Gypsy Rerelease; அச்சம் தவிர்ப்போம்….ஜிப்ஸியை பாதித்த கொரோனா வைரஸ்! ஜீவா நடிப்பில் வந்த ஜிப்ஸி படம் மீண்டும் மறுவெளியீடு செய்யப்பட இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஜிப்ஸி (Gypsy Rerelease) படம் மார்ச் 31 ஆம் தேதிக்குப் பிறகு மீண்டும் மறுவெளியீடு செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
குக்கூ மற்றும் ஜோக்கர் ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் வந்த மற்றொரு படம் ஜிப்ஸி. படத்தில், ஹீரோ ஜீவா ஊர் ஊராக சுற்றி தனது குதிரையை வைத்து சாகசம் செய்து வாழ்க்கையை கடந்து வந்தார்.
ஹீரோயின் நடாஷா சிங், ஒரு முஸ்லீம் பெண். இருவரும் காதல் வயப்படுகிறார்கள். ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொள்கிறார்கள்.
குழந்தை பிறக்கும் சமயத்தில் சில அரசியல் சூழ்ச்சிகளாலும், மதங்களாலும் ஜீவா சிறைக்குச் செல்கிறார்.
சில வருடங்கள் கடந்து திரும்பி வரும் ஜீவா, நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் தனது மனைவியை தேடி செல்கிறார்.
ஒருகட்டத்தில், நடாஷா குழந்தையோடு அவரது அப்பாவீட்டில் இருப்பதை கண்டு அங்கு செல்கிறார். ஆனால், நடாஷா வருவதற்கு மறுக்கிறார்.
இதையடுத்து, நடாஷாவின் அப்பா தனது மகளுக்கு முஸ்லீம் முறைப்படி விவாகரத்துக்கு முயற்சிக்கிறார். கடைசியில் அவருக்கு விவாகரத்து கிடைத்ததா? இல்லை இருவரும் சேர்ந்தார்களா? இல்லையா? என்பதுதான் கதை.
கடந்த 6 ஆம் தேதி வெளியான ஜிப்ஸி படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இரண்டு வாரமாக வெற்றிகரமாக திரையில் ஓடிக்கொண்டிருந்தது.
ஆனால், கொரோனா வைரஸ் பாதிப்பின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு மக்களின் நலன் கருதி வரும் மார்ச் 31 ஆம் தேதி வரை அனைத்து திரையரங்குகளையும் மூடும்படி உத்தரவு பிறப்பித்தது. இதன் காரணமாக ஜிப்ஸி படம் திரையில் இருந்து எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், தற்போது ஜிப்ஸி படக்குழு ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, வரும் 31 ஆம் தேதிக்குப் பிறகு ஜிப்ஸி தொடர்ந்து மறுவெளியீடு செய்யப்படும்.
அப்போதும், உங்களது பேராதரவை தந்து திரைப்படத்தை வெற்றியடைச் செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம். அச்சம் தவிர்ப்போம்…! விழிப்போடு இருப்போம்…! என்று ஜிப்ஸி படக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வந்த தாராள பிரபு படமும் மறுவெளியீடு செய்யப்பட்வதாக அறிவிக்கப்பட்டது.
Hiphop Tamizha Adhi; உங்களுக்கு வைரஸ் இருக்குனு நினைச்சுக்கோங்க: ஹிப்ஹாப் ஆதி! கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நடிகர் ஹிப் ஹாப் ஆதி டுவிட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.
உலகத்தையே அச்சுறுத்தி வருவது கொரோனா வைரஸ்தான். நோயெதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களை எளிதில் தொற்றக்கூடிய ஒரு வகை வைரஸ் கிருமிதான் இந்த கொரோனா வைரஸ்.
சீனாவில் ஆரம்பித்து தற்போது இந்தியாவின் பல மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இசையமைப்பாளரும், நடிகருமான ஹிப் ஹாப் ஆதி டுவிட்டரில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில், ஆமாம், COVID 19 கொரோனா வைரஸ் ஒரு அச்சுறுத்தல் தான். இந்தியாவின் பொருளாதாரம் மட்டுமல்ல, உலக நாடுகளின் பொருளாதாரமும் அடிவாங்கியிருக்கிறது.
ஆனாலும் 15 நாட்கள் அனைத்தையும் மூடுங்கள் என்று அரசு அறிவிப்பதற்கு என்ன காரணம். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால், இந்த கொரோனா வைரஸ்க்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை.
அப்போ நிலவேம்பு எதற்கு என்று கேட்டால், அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து கொரோனாவை உங்கள் அருகில் நெருங்கவிடாமல் இருப்பதற்குதான்.
இது எல்லாமே பாதுகாப்பு நடவடிக்கை மட்டுமேதவிர, இதுவரை கொரோனாவிற்கு மருந்து கண்டுபிடிக்கவில்லை. ஆனால், பயங்கர பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
ஆனால், வெளியில் யாரும் செல்ல வேண்டாம். ஒருவேளை நீங்கள் வெளியில் சென்று, கொரோனா உங்களை தாக்கிவிட்டால், அது உங்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதிக்கும். ஆகையால், கவனமாக இருக்க வேண்டும்.
உங்களுக்கு வைரஸ் இருப்பதைப் போன்று நடந்து கொள்ளுங்கள். அதுவே இப்போதைய சூழ்நிலையில், சிறந்த தந்திரம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Suriya Corona Virus Awareness; மோடியால் சூர்யா ஏமாற்றமா? மக்களை பாதுகாக்க வரும் 22 ஆம் தேதி அவர்களுக்கு துண்டு பிரசுரங்கள் மற்றும் பேஸ்மாஸ்க் கொடுக்க இருந்த சூர்யா, பிரதமர் மோடியின் அறிவிப்பால் ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (Corona Virus) இந்தியாவிலும் பரவி வருகிறது. இதன் காரணமாக பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
எனினும், மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா, தெலங்கானா ஆகிய மாநிலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
கொரோனா வைரஸ் காரணமாக, திரையரங்குகள், ஷாப்பிங் மால்கள் ஆகியவை மூடப்பட்டுள்ளன. சினிமா படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், சினிமா பிரபலங்கள் வீடியோக்கள் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகர் சூர்யா, வரும் 22 ஆம் தேதி கொரோனா வைரஸ் (Corona Virus) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், துண்டு பிரசுரங்கள் மற்றும் பேஸ்க் மாஸ்க் ஆகியவை விநியோகம் செய்ய திட்டமிட்டிருந்தார்.
கோயம்பேடு, எழும்பூர், சென்ட்ரல் ஆகிய இடங்கள் உள்பட சென்னையின் முக்கியமான 10 இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால், பிரதமர் மோடி நேற்று ஒரு அறிவிப்பு வெளியிட்டார். அதன்படி, வரும் 22 ஆம் தேதி காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்று அறிவித்தார்.
ஆனால், இந்த அறிவிப்பு ஒருநாளுக்கு மட்டுமா? இல்லை அதே நிலை அடுத்தடுத்த நாட்கள் தொடருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
எனினும், இந்த திடீர் அறிவிப்பால் தற்போது சூர்யா ஏமாற்றமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து, சூர்யா இதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருநங்கைகள் கால்பந்து அணி வரவேற்க தக்க தொடக்கம். இந்தியாவில் கால்பந்து என்றாலே நமக்கு நியாபகம் வருவது மணிப்பூர் தான். அங்கு திருநங்கைகளுக்கான கால்பந்து அணியைத் தயார் செய்து வந்தனர்.
முன்னரே 6 பேர் கொண்ட கால்பந்து போட்டி நடைபெற்றது. கடந்த பெண்கள் தினத்தன்று 7 நபர்கள் கொண்ட இரு அணியாக நட்பு போட்டி நடத்த பெற்றது.
இதன் மூலம் திருநங்கைகள் வாழ்வியலில் புது திருப்பங்கள் ஏற்பட்டுள்ளது. ‘யா ஆல்’ நிறுவனம் சதாம் ஹன்ஜபம் கூறுகையில், ”மத்திய அரசு திருநங்கைகளை அங்கீகரித்துள்ளது.
ஆனால், இன்னும் பல்வேறு விஷயங்களில் மாற்றம் தேவை. அனைத்து விளையாட்டிலும் திருநங்கைகள் பிரிவில் போட்டிகள் நடத்த வேண்டும்,” என்றார்.
Pakistan Corona; பாகிஸ்தானை பதம் பார்க்க ஆரம்பித்த கொரோனா
பாகிஸ்தானில் நேற்று வரை 435 உறுதிப்படுத்தப்பட்ட கொரோனா கேஸ்கள். போதிய மருத்துவசோதனை மையங்கள் தயாராக உள்ளன என அந்நாடு அரசு கூறியுள்ளது.
சீனாவில் ஆரம்பித்து உலகம் முழுவதும் இது வரை 160 நாடுகள் வரை பரவிய கொரோனா வைரஷால் இது வரை 9000 மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் நேற்று மட்டும் பாலோகிஸ்தான் பகுதியில் 23இல் 81ஆகா மாறிய கொரோனா நோயாளிகள். இதில் சிந்து பகுதியில் மட்டும் 245 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தீவிரமானதால் நேற்று இந்தியா-வாகா எல்லை போக்குவரத்தை தடை செய்தது பாகிஸ்தான். ஏற்கனவே ஆப்கானிஸ்தான் பகுதி போக்குவரத்தையும் தடை செய்தது.
International Day of Happiness 2020 theme; சர்வதேச புன்னகை தினம் 2020 தீம்
உலக புன்னகை தினம் உலகம் முழுவதும் மார்ச் 20ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. புன்னகை, சந்தோசம் போன்றவற்றை நம் அன்றாட வாழ்க்கையில் அடிக்கடி நாம் அனுபவிப்பது பற்றி இந்நாளில் அறிவுரை வழங்கப்படும்.
மேலும் தினமும் வேலைப் பளுவில் நம் இயற்வாழ்க்கையை மறந்து செயல்படுவோருக்கு இலவச அறிவுரைகளும் முகாம்களும் நடத்தப்படும்.
செய்யும் ஒவ்வொரு செயலிலும் சிறிய சிறிய சந்தோசத்தை எதிர்பார்ப்பதே இந்த நாளின் ஒரு நோக்கமாகும். அதன் பலனை அனைவரும் உணர வேண்டும்.
International Day of Happiness 2020 theme
ஒவ்வொரு சூழலிலும் பொறுமையாகவும், கடினமான சூழலில் திறனாகவும், எல்லா சூழ்நிலையிலும் அனைவரிடமும் அன்பாக செயல்படுவதே இதன் நோக்கமாகும்.
‘Happiness For All, Together’
2006ஆம் ஆண்டு ஜேம்ஸ் இல்லின் என்பவர் முதலில் இந்த ஐடியாவை கொண்டு வந்தார்.
இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம். தொடர்ந்து படியுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.
அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
நிர்பயா குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வக்கீல் பெயர் எ.பி.சிங். இவர் தன்னை ஒரு சிறந்த வழக்கறிஞராக கட்ட பெரும்பாடுபட்டார்.
கற்பழிப்பு வழக்கில் ஆதாரத்துடனும், குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்பும், தண்டனை அறிவிக்கப்பட்ட பின்பும் நான்கு பேரையும் தூக்கிலிடமுடியவில்லை.
தண்டனை கொடுத்த நீதிமன்றமே பலமுறை தள்ளிவைத்துவிட்டது. காரணம் எ.பி.சிங். கிமினல்களுக்கு உதவும் கிரிமினல் லாயர் கொடுத்த ஐடியா.
இத்தனையையும் தாண்டி இன்று காலை 5.30 மணிக்கு நிர்பயா குற்றவாளிகளை தூக்கிலிட முடிவு செய்யப்பட்டது.
நேற்று மட்டும் பல மனுக்களை பல்வேறு இடங்களில் தாக்கல் செய்யப்பட்டது. அத்தனையும் நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
இருப்பினும் எ.பி.சிங் விடிவதற்குள் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட செய்தி வர வேண்டும் தான் உலக அளவில் புகழ் பெற வேண்டும் என்ற சுயநலத்துடன் இரவு 2 மணிக்கு நீதிபதி வீட்டு வாசலில் நிற்கின்றார்.
பல்வேறு பொய்களை அடுக்கி எப்படியாவது தூக்கி நிறுத்தி வைக்கவேண்டும் என்ற முனைப்பில் செயல்பட்டு உள்ளார்.
உச்சநீதிபதி அனைவரும் ஏற்கனவே ஒன்று கூடி இந்த வழக்கில் இனிமேல் எந்த சலுகைகளும் வழங்க முடியாது என முடிவு செய்ததால் தூக்கு தண்டனை வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
வக்கீல் எ.பி.சிங் இந்தியாவில் உள்ள கிரிமினல்களுக்கு ஒன்று புரிய வைத்து விட்டார். நீங்கள் கொடுக்கும் காசுக்கு மேல் கூவுவேன் என்று.
நிர்பயாவை பலாத்காரம் செய்து கொன்ற இந்த நால்வருக்கும் தாங்கள் இந்த நாளில் இறந்துவிடுவோம் என நேரம் குறித்து அதை பல முறை மாற்றி பல சலுகைகள் கிடைத்து இறுதியில் இறந்துள்ளனர்.
ஆனால் நிர்பயா தான் உயிருக்கு போராடிய நேரத்தில் ஒவ்வொரு உறுப்புகளாக செயலிழந்து கொடூரமாக இறந்தார்.
அந்த பெண்ணின் இறப்பை இந்த வழக்கறிஞரால் தள்ளிப்போட முடியுமா? இவருடைய மகளாக இருந்தால் தனக்கு பணமும், புகழும் தான் முக்கியம் என இப்படி நடந்துகொண்டு இருப்பாரா?
இஃனஸ் செம்மேல்வெய்ஸ்; கை கழுவுவதின் மருத்துவ பயன்களை கண்டறிந்தவர், Dr. Ignaz Semmelweis
இன்று கூகிள் டூடுல் பக்கத்தில் 20 வினாடிக்கு கை கழுவுவது போல சிறிய காணொளி வரும் அத்துடன் ஒரு புகைப்படமும் வரும்.
இதில் கை எவ்வாறு கழுவ வேண்டும், எவ்வளவு நேரம், விரல்களை எப்படி உபயோகிக்க வேண்டும் என காட்டுவார்கள்.
அவர்தான் டாக்டர் இஃனஸ் செம்மேல்வெய்ஸ் (Dr. Ignaz Semmelweis) ஆவர். இந்த உலகத்திற்கு கை கழுவுதல் எவ்வளவு முக்கியம் அதனால் இவ்வளவு பயன்கள் இருக்கிறது என எடுத்துக்கூறியுள்ளார்.
Dr. Ignaz Semmelweis
1847ஆம் ஆண்டு இதே நாளில் வியானாவில் இருக்கும் தாய்மை மருத்துவமனையில் முதன்மை அதிகாரியாக பணி உயர்த்தப்பட்டார்.
அங்கு தான் முதலில் கை கழுவுவதின் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறினார்.
கூகிள் டூடுல் அவ்வப்போது உலகின் தலைசிறந்த நிகழ்வுகள் அல்லது தலைசிறந்த மனிதர்களின் பங்களிப்பை நமக்கு நினைவு கூறும் வகையில், அதனை பற்றிய கட்டுரைகள் கூகிள் பக்கத்தில் இடம்பெறும்.
இன்று அனைத்து செயல்களிலும் உற்சாகமாக இருப்பீர்கள். வேலை சிறப்பாக நடைபெறும். குடும்பத்தில் ஆனந்தம் நிறைந்திருக்கும். தன லாபம் அதிகமாக இருக்கும். ஆரோக்கியம் குறையில்லை.
உங்கள் செயல்திறனை அதிகப்படுத்தினால் வெற்றி நிச்சயம். பணி சம்மந்தமான பயணங்கள் இருக்கும். வீட்டில் மோதல்கள் வரலாம். பண வரவு சுமாராக இருக்கும். சளி சம்மந்தமான பிரச்சனைகள் இருக்கும்.
இன்று சில எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பதட்டத்தை குறைத்தால் நன்மை கிடைக்கும். அதிக பணிகள் காணப்படும். உறவில் விரிசல்கள் இருக்கும். பண இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு கவனமாக இருக்கவும். பல் வலி ஏற்பட வாய்ப்புண்டு.
சுக்ர பகவானிற்கு வெள்ளை வஸ்திரம் சாற்றி வழிபட நன்மைகள் உண்டு.
இன்று உங்களுக்கு சாதகமான நாளாகும். நண்பர்கள் மூலம் நன்மை கிடைக்கும். பணியிடத்தில் நட்புறவு மேம்படும். வீட்டில் அமைதி நிலவும். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.
இன்று பயணத்தினால் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உறவில் ஏற்ற தாழ்வுகள் காணப்படும். வங்கி கடன்கள் பெற ஏற்ற நாள். மன உறுதி தைரியம் சிறப்பாக இருக்கும்.
சப்த மாதர்களில் இந்திராணியை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.
இன்று உங்களின் நோக்கங்கள் நிறைவேறும். பணியில் பாராட்டுகள் கிடைக்கும். குடும்ப நலனில் அக்கறை காட்டுவீர்கள். நிதி நிலை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல்நிலை சிறப்பாக இருக்கும்.
இன்று நீங்கள் துடிப்புடன் இருப்பீர்கள். பணி சம்மந்தமான பயணங்கள் இருக்கும். கணவன் மனைவி இடையே நல்ல புரிந்துணர்வு இருக்கும். தொழில் லாபகரமான இருக்கும். ஆரோக்கியம் மேம்படும்.
இன்று உங்களின் சுய வளர்ச்சி நன்றாக இருக்கும். பணியிடத்தில் சீரான பலன்கள் இருக்கும். வீட்டில் மகிழ்ச்சிகரமான சூழல் இருக்கும். எதிர்பாராத தன வரவு உண்டு. உடல் உற்சாகமாக இருக்கும்.
இன்று பொறுமையாக இருக்க வேண்டிய நாள். பதட்டத்தை தவிர்க்கவும். பணியில் கவனமாக இருக்கவும். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்காது. அதிக செலவுகள் காணப்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
சுக்ர பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் கிடைக்கும்.
இன்று சமமன நாளாக இருக்கும். தொழில் செய்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். குடும்பத்தில் அன்பும் நல்லிணக்கமும் இருக்கும். பொருளாதாரம் மேம்படும். சளி பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புண்டு.
இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். சுப காரிய பேச்சுகளை தள்ளி போடவும். பணிசுமை அதிகமாக இருக்கும். குடும்பத்தில் அனுசரணை தேவை. செலவுகள் அதிகமாக இருக்கும். கால் வலி, அல்லது தொடை வலி ஏற்பட வாய்ப்புண்டு.
சிவ பெருமானை விளக்கேற்றி வழிபட துன்பங்கள் குறையும்.
இன்றைய நாள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். பணி திருப்தியாக முடிவுகளை எட்டும். காதலில் வெற்றி கிடைக்கும். வீட்டில் அன்பு மேம்படும். பண புழக்கம் அதிகமாக இருக்கும். மகிழ்ச்சி மற்றும் உற்சாகமாக இருப்பீர்கள்.
அம்பிகையை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.
20/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.
1992 ஆம் ஆண்டு வெளியான படம் ரோஜா,
அதில் இருந்து கிடைத்தவர் தான் நம் இசையின் ராஜா ஏ ஆர் ரகுமான்.
25வது வயதில் அறிமுகமான ஏ ஆர் ரகுமான் முதல் படத்திலேயே தேசிய விருதை தட்டிச் சென்றார்.
அன்றிலிருந்து இன்றுவரை இசையின் சாம்ராஜ்யமாக தமிழில் வலம் வந்து கொண்டிருக்கிறார்.
ஓ காதல் கண்மணி,மெர்சல், அச்சம் என்பது மடமையடா, பிகில் போன்ற படங்களால் இன்றும் இளைஞர்கள் மத்தியில் சிங்க நடை போட்டுக் கொண்டிருக்கிறார்.
ஐம்பது வயது இளைஞன்
வயதும் ஐம்பதைக் கடந்து விட்டது ஆனால் இன்றும் இளைஞர்கள் மத்தியில் அவர் இளைஞனாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
மக்களின் நன்மதிப்பையும், இசையில் மக்களின் மனதில் தனக்கென ஒரு இடமும் பதித்து கொண்டவர்தான் ஏ ஆர் ரகுமான்.
படம் நல்லா இருக்குமோ? இல்லையோ?, படம் ஓடுமா? ஓடாதா? என்று தெரியாது ஆனால் படத்தின் பாடல்கள் 100% வெற்றி பெறும் நம் ஏ ஆர் ரகுமான் இசையமைத்தார் என்றால்.
அனிருத் வருகை
ரஜினிகாந்த் மற்றும் தனுஷின் சொந்தக்காரர் என்று மிகப்பெரிய பின்புலத்தில் 2011 ஆம் ஆண்டு சினிமாவில் அடியெடுத்து வைத்தவர் தான் அனிருத்.
தனது பின்புலத்தை பயன்படுத்தாமல் தன் உழைப்பாலும், தன் இசையாலும் இன்று இளைஞர்கள் மத்தியில் மிகப் பெரிய இசைக் கலைஞனாக வளர்ந்து கொண்டிருக்கிறார்.
ஒய் திஸ் கொலவெறி
தனது 21ஆவது வயதில் தனுஷ் மற்றும் சுருதிஹாசன் நடித்து ரஜினியின் மகளான ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான படம்தான் 3.
3 படம் வெளியாகும் முன்பே முதல் பாடல் வெளியானது. அந்த பாடல் தான் “ஒய் திஸ் கொலவெறி” பாட்டு, வெளியான உடனேயே உலகம் முழுவதும் இந்த பாடல் ஒலிக்கத் தொடங்கியது.
யூடியூப்பில் அதிக பார்வையாளர்களை கடந்து இந்தியாவை திரும்பிப் பார்க்க வைத்தது. அன்றைய பிரதமர் மன்மோகன் சிங்குடன் தனுசை விருந்து சாப்பிட அழைத்தது இந்த பாடல் தான்.
3 படம் சரியாக ஓட வில்லை ஆனால் பாடல்கள் அனைத்தும் பட்டிதொட்டியெங்கும் பரவியது.
எதிர்நீச்சல், டேவிட், வணக்கம் சென்னை, இரண்டாம் உலகம், மான் கராத்தே போன்ற படங்களின் பாடல் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று அனிருத் தனக்கென இசையமைப்பாளர்களில் ஒரு இடத்தைப் பிடித்தார்.
அம்மா அம்மா பாடல்
அடுத்து வெளியான வேலையில்லா பட்டதாரி, அந்த படத்தில் அனைத்து பாடல்களும் மிகவும் அருமையாக அமைந்தது.
குறிப்பாக ‘அம்மா அம்மா’ பாடல் இன்றும் அம்மாவை போற்றும் பட்டியலில் முன்னிலையில் வரும்.
அடுத்ததாக அனிருத்துக்கு அடித்தது ஜாக்பாட்.
கத்தியில் விஜய்யுடன்
முருகதாஸ் மற்றும் விஜய் கூட்டணியில் முதல் திரைப்படம் துப்பாக்கி, மிகப்பெரிய வசூல் சாதனை அடைந்தது மீண்டும் இதே கூட்டணி கத்தி எனும் படத்தில் இணைந்தது.
இதில் இசை அமைப்பாளராக அனிருத் தேர்வு செய்யப்பட்டார். பாடல்கள் அனைத்தும் தரமாகவும் விஜய்க்கு ஏற்றதாகவும் வெளுத்து உள்ளே புகுந்து விளையாடிருப்பார் அனிருத்.
ஹிப்ஹாப் தமிழா விற்கு தமிழில் முதலில் வாய்ப்பு தந்ததும் நம் அணிருத் அவரை கத்தி படத்தில் விஜய்க்கு முதல் பாடலை பாட வைத்து பாடலை ஹிட் ஆக்கினார்.
‘செல்ஃபி புள்ள’, ‘ஆத்தி என நீ’ போன்ற பாடல்கள் படத்தில் மிகவும் அருமையாக அமைந்தது பிறகு அனிருத்தின் இசை வாழ்க்கை வெற்றியின் திருப்புமுனையே.
அடுத்தடுத்து காக்கிச்சட்டை, நானும் ரவுடிதான், மாரி போன்ற படங்களுக்கு இசையமைத்து அஜித்தின் வேதாளம் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பை பெற்றார்.
ஆலுமா டோலுமா
படத்தில் இடம்பெற்ற ‘ஆலுமா டோலுமா’ பாட்டு தமிழகத்தின் மூலை முடுக்கெல்லாம் வெற்றி பெற்று இளைஞர்கள் மத்தியில் பாடலைக் கேட்டாலே நடனம் ஆடும் அளவிற்கு வரவேற்பைப் பெற்றது.
ரெமோ, விவேகம், தானா சேர்ந்த கூட்டம், கோலமாவு கோகிலா போன்ற படங்களுக்கு இசை அமைத்து தன் வளர்ச்சியை மேலும் மேலும் மெருகேற்றினார்.
சிம்புவுடன் ஒரு பாடலில் சர்ச்சை, வீடியோக்கள் மூலம் பல சர்ச்சை, முத்தங்கள் சர்ச்சை என பல சர்ச்சைகளில் சிக்கினார்.
பேட்ட, தர்பார்
நீண்ட இடைவெளி எடுத்துக்கொண்டு மீண்டும் ரஜினியின் பேட்ட படத்திற்கு இசையமைத்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் தாறுமாறாக ஹிட்டடித்து ரஜினியை இளமையாக்கியது.
மீண்டும் ரஜினியுடன் கூட்டணி அமைத்து தர்பார் படத்தில் விளையாட்டை காட்டினார் அனிருத். பாடல்கள் அனைத்தும் வெற்றி பெற்றது படமும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
விஜய்யுடன் மீண்டும் இணைவாரா என விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில்தான் மாஸ்டர் படம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பதாக உறுதியானது.
அதில் இசையமைப்பாளராக அனிருத்தும் இணைந்து கொண்டார்.
‘3’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சொந்தக்காரராக அறிமுகமான அனிருத், உலக அளவிற்கு வளர்ந்து ரஜினியின் பெயரை காப்பாற்றி தனக்கென ஒரு இடத்தையும் பெற்றுக் கொண்டார்.
பல இசையமைப்பாளரின் படங்களின் பாடல்களைப் பாடி, தான் ஒரு பின்னணி பாடகர் என்றும் ரசிகர்கள் மத்தியில் தன்னை நிரூபித்துக் கொண்டார்.
அனிருத், ஏ ஆர் ரகுமான் அளவிற்கு வர முடியுமா என்று கேட்டால்? அன்றைய காலகட்டத்தில் இது போன்ற சமூக வலைதளங்கள் கிடையாது. அந்த காலக்கட்டத்தில் ஒரு சிலர் வீட்டில் மட்டுமே டிவி இருந்தது.
அப்போதே ஆர் ரகுமான் வெற்றி பெற்று உலக அளவில் பிரபலம் ஆனார்.
இன்று அணிருத் போடும் இசையை நாம் அதிநவீன புது தொழில்நுட்பத்துடன் கேட்கும் கருவி வந்துவிட்டது.
ஆனால் ஏ ஆர் ரகுமான் காலத்தில் அப்படி கிடையாது ரேடியோ, இல்லையென்றால் என்றாவது ஒளியும் ஒலியும் போன்று நிகழ்ச்சிகள்தான் ஏ ஆர் ரகுமான் பாடலை கேட்கவே முடியும்.
ஏ ஆர் ரகுமான், ஏ ஆர் ரகுமான் தான். அனிருத் இன்னும் வளர வேண்டிய தூரம் நீண்டதூரம் உள்ளது. ஆனால் அனிருத்துக்கு என்று தமிழ் மக்கள் மனதில் ஒரு இடம் உண்டு