ளார்.

கோலிவுட்டில் தனது ரசிகர்களை பாடல் வரிகள் மூலம் கவர்ந்த விவேக் இன்று தனது 35 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதையடுத்து, ரசிகர்கள், பிரபலங்கள் என்று பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த 5 ஆண்டுகளாக பல்வேறு ஜானர்களில் புதுவிதமான பாடல் வரிகளைக் கொண்டு 40 க்கும் அதிகமான படங்களுக்கு பாடல் வரிகள் அமைத்துள்ளார்.

தளபதி விஜய் நடிப்பில் வந்த மெர்சல் படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் பாடல் முதல் சூர்யா நடிப்பில் வெளியாக இருக்கும் சூரரைப் போற்று படத்தில் உள்ள வெய்யோ சில்லி பாடல் வரை இவரது பாடல்கள் ரசிகர்களை கவரும் வகையிலேயே அமைந்துள்ளது.

ஆளப்போறான் தமிழன் பாடல் 100 மில்லியன்னுக்கும் அதிகமான வியூஸ் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்காக பல விருதுகளையும் விவேக் பெற்றுள்ளார்.

பேட்ட மரண மாஸ் பாடலை எழுதியதே இவர்தான். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிம்ரன், த்ரிஷா, மாளவிகா மோகனன் நடிப்பில் வந்த பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலுக்கு பாடல் வரிகள் அமைத்துள்ளார்.

இந்தப் பாடல் யூடியூப்பில் மட்டும் 130 மில்லியனுக்கும் அதிகமான வியூஸ் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பிகில் சிங்கப்பெண்ணே, வட சென்னை என்னாடி மாயாவி நீ என்ற பாடல் உள்பட ஏராளமான பாடல்களுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்துள்ளார்.

தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள சூரரைப் போற்று படத்தில் இடம்பெற்றுள்ள வெய்யோன் சில்லி என்ற பாடலுக்கு பாடல் வரிகள் அமைத்துக் கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

3

சச்சின் டெண்டுல்கர்: ஒரு தலைமுறையின் ஆதர்ஷ நாயகன்

0
sachin birthday

சச்சின் டெண்டுல்கர்: ஒரு தலைமுறையின் ஆதர்ஷ நாயகன்… எண்ணற்ற நினைவலைகள் , ஏக்கம்…

சென்ற நவம்பர் 13 – 16 தேதிகளை என்னால் எளிதில் கடக்க முடியவே இல்லை… அன்று அவர் ஆற்றிய உரை, ஏப்ரல் 24 அவரது அடுத்த பிறந்த நாள்!

ஆம் அன்று தான் சச்சின் டெண்டுல்கர் 2013-ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். 

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று ஒரு அக்மார்க் இந்தியனாக தனது நன்றி அறிவித்தலைத் துவங்கி, தனது உறவினர், அண்ணன், மனைவி, மக்கள், நண்பர்கள், சக வீரர்கள், அவரின் நிர்வாகிகள் என்று அவர் ஆற்றிய உரை உயிரை உருக்கியது…

எல்லாம் பேசி முடித்துவிட்டு எந்தன் கிரிக்கெட் வாழ்க்கை இந்த 22 அடியில் இங்கே நிறைவுறுகிறது என்று கூறிவிட்டு அந்த மும்பை வான்கடே மைதானத்தின் பிட்சை தொட்டு வணங்கிய நொடி என்னைப்போன்ற கோடிக்கணக்கான சச்சின் ரசிர்கர்கள் கதறி அழுதிருப்பர் … நான் மட்டும் என்ன விதி விலக்கா?

சச்சின் என்ன செய்து விட்டார் என்று கேட்பவர்களுக்கு… ஒரே வரியில் விடையே கூறமுடியாது. ஒரு காலத்தில் சச்சின் ஆட்டம் இழந்தால் இந்தியாவே ஆட்டம் இழந்தது போலத்தான்.

மிக சிறு வயதில் விளையாட வந்து மிகமிக அர்ப்பணிப்புடன் விளையாடி தொடவே முடியாத சிகரமாய்  இருப்பவர் .

90 ரன் எடுத்திருக்கையிலும், நடுவர் தவறான தீர்ப்பு வழங்கினாலும் சிரித்துக்கொண்டே செல்லும் பக்குவம் உடையவர் .

எதிர் அணி பந்து வீச்சாளர்கள் விடும் வாய் சவடால்களுக்கு, தனது மட்டையை கொண்டே பதில் அளித்தவர். ஒட்டுமொத்த இந்தியாவின் எதிர்பார்ப்பை ஒரே ஆளாக எதிர் கொண்டவர்.

அவர் 30 வயதை நெருங்கியதும் ஆரமித்த, அவரது ஓய்வு பற்றிய பேச்சுகளை தனது நேர்த்தியான ஆட்டத்தின் மூலமே தகர்த்தவர்.

அவர் மைதானத்தில் நின்றாலே அது நம் அணிக்கு அசுர பலம், எதிர்  அணிக்கோ சிம்ம சொப்பனம்!

அதுவும் அவர் சில நேரங்களில் மட்டையை  வீசும் லாவகம் மெய் சிலிர்க்க வைக்கும். அவரின் புன்னகை, கால் மட்டை சரிசெய்தல், தலைக்கவசத்தை சரி செய்தல் போன்ற சிறு சிறு உடல் மொழிகளும் அலாதி…

அளவற்ற காயங்கள் பட்டாலும் பீனீக்ஸ் பறவை போல் மீண்டு வந்தவர். கடும் முதுகு வலியுடன் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் மேட்சில் (1999) சென்னை சேப்பாக்கத்தில் அவர் அடித்த 136 மறக்கவே முடியாது…

2003-ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக அவர் அடித்த அடி (உலகக் கோப்பை). தனி ஒரு ஆளாக நின்று ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 175 ரன்கள் (ஒரு நாள் போட்டி).

தென்னாப்ரிக்காவுக்கு எதிராக ஒரு நாள் போட்டியில் முதல் 200* இவையெல்லாம் வெறும் சாம்பிள் … அடுக்க ஆரமித்தால் ஒரு புத்தகமே வேண்டும் .

டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் , சதங்கள் என அடுக்கிக்கொண்டே போகலாம்… 

அவரின் எளிமையே அவரது அடையாளம் ! பாரத் ரத்தினா விருது பெற்றும் மிக இயல்பாக இருக்க அவரால் முடியும்… அவருக்காகவே மும்பை இந்தியன்ஸ் அணியை இன்றும் பலர் ஆதரிக்கின்றனர், அது துளியும் மிகை அல்ல. என்று காண்போம் இனி!! 

சா.ரா

3

ஒத்த செருப்பு  சைஸ் 7: செருப்பு மட்டும் இல்லம் ஆளே ஒத்த தான்!!

0
ஒத்த செருப்பு  சைஸ் 7

ஒத்த செருப்பு  சைஸ் 7: ஒருவரே நடித்து, கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி, தயாரித்துள்ள படம் என்று “கின்னஸ்” புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டது இந்தப் படம். தமிழ் சினிமாவின் மேலும் ஒரு மைல் கல்

ஒத்த செருப்பு  சைஸ் 7 – புது வித முயற்சி!

சினிமாவை பொழுது போக்கு அம்சமாகத்தான் பலர் கருதுகின்றனர், வெகு சிலரே அதை கலைவடிவமாக மதித்து புதுமைகள் பல புகுத்துகின்றனர் .

உதாரணமாக 1940 களின் வாக்கில் வெளி வந்த “ அந்த நாள் “ என்கிற திரைப்படமே தமிழில் முதலில் வெளிவந்த சஸ்பென்ஸ் த்ரில்லர் .

“ராஜ ராஜ சோழன் “ தான் தமிழில் வெளிவந்த பயோ-ஸ்கோப் கலர் திரைப்படம். “விருமாண்டி” படத்தில் நேரடியாக (டப்பிங் இல்லாமல்) ஷூட்டிங் நடைபெறும் இடத்திலே, எடுக்கப்பட்ட காட்சிகள் அப்படியே வெளிவந்தது .

“கோச்சடையான்“ படம் தமிழில் வந்த முதல் மோசன் கேப்சுர்  படம். ‘“2-0 “  முழு நீல 3டி படம். இப்படி அடுக்கிக்கொண்டே போகும் தமிழ் சினிமாவின் மேலும் ஒரு மைல் கல் இந்த ஒத்த செருப்பு  சைஸ் 7.

ஆம் , ஒருவரே நடித்து , அவரே , கதை , திரைக்கதை , வசனம் எழுதி இயக்கி , தயாரித்துள்ள படம் என்று கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றுவிட்டது இந்தப் படம்.

படம் எப்படி?

தனி மனிதனாக நின்று விளையாடியுள்ளார் பார்த்திபன் அவர்கள்.  ஒற்றை ஆள்… ஒரு விளையாட்டு கிளப்பில் வேலைப் பார்க்கும் “ மாசிலாமணி “ என்கிற நடுத்தர வயது கதாபாத்திரம்.  அந்த நபரை மட்டுமே நாம் திரையில் காண முடியும்.

மீதமுள்ள அந்த நபரின் நோயுற்ற மகன், மனைவி,  ரோஸி மேடம், டெபுடி கமிஷனர், இன்ஸ்பெக்டர், கோவக்கார போலீஸ் அதிகாரி, அய்யப்ப மாலை போட்ட காவலாளி, எம்.எல்.ஏ, அவரின் உதவியாளர், கமிஷனர், மனோதத்துவ மருத்துவர் போன்ற அனைத்துக் கதாபாத்திரங்களையும் நன்கு உணர முடிகிறது குரல்களை வைத்தே.

இப்படி ஒரு விஷயத்தை யோசிப்பதற்க்கே அசாத்திய திறன் வேண்டும். ஒரு கொலைவழக்கில் குற்றம் சுமத்தப்படும் ஒரு சாமானியன், சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்தி தப்பிப்பது தான் கதை என்றாலும். அதை கூறிய விதம் , களம் முற்றிலும் புதிது.

மிக நன்றாகவே நடித்துள்ளார் பார்த்திபன்!  படத்தை பார்பவர்களுக்கு சலிப்பு தட்டா வண்ணம் கேமிரா கோணங்கள், மெல்லிய நையாண்டி, சிறிது சுவாரசியம் ஆகியவற்றை அளித்துள்ளார்.

பின்னணி இசையே இப்படத்தின் முதுகு எலும்பு! திரு.சத்யா அவர்களின் இசைக்கோர்ப்பே இப்படத்தை இன்னும் தூக்கி நிறுத்துகிறது. திரு.சந்தோஷ் நாராயணன் ஒரு பாடலுக்கு இசை அமைத்துள்ளார்.

இந்த படம் விருதுகளை வாங்கி குவித்தாலும், ரசிகர்களின் மத்தியில் பெரிய வரவேற்பைப் பெறவில்லை.

இதையே ஒரு ஹாலிவுட்டில் செய்திருந்தால் தலையில் தூக்கி வைத்து கொண்டாடி இருப்போம்…!

சா.ரா.

3

 சைரா காது ரா CYBIRA (Cyber security interactive robotic agent ! Police Robo )

0
Robo police

சைரா காது ரா CYBIRA ( Cyber security interactive robotic agent ! Police Robo). சைபீரா பற்றி தெரியுமா? இப்படி தான் என் நண்பன் என்னிடம் கேட்டான்?

சில வருடங்களுக்குப் பிறகு எனது நண்பன் அர்ஜுன் ரெட்டியை ஒரு உணவகத்தில் சந்தித்தேன். நானும் அர்ஜுனும் ஒன்றாக எஸ்.ஏ.பி பயின்றோம். அவன் அதே துறைக்கு வேலைக்கு சென்று விட்டான் நானோ…. அது  என்னத்துக்கு இப்போ அத விட்ருவோம் .

நானும் அவனும் உரையாடுகையில் சைபீரா தெரியுமா என்று கேட்க, நானோ “ஏன் தெரியாது? உங்க சிரஞ்சீவி காரு நடிச்சிருக்காரு, ராம்சரண் ப்ரொடியூசர, நயன்தாரா , அனுஸ்கா, எல்லாம் நடிச்சப் படம்… பீரியட் மூவி,  எங்க விஜய சேதுபதி கூட நடிச்சிருக்காரு, தலைவி தமன்னா கூட…” இப்படி மூச்சு விடாம பேசும்போதே தலையில கைய வெச்சுட்டான்..

அடே சைரா காது ரா, சைபீரா என்று சலித்துக்கொண்டு…. விஷயத்தை விவரித்தான் ஆந்திர மாநிலம்,  விசாகப்பட்டினம் வட்டம், மஹாராணிப்பேட்டாவில் உள்ள காவல் நிலையத்திற்கு ஒரு புதிய போலீஸ் காரரை நியமித்துள்ளனராம் .

அந்த போலீஸ் அதிகாரி பதி மூன்று கேமிரா, 500 ஜீபி மெம்மரி கொண்டுள்ளாராம் என்ன குழம்பி விட்டீர்களா? ஆம் அந்த அதிகாரி பெயர் தான் CYBIRA! (Cyber security interactive robotic agent ! Police Robo). 

அவர் ஒரு  எந்திரன்!

காவல் நிலையத்திற்கு புகார் கொண்டு வருபவரிடம் தகவல்களை பெற்று , அவருடைய உயர் அதிகாரிக்கு அனுப்புவது.

360 டிகிரி கோணத்தில் தலையைத் திருப்பி படம் பிடித்து அங்க அடையாளங்களை பதிந்துகொள்வது, பட்டியலில் உள்ள தேடப்படும் குற்றவாளிகளைக் கண்டால் தகவல் தெரிவிப்பது என்று அனைத்து வேலைகளைகளையும் செய்வார் இந்த சைபீரா!

இதுவரை சுமார் 150 வழக்குகளுக்கு மேல் பதிந்து அதற்கான அத்தாட்சியை வழங்கியுள்ளார் அவர். இந்த  வரவேற்கத்தக்க மாற்றம் நிகழ்ந்துள்ளது  நம் இந்தியாவில் என்பது கூடுதல் பெருமை .

எந்திர காவலாளியை தயாரித்தது ரோபோ  கோபிலர் என்கிற தனியார் நிறுவனம்.

இந்த தகவலைக் கூறிவிட்டு விடைபெறும் வேளையில் “இந்த சினிமா பித்த குறைச்சாத்தான் உறுப்புடுவ“ என்று சுந்தரத் தமிழில் சொல்லிவிட்டு போனான் .

அது கூட எனக்கு வருத்தமில்லை தலைவி தமன்னாவையும் சேத்து திட்டிட்டு போயிட்டான், அதான் மனசு வலிக்குது.

சா.ரா.

3

16/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

16/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று உங்களிடம் மன உறுதி அதிகமாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் சிறப்பாக முடியும். உத்தியோகத்தில் பணவரவு சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் மேன்மை அடையும்.

ரிஷப ராசிபலன்

இன்று பல தடைகள் வந்து சேரும் நாளாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகிறது. உறவினர்களிடம் சற்று கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

மிதுன ராசிபலன்

இன்று சவாலான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கவனமாக செயல்படவேண்டிய நாள். புதிதான எந்த காரியங்களிலும் துவங்க வேண்டாம்

கடக ராசிபலன்

இன்று மிகவும் சுறுசுறுப்பாக அனைத்து காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். தொழிலில் இருந்த பிரச்சனைகள் தீரும் நாளாக இருக்கும். உடல் ஆற்றல் சிறப்பாக இருக்கும். பணத்தை சேமிக்கும் பழக்கத்தை கொண்டு வர வேண்டும்

சிம்ம ராசிபலன்

இன்று எதிர்பார்த்த பலன்கள் கிடைக்காது. எதிர்காலத்தை குறித்த கவலைகள் இருக்கும். பணியிடத்தில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பணியில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்

கன்னி ராசிபலன் 

இன்று பதட்டமான சூழல் நிலவுகின்ற நாளாக இருக்கும். பணியில் ஏமாற்றங்கள் வர வாய்ப்புண்டு. துணையுடன் அமைதியான அணுகுமுறை இருக்க வேண்டிய நாளாக இருக்கிறது. ஆரோக்கியத்தில் பிரச்சனை வரலாம்.

துலாம் ராசிபலன்

இன்று உங்களின் மனதை உறுதியாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். தாங்கள் எதிர்பார்த்த நற்பலன்கள் பெற உழைக்க வேண்டும். அதிக வேலை சுமையால் சோர்வுடன் காணப்படுவீர்கள்

விருச்சிக ராசிபலன்

இன்று உங்களின் வெற்றியை கொண்டாட வேண்டிய நாளாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். வேலைகள் விரைவாக முடிந்து லாபம் பெற்று தரும். அற்புதமான நாளாக இருக்கும்.

தனுசு ராசிபலன்

இன்று நீங்கள் பதட்டமான சூழ்நிலையில் இருப்பீர்கள். குழப்பங்கள் தீர தியான பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். குடும்பத்தில் சர்ச்சைகள் ஏற்பட வாய்ப்புண்டு. கூடுதல் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்

மகரம் ராசிபலன் 

இன்றைய செயல்களை பொறுமையாக செய்தல் அவசியம் ஆகும். அவசர புத்தியை அமைதிப்படுத்தி கொள்ளவும். பணியிடத்தில் பிரச்சனைகள் வரலாம். எனவே வேலைக்கு விடுப்பு வேண்டுமானாலும் எடுத்து கொள்ளவும். குடும்பத்துடன் இருப்பதே உங்களுக்கு இன்று நல்லது.

கும்ப ராசிபலன்

இன்று உங்களிடம் புரிந்துணர்வு அவசியம் தேவையாகும். கோபத்தை குறைத்து கொள்வது அவசியம் தேவை. தங்களின் குடும்ப வாழ்வில் சில கசப்பான சம்பவங்கள் இன்று நடக்க வாய்ப்புகள் உண்டு. கவனமாக இருக்க வேண்டிய நாளாகும்.

மீனம் ராசிபலன் 

இன்று செழிப்பான நாளாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் சிறப்பாக முடிவடையும். வேண்டிய அனைத்தும் தானாக வந்து சேரும் நாளாகும். வியாபாரத்தில் லாபம் அதிகமாக காணப்படும்.

16/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

நீ என்ன அவ்வளவு பருப்பா? முனீஷ்காந்த், பிரேம்ஜியின் கொரோனா குறும்படம்!

0
Corona Short Film

நீ என்ன அவ்வளவு பருப்பா? முனீஷ்காந்த், பிரேம்ஜியின் கொரோனா குறும்படம்! காமெடி நடிகர்கள் முனீஷ்காந்த், பால சரவணன், கருணாகரன் ஆகியோர் நடித்த குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரபலங்கள் நடித்த கொரோனா குறும்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நாட்டையே உலுக்கியது கொரோனா வைரஸ். கடந்த 5 மாதங்களாக உலக மக்கள் கொரோனாவால் பீதியடைந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும் இதுவரை கொரோனாவுக்கு 22 பேர் பலியாகியுள்ளனர்.

கொரோனா குறித்து பிரபலங்கள் பலரும் விழிப்புணர்வு வீடியோ வெளியிட்டு வருகின்றனர். மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் முடிந்த நிதியுதவி மற்றும் பொருளுதவி வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் இவர்கள் கொஞ்சம் வித்தியாசமாக கொரோனா குறித்து குறும்படம் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த குறும்படத்தில் முனீஷ்காந்த், பால சரவணன், பிரேம்ஜி, காளி வெங்கட், கருணாகரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

வீட்டில் இருந்து கொண்டு வெளியில் சென்றால் என்னவெல்லாம் நடக்கும் என்பது குறித்தும், வீட்டிற்குள்ளேயே இருந்தால் எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம் என்பது குறித்தும் அந்த வீடியோவில் நடித்துக் காண்பித்துள்ளனர்.

இதில், முனீஷ்காந்த் சமையல் மாஸ்டர். அவர் பார்பிக்யூ வாங்கி வர காளி வெங்கட்டிடம் கூறுகிறார். இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில், பேப்பரில் வந்ததை படித்துக் காண்பிக்கிறார்.

பிறகு மட்டன் வாங்கிவர கூறுகிறார். அதற்கும் மறுப்பு தெரிவிக்கும் வகையில் ராயபுரத்தில் மட்டன் வியாபாரிக்கு கொரோனா என்று படிக்கிறார்.

இறுதியில், சாம்பார் வைக்க திட்டம் போடும் முனீஷ்காந்த் பருப்பு வாங்கி வர பிரேம்ஜியிடம் கூறுகிறார். அவரோ நான் வெளியில் சென்றால் போலீஸ்காரர்கள் நீ என்ன அவ்வளவு பருப்பா? என்று கேட்கிறார்கள் என்று கூறி பால சரவணனிடம் பருப்பு வாங்க கூறுகிறார்.

அவரோ, நான் இப்போது தான் கை கழுவுனேன். இனி கை கழுவதற்கு தண்ணீரும் கிடைக்காமல் போய்விடும். நீரின்றி அமையாது உலகு என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதியாக கருணாகரன் கிட்ட வருகிறார் முனீஷ்காந்த்….

கருணாகரன் May ல மீட் பண்ணுவோம். இல்லையென்றால் மேல மீட் பண்ணுவோம் என்று டயலாக் பேசுகிறார்.

கடைசியாக வீட்டு வாசலை தாண்டி நானும் வர மாட்டேன்.. நீங்களும் வரக்கூடாது..பேச்சு வாட்சப்போடு தான் இருக்கணும்…என்று பால சரவணன் கூறுகிறார்.

வீரம் என்பது வீட்டிற்குள்ளேயே இருப்பது…காளி வெங்கட்…

வீட்டிற்குள்ளேயே இருப்போம்…கொரோனா பரவலை தடுப்போம். கருணாகரன்…

என்ன சொல்றாங்க….வீட்டுல இருக்க சொல்றாங்க…எவ்வளவோ பண்ணிட்டோம்..இத பண்ண மாட்டோமா என்று பிரேம்ஜி டயலாக் பேசியுள்ளார்.

அதோடு அந்த வீடியோவும் முடிகிறது. தற்போது இந்த கொரோனா குறும்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

குரு 2007  “இல்லனு சொன்னா என்னோட காதுல விழாது“ 

0
குரு 2007

குரு 2007-ல் வெளிவந்த திரைப்படம். இந்தி, தமிழ் என இரு மொழிகளில் வெளியானது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த இந்த திரைப்படம் பற்றி இன்று பார்ப்போம்.

பெயர் போடுவது முதலே புதுமை! 

பத்திரிக்கை அச்சின் எழுத்துக்களே படத்தில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களை அறிவித்தது.

படம் துவங்கியவுடன் பளீர் நிறத்துடன் ஒரு விளையாட்டு மைதானம், மூன்று முறை இருட்டு பிறகு வெளிச்சம் “ஒரே கனா என் வாழ்விலே“ என்கிற மெல்லிய குரலுடன் கதை பின்னோக்கி நகர்கிறது .

இலஞ்சி கிராமம்

படம் இலஞ்சி என்னும் கிராமத்தில் துவங்குகியது, வாத்தியாரின் மகனான “குருநாத் தேசிகன்“ பத்தாம் வகுப்புத் தேர்வில் தோல்வி அடைகின்றான். அதைப்பற்றி சிறிதும் அலட்டிக்கொள்ளாமல்  “ இஸ்தான்புல் “ செல்ல ஆயத்தமாகிறான்.

(இது ஒரு  மொழி மாற்றுப் படம் , புரியவே இல்லை, இன்னும் நிறைய எதிர் பார்த்தோம் போன்ற விமர்சனங்கள் ஏனோ என்னை பாதிக்கவே இல்லை) 

தந்தையின் அதிருப்தி அவனை பாதிக்கவில்லை, அங்கு சென்று பெட்ரோல் விற்பனை செய்துகொண்டே வியாபாரத்தின் நுணுக்கங்களை கற்கின்றான் . 

அவனுக்கு அங்கேயே ஊதிய உயர்வுடன் கூடிய பணி உயர்வு கிடைக்கிறது, குருவோ அதை உதறித்தள்ளிவிட்டு சொந்த ஊர் திரும்புகிறான்.

தொழில் துவங்க காசு தேடி அலைகிறான், அப்போது அவனின் நண்பன் அக்காவிற்கு மாப்பிள்ளை பார்ப்பதை அறிந்து, அவளையே மணக்கிறான்.

திருமணத்தில் வந்த பணத்தை வைத்துக்கொண்டு தொழில் செய்ய மனைவி, மச்சானுடன் பம்பாய்க்கு  ரயில் ஏறி பல கனவுகளைச் சுமந்து செல்கின்றான்.

ஆனால் பம்பாயோ அவனை விரட்டுகிறது! அவனின் நியாமான கோவம் அங்கு நாளிதழ் நடத்திவரும் நானாஜிக்கு பிடிக்க அவனுக்கு உதவுகிறார்.

பிறகு தடைகளை உடைத்து , தனக்கான ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யத்தையே உருவாக்குகிறான் .

சில வருடங்களுக்கு பிறகு அவனின் நிறுவனங்கள் பல மோசடிகளில் ஈடுபட்டு அரசாங்கத்தை ஏமாற்றியதாய் குருநாத் மீது பல வழக்குகள் தொடரப்படுகிறது, அவருக்கு பக்க வாதமும் ஏற்படுகிறது .

குருபாய்

இறுதியில் “குரு கூட மோதணும்னா, நீயும் குரு பாயா மாறனும்… ஆனா குருபாய் ஒருத்தன் தான்“ என்பதை செய்து காட்டி ஜெயிக்கின்றான் .

குருநாத் தேசிகன் என்கிற மிக கடினமான கதாபாத்திரத்திரத்திற்கு தக்க நியாயம் செய்துள்ளார் அபிஷேக் பச்சன்!

ஆரம்ப காட்சிகளில் துறுதுறுப்பு , மனைவியிடம் பரிவு , தொழில் போட்டிகளை சமாளிக்கும் சாதுரியம் , குற்றச்சாட்டுகளை எதிர் கொள்வது , இடது கை வழக்கம் , சிரிப்பு , குறிப்பாக அந்த இறுதிக்காட்சி நடிப்பு அபாரம் ! 

குருநாத்தின் மனைவியாக ஐஸ்வர்யா ராய் மிக தேர்ந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குரு அவர் வீட்டிற்கு வருகையில் “யாரு தரகரோ? ” என்று ஊஞ்சல் ஆடிக்கொண்டே கேட்கும் காட்சி, இறுதியில் “பாதி பார்ட்னர், அவர்கூட எங்க வேணாலும் போவேன் ஜெயிலுக்கும் தான்“ என்று கூறி அசத்துவார்.

நானா படேகர் சுதந்திர மணி பத்திரிக்கை ஆசிரியராக அசத்தி இருப்பார், சிறிது நேரமே வந்தாலும் மாதவன், வித்தியா பாலன் முத்திரை பதிந்துவிடுகின்றனர்.

கதையின் மற்றொரு நாயகன் ரஹ்மான்! அவர் இசை இப்படத்திற்கு அணு அணுவாக உயிர் ஊட்டியுள்ளது… குறிப்பாக அந்த குருபாய் தீம்! அவரின் குரலில் வரும் ஆருயிரே பாடல்.

“அவன் டை கட்ட சொன்னப்பவே வேலைய விட முடிவு செஞ்சுட்டேன் “

“ பூட்டு உங்களால போட முடியும்னா சாவி உங்ககிட்ட தான இருக்கனும் “

“ இல்லனு சொன்னா என்னோட காதுல விழாது “

போன்ற அழகம் பெருமாள் அவர்களின் வசனங்கள் படத்திற்கு பெரும் வலு!

இத்தகைய ஒரு படத்தை மணிரத்தினம் அவர்களைத் தவிர வேறு யாரால்  இப்படி திறம்பட இயக்க இயலும்?

நேரம் , இடம் , நிறம் , காட்சி அமைப்பு , ஒலிக்கலவை , இசைகோர்ப்பு என அனைத்திலும் கும் என்று இருக்கும் படம் 

“ குரு 2007″ A Maniratnam Film

3

மராட்டிய முதல்வர், உத்தவ் தாக்கரே மாநில அமைச்சரவையில் இடம்பெற ஆளுனரின் பரிந்துரை!..

0

மும்பை: வியாழக்கிழமை, மாநிலங்கள் அவையில்  சட்டசபை நியமனத்திற்க்காக முதல் அமைச்சர் உத்தவ் தாக்கரேவை,  ஆளுனர் இடப்பங்கீட்டை பயண்படுத்துமாறு பரிந்துரைக்கப்பட்டது.

அன்று தாக்கரே இல்லாத நிலையில் துணை முதல்வர் அஜித் பவார் தலைமையில் கூட்டம் நடைபெற்றது.

இந்த இடப்பங்கீட்டில் இரண்டு இடங்கள் ராகுல் நர்வேக்கர் மற்றும் ராம் வாட்குட் ஆகிய  இரண்டு பிஜேபி வேட்பாளர்களின் இராஜினாமாவால் ஏற்ப்பட்டவை ஆகும்.

தாக்கரே பதவி ஏற்ற ஆறுமாதங்களுக்குள்ளாகவே சட்டசபை உறுப்பினர் ஆவதில் ஆளுனர்  பகத் சிங்க் கோச்யாரி முக்கிய பங்கு வகிப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு  தேசியவாத காங்கிரஸ் கட்சியினால் சிவாஜிராவ் கர்ஜே மற்றும் அதிதி நலவாடே, ஆகியோர் வேட்பாளர்களாக பரிந்துரைக்கப்பட்டனர்.

ஆனால் அவர்கள் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யவில்லை. வேட்பு மனு தாக்கல் செய்ய மூன்றே மாதங்கள் உள்ள நிலையில் ஆளுனர் இடப்பங்கீட்டை கேட்பதை ராஜ் பவன்  விரும்பவில்லை.

“ஆளுனர் வேட்ப்பாளரின் ஆறு ஆணடு கால ஆட்சி வரும் ஜூன் 30துடன் நிறைவடைகிறது. இன்னிலையில், தாக்கரேவை சட்டசபை உறுப்பினர் ஆக்குவதை ஆளுனர் தான் முடிவெடுக்க வேண்டும்,” என அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால், ஒருவருடத்திற்க்கும் குறைவான காலமே உள்ளதால் ஆளுனரோ அல்லது குடியரசு தலைவரோ சட்டசபை உறுப்பினராகவோ அல்லது ராஜ்யசபா உறுப்பினராகவோ யாரையும் நியமனம் செய்ய வாய்ப்புகள் இல்லை.

நவம்பர் 27ல் தாக்கரே முதல் அமைச்சராக பதவி ஏற்றுக்கொண்ட நிலையில், எந்த ஒரு அவையிலாவது அவர் மே 28 க்கு முன்பாக உறுப்பினர் ஆகியாக வேண்டும்.

ஒன்பது சீட்டுகள் ஏப்ரல் 24லில் காலியாவதைத் தொடர்ந்து தாக்கரே மேல் அவையில் இடம் பெற தேர்ந்தெடுக்க படுவார் என எதிர்பாக்கபட்டது.

இந்த நிலையில் கொரொனா பரவல் காரணமாக தேர்தல் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

3