Home Blog Page 209

எனக்கு கல்யாணமா? யார் சொன்னது? கொந்தளிக்கும் ஹரிஷ் கல்யாண்!

0
Harish Kalyan Marriage Plan

Harish Kalyan Marriage Plan; எனக்கு கல்யாணமா? யார் சொன்னது? கொந்தளிக்கும் பிக் பாஸ் நடிகர்! இன்னும் 2,3 ஆண்டுகளுக்கு தனக்கு திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த ஐடியாவும் இல்லை என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் தெரிவித்துள்ளார்.

தனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் ஐடியா இல்லை என்று நடிகர் ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) தெரிவித்துள்ளார்.

ஹரிஷ் கல்யாண் நடிப்பில் தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றன.

விந்து தானத்தை மையப்படுத்தி வெளியான தாராள பிரபு மீண்டும் திரைக்கு வர இருக்கிறது. பாலிவுட்டில் வந்த விக்கி டோனர் என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வந்துள்ளது.

பெண் ரசிகைகள் உள்பட ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார் ஹரிஷ் கல்யாண்.

சமீபத்தில் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டியளித்த ஹரிஷ் கல்யாண் (Harish Kalyan) கூறியிருப்பதாவது: ரசிகர்களுடன் அன்பை பகிர்ந்து கொள்வதிலும் நான் தாராள மனிதன் தான்.

இருப்பினும், தனக்குத்தானே புகழ்ந்து கொள்ள முடியாது. நன்றாக நடித்துள்ளீர்கள் என்று ரசிகர்கள் கூறும்போது மிகவும் சந்தோஷமாக இருக்கும் என்றார்.

மேலும், எனக்கு இப்போதைக்கு திருமணம் செய்து கொள்வது பற்றி எந்த எண்ணமும் இல்லை. இன்னும் 2,3 ஆண்டுகள் கழித்த பிறகு தான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும்.

கொரோனா வைரஸ் காரணமாக படங்களின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதலிருந்து தொழில் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், வைரஸிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியம்.

பெரும்பாலான இடங்களில் ஷாப்பிங் மால்கள் மூடப்பட்டுள்ளன. ஆதலால் வெளியில் எங்கும் செல்லாமல், நானும், எனது குடும்ப உறுப்பினர்களும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கிறோம்.

கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க, அனைவரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

ஏதேனும் அறிகுறிகள் தோன்றினால், உடனே அரசு அறிவித்துள்ள உதவி எண்களை பயன்படுத்த வேண்டும் என்று ஹரிஷ் கல்யாண் அறிவுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா விழிப்புணர்வு; எது கொடியது – வைரஸா? வதந்தியா?

0
coronavirus awareness

coronavirus awareness 2020 | கொரோனா விழிப்புணர்வு :  எது கொடியது வைரஸா? வதந்தியா?

coronavirus awareness 2020 : உலகத்தில் உடனுக்குடன் செய்திகளையும், கருத்துக்களையும், வதந்திகளையும், பகிர சமூக வலைதளங்கள் சுமுகமாக பயன்படுகிறது.

இதில் முக்கியமாக வதந்திகளை உடனுக்குடன் பகிர்வதில் நாம் மக்கள் யோசிப்பதே இல்லை

‘நான் எப்படா அப்படி பண்ணேன்னு’ கொரோனாவே யோசிக்கும் அளவுக்கு நம் மக்களில் ஒரு சிலர் வேண்டாத வதந்தியை பரப்பி வருகிறார்கள்.

இதனால் பாதிப்படைவது நாமும் நம் நாட்டு மக்களுமே என்பதை உணராமல் தவறான செய்திகளை பரப்பி வருகிறார்கள்.

உங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் தேவையில்லாத வதந்திகளை பரப்பும் பக்கங்களை பின் தொடர்வதை இன்றிலிருந்து நிறுத்தி தவிர்த்துக் கொள்வது நோயை விட மிகவும் நல்லது.

இன்னும் coronovirus  நோய்க்கு தடுப்பு மருந்து, குணமாக்கும் மருந்து இன்னும் அதிகாரப்பூர்வமாக கண்டுபிடிக்கவில்லை.

தமிழரின் பாட்டி வைத்தியம் இஞ்சி, பூண்டு, புதினா, கொத்தமல்லி போன்ற சில லேகியங்களை அரைத்து குடித்தால் சரியாகிவிடும் என்று சிலர் வீடியோக்களில் பரப்பி வருகிறார்கள்.

தயவு செய்து அதையெல்லாம் தவிர்க்கவும். நமக்கு அந்த நோய் அண்டாமல் இருக்க நம்மை நாமே சுத்தமாக வைத்துக் கொண்டு வெளியில் கூட்டமாக கூடுவதை தவிர்க்கவும்.

இந்த நாட்டில் இத்தனை இழப்பு, அந்த நாட்டில் அத்தனை இழப்பு, இந்த நாட்டில் இத்தனை பேர் பாதிக்கப் பட்டுள்ளார்கள், அந்த நாட்டில் அத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறி செய்திகளைச் சொல்லும் யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற வலைதளங்களில் உள்ள பக்கங்களை கண்டிப்பாக தவிர்க்கவும்.

நாம் முதலில் மன தைரியத்துடன் இருந்தால் மட்டுமே எதையுமே எதிர்கொள்ள முடியும்.

கோழி சாப்பிட்டால் கொரோனா வரும், மீன் சாப்பிட்டால் கொரோனா வரும் என்று சொல்பவர்கள் பேச்சை கண்டிப்பாக தவிர்க்கவும்.

மக்கள் தொகையில் இரண்டாமிடம் உள்ள இந்தியா மற்றும் நாட்டை காட்டிலும் பாதிப்புகள் மிகவும் குறைவே. அதுவே நமக்கு மிகப்பெரிய பலம்.

நம்முடைய மருத்துவர்களும் செவிலியர்களும் கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் இவ்வேளையில் வீண் வதந்திகளை நம்பி மற்றவர்களிடம் குரலில் பேசுவதை

இதில் மிக முக்கியமான ஒன்று நம்மூரில் பாதிக்கப்படாத ஒருவரை நோய் பாதித்துவிட்டது என்று நாமலே நம்பி மற்றவருடன் பகிர்வதை முதலில் தவிர்த்துக் கொண்டாலே வதந்திகள் பரவுவதை தடுக்கலாம்.

3

அய்யோ அது நான் இல்ல: டிக் டாக் இலக்கியா பரபரப்பு புகார்!

0
Tik Tok Elakkiya

Tik Tok Elakkiya; அய்யோ அது நான் இல்ல: டிக் டாக் புகழ் இலக்கியா புகார்! டிக் டாக் மூலம் பிரபலமான இலக்கியா சென்னை போலீஸ் கமிஷனர் அலுவகலத்தில் புகார் அளித்துள்ளார்.

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு சென்றவர்கள் எத்தனையோ பேர். இவ்வளவு ஏன், யூடியூப் மூலம் வெள்ளித்திரையில் கால்பதித்தவர்களும் இருக்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது தற்போது டிக் டாக் மூலம் பலரும் டிரெண்டாகி அதன் மூலம் சினிமா வாய்ப்பு பெற்று வருகின்றனர்.

அந்த வகையில், டிக் டாக் மூலம் பிரபலமானவர்கள் எத்தனையோ பேர் இருக்க அதில் முக்கியமானவராக இருப்பவர் இலக்கியா.

ஆடல், பாடல் பற்றாக்குறைக்கு கிளாமர் உடை என்று இவர் போடும் ஆட்டத்திற்கு அளவே இல்லை. அதோடு லைக்ஸும், ஷேரும் சொல்லவே வேணாம்.

அந்தளவிற்கு பிரபலமாகி வருகிறார். ஆனால், அதுவே அவருக்கு வினையாகி வருகிறது.

ஆம், இலக்கியா என்ற பெயரில் போலி கணக்குகள் தொடங்கி அதன் மூலம், ஆசை வார்த்தை கூறி பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது குறித்து அறிந்த இலக்கியா அது நான் இல்லை என்று கூறி, சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் சினிமா செய்திகளுக்கு:நல்ல மாணவர்களை சமுதாயத்தில் உருவாக்குவேன்: ஒரு ஆசிரியரின் சபதம்!

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்து அவர் கூறியிருப்பதாவது: டிக் டாக்கில் எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கியுள்ளனர். அதை தவறாக பயன்படுத்தி பணம் வசூலித்ததாகவும் தன் மீது குற்றம் சாட்டியுள்ளனர்.

எனக்கு தேவையான அனைத்தும் என்னிடம் இருக்கும் போது, நான் அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. டிக் டாக் மட்டுமில்லாமல் இன்ஸ்டாகிராமிலும் எனது பெயரில் போலி கணக்குகள் தொடங்கி யாரோ தவறாக பயன்படுத்தி வருகின்றனர்.

அவர்கள் குறித்து கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக கூறியுள்ளார். இது ஒரு புறம் இருக்க, படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாக கூறி சிலர் தன்னை படுக்கைக்கு அழைத்து ஏமாற்றிவிட்டதாக கூறியுள்ளார்.

மேலும், சிறிய படங்களில் நடித்த போது கூட அவர்களுக்கு அட்ஜஸ்ட்மெண்ட் செய்துதான் நடித்ததாக அவர் கூறியுள்ளார்.

இதற்கு முன்னதாக அவர் யோகி பாபு நடிப்பில் வந்த ஜாம்பி படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

nirbhaya convicts: ஓடும் பஸ்; நிர்பயாவை கதற வைத்தவர்கள்; சில மணி நேரத்தில் கதம் கதம்

0
nirbhaya convicts நிர்பயா வழக்கு

nirbhaya convicts live updates 2020 : நிர்பயா வழக்கு நாளை தீர்ப்பு

nirbhaya convicts 2020 பாலியல் குற்றம் செய்துவிட்டு எந்த அளவிற்கு இந்திய சட்டத்தை பயன்படுத்தி தப்பிக்கலாம் என்பதற்கு நிர்பயா வழக்கு ஒரு உதாரணம்.

Nirbhaya Convicts Hanging

தண்டனை கொடுக்கப்பட்டும் பலமுறை தூக்கு தண்டனை தள்ளிப்போய் உள்ளது. மீண்டும் இந்த வழக்கைத் தள்ளிப்போட நான்கு பேரும் சர்வதேச நீதிமன்றத்தை நாடினர். ஆனால் அந்த மனுவை இந்திய உச்ச நீதிமன்றம் நிராகரித்து விட்டது.

அதன்பிறகு விடா முயற்சியாக அக்ஷய் குமார் சிங் மனைவி தனக்கு விவாகரத்து செய்யப்பட்ட பின்பே கணவருக்கு தூக்கு வழங்க வேண்டும் எனக் கூறி நிதிமன்றத்தில் மனு செய்தார்.

உண்மையில் அவரின் மனைவி அக்ஷய்குமார் சிங்-யை காப்பாற்றவே இப்படி ஒரு கபட நாடகம் ஆடினார். அந்த வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டது.

இறுதியாக இன்று மட்டும் 4-5 வழக்குகள் தாக்கல் செய்தனர். பவன் குப்தார் குற்றம் நடந்தபோது தான் மைனர் எனக் கூறி மனுதாக்கல் செய்தார்.

முகேஷ் சிங் என்பவர் நிர்பய பாலியல் வன்கொடுமை செய்தபோது தான் டில்லியில் இல்லை என்று கூறி மனு தாக்கல் செய்தார்.

இவர்களுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் இவர்களை தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றி மிகப்பெரிய கிரிமினல் லாயர் என பெயர் எடுக்க வேண்டும் என விருப்பினர்.

இன்று மாலை வரை அனைவருமே பகீர் என்றே எதிர்பார்த்துக் கொண்டு இருந்தனர். எங்காவது ஒரு ஓட்டையை பயன்படுத்தி மீண்டும் தூக்கி தள்ளிவைத்து விடுவார்களோ என்று.

nirbhaya case hanging date

ஆனால் அப்படி ஒன்றும் நடக்கவில்லை. நாளை காலை 5.30 மணிக்கு நிச்சயம் தூக்கிலிடப்போவது உறுதியாகி உள்ளது.

அதாவது இன்னும் சில மணி நேரங்களே உள்ளது. அதற்கான கவுண்டவுனை இப்போது இருந்தே டெல்லி மக்கள் துவங்கி உள்ளனர்.

இந்த வழக்கு ஒரு சூரம்சம் செய்வது போன்று உள்ளது. பலகட்ட போராட்டத்திற்கு பிறகு நிர்பாயாவின் தாய் 5.30 மணியை எதிர் நோக்கி காத்துக்கொண்டு உள்ளார்.

இவர்களை நம்ப முடியாது. சினிமாவில் வருவது போன்று இறுதி நிமிடத்தில் கூட சட்டத்தின் ஓட்டையை பயன்படுத்த நேரிடும் என சிலர் கூறி உள்ளனர். 5:30 மணி இவர்களின் இறுதி நாளா? என இன்னும் சில மணி நேரங்களில் தெரிந்துவிடும்.

நிர்பயா வழக்கு பற்றி வெளிவந்த படத்தின் ட்ரைலர்

3

கொரொனோ வைரஸ்: ட்ரம்பை அவமானப்படுத்திய தமிழர்

0
கொரொனோ வைரஸ்:

கொரொனோ வைரஸ்: ட்ரம்பை அவமானப்படுத்திய தமிழர். கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை ட்ரம்ப் கூறியது பொய் என அவமானப்படுத்திவிட்டு அதற்காக மன்னிப்பும் கேட்டுள்ளார்.

கொரொனோ வைரஸ் எப்படி பரவியது என்ற சர்ச்சை இன்னும் ஓயவில்லை. சீனா-அமெரிக்கா இரு நாடுகளும் மாறி குற்றம் சுமத்தி வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கூகிள் நிறுவனம் கொரோனா வைரஸ் பரிசோதனைக்கு பதிவு செய்வதற்கு என்றே அமெரிக்காவிற்காக தனியாக ஒரு வலைத்தளம் அமைத்து உள்ளது எனக் கூறினார்.

ட்ரம்ப் கூறிய சில மணி நேரங்களில் கூகிள் சி.இ.ஓ. சுந்தர் பிச்சை மறுத்தார். ட்ரம்ப் பொய் சொல்வதாக கூறி ட்ரம்ப்-யை அவமானப்படுத்தினார்.

இந்த அறிவிப்புக்கு பின், கூகுளின் தாய் நிறுவனம் என அழைக்கப்படும் ஆல்பாபெட் ட்ரம்ப் கூறியதுபோல் கொரோனாவுக்கு என ஒரு வலைதளத்தை உருவாக்கியது தெரியவந்தது.

இதன்பிறகு ட்ரம்ப் கூறியதாவது, சுந்தர் பிச்சை நல்ல மனிதர். அவர் ஏன் அப்படி கூறினார் எனத் தெரியவில்லை. இதற்காக அவர் என்னிடம் மன்னிப்புக் கேட்டார் எனக் கூறினார்.

ஆனால் சுந்தர் பிச்சை தரப்பில் இது குறித்து எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. ஏன் சுந்தர் பிச்சை அவ்வாறு கூறினார் என்பதற்கும் எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.

3

நல்ல மாணவர்களை சமுதாயத்தில் உருவாக்குவேன்: ஒரு ஆசிரியரின் சபதம்!

0
Comedy Actor Sathish

Sathish Twitter Video; ஒரு நல்ல மாணவர்களை உருவாக்குவேன்: ஒரு ஆசிரியரின் சபதம்! சதீஷ் தனது அபார்ட்மெண்டில் செக்யூரிட்டி வேலை செய்த தமிழ் ஆசிரியரை உலகிற்கு அறிமுகம் செய்துள்ளார்.

காமெடி நடிகர் சதீஷ் (Sathish Twitter Video)வீட்டு அபார்ட்மெண்ட்டில் செக்யூரிட்டியாக இருந்தவர் தமிழ் ஆசிரியராக மாறியதை உலகிற்கு எடுத்துக்காட்டியுள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் சதீஷ். விஜய், ஆர்யா, சிவகார்த்திகேயன், கௌதம் கார்த்திக், ஜெயம் ரவி என்று மாஸ் நடிகர்களுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அண்ணாத்த, இந்தியன் 2 ஆகிய படங்களில் ரொம்பவே பிஸியாக இருக்கிறார். இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில், இன்ஸ்பிரேஷன் எங்கிருந்து வேண்டுமானாலும் கிடைக்கலாம். நான் இப்போது இன்ஸ்பிரேஷனை உங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கிறேன்.

அவர் எங்களது அபார்ட்மெண்டில் செக்யூரிட்டி வேலை செய்கிறார். அவரது பெயர் பாலுச்சாமி. இன்னும், ஒரு மாதம் மட்டுமே வேலைக்கு வருவேன்.

அதன் பிறகு வேலம்மாள் பள்ளியில் வேலைக்கு சேருகிறேன் என்றார். நான் சரி, அங்கேயும் செக்யூரிட்டி வேலை என்று தான் நினைத்தேன்.

ஆனால், தமிழ் வாத்தியாராக வேலைக்கு சேருகிறேன். அதுவும், 9, 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கிளாஸ் எடுக்கிறேன் என்றார்.

அவர் பேசியதை கேட்டதும் எனக்கு ஒரே ஆச்சரியம். அவர் படித்தது எம்பிஏ., பிஎட் எம்.பில். அவ்வளது தூரம் படித்து முடித்துவிட்டு, இங்கு வந்து வேறொரு நல்ல வேலை கிடைக்கும் வரை செக்யூரிட்டியாக வேலை செய்திருக்கிறார் என்றார்.

அதன் பிறகு பேசிய பாலுச்சாமி கூறுகையில், ஒரு வேலையில் இருந்து கொண்டு இன்னொரு வேலை தேடுவது தான் புத்திசாலித்தனம். அது போல எனக்கு வேலம்மாள் பள்ளியில் கிடைத்த வேலை எனது திறமைக்கு கிடைத்த அங்கீகாரம்.

அந்த திறமையை பயன்படுத்தி வருங்காலத்தில் நல்ல மாணவர்களை இந்த சமுதாயத்தில் உருவாக்குவேன் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கல்யாணம்: கொரோனாவுடன் சென்ற நபர்: சானிடைஸருடன் வந்த ஸ்டாலின்

0
கல்யாணம் கொரோனா ஸ்டாலின்

கல்யாணம்: கொரோனா தொற்றுடன் சென்ற நபர்: சானிடைஸருடன் வந்த விழிப்புணர்வு ஏற்படுத்திய ஸ்டாலின். இந்த நேரத்தில் விழிப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவைரஸ் உறுதிப்படுத்தப்பட்ட நபர் ரயில் பயணம் செய்து கல்யாண விருந்து சாப்பிட்டு வந்து இருக்கிறாராம்.

மும்பை கல்யானில் வசிக்கும் கான்ஜி. இவர் மார்ச் 6-ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து வந்துள்ளார். வந்த உடனேயே நன்றாக ஊர் சுற்றியுள்ளார்.

ஹுடாட்மா ரயிலில், பயணம் செய்து சோலாப்பூரில் பகுதியில் நடந்த திருமண நிகழ்விலும் பங்கேற்று கறிசோறு சாப்பிட்டுள்ளார்.

அன்றைய நாளில் மட்டும் குறைந்தது 1000 பேருக்காவது கொரோனா தொற்று ஏற்பட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என அதிகாரிகள் கருதுகின்றனர்.

எனினும் இவர் எத்தனை பேருடன் தொடர்பில் இருந்தார் என்பது முழுமையாக தெரியவில்லை. கான்ஜிக்கு கொரோனாவைரஸ் இருப்பது சில தினங்கள் முன்பு தான் தெரிய வந்தது.

மேலும் அவரது மனைவி மற்றும் குழந்தை ஆகிய இருவருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மும்பையில் கரோனா வேகமாக பரவி வரும் காரணம் அங்குள்ள அரசு மிகவும் அஜாக்ரதையாக நடந்துகொண்டது தான்.

பெங்களூரு ஐடி ஊழியர் மனைவி கொரோனாவுடன் பெங்களூருவில் இருந்து மும்பை விமான நிலையம் சென்று அங்கிருந்து டெல்லி சென்றுள்ளார்.

அதுவரை விமான நிலைய ஊழியர்கள் அவருக்கு கொரோனா இருப்பதை கண்டுபிடிக்காமல் பயணம் செய்ய அனுமதித்து உள்ளனர்.

இதன் காரணமாகவே பெங்களூரு மும்பை பகுதியில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. மக்கள் கவனக்குறைவால், அறிமையால், சுயநலத்தால் மற்றவர்களுக்கு பரப்பிவிட்டு வருகின்றனர்.

ஸ்டாலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கை

மு.க.ஸ்டாலின் அவர்கள் வேலூர் மேற்கு மாவட்ட கழகப் பொருளாளர் திரு.அருணகிரி அவர்களின் மகளும் திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.அ.நல்லதம்பி MLA அவர்களின் அண்ணன் மகளுமான செல்வி அஸ்வினி – செல்வன் திவாகர் ஆகியோர் திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்றார்.

அப்போது மணமக்களுக்கு மாஸ்க், சானிடைசர் ஆகியவற்றை வழங்கினார். மேலும் திருமண நிகழ்ச்சிக்கு வந்தவர்களுக்கு சானிடைசர் கொடுக்கப்பட்டு உள்ளது.

இங்கெல்லாம் கொரோனா வருமா என மெத்தனமாக இல்லாமல் வருபவர்களுக்கு சானிடைசர் கொடுத்து திமுகவினர் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர்.

இது உண்மையில் பாராட்டக்கூடிய விஷயம். இதை அனைத்து பிரபலங்கள், கட்சிதலைவர்கள் மற்றும் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும்.

கல்யாணம், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு பன்னீர் தெளித்து வரவேற்பதற்கு பதில் சானிடைசர் கொண்டு கைகளை சுத்தம் செய்து வரவேற்பது ஆரோக்கியமான விஷயம்.

3

தாராள பிரபு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியீடு | மக்கள் அதிர்ச்சி

0
dhar

Dharala prabhu movie full HD available for download in Tamilrockers site

Dharala prabhu movie download for free on tamilrockers 2020 : தமிழ் படம் தாராள பிரபு தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

Harish Kalyan மற்றும்  காமெடி நடிகர் விவேக் இணைந்து நடித்துள்ள படம் தாராளப் பிரபு சமூக காமெடி படமான இது மார்ச் 13 2020 அன்று திரைக்கு வந்தது.

இப்படம் பாலிவுட்டில் Ayushmann Khurrana, Yami Gautam மற்றும் Annu Kapoor ஆகியோர் சேர்ந்து நடித்த விக்கி டோனர் என்னும் படத்தின் ரீமேக் ஆகும் .

பாலிவுட்டில் விக்கி டோனர் (vicky donor) படம் மிகப்பெரிய வெற்றியடைந்தது.

தமிழகத்திலும் தாராள பிரபு கண்டிப்பாக வெற்றியடையும் என்று மக்கள் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் தாராள பிரபு படம் தமிழ் ராக்கர்சால் வெளியிடப்பட்டதால் கண்டிப்பாக வணிக ரீதியாக பெரிய இழப்பை சந்திக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ள இந்தப் படம் வணிக ரீதியாக வீழ்ச்சியடையும் என்று கருத்துக்கள் கூறுகின்றன.

இப்படத்தில் , தனியா ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை கிருஷ்ணா மாரிமுத்து இயக்கியுள்ளார். இப்படம் திரைக்கு வரும் முன்பே ட்ரெய்லர் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது அதிக மக்களால் பார்க்கப்பட்டது .

இப்படம் மக்கள் மத்தியில் மிக நல்ல விமர்சனங்களை பெற்றுக் கொண்டு வருகின்றது, இருந்தாலும் தமிழ் ராக்கர்ஸ் இப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளதால் வணிக ரீதியாக மிகப்பெரிய இழப்பை சந்திக்கும் என்று கூறப்படுகிறது.

இப்படம் மட்டுமல்லாமல் சமீபத்தில் திரைக்கு வந்த ஸ்ட்ரீட் டான்சர், chhappa, வால்டர், அசுரகுரு, panga, housefull 4, terminator, super 30, the sky is pink, bypass road ஆகிய படங்களும் தமிழ் ராக்கர்ஸ் களால் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடப்பட்டது.

Tamilrockers என்பது ஒரு வலைத்தளம், அதன் டொமைன் நீட்டிப்பை (domain extension) அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறது, அதனால்தான் அதை முழுமையாகத் தடுக்க முடியாது.

ஏனெனில் இது தடுக்கப்படும்போது எப்போதும் புதிய நீட்டிப்புடன் தோன்றும்.

அதே நேரத்தில், அதன் தடுக்கப்பட்ட URL களையும் proxy சேவையகங்களால் அணுக முடியும்.

இந்த பைரேட்டட் (pirated) தளங்களிலிருந்து எந்த படத்தையும் ஒருபோதும் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஏனெனில் இது உங்கள் தனியுரிமை தொடர்பாக நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். எங்கள் மிஸ்டர் புயல் வலைத்தளம் இதை ஒரு போதும் ஆதரிக்காது.

இதையும் படியுங்கள் : – அசுரகுரு படம் தமிழ் ராக்கர்சில் வெளியானது

3

தோனி இந்தியாவின் சொத்து அவர் இல்லாமல் அணி வெத்து கூறிய லெஜெண்ட்

0
தோனி எதிர்காலம் இந்திய அணியில்

தோனி இந்தியாவின் சொத்து அவர் இல்லாமல் அணி வெத்து கூறிய லெஜெண்ட், தோனி எதிர்காலம் இந்திய அணியில்

கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்காத இந்தியா முன்னாள் கேப்டன் டோனியின் எதிர்காலம் பற்றி கூறிய ரஞ்சி கிரிக்கெட் லெஜெண்ட் வாசிம் ஜாபர்.

தோனி எதிர்காலம் இந்திய அணியில்

தோனி உடல் தகுதியுடன் பார்மில் இருந்தால் கட்டாயம் அவரை அணியில் சேர்க்க வேண்டும். ராகுல் என்னதான் அணியில் சிறப்பாக விளையாடினாலும் தோனி இருந்தால் அது மேலும் வழு சேர்க்கும்.

மேலும் தோனி இருந்தால் ராகுல், பாண்ட் மற்றும் பாண்டியா எந்த வித பிரஷர் இல்லாமல் ஆடலாம் என கூறியுள்ளார்.

தோனி இனி இந்திய அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார் – கூறியது யார்?

டோனி ஐபில் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டால் கண்டிப்பாக இந்தியா டி20 உலகக்கோப்பை அணியில் தேர்வு செய்யப்படுவர் என ரவி சாஸ்திரி மற்றும் தேர்வு குழுவும் தெரிவித்துள்ளது.

3

ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் காலா இயக்குநர்! குழந்தைக்கு இப்படியொரு பெயரா?

0
Pa Ranjith Boy Baby

Pa Ranjith; மகன் பிறந்த சந்தோஷத்தில் காலா இயக்குநர்! இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் அனிதா தம்பதியினருக்கு இரண்டாவது ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆண் குழந்தைக்கு மிளிரன் (Miliran) என்று பெயர் வைத்துள்ளனர்.

தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர்களில் பா.ரஞ்சித்தும் ஒருவர். உதவி இயக்குநராக சினிமாவில் அறிமுகமானார்.

தகப்பன்சாமி படத்தில் சிவ சண்முகத்திடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு வெங்கட் பிரபுவிடம் உதவி இயக்குநராக இருந்துள்ளார்.

அதன் பிறகு கடந்த 2011 ஆம் ஆண்டு வந்த அட்டகத்தி படத்தின் மூலம் சினிமாவில் தன்னை ஒரு இயக்குநராக அறிமுகம் செய்து கொண்டார். இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து கார்த்தியின் மெட்ராஸ் படத்தை கொடுத்தார்.

இப்படம் பட்டி தொட்டியெல்லாம் பிரபலமாக பேசப்பட்டது. அட்டகத்தி, மெட்ராஸ் ஆகிய படங்களுக்கு கிடைத்த நல்ல வரவேற்பு மூலம் ரஜினி படத்தை இயக்கும் வாய்ப்பு பெற்றார்.

ஆம், ரஜினியை வைத்து கபாலி படத்தை இயக்கினார். உலகம் முழுவதும் நல்ல வரவேற்பு, வசூல் கொடுக்கவே மீண்டும் ரஜினியுடன் இணைந்து காலா படத்தை கொடுத்தார்.

ஒரு இயக்குநரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும் அவதாரம் எடுத்துள்ளார். நீலம் புரோடக்‌ஷன் மூலம் பரியேறும் பெருமாள் படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்திற்காக பல்வேறு விருதுகளும் வழங்கப்பட்டது.

அப்புறம், இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தையும் தயாரித்துள்ளார். தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி வரும் சல்பேட்டா என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இப்படத்தில் பாக்ஸராக ஆர்யா நடிக்கிறார். அதற்காக ஜிம்மில் உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார். ஆர்யா ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த நிலையில், இயக்குநர் பா.ரஞ்சித் தனக்கு மகன் பிறந்த செய்தியை மகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார். மேலும், மகனுக்கு மிளிரன் என்று பெயர் வைத்துள்ளார். மிளிரன் என்றால் ஜொலிப்பவன் என்று பெயர். மேலும், மிளிரன் என்றால் புத்தன் என்றும் கூறப்படுகிறது.

பா.ரஞ்சித் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

ஏற்கனவே பா.ரஞ்சித் மற்றும் அனிதா தம்பதியினருக்கு மகிழினி என்ற மகள் இருக்கிறாள் என்பது குறிப்பிடத்தக்கது.

3