Home Blog Page 211

கொரோனா பயத்தால் வரும் மன அழுத்தம் கவலையிலிருந்து விடுபடுவது எப்படி?

0
கொரோனா பயத்தால் வரும் மன அழுத்தம்

Corona virus tips tamil. கொரோனா வைரஸ் டிப்ஸ். கொரோனா பயத்தால் வரும் மன அழுத்தம் கவலையிலிருந்து விடுபடுவது எப்படி?

உலகம் முழுவதும் கொரோனாவால் இதுவரை 220000 பாதிக்கப்பட்டுள்ளனர். 8900 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. இந்தியாவில் இதுவரை 150க்கும் மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது கொரோனா தாக்கம் பற்றி நாளுக்கு நாள் கேள்விப்படும் மக்களுக்கு மன அழுத்தத்தையும் கவலையையும் ஏற்படுத்துகிறது என உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

மக்கள் அதிகம் கூடும் சுற்றுலாத் தலங்கள், மால்கள், திரையரங்குகள் மூடப்பட்டு விட்டன. காய்கறிகள், பலசரக்குக் கடைகள் உள்ளிட்ட அத்தியாவசிய கடைகள் தவிர, மற்ற அனைத்தையும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினம் தினம் மக்கள் கொரோனா பற்றி பல்வேறு தவறான செய்திகளை சமூக வலைத்தளங்களில் படித்து பகிர்ந்து வருகின்றனர்.

சில தவறான தகவல்கள் வதந்திகள் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி விடுகிறது. மேலும் கொரோனா பாதித்தால் அவர்களின் மொத்த குடும்பமும் கலங்கி விடுகிறது.

சாதாரண சளி, காய்ச்சல் வந்தால் கூட மக்கள் கொரோனாவாக இருக்குமோ என எண்ணுவது அவர்களின் உடலை பலவீனப் படுத்துகிறது.

கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்

கொரோனாவுக்கு எதிராக மனதை திடப்படுத்துவது 

சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் செய்திகளை நம்பவேண்டாம். உலக சுகாதார மையத்தின் (WHO) வலையில் இருக்கும் தகவல்களை மட்டுமே படிக்கவும்.

அடிக்கடி கொரோனா பற்றிய செய்திகளை பார்க்காமல் பேசாமல் இருப்பது நல்லது. இது உங்கள் அன்றாட வாழ்க்கை சுமூகமாக செல்ல வழி வகுக்கும்.

உலக சுகாதார மையம் அறிவுரைப்படி சுத்தமாகவும், தெளிவாகவும் செயல்பட்டால் கோரோனோவை எளிதாக எதிர்கொள்ளலாம். மேலும் சத்தான உணவுகளாக சாப்பிட்டு உங்கள் னாய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்துக் கொள்ளுங்கள்.

3

கொரோனா பாதிப்பு; இன்றிரவு பேச தயாராகும் பிரதமர் மோடி

0
கொரோனா பாதிப்பு மோடி

கொரோனா பாதிப்பு; இன்றிரவு பேச தயாராகும் பிரதமர் மோடி

கொரோனவை எதிர்கொள்வது பற்றியும் அதன் விழிப்புணர்வை பற்றியும் பேச இன்றிரவு 8 மணி அளவில் உரையாற்ற இருக்கிறார் மோடி.

நேற்று ஒரு நாளில் மட்டும் இந்தியாவில் 26 நபர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிராவில் 42 பேர்,  கேரளாவில் 27 பேர், உத்தரப்பிரதேசத்தில் 16, கர்நாடகாவில் 11, டெல்லியில் 10, தமிழ்நாட்டில் 2 பேர் இது போக இன்னும் பல மாதங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்

இதனிடையே கொரோனவை கற்றுக்கொள் கொண்டு வர அதை பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்த மக்களிடம் உரையாற்ற முடிவு செய்துள்ளது.

இந்நிலையில் கொரோனாவை எதிர்கொள்வது குறித்தும், அதற்கு எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் மோடி தலைமையில் நேற்று உயர்மட்டக்குழு கூடி ஆலோசித்தது.

3

கீழடி 6ஆம் கட்ட ஆராய்ச்சி: கிடைத்த அதிசய பொருள்

0
கீழடி 6ஆம் கட்ட ஆராய்ச்சி

கீழடி 6ஆம் கட்ட ஆராய்ச்சி; செங்கல் கட்டுமானம் மற்றும் கிடைத்த அதிசய பொருள். இந்த குழவி கல் சாதாரணமாக இல்லாமல் அதிசயத்தக்க வகையில் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

பிப்ரவரி 19-ஆம் தேதி முதல் கீழடியில் 6ஆம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகள் தொடங்கின. இதில் குழாய் அமைக்க குழிகள் தோண்டும் பொழுது செங்கல் கட்டுமானங்கள் தென்பட்டது.

இதில் இருவண்ண பானைகள், பானை ஓடுகள், 5ம் கட்ட அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட தரை தளத்தின் தொடர்ச்சி உள்ளிட்டவை கண்டறியப்பட்டுள்ளன.

இந்த தொடர்ச்சியான தரைத்தளத்தில் 10 செ.மீ., நீளத்தில் சிறிய அளவிலான குழவி கல்லும், குவளை வடிவிலான பானை ஓடும் கண்டறியப்பட்டுள்ளது

நில உரிமையாளர் கதிரேசன் கூறியது

குழாய் பதிக்க குழி தோண்டும் பொழுது பெரிய செங்கல் கட்டுமானம் கிடைத்தது. அதன் பிறகு தோண்டாமல் அப்படியே அகழ்வாராய்ச்சியாளர்களிடம் தெரிவித்துவிட்டோம்.

தற்பொழுது எங்கள் நிலத்தில் அகழ்வாராய்ச்சி பணிகள் நடந்து வருகிறது. அதிசயத்தக்க பல அறிய பொருட்கள் என் நிலத்தில் இருப்பது ஆச்சரியத்தை கொடுக்கிறது என கூறியுள்ளார்.

இதுவரை கீழடியில் பல அறிய வகை பொருட்கள் கிடைத்து உள்ளது. இருப்பினும் கீழடி நாகரீகமே உலகின் முதல் நாகரீகம் என்பதற்கு மேலும் வலுசேர்க்கும் ஆதாரம் ஒன்றிற்காக தமிழகமே காத்துகொண்டு உள்ளது.

அப்படி கிடைக்கும் பொருள் அரசியல் காழ்புணர்ச்சி இல்லாமல் உனடியாக அதன் வயதைக் கணித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்து உலக அரங்கில் தமிழர்களின் பெருமையை நிலைநாட்ட வேண்டும் எனபதே உலகில் உள்ள ஒவ்வொரு தமிழனின் ஆசையும் கூட.

3

ராகுல் காந்தி; கொரோனாவை குறைத்து எண்ணுகிறார்கள்

0
ராகுல் காந்தி

ராகுல் காந்தி: கொரோனாவை குறைத்து எண்ணுகிறார்கள்

சீனாவில் தொடர்ந்து உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் ஆல் இந்தியாவில் இது வரை 150க்கு மேலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதற்காக இந்தியா பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இந்நேரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கொரோனாவிற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்

இவர்கள் செயல்படும் வேகம் போதாது. கொரோனாவை குறைத்து மதிப்பிட்டால் அதற்கு அதிக விலை கொடுக்கும் நேரம் வரலாம் என கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் 220000 உறுதிப்படுத்தப்பட்ட கேஸ் மற்றும் 8900 இறப்புகளும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் 150க்கும் மேற்பட்ட கேஸ், மற்றும் 3 இறப்புகளை நிகழ்ந்துள்ளன.

மக்கள் கூடுவதை குறைக்கும் வகையில் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் விடுமுறை அறிவித்துள்ளது மத்திய அரசு. அதுமட்டுமில்லாமல் திரையரங்குகள், நீச்சல் குளங்கள் போன்றவற்றும் மூட மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு இட்டுள்ளது.மார்ச் 31 தேதி வரை அனைத்தும் மூடி இருக்க வேண்டும் என்று என்று மத்திய அரசு மாநில அரசு அண்மையில் உத்தரவு பிறப்பித்துள்ளது.

3

19/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

19/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று சுமாரான நாளாக இருக்கும். பணியில் போராட்டங்கள் நிறைந்திருக்கும். குடும்பத்தில் நல்லிணக்கம் இருக்காது. பண வரவு குறைந்து காணப்படும். மூட்டு வலி ஏற்பட வாய்ப்புண்டு.

குரு பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

ரிஷப ராசிபலன்

இன்று செயல்படும் செயல்கள் அனைத்திலும் பொறுமை அவசியம். பணியில் திட்டமிடல் வேண்டும். துணையிடம் தவறான புரிந்துணர்வு இருக்கும். தன வரவு சுமாராக இருக்கும். கால் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

தட்சிணாமூர்த்தியை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

மிதுன ராசிபலன்

இன்று உங்களின் நேர்மையான செயல்பாட்டால் வெற்றி காண்பீர்கள். தொழில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். வீட்டில் இன்பம் பெருகும். தன லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

சிவபெருமானை தரிசித்து வர கூடுதல் பலன்கள் உண்டு.

கடக ராசிபலன்

இன்று புதிய நபர்களை சந்தித்து அதன் மூலம் நன்மைகள் பெறுவீர்கள். பணியிடத்தில் ஊழியர்களிடம் நட்புறவு வலுவாக இருக்கும். வீட்டில் நன்மதிப்பு பெறுவீர்கள். பண வரவு சாதகமாக இருக்கும். உடல் வலிமை மேம்படும்.

பிரம்ம தேவரை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.

சிம்ம ராசிபலன்

இன்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாளாகும். தொழிலில் விழிப்புடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் சில சர்ச்சைகள் ஏற்படும். பணப் பரிவர்த்தனையில் கவனம் தேவை. செரிமான பிரச்சனைகள் வரலாம்.

குரு பகவானை விளக்கேற்றி வழிபட தொல்லைகள் குறையும்.

கன்னி ராசிபலன் 

இன்று சில தடைகள் வந்து சேரும். பணிகளை சமாளிப்பது கடினமாக இருக்கும். பணத்தால் வீட்டில் பிரச்சனைகள் வரும். நிதிநிலை மோசமாக இருக்கும். முதுகு வலி வர வாய்ப்புண்டு. பிராத்தனை அவசியம்.

குரு ராகவேந்திரரை வழிபடுங்கள் கஷ்டங்கள் குறையும்.

துலா ராசிபலன்

இன்றைய நாள் உங்களின் வெற்றியை பெற்று தரும். வியாபாரத்தில் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இல்லத்தில் காதல் மேம்படும். எதிர்பாராத லாபம் கிடைக்கும். உடல் நலனில் குறையேதும் இருக்காது.

அம்பிகையை வழிபட கூடுதல் பலன் உண்டு.

விருச்சிக ராசிபலன்

இன்று எதிர்மறையான பலன்களை தரும். பணி மகிழ்ச்சிகரமாக இருக்காது. வீட்டிலும் நிம்மதி பாதிக்கும். பொறுமையாக இருக்க வேண்டும். நிதியும் தகுந்த தேவைக்கு கிடைக்காது. உணவில் கவனம் தேவை.

நந்தி தேவரை விளக்கேற்றி வழிபட குறைகள் நீங்கும்.

தனுசு ராசிபலன்

இன்று உங்களின் முயற்சிகள் அதிகம் தேவை. பணியிடத்தில் சக ஊழியர்களிடம் பிரச்சனைகள் வரலாம். குடும்பத்தில் பேச்சால் பிரச்சனைகள் வரலாம். வரவும் செலவும் சமமாக இருக்கும். பதட்டத்தை தவிர்த்தால் ஆரோக்கியம் மேம்படும்.

குரு பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

மகர ராசிபலன் 

இன்று புத்திசாலித்தனமாக இருக்க வேண்டும். பணியில் பக்குவம் தேவையாகும். துணையிடம் அன்பாக பேச வேண்டும். பண வரவு சுமாராக இருக்கும். கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

சிவபெருமானை வழிபட கவலைகள் குறையும்.

கும்ப ராசிபலன்

இன்று அதிஷ்டமான நாளாக இருக்கும். அனைத்து காரியங்களிலும் வெற்றியாக முடியும். இல்லத்தில் அன்பான சூழல் நிலவும். எதிர்பாராத தன வரவு உண்டு. முழு ஆற்றலுடன் இருப்பீர்கள்.

சரஸ்வதி தேவியை வழிபட ஞானம் பெருகும்.

மீன ராசிபலன் 

இன்று இன்பமான நாளாக இருக்கும். நாள் முழுதும் சிரித்த முகத்துடன் இருப்பீர்கள். பணியில் பாராட்டுகள் குவியும். கணவன் மனைவியிடையே காதல் அதிகரிக்கும். பூர்வீக சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் தீரும். உடல்நிலை நலமுடன் இருக்கும்.

தட்சிணாமூர்த்தியை வழிபட கூடுதல் பலன் கிடைக்கும்.

19/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

விஜய்க்கு ஜான் துரைராஜ் ஓகே: அதென்ன விஜய் சேதுபதிக்கு பவானினு பேரு!

0
Vijay and Vijay Sethupathi Character Name

Master Vijay Character Name; விஜய்க்கு ஜான் துரைராஜ் ஓகே: அதென்ன விஜய் சேதுபதிக்கு பவானினு பேரு! மாஸ்டர் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்களின் பெயர் வெளியிடப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தில் நடித்துள்ள விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தில் பெயர் வெளியாகியுள்ளது.

கல்விமுறையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள புதிய படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்தப் படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தணு, நாசர் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

மாஸ்டர் படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி அறிவித்தபடி வெளியாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருக்கிறது.

அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு விழா சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது. இந்த நிலையில், விஜய் மற்றும் விஜய் சேதுபதியின் கதாபாத்திரங்களின் பெயர் வெளியாகியுள்ளது.

அதன்படி விஜய் ஜான் துரைராஜ் (John Durairaj aka JD) என்ற ஜேடி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும், செயின்ட் ஜெஃப்பரி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் டீனாக நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய்யின் கல்லூரி ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய்யைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் கதாபாத்திரத்தின் பெயரும் வெளியாகியுள்ளது. அந்த வகையில், விஜய் சேதுபதி பவானி ஆசிர்வாதம் (Bhaavani Archivatham) என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.

விஜய்க்கு வில்லன் ரோலில் விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். இவரது தங்கையாக மாளவிகா மோகனன் நடித்துள்ளாராம்.

அண்மையில், நடந்து முடிந்த மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் பேசிய விஜய் சேதுபதி இது ஹீரோ வில்லன் கதை இல்லை. இரண்டு ஹீரோ சம்பந்தப்பட்ட கதை என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

வான் தூறல்கள் லிரிக் வீடியோ வெளியீடு!

0
Vaan Thooralgal lyric

Vaan Thooralgal Lyric video 2020 | வான் தூறல்கள்

Vaan Thooralgal Lyric வான் தூறல்கள் லிரிக் வீடியோ வெளியீடு! ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள பொன்மகள் வந்தாள் படத்தின் வான் தூறல்கள் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது.

வான் தூறல்கள் லிரிக் (Vaan Thooralgal Lyric) வீடியோ வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் (Ponmagal Vandhal) படத்தில் இடம்பெற்றுள்ள வான் தூறல்கள் பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பொன்மகள் வந்தாள். இயக்குநர் ஜேஜே ப்ரெட்ரிக் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

பெண்களை மையப்படுத்தி படமாக பொன்மகள் வந்தாள் படம் உருவாகி வருகிறது. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது.

வரும் 27 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் படம் திரைக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போதைய சூழ்நிலையில், படம் அறிவித்தபடி வெளியாகுமா? இல்லை பட ரிலீஸ் தள்ளி வைக்கப்படுமா என்பதே கேள்விக்குறியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சினிமா படப்பிடிப்பும், படங்கள் வெளியாவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நேற்று பொன்மகள் வந்தாள் படத்தின் இசை வெளியீடு நடக்க இருந்தது. ஆனால், அது தள்ளி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், படத்தில் இடம்பெற்றுள்ள இரண்டாது சிங்கிள் டிராக் வான் தூறல்கள் (Vaan Thooralgal Lyric) பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Lyric

Singer : Chinmayi Sripada

Music by : Govind Vasantha

Female : Vaan thooralgal
Vaazhthukkal paada
Naan meendumae
Pookkiren

Female : Needhaanadi
Ini needhaanadi
Thanthaayae vaazh naatkalai
Thaai naanadi thandhai naanadi
Vazhiyaagiren
Vaa en vaagaiyae

Female : Parandhu pogalaam
Thirandha vaanilae
Oliyaai naan iruppaen
Uyirae… vaa…

Female : Vaanamaai naanagiyae
Siru vaadhai theendidamal kaappaen
Thozhi pol naanagiyae
Un thaevai thaedi thaedi serppaen

Female : Thaerillaa silai naan
Neerilaa nilam naan
Sariyaa pizhai mozhiyaa
Ingu yedhu naan anbae

Female : Marangal pookkuthae
Nirangal kooduthae
Ulagaai… nee kidaithaayae…
Magalaai naan…

lyric source :- tamil2lyrics

3

ஸ்ரீ இராம நவமி சிறப்புகள் மற்றும் விரதமுறை

1
rama navami 2020

sri rama navami 2020 special | இராம நவமியின் சிறப்புகள் என்ன? எவ்வாறு விரதமிருப்பது? இராம நாமத்தின் சிறப்புகள் என்ன? 2020இல் இராமநவமி எப்போது வருகிறது?

sri rama navami 2020 :- நமது பாரத தேசத்தில் அதர்மம் அதிகமாக தலை விரித்தாடும் போதெல்லாம். தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவதரிப்பார் என்று நம்பப்படுகிறது.

அப்படி தர்மத்தை நிலை நாட்ட இறைவன் அவதாரம் செய்த கதைகள் புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

இராமாயணம், மகாபாரதம், விஷ்ணு புராணம், கந்த புராணம் என நீள்கிறது.

இந்த வரிசையில் முதலாவதாக சொல்லப்படுகின்ற இராமாயணத்தின் கதாநாயகன் இராமன் ஆவார்.

அவரின் பிறப்பு மற்றும் சிறப்பை விரிவாக பார்க்கலாம்.

இராமர் பிறந்த இராம நவமி | The Birthday of Lord Rama rama navami

ரகு குலத்தில் தசரத மகாராஜாவிற்கும் அவரின் முதல் மனைவியான கோசலைக்கும் சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமி திதியில் விஷ்ணுவின் அவதாரமாக ஸ்ரீ இராமசந்திரமூர்த்தி பிறந்தார்.

இவர் பிறந்த இந்த பொன்னாளே “இராம நவமி” என்று கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ இராமரின் பிறப்பு | Lord Ram’s birthday

சூரிய குலத்தின் மன்னனான தசரத மகாராஜாவிற்கு மூன்று மனைவிகள். ஆனால் மூவருக்கும் குழந்தை இல்லை.

இதனால் அடுத்த அரச பட்டத்தை பெற மகன் இன்றி வருந்தினார். குரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி ரிருஷ்யசிருங்க முனிவரை அழைத்து வந்து புத்திர காமேஷ்டி யாகத்தை நடத்தினார்.

யாகத்தின் பயனாக யக்ஞபுருஷன் தோன்றி பாயசம் நிறைந்த கிண்ணத்தை வழங்கினார். அந்த பாயசத்தை மூன்று மனைவிகளுக்கும் சரி சமமாக பிரித்து வழங்கினார்.

அதன் பின் அவருக்கு நான்கு மகன்கள் தோன்றினர். இராமன், லட்சுமணன், பரதன், சத்ருகனன் என்ற நான்கு புத்திரர்கள் தோன்றினர்.

இதில் முதலாவது மகனே மகா விஷ்ணுவின் அவதாரமான ஸ்ரீ இராமர் ஆவார்.

வட இந்தியாவில் இராம நவமி

இராமர் உத்திர பிரதேஷத்தில் உள்ள அயோத்தியில் பிறந்து ஆட்சி புரிந்தார். எனவே அவர் பிறந்த ஊரான அயோத்தியில் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இந்நாளில் விரதமிருந்து இராமரை போற்றுகின்றனர்.

தென் இந்தியாவில் இராம நவமி

தெலுங்கானா மாநிலம் பத்ராசலத்தில் இராம நவமியில் பிரம்மோற்சவம் நடைபெறுகிறது.

இராமர் சீதை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இது மிகவும் பிரச்சித்தமாகும்.

தமிழ்நாட்டில் ராமர் வனவாசத்தில் பாதம் பதித்த பல ஊர்களில் அவருக்கு கோவில் எழுப்பி கொண்டாடுகின்றனர். குறிப்பாக இராமேஸ்வரம், சேலம் (அயோத்தியாபட்டினம்), வடுவூர், நெடுங்குன்றம், புல்லபூதங்குடி போன்ற ஊர்களில் இராமருக்கு தனி கோவில்கள் உண்டு.

அங்கு மிக விஷேசமாக இராம நவமியை கொண்டாடுகின்றனர்.

இராம நவமி விரதம்

இராம நவமி அன்று அதிகாலை எழுந்து நீராடி, குழந்தை ராமர் படத்தை வைத்து பூஜிக்கின்றனர். தொட்டில் கட்டி குழந்தை இராமர் பொம்மையை வைத்து ஆட்டுகின்றனர்.

குழந்தை வரம் வேண்டி நாள் முழுதும் விரத்தமிருந்து ஆரத்தி முடிந்த பின் உணவு உண்டு விரதம் முடிக்கின்றனர். ஏழைகளுக்கு அன்னதானம் செய்கின்றனர். நாள் முழுதும் ராம நாமம் சொல்கின்றனர்.

படியுங்கள் ஸ்ரீ ராம நவமி: ராமர் ஜாதகம் உணர்த்தும் ஜோதிட ரகசியங்கள்!

இராம நாம ஜெபம், வால்மீகி மற்றும் கம்ப இராமாயணம் முற்றோதல்,, சங்கீர்தனங்கள், பஜனைகள்  செய்கின்றனர்.

இராம நாமத்தின் சிறப்பு | rama navami 2020 special

இந்த உலகில் இராம நாமத்திற்கு ஈடாக எதுவுமே இல்லை மந்திரமும் இல்லை என்பதை சிவ வாக்கியர் தனது பாடலில் விளக்கி கூறியுள்ளார்

“அந்திமாலை உச்சிமூன்றும் ஆடுகின்ற தீர்த்தமும்
சந்திதர்ப் பணங்களும் தபங்களும் செபங்களும்
சிந்தைமேவு ஞானமும் தினம்செபிக்கு மந்திரம்
எந்தைராம ராமராம ராமஎன்னும் நாமமே – 10

கதாவுபஞ்ச பாதகங்க ளைத்துறந்த மந்திரம்
இதாம்இதாம் அதல்லஎன்று வைத்துழலும் ஏழைகள்
சதாவிடாமல் ஓதுவார் தமக்குநல்ல மந்திரம்
இதாம்இதாம் ராமராம ராம என்னும் நாமமே -11
சிவவாக்கியர்

2020 இல் இராம நவமி

இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2 ஆம் தேதியன்று இராம நவமியானது வருகின்றது. இந்த நாளில் எல்லாம் வல்ல இராமனின் நாமத்தை ஜெபம் செய்ய வேண்டும்.

“ஸ்ரீ ராம ராம ராமேதி
ரமே ராமே மனோரமே |
ஸஹஸ்ரநாம தத்துல்யம்‌
ராமநாம வரானனே”

என்கிறது விஷ்ணு சகஸ்ரநாமம்
நம்மால் இயன்ற அளவு ராம நாமத்தை இராம நவமியில் ஜபித்து அறிந்தும் அறியாமலும் செய்த சகல பாவங்களை போக்கி கொள்வோம்.

3

மரணதண்டனை அவசியமா ? ஆய்வில் அதிர்ச்சி

0

                   மரணதண்டனை அவசியமா ? ஆய்வில் அதிர்ச்சி

டெல்லியில் நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேறும் கடைசி வேளையில் உலகில் எந்தெந்த நாடுகள் மரண தண்டனையை விரும்புகின்றன என்பதை இந்த கட்டுரையில் காண்போம் .

சர்வதேச மன்னிப்பு சபை:

முதலில் இந்தியாவில் மிக கொடூரமான  குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டாலும் அவற்றை நிறைவேற்றுவதில் வேகம் காட்டுவதில்லை என்று சர்வதேச மன்னிப்பு சபை கூறியுள்ளது .

இந்தியாவில் கடந்த 2015 க்கு பிறகு யாருக்கும் இதுவரை தூக்கு தண்டனை  நிறைவேற்ற படவில்லை .

முன்னதாக கடந்த 1990 களில் நடந்த மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்குகளில் குற்றவாளிக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது .

மரண தண்டனை விதிப்பதில்  இந்தியாவை விட  மற்ற நாடுகள் முன்னணியில் உள்ளன கடந்த 2018  இல் ஈரான், சவூதி அரேபிய ,வியட்நாம் ,ஈராக்    நாடுகளில் அதிக எண்ணிக்கையில் தண்டனைகள் நிறைவேற்ற பட்டுள்ளன .

நமது அண்டை நாடான பாகிஸ்தானில் கடந்த ஆண்டில் 250  பேருக்கும் வங்காளதேசத்தில் 229 பேருக்கும் மரண தண்டனை நிறைவேற்ற பட்டுள்ளன

80 விழுக்காடு மரண தண்டனை:

2018 இல் பதிவு செய்யப்பட்ட மரண தண்டனை நிறைவேற்றியதில் 80 விழுக்காடு ஈரான் ,சவூதி அரேபிய ,வியட்நாம் ,ஈராக் போன்ற நாடுகளில் நடந்துள்ளதாக சர்வதேச மன்னிப்பு சபை ஆய்வு முடிவுகள் கூறுகின்றன .

ஆசியா பசுபிக் பிராந்திய

ஒட்டு மொத்தமாக பார்த்தால் ஆசிய-பசுபிக் பிராந்தியத்தில் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் 46 விழுக்காடு அதிகமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கடந்த 2018  இல்  25  பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது .

சீனாவின் தண்டனை விவரங்கள்:

முக்கியமாக சீனாவின் தண்டனை விவரங்கள் மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது .

இருப்பினும் அங்கு நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மரண தண்டனை நிறைவேற்ற படுவதாக  சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

சிரியாவின் போர் காரணமாகவும் வடகொரியா நாட்டின் தகவல்களும் கிடைக்க பெற வில்லை எனவும் தெரிவித்துள்ளது .

வியட்நாம் அரசு ரகசியமா:

கடந்த நவம்பர் மாதம் வியட்நாம் அரசு வெளியிட்ட தகவலில் கடந்த ஆண்டு 85 மரண தண்டனைகளை நிறைவேற்றி உள்ளதாக அதிகார பூர்வாமாக தெரிவித்துள்ளது , இருப்பினும் வியட்நாமில் இதுவரை எவ்வளவு நபர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

உலக அளவில் பார்த்தோமானால் கடந்த 2017 ஆண்டை விட 2018 ஆண்டில் மரண தண்டனை எண்ணிக்கை குறைந்துள்ளதாக புள்ளி விவரங்கள் கூறுகிறது அதன் படி 2017  இல் 2591 ஆக இருந்த நிலையில் 2018  இல் 2531 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது

உலக அளவில் உயரும்:

பொதுவாக உலக அளவில் நிறைவேற்றப்படும் மரண தண்டனை குறைந்து வருகிறது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளது .

இருப்பினும் இந்த புள்ளி விவரங்கள் எல்லாம் வெளியில் தெரிய வந்த தகவல்களின் அடைப்படையில் வெளியிடப்பட்டவை ஆகும்.

பல்வேறு நாடுகளின் உண்மைத்தகவல் வெளி வரும் பட்சத்தில்  மரண தண்டனைகள்  எண்ணிக்கை  மேலும்  உயரும்  என கருத படுகிறது .

 

3

மாஸ்டர் போஸ்டரில் மீரா மிதுன்: யார் யாரை காப்பி அடிச்சது?

0
Meera Mithun

Master Poster biggboss Meera Mithun; மாஸ்டர் போஸ்டரில் மீரா மிதுன் :

யார் யாரை காப்பி அடிச்சது? மாஸ்டர் இரண்டாம் லுக் போஸ்டரை காப்பி அடிச்சு மீரா மிதுன் (meera mithun) தனது புகைப்படத்தை இடம்பெறச் செய்து தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மாஸ்டர் இரண்டாம் லுக் போஸ்டரை காப்பி அடிச்சு அதனை மீரா மிதுன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

விஜய் நடிப்பில் உருவாக்கப்பட்ட படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. அண்மையில், மாஸ்டர் இசை வெளியீட்டு (Master audio launch) விழா நடந்தது.

தொடர்ந்து வரும் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருக்கிறது. கடந்தாண்டு டிசம்பர் 31 ஆம் தேதி மாஸ்டர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

தொடர்ந்து 2020 ஆம் ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மாஸ்டர் இரண்டாவது லுக் போஸ்டர் வெளியானது.

இதில், விஜய் அமைதி என்று சொல்லும் வகையில், வாயில் விரலை வைத்து காட்டியவாறு இருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது.

இந்தப் போஸ்டரை காப்பியடித்த meera mithun, அதில், தனது புகைப்படத்தை பதிவிட்டு யார் யாரை காப்பி அடிச்சது என்று பதிவிட்டுள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது: யார் யாரை காப்பியடித்துள்ளது. இந்த படம் கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் கிங்பிஷர் ரேம்ப் வாக் நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்டது. எனவே, இதற்கான பதில் கிடைத்திருக்கிறது என்று பதிவிட்டுள்ளார்.

இதற்கு முன்னதாக, முன்னணி நடிகைகள் தனது போஸ்களை காப்பியடித்து வருவதாக கமெண்ட் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மீரா மிதுனின் இந்த போஸ்டர் விஜய் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீரா மிதுன் ஒரு கொரோனா வைரஸ், அதை யாரிடமும் பரப்ப வேண்டாம் என்று பலரும் அவரை கிண்டலடித்து வருகின்றனர்.

3