Home Blog Page 212

அருவா பிரச்சனையே முடியல: அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா?

0
Suriya Aruvaa

Suriya Aruvaa; அருவா பிரச்சனையே முடியல: அதுக்குள்ள அடுத்த அப்டேட்டா? சூர்யாவின் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று (Soorarai Pottru) படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் மற்றும் அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.

எனினும், இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றியமைக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் (Corona Virus) தீவிரமாக பரவி வருகிறது.

இதன் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பும் ரத்து செய்யப்பட்டு படங்களின் ரிலீஸ் தேதியும் மாற்றியமைக்கப்பட்டு வருகிறது.

சுதா கொங்கரா (Sudha Kongara) இயக்கியுள்ள இந்தப் படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கையை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து சூரயவின் 39 ஆவது படம் குறித்து அண்மையில் அறிவிப்பு வந்தது. இந்தப் படத்தை இயக்குநர் ஹரி இயக்க இருப்பதாவும், படத்திற்கு அருவா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளதாவும், ஞானவேல் ராஜா படத்தை தயாரிக்க இருப்பதாவும் அறிவிப்பு வந்தது.

அருவா படத்தின் தலைப்பு வெளியானதுமே படம் பிரச்சனையில் சிக்கியது. ஆம், அருவா தலைப்பை வைத்து பாடலாசிரியர் ஏகாதசி கதை உருவாக்கியிருப்பதாவும், இந்தப் படத்தை கோபி தயாரித்துள்ளதாகவும் தகவல் வந்தது.

ஆனால், இது குறித்து இயக்குநர் தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகவில்லை. அருவா படத்தைத் தொடர்ந்து சூர்யா40 படத்தை இயக்குநர் வெற்றிமாறன் இயக்க இருக்கிறார்.

இப்படத்திற்கு வாடி வாசல் என்று ஏற்கனவே தலைப்பு தேர்வு செய்யப்பட்டுள்ளது. படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், தற்போது சூர்யா41 படம் குறித்து அறிவிப்பு வந்துள்ளது. அதன்படி, அசோக் செல்வன் நடிப்பில் வந்த ஆயிரத்தில் ஒருத்தன் படத்தை இயக்கிய இயக்குநர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார்.

இருளர் பழங்குடியினர் மற்றும் அவர்களது வாழ்க்கை போராட்டங்களை மையப்படுத்தி சூர்யா41 படம் உருவாக இருப்பதாக கூறப்படுகிறது.

அதோடு, இந்தப் படத்தில் சூர்யா வழக்கறிஞராக நடிக்க இருக்கிறார் என்கிறது தகவல்.

3

கொரோனாவால் 6,7 மாதம் தள்ளிப்போன ஹாலிவுட் படங்களின் பட்டியல்!

0
Hollywood Movies

Hollywood Movies Release Postponed:

கொரோனாவால் 6,7 மாதம் தள்ளிப்போன ஹாலிவுட் படங்களின் பட்டியல்! F9 and Black Widow ஆகிய படங்கள் உள்பட ஏராளமான ஹாலிவுட் படங்களின் ரீலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகத்தையே அச்சுறுத்தி வருகிறது. இதுவரை இரண்டு லட்சத்திற்கும் அதிகமானோர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஏழு ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் குணப்படுத்தப்பட்டுள்ளனர்.

சீனாவில் தொடங்கி ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தியாவில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக, பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக படங்களின் ரிலீஸ் தேதியும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், அமெரிக்காவில் ஏராளமான ஹாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதி 6,7 மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

அதில், ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை பிரதிபலிக்கும் நோ டைம் டூ டை படம் நவம்பர் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ஜேம்ஸ் பாண்ட் வரிசையில் இதுவரை மொத்தம் 24 படங்கள் வெளியாகியுள்ள நிலையில், 25 ஆவது படமாக நோ டைம் டூ டை படம் உருவாகியுள்ளது.

இதில் ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தில் டேனியல் கிரேக் நடித்துள்ளார். மேலும், ராய்ல்ப் பியென்னஸ், நவோமி ஹாரிஸ், ராமி மலேக், ஜெப்ரி ரைட் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஏற்கனவே வரும் ஏப்ரல்  3 ஆம் தேதி இங்கிலாந்திலும், 8 ஆம் தேதி அமெரிக்காவிலும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது கொரோனா காரணமாக இங்கிலாந்தில் வரும் நவம்பர் 12 ஆம் தேதியும், அமெரிக்காவில் நவம்பர் 25 ஆம் தேதியும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Hollywood Movies Release Postponed இதே போன்று,

A Quiet Place Part II த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படம் வெள்ளியன்று வெளியாக இருந்தது.

தற்போது ரிலீஸ் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Mulan லைவ் ஆக்‌ஷன் கதையை மையப்படுத்திய இப்படம் வரும் 27 ஆம் தேதியிலிருந்து தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The New Mutants இப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Peter Rabbit 2: The Runaway ஏப்ரல் 3 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்ட் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

The Lovebirds ஏப்ரல் 3 ஆம் தேதி வெளியாகும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. நியூ ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்பட இருக்கிறது.

Trolls World Tour  ஏப்ரல் 10 ஆம் தேதி திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Antlers ஏப்ரல் 17 ஆம் தேதி ரிலீஸிலிருந்து பின் வாங்கியுள்ளது.

Antebellum ஏப்ரல் 24 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Black Widow மே 1 ஆம் தேதியிலிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Run இப்படம் வரும் மே 8 ஆம் தேதி வெளியாக இருந்த நிலையில், பின் வாங்கியுள்ளது.

The Personal History of David Copperfield மே 8 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

Spiral மே 15 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Woman in the Window மே 15 ஆம் தேதியிலிருந்து தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

F9 படம் வரும் மே 22 ஆம் தேதியிலிருந்து அடுத்தாண்டு ஏப்ரல் 2 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அலறும் ஹாலிவுட் ஸ்டுடியோக்கள்: கரோனாவால் நிறுத்தப்படும் படப்பிடிப்புகள்

3

அச்சச்சோ…இவங்க விஜய் சேதுபதிக்கு தங்கச்சியா?

0
Vijay Sethupathi Malavika Mohanan

Malavika Mohanan; அச்சச்சோ…இவங்க விஜய் சேதுபதிக்கு தங்கச்சியா? விஜய் சேதுபதிக்கு சகோதரியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.

கைதி படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள புதிய படம் மாஸ்டர்  (Master). இப்படத்தில், விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், அர்ஜூன் தாஸ், ஸ்ரீமன், சாந்தணு, சஞ்சீவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் அறிவித்தபடி வெளியாக இருக்கிறது. இதற்கு முன்னதாக வரும் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருக்கிறது.

அண்மையில் மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்து முடிந்தது. இதில், படக்குழுவினர் பலரும் கலந்து கொண்டு பேசினர்.

அப்போது பேசிய விஜய், தனது வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனை கூட ஜாலியாகத்தான் இருந்தது என்று குறிப்பிட்டார்.

அப்போது பேசிய விஜய் சேதுபதி (Vijay Sethupathi) இது இரண்டு ஹீரோ சம்பந்தப்பட்ட கதை என்றும், ஹீரோ வில்லன் என்ற கதை இல்லை என்றும் கூறியிருந்தார்.

மாஸ்டர் படத்தில் விஜய், மாணவர்களின் டீனாக நடித்துள்ளார். இந்தப் படத்தில் விஜய் ஜான் துரைராஜ் என்ற கதாபாத்திரத்தில் விஜய் நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் விஜய்யின் கல்லூரி ஐடி கார்டு (Vijay College ID Card) ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், தற்போது புதிய தகவல் ஒன்று வெளியாகி வருகிறது.

அதன்படி, விஜய் சேதுபதியின் சகோதரியாகத்தான் மாளவிகா மோகனன் (Malavika Mohanan) நடித்துள்ளார் என்று தகவல் பரவி வருகிறது.

ஆனால், இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை. படம் வெளியான பிறகுதான் இது குறித்து தெரியவரும் என்பது குறிப்பிடத்தக்கது.

3

யாரு பாத்த வேலப்பா இது: தெறித்து ஓடிய இயக்குநர்!

0
Ajay Gnanamuthu Cobra

Cobra Director Ajay Gnanamuthu; யாரு பாத்த வேலப்பா இது: தெறித்து ஓடிய இயக்குநர்! தளபதி65 படத்தை இயக்கவில்லை என்று இயக்குநர் அஜய் ஞானமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

டிமாண்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய படங்களைத் தொடர்ந்து அஜய் ஜானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படம் கோப்ரா.

இப்படத்தில் சியான் விக்ரம் 10க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக கூறப்படுகிறது. விக்ரமுக்கு ஜோடியாக, கேஜிஎஃப் படத்தில் யாஷிற்கு ஜோடியாக நடித்த ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்கிறார்.

மேலும், இர்ஃபான் பதான், கேஎஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கின்றனர். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

ரஷ்யாவில் இப்படத்தில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க இருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விக்ரமின் பிறந்தநாளுக்கு இன்னும் ஒரு மாதம் இருக்கும் நிலையில், டுவிட்டரில், #30DForChiyaanBDayFest என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

இதற்கிடையில், விஜய்யின் தளபதி65 படத்தை அஜய் ஞானமுத்து இயக்கப்போவதாக டுவிட்டரில் தகவல் பரவி வருகிறது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அஜய் ஞானமுத்து கூறுகையில், நோ இது யாரு பாத்த வேலனு தெரியவில்லை என்று பதிவிட்டிருந்தார்.

அந்த டுவிட்டரில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் 7ஆம் அறிவு மற்றும் துப்பாக்கி ஆகிய படங்களுக்கு உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார். அதன் பிறகு டிமாண்டி காலனி மற்றும் இமைக்கா நொடிகள் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

இந்த நிலையில் இந்த இரு படங்களின் வெற்றியைத் தொடர்ந்து தளபதி65 படத்தை இயக்க இருப்பதாக தகவல் வந்தது. தளபதி 65 படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படம் வரும் 2021 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது என்று கூறப்பட்டுள்ளது.

3

தேர்வு வைக்காமல் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க இருக்கும் மாநிலம்

0
தேர்வு வைக்காமல் தேர்ச்சி

தேர்வு வைக்காமல் 1 முதல் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி அளிக்க இருக்கும் மாநிலம், கொரோனா பரவாமல் பாதுகாக்க இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு தேர்வு வைக்காமல் தேர்ச்சி அளிக்க அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

கொரோனா முன்னெச்சரிக்கை 

மார்ச் 23ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை நடத்த திட்டமிட்ட தேர்வுகள் மாணவர்கள் நலத்தை கருத்தில் கருத்தில் கொண்டு கைவிடப் பட்டதாக கல்வி முதன்மையாளர் ரேணுகா குமார் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா முன் எச்சரிக்கையால் நாடு முழுவதும் அனைத்து திரை அரங்குகள், பொது இடங்கள், மால் போன்ற மக்கள் கூடும் இடங்கள் ஏப்ரல் 2ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது.

3

யாரோ ஒருவருடன் யாஷிகா ஆனந்த் டேட்டிங்: வைரலாகும் புகைப்படம்!

0
யாஷிகா ஆனந்த் டேட்டிங்

Yashika Aannand; தம்பி ராமையாவின் மகனுடன் நடிகை யாஷிகா ஆனந்த் டேட்டிங் சென்றுள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். இந்நிகழ்ச்சியின் போது நடிகர் மகத்தை காதலிப்பதாக சொன்னார்.

ஆனால், மகத்தோ இல்லை இல்லை தான் வேறொரு பெண்ணை காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப்போவதாகவும் தெரிவித்திருந்தார். கடந்தாண்டு மகத்துக்கு திருமண நிச்சயதார்த்தம் கூட நடந்தது.

இந்த நிலையில், தற்போது யாஷிகா ஆனந்த் தேசிய விருது பெற்ற நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியுடன் டேட்டிங் சென்றுள்ள புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

இது குறித்து யாஷிகாவிடம் கேட்டபோது கூட அதற்கு அவர் மறுப்பும் தெரிவிக்கவில்லை. டேட்டிங் உண்மை என்றும் ஒப்புக்கொள்ளவில்லை. மாறாக சிரித்துக்கொண்டே சென்றுவிடார் என்று கூறப்படுகிறது.

Yashika Aanand Boyfriend

இதற்கு முன்னதாக யாஷிகாவிற்கு அவரது நண்பர் நிரூப் முத்தம் கொடுத்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. அவரைத்தான் யாஷிகா காதலிப்பதாகவும் அப்போது கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான மணியார் குடும்பம் படத்தில் யாஷிகா ஆனந்த் மற்றும் உமாபதி இருவரும் ஒன்றாக நடித்துள்ளனர்.

இப்படத்தைத் தொடர்ந்து உமாபதி சேரனின் திருமணம் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு கலவையான விமர்சனம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

பிக் பாஸ் 2 நிகழ்ச்சியைத் தொடர்ந்து மகத் மற்றும் யாஷிகா ஆனந்த் இருவரும் இவன் தான் உத்தமன் என்ற படத்தில் நடித்துள்ளனர்.

இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இதையடுத்து, ஆரவ்வின் ராஜபீமா என்ற படத்தில் யாஷிகா ஆனந்த் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

அமேசான் முன்னுரிமை; கொரோனா பாதிப்பால் மக்களை அவதிப்பட விட மாட்டோம்

0
அமேசான் முன்னுரிமை

அமேசான் முன்னுரிமை; கொரோனா பாதிப்பால் மக்களை அவதிப்பட விட மாட்டோம்

கொரோனா பாதிப்பால் உலகம் முழுவதும் மக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். இதனால் அமேசான் புதிய முடிவு ஒன்று எடுத்துள்ளது.

மக்களுக்கு இந்த நேரத்தில் அதிகம் தேவைப்படும் மருத்துவ பொருட்கள் சானிடைஸ் பொருட்கள் ஆகியவை விரைவில் டெலிவரி செய்யப்படும்.

மேலும் அவை விரைவில் காலி ஆகாமல் இருக்க  அமேசான் செல்லெர்களுக்கு அதிக ஸ்டாக் வாங்கி வைக்க கூறியுள்ளோம் என ஜெப் பெஸோஸ் கூறியுள்ளார்.

இது போக வீட்டிற்கு தேவையான அனைத்து சமையல் பொருட்களும் விரைவில் டெலிவரி செய்யும் வகையில் இவை இரண்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளோம்.

 

3

தோனி இனி இந்திய அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார் – கூறியது யார்?

0
தோனி இனிமே

தோனி இனி இந்திய அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார் எனக் கூறிய முன்னாள் இந்திய வீரர். யார் அவர்? ஏன் தோனி இனி இந்திய அணிக்கு தேவை இல்லை எனக் கூறினார்.

கடந்த உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணிக்காக எந்த போட்டியிலும் பங்கேற்காத தோனி ஐபில் போட்டியில் ஆட தயாராக உள்ளார்.

இதன் பிறகு டி20 போட்டியில் பங்கேற்பார் என எல்லாருமே எதிர்பார்க்க, தோனியின் எதிர்காலம் என்ன மறுபக்கம் கேள்வியும் எழுகிறது.

இந்தியா முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக், தோனி இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு உடல் தகுதியில் இல்லை எனக் கூறியுள்ளார்.

அவருடைய இடத்தில் ராகுல் மிக சிறப்பாக செயல்படுகிறார். மேலும் ரிசப் பண்ட்  மற்றொரு கீப்பர் இருக்கிறார். ஹார்டிக் பாண்டியாவும் அணிக்கு திரும்பியுள்ளார்.

இதனால் தோனியின் பங்களிப்பு இந்தியா அணிக்கு இனி தேவைப்படாது என சேவாக் தெரிவித்துள்ளார்.

3

ஆஸ்கார் வென்ற பாராசைட் திரைப்படம் இணைய உரிமை வாங்கிய அமேசான்

0
ஆஸ்கார் வென்ற பாராசைட் திரைப்படம்
ஆஸ்கார் வென்ற பாராசைட் திரைப்படம்

ஆஸ்கார் வென்ற பாராசைட் திரைப்படம் இணைய உரிமை வாங்கிய அமேசான், வருகிற மார்ச் 27ஆம் தேதி முதல் அமேசான் பிரைம் தளத்தில் வரவிருக்கும் கொரியன் திரைப்படம்.

2020-ஆம் ஆண்டின் ஆஸ்காரில் நான்கு விருது வாங்கிய கொரியன் திரைப்படம் பாராசைட் (Parasite). சிறந்த படத்திற்கான விருதையும் திரைக்கதைக்கான விருதையும் பெற்று உலக சாதனை படைத்தது.

ஆங்கிலம் அல்லாமல் பிற மொழியில் சிறந்த படம் ஆஸ்கார் வென்ற முதல் திரைப்படம் பாராசைட் ஆகும்.

முதலாளித்துவமும் ஏழை மற்றும் பணக்கார மக்களின் வேறுபாட்டையும் மிக அழுத்தமாக எடுத்துரைக்கும் ஒரு எதார்த்தமான வாழ்வியல் திரைப்படம் இது.

வருகிற மார்ச் 27ஆம் தேதியில் இருந்து அமேசான் பிரைமில் (Amazon Prime) வரப்போகிறது. மேலும் ஹிந்தி மொழியிலும் டப்பிங் செய்து ரிலீஸ் ஆகிறது.

3

நிர்பயா வழக்கு; என்னடா புதுப்புது ட்விஸ்ட் ஆஹ் வைக்கிறிங்க

0
நிர்பயா வழக்கு

நிர்பயா வழக்கு; என்னடா புதுப்புது ட்விஸ்ட் ஆஹ் வைக்கிறிங்க இந்தியாவையே உலுக்கிய நிர்பயா பாலியல் வழக்கில் தூக்கு நிறைவேற்றப்படும் நிலையில் இருக்கையில் வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தூக்கு கைதிகளில் ஒருவரான அக்சய் குமாரின் மனைவி நான் என் கணவர் இறந்த பிறகு வாழ விரும்பவில்லை. அதனால் எனக்கு விவாகரத்து கொடுத்துவிட்டு பின் தூக்கிலிடுங்கள் என மனு அளித்துள்ளார்.

நிர்பயா பாலியல் பலாத்கார வழக்கில் முகேஷ் சிங், பவன் குப்தா, வினய் ஷர்மா, அக்‌ஷய் குமார் சிங் ஆகியோருக்கு மார்ச் 20ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற 20ஆம் தேதி தூக்கு நிறைவேற்றப்படவுள்ளது. நான் விதவை என்ற பட்டத்துடன் வாழ விரும்பவில்லை என அவ்ரங்காபாத் கோர்ட்டில் மனு அளித்துள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட கோர்ட் மார்ச் 19ம் தேதி விசாரணை நடைபெறும் என்று தெரிவித்துள்ளது.

பல்வேறு வழிகளில் தூக்குத் தண்டனையை தாமதப்படுத்த இவர்கள் வழக்கறிஞர் உதவியுடன் போராடிப் பார்த்தனர், கடைசியாக சர்வதேச மனித உரிமைகள் ஆணைய நீதிமன்றத்தை நாடியுள்ளனர்.

அனால் எதுவும் பழிக்கவில்லை. இறுதியில் 20ஆம் தேதி தூக்கு நிறைவேற்றப்படவுள்ளது.

3