Home Blog Page 205

மோடி வரை கொரோனாவை பரப்ப நினைத்த கனிகா குணமடைந்தார்

2

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கொரோனா வைரஸ் பாதித்துள்ளது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரிடமிருந்து பாஜக மூத்த தலைவர் வசுந்தரா ராஜே-க்கு பரவியுள்ளது. நரேந்திர மோடி தப்பினார்.

லண்டன் பயணம்

கடந்த வாரம் கனிகா கபூர் லண்டன் சென்று உள்ளார். அங்கு இருந்து மார்ச் 9-ம் தேதி விமானம் மூலம் மும்பை வந்தவர் கொரோனா பரிசோதனை செய்யாமல் எஸ்கேப் ஆகியுள்ளார்.

மக்கள் கூட்டம் கூடும் என விமானத்தில் இருந்து இறங்கியவுடன் பாத்ரூமிற்கு சென்று உள்ளார். அங்கு இருந்த ஊழியர் ஒருவருக்கு பணம் கொடுத்து பரிசோதனை செய்து கொள்ளாமல் பிரபலம் என்ற வாய்ப்பை பயன்படுத்தி தப்பி உள்ளார்.

லக்னோ பார்ட்டி

மும்பையில் இருந்து விமானம் மூலம் லக்னோ சென்றுள்ளார். இந்த முறை உள்ளூர் பயணம் என்பதால் கொரோனா பரிசோதனை செய்யப்படவில்லை.

மார்ச் 13, 14, 15 ஆகிய தேதிகளில் லக்னோவில் பல்வேறு பார்டிகளில் கலந்துகொண்டு உள்ளார். அதில் ஒன்று வசுந்தரா ராஜே கொடுத்த விருந்து நிகழ்ச்சியும் அடங்கும்.

இந்த நிகழ்ச்சியில் வசுந்தராவின் கன்னத்தை உரசியபடி புகைப்படம் கூட எடுத்துள்ளார். இந்த சம்பவம் நிகழ்ந்து அடுத்த நாள் மார்ச் 16-ல் கனிகாவிற்கு கொரோனா வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டது.

மருத்துவப் பரிசோதனை

மருத்துவப்பரிசோதனை செய்து கொண்டதில் இரண்டு நாட்களுக்கு முன் ரிசல்ட் வெளியாகியது. அதில் கனிகாவிற்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கனிகா கலந்துகொண்ட பார்ட்டியில் வந்திருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளபட்டது.

இதில் வசுந்தரா தேவிக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அவரிடம் இருந்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரைன், பாஜக எம்பி அனுபிரியா பட்டேல் ஆகியோருக்கு பரவி உள்ளது.

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்

இதனையடுத்து குடியரசு தலைவர் ராம் நாத் கோவிந்தும் இவர்களை சந்தித்ததாக கூறப்படுகிறது. அவருக்கும் நேற்று கொரோனா பரிசோதனை நடைபெற்றுள்ளது.

இவ்வளவு பெரிய விபரீதத்திற்கு பிறகே நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் தோன்றி கொரோனா பற்றி உரையாற்றி உள்ளார்.

அதன் பிறகே நாளை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டு உள்ளது. மோடி நூழிழையில் கொரோனாவிடம் இருந்து தப்பி உள்ளார்.

நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை கொரோனாவால் ஒத்தி வைத்து இருந்தார். ஹோலி பண்டிகை கூட கலந்துகொள்ளவில்லை.

சென்ற வாரம் முதல் பாஜக நிர்வாகிகள் மற்றும் முக்கியத் தலைவர்களை கூட சந்திப்பதை தவிர்த்து உள்ளார்.

மோடி அவ்வாறு செய்யவில்லை எனில் அவருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்க வாய்ப்பு உள்ளது என டெல்லி வட்டாரம் தெரிவிக்கிறது.

கனடா பிரதமர்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மனைவி லண்டன் சென்று திரும்பியதில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டார். இதனால் ட்ரூடோவும் தன்னைதானே தனிமை படுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா என்பது எப்படி வேண்டுமாலும், யாருக்கு வேண்டுமானாலும் பரவ வாய்ப்பு உண்டு. அறிகுறி இல்லை என்பதற்காக முட்டாள் தனமாக நிகழ்ச்சிகளில் வலம் வந்தால் இப்படித்தான் நடக்கும்.

கனிகா மீது வழக்குப்பதிவு

முறையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளாமல் இருந்தது, நோயை பரப்பியது, அச்சுறுத்தல் ஏற்படுத்தியது தொடர்பாக கனிகா கபூர் மீது இந்திய தண்டனை சட்ட பிரிவு 269, 270, 188 கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

கனிகா கபூர் குணமடைந்தார்

இத்தனை பேருக்கு கொரோனாவை பரப்ப நினைத்த கனிகா கபூர் குணமடைந்து உள்ளார். ஐந்து முறை கொரோனா உறுதி செய்யப்பட்டும் எப்படி குணமடைந்தார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

3

கொரோனாவை பரப்பியதாக கனிகா கபூர் மீது வழக்கு!

0
Singer Kanika Kapoor

Kanika Kapoor; கொரோனா அறிகுறி: அதையும் மீறி விருந்துக்கு சென்ற பாடகி கனிகா கபூர் மீது வழக்கு! கொரோனா அறிகுறி இருப்பது தெரிந்தும் பாடகி கனிகா கபூர் வெளியில் விருந்து நிகழ்ச்சிக்கு சென்று அலட்சியமாக இருந்ததாக கூறி பாலிவுட் பாடகி கனிகா கபூர் மீது உத்திரப்பிரதேச போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கோவிட்19 (COVID 19) மனிதர்கள் மூலம் எளிதில் பரவக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமி. உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடுதல் மூலமாகவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதால், அடிக்கடி கைகளை கழுவுதலும் சானிடைசர்களை பயன்படுத்துவதும் அவசியம்.

ஆனால், உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் பாடகி கனிகா கபூர் (Singer Kanika Kapoor). இவருக்கு கொரோனா அறிகுறி இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனா வைரஸ் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவக்கூடிய நோய் தொற்று கிருமி என்பதால், வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். தனியறையில் தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கடந்த 11 ஆம் தேதி லண்டனிலிருந்து திரும்பி வந்த கனிகா கபூருக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட முதல் பிரபலம் இவராக கருதப்பட்டார்.

ஆனால், கொரோனா அறிகுறிகள் தென்பட்ட போதும், பல இடங்களுக்கு சென்று வந்ததாகவும், 3 விருந்துகளில் கலந்து கொண்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஏற்கனவே அந்த விருந்து நிகழ்ச்சியில் அரசியல் பிரபலங்கள் உள்பட பல விஜபிக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

கொரோனாவிடம் இருந்து ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பிய நரேந்திர மோடி

தற்போது கனிகா கபூர் விருந்து நிகழ்ச்சியின் மூலம் அவர்களுக்கும் கொரோனா அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, கனிகா கபூர் மீது ஐபிசி பிரிவு 269, 270, 188 ஆகிய பிரிவுகளில் நோயை பரப்புதல், மக்கள் ஊருக்கு ஊறுவிளைவித்தல், அரசு விதிகளை மீறி மக்களை தொந்தரவு செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

Corona Virus: கொரோனாவை விட கொடுமையானவன் மனிதன்!

0
Bala Saravanan

Bala Saravanan; கொரோனாவை விட கொடுமையானவன் மனிதன்! கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக தம்மை தாமே பாதுகாத்துக் கொள்ளும் பொருட்டு அனைவரையும் சுத்தமாகவும், சுகாதாரமாகவும் இருக்க வேண்டும் என்று மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

கொரோனா வைரஸ் காரணமாக அதிகளவில் விற்பனை செய்யப்படுவது சானிடைசர். கோவிட்19 மனிதர்கள் மூலம் எளிதில் பரவக்கூடிய ஒருவகை வைரஸ் கிருமி.

உலக நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.

இந்த நிலையில், தம்மைத் தாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும், அரசு அதிகாரிகளும் வலியுறுத்தி வருகின்றனர்.

தொடுதல் மூலமாகவே ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு கொரோனா வைரஸ் பரவும் என்பதால், அடிக்கடி கைகளை கழுவுதலும் சானிடைசர்களை பயன்படுத்துவதும் அவசியம்.

ஆனால், இதுதான் சரியான நேரம் என்று சானிடைசர்களை அதிக விலைக்கு விற்பனை செய்கிறார்கள் கடைக்காரர்கள். அதையும் வாங்கும் நிலைக்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம்.

இது குறித்து நடிகர் பாலசரவணன் கருத்து தெரிவித்துள்ளார். அவர் என்ன கூறியிருக்கிறார் என்பதை இங்கு பார்ப்போம்.

கடந்த 3 நாட்களுக்கு முன்பு சானிடைசர் தீர்ந்து விட்ட நிலையில், கடைக்கு சானிடைசர் வாங்க சென்றேன். அப்போது 60 ரூபா மதிப்புள்ள சானிடைசரை ரூ.135க்கு விற்பனை செய்தார்கள்.

MRP ல வெறும் 60 மட்டுமே போட்டிருக்கும் நிலையில், நீங்கள் எப்படி ரூ.135 கேட்கலாம் என்று நான் கேட்க, அதற்கு பில்லிங் பிரிவில் இருப்பவர் சார் நான் இங்கு வேலை செய்கிறேன். என்னால் என்ன செய்ய முடியும் என்று பரிதாபமாக கூறினார்.

சரி, என்று நானும் அப்படியே வாங்கிவிட்டு வந்தேன். அதன் பிறகு காஃபி குடிக்க எனது நண்பர்களுடன் சென்றிருந்தேன்.

அப்போது கடையில், காஃபி கொடுக்கும் ஒரு அக்கா எங்களது கையில் சானிடைசர் கொடுத்தார்கள். அப்போது புலம்பிக் கொண்டே இது வெறும் ரூ.75 ஆனால், கடையில் ரூ.115 சொல்கிறார்கள்.

பில்லும் தரமாட்டேன். விருப்பம் இருந்தால் வாங்குங்கள் இல்லையென்றால் இருக்கட்டும் என்கிறார்கள் என்று அந்த அக்கா சொன்னாங்க.

நான் எனக்கும் நடந்தது என்று சொல்லி முடிப்பதற்குள் ஒருவர் மாற்றி ஒருவர் எல்லோருக்குமே இது போன்ற சம்பவம் நடந்தது என்றார்கள்.

பல கடைகளில் ஹேண்ட் வாஷ் மற்றும் சானிடைசர் அதிகளவில் மக்கள் வாங்குவதை அறிந்து கொண்டு அதன் விலையைவிட 2,3 மடங்கு அதிகம் வைத்து விற்பனை செய்கிறார்கள்.

இது போன்ற ஒரு அவசரமான சூழ்நிலையில், தங்களது லாப நோக்கத்திற்காக பயன்படுத்திக் கொள்ள நினைப்பது எவ்வளவு ஒரு கேவலமான விஷயம். உண்மையில் கொரோனாவை விட மிகவும் கொடூரமானவன் மனிதன்.

இந்த ஊரில் இன்னும் எத்தனை வருடமானாலும், ஜாதி ஒழியாது, ஏற்றத்தாழு மாறாது, எந்த மாற்றமும் நிகழபோவதில்லை, ஒரு ஆணியும்….என்று மன வேதனையுடன் தெரிவித்துள்ளார் என்பது மிகவும் வருத்தமளிக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது.

3

2014 முதல் 2020 வரை திரையரங்குகள் மூடப்பட்டதற்கான காரணங்கள்?

0
Corona Virus Theatre Closed

Corona Virus Theatre Closed; 2014 முதல் 2020 வரை திரையரங்குகள் மூடப்பட்டதற்கான காரணங்கள்? 2014 ஆம் ஆண்டு முதல் 2020 வரை திரையரங்குகள் 5 முறை மூடப்பட்டுள்ளன. அதற்கான காரணங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில், இந்தியாவில் நாளை மார்ச் 22 ஆம் தேதி ஊரங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக கடந்த 16 ஆம் தேதி முதல் மார்ச் 31 ஆம் தேதி திரையரங்குகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை 5 முறை திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன.

திரையரங்குகள் மூடப்படுவதாலும், சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்படுவதாலும் நடிகர், நடிகைகளுக்கு எந்த பிரச்சனையும் ஏற்படுவதில்லை.

சினிமா படப்பிடிப்பில் வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு, திரையரங்குகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு தான் வருமானம் பற்றாக்குறை ஏற்படும். படப்பிடிப்புக்கு வேலைக்குச் சென்றால் தான் அவர்களுக்கு வருமானம்.

இப்படி பல பிரச்சனைகளையும் கடந்து வரும் தொழிலாளர்களுக்கு முதலில் ஒரு சல்யூட்….

மக்களவைத் தேர்தல் 2014

கடந்த 2014 ஆம் ஆண்டு 16ஆவது மக்களவைத் தேர்தல் நடந்தது. அப்போது ஏப்ரல் 24 ஆம் தேதி மாலை 6 மணி வரை திரையரங்குகள் மூடப்பட்டிருந்தன.

தேர்தல் ஆணையம் அறிவுறுத்தலின் பேரில் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏபிஜே அப்துல்கலாம் மறைவு

கடந்த 2015 ஆம் ஆண்டு ஏவுகணை மனிதர் என்றழைக்கப்பட்ட முன்னாள் குடியரசுத் தலைவர் ஏபிஜே அப்துல் கலாம் ஜூலை 27 ஆம் தேதி உயிரிழந்ததைத் தொடர்ந்து 30 ஆம் தேதி அன்று திரையரங்குகள் மூடப்பட்டன. அ

ப்துல் கலாமின் உடல் அவரது சொந்த ஊருக்கு கொண்டு சென்று நல்லடக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது உடலுக்கு மரியாதை செலுத்தும் விதமாக திரையரங்குகள் மூடப்பட்டன.

வரி பிரச்சனை

கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் விதிக்கப்பட்ட 10 சதவிகித கேளிக்கை வரியை எதிர்த்து போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, திரையரங்குகள் மூடப்பட்டன.

இந்த போராட்டத்தைத் தொடர்ந்து கேளிக்கை வரி 8 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

டிஜிட்டல் புரோஜெக்டர் பிரச்சனை

டிஜிட்டல் புரோஜெக்டர்களுக்கு அதிக விலை வசூலிப்பதாக டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்கள் மீது குற்றம் சாட்டி காலவரையற்ற போராட்டம் நடந்தது.

அப்போதும் திரையரங்குகள் மூடப்பட்டன. இது தான் தமிழ் சினிமாவில் நடந்த அதிக நாள் போராட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் டிஜிட்டல் சர்வீஸ் ப்ரொவைடர்களுக்கும் இடையில் உள்ள பிரச்சனை முடிந்த பிறகு போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

கொரோனா வைரஸ்

உலகம் முழுவதும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருவது கொரோனா வைரஸ். இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. திரையரங்குகளும் கடந்த 16 ஆம் தேதி முதல் மூடப்பட்டுள்ளன. வரும் 31 ஆம் தேதி வரை திரையரங்குகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

3

மே 28ஆம் தேதி வரை எந்த வித கிரிக்கெட் போட்டிகளும் கிடையாது

0
இங்கிலாந்து கிரிக்கெட்
இங்கிலாந்து கிரிக்கெட்

மே 28ஆம் தேதி வரை எந்த வித கிரிக்கெட் போட்டிகளும் கிடையாது, கொரோனா பயத்தால் வீரர்களின் பாதுகாப்பு கருதி இந்த முடிவை இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு எடுத்தது.

அடுத்த கிரிக்கெட் போட்டிகளை ஜூன், ஜூலை மாதங்களிலே எதிர்பார்க்க முடியும். கொரோனா பாதிப்பால் உலகமே அச்சம் கொண்டிருக்கும் இந்த நிலையில் கிரிக்கெட் கைவிடுவதே நல்லது.

டாம் ஹாரிசன் கூறுகையில் 

இந்த இக்கட்டான சூழ்நிலையில் கிரிக்கெட்டை கைவிடுவதே நாட்டிற்கும் வீரர்களுக்கும் நல்லது.

கிரிக்கெட்டை கைவிடுவதே வருத்தமாக இருந்தாலும் தவிர்க்க முடியாத ஒன்றாகும்.  இந்த நேரத்தில் போட்டியை நடத்தினாலும் அது வணிகரீதியாக பாதிக்கும்.

இங்கிலாந்தில் ஏற்கனவே ஹோட்டல், பப் மற்ற கூட்டம் இடங்கள் அனைத்தையும் அடைக்க அந்நாட்டு பிரதமர் உத்தரவு விட்டிருக்கிறார். இங்கிலாந்தில் இது வரை கொரோனாவால் 160 நபர்கள் உயிரிழந்துள்ளனர்.

3

அழகான குட்டி தேவதை: சந்தோஷத்தில் ராஜா ராணி ஜோடி!

0
Alya Manasa Baby Girl

Alya Manasa Blessed With Baby Girl; அழகான குட்டி தேவதை: சந்தோஷத்தில் ராஜா ராணி ஜோடி! வெள்ளித்திரைக்கு ராஜா ராணி ஆர்யா – நயன்தாரா என்றால், சின்னத்திரைக்கு ராஜா ராணி என்றால், இவர்களை மறந்திருக்கவே மாட்டார்கள்.

ராஜா ராணி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் ஆல்யா மானசா (Alya Manasa) மற்றும் சஞ்சீவ் (Sanjeev Karthick).

வெள்ளித்திரையை விட மக்களோடு மக்களாக ஒன்றிய சின்னத்திரைக்கு அதிகளவில் ரசிகர்கள் உண்டு. அதுவும் குடும்ப பெண்களுக்கு சொல்லவே வேணாம்.

இதில், சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வரும் நடிகர், நடிகைகளுக்கு வரவேற்பு தாறுமாறாக இருக்கும்.

அந்த வகையில் கடந்த சில ஆண்டுகளாக சின்னத்திரையில் ஜொலித்தவர்கள் ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ். சீரியல்களில் ஒன்றாக நடித்து இருவரும் காதலிக்க ஆரம்பித்துள்ளனர். அதன் பிறகு திருமணம்  செய்து கொண்டனர்.

சின்னத்திரையில், காதலித்ததை விட நிஜத்திலும் இருவரும் ஒருவருக்கொருவர் அதிகளவில் காதலித்து வந்துள்ளனர்.

சீரியல் ஆனாலும் சரி, டான்ஸ் புரோகிராமாக இருந்தாலும் சரி இருவருக்கும் அப்படியொரு கெமிஸ்டரி.

காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடிக்கு அழகான குட்டி தேவதை பிறந்துள்ளதாக சஞ்சீவ் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஆம், ஆல்சா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆல்யா மானசா குழந்தை பிறப்பதற்கு முன்னதாகவே குழந்தைக்கு தேவையான ஆடைகள், பெட்சீட் என்று எல்லாவற்றையும் வாங்கி குவித்துள்ளார்.

அதற்கான புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஆல்யா மானசா மற்றும் சஞ்சீவ் ஜோடிக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

3

2020ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ!

0
Master Most Awaited Film in 2020

2020ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் படம் எது? கருத்துக்கணிப்பு ரிசல்ட் இதோ!

அஜித், ரஜினி படங்களை தோற்கடித்து 2020ல் சிறந்த படம் எதுவாக இருக்கும்? 2020 ஆம் ஆண்டில் ரசிகர்கள் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படமாக விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்டுள்ள மாஸ்டர் படம் அமைந்துள்ளது.

யாஷின் கேஜிஎஃப் 2, அஜித்தின் வலிமை, ரஜினிகாந்தின் அண்ணாத்த, பிரபாஸின் ஜான், மோகன்லாலின் மரைக்காயர் ஆகிய படங்களை தோற்கடித்து 2020 ஆம் ஆண்டின் சிறந்த படமாக தளபதி விஜய்யின் மாஸ்டர் இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தென்னிந்திய மொழிகளில் உருவாக்கப்பட்ட படங்களில் அதிகம் 2020 ஆம் ஆண்டு எதிர்பார்க்கப்பட்ட முதல் படம் மாஸ்டர். இந்த ஆண்டில் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படம் எது என்பது குறித்து தனியார் ஆங்கியல பத்திரிக்கை ஒன்று ரசிகர்களிடையே வாக்கெடுப்பு நடத்தி கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.

இந்த வாக்கெடுப்பில் 1000 ரசிகர்கள் கலந்து கொண்டுள்ளனர். வாக்கெடுப்பு முடிந்த தற்போது கருத்துக்கணிப்பு ரிசல்டை தனியார் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது.

மாஸ்டர் நம்பர் 1

விஜய்யின் மாஸ்டர் படம் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட க்ரைம் த்ரில்லர் படம் மாஸ்டர். தொடக்கம் முதல் நம்பர் 1 இடம் பிடித்த மாஸ்டர் 45.61 சதவிகிதம் வரை ஓட்டுகளை பெற்று நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது.

கேஜிஎஃப் 2

யாஷ் நடிப்பில் உருவாக்கப்பட்ட கன்னட படம் கேஜிஎஃப்2. தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் இப்படம் வெளியாக இருக்கிறது. 33.83 சதவிகித வாக்குகளை பெற்றுள்ள பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இப்படம் மாஸ்டர் படத்தின் வெற்றியை முறியடிக்காது.

வலிமை

எதிர்பாராத விதமாக அஜித் நடிப்பில் உருவாக்கப்பட்ட வலிமை படத்திற்கு ரசிகர்களிடையே போதுமான அளவில் வாக்கு சதவிகிதம் கிடைக்கவில்லை. வெறும், 15.68 சதவிகிதம் மட்டுமே வாக்கு சதவிகிதம் பெற்று 3 ஆவது இடம் பிடித்துள்ளது.

அடுத்து சொல்லவே வேணாம். ரஜினியின் அண்ணாத்த, பிரபாஸின் ஜான், மோகன் லாலின் மரைக்காயர் ஆகிய படங்கள்தான். இந்த படங்களுக்கு குறைவான வாக்குகளே கிடைத்துள்ளது.

Master Vote

அண்ணாத்த படத்திற்கு 2.58 சதவிகிதம், ஜான் 1.32 சதவிகிதம், மோகன்லால் 0.98 சதவிகிதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளது.

2020 ஆம் ஆண்டு தென்னிந்திய சினிமா ரசிகர்களால் அதிகளவில் எதிர்பார்க்கப்பட்ட படங்களின் பட்டியலில் மாஸ்டர், கேஜிஎஃப் 2 ஆகிய இரண்டு படங்களும் இடம்பெற்றுள்ளன.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், திட்டமிட்டப்படி வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. எனினும், படக்குழுவினர் அறிவித்தபடி ஏப்ரல் 9 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இதே போன்று யாஷின் கேஜிஎஃப் 2 படம் தசாரா பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 23 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு

1
கொரோனா பாதிப்பு
கொரோனா பாதிப்பு

கேரளாவில் ஒரே நாளில் 12 பேருக்கு கொரோனா பாதிப்பு கேரளாவில் நேற்று ஒரே நாளில் காசராகடில் 5 நபரும், எர்னாகுளத்தில் 6 பேரும் பாலக்காட்டில் ஒருவருக்கும் கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இத்துடன் கேரளாவில் மொத்தம் 40 நபர்கள் கொரோனா பாதிப்படைந்துள்ளனர். இதனால் இந்தியாவில் மொத்தம் 250 நபர்களுக்கு மேல் பாதிக்கப்பட்டனர்.

கேரளாவில் இதுவரை 44350 நபர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். 44130 நபர்கள் வீட்டிலும் பிறர்கள் ஆஸ்பத்திரியிலும் தனிமை படுத்தி வைத்துள்ளனர்.

இங்கிலாந்தை சேர்ந்த 5 நபர்கள் மூனாரில் இருப்பவர்களுக்கு கொரோனா தோற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் எர்னாகுளத்தில் தனிமைப்படுத்த பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்தும் கோரோனோவால் இது வரை 250000 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10000க்கும் மேலான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன.

3

amala paul video leak: பெட்ரூம் வீடியோ வெளியாயிடுச்சு; இனிமே வதந்தினா யார் நம்புவா?

0
amala paul leak

Amala Paul Video Leak; பெட்ரூம் வீடியோ வரைக்கு வெளியாயிடுச்சு; இனிமே வதந்தினா யார் நம்புவா? வீடியோவில் இருப்பது முதலிரவு எனச் சொல்ல முடியாது, பல இரவுன்னு தான் சொல்லனும்.

Amala Paul Marriage

நடிகை அமலா பாலிற்கு திருமணம் (Amala Paul Second Marriage) நடந்ததாக புகைப்படங்கள் வெளியாகின. அந்த படங்களை வெளியிட்டவர் அவர் கணவர் பாவ்னிந்தர்.

தற்பொழுது  பாவ்னிந்தர் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் சும்மா எடுத்தது. இருவருக்கும் கல்யாணம் ஆகவில்லை என அவரது மேனேஜர்  கூறியுள்ளார். அப்போ அந்த பெட்ரூம் வீடியோ ஜாலிக்காக எடுத்துக்கிட்டாங்களா?

அமலாபாலும் காதல் சர்ச்சையும்

ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பிறகு நடிகை அமலாபால் குறித்து தொடர்ந்து தகவல் வெளியாகி வருவதும், அதற்கு விளக்கம் கொடுப்பதுமாகவே இருக்கிறது.

ஏ.எல்.விஜய் விவாகரத்து செய்ய காரணமே நடிகர் தனுஷ் தான் என விஜய்யின் தந்தையே ஓப்பனாக சமீபத்தில் பேட்டி கொடுத்தார்.

ராட்சசன் படத்தின் மூலம் அமலா பால், விஷ்ணு விஷால் இருவரும் பழகி வந்ததாகவும், இருவரும் காதலிப்பதாகவும் தகவல் வந்தது. ஆனால், இதற்கு இருவரும் அப்படி ஏதும் இல்லை என்று விளக்கம் கொடுத்தனர்.

தொடர்ந்து கேரளத்து நண்பரான அஜித் மேனன் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும், அவருக்கு அமலா பால் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் ஊடகங்களில் வைரலானது.

இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரது அன்புதான் தன்னை மாற்றியதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், ஒரு குழந்தை பெற்றுக்கொண்டு, இன்னொரு குழந்தையை தத்தெடுக்கவும் ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில்தான் எப்போதும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் உணர்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் யாரை காதலிக்கிறார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

Amala Paul Second Marriage

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாலிவுட் பாடகரான பாவ்னிந்தர் உடன் நடிகை அமலா பால் வெளியில் சென்று வரும் புகைப்படங்கள் ஊடகங்களில் வைரலானது.

அவரைத் தான் காதலிக்கிறார் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அப்போதே செய்தி வெளியானது.

இந்த செய்தி வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாகவே பாவ்னிந்தர் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டதுபோன்று இருக்கும் புகைப்படத்தை பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவிட்டு சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இந்த நிலையில், இந்த திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அமலா பாலிற்கு திருமணம் ஆனதாக செய்திகள் பரவி வருகிறது.

இதற்கு அமலா பால் எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், அவரது மேனேஜர் தரப்பிலிருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணம் பற்றி வரும் செய்தி தவறு. இது மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இதை எதற்காக பகிர்ந்தார் என்று தெரியவில்லை.

திருமணம் அமலா பாலின் தனிப்பட்ட விஷயம். திருமணம் குறித்து பரவி வரும் செய்திக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amala Paul Video Leak

இவர் இப்படி பேட்டி கொடுத்த சில மணி நேரங்களிலேயே அமலா பால் ஒரு வருடன் நெருக்கமாக இருப்பது போன்ற வீடியோ பரவி வருகிறது.

அதில் இருப்பவர் பாவ்னிந்தர் தானா எனத் தெரியவில்லை. ஒருவேளை பாவ்னிந்தர்-அமலாபாலுக்கு கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவருடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறாரா எனவும் சரியான தகவல் இல்லை.

 Amala Paul ties the knot with singer bhavninder singh is a fake news says her manager.

3

நடிகை ஷோபனா பிறந்தநாள்

0

இந்திய நடிகையும் மற்றும் பிரபல பரத நாட்டிய கலைஞரான பத்மஸ்ரீ மற்றும் கலைமாமணி ஷோபனா 1970ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் பிறந்தவர்.

இவரின் முழுப் பெயர் ஷோபனா சந்தரகுமாரி பிள்ளை ஆகும்

இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் கன்னடம், தமிழ், தெலுங்கு, ஹிந்தி மற்றும் ஆங்கில படங்களிலும் நடித்துள்ளார்.

இவர் 1993 ஆம் ஆண்டு மனிசித்ரதாலு (இந்த படம் தமிழில் ரஜினி நடித்த சந்திரமுகி) படத்திற்கும் மற்றும் மிட்ர் மை ஃப்ரண்ட் படத்திற்கும் இரண்டு தேசிய விருதுகளை வென்றுள்ளார்.

இந்திய அரசாங்கம் இவரை கௌரவப்படுத்தும் விதமாக இவருக்கு பத்மஸ்ரீ விருதும், தமிழ்நாடு அரசு அவரை கவுரவப்படுத்தும் விதமாக கலைமாமணி விருதும் வழங்கியுள்ளது.

தூர்தர்ஷன் இவரை கௌரவப்படுத்தும் விதமாக கிரேடு ஏ டாப் விருதும், கேரளா சங்கீத நாடக அகடமி இவருக்கு கலை ரத்னா விருது கொடுத்து கௌரவ படுத்தி உள்ளது.

கோயமுத்தூர் மாவட்டத்தில் உள்ள செயின்ட் தாமஸ் மேல்நிலைப் பள்ளியில் படித்தார்.

திருவாங்கூர் சகோதரிகள் ஆன லலிதா, ராகினி பத்மினி ஆகியோரின் சொந்தக்காரரான சோபனா, நடிகை சுகுமாரி, அம்பிகா சுகுமாரன் நடிகர் வினித் போன்றவர்களின் சொந்தக்காரரும்.

ஆவார் டாக்டர் எம்ஜிஆர் அறக்கட்டளை இவரை கௌரவப்படுத்தும் விதமாக டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

இவர் முதன்முதலாக 1980 ஆம் ஆண்டு தமிழில் ‘மங்கள நாயகி’ படத்தின் மூலம் அறிமுகமாகி பிறகு மிகப்பெரிய இந்திய நடிகை ஆனார்.

இவர் தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த சிவா, தளபதி, கோச்சடையன், பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’, விஜயகாந்துடன் ‘பொன்மனச் செல்வன்’ போன்ற படங்கள் இவரது நடிப்பு பெரிதாக பேசப்பட்டது.

2012ஆம் ஆண்டு சிம்பு நடித்து வெளியான போடா போடி படத்தில் வரலட்சுமியின் தாயாக நடித்திருப்பார்.
பிறகு சோபனா மலையாள படங்களில் அதிகம் நடித்து தமிழ் படங்களை தவிர்த்தார்.

2019ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 சீசன் நான்கில் ஜட்ஜாக பணியாற்றினார். மலையாளத்திலும் டிவி ஷோக்களில் பங்கேற்று வருகிறார்.

1991 ஆம் ஆண்டு பொதிகையில் ஒளிபரப்பான பெண் தொடரிலும், 1999 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான உறவுகள் தொடரிலும் நடித்துள்ளார்.

இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் இன்றளவும் இந்தியாவில் உள்ளனர். இவர் நடிப்பிலும் சரி படத்திலும் சரி மற்றவர்களை ஈர்க்கக் கூடியது இவரது இயல்பாக இருக்கும்.

இவர் இன்று தனது 50வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

3