Vaathi Coming Song; அதுக்குள்ள 1 மில்லியன் லைக்ஸ் பெற்ற வாத்தி கம்மிங்! விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படத்தின் வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது.
வாத்தி கம்மிங் பாடலுக்கு ஒரு மில்லியன் லைக்ஸ் கிடைத்துள்ளது.
தளபதி விஜய் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மாஸ்டர். கடந்த 9 ஆம் தேதி திரைக்கு வரயிருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு திரையரங்குகள் மூடப்பட்டதோடு அல்லாமல், படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.
எனினும், வரும் ஜூன் 22 ஆம் தேதி விஜய் தனது 46 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு மாஸ்டர் படம் திரைக்கு வரும் என்ற தகவல் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த நிலையில், மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள வாத்தி கம்மிங் பாடல் யூடியூப்பில் மட்டும் 1 மில்லியன் லைக்ஸ் பெற்றுள்ளது. இந்தப் பாடலுக்கு பலரும் டான்ஸ் வாத்தி ஸ்டெப் சேலஞ்ச் என்ற ஹேஷ்டேக்கில் தங்களது டான்ஸ் ஸ்டெப்புகளை வீடியோவாக பதிவிட்டு வந்தனர்.
இன்னமும் டான்ஸ் ஸ்டெப் வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.
படத்தில் இடம்பெற்றுள்ள 12 பாடல்களில் ஏற்கனவே 8 பாடல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Tamanna video leak: தமன்னாவின் அந்தரங்க வீடியோ என்று ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை தமன்னா. தமிழ், ஹிந்தி, கன்னடம், தெலுங்கு, மராத்தி ஆகிய மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.
தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால், தமன்னா வீட்டில் உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது என்று எப்போதும் பிஸியாக இருந்து கொண்டிருக்கிறார்.
இந்த நிலையில், அவரது அந்தரங்க வீடியோ என்று ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பணத்திற்காக வெளிநாட்டு ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்று மீம்ஸ் கிரியேட்டர்ஸ் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.
ஆனால், உண்மையில் அந்த வீடியோவில் இருப்பது தமன்னா போன்று இருக்கும் பான்ஸ்டார் நடிகை. அவர் தான் ஆபாச படங்களில் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.
Tamanna Video Leaked Tamannaah
அவர், பார்ப்பதற்கு தமன்னா போன்று இருப்பதால், அந்த ஆபாச வீடியோவில் நடித்தது தமன்னா தான் என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். அதோடு, மீம்ஸ் கிரியேட்டர்ஸும் அந்த வீடியோவை வைத்து மீம்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.
இதற்கு முன்னதாக பாலிவுட்டை கலக்கி வரும் சன்னி லியோன் வெளிநாட்டு ஆபாச படங்களில் நடித்திருந்தார். ஆனால், அதன் பிறகு ஆபாச படங்களில் நடிப்பதை விட்டு பாலிவுட் படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
பாலிவுட் படங்களைத் தொடர்ந்து சன்னி லியோன் தமிழில் உருவாகி வரும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மீம் கிரியேட்டர்ஸ் ஏன் இப்படி செய்கின்றனர்?
இன்ஸ்டாகிராம் பக்கத்தை பிரைவேட் செய்து விட்டால் அதனை பாலோ செய்தால் மட்டுமே பார்க்க முடியும்.
இதனால் அதிகமானோரை பாலோ செய்ய வைப்பதற்காக யாரோ ஒருவர் நடிகை போன்று முக அமைப்பை கொண்டு இருந்தால், உடனே அந்த வீடியோவில் இருப்பது அந்த நடிகை தான் என வைரல் செய்யத் துவங்கிவிடுவார்கள்.
எனவே பலரும் அந்த வீடியோவைக் காணும் ஆவலுடன் அந்த பேஜை லைக் செய்யத்துவங்கி விடுவார்கள்.
இதனால் பேஜ் பலோயர்கள் கூடிவிடும். சாய்பல்லவி, லோஸ்லியா, தமன்னா போன்ற பல நடிகைகள் suchi leak, tamanna video leaked போன்று வீடியோ லீக் சர்ச்சையில் மாட்டியுள்ளனர்.
அவர் அடுத்து நடிக்கப் போகும் திரைப்படத்தின் பெயர் மட்டுமல்ல அவரே தமிழ் சினிமாவின் துருவநட்சத்திரம் தான்.
படாத கஷ்டம் பட்டேன் என்று பலர் பேச்சுக்கு சொல்வார்கள் , ஆனால் இவரோ உண்மையிலே அப்படி சிரமப்பட்டார்.
ஆம் பின்னணி குரல் கலைஞராகவே அவர் சினிமா பயணத்தை துவங்கினார். இவரின் குரலே காதலன் படத்தின் நாயகனுக்கு ஒலிக்கிறது.
துணைநடிகர் , விளம்பர மாடல் என்று தனது திறமைகளை வெளிப்படுத்தும் முயற்சியில் தத்தளித்தவர் பிறகு பல சிரமங்களுக்கு இடையில் குறைந்த பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட படமான “என் காதல் கண்மணியை” வில் 1990 ஆம் ஆண்டு நடித்தார். பிறகு ஸ்ரீதர் அவர்களின் “தந்துவிட்டேன் என்னை” , அதை தொடர்ந்து பி.சி.ஸ்ரீராம் இயக்கிய “மீரா” என்று படங்கள் நடித்தாலும் அவர் பிரபலமடையவில்லை.
தமிழில் சரியாக வாய்ப்புக்கள் இல்லாததால் மலையாளம் , தெலுங்கு என்று கிடைத்த வேடத்தில் நடித்து . சிறிய இடைவேளைக்கு பின் புதிய மன்னர்கள் , உல்லாசம் என்று நாயகர்களில் ஒருவராகவே நடித்தார்.
1999 ஆம் ஆண்டு ஹவுஸ் புல் வெளியானது . அதுவரை விக்ரமை துரத்திய துன்பங்கள் “ சேது “ படம் மூலம் சற்று நிவர்த்தி ஆயிற்று. அப்படமும் எளிதில் வெளிவரவில்லை வருடக்கணக்கில் தாமதமாகியே வந்தது. படம் வெளியான முதல் வாரம் தோல்விமுகத்தை காமித்தது , அனால் அவரின் நடிப்பு மக்களை , குறிப்பாக கல்லூரி மாணவர்களை சுண்டி இழுத்தது.
அது முதல் விக்ரம் “சியான்” விக்ரமாக மாறினார்.
2001 இல் வெளிவந்த விண்ணுக்கும் மண்ணுக்குமிலும் சராசரி கதாபாத்திரம் அமைந்தாலும் . அதே ஆண்டில் வெளியான “தில்” அவருக்கு மிக சிறப்பாக அமைந்தது . காதல் , சண்டை காட்சிகளில் நன்றாகவே ஜொலித்தார். படம் பட்டி தொட்டி என்று நன்றாகவே ஓடியது. அவர் பார்வை அற்றவராக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்ற “காசி”யும் அதே 2001 ஆம் ஆண்டு வெளிவந்ததே!
இப்படி நடிப்பு , கமர்ஷியல் இரண்டிலும் கலக்கி அதே முழு அர்ப்பணிப்புடன் மேலும் மும்முரமாக பணியாற்ற தொடங்கினார். ஜெமினி , தூள் , கிங் , என்று சிறுவர்கள் , கல்லூரிமாணவர்கள் , பெரியவர்கள் என அனைவரையும் தன் பக்கம் இழுத்தார். இவரின் மார்க்கெட் எகிறியதால் கிடப்பில் போடப்பட்ட சாமுராய் , காதல் சடுகுடு போன்ற படங்கள் வெளியாகின.
அவரின் நடிப்பும் விஸ்வரூபம் எடுக்க தொடங்கியது. சாமி படத்தில் நெல்லைக்காவலராக நடித்து அசத்தினார். அதில் அவரின் வசன உச்சரிப்பு , உடல் மொழி வெகுவாக ரசிக்கப்பட்டது . தலைவர் ரஜினியே அப்படத்தின் 125 வது நாள் விழாவில் மனம் விட்டு பாராட்டினார் இந்த ஆறுச்சாமியை!
2003 ஆம் ஆண்டு மீண்டும் பாலாவுடன் இனைந்து “பிதாமகன்” தந்து நடிப்பின் புதிய எல்லைகளை வரையறுத்தார்.தொடர்ந்து அந்நியனில் காண்போர் சிலிர்க்கும் வண்ணம் “பிளவாளுமை” குறைபாட்டுப் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட பிராமணராக நடித்தார் அதில் “ரெமோ” கதாபாத்திரம் பெண்கள் மத்தியில் மிகவும் வரவேற்பைப் பெற்றது. அப்படத்தில் கதாபாத்திரத்துடன் அவரின் உடலும் சுருங்கி விரிந்தது.
பீமா படத்திற்காக பகிரத முயற்சி , ராவணனில் பட்ட சிரமங்கள் தக்க பலன்களை தரவில்லை . இதனால் சற்று தடுமாறினாலும் 2011 னில் வெளிவந்த “ தெய்வத்திருமகளில்” தனது இருப்பை பிரமாதமான நடிப்பின் மூலம் மீண்டும் அழுத்தமாக பதிவு செய்தார்.
எனினும் தாண்டவம் , ராஜபாட்டை , டேவிட் என்று தொடர்ந்து சறுக்கினாலும் மீண்டும் ஷங்கருடன் இனைந்து “ஐ” படம் தந்தார். அதிலும் நடிப்பின் பல பரிமாணங்களை காட்டி மிரள வைத்தார். இருமுகன் படத்தில் இருவேறு கதாபாத்திரத்தில் நடித்து பாராட்டுக்கள் பெற்றார்.
சாமி 2 , ஸ்கெட்ச் , கடாரம்கொண்டான் போன்ற படங்களில் முழு பங்களிப்பு நல்கியும் பயனற்று போனது. ஆனால் இவையாவும் நம் சியானுக்கு தற்காலிகமே.
நிச்சயம் மீண்டும் அதே மிடுக்குடன் வருவார். நம் அனைவரையும் கவர்வார்.
Raghava Lawrence; சினிமா விநியோகஸ்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் நிதியுதவி! கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் சினிமா விநியோகஸ்தர்களுக்கு ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
சினிமா விநியோகஸ்தர்களுக்கு ராகவா லாரன்ஸ் ரூ.15 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சினிமா தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி நிதி திரட்டி வருகிறார். சினிமா பிரபலங்கள் பலரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குநரும், நடிகருமான ராகவா லாரன்ஸ் ரூ.3 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.
அதில், பிரதமர் நிவாரண் நிதிக்கு ரூ.50 லட்சம், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லடசம், நடனக் கலைஞர் சங்கத்திற்கு ரூ.50 லட்சம், பெப்சி தொழிலாளர்களுக்கு ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25 லட்சம், ராயபுரம் மக்களுக்கு உதவும் வகையில் ரூ.75 லட்சம் என்று வழங்கியுள்ளார்.
சமீபத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு உதவும் வகையில் ரூ.25 லட்சம் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில், சினிமா விநியோகஸ்தர்களுக்கு உதவும் வகையில் ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார். சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்ட சினிமா விநியோகஸ்தர்கள் சங்கத்திற்கு ரூ.15 லட்சம் வழங்கியுள்ளார்.
“மகன் தந்தைக்கு ஆற்றும்உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனும் சொல்” இந்த குறளுக்கு எடுத்துக் காட்டாய் தந்தையை தோளில் ஒரு கிலோமீட்டர் சுமந்து சென்ற மகன்.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் காரணமாக உலகமே ஊரடங்கில் இருந்து வருகிறது.
இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. இந்தியாவில் நாளுக்கு நாள் கரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகிறது.
இந்திய சுகாதாரத்துறை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்து வருகிறது. பிரதமர் மோடி அறிவித்த படி 21 நாள் ஊரடங்கு முடியும் தருவாயில் 40 நாளாக மாற்றினார்.
மே 3ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவில் தான் நாடு இருக்கும் என்றும் அறிவித்தார்.
மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வெளியில் வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.
இந்தியாவில் காவல்துறையினரும் மருத்துவரும் அயராது கொரோனாவை ஒழிக்க பாடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
கேரளாவிலுள்ள கொல்லம் மாவட்டம் குளத்துப்புழா கிராமத்தைச் சேர்ந்த ஒரு முதியவர் காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
இவர் நான்கு நாட்களுக்கு முன் புனலூர் தாலுகாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். அவருக்கு காய்ச்சல் சரியானதும் டாக்டர்கள் அவரை வீட்டுக்கு செல்ல அனுமதித்தனர்.
அவர் வீட்டுக்கு செல்ல அவருடைய மகன் ஆட்டோ ரிக்ஷாவில் வந்து இருக்கிறார். அப்போது காவலர்கள் அவரது வாகனத்தை மறைத்து அனுமதிக்க மறுத்துவிட்டனர்.
தன் தந்தை மருத்துவமனையில் இருப்பதையும், அவரை அழைத்துச் செல்ல சென்று கொண்டிருக்கிறேன் என்றும் சொல்லியும் காவலர்கள் அவரின் வாகனத்தை அனுமதிக்கவில்லை.
உடனே ஆட்டோ ரிக்ஷாவை ஒரு ஓரமாக நிறுத்திவிட்டு ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்று தன் தந்தையை தோளில் தூக்கியபடியே வந்திருக்கிறார்.
இவர் நடந்து செல்லும் போது ஒருவர் எடுத்த வீடியோ கேரளாவில் உள்ள செய்தி தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பானது.
அதைக்கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள் காவலரின் இந்த செயலை கண்டித்து சமூக வலைத்தளத்தில் காவலர்களுக்கு எதிராக பதிவிட்டு வருகின்றனர் .
இதனால் கேரளா காவல் துறைக்கு மிகப்பெரிய நெருக்கடியை உருவாக்கியுள்ளது.
இது குறித்து காவல்துறையில் உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்காமல் பல மக்கள் சுற்றித்திரிந்து வருகிறார்கள்.
அதனால் சாலைகளில் வாகன நெருக்கடியும் ஏற்படுகிறதுநெருக்கடியும் ஏற்படுகிறது.
அந்த ஆட்டோ ரிக்ஷாவை நிறுத்திய காவலர் அவரிடம் ‘எதற்காக சாலைகள் சுற்றுகிறார்கள்’ என்று கேட்டுள்ளார்.
அதற்கு அந்த முதியவரின் மகன் தன் தந்தையை மருத்துவமனையில் இருந்து அழைத்து செல்வதற்கான எந்த ஒரு மருத்துவர் சான்றுகளின் அவர் காவலர்களிடம் காட்டவில்லை.
அவர் அப்படி ஆவணங்களை காட்டி இருந்தால் இது போன்ற சம்பவம் நிகழ்ந்து இருக்காது.
இருப்பினும் இதுகுறித்து துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றும் கூறியிருந்தார்.
தற்போது மனித உரிமை ஆணையம் கேரள அரசுக்கும் மற்றும் கேரள போலீசுக்கும் இது குறித்து நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இந்த சம்பவம் கேரளாவில் மிகப்பெரிய அதிர்ச்சி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது
தமிழகத்தில் மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிப்பு எண்ணிக்கை 1267 ஆக உயர்வு.
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களில் கொரோனா தொற்று யாருக்கும் இருக்காது.
இன்னும் 15 நாட்களில் கொரோனா பாசிட்டிவ் அனைத்தும் நெகட்டிவ் ஆகிவிடும்.
இன்னும் 2 அல்லது 3 நாட்களில் கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும் .
தமிழக அரசின் முயற்சிகளால் கொரோனா தொற்று இல்லாத நிலை விரைவில் தமிழகத்தில் உருவாகும்.
கொரோனாவை தடுப்பதில் தமிழக அரசு சிறப்பாக செயல்படுவது எதிர்க்கட்சிகளுக்கு பிடிக்கவில்லை.
மத்திய அரசிடமிருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற திமுக எம்பிக்கள் என்ன நடவடிக்கை எடுத்தார்கள்?
அரசு எடுத்து வரும் சிறப்பான கொரோனா தடுப்பு பணிகளுக்கு, எதிர்க்கட்சிகள் முட்டுக்கட்டை போடுகின்றனர். தமிழகத்தில் மட்டும்தான் கொரோனா வைத்து எதிர்க்கட்சிகள் அரசியல் செய்கின்றனர்.
புயல், சுனாமி வந்தாலும் கூட மு.க.ஸ்டாலின் குறை சொல்லிக் கொண்டுதான் இருப்பார்.
காய்கறி விலை உயர்ந்து விட்டதாக எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது. காய்கறி மலிவு விலைகளிலேயே விற்கப்படுகிறது.
பத்திரிக்கையாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் சிகிச்சைக்கான செலவை அரசே ஏற்கும்.
புதுடெல்லி: lockdown exemption: கோவிட்-19 தொற்றை தவிர்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில் சில துறைகளுக்கு மத்திய அரசு ஏப்ரல் 20 முதல் ஊரடங்கிலிருந்து விலக்கு (lockdown exemption) அளித்துள்ளது.
மின் சாதன பணியாளர்கள், குழாய் பழுது பார்ப்பவர்கள் போன்ற அத்தியாவசிய துறைகள் மற்றும் சேவைகளைச் சார்ந்தவர்கள் முகக்கவசம் அணிதல் போன்ற தகுந்த பாதுகாப்போடு இயங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் அறிவிப்பு வெளியிடப்பட்டாலும், ஏகே பல்லாஸ் இதை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்தை சார்ந்த அதிகாரிகளால் தகுந்த பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளோடு
கொரோனாவால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களை ஏப்ரல் 20-க்கு பிறகு அனுமதிக்கலாம் எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் சில அரசியல் தலைவர்கள் இவ்வாறு விதிவிலக்கு அளிப்பதனால் கோவிட்-19 தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அச்சம் தெரிவித்து உள்ளனர்.
Nizhalgal Ravi Birthday; நிழல்கள் படத்தின் மூலம் சினிமாவில் நிழல்கள் ரவி என்று அடையாளம் பெற்ற ரவி இன்று தனது 64 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
நிழல்கள் ரவி பிறந்தநாள் இன்று.
கடந்த 1980 ஆம் ஆண்டு வந்த நிழல்கள் என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் நிழல்கள் ரவி.
இந்தப் படத்தின் கோபி என்ற ரோலில் நடித்தவர் ரவி. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இந்தப் படம் அவருக்கு நிழல்கள் ரவி என்று அடையாளக் கொடுத்தது.
இப்படத்தைத் தொடர்ந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் கிட்டத்தட்ட 500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.
வேதம் புதிது, நாயகன், சின்ன தம்பி பெரிய தம்பி, அண்ணாமலை, ஆசை என்று ஏராளமான படங்களில் நடித்து தனது நடிப்புத் திறமையை வெளிக்காட்டியுள்ளார்.
படங்களில் நடிப்பதோடு அல்லாமல், சின்னத்திரையிலும் வலம் வந்துள்ளார். ரயில் சினேகம், அலைகள், காசளவு நெசம், தென்றல் ஆகிய தொடர்களில் நடித்து முடித்துள்ளார்.
ஹீரோ, குணச்சித்திர நடிகர், வில்லன் நடிகர் என்று எந்த ரோலாக இருந்தாலும் சரி, கச்சிதமாக நடித்து முடித்து ரசிகர்களிடையே வரவேற்பு பெற்றார்.
கடந்த 1980 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கிட்டத்தட்ட 40 ஆண்டுகள் சினிமாவில் கால் பதித்து நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இன்று தனது 64 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் என்று பலரும் தங்களது பிறந்தநாளை தெரிவித்து வருகின்றனர்.
நிழல்கள் ரவிக்கு விஷ்ணுப்ரியா என்ற மனைவியும், ராகுல் என்ற மகனும், 5 சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் இருக்கின்றனர்.
லண்டன்: யூகே உள்துறை அலுவலகம் விசா நடைமுறையில் வெளிநாட்டு மருத்துவர்களுக்கான விதிகளை தளர்த்த முடிவுசெய்துள்ளது,
இந்தியா உட்பட பல வெளிநாடுகளின் மருத்துவர்கள் இதனால் தங்களது நாட்டிற்கு உதவ முன்வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு வருபவர்கள் தங்களது நாட்டின் நேஷ்னல் ஹெல்த் சர்வீஸ்(NHS) உடன் இணைந்து கொரோனா பரவலைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் உதவுவார்கள்.
பிரித்தானிய மருத்துவ கூட்டமைப்பு (BMA), யுகேயில் உள்ள மருத்துவர்கனின் கூட்டமைப்பு இதுகுறித்து அவசர நடவடிக்கை எடுக்குமாறு யுகேயின் உள்துறை செயலாலர் ப்ரிட்டி பட்டேலுக்கு கடிதம் எழுதியுள்ளது.
இந்தியாவிலிருந்து மருத்துவ மேற்படிப்பு தேர்வுகளுக்காக பார்வையாளர் விசாவில் சென்று கொரோனா பரவலால் அங்கேயே சிக்கி கொண்ட மருத்துவர்கள், தாங்கள் இந்தியா திரும்ப முடியாததால் தங்களையும் அங்கு பணியாற்ற அனுமதிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
“தான் டாக்டராக இருந்தும் தன்னால் இங்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முடியாததை நினைக்கும் பொழுது மிகுந்த மனவேதனை அடைவதாக” டெல்லியிலிருந்து அங்கு சென்ற மருத்துவர் ஒருவர் தெரிவித்தார்.
மேலும் அவர் “தான் அவசர கால சிகிச்சைகளில் பயிற்றுவிக்கப்பட்டவர்” என கூறினார்.
டுவிட்டரில் மோதிக் கொண்ட சூர்யா, தனுஷ் ரசிகர்கள்: டிரெண்டாகும் #DhanushStardomRules ஹேஷ்டேக்! டுவிட்டரில் தனுஷ், சூர்யா ரசிகர்கள் தங்களுக்குள்ளாக மோதிக் கொண்டுள்ளனர்.
டுவிட்டரில் #DhanushStardomRules ஹேஷ்டேக் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.
சினிமாவில் முன்னணி நடிகர்களின் ரசிகர்கள் தங்களது ஹீரோ தான் உயர்ந்தவர், அவரது படங்கள் தான் ஹிட் கொடுக்கும் என்றெல்லாம் பெருமையாக பேசி டுவிட்டரில் கருத்து பதிவிடுவது வழக்கம்.
இதற்கு போட்டியாக அந்த நடிகரை பிடிக்காத ரசிகர்கள் அதற்கு எதிராக டுவிட்டரில் கருத்து தெரிவிப்பது உண்டு. அப்படியே அந்த நடிகர்களின் ரசிகர்களுக்கு இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதமல் உண்டாகும்.
அப்படிதான் சூர்யா, தனுஷ் ரசிகர்களுக்கு இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. சூர்யாவைவிட தனுஷிற்குதான் ரசிகர்கள் அதிகம் என்றும், தனுஷ் பட இசை வெளியீட்டு விழாவிற்கு தான் அதிக ரசிகர்கள் வருவார்கள் என்றும் பதிவிட்டு வருகின்றனர்.
தனுஷிற்கு ஆதரவாக விஜய் ரசிகர்களும் களமிறங்கியுள்ளனர். ஆம், தனுஷ் – விஜய் இருவரும் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர்.
ஏற்கனவே விஜய் – சூர்யா ரசிகர்களுக்கு வாக்குவாதம் நடப்பது உண்டு. அதை, தற்போது விஜய் ரசிகர்கள் தனுஷிற்காக பயன்படுத்தி கொண்டுள்ளனர்.
தனுஷ் என்னதான் மாஸ் நடிகராக இருந்தாலும் தோல்விப்படங்களை கொடுத்துள்ளார் என்று சூர்யா ரசிகர்கள் கூறியுள்ளனர்.
இதற்கு தனுஷ் ரசிகர்கள் உண்மைதான். படம் என்றாலும், ஹீரோ என்றாலும் வெற்றி தோல்வி பொதுவானதுதான். ஆனால், தனுஷின் தோல்விப்படங்கள் கூட திரையரங்குகளில் 2 வாரங்களுக்கு மேலாக ஓடியிருக்கின்றனர்.
இதுவே சூர்யா படம் வந்த முதல் நாளே திரையரங்கை விட்டு வெளியேறிய காலமெல்லாம் இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக ரசிகர்களுக்கு இடையில் வாக்குவாதம் நடப்பது என்பது வழக்கம் தான். தற்போது கொரோனா ஊரடங்கு என்பதால் வாக்குவாதம் கொஞ்சம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போது லாக்டவுன் காலம் என்பதால் இன்னும் சூர்யா, தனுஷ், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படங்கள் திரைக்கு வரவில்லை.
சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஜகமே தந்திரம், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் படங்கள் ரிலீஸுக்கு தயாராகி உள்ளன.
3 படங்களும் வெளியாகும் போது இதைவிட ரசிகர்களுக்கிடையே வாக்குவாதம், சண்டை அதிகளவில் இருக்கும்.