Home Blog Page 206

21/3/2020 இன்றைய தின ராசிபலன் – Today Horoscope Tamil

0
21/3/2020 இன்றைய தின ராசிபலன் - Today Horoscope Tamil

21/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Today Horoscope Tamil மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷம் ராசிபலன்

இன்று உங்களுக்கு வெற்றிகரமான நாளாக அமையும். பணிகளை சொன்ன நேரத்தில் முடித்துக்கொடுப்பீர்கள். தாயுடன் அன்பு, பாசம் அதிகமாகும்.

இன்று பணவரவு மிகுந்து காணப்படும். பணியிடத்தில் ஊக்கத்தொகை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியம் சிறந்த முறையில் இருக்கும்.

ரிஷபம் ராசிபலன்

பயணம் செய்ய வாய்ப்பு உண்டு. பணிகளை சிறிது கவனமுடன் மேற்கொள்ள வேண்டும். பண இழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.

வீட்டில் உங்கள் மனைவியுடன் சண்டை சச்சரவுகள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இன்று நீங்கள் எந்த காரியத்தை செய்தாலும் கவனமுடன் இருப்பது நல்லது.

மிதுன ராசிபலன்

இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையவில்லை. பணிச்சுமை அதிகமாக காணப்படும். மனைவியுடன் விவாதம் செய்ய நேரிடும்.

வீட்டின் பூச்சு வேலைகளை, மராமத்து பணிகள் செய்ய நேரிடும். உங்கள் அன்னையின் உடல் நலம் பாதிக்கப்பட்டு செலவுகள் வந்து சேரும்.

கடக ராசிபலன்

இன்று உங்களுக்கு ராசியான நாள். இன்று புத்துணர்ச்சியுடன் எந்த காரியத்தையும் செய்வீர்கள். சுப காரியங்களில் கலந்துகொள்வீர்கள்.

பணியிடத்திலும் வெற்றி கிடைக்கும். இன்று திருமண பேச்சுக்கள் நடைபெறும். பணபுழக்கம் இருக்கும். சேமிப்பில் ஈடுபடுவீர்கள்.

சிம்மம் ராசிபலன்

இன்று உங்களுக்கு ராசியான நாள். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியைத் தேடி தரும். எதிர்பாரா நன்மைகள் கிடைக்கும்.

பணி சம்பந்தமாக பயணம் செய்ய நேரிடும். மனைவியுடன் பேசும் போது கவனமுடன் பேசுங்கள். இல்லையெனில் வீண் சண்டை வந்து சேரும்.

தேவையற்ற செலவுகள் வந்து சேரும். அதிக செலவுகளால் சமாளிக்க முடியாமல் திணருவீர்கள். தொடை வலி போன்ற சிறு உபாதைகள் வந்து சேரும்.

கன்னி ராசிபலன் 

இன்றைய நாள் உங்களுக்கு ஏற்ற இறக்கங்களுடன் காணப்படும். மனதை தெளிவுடன் வைத்துக்கொள்வது அவசியம்.

பணிச்சுமை அதிகமாகும். அதில் நேரம் செல்விடுவதிலேயே குறிக்கோளாக இருப்பீர்கள். பணிச்சுமையால் சோர்வு, தலைவலி ஏற்படும். மனைவியுடன் வாதம் செய்ய நேரிடலாம்.

துலாம் ராசிபலன்

இது உங்களுக்கு உகந்த நாள் அல்ல. திட்டமிடலுடன் பணியாற்றுவது வெற்றியைத் தேடித்தரும். பொறுமையை இழக்க நேரிடலாம்.

நீங்கள் நினைத்த நேரத்தில் பணிகளை முடிக்கமுடியாமல் போகலாம். பணிகளை முடிக்க முன்கூட்டியே திட்டமிட வேண்டும். செலவுகள் வந்து சேரும்.

விருச்சிக ராசிபலன்

இன்று உங்களுக்கு முன்னேற்றமான நாள். உங்களின் புதிய முயற்சிகளுக்கு பாராட்டுக்கள் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

புதிய வேலை வாய்ப்புகள் தேடிவரும். சகோதர்களுடன் நட்பு பாராட்டுவது நல்லது. உங்கள் குடுபத்துடன் இன்று நேரத்தை செலவிடுவீர்கள்.

தனுசு ராசிபலன்

புத்திசாலித்தனத்துடன் பணிகளை மேற்கொண்டால் வெற்றி கிடைக்கும். ஒரு செயலை செய்வதற்கு முன் பலமுறை யோசிப்பது நல்லது.

வீட்டில் உங்கள் மனைவியுடன் வாக்குவாதம் ஏற்படும். செலவுகள் வந்து சேரும். கண் எரிச்சல், பல்வலி போன்றவை ஏற்படும்.

மகரம் ராசிபலன் 

இன்று சராசரி பலன்கள் கிடைக்கும். விரைவில் முடிவு எடுக்கவில்லை எனில் வருத்தப்பட நேரிடும். சக பணியாளருடன் வம்பு ஏற்பட வாய்ப்புண்டு.

பண இழப்பு ஏற்படும். கால் பகுதியில் வலி ஏற்பட வாய்ப்புண்டு. மனைவியுடன் நிம்மதியின்மை ஏற்படும்.

கும்ப ராசிபலன்

இன்று உங்களுக்கு மந்தமான நாள். பணி செய்வதில் சிக்கல் ஏற்படும். வெற்றிகிடைக்க திட்டமிடல் அவசியம்.

பணிகள் அதிகமாகும். மன உளைச்சல் ஏற்படும். துணையுடன் நெருக்குவதை தவிர்க்க வேண்டும். அஜீரணக்கோளறு ஏற்பட வாய்ப்பு உண்டு.

மீனம் ராசிபலன் 

உங்கள் விருப்பங்கள் நிறைவேறும் நாள். நீங்கள் எடுக்கும் முடிவுகள் உங்களுக்கு சாதகமானதாக இருக்கும்.

பணியிடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்தி மேல் அதிகாரியிடம் பாராட்டைப் பெறுவீர்கள். பணத்தை செலவு செய்வதில் புத்திசாலி தனத்துடன் செயல்படுவீர்கள்.

21/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

தோனிக்கு வாய்ப்பே இல்லை கவாஸ்கர் வருத்தம்

0

தோனிக்கு வாய்ப்பே இல்லை கவாஸ்கர் வருத்தம், தோனியை இந்திய அணி நிர்வாகம் மீண்டும் அணியில் சேர்க்க வாய்ப்பில்லை என நினைக்கிறேன் என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

மகேந்திர சிங் தோனி 2019ஆம் ஆண்டு உலகக் கோப்பைக்கு பிறகு எட்டு மாதங்களாக அணியில் தேர்வு செய்யாமல் இருந்து வருகிறார்.

வருகிற அக்டோபர் மாதம் 20 ஓவர் உலக கோப்பை தொடங்க உள்ள நிலையில் இந்திய அணியில் விக்கெட் கீப்பிங் சொதப்பி வருகிறது.

ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் சொதப்பி வருகிறார் மற்றும் பேட்டிங்கிலும் பெரிதாக சோபிக்கவில்லை.
அவருக்கு மாற்றாக கேஎல் ராகுல் தற்போது இந்திய அணிக்கு விக்கெட் கீப்பிங் செய்து வருகிறார்.

அவர் பேட்டிங் நன்றாக செய்தாலும் விக்கெட் கீப்பிங் பணிகளில் தோனிக்கு சமமாக ஈடுகொடுக்க முடியவில்லை.

இந்த ஆண்டு இந்திய அணியில் ஊதிய ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் டோனி பெயர் இடம்பெறவில்லை.
இனி தோனி வாழ்க்கை அவ்வளவுதானா என்று ரசிகர்கள் சிந்தித்து கொண்டிருக்கிறார்கள்.

வருகிற மார்ச் 29ஆம் தேதி ஐபிஎல் போட்டி தொடங்க இருந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ஐபிஎல் நன்றாக ஆடி அணியில் இடம் பிடித்து விடலாம் என்று எண்ணிய டோனிக்கு ஐபிஎல் தள்ளிப்போனது மிகப்பெரிய பின்னடைவு.

மகேந்திர சிங் தோனி யை குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவானான சுனில் கவாஸ்கர் கூறியதாவது:

தோனி இந்திய அணியில் மீண்டும் இடம் பிடித்து டி20 உலக கோப்பையில் பங்கேற்க வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பம். அதுதான் என்னுடைய விருப்பமும்.

இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பலம். ஆனால் தற்போதுள்ள சூழ்நிலையில் அவர் அணியில் இடம் பிடிப்பதற்கு வாய்ப்பே இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

தோனி அணியில் இல்லாமலேயே இந்திய அணி அவரை தள்ளி வைத்து கோலி தலைமையில் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டது.

நிர்வாகம் கூட டோனி அணியில் இடம் பிடிப்பதை பற்றி கொஞ்சம்கூட யோசிப்பதாக தெரியவில்லை. எனவே தோனி டி20 உலகக் கோப்பை இடம் பிடிப்பது மிகவும் கடினமே.

டோனி தனது ஓய்வு அறிவிப்பை விளம்பர படுத்த மாட்டார்,அமைதியாக ஓய்வு அறிவித்து விடுவார்.

என்று சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

3

ஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்

0
உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர்

ஜெயிலில் பிறந்தநாள் கொண்டாடும் உலகப்புகழ் பெற்ற கால்பந்து வீரர் ரொனால்டினோ பிறந்த நாள்

பிரேசில் நாட்டை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற ரொனால்டினோ போலியான பாஸ்போர்ட் பயன்படுத்தி பராகுவே பயணம் செய்ததால் கடந்த வாரம் கைது செய்யப்பட்டார்.

40 வயதான இவர் பிரேசில் நாட்டின் 2002ஆம் ஆண்டின் உலகக்கோப்பை வெற்றிக்கு வழிவகுத்தவர். மேலும் பார்சிலோனா, பிஎஸ்ஜி ஆகிய அணிகளுக்கும் விளையாடியுள்ளார்.

ரொனால்டினோ பிறந்த நாள்

அவர் பிறந்த தினம் இன்று அனால் ஜெயிலில் கொண்டாடும் நிலைமை ஏற்பட்டுள்ளது. விரைவில் அவரை அரசாங்கம் வெளியில் விடுவதாக தெரியவில்லை.

இன்னும் 6 மாதங்களுக்கு அவர் சிறைத்தண்டனையை அதிகரித்தது அந்நாட்டு அரசு. இதனால் சோகத்தில் மூழ்கிய கால்பந்து ரசிகர்கள்.

3

கொரோனா பயத்தால் மதுபானத்தை டோர் டெலிவெரி செய்ய வழக்கு தொடுத்த குடிமகன்கள்

0
கொரோனா பயத்தால் மதுபானத்தை

கொரோனா பயத்தால் மதுபானத்தை டோர் டெலிவெரி செய்ய வழக்கு தொடுத்த குடிமகன்கள்

கொரோனா பரவாமல் இருக்க கேரளாவில் மதுவை வீட்டில் டெலிவரி செய்ய வேண்டும் என தொடுத்த வழக்கை நிராகரித்த கேரளா உயர்நீதிமன்றம்.

இந்தியாவில் கேரளாவில் தான் முதலில் கொரோனா பாதிக்கப்பட்டது. தற்போது 27 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ்கள் உள்ளன. இந்தியா முழுவதும் 250க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாட்டும் இந்தியாவில் அதிகபட்சமாக 63 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து மக்கள் எங்கும் கூட்டம் கூட வேண்டாம் என அரசு அறிவித்தது.மதுக்கடைகள், பார்கள் ஆகியவை அடைக்கப்பட்டன.

இதனால் குடிமகன்கள் குடிக்காமல் இருக்க முடியாத காரணத்தால் இவ்வாறு வழக்கு தொடுத்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தாக்குதலில் மக்கள் அவதிபட்டு கொண்டு இருக்கும் காலகட்டத்தில் இப்படிப்பட்ட வழக்கினை தொடர்வது என்பது நீதித்துறையை கேலி கூத்தாக்குவதாக உள்ளது என்று கண்டனம் தெரிவித்தார்.

3

உலக காடுகள் தினம் 2020; மரங்களின் முக்கியத்துவம்

0
உலக காடுகள் தினம் 2020
உலக காடுகள் தினம் 2020

உலக காடுகள் தினம் 2020; மரங்களின் முக்கியத்துவம், மனித வாழ்க்கையில் மரங்களின் முக்கியத்துவம்

2012-ஆம் ஆண்டு யுனைடெட் ஜெனரல் நேஷனல் அசெம்ப்ளியின் ஆணைப்படி ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 21-ஆம் தேதி உலக காடுகள் தினம் (World Forest Day) கொண்டாடப்பட்டு வருகிறது.

கொண்டாட்டம் என்பது பண்டிகையப்போல அல்ல. காடுகள், காடுகள் சார்ந்த இடங்கள் மற்றும் வனப்பகுதிகளின் முக்கியத்துவத்தை எடுத்துணர்த்தும் ஒரு விழிப்புணர்வு நாளாக கொண்டாடப்படுகிறது.

1971-ஆம் ஆண்டு முதல் முறை 23-ஆம் ஐரோப்பியன் விவசாய மாநாட்டில் காடுகளைப் பற்றிய முக்கியத்துவத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு மார்ச் 21-ஆம் தேதி காடுகள் தினம் கொண்டாட முடிவு செய்யப்பட்டது.

இன்று நாம் வாழும் ஒவ்வொரு நகரங்களிலும் மரங்களுக்கு நாம் அதிக இடத்தை கொடுக்க வேண்டும். ஒவ்வொரு இடங்களையும் மனித வாழ்வதற்கு உகந்த தட்பவெப்ப நிலையை ஏற்படுத்த வேண்டும்.

மனித வாழ்க்கையில் மரங்களின் முக்கியத்துவம் 

  • மரங்கள் தட்பவெப்ப நிலையை தணிக்கும் தன்மை கொண்டது.
  • நகரங்களில் இருக்கும் மரங்கள் காற்று மாசுபாட்டை குறைக்கும்.
  • மேலும் இரைச்சல் அதிகமாக இருக்கும் இடங்களில் மரங்கள் இரைச்சலை குறைக்கும் தன்மை கொண்டது.
  • அதிக மரங்களை நகரங்களில் நடுவதன் மூலம் பசுமை நகரங்களாக மாற்றலாம்.
  • அதிக தண்ணீர் புலக்கத்திற்கும் நிலத்தடி நீரை சுத்திகரிக்கவும் இயலும்.

இவ்வாறு மரங்களின் முக்கியத்துவத்தை நாம் அடுத்த தலைமுறைக்கு உணர்த்துவதன் மூலமே பூமியை வாழும் இடமாக மாற்ற இயலும்.

3

மார்ட்டின் கப்தில் 237 உலககோப்பையில் அடித்த அடி; ரோஹித் ஜஸ்ட் மிஸ்

0

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து அணியின் மார்டின் குப்டில் உலக கோப்பையில் 237 ரன்கள் அடித்து உலக சாதனை படைத்த நாள் இன்று.

2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடைபெற்றது.

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெயில் 215 ரன்கள் அடித்து உலக கோப்பையில் ஒரு தனிநபர் அதிகபட்ச ரன் எடுத்தார்.

அவருடன் சாமியுல்ஸ் கூட்டணி அமைத்து இருவரும் சேர்ந்து 372 ரன்கள் எடுத்தனர். ஆனால் கெயில் அடித்த சாதனை ஒரு மாதம் கூட தாக்குப் பிடிக்க முடியவில்லை.

அதே உலகக்கோப்பையில் மார்ச் 21-ஆம் தேதி வெலிங்டனில் நடைபெற்ற கிறிஸ் கெயில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து களமிறங்கியது.

டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. கிறிஸ் கெயில் நான்தான் உலகக்கோப்பையில் அதிக ரன் அடித்த வீரர் என்ற பெருமையுடன் விளையாடிக் கொண்டிருந்தார்.

நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மார்டின் குப்டில் மற்றும் பிரண்டன் மெக்கல்லம் களமிறங்கினார்கள்.

மெக்குல்லம் 12 ரன்னில் வெளியேற அடுத்துவந்த வில்லியம்சன் 33 ரன்களில் அவுட்டானார். நான்காவது வீரராக களமிறங்கிய ராஸ் டைலர் உடன் மார்ட்டின் கப்தில் அதிரடியை தொடங்கினார்.

ராஸ் டெய்லர் பொறுமையாக 42 ரன்கள் எடுக்க குப்தில் பந்தை சிக்சரும் பவுண்டரியாக விளாசி தள்ளி சதம் அடித்தார்.

நியூசிலாந்தில் அடுத்தடுத்து விக்கெட் விழுந்தாலும் மார்ட்டின் கப்தில் விக்கெட்டை வீழ்த்த முடியவில்லை அவர் அதிரடியை தடுக்கவும் முடியவில்லை.

அதனால் மார்டின் குப்தில் சதத்தை இரட்டை சதம் ஆக மாற்றி உலக கோப்பையில் 2-வது வீரராக இரட்டை சதம் அடித்தார்.

முதல் ஓவரில் களமிறங்கிய மார்டின் குப்டில் இறுதி ஓவரில் கடைசி பந்து வரைக்கும் தன் விக்கெட்டை பறி கொடுக்காமல் வெஸ்ட் இண்டீஸின் பந்துவீச்சாளர்களை விளாசித் தள்ளினார் .

இதே உலக கோப்பையில் கிறிஸ் கெயில் 215 ரன்கள் எடுத்து உலக சாதனையாக இருந்தது. ஆனால் அந்த சாதனையை இந்தப் போட்டியில் மார்டின் குப்டில் முறியடித்து 237 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

173 பந்துகளை சந்தித்த மார்டின் குப்டில் 24 பவுண்டரிகளும் 11 சிக்சர்களை விளாசினார். இன்று வரை இதுவே ஒருநாள் போட்டி உலக கோப்பையில் தனிநபர் அதிகபட்சம் ஆகும்.

ஆனால் ஒருநாள் போட்டியில் இரண்டாவது அதிகபட்சமாகவும் இருக்கிறது. முதலிடத்தில் இலங்கைக்கு எதிராக ரோகித் சர்மா 264 ரன்கள் ஆகும்.

50 ஓவர்களுக்கு நியூசிலாந்து அணி 393 ரன்கள் 6 விக்கெட்டை இழந்து எடுத்தது.

நியூஸிலாந்து மார்ட்டின் கப்தில் போல் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடி வீரரான, உலககோப்பையில் தனிநபர் அதிகபட்சம் வைத்த கிறிஸ் கெயில் களமிறங்கினார். பெரிதாக இந்த போட்டி எதிர்பார்க்கப்பட்டது.

கிறிஸ் கெயில் வந்தவுடனேயே 8 சிக்ஸர்களும் இரண்டு பவுண்டரிகள், மொத்தம் 33 பந்துகளில் 66 ரன்கள் எடுத்தார்.

இவர் போகும் வேகத்தில் அவுட் ஆகாமல் இருந்திருந்தால் ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றிருக்கலாம். ஆனால் அடுத்த பந்தில் அவுட் ஆகி வெளியேறினார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ஓவர்களிலேயே 250 ரன்களை தொட்டது. ஆனால் என்ன செய்வது அனைத்து விக்கெட்டையும் இழந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 117 பந்துகள் மீதம் இருந்தன ஒருவேளை விக்கெட் இருந்திருந்தால், கெயில் அவுட்டாகாமல் விளையாடி இருந்தால், வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றிருக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

இந்த போட்டியில் நியூசிலாந்து பேட்டிங் செய்யும்போது மூன்று அல்லது நான்கு ஓவர்கள் இருந்திருந்தால் குப்டில் ஒருவேளை ரோஹித் சர்மாவின் மிகப்பெரிய உலக சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்திருக்கும்.

ரோகித் சர்மாவின் 264 மற்றும் மார்ட்டின் கப்தில் 237 ரன்கள் எடுத்த சாதனையை முறியடிப்பது கடினமான ஒன்று.

3

தோனியா? ரிஷப் பந்த்தா? பிசிசிஐக்கு வாசிம் ஜாபர் அட்வைஸ்

0

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் வாசிம் ஜாபர் தோனி மற்றும் ரிஷப் பந்த் பற்றி பிசிசிஐக்கு அட்வைஸ் கூறியுள்ளார்

இந்தியாவின் முன்னாள் டெஸ்ட் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்தியாவின் முதல் தர போட்டிகளில் ஜாம்பவானான வாசம் ஜாபர் கடந்த வாரம் ஓய்வு பெற்றார்.

2019ஆம் ஆண்டு நடந்து முடிந்த உலகக் கோப்பையில் விளையாடிய தோனி, அதன் பிறகு இந்திய அணியில் இடம்பெறவில்லை. தொடர்ந்து இடம்பெறாமல் இருந்ததால், அவரை பிசிசிஐ பெயர் பட்டியல் சம்பளத்தில் இருந்து நீக்கியது.

வருகிற அக்டோபர் மாதம் டி20 உலகக்கோப்பை போட்டி நடைபெற இருக்கிறது.

இந்திய அணி நியூசிலாந்தில்  சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டியை 5-0 கணக்கில் வென்றாலும், 3 -0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரையும், 2-0 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரையும் தோல்வி அடைந்தது.

அந்த தொடரில் கீப்பராக ரிஷப பந்துக்கு அதிக வாய்ப்பு அளிக்கப்பட்டது. ஆனால் தன்னுடைய மோசமான ஆட்டத்தால் முன்னாள் வீரர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சந்தித்தார்.

இதனால் அவருக்கு பதிலாக விக்கெட் கீப்பிங் பணியை கே எல் ராகுல் சிறப்பாக செய்து பிசிசி நன்மதிப்பைப் பெற்றது மட்டுமல்லாமல் ரிஷப பந்த் இடத்தை கேள்விக்குறி ஆகி விட்டார்.

தோனியின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்துவிட்டதா என்று பத்திரிக்கைகள் மற்றும் சமூக வலைதளங்களில்  அவ்வப்போது செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.

ஆனால் அதற்கெல்லாம் செவி சாய்க்காத தோனி இந்த ஐபிஎல்லில் தன்னை நிரூபித்து மீண்டும் அணியில் இடம் பிடிப்பார் என்று நம்பிக்கையில் இருக்கிறார்.

இதற்கிடையில் வாசிம் ஜாபர் நேற்று நிருபர்களை சந்திக்கும்போது
“கே எல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் இந்திய அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும். தோனியின் அனுபவம் கண்டிப்பாக இந்தியாவிற்கு தேவை.

அவர் பின் வரிசையில் இறங்குவதால் இந்திய அணிக்கு மிகப் பெரிய மாற்றத்தை தரும்.
தோனி விக்கெட் கீப்பிங் செய்யும் போது ஸ்டம்பிற்கு பின்னால் நிற்கும் போது என்றுமே அது ஒரு தனி பலம் தான்.

ஆகையால் கேஎல் ராகுல் மற்றும் ரிஷபக் பந்த் சேர்ந்து தோனியை ஆடும் லெவனில் ஆட வைக்க முடியும்.
கேஎல் ராகுல் தொடக்க ஆட்டக்காரராகவும்.

ரிஷபத்தை இடதுகை பேட்ஸ்மேனாகவும், தோனியை விக்கெட் கீப்பிங் மற்றும் பின் வரிசையிலும் கொண்டு இந்திய அணி களம் இறங்கலாம்” என்று கூறியுள்ளார்.

இந்திய அணியில் 2000ம் – 2007 ஆம் ஆண்டு வரை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சிறந்த வீரனாக விளங்கியவர் வாசிம் ஜாபர்.

31 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய இவர் 1946 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 212 ரன்கள் குவித்துள்ளார்.

ஐந்து சதங்களும், 11 அரை சதங்களும் இதில் அடங்கும்.

3

அச்சச்சோ இதெல்லாம் வதந்தி: அமலா பால் சொல்லல!

0
Amala Paul Marriage Fake News

Amala Paul Marriage; அச்சச்சோ இதெல்லாம் வதந்தி: அமலா பால் சொல்லல! இரண்டாவது திருமணம் நடந்ததாக வெளியான தகவல் வெறும் வதந்தி நடிகை அமலா பாலின் மேனேஜர் தெரிவித்துள்ளார்.

நடிகை அமலா பாலிற்கு திருமணம் (Amala Paul Second Marriage) நடந்ததாக வெளியாகி வரும் தகவல் வெறும் வதந்தியே என்று அவரது மேனேஜர் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஏ.எல்.விஜய்யை விவாகரத்து செய்த பிறகு நடிகை அமலா பால் குறித்து தொடர்ந்து தகவல் வெளியாகி வருவதும், அதற்கு விளக்கம் கொடுப்பதுமாகவே இருக்கிறது.

ராட்சசன் படத்தின் மூலம் அமலா பால், விஷ்ணு விஷால் இருவரும் பழகி வந்ததாகவும், இருவரும் காதலிப்பதாகவும் தகவல் வந்தது. ஆனால், இதற்கு இருவரும் அப்படி ஏதும் இல்லை என்று விளக்கம் கொடுத்தனர்.

தொடர்ந்து கேரளத்து நண்பரான அஜித் மேனன் என்பவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும், அவருக்கு அமலா பால் முத்தம் கொடுப்பது போன்ற புகைப்படமும் ஊடகங்களில் வைரலானது.

இதையடுத்து, கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரது அன்புதான் தன்னை மாற்றியதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், ஒரு குழந்தை பெற்றுக்கொண்டு, இன்னொரு குழந்தையை தத்தெடுக்கவும் ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

பெட்ரூம் வீடியோ வரைக்கு வெளியாயிடுச்சு; இனிமே வதந்தினா யார் நம்புவா?

வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில்தான் எப்போதும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் உணர்வதாகவும் அவர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் யாரை காதலிக்கிறார் என்பது குறித்து தெரிவிக்கவில்லை.

Amala Paul Second Marriage

இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு, பாலிவுட் பாடகரான பாவ்னிந்தர் உடன் நடிகை அமலா பால் வெளியில் சென்று வரும் புகைப்படங்கள் ஊடகங்களில் வைரலானது.

அவரைத் தான் காதலிக்கிறார் என்றும், விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் அப்போதே செய்தி வெளியானது.

இந்த செய்தி வெளியாகி ஒரு வாரத்திற்குள்ளாகவே பாவ்னிந்தர் மற்றும் அமலா பால் இருவரும் திருமணம் செய்து கொண்டதுபோன்று இருக்கும் புகைப்படத்தை பாவ்னிந்தர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

அவர் பதிவிட்டு சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவை நீக்கியுள்ளார். இந்த நிலையில், இந்த திருமண புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி அமலா பாலிற்கு திருமணம் ஆனதாக செய்திகள் பரவி வருகிறது.

இதற்கு அமலா பால் எந்த மறுப்பும் தெரிவிக்காத நிலையில், அவரது மேனேஜர் தரப்பிலிருந்து தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த திருமணம் பற்றி வரும் செய்தி தவறு. இது மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படம். இதை எதற்காக பகிர்ந்தார் என்று தெரியவில்லை.

திருமணம் அமலா பாலின் தனிப்பட்ட விஷயம். திருமணம் குறித்து பரவி வரும் செய்திக்கும், அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Amala Paul ties the knot with singer bhavninder singh is a fake news says her manager.

3

பொள்ளாச்சி சம்பவத்திற்கு எப்போ நீதி கிடைக்கும்? கார்த்தி கேள்வி!

0
Karthi Pollachi Case

Nirbhaya Case; பொள்ளாச்சி சம்பவத்திற்கு எப்போ நீதி கிடைக்கும்? கார்த்தி கேள்வி! டெல்லி சம்பவத்திற்கு நீதி கிடைத்துவிட்ட நிலையில், பொள்ளாச்சி சம்பவத்திற்கு நீதி கிடைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க இன்னும் எவ்வளவு காலம் ஆகுமோ தெரியவில்லை என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில், ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று 18 வயதுக்குட்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

முகேஷ் சிங் (32), வினய் சர்மா (26), அக்‌ஷய் தாக்குர் (31), பவன் குப்தா (25) ஆகிய 4 பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டை நிறைவேற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இது குறித்து நடிகர் கார்த்தி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: இறுதியாக 8 ஆண்டுகளைக் கடந்து நிர்பயாவுக்கு நீதி கிடைத்துள்ளது. பொள்ளாச்சி வழக்கில் நீதி கிடைக்க எவ்வளவு காலம் ஆகுமோ என்று யோசிக்கிறேன்.

ஏற்கனவே ஓராண்டு கடந்துவிட்டது. அந்த பொள்ளாச்சி சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொண்ட பாடத்தை மறந்துவிடமாட்டோம் என்று நம்புகிறேன். எப்போதும் பாதுகாப்பாக இருங்கள் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பொள்ளாச்சி சம்பவம் குறித்து கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். மற்ற நடிகர்கள், எப்போது இது குறித்து கேள்வி எழுப்பி நீதி கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது பலரது எதிர்பார்ப்பாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் நிர்பயா தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.

Actor Karthi questioned about when will getting justice for pollachi case?

3

கேரளா, ஆந்திரா, கர்நாடகா எல்லைகள் மூடப்படுகிறது – தமிழ்நாடு அரசு அறிக்கை

0
தமிழ்நாடு

சீனாவில் உருவான கொரோனா நோய் 100 நாடுகளுக்கு மேல் பரவி தற்போது இந்தியாவையும் அச்சுறுத்தி வருகிறது.

ஆகையால் மத்திய அரசும், மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதிலும் இந்தியாவில் முக்கியமாக தமிழ்நாடு சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கையாக பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்தியாவில் பல விமானங்களும், வெளிநாட்டு விமானங்களும் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அதிக மக்கள்தொகை கொண்ட நாட்டில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தும் கொரோனாவை கட்டுப்படுத்தி விரட்டி அடிப்பதில் தீவிரம் காட்டி வருகிறது.

கடந்த சில நாட்களாகவே தமிழ்நாடு அரசு பல முன்னெச்சரிக்கைகள் எடுத்துவருகிறது. தற்போது தமிழ்நாடு அரசு தொடர்புத்துறை மூலம் அறிக்கையை வெளியிட்டுள்ளது .

செய்தி மக்கள் தொடர்பு துறை இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் செய்தியின் 216.

கேரளா, கர்நாடகம் மற்றும் ஆந்திர பிரதேச மாநில எல்லைகளில் இணைக்கும் சாலைகள் கீழ் குறிப்பிட்டுள்ள வாகன போக்குவரத்து தவிர இதர போக்குவரத்திற்காக நாளை முதல் 31ம் தேதி புள்ளி 3புள்ளி 2020 வரை மூடப்படுகிறது.

இந்த சாலைகளில் கீழ்கண்ட வாகனங்கள் மட்டும் தமிழ்நாடு அனுமதிக்கும்.

  1. அத்தியாவசியப் பொருட்களான பால், பெட்ரோல், டீசல், காய்கறிகள், மருந்துகள், ஆம்புலன்ஸ், கேஸ் சிலிண்டர்கள் ஏற்றி வரும் வாகனங்கள்.

  2. இதர சரக்கு வாகனங்கள்.

  3. தவிர்க்க இயலாத காரணங்களான இழப்பு போன்ற காரணங்களுக்காக பயணிக்கும் பயணிகளின் இலகுரக வாகனங்கள்.

  4. பொதுமக்களின் அத்தியாவசிய நகர்வுக்கு மட்டும் குறைந்த அளவில் இயக்கப்படும் அரசு பேருந்துகள்

எனினும் இந்த வாகனங்களில் வரும் நபர்கள் அனைவரும் நோய்தடுப்பு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் வாகனங்களும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படும்.

நாட்டின் நலன் கருதி பொது மக்கள் அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

என்று அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது

ஆக பொதுமக்கள் சில நாட்களுக்கு கொரோனா நோயிலிருந்து தப்பிக்க மற்ற மாநிலங்களுக்கு பயணிப்பதே தவிர்ப்பது நல்லது. நாமே நம்மைக் காப்பாற்றிக் கொண்டால் மட்டுமே தான் இந்த நோயிலிருந்து தப்பிக்க முடியும்

3