Home Blog Page 141

இளம் விவசாயியை வீட்டில் சென்று பார்த்த டிஎஸ்‌பி நடந்து என்ன?

0

இளம் விவசாயியை வீட்டில் சென்று பார்த்த எஸ்‌பி நடந்து என்ன? 50கிலோ அரிசி, 25கிலோ காய்கறிகள் மற்றும் அப்துல் கலாம் புத்தகம் பரிசாக வழங்கப்பட்டது.

திருவள்ளூர் அகரம்கண்டிகை கிராமத்தை சேர்ந்த கார்த்திக் என்பவர், தமது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை சென்னை கோயம்பேடு சந்தைக்கு பைக்கில் எடுத்து சென்றுள்ளார்.

அவரை வழிமறைத்த போலீசார்கள் 2 மணி நேரம் காக்க வைத்துள்ளனர். இதனால் ஆத்திரம் அடைந்த கார்த்திக் டி‌எஸ்‌பி வாகனம் முன்பு காய்கறிகளை கொட்டி போராட்டம் செய்தார்.

அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற காவலர்கள், அவரது இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இந்த செய்தி ஊடகங்களில் பரவியதால் உடனே கார்த்திக்கை நேரில் சென்று பார்த்தார் டி‌எஸ்‌பி.

விவசாயி கார்த்திக்குக்கு 50 கிலோ அரிசி, 25 கிலோ காய்கறிகள் ஆகியவற்றை வழங்கினார். அப்துல் கலாம் புத்தகம் ஒன்றையும் எஸ்பி அரவிந்தன் வழங்கினார். அவரின் பைக்கும் திருப்பி அளிக்கப்பட்டது.

3

சீனா அணு அயுத சோதனை US Department !

0

வாஷிங்டன்: சீனா இரகசியமாக அனுஆயுத பரிசோதனைகளை நிலத்துகடியில் (Under Ground Nuclear test) செய்திருக்கிறது என யூஎஸ் மாநில துறை புதன் கிழமை தெரிவித்தது.

சீனா அணுஅயுத சோதனை

இது சீனா மற்றும் யுஎஸ் இடையே பதற்றத்தை அதிகரிக்கும்.

இந்த தகவலை வால் ஸ்டிரீட் ஜர்னல் முதலில் தெரிவித்து இருந்தது, இது ஏற்கனவே சீன நகரமாகிய வுகானில் இருந்து கவனக்குறைவால் வெளிப்பட்ட கோவிட்-19 பரவல் ஏற்படுத்திய சீனஅமெரிக்க உரசலை மேலும் பெரிதாக்கும் என தெரிகிறது.

இந்த சோதனை சீனாவில் லோப் நர்என்னும் இடத்தில் அதிக ஆழமான குழி தோண்டுதல்கள் நடந்திருப்பதாகவும்,

வெளிப்படை அற்ற செயல்பாடுகள் இதனை உறுதி செய்யும் வகையில் உள்ளது எனவும் அமெரிக்க மாநில துறை(US state department) தெரிவித்தது.

1996ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட முழுமையான அணுகுண்டு சோதனைத்தடை உடன்பாடு(comprehensive Nuclear-Test-Ban Treaty, CTBT) இல் கைஎழுத்திட்டுள்ள நிலையில்

சீனா இந்த பரிசோதனையை நிலத்துக்கடியில் இரகசியமாக நிகழ்த்தியுள்ளது என அமெரிக்கா தெரிவித்து உள்ளது.

அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டை மறுத்து சீனாவின் வெளியுறவுத்துறை செயற்பாட்டாளர் சாவோ லிஜியன்(Zhao Lijian) அறிக்கை வெளியுட்டுள்ளார்

அதில் சீனா எப்போதும் சர்வதேச சட்டங்களை பின்பற்றி பொருப்பான நடத்தையையே பின்பற்றி வருகிறது“, எனவும்

யூஎஸ்ஸின் இந்த குற்றச்சாட்டு முற்றிலும் அடிப்படை ஆதாரம் அற்றது மற்றும் இந்த குற்றச்சாட்டிற்க்கு மறுப்பு தெரிவித்தல் தேவை அற்றது ” எனவும் தெரிவித்து உள்ளார்.

கொரோனா வைரஸ்ஸின் பரவல் யுஎஸ்ஸில் அதிகமான மக்களை பாதித்துள்ள நிலையில் அமெரிக்க இத்தகைய குற்றச்சாட்டை சீனாவின் மீது சுமத்தியுள்ளது.

3

தூங்கி கொண்டிருந்த ராஷ்மிகாவை தட்டி எழுப்பிய நாய்!

0
Rashmika Mandannaa

Rashmika Mandanna; தூங்கி கொண்டிருந்த ராஷ்மிகாவை தட்டி எழுப்பிய செல்லக்குட்டி நாய்! தூங்கிக்கொண்டிருந்த ராஷ்மிகாவை அவர் வளர்த்து வரும் நாய் தட்டி எழுப்பியுள்ளது.

தூங்கிக் கொண்டிருந்த ராஷ்மிகா மந்தனாவை அவரது வளர்ப்பு நாய் தட்டி எழுப்பியுள்ளது.

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஒட்டு மொத்த மக்களுமே வீட்டிற்குள் முடங்கியிருக்கும் நிலை வந்துவிட்டது.

சினிமா பிரபலங்கள் பலரும் தங்களது அன்றாட வேலைகளை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.

உடற்பயிற்சி செய்வது, சமையல், வீட்டு வேலைகள், யோகா, தோட்ட வேலை, ரசிகர்களுடன் உரையாடுவது என்று பிஸியாக இருக்கின்றனர். ஒரு சிலர் தங்களது செல்ல பிராணிகளுடன் விளையாடுவதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.

அந்த வகையில், நடிகை ராஷ்மிகா மந்தனா தூங்கிக் கொண்டிருந்த போது அவர் வளர்த்து வரும் செல்லநாய் ஒன்று அவரை தூக்கத்தில் இருந்து எழுப்பிவிடுகிறது.

அதோடு, அவருக்கு அருகில் அமர்ந்துகொண்டு முத்தம் கொடுப்பது போன்று செய்கிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு, ராஷ்மிகாவும் செல்லநாயும் என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

3

சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்; மக்கள் பதற்றம்

0

சீர்காழி கடற்கரையில் ஒதுங்கிய ராக்கெட் லாஞ்சர்; மக்கள் பதற்றம், கடலோரே காவல்படை தீவிர விசாரணையை தொடங்கியுள்ளது.

நாகை மாவட்டம் திருமுல்லைவாசல் கடற்கரையில் ராக்கெட் லாஞ்சரை போல் கரை ஒதுங்கி இருக்கும் மர்மப் பொருள் என்னவென்று கடலோரே காவல் ஆய்வு செய்கிறது.

ஒரு அடி உயரமும், 11 இஞ்ச் சுற்றளவும் கொண்ட சிலிண்டரின் மீது காற்றாடி வைக்கப்பட்டது போன்று பார்ப்பதற்கு இருக்கிறது. 

இதை கண்ட மீனவர்கள் உடனே அங்குள்ள கடலோர காவல்படைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இன்ஸ்பெக்டர் சதீஷ், எஸ்ஐ ராஜா ஆகியோர் சென்று கரை ஒதுங்கிய பொருளை ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின் அடிப்படையில் ராக்கெட் லாஞ்சர் போர்க்கப்பல் அல்லது நீர்மூழ்கி கப்பலில் இருந்து கழன்று விழுந்து கடல் அலையில் சிக்கி கரை ஒதுங்கி இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. 

மேலும் இது கரை ஒதுங்கிய இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வெடிகுண்டு செயலிழப்பு நிபுணர்கள் வரவழைத்து ஆய்வு செய்து வருகின்றனர்.

3

3330-க்கும் அதிகமான வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா

0
இந்தியர்களுக்கு கொரோனா

3,330க்கும் அதிகமான வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாகவும், 25-க்கும் அதிகமானோர் உயிர் இழந்து உள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு கொரோனா

குவைத் மற்றும் சிங்கப்பூரில் அதிக எண்ணிக்கையிலான பாதிப்பும் மேலும் 53 நாடுகளில் உள்ள இந்தியர்களுக்கும் கொரொனா பாதிப்பு உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.

குவைத்தில் 785 பேரும் அதை தொடர்ந்து சிங்கப்பூரில் 630 பேரும், கத்தாரில் 420 பேரும், இரானில் 308 பேரும், ஓமனில் 297 பேரும், சவுதியில் 186 பேரும் மற்றும் பக்ரைனில் 135 பேரும் இந்த நோயால் பாதிப்படைந்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து இத்தாலியில் 91 பேரும், மலேசியாவில் 37 பேரும் போர்ச்சுகளில் 36 பேரும் கானாவில் 29 பேரும் இந்த நோய் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் 24 பேர் யூஎஸ்ஸிலும், 15 பேர் சுசர்லாந்து மற்றும் 13 பேர் பிரான்சிலும் இந்த நோயால் பாதிப்படைந்துள்ளது தெரியவந்துள்ளது.

மற்ற இந்தியர்களும் மே 3 வரை இந்தியாவில் ஊரடங்கு கடைபிடிக்கப்படுவதால் அவர்கள் இருக்கும் நாடுகளிலேயே பாதுகாப்புடன் இருக்கும் படி இந்தியா அறிவுறுத்தி உள்ளது.

3

This Day in History April 17; வரலாற்றில் இன்று ஏப்ரல் 17

0

This Day in History April 16; வரலாற்றில் இன்று ஏப்ரல் 16 பெஞ்சமின் பிராங்க்லின் இறந்த தினம், Today Birthdays in History, Today Deaths in History.

2014ஆம் ஆண்டு நாசாவின் கெப்லர் விண்கலம் பிறிதொரு விண்மீனின் வாழ்தகமைப் பகுதியில் புவிக்கு ஒப்பான கோள் ஒன்று இருப்பதை உறுதிப்படுத்தியது.

1895ஆம் ஆண்டு முதலாம் சீன சப்பானிய போரை முடிவுக்கு கொண்டுவந்தது. இரு நாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.

தோற்கடிக்கப்பட்ட சிங் ஆட்சி கொரியா மீதான இறைமையக் கைவிட்டது. சீனக் குடியரசின் பேங்கியெனின் தெற்குப் பகுதியை சப்பானிடம் கொடுத்தது.

1912ஆம் ஆண்டு உருசியப் படையினர் சைபீரியாவின் வடகிழக்கில் பணிநிறுத்தம் செய்த தங்கச் சுரங்கத் தொழிலாளர்கள் மீது சுட்டதில் 150பேர் பழியாகினர்..

1941ஆம் ஆண்டு இரண்டாம் உலகப்போர் யுகொசுலாவியப் பேரரசு செருமனியிடம் சரணடைந்தது.

Today Birthdays in History

1756- இந்தியா விடுதலை போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிறந்த தினம் வரலாற்றில் இன்று.

1910- தமிழக தமிழறிஞர் அடிகளாசிரியர் பிறந்த தினம் இன்று.

1912- மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை பிறந்த தினம் இன்று.

1915- இலங்கையின் 6வது பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க பிறந்த தினம் இன்று.

1966- தமிழ் திரைப்பட நடிகர் விக்ரம் பிறந்த தினம்

1972- இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் பிறந்த தினம்

Today Deaths in History

1790- அமெரிக்க கண்டுபிடிப்பாளர் மற்றும் அரசியல்வாதி பெஞ்சமின் பிராங்க்லின் இறந்த தினம் இன்று.

1859- இந்தியா விடுதலை போராட்ட வீரர் தாந்தியா தோபே இறந்த தினம் இன்று.

1946- இந்தியா அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர் வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி இறந்த தினம் இன்று.

1975- இந்தியாவின் 2வது குடியரசு தலைவர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் இறந்த தினம் இன்று.

2004ஆம் ஆண்டு தென்னிந்திய நடிகை சௌந்தர்யா இறந்த தினம் இன்று.

3

Angamaly Diaries will let you experience the beauty of Angamaly

0

Angamaly Diaries will let you experience the beauty of Angamaly. Angamaly Diaries directed by Lijo Joseph Pellisary. This Extraordinary Screenplay written by Chemban Vinod Jose.

Vincent Pope (Antony Varghese) who acted lead role in this film started telling the entire story from the beginning.

This is story that revolves around angamaly city. the director wants reveal each and everything of this city follows including cultural events, foods, peoples everything.

Vincent Pope inspired from his senior who is wandering the city with dominance over peoples by maintaining a gang.

Like this way Vincent wants to enjoy his life. After he became adult his beloved senior assaulted by rival gangsters Appani Ravi (Sarath Kumar), U clamp Rajan (Tito Wilson).

Vincent and his friends started engaging some violence activities without a valid reason. On the other side some romantic sequences were shot by the director to release the tense.

If you watched this film previously you know one plate of rabbit meat will create biggest chaos for both gangs. This is where the biggest conflict starts.

Vincent end up killing one person this let suffer so many family. Vincent lost his girlfriend due to murder case & fall for another girl in the end.

Angamaly Diaries Movie Review

This murder creates another conflict which repel vincent and his gangs till end. This film contains every emotions love, betrayal, anger, vengeance and pity.

Angamaly Diaries consist each & everything from a boy in childhood to mens in their late adulthood.

In his teenage vincent used to watch bathing girls and his adulthood he couldn’t tolerate when his girlfriend wore sleeveless top.

It consists so many fights unlike typical masala movies. These are choreographed like what we do in our real life if any problems occur how we gather gang and make fight in area by area.

After certain age Vincent will understand his irrational character used to create unnecessary chaos and fights and anger management issues as well.

Appani Ravi and U clamp Rajan characterization seems absolutely brilliant. The way they creating chaos and end up in violence looks stunning.

Things I personally like how vincent convince his first lover for break up after he charged with murder case. He doesn’t want her and her family to suffer cause this case may take plenty of time.

This Film explained how our lives are influenced by the peoples whoever living nearby or with us. We end up doing the same stuff like they did irrespective of whether it’s good or bad.

The director and writers wants to explore the peoples, cultural events food etc.. everything revolves around in the angamaly city. Especially those pork farming & meat and it’s love for angamaly peoples.

There are so many things in this film I don’t want to reveal. So It will be great experience If you spent some time for this gem.

3

Muttiah muralitharan: மர்ம மனிதர் முத்தையா முரளிதரன் பிறந்தநாள்

0

நீண்ட காலத்திற்கு அசைக்க முடியாத சாதனை அதைப் படைத்த மர்ம மனிதன் எனும் இலங்கையின் முத்தையா முரளிதரன்(Muttiah Muralitharan) பிறந்த தினம் இன்று.

இலங்கையிலுள்ள கண்டியில் ஏப்ரல் 14ஆம் தேதி 1972 ஆம் ஆண்டு சின்னசாமி முத்தையா மற்றும் லட்சுமி முரளிதரன் அவர்களுக்கு பிறந்தவர்தான் முத்தையா முரளிதரன்.

இலங்கை தமிழரான முரளிதரன் ஆகஸ்ட் மாதம் 1992 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார்.

ஆகஸ்ட் மாதம் 1993 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமானார்.

டிசம்பர் மாதம் 2006-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிரான டி20 போட்டி அறிமுகமாகி நான்கு வருடம் விளையாடினார்.

Muttiah muralitharan ஐபிஎல் போட்டியில் சென்னை, பெங்களூரு, கொச்சி அணிக்காக விளையாடி உள்ளார்.

இதுவரை 133 டெஸ்ட் போட்டியில் விளையாடி 44039 பந்துகள் வீசி 800 விக்கெட்டை வீழ்த்தி உள்ளார்.

380 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 18811 பந்துகள் வீசி 534 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

ஒரு இன்னிங்சில் டெஸ்ட் போட்டிகளில் 67 முறை 5 விக்கெட்டுக்கு மேல் ஒருநாள் போட்டியில் 10 முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டிக்கு 22 முறை 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.

டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிகபட்சமாக 9 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் அதிகபட்சமாக 7 விக்கெட் எடுத்துள்ளார்.

ஐபிஎல் சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டிஎன்பிஎல் திருவள்ளுவர் வீரன் அணிகளுக்கு பயிற்சியாளராகும் செயல்பட்டுள்ளார்.

2014, 2015 ஆம் ஆண்டு பாகிஸ்தான் மற்றும் இலங்கை அணிகளுக்கு எதிராக ஆஸ்திரேலியாவில் சுழற்பந்து வீச்சாளர்களின் ஆலோசகராகவும் இருந்துள்ளார்.

முரளிதரனின் சாதனைகள்

  • டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்.
  • ஒருநாள் போட்டியில் அதிக விக்கெட் எடுத்த வீரர்.
  • டெஸ்ட் ஒருநாள் மற்றும் டி20 போன்ற சர்வதேசப் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரர்.
  • டெஸ்ட் போட்டிகளில் அதிக முறை 5 விக்கெட்களுக்கு மேல் வீழ்த்திய வீரர்.
  • அதிக முதல் டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்திய வீரர்.
  • அதிவேகமாக 350, 400, 450, 500, 550, 600, 650, 700, 750, 800 விக்கெட்டுகளை குறைந்த போட்டியில் எடுத்த வீரர்.
  • தொடர்ந்து 4 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட்டுகள் மேல் வீழ்த்தியுள்ளார். அதுவும் இரண்டு முறை எடுத்துள்ளார்.
  • டெஸ்ட் அந்தஸ்து பெற்று விளையாடும் அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் 50 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தியுள்ளார்.
  • டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் இருமுறை 9 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இவருடன் இங்கிலாந்தில் ஜிம் லாக்கரூம் முதலிடத்தை பகிர்ந்து கொள்கிறார்.
  • அதிக முறை தொடர் நாயகன் விருதை டெஸ்ட் போட்டியில் பெற்றுள்ளார்.
  • ஒரு மைதானத்தில் தனிநபராக 100 விக்கெட்டுக்கு மேல் வீழ்த்தி உள்ளார். அதுவும் இலங்கையில் உள்ள மூன்று மைதானங்களிலும் தனித்தனியாக 100 விக்கெட்டுக்கு மேல் எழுதியுள்ளார்.
  • 2000, 2001, 2006 ஆம் ஆண்டு ஒரு வருடத்தில் 75 விக்கெட்டுகள் மேல் வீழ்த்திய வீரர்.
  • சர்வதேச போட்டிகளில் அதிக முறை ஐந்து விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராவார்(77).
  • சர்வதேச அனைத்துவித போட்டிகளில் அதிக முறை ரன் எடுக்காமல் அவுட்டான வீரர் ஆவார் (59).
  • சர்வதேச போட்டிகளில் அதிக முறை பந்து வீசிய வீரரும் ஆவார் (63132).
  • சொந்த மண்ணில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய வீரராவர் (493).

3

17/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

17/4/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான சூழல் நிலவுகின்ற நாளாகும். பணியிடத்தில் நல்ல புகழ் கிடைக்கும். தொழில் லாபகரமாக இருக்கும். சேமிக்க பழக வேண்டிய நாளாகும்.

ரிஷப ராசிபலன்

இன்றைய நாள் முழுதும் பரபரப்பாக இருப்பீர்கள். வேகம் விவேகம் இல்லை என்பதனை புரிந்து செயல்பட வேண்டிய நாளாகும். குடும்ப பிரச்சனைகளை பொறுத்து கையாள வேண்டும். வாகனங்களை மெதுவாக ஓட்டவும்.

மிதுன ராசிபலன்

இன்று பொறுமையாக செயலாற்ற வேண்டிய நாளாகும். வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய நட்புறவை சந்திப்பதை தவிர்க்கவும். மாலையில் துணையுடன் வெளியே போய் வர அமைதி கிடைக்கும். பாதகமான பலன்களை பெற வாய்ப்புகள் அதிகம்.

கடக ராசிபலன்

உங்களின் ஆன்மீக சேவைகளை ஆற்ற ஏதுவான நாளாகும். பக்தியில் சிறந்து விளங்கும் நாள். தர்ம காரியங்களில் ஈடுபட புண்ணியம் வந்து சேரும். குடும்பத்தில் நற்பெயர் பெறக்கூடிய நாளாக இருக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்றைய தினம் உங்களின் சாதகமான நாளாகும். வருகின்ற பிரச்சனைகளும் உங்களால் தீர்த்து வைக்க முடியும். மன தைரியமான நாளாக இருக்கும். எதிரிகள் தொல்லை விலகும். நல்ல நாளக இருக்கும்.

கன்னி ராசிபலன் 

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். எதிர்கால தேவைகளை நிறைவு செய்யும் நாளாக இருக்கும். தொழிலில் பணவரவு சிறப்பாக இருக்கும். பயணங்கள் வெற்றியை தரும் நாளாக இருக்கும்.

துலா ராசிபலன்

இன்று வளர்ச்சிகரமான நாளாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். உத்தியோகத்தில் விரும்பும் மாற்றம் வரலாம். கணவன் மனைவியிடையே காதல் மேம்பட்ட நாளாக இருக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று கட்டுக்கோப்பாக இருக்க வேண்டிய நாளாகும். பல்வேறு ரூபத்தில் பிரச்சனைகள் வரலாம். மனதை திடமாக வைத்து எதிர் கொள்ள வேண்டிய நாளாகும். சகோதரர்களுடன் சண்டை வர வாய்ப்புகள் அதிகம்.

தனுசு ராசிபலன்

இன்று நன்மைகள் கிடைக்கும் நாளாக இருக்கும். போட்டிகளில் பரிசுகள் கிடைக்கும் வாய்ப்புகள் உண்டு. துணிந்து செயலாற்றவும். வியாபாரத்தில் தன லாபம் உயர்வாக இருக்கும்.

மகர ராசிபலன் 

இன்று தேவையற்ற குழப்பங்கள் மனதில் ஓடி கொண்டு இருக்கும். தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும். மனதை சுய கட்டுபாட்டில் வைக்கவும். குழந்தைகளுடன் நேரத்தை செலவிடுங்கள். நன்மை கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று நம்பிக்கையை வளர்க வேண்டிய நாளாக இருக்கிறது. பணி பிரச்சனைகளில் நண்பர்களின் ஆலோசனை உதவும். ஆண்கள் பெண்களிடத்தில் கவனமாக இருக்க வேண்டிய நாளாகும். பேச்சை குறைக்க நற்பலன்கள் பெறலாம்.

மீன ராசிபலன் 

இன்றைய நாளில் வளர்ச்சிக்கு தடைகள் வர வாய்ப்புகள் அதிகம். உங்கள் புத்தியை பயன்படுத்தி சரி செய்ய வேண்டிய நாளாகும். வீண் ஆசைகளை தவிர்க்கவும்.  உழைப்பால் நற்பலன்களை பெறலாம்.

17/4/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தானாய் தோன்றிய காளி: திருமண வரமருளும் அறந்தாங்கி வீரமாகாளியம்மன்

1

தானாய் தோன்றிய வீரமாகாளியம்மன் வரலாறு, வீரமாகாளியம்மன் சிறப்புகள், திருமண தோஷம் நீக்கி திருமண வரம் தரும் பொட்டு தாலி காணிக்கை, சகல தோஷங்களும் நீக்கும் அதிசயமான கோவில்.

கலியுகத்தின் கண் கண்ட தெய்வமாக விளங்க கூடிய அன்னை மஹா காளி பல்வேறு திருநாமங்களில் உலகெங்கும் அருளாட்சி புரிந்து வருகிறாள்.

தசமஹா வித்யா தேவியர்களில் முதல் தேவியாக விளங்குபவள், ஞானமே வடிவமானவள், கோர ரூபம் கொண்டு எதிரிகளை வேர் அறுப்பவள், தன் குழந்தைகளை காப்பதில் நிகரற்றவள் என அன்னையின் பெருமைகளை கூறிக்கொண்டே போகலாம்.

இப்படிப்பட்ட அன்னை புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் “வீரமாகாளியம்மன்” என்ற திருநாமத்துடன் அருளாட்சி புரிந்து வருகிறாள்.

தானாய் தோன்றிய வீரமாகாளியம்மன்

அறந்தாங்கியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பிருந்தே அன்னையை சுயம்புவாக வழிபட்டு வந்துள்ளனர்.

சுமார் முன்னூறு ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி மக்கள் அன்னைக்கு திருவுருவச் சிலை செய்து வழிபட எண்ணினர். அதன்படி திருவுருவமும் சிற்பியை கொண்டு செய்து முடித்தனர். அத்திருவுருவச் சிலைக்கு நான்கு கரங்கள் கொண்டு வடிவமைத்துள்ளனர். ஆனால் அந்தச் சிலையின் வலது மேற்கரத்தில் ஒரு விரலில் மட்டும் சேதம் ஏற்பட்டதாம். இதை கண்டு பக்தர்கள் மனம் வருந்தியுள்ளனர்.

அன்று இரவு கோவில் பூசாரியின் கனவில் காளி அன்னை தோன்றி, “நான் வெளிபடும் நேரம் வந்து விட்டது. ஒரு ஆடு ஒன்றை கோவில் நிலத்தில் நடக்க விடுங்கள் அது எங்கு சென்று அமர்கிறதோ அங்கே தோண்டி பாருங்கள். என் வடிவம் உங்களிடம் கிடைக்கும்” எனக் கூறி மறைந்தாள்.

கனவு தெளிந்து பூசாரி நடந்தவற்றை ஊர் மக்களிடம் கூறி காலையில் அன்னை கூறியது போலவே ஒரு ஆட்டை நடக்க விட்டனர். ஆடும் ஒரு இடத்தில் சென்று அமர்ந்து கொண்டது. உடனே அந்த இடத்தை தோண்டிப் பார்த்த போது பிரம்மாண்டமான அன்னையின் திருவுருவம் வெளிப்பட்டது.

அச்சிலை எட்டு திருகரங்களையும், அசுரனை காலில் போட்டு மிதித்த கோலத்திலும் இருந்தது. மேலும் மக்கள் செய்த சிலை போலவே திருவுருவத்தின் வலது மேற்கரத்தில் ஒரு விரல் சேதமாக இருந்தது. ஆகம விதிப்படி பின்னமான சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட கூடாது என்பதால் மக்கள் வருந்தினர்.

அன்று இரவே மீண்டும் அம்பிகை தோன்றி “உங்கள் வீட்டில் யாராவது ஊனம் இருந்தால் அவர்களை தூக்கி வீசிவிடுவீர்களா? நான் உங்களை காக்க உதித்தவள் என்னை பிரதிஷ்டை செய்து வழிபடுங்கள்” என்று அன்னை கூறி மறைந்தாள்.

அன்னையின் அருள் வாக்கின்படி கோவிலில் பிரதிஷ்டை செய்து வழிப்பட்டு வருகின்றனர்.
மேலும் பஞ்ச பாண்டவர்களின் வனவாச காலத்தில் அன்னையை தரிசனம் செய்து தங்குவதற்கு இடம் பெற்றதாகவும் கூறப்படுகிறது.

வீரமாகாளியின் திருவுருவ சிறப்பு

வீரமாகாளியம்மன் அமர்ந்த கோலத்தில் எட்டு திருக்கரங்களுடன். சூலம், பாசம், கேடயம், மழு, பத்மம், அக்னி, உடுக்கை, கபாலம் ஆகியவற்றை ஏந்தி இடது காலில் அரக்கனை அழுத்தியபடி காட்சி தருகிறாள்.

திருமுடியில் நாகமும், செவியில் சிவபெருமான் அணியும் ஆபரணத்தை அணிந்து கோரைப் பற்களுடன் சாந்த முகம் கொண்டு. சிவசக்தி ஸ்வரூபமாக விளங்குகிறாள்.

திருமண வரம் வேண்டி பொட்டு தாலி வேண்டுதல்

திருமணம் வரம் வேண்டி  பொட்டு தாலி காணிக்கையாக தருவதாக வேண்டுதலை வேண்டி திருமணம் முடிந்ததும் காணிக்கையை செலுத்தும் நடைமுறையானது இக்கோவிலில் உள்ளது.

சாதரண பொட்டு தாலியோ, வெள்ளி அல்லது தங்கத்தால் ஆன பொட்டு தாலியோ அவரவர் வசதிக்கேற்ப நேர்த்திக் கடன்களை செலுத்துகின்றனர்.

அன்னையிடம் தூய்மையான பக்தியே போதும் உடனடியாக பலன்களை வாரி வழங்குகிறாள்.

குழந்தை வரம் வேண்டி வீரமாகாளியிடம் வேண்டுவோர்க்கு குழந்தை வழங்கிறாள். அன்னையின் வரத்தால் குழந்தையை பெற்றவர்கள் அன்னைக்கே குழந்தையை தத்து கொடுத்து மீண்டும் பெற்றுக் கொள்கின்றனர்.

முப்பது நாட்கள் திருவிழா

வீரமாகாளியம்மன் அறந்தாங்கியை சுற்றியுள்ள பதினாறு ஊர்களுக்கு காவல் தெய்வமாக விளங்குகிறாள்.
அன்னைக்கு முப்பது நாட்கள் திருவிழா நடப்பது சிறப்பான விடயம் ஆகும். ஆனி கடைசியில் அல்லது ஆடி ஆரம்பத்தில் பூச்சொரிதலுடன் திருவிழா ஆரம்பமாகி முப்பது நாட்களும் திருவிழா நடைபெறுகிறது.

பக்தர்களுக்கு அருள்புரிவாள் வீரமாகாளி

மக்கள் கேட்ட வரத்தை வழங்கும் தயாபரியாக அருளாட்சி செய்கிறாள் வீரமாகாளி.

சர்வ சக்தியாக விளங்குகின்ற அன்னை வீரமாகாளியம்மனை சென்று தரிசனம் செய்து அனைவரும் சகல தோஷங்களும் நீங்கி திருமணம் வரம், குழந்தை வரம் பெற்று வாழ்வாங்கு வாழ பிராத்தனை செய்வோம்.

3