Home Blog Page 210

அசுரகுரு படம் தமிழ் ராக்கர்சில் வெளியானது

0
Tamilrockers

Asuraguru Tamil Movie Leaked Online By Tamilrockers

அசுரகுரு திரைப்படத்தை ஆன்லைனில் கசிந்துள்ளதாக Tamilrockers தெரிவித்துள்ளனர். விக்ரம் பிரபு நடித்த அசுரகுரு, ராஜதீப் இயக்கியுள்ளார். S.R. பிரபு தயாரித்துள்ளார்.

இந்த படத்தை மக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்ய தமிழ் ராக்கர்ஸ் அதை தங்கள் வலைத்தளத்திலும் பதிவேற்றியுள்ளனர்.

விக்ரம் பிரபு நடித்த இந்த தமிழ் ஆக்ஷன் த்ரில்லர் படம் மிகச் சமீபத்திய படம், இது திருட்டு வலைத்தளமான தமிழ் ராக்கர்களின் பலியாகிவிட்டது.

இந்த படத்தை ராஜதீப் இயக்கியுள்ளார், மேலும் Mahima Nambiar , Yogi BabuNagineeduSubbaraju போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளனர்.

இதுபோன்ற பல பெரிய படங்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மற்றும் வலைத் தொடர்கள் கூட அவை வெளிவருவதற்கு முன்பே கசிந்துள்ளன.

Asuraguru Movie Download Leaked Online in HD Quality

Movie Asuraguru

Artists Vikram Prabhu, Mahima Nambiar, Yogibabu

Director Rajdeep

Movie Type Action | Thriller

Tamilrockers என்பது ஒரு வலைத்தளம், அதன் டொமைன் நீட்டிப்பை (domain extension) அடிக்கடி மாற்றிக் கொண்டே இருக்கிறது, அதனால்தான் அதை முழுமையாகத் தடுக்க முடியாது.

ஏனெனில் இது தடுக்கப்படும்போது எப்போதும் புதிய நீட்டிப்புடன்(extension) தோன்றும். அதே நேரத்தில், அதன் தடுக்கப்பட்ட URL களையும் proxy சேவையகங்களால் அணுக முடியும்.

இந்த அசுரகுரு திரைப்படம் வெளியான சில மணி நேரங்களிலேயே Tamilrockers அதை தங்கள் தளத்தில் கசியவிட்டனர். இந்த தளம் ஒரு படத்தை கசியவிடுவது முதல் முறை அல்ல.

முன்னதாக ஜிப்ஸி, ஆதித்யா வர்மா, தர்பார் போன்ற பல திரைப்படங்களும் கசிந்துள்ளன.

Tamilrockers இதேபோன்ற சட்டவிரோத வலைத்தளங்களும் தடுக்கப்பட்டிருந்தாலும், உயர்நீதிமன்றத்தின் தடுப்பு உத்தரவுக்குப் பிறகும், இந்த தளங்கள் இன்னும் சுதந்திரமாக இயங்குகின்றன.

இந்த பைரேட்டட் (pirated) தளங்களிலிருந்து எந்த படத்தையும் ஒருபோதும் பதிவிறக்கம் செய்யக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம்.

ஏனெனில் இது உங்கள் தனியுரிமை தொடர்பாக நிறைய சிக்கல்களை ஏற்படுத்தும். எங்கள் மிஸ்டர் புயல் வலைத்தளம் இதை ஒரு போதும் ஆதரிக்காது.

Asuraguru படத்தின் விமர்சனம் படியுங்கள்

வேறு செய்திகள் படிக்கவும்:- நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்ட மாடல் நடிகை!  

3

நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்ட மாடல் நடிகை!

0

Shirin Kanchwala இன்று தனது 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

Shirin Kanchwala நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்ட மாடல் நடிகை! தான் பார்த்து வந்த ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டுவிட்டு நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஷிரின் கான்ச்வாலா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ஷிரின் கான்ச்வாலா (Shirin Kanchwala Birthday) இன்று தனது 27 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் நடிகை ஷிரின் கான்ச்வாலா.

கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி பிறந்த ஷிரின் கான்ச்வாலா (Shirin Kanchwala) ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் ஏர் ஹோஸ்டஸாக 3 வருடம் பணியாற்றியுள்ளார்.

மாடல் மற்றும் நடிப்பு மீது இருந்த ஆர்வத்தால் ஜெட் ஏர்வேஸின் ஏர் ஹோஸ்டஸ் வேலையை விட்டு விலகியுள்ளார். அதன் பிறகு மாடல் மற்றும் நடிப்பு மீது முழு கவனத்தையும் செலுத்தியுள்ளார்.

அப்போது தான் விராஜ் என்ற கன்னட படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இது அவரது முதல் படம். கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தப் படம் கன்னடத்தில் வெளியானது.

இப்படத்தைத் தொடர்ந்து ரியோ ராஜ் நடிப்பில் வந்த நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

சிவகார்த்தியேனின் தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்திருந்தது. கடந்தாண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து வால்டர் படத்தில் நடித்தார். இதில், சிபிராஜிற்கு ஜோடியாக நடித்திருந்தார்.

ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்ற வால்டர் கடந்த 6-ஆம் தேதி வெளியானது. எனினும், வெளியான ஒரு வாரத்திற்குள்ளாக கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டுள்ளது.

ஆதலால் ஒரு சில படங்கள் மீண்டும் திரையிடப்பட இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. வால்டர் படத்திற்குப் பிறகு மீண்டும் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார்.

மேக்னா என்ற கதாபாத்திரத்தில் இந்தப் படத்தில் நடித்துள்ளார். இந்த ஆண்டு இறுதிக்குள்ளாக இந்தப் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், இன்று தனது 27ஆவது பிறந்தநாளை கொண்டாடும் ஷிரின் கான்ச்வாலாவிற்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஷிரின் கான்ச்வாலா…

3

கொரோனாவா இருக்கட்டும்: பாதுகாப்பாக ஷூட் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!

0
Rakul Preet Singh

Rakul Preet Singh: கொரோனாவா இருக்கட்டும்: பாதுகாப்பாக ஷூட் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்! சினிமா படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்ட போதிலும் நடிகை ரகுல் ப்ரீத் சிங் தொடர்ந்து பாதுகாப்பாக படப்பிடிப்பு செய்யும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ரகுல் ப்ரீத் சிங் முகத்தில் மாஸ்க் அணிந்தபடி படக்குழுவினருடன் பாதுகாப்பாக படப்பிடிப்பில் இருப்பதாக புகைப்படம் எடுத்து பதிவிட்டுள்ளார்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஈரான், குவைத், காங்காங் ஆகிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது. எனினும், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, தனியார் அலுவலகங்களுக்கு வீட்டில் இருந்தபடி பணியாற்றவும், தேவைப்பட்டால் அலுவலகத்திற்கு வரவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதோடு, திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக, படங்கள் ரிலீஸ் ஆவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

வீட்டில் இருந்தபடி சினிமா பிரபலங்கள் பலரும் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், நடிகை ரகுல் ப்ரீத் சிங் மட்டும் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு தான் பாதுகாப்பாக ஷூட் செய்வதாக குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: முற்றிலும் தேவைப்படாவிட்டால் யாரும் வெளியேற வேண்டாம். நேர்மையாக சித்தித்து புன்னகையோடு கொரோனாவிற்கு எதிராக போராடுங்கள்.

இன்றைய படப்பிடிப்பை ரத்து செய்ய முடியாது. ஆனால், படக்குழுவினர்  முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளனர் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் யுவன், தடையறத் தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன் அதிகாரம் ஒன்று, தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தற்போது, சிவகார்த்திகேயன் உடன் இணைந்து அயலான் மற்றும் கமல் ஹாசன் உடன் இணைந்து இந்தியன் 2 படங்களில் நடித்து வருகிறார்.

3

கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அர்னால்டு கூறும் அறிவுரை என்ன

0
Arnold Schwarzenegger
அர்னால்டு கூறும் அறிவுரை

Arnold Schwarzenegger கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அறிவுரை கூறினார்

72 வயதான ஹாலிவுட் நடிகரும் உலகப்புகழ் பெற்ற பாடிபில்டர் ஆன அர்னால்டு (Arnold Schwarzenegger) அனைவரையும் முடிந்த வரை வீட்டினுள் இருக்கும்படி அறிவுரை கூறியுள்ளார்.

வசந்த காலத்தின் தொடக்கத்தில் பண்டிகை கொண்டாட்டம் என்று எதுவும் செய்ய வேண்டாம். முடிந்த வரை வீட்டிலையே இருங்கள் என்று கூறியுள்ளார்.

வீடியோவில் அர்னால்ட் ஒரு சிறப்புச் செய்தி பகிர்ந்து கொண்டிருந்தார், அங்கு விருந்துகளுக்கான கடற்கரைகளுக்குச் செல்ல வேண்டாம் அல்லது கஃபேக்கள் கூட வெளியேற வேண்டாம் என்று அவர் வலியுறுத்தினார்.

கொரோனா வைரஸின் முதலில்  சீனாவின் வுஹானில் பரவியது, அதன் பின்னர், சில மாதங்களில் உலகம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கர்நாடகாவில் மூன்று இறப்புகளுடன் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 153 வழக்குகளை இந்தியா அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளது.

மேலும் 60 வயதிற்கு மேற்பட்டோர் ஒவ்வொரு அவர்களை முடிந்த வரை தனிமை படுத்துங்கள் அதுவே கொரோனா பாதிப்பில் இருந்து தப்ப ஒரே வழி.

இதையும் படியுங்கள் : –கொரோனாவா இருக்கட்டும்: பாதுகாப்பாக ஷூட் செய்யும் ரகுல் ப்ரீத் சிங்!

3

Facebook Dark Mode வந்துவிட்டது ஆக்ட்டிவேட் செய்வது எப்படி

0
Facebook Dark Mode
Facebook Dark Mode

Facebook Dark Mode வந்துவிட்டது ஆக்ட்டிவேட் செய்வது எப்படி

நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டு இருந்த பேஸ்புக் டார்க் மோட் இந்தியாவில் இருக்கும் டெஸ்க்டாப் பயனாளர்களுக்கு மட்டும் வந்துள்ளது.

புதிதாக மாற்றி அமைக்கப்பட்ட பேஸ்புக் பக்கமும் புதிய ஐகான்களும் முன் இருந்ததை விட பார்க்க அருமையாக இருக்கிறது.

பேஸ்புக் டார்க் மோட் ஆக்டிவேட் செய்யும் முறை 

டெஸ்க்டாப்பில் உங்கள் அக்கௌன்டை ஓபன் செய்ததும் ஒரு நோட்டிபிகேஷன் பாப் அப் ஆகும். அதில் புதிய டார்க் மோட் வந்துள்ளது ட்ரை செய்யுங்கள் என வரும்.

ஒரு வேலை வரவில்லை என்றால் அதில் வலது பக்க மேற்புறத்தில் கிளிக் செய்து பார்த்தல் போதும். அங்கே டார்க் மோடி எனப்பில் செய்யும் ஆப்சன் இருக்கும்.

மீண்டும் அதே ஆப்ஷனில் கிளிக் செய்து நார்மல் மோட் எனப்பில் செய்து கொள்ளலாம்.

3

ரஜினியை ஆட்டம் போட வச்ச இயக்குநருக்கு பிறந்தநாள்!

0
Karthik Subbaraj Birthday

Karthik Subbaraj; ரஜினியை ஆட்டம் போட வச்ச இயக்குநருக்கு பிறந்தநாள்! பேட்ட இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

கடந்த 1983 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் தேதி மதுரையில் பிறந்தவர் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ். மதுரையில் உள்ள எஸ்.பி.ஒ.ஏ பதின்ம மேல்நிலைப் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்த கார்த்திக் சுப்புராஜ், திருப்பரங்குன்றம் தியாகராசர் பொறியியல் கல்லூரியில் பொறியியல் முடித்தார்.

காட்சிப்பிழை என்ற குறும்படத்தின் மூலம் நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து பீட்சா படத்தின் மூலம் இயக்குநராக அவதாரம் எடுத்தார்.

பீட்சா படத்தில் விஜய் சேதுபதி, ரம்யா நம்பீசன் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்திருந்தனர். தொடர்ந்து ஜிகர்தண்டா, பென்ஞ் டாக்கீஸ், இறைவி, மெர்குரி ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படங்களைத் தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து பேட்ட படத்தை கொடுத்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த பேட்ட படம் கடந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்தது.

இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தின் மூலம் ரஜினியை ஆட்டம் போட வைத்தார்.

பேட்ட மரண மாஸ், உல்லால்லா ஆகிய பாடல்களுக்கு ரஜினியை டான்ஸ் ஆட வைத்திருப்பார். பேட்ட படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து அவரது மருமகன் தனுஷை வைத்து ஜகமே தந்திரம் படத்தை உருவாக்கியுள்ளார்.

இப்படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர்கள் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

ஒரு இயக்குநரைத் தொடர்ந்து, சூது கவ்வும் படத்தில் நடிக்கவும் செய்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ். அவியல், மேயாத மான், கள்ளச்சிரிப்பு ஆகிய படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இன்று தனது 37ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் மூலம் நாமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்…

3

கொரோனாவில் இருந்து மக்களை காப்பாற்ற ரியலாக களத்தில் குதித்த சூர்யா

0
Suriya Corona Virus Awareness

Suriya Corona Virus Awareness; கொரோனா வைரஸ் (சீனா) vs போதி தர்மன் சூர்யா! வரும் 22 ஆம் தேதி கொரோனா வைரஸ் குறித்து சூர்யா மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்கள் மற்றும் பேஸ்மாஸ்க் கொடுக்க இருக்கிறார்.

மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சூர்யா வரும் 22-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார்.

கொரோனாவா என தனக்கென வீட்டுக்குள் முடங்கி விடாமல், வெளியில் வந்து மக்களுக்காக சேவை செய்யும் சூரியா ரியல் வாழ்க்கையிலும் ஹீரோ தானே!

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன் ஆகியோர் நடித்த படம் 7-ஆம் அறிவு (7aum Arivu). கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி வசூல் மற்றும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றது.

தற்காப்புக் கலை, மருத்துவம், கலைகள் என்று அனைத்திலும் வித்தை தெரிந்தவர் பல்லவ மன்னர் குல இளவரசன் போதி தர்மன் (Bodhidharma).

சீனாவில் இருந்து இந்தியாவிற்கு பரவ இருக்கும் கொடிய நோயை ஏழாம் அறிவு என்கிற ஞான திருஷ்ட்டி மூலம் அறிந்துகொள்கிறார்.

சீனா சென்ற போதி தர்மன், கொடிய நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த ஒரு குழந்தையின் உயிரைக் காப்பாற்றுகிறார்.

ஒரு கட்டத்தில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட அந்த கிராமத்தையே காப்பாற்றுகிறார் போதி தர்மன் (Bodhidharma).

அதன் பிறகு கொள்ளைக் கூட்டத்திலிருந்து தனது தற்காப்பு கலை மூலம் அந்த கிராம மக்களை காப்பாற்றுகிறார்.

அந்த கலையை தங்களுக்கும் கற்றுத் தரச்சொல்லி அந்த கிராம மக்கள் கேட்க, அவர்களுக்கு கற்றுக் கொடுக்கிறார். இறுதியில், போதி தர்மனுக்கு விஷ உணவு கொடுத்து அங்கேயே உரமாகிறார்.

இது போதி தர்மனும், கொடிய நோயால் பாதிக்கப்பட்ட சீனாவின் பழமையான வரலாறு. இந்த உண்மை கதை தான் படமானது. தற்போது இதே நிலைதான் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ளது.

சீனாவின் உகான் (Corona Virus From Wuhan) மாகாணத்தில் இருந்துதான் கொரோனா வைரஸ் தொற்று கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்டது. அது இப்போது இந்தியாவிலும் பரவி வருகிறது.

இந்த நிலையில், படத்தில் சீனாவைக் காப்பாற்றிய மாதிரி, சென்னையில், கொரோனா வைரஸ் குறித்து தனது விழிப்புணர்வு பிரச்சாரம் மூலம் மக்களை காப்பாற்ற வருகிறார் போதி தர்மன் சூர்யா.

ஆம், வரும் 22 ஆம் தேதி சென்னையில் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான சென்ட்ரல், எழும்பூர், கோயம்பேடு ஆகிய பகுதிகளில் துண்டுபிரசுரங்கள் மற்றும் பேஸ்மாஸ்க் ஆகியவற்றை கொடுத்து மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனாவா என தனக்கென வீட்டுக்குள் முடங்கி விடாமல், வெளியில் வந்து மக்களுக்காக சேவை செய்யும் சூரியா ரியல் வாழ்க்கையிலும் ஹீரோ தானே!

3

தமிழ்நாடு போலீஸ் மாஸ்; சிங்கம் பட பாணியில் சம்பவம்

0
தமிழ்நாடு போலீஸ்
ஷானிகுமார்(26)

தமிழ்நாடு போலீஸ் மாஸ்; சிங்கம் பட பாணியில் சம்பவம்

ஆவடியில் 5 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட குழந்தையை 8 மணி நேரத்தில் மீட்ட தமிழ்நாடு போலீஸ். வடக்கானுக்கு நெல்லையில் வைத்த செக்மேட்.

சென்னை ஆவடியில் வசிக்கும் மத்திய பிரதேச  ராதேஷ் ஷியாம் (28)-ராக்கி(25)  தம்பதியருக்கு ராத்திகா(4), அத்தீஷ் பிரஜாபதி(2), 6 மாதமே ஆன அமீத் ஆகிய மூன்று குழந்தைகள் உள்ளனர்.

ராதேஸின் முன்னாள் நண்பரான ஷானிகுமார்(26) என்பவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு, தமிழகம் வந்து ராதேஷ் ஷியாம் வீட்டிலேயே தங்கி அவரது உதவியாளராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இரண்டு நாட்களுக்கு முன் மாலை நேரத்தில் அத்திஷ் பிரஜாபதி குழந்தை சாக்லேட் வாங்கி தருவதாக கூறி கடைக்கு அழைத்துச் சென்று அப்படியே கடத்தி சென்று விட்டார்.

சிறிது நேரம் கழித்து ராதேஷ்க்கு போன் செய்து 5 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளார். உடனே ராதேஷ் போலீசிடம் தகவல் தெரிவித்தார்.

ஷானிகுமார் மொபைல் போனை ட்ராக் செய்து அவர் ரயிலில் செல்வது முதல் தனியார் விடுதி சென்றது வரை கணித்து அவரை ஆந்திர மாநில நெல்லையில் வைத்து குழந்தையுடன் கைது செய்தனர்.

3

வசந்த காலத்தை வரவேற்கும் கூகிள் டூடுல்

1
கூகிள் டூடுல்

வசந்த காலத்தை வரவேற்கும் கூகிள் டூடுல்

வெர்னல் ஈக்குவினாக்ஸ் மற்றும் சங்கிராந்தி இவை இரண்டுமே வசந்த காலத்தை தீர்மானிக்கின்றன. அதாவது, பகல் 12 மணி நேரம்; இரவும் 12 மணி நேரம் என சமஅளவில் இருக்கும்.

இதுவே வசந்த காலத்தின் தொடக்கமாகும். வசந்த காலத்தை  வரவேற்க நீல நிறத்தில் டூடுல் வைத்து கூகிள் வரவேற்றுள்ளது.

வருடத்தின் சிறந்த காலம் வசந்த காலம் அதாவது இப்போதுதான் மொட்டுகள் மலரும், விளைச்சல் அதிகமாகும், விலங்குகள் புத்துணர்ச்சி பெறும்.

நம் முன்னோர்கள் தங்களின் பல்வேறு பண்டிகைகளை வசந்த காலத்தின் தொடக்கத்தில்தான் கொண்டாடி வந்தார்கள். கிரிகோரியன் காலண்டருக்கு முன்னாள் வசந்த காலாமே வருடத்தின் முதல் மாதமாக இருந்தது.

கூகிள் டூடுல் அவ்வப்போது உலகின் தலைசிறந்த நிகழ்வுகள் அல்லது தலைசிறந்த மனிதர்களின் பங்களிப்பை நமக்கு நினைவு கூறும் வகையில், அதனை பற்றிய கட்டுரைகள் கூகிள் பக்கத்தில் இடம்பெறும்.

3

கவலைப் படாதே சகோதரா, அடிச்சு தூக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு பாடல்!

0
Coronavirus Song

Coronavirus Song : Adichi thookku awareness song

Coronavirus Song | அடிச்சு தூக்கு கொரோனா வைரஸ் விழிப்புணர்வு: வைரலாகும் மாணவிகளின் பாடல்! பள்ளி மாணவிகள் பாடும் பாடல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சீனாவில் தொடங்கிய கோரோனா வைரஸ் தாக்கம் ஜப்பான், இத்தாலி, சிங்கப்பூர், மலேசியா, அமெரிக்கா, பாகிஸ்தான், இலங்கை, ஈரான், குவைத், காங்காங், ஆகிய நாடுகளிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இந்தியாவில் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

எனினும், பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு முகாம்கள் நடைபெற்று வருகிறது. சினிமா பிரபலங்கள் பலரும் தங்களால் முடிந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை அரங்கேற்றி வருகின்றனர்.

இந்த நிலையில், அரசுப்பள்ளி மாணவிகள் கொரோனா வைரஸ் (Coronavirus Song) குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பாடல் பாடியுள்ளனர்.

அந்தப் பாடல் அஜித் நடித்த படங்களில் இருக்கும் பாடல்களை தழுவியே வந்துள்ளது.

கடந்த ஆண்டு வந்த விஸ்வாசம் படத்தில் வரும் அடிச்சு தூக்கு பாடலையும், கவலைப்படாதே சகோதரா என்ற காதல் கோட்டை படத்தின் பாடலையும் வைத்து கொரோனா வைரஸ் பாடல் பாடியுள்ளனர்.

இந்தப் பாடல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பாடலைப் பாடிய பள்ளி மாணவிகளுக்கு அஜித் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பாடலின் இறுதியில் கில்லி படத்தில் வரும் அப்படி போடு போடு என்ற பாடலுக்கும் மாணவிகள் மெட்டு எடுத்து பாடியுள்ளனர்.

3