Home Blog Page 207

ஜாக்பாட் அடிக்கும் ப்ரியா பவானி சங்கர்! அடுத்து இவரோட ஜோடி!

0
Priya Bhavani Shankar

Priya Bhavani Shankar; ஜாக்பாட் அடிக்கும் ப்ரியா பவானி சங்கர்! அடுத்து இவரோட ஜோடியா? நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகும் புதிய படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க ப்ரியா பவானி சங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து நடிகை ப்ரியா பவானி சங்கர் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார்.

காஞ்சனா 3 படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து காஞ்சனா 4 படம் வரும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், எப்போது என்று அறிவிப்பு இல்லை.

தற்போது பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமாரை வைத்து பாலிவுட்டில் லக்‌ஷ்மி பாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். பாலிவுட்டில் இது ராகவா லாரன்ஸின் முதல் படம். வரும் மே மாதம் திரைக்கு வரயிருப்பதாக கூறப்படுகிறது.

இப்படத்தைத் தொடர்ந்து, Five Star கதிரேசன் தயாரிக்கும் புதிய படத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த நிலையில் இப்படத்தில் ராகவா லாரன்ஸ்க்கு ஜோடியாக நடிக்க நடிகை ப்ரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே ராகவா லாரன்ஸ் ரங்கஸ்தலம் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கைப்பற்றி இருந்தார். ஒரு வேலை இது அந்த படமாக இருக்குமோ என்ற கேள்வி எழுந்தது.

ஆனால், ராகவா லாரன்ஸின் இந்தப் படத்தை வேறொரு இயக்குநர் இயக்க இருக்கிறார். அவர் குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை.

கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், ஏப்ரல் 2 ஆம் வாரத்திற்குப் பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக ப்ரியா பவானி சங்கர் நடிப்பில் மாஃபியா படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மாஃபியா 2 படமும் உருவாக இருக்கிறது.

ப்ரியா பவானி சங்கர் தற்போது கமல் ஹாசன் நடிக்கும் ‘இந்தியன் 2 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

Priya Bhavani Shankar Movie List:

மேலும், குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, பெல்லு சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக், துல்கர் சல்மானின் வான், அஹம் பிரம்மாஸ்மி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

கடந்த மாதம் பெல்லு சூப்புலு படத்தின் தமிழ் ரீமேக்கான ஓ மணப்பெண்ணே என்ற படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. இதில், ஹரிஷ் கல்யாண் உடன் இணைந்து நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஒரு புதிய படத்திலும் நடிக்கிறார். இப்படி வரிசையாக ப்ரியா பவானி சங்கருக்கு இந்த ஆண்டு ஜாக்பாட் அடித்துள்ளது.

3

அமேசான் ஓனர் Jeff Bezos எழு பில்லியன் டாலர்கள் அபேஸ்ஆனது : Coronavirus கைவரிசை

0
jeff bezos அமேசான் ceo
google images

அமேசான் ceo Jeff Bezos எழு பில்லியன் டாலர்களை இழந்தார் : Coronavirus effect

கொரோனா வைரஸ் தாக்கம் மனிதர்களுக்கு மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள சந்தைகளுக்கும் தான். இது அமேசான் jeff bezos ஐயும் பாதிக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

இந்தியா உட்பட உலகில் உள்ள அனைத்து பங்கு சந்தை கூடும் இந்த நேரத்தில் மூழ்கியுள்ளனர். சென்செக்ஸ் இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளது. இதே போன்ற செய்திகள் உலகம் முழுவதும் இருந்து வருகின்றன.

 CNBC அறிக்கையின்படி உலகின் பணக்காரரான ஜாஃப் பிசோஸ் ஒரே நாளில் ஏழு பில்லியன் டாலர்களை இழந்துள்ளார். பங்குச்சந்தையில் இந்த இயக்கம் காரணமாக அவரது செல்வம் 7 பில்லியன் டாலர் குறைந்துள்ளது. அறிக்கையின்படி இந்த காலகட்டத்தில் Jeff bezosன் சொத்துக்கள் 117 பில்லியன் டாலரிலிருந்து 110 பில்லியன் டாலராக குறைந்துள்ளது.

மற்றவர்களுக்கும் அதிர்ச்சி

இது ஜெஃப் பெசோஸ் க்கு மட்டுமல்ல மற்றவர்களுக்கும் அதிர்ச்சி தான். இது மட்டுமல்ல கடந்த மாதம் 18 மில்லியனை இழந்தார். அனைத்து அறிக்கைகளின்படி பங்குச்சந்தையில் இந்த இயக்கம் coronavirus காரணமாக வந்துள்ளது.

அமெரிக்காவில் உள்ள நான்கு பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் apple, amazon microsoft, alphabet க்கு மட்டும் 321 பில்லியன் டாலர்களை loss ஆகியது. இந்த நிறுவனங்களுக்கு ஒரே நாளில் இந்த இழப்புகள் ஏற்பட்டுள்ளன. தகவலின்படி Tesla தலைமை நிர்வாக அதிகாரி Elon Musk ஒரே நாளில் நாலு பில்லியன் டாலர்களை இழந்துள்ளார் .

சமீபத்தில் elon musk ஒரு ட்வீட்டில் coronavirus ஏற்பட்ட இந்த பீதி ஒரு குப்பை என்று கூறினார். அவர் என்ன நினைக்கிறார் மற்றும் செய்கிறார் என்பது வேறு விஷயம்.

ஆனால் தொழில்நுட்பம் நிறுவனங்கள் ஏற்படுத்திய தாக்கம் மகத்தானது என்பதை ஒருவர் ஒத்துகொள்ள வேண்டும். கிட்டத்தட்ட அனைத்து தொழில்நுட்ப நிறுவனங்களும் இந்த ஆண்டு ஒன்று அல்லது இரண்டு பெரிய நிகழ்வுகளை ரத்து செய்துள்ளன.

இந்த வைரஸ் காரணமாக விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் உள்ளன. ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே நிறுவனத்தின் வருவாயில் மோசமான விளைவை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. அதேநேரத்தில் மைக்ரோசாப்ட் இந்த வகை அறிகுறிகளையும் வழங்கியுள்ளது.

அமேசான் இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எதுவும் கூறவில்லை ஆனால் அதன் தாக்கம் நிறுவனம் மீது தெரியும் என்பது தெளிவாகிறது.

அமெரிக்காவில் உள்ள அனைத்து பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களும் வீட்டிலிருந்து தங்கள் ஊழியர்களுக்கு வேலைகளை வழங்குகின்றன. google sanfransisco மற்றும் newyork அலுவலங்களில் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அறிவுறுத்தியுள்ளது.

Apple தலைமை நிர்வாக அதிகாரி Tim Cook தனது ஊழியர்களுக்கு இதுபோன்ற memo அனுப்பியுள்ளார். coronavirus காரணமாக mobile world congress 2020 ரத்து செய்யப்பட்டுள்ளது .

3

அமலா பால் ரகசிய திருமணம்: வைரலாகும் 2 ஆவது கணவரின் புகைப்படம்!

1

Amala Paul; அமலா பால் ரகசிய திருமணம்: வைரலாகும் 2 ஆவது கணவரின் புகைப்படம்! அமலா பால் இரண்டாவது முறையாக திருமணம் செய்து கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அமலா பால் ரகசிய திருமணம்

அமலா பால் ரகசிய திருமணம் செய்து கொண்டார். மாப்பிள்ளை வேறு யாருமில்லை. அவர் ஒரு பாலிவுட் பாடகர்.

சிந்து சமவெளி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அமலா பால். ஆனால், இப்படம் அவரது கதாபாத்திரம் பற்றி பேசவில்லை.

பிரபு சாலமன் இயக்கத்தில் வந்த மைனா படத்தில் நடிகர் விதார்த் உடன் இணைந்து நடித்தார். இப்படம் அவரது கதாபாத்திரத்தில் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

சிறந்த நடிகைக்கான தமிழ்நாடு மாநில விருது, சிறந்த அறிமுக நடிகைக்கான விஜய் விருதும் அமலா பாலிற்கு கிடைத்தது.

இப்படத்தைத் தொடர்ந்து பல படங்களில் நடித்தார். இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் வந்த தெய்வ திருமகள் படத்தில் நடித்தார். இப்படம், அவரது வாழ்க்கையில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியது.

இப்படத்தின் போது இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், அமலா பாலிற்கும் இடையில் காதல் மலர்ந்தது. நாளடைவில் திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு இருவரது காதலும் வளர்ந்தது.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஜூன் 7 ஆம் தேதி கொச்சியில் உள்ள ஆலுவா பகுதியில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது.

இதையடுத்து, ஒரு வாரத்திற்குள்ளாக சென்னையில், உள்ள மேயர் ராமநாதன் செட்டியார் திருமண மஹாலில் இருவருக்கும் திருமணம் நடந்தது.

திருமணத்திற்குப் பிறகு அமலா பால் நடிக்கக் கூடாது என்பது ஏ.எல்.விஜய் வீட்டாரின் கண்டிஷன். இதை ஒப்புக்கொண்டு திருமணம் செய்த அமலா பால், நாளடைவில் படங்களில் நடித்தும் வந்துள்ளார்.

இதனால், ஏ.எல்.விஜய் குடும்பத்தாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து வந்த அமலா பால் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் விவாகரத்து பெற்றார்.

அதன் பிறகு ஆழ்ந்த மன வருத்தத்தில் இருந்த அமலா பால் தனிமையில், சில காலம் வெளிமாநிலங்களுக்கு சுற்றுலா சென்று வந்தார். அவ்வப்போது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இதற்கு இடைப்பட்ட காலத்தில் இயக்குநர் ஏ.எல்.விஜய்க்கும், மருத்துவரான ஐஸ்வர்யாவுக்கும் கடந்தாண்டு ஜூலை 11 ஆம் தேதி சென்னையில் திருமணம் நடந்தது.

ஏ.எல்.விஜய்யின் 2ஆவது திருமணத்திற்கு அமலா பால் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் ஒரு அருமையான மனிதர்.

இனிமையானவர். அவரது 2ஆவது திருமணத்திற்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள் என்று கூறியிருந்தார்.

கடந்தாண்டு ஜூலை 24 ஆம் தேதி, தான் ஒருவரை காதலிப்பதாகவும், அவரது அன்புதான் தன்னை மாற்றியதாகவும், விரைவில் அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும், ஒரு குழந்தை பெற்றுக்கொண்டு, இன்னொரு குழந்தையை தத்தெடுக்கவும் ஆசைப்படுவதாகவும் கூறியிருந்தார்.

வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில்தான் எப்போதும் பாதுகாப்பாகவும், அமைதியாகவும் உணர்வதாக தெரிவித்தார்.

இதற்கிடையில், விஷ்ணு விஷாலை காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் வந்தது.

தொடர்ந்து கேரளாவைச் சேர்ந்த அவரது நண்பர் அஜித் மேனன் உடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படமும், அவரை கட்டியணைத்து அவருக்கு முத்தம் கொடுக்கும் புகைப்படமும் வெளியானது.

இந்த நிலையில், தற்போது அமலா பால் ரகசியமாக திருமணம் செய்து கொண்டுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.

மும்பையைச் சேர்ந்த பாடகரான புவனிந்தர் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களை புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், பதிவிட்டு ‘Wedding Throwback’ என்று குறிப்பிட்டிருந்தார்.

புகைப்படங்களை பதிவிட்ட கொஞ்ச நேரத்திலேயே புவனிந்தர் சிங் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தையே நீக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இருவருமே கடந்த சில மாதங்களுக்கு முன்பாகவே திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அமலா பால் எந்த கருத்தும், பதிவும் பதிவிடவில்லை.

3

கொரோனா வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை சம்பவம் செய்த போலீஸ்

0
கொரோனா வதந்தி
ஹீலர் பாஸ்கர்

கொரோனா வதந்தி பரப்பிய ஹீலர் பாஸ்கரை சம்பவம் செய்த போலீஸ், ஹீலர் பாஸ்கர் ஆடியோவில் கூறியது

கொரோனா பற்றி ஒரு தவறான ஆடியோ வெளியிட்டதால் குனியமுத்தூர் போலீசால் அதிரடியாக கைது செய்யப்பட்டார் ஹீலர் பாஸ்கர்.

கொரோனா வைரஸால்  உலகம் முழுவதும் 2 லட்சத்திற்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10000க்கும் மேலான உயிர்பழியாகியுள்ளது.

ஹீலர் பாஸ்கர் ஆடியோவில் கூறியது

அவர் கூறுகையில் இது இலுமினாட்டிகளின் வேலை. சும்மா இருப்பவர்களை அதிகாரிகள் ஊசி போட்டு கொன்றுவிடுகிறார்கள். அரசு சொல்வதை கேட்க வேண்டாம் என கூறியிருந்தார்.

இது போன்ற ஆடியோக்கள் அதுவாகவே வைரல் ஆகும். இதையடுத்து ஹீலர் பாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத் துறை அதிகாரி புகார் அளித்தார்

இன்று தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

வீட்டிலேயே பிரசவம் பார்ப்பது எப்படி என்பது குறித்த ஒரு நாள் இலவச பயிற்சி முகாமை இவர் விளம்பரப்படுத்தியதை அடுத்து அவர் கடந்த 2018-ஆம் ஆண்டு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Coronavirus லிருந்து உங்கள் ஸ்மார்ட் போனை காப்பாற்றுங்கள்

0
coronovirus safety

Coronavirus லிருந்து உங்கள் ஸ்மார்ட் போனை காப்பாற்றுங்கள் | coronavirus safety tips

coronavirus mobile safety : உங்கள் தொலைபேசியுடன் நாள் முழுவதும் செலவழிக்கிறீர்கள், அதை மேசைகள், நாற்காலிகள், பொது பெஞ்சுகள், குளியலறை கவுண்டர்கள் மற்றும் இன்னும் மோசமான சில இடங்களில் நீங்கள் வைக்கின்றீர்கள்.

உங்கள் தொலைபேசியை உங்கள் குளியலறையிலும் எடுத்துச் செல்கிறீர்கள். இது தவிர நீங்கள் தொடர்ந்து உங்கள் சட்டைப் பையில் வைத்து இருக்கிறீர்கள் வானிலை அதிக வெப்பமாக இருக்கும் போது உங்கள் தொலைபேசியும் விரைவில் வியர்வை ஆகிறது. அதாவது உங்கள் வியர்வை பைகளில் வருகிறது.

அதன் பிறகு உங்களுடைய குழந்தைகள் அழுக்கான கைகளுடன் அந்த தொலைபேசியை எடுக்கிறார்கள் .

தொலைபேசி எளிதில் அழுக்காகி விடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக அவற்றை மீண்டும் சுத்தம் செய்வது எளிது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் உங்கள் தொலைபேசி எவ்வாறு சுத்தம் செய்ய வேண்டும் என்று உங்களுக்கு நான் சொல்ல போகிறோம் .

உங்களுடைய ஸ்மார்ட் போனை சுத்தம் செய்வதற்கு lizol அல்லது clorox ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்தவேண்டாம். உங்கள் ஸ்மார்ட்போனை கண்டிப்பாக சுத்தம் செய்ய பயன்படுத்த கூடாது. ஏனெனில் இவை உங்கள் தொலைபேசியை துடைப்பதற்கு சுத்தம் செய்வதற்கு சுலபமாக வழியாக தோன்றலாம், ஆனால் அது உண்மை இல்லை.

அதைத் தவிர்த்து வினிகர் மற்றும் ஆல்கஹால் மற்றும் சில மிகக் கடுமையான கிருமிநாசினி ரசாயனங்கள் மூலம் உங்கள் android தொலைபேசிகள் அல்லது ஐபோன்களில் front and back சுத்தம் செய்யலாம். ஆனால் அந்த ரசாயனங்கள் தொலைபேசி கண்ணாடி முன் பக்கத்தில் இருந்து வெகு தொலைவில் இருக்க வேண்டும் இல்லையென்றால் உங்களுடைய தொலைபேசி பின்னர் சேதம் அடையக்கூடும் .

உங்கள் தொலைபேசியை எவ்வாறு சுத்தம் செய்வது 

  • உங்கள் தொலைபேசியை உங்களுடைய கேஸ் கவரில் இருந்து வெளியே எடுக்கவும் .
  • இப்போது உங்களுடைய சிலிக்கான் அல்லது டிஷ்யூ மற்றும் சில பிளாஸ்டிக் போன்ற பாதுகாப்பான லேசாக இருந்தால் அதை நீங்கள் வெதுவெதுப்பான நீரில் கழுவலாம் மற்றும் நன்றாக உலரும் வரை அதை வெளிய வைக்கலாம் .

குறிப்பு :  உங்களுடைய மொபைல் கேஸ் சற்று விலை அதிகமாக இருந்தால் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட ஒரு கிளீனரை தேடுங்கள் .

  • நீங்கள் புதிதாக அந்த ஸ்மார்ட் போனை வாங்கி இருக்கும்பொழுது அந்தப் பெட்டிக்குள் கேட்டலாக் இருக்கும், அதில் அதை எப்படி சுத்தம் செய்யவேண்டும் என்று நிச்சயமாக இருக்கும் அதன்படி நீங்கள் சுத்தம் செய்யலாம் .
  • உங்கள் தொலைபேசி ஸ்பீக்கர், சார்ஜ் செய்யும் இடங்கள், வலப்பக்கம், இடப்பக்கம் இருக்கும் பட்டன்கள்,  இதுபோன்ற இடங்களை நீங்கள் ஒரு காட்டன் துணிகளை எடுத்து நேரம் கிடைக்கும் போது நீங்கள் அதை மெதுவாக துடைக்கலாம்.
  • நீங்கள் usb-c லைட்னிங் போர்டு ஆகியவற்றை துடைக்கும் போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அந்த மாதிரியான இடங்களை நீங்கள் பல் துலக்கும் பிரஷ் பயன்படுத்தி மெதுவாக துடைக்கலாம் .
  • ஒரு zeiss மொபைல் ஸ்க்ரீன் கிளீனரை எடுத்து அதைப் பயன்படுத்தி நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை துடைக்கலாம் .
  • நீங்கள் உங்களுடைய ஸ்மார்ட்போனை துடைத்த பின் ஏதேனும் கோடுகள் இருந்தால் அந்தக் கோடுகளை துடைக்க மைக்ரோ பைபர் துணியை பயன்படுத்தவும் ( துண்டு மற்றும் எம்ப்ராய்டரி துணிகளைப் பயன்படுத்த வேண்டாம் ).
  • ஸ்மார்ட் போன் மொபைல் கேஸ் நன்றாக உலர்ந்த பின்பு உங்களுடைய ஸ்மார்ட் போனை பழையபடி அந்த கேஸில் வைக்கலாம்.

உங்கள் ஹெட்போன் நீங்கள் பயன்படுத்தி விட்டால் அதை மறுமுறை பயன்படுத்தும்போது சுத்தம் செய்து பயன்படுத்தவும். ஏனெனில் அதிலிருக்கும் கிருமிகள் கூட உங்கள் காதின் வழியாக செல்லலாம்.

sanitizer மூலம் உங்களுடைய கைகளை அடிக்கடி கழுவுவதன் மூலம் உங்களுடைய திரையில் வியர்வை, எண்ணை, கிருமிகள் ஆகியவற்றை நீங்கள் தடுக்கலாம்.

அதேபோன்று மற்றவர்களிடத்தில் நீங்கள் உங்கள் தொலைபேசியை கொடுத்து விட்டால் அதை வாங்கும் பொழுதும் நீங்கள் அதை துடைத்துக்கொண்டு பயன்படுத்துங்கள் அப்போதுதான் coronavirus லிருந்து உங்களை பாதுகாக்கலாம். .

சிறந்த smartphone cleaner வாங்குங்கள்

3

டி.நகரை அதிர வைத்த தோனி; அடங்க மறு… திருப்பி அடி..

0
டிநகர் ரங்கநாதன் தெரு

டி.நகர் ஸ்டேடியம், தோனி கிரிக்கெட் விளையாட வருவாரா? கொரோனா பிரிமியர் லீக்!

டிநகர் ரங்கநாதன் தெரு-வில் இளைஞர் படையால் புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் உருவாக்கப்பட்டு உள்ளது. தோனியே வா.. என அழைப்பு விடுத்தது அதிரவைத்தனர் ரசிகர்கள்.

டிநகர் என்றால் ranganathan street saravana stores, absolute barbecue, coal barbeque, ags t nagar இப்படி தான் நாம் அதிகம் தேடிய இடங்கள் இருக்கும்.

டிநகர் ரங்கநாதன் தெரு

ஏய் லூசு பயலே உனக்கு என்ன மூளை கொழம்பி போச்சா என்று தானே கேட்கிறீர்கள். நிற்க கூட இடம் இல்லாத இடத்தில் எப்படி கிரிக்கெட் ஸ்டேடியம் கட்ட முடியும்.

‘தி லெஜென்ட்ஸ்’ அண்ணாச்சி ஸ்டேடியம் கட்டத்தான் விட்டுவிடுவாரா என அவரின் தம்பிகள் கொந்தளிப்பதை கூட என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.

டி.நகர் வணிக தளமாக நிற்க கூட இடம் இல்லாமல், அண்ணாச்சி கண்ட்ரோலில் இருந்தது எல்லாம் போன மாசம். நான் சொல்லுறது இந்த மாசம்.

இப்போ ரங்கநாதன் பேட்டை டேக் ஓவர் செய்தது தோனியின் படை. கொரோனா பீதியில் சென்னை மக்கள் வீட்டுக்குள் முடங்கிவிட்டனர்.

அண்ணாச்சி மட்டும் வெளியில் வருவாரா, வீடு முழுவதும் சானிடைசரை தெளித்துவிட்டு கும்புற படுத்து தூங்கிகொண்டு இருப்பார்.

மோடி உரை

பாரதப் பிரதமர் மோடி சீனாவை விட பெரிய சிலை என சர்தார் வல்லபாய் படேல் சிலை வைத்தார். நேற்று கொரோனா குறித்து உரையாற்றுவதாகச் சொன்னார்.

சரி சீனாவை முந்தும் வகையில் 5 நாளில் மருத்துவமனை ஒன்று கட்டுவோம் எனக் கூறுவார் என எதிர்பார்த்தால், பாக்கெட்டில் நயா பைசா இல்ல, தன்னார்வலர்களை வரவேற்கிறோம் எனக் கூறிவிட்டு சென்றுவிட்டார்.

பீதியிலும் பீதி முரட்டு பீதி

மோடி இப்படி பேசிய பின்பு தான் நாட்டு மக்கள் மேலும் பீதி அடைந்து உள்ளனர். கொரோனா வேற ரூபத்தில் பரவி வருகிறது.

இருப்பினும் தோனியின் இளம் கன்றுகள் பயமறியாது என்பதை போல, சென்னை முழுவதையும் கண்ட்ரோலில் எடுத்துவிட்டனர்.

அதில் ஒன்று தான் டி.நகர் ரங்கநாதன் தெரு. அங்கு திரளாகக் கூடி கிரிக்கெட் விளையாட துவங்கிவிட்டனர்.

இத்தனை நாள் வீட்டுக்குள் வீடியோ கேம் என முடங்கி கிடந்த நண்டு, சுண்டுகள் கூட கொரோனாவா? நாங்கலாம் மோமோ சேலஞ்சையே அசால்டா பண்ணிடுவோம்.

கொரோனோ என்ன பண்ணுதுன்னு பாத்திடுவோம்னு பாப்ஜி கேம்-யை விட்டு விட்டு தெருவில் இறங்கி கொரோனா வைரஸ் தெரிகிறதா என தேடத் துவங்கிவிட்டனர்.

பரிதாபத்தில் பெற்றோர்கள்

வீட்டில் இருந்து கொண்டு வேலை செய்யலாம் எனக் கோரியது தான் மிச்சம், வீட்டில் நிமிஷத்திற்கு டீ கேட்டு டார்ச்சர் செய்கின்றனராம் ஆண்கள்.

போத குறைக்கு தம் வேறு அடிக்க வேண்டும். வீட்டில் பலருக்கு தங்கள் பிள்ளை தம் அடிப்பது தெரியாது. இதை எப்படி சமாளிக்க போகிறார்களோ?

பள்ளியும் விடுமுறை, குழந்தைகளை சமாளிப்பதோ மிகவும் சிரமம், வீட்டில் எதையாவது உடைத்து விடுவார்கள் என தெருவில் விளையாட பலர் அனுமதித்துவிட்டனர்.

எங்க ஏரியா உள்ள வராத!

(saravana stores, absolute barbecue, coal barbeque, ags t nagar)

எங்க ஏரியா உள்ள வராத என்பது அண்ணாச்சி சரவணனுக்கு மட்டும் இல்ல, கொரோனா வைரசுக்கும் தான். தாங்கள் கட்டியுள்ள புதிய ஸ்டேடியம் டம்.. டும்.. டிங் என அதிர வைக்கும் அளவிற்கு அடித்து நொறுக்குகின்றனர்.

இன்னும் சில தினங்களில் வீட்டுக்குள் உட்கார்ந்து ஐபிஎல் பார்க்கும் பசங்களை வீதிக்கு வந்து ஸ்டேடியம் கட்ட வைத்து விட்டது கொரோனா.

ஐபிஎல் இல்லை என்றால் என்ன கொரோனா பிரிமியர் லீக் போட்டியில் வா தோனி… வந்து விளையாடு என கோரசாக சத்தம் கொடுக்கின்றனர்.

புதிய கிரிக்கெட் ஸ்டேடியம், தோனியின் காதுக்கு இது எட்டியதா எனத் தெரியவில்லை. இந்த செய்தி மூலம் எட்ட வைப்போம். சென்னையில் சின்ன சம்பவம் நடந்தாலும் அது தரமான சம்பவமாக தான் இருக்கும்.

3

7 நிமிஷத்துல சீரழித்தவர்களுக்கு 7 ஆண்டுக்குப் பிறகு தூக்கு: வரலட்சுமி சரத்குமார்!

0
Nirbhaya Case

Nirbhaya; 7 நிமிஷத்துல சீரழித்தவர்களுக்கு 7 ஆண்டுக்குப் பிறகு தூக்கு: வரலட்சுமி சரத்குமார்! நிர்பயா வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 4 பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

மருத்துவ மாணவி நிர்பயா (Nirbhaya) பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்ட வழக்கில் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்ட 4 பேருக்கும் இன்று காலை தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த 2012 ஆம் ஆண்டு டெல்லியில் (2012 Delhi Gang Rape), ஓடும் பேருந்தில், மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதில் ராம்சிங் என்பவர் சிறையிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அதே போன்று 18 வயதுக்குட்பட்ட ஒருவர் 3 ஆண்டுகளுக்குப் பின் விடுதலை செய்யப்பட்டார்.

முகேஷ் சிங் (32), வினய் சர்மா (26), அக்‌ஷய் தாக்குர் (31), பவன் குப்தா (25) ஆகிய 4 பேருக்கும் இன்று காலை 5.30 மணிக்கு தூக்குத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.

நிர்பயா வழக்கில் (Nirbhaya Case) குற்றவாளிகளுக்கு தூக்குத்தண்டை நிறைவேற்றப்பட்டதற்கு நாடு முழுவதும் உள்ள சமூக அமைப்புகள், மகளிர் அமைப்புகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில், சேவ் சக்தி என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

நிர்பயா பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்டு ஒரு போராளியாக உயிரிழந்தார். அவளுடைய வாழ்க்கையை சீரழிக்க 7 நிமிடத்திற்கும் குறைவான நேரம் எடுத்த போது, இந்த மிருகங்களை தூக்கிலிட 7 ஆண்டுகள் எடுத்துக் கொண்டது.

எப்போது இது போன்ற குற்றங்கள் நிகழ்கிறதோ அப்போதே அவர்களுக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று அவர் பதிவிட்டுள்ளார்.

3

இவர் ஒரு நாசா விஞ்ஞானி பாஸ்!

0
Jayam Ravi Bhoomi Movie

Jayam Ravi Bhoomi; இவர் ஒரு நாசா விஞ்ஞானி பாஸ்! பூமி படத்தில் ஜெயம் ரவி நாசா விஞ்ஞானி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக இயக்குநர் லட்சுமண் தெரிவித்துள்ளார்.

ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களைத் தொடர்ந்து ஜெயம் ரவி – இயக்குநர் லட்சுமண் கூட்டணியில் உருவாகியுள்ள 3ஆவது படம் பூமி.

ஜெயம் ரவிக்கு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும், சரண்யா பொன்வண்ணன், தம்பி ராமையா ஆகியோரும் முக்கிய ரோலில் நடித்துள்ளனர்.

இமான் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் சுஜாதா விஜயகுமார் தயாரித்துள்ளார்.

வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், இப்படம் குறித்து இயக்குநர் லட்சுமண் கூறியிருப்பதாவது: விவசாயத்தை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜெயம் ரவி செவ்வாய் கிரகத்தை ஆராய்ச்சி செய்யும் நாசா விஞ்ஞானியாக நடித்துள்ளார். ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள ஜெயம் ரவி ஒரு கட்டத்தில் தனது சொந்த ஊருக்கு திரும்புகிறார்.

தஞ்சாவூருக்கு வரும் ஜெயம் ரவி விவசாயத்தைக் காப்பாற்ற போராடுகிறார். விவசாயிகளின் பிரச்சனைகளையும், அவர்களுக்குரிய தீர்வையும் பூமி படம் விளக்கியுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

3

அழகிய தமிழ் மகன் அஜித்: விஜய் பெருமிதம்!

0
Ajith And Vijay Friendship

Ajith Vijay Friendship ; அஜித் – விஜய் நட்பின் விலைமதிப்பற்ற 5 முக்கியமான தருணங்கள்! விஜய் மற்றும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொள்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஆனால், அஜித், விஜய் இருவருமே நண்பர்களாகவே இருந்து வருகின்றனர்.

சினிமாவில் அறிமுகமான காலத்தில் இருந்து அஜித், விஜய் இருவருமே படங்களில் பிஸியாக நடித்து வருகின்றனர். ஆனால், போட்டியாக இல்லை.

இருவருமே நண்பர்களாகவே இன்றும் இருக்கின்றனர். ஒருவருக்கொருவர் மற்றவர்களை பெருமையாக பேசவும் செய்கின்றனர்.

ஆனால், அவர்களது ரசிகர்கள் ஏனோ தெரியவில்லை, ஒருவருக்கொருவர் வசைபாடி வருகின்றனர்.

அமராவதி

அமராவதி வெளியான முதல் நாள் மேட்னீ ஷோவில் அஜித் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா நின்று கொண்டிருந்த போது இளைஞர்கள் ஒரு சிலர் திரையரங்குகளுக்கு விரைந்தனர், அவர்களில் ஒருவர் முன் வந்து அஜித் குமாரை வாழ்த்தியதோடு தான் விஜய் என்று அவர் கூறியுள்ளார்.

நேருக்கு நேர்

இயக்குநர் வசந்த் இயக்கத்தில் விஜய், சூர்யா, சிம்ரன், கௌசல்யா ஆகியோரது நடிப்பில் வந்த படம் நேருக்கு நேர்.

கடந்த 1997 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்தப் படத்தில் விஜய் முதலில் அவரது நண்பரான அஜித்தை வைத்துதான் படப்பிடிப்பை தொடங்கியுள்ளார்.

ஆனால், சில நாட்கள் படப்பிடிப்பிற்குப் பிறகு சில காரணங்கள் காரணமாக அஜித் அந்தப் படத்திலிருந்து வெளியேறிவிட்டார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படம் கூட சமூக வலைதளங்களில் இன்னமும் உலா வருகிறது.

அழகிய தமிழ் மகன் – அஜித் தான்

இயக்குநர் பரதன் இயக்கத்தில் விஜய், ஸ்ரேயா ஆகியோரது நடிப்பில் வந்த படம் அழகிய தமிழ் மகன். இப்படத்தின் படப்பிடிப்பின் போது தனியார் ஆங்கில சேனல் ஒன்றிற்கு விஜய் பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், அஜித் போன்ற நடிகருக்கு அழகிய தமிழ் மகன் என்ற டைட்டில் பொருத்தமானதாக இருக்கும் என்று கூறியிருக்கிறார்.

அஜித் – பில்லா

கடந்த 2007 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வந்த படம் பில்லா. இப்படத்தின் பில்லா தீம் மியூசிக் வெளியான உடன் விஜய், அதனை உடனடியாக தனது செல்போனில் ரிங் டோனாக வைத்துள்ளார்.

இன்றும், இது பற்றி பலருக்கும் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது.

அஜித்துக்கு வாட்ச் கொடுத்த விஜய்

வேலாயுதம் மற்றும் மங்காத்தா படங்களின் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் நடந்தது. அப்போது அஜித், வேலாயுதம் படப்பிடிப்பில் இருந்த விஜய் மற்றும் அவரது படக்குழுவினரை சந்தித்து வாழ்த்து தெரிவிக்க அஜித் சென்றார்.

அங்கு சென்ற அவருக்கு விஜய் தனது நினைவுப்பரிசாக அஜித் கையில் வாட்ச் மாட்டிவிட்டார் என்று மங்காத்தா இயக்குநர் வெங்கட் பிரபு தெரிவித்தார்.

அது யாருக்குமே மறக்க முடியாத ஒரு நினைவாக இருந்தது என்றும் அவர் குறிப்பிட்டார்.

மாஸ்டர்: நண்பர் அஜித்

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது கோட் சூட் அணிந்து வந்த விஜய், தான் நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காகத்தான் இவ்வாறு வந்ததாக குறிப்பிட்டார்.

3

இத்தாலி கொரோனா; உயிரழந்தவர்களில் 99% பிற உடல் குறைபாடு கொண்டவர்களே

0
இத்தாலி கொரோனா
BOLOGNA, ITALY - MARCH 18: First AID in front of Sant'Orsola Hospital provided during the National quarantine on March 18, 2020 in Bologna, Italy. The Italian government continues to enforce the nationwide lockdown measures to control the spread of COVID-19. (Photo by Massimo Cavallari/Getty Images)

இத்தாலி கொரோனா; உயிரழந்தவர்களில் 99% பிற உடல் குறைபாடு கொண்டவர்களே

இத்தாலியில் கோரோனோவால் பாதிக்கப்பட்டோரில் 8 சதவிகிதம் பேர் உயிரிழந்தனர். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் அதிகம்.

இறப்பு எண்ணிக்கை 2500 தாண்டியதும் இது கடந்த வாரத்தை விட 150 சதவிகிதம் அதிகம் என்பதால் இந்த ஸ்டடி எடுக்கப்பட்டது.

இதில் இறந்தவர்களின் முந்தைய மருத்துவ ரிப்போர்ட்டை பார்க்கும் பொழுது மூன்று விதமான உடல் குறைபாடுகளை கொண்டுள்ளனர். இதில் 75% பேர் ரத்த அழுத்தமும் 35% பேர் சர்க்கரை நோயும் கொண்டிருக்கின்றனர்.

மீதமுள்ளோரின் பெரும்பாலோனோர் இதயம் தொடர்பான நோயும் கொண்டிருந்தனர்.  இறந்ததில் 99% பேர் இந்த மூன்று பிரச்சனை கொண்டுள்ளவர்களே.

உடல் ஆரோக்கியமாக இருக்கும் இளம்பருவ வயதுடையோர், நோய் எதிர்சக்தி அதிகமுள்ள பிறர் கொரோனாவை எளிதாக எதிர்க்கும் ஆற்றல் படைத்தோர்.

இதனால்  கொரோனாவை நினைத்து வீண் கவலை இன்றி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முயற்சியுங்கள்

3