Home Blog Page 213

கொரோனா வதந்தி பரப்பியவர் கைது; போலீஸ் அதிரடி

0
கொரோனா வதந்தி
பாபு சரவணன்

கொரோனா வதந்தி பரப்பியவர் கைது; போலீஸ் அதிரடி, கொரோனா பற்றிய வதந்தி பரப்பியதற்காக நாமக்கல்லை சேர்ந்த ஆடிட்டர் பாபு சரவணன் என்பவரை நாமக்கல் மாவட்ட போலீஸ் கைது செய்தது.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் தீவிரம் அடைந்து வரும் நிலையில் அதைப்பற்றி சமூக வலைத்தளங்களில் வதந்தியைப் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசாங்கம் வலியுறுத்தியது.

நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த பாபு சரவணன் கோழிக்கறி மற்றும் முட்டை சாப்பிட்டால் கொரோனா வைரஸ் வரும் என தகவலை பரப்பியுள்ளார்.

வைரல் ஆனா இந்த பதிவால் வரலாறு காணாத அளவிற்கு விலை சரிந்துள்ளது. இதனால் விரக்தி அடைந்த உற்பத்தியாளர்கள் போலீஸில் புகார் அளித்தனர்.

இதனால் பாபு சரவணன் கைது செய்யப்பட்டார். மேலும் கொரோனா வைரஸ் பற்றி தவறான தகவல்கள் பரப்புவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளனர்.

3

தினேஷ் கார்த்திக் சிக்ஸ் அடித்து பாம்பை கொன்ற நாள்

0
தினேஷ் கார்த்திக் சிக்ஸ்

தினேஷ் கார்த்திக் சிக்ஸ் – சிக்சர் (Dinesh karthik six) அடித்து பாம்பு நடனம் ஆடும் அணியை அதிரவைத்த நாள். இந்தியாவே தலையில் தூக்கிவைத்து கொண்டாடிய நாள்.

நிடஹஸ் டிராபி

இந்தியா, இலங்கை, வங்கதேசம் என மூன்று நாடுகள் பங்குபெற்று இலங்கையில் நிடஹஸ் டிராபி நடைபெற்றது.

ஒரு அணி தல இரண்டு முறை, இரண்டு அணிகளுடன் மோத வேண்டும் முதல் லீக் போட்டியில் இலங்கை அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது, மற்ற மூன்று போட்டிகளிலும் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

வங்கதேசத்துக்கும் இலங்கைக்கும் வாழ்வா சாவா அரையிறுதி ஆட்டம் போல் கடைசி லீக் போட்டி நடந்தது. இதில் வெற்றி பெறும் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.

இலங்கை தோல்வி

இலங்கை அணி வெற்றி பெறும் தருவாயில் இருந்து தோல்வியை சந்தித்தது வங் தேசத்தின் முகமதுல்லா 18 பந்துகளில் 43 ரன்கள் அடித்து அணிக்கு வெற்றியைத் தேடித் தந்து இறுதிப்போட்டிக்குள் வங்கதேசத்தை நுழைய வைத்தார்.

இந்த போட்டியில் வெற்றி பெற்றவுடன் வங்கதேச அணியின் வீரர்கள் இலங்கை வீரர்களின் ரசிகர்களை சீண்டும் விதமாக வெற்றி கொண்டாட்டத்தைக் கொண்டாடினார்கள்.

தோனி இனி இந்திய அணிக்கு சரிப்பட்டு வரமாட்டார் – கூறியது யார்?

நாகினி ஆட்டம்

அதுவும் தலையில் கைவைத்து நாகினி ஆட்டத்தை ஆடி மைதானத்தில் அதகளம் செய்தார்கள். இதைக்கண்ட இலங்கை வீரர்களும் மற்றும் இலங்கை ரசிகர்கள் வெறுப்புடன் வெளியேறினார்கள்.

இறுதி போட்டி

2018-ஆம் ஆண்டு மார்ச் 18-ம் தேதி கொழும்பிலுள்ள பரமதேசா மைதானத்தில் இறுதிப்போட்டி மாலை தொடங்கியது.

இந்திய ரசிகர்களை காட்டிலும் இலங்கை ரசிகர்கள் இந்தியாவிற்கு ஆதரவாக கொழும்பு மைதானத்தில் கூடினார்கள்.

அன்று வங்கதேசத்தை வச்சி செய்யலாம், நாமும் நாகினி நடனமாடி வங்கதேசத்தை வெறுப்பேற்றலாம் என்ற எண்ணத்தில் மைதானத்திற்கு வந்திருந்தார்கள்.

இந்தத் தொடரில் மிகப் பெரிய ஜாம்பவான்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலி பங்கு பெறவில்லை.

இதனால் ரோகித் சர்மா அணியை வழி நடத்தினார். டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

இந்திய அணியில் விஜய் சங்கர் மற்றும் ஷர்டுள் தாகூர் பாரிவள்ளல் ஆக பந்து வீசினார்கள். இருவரும் சேர்ந்து வங்கதேச அணிக்கு 93 வழங்கினார்கள்.

வங்கதேசம் 166 ரன்கள்

வங்கதேச அணியின் சபீர் ரகுமான் அற்புதமாக ஆடி அரைசதம் அடித்து அணியின் ஸ்கோரை மெல்ல மெல்ல உயர்த்தி 70 ரன்கள் எடுத்தார். வங்கதேசம் அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது.

வங்கதேசம் அதிகபட்சமாக சபீர் ரகுமான் 77 ரஹீம் 9, இக்பால் 15, முகமது லா 21, மெஹந்தி ஹாசன் 19 ரன்கள் எடுத்தனர்.

இந்திய தரப்பில் சகால் 2 விக்கெட்டும், உடன்கட்டை 2 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்.

ரோகித் அரைசதம்

167 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் சர்மா மற்றும் ஷிகர் தவான் களமிறங்கினார்கள்

ஷிகர் தவான் 10 ரன்கள் எடுத்து இருக்கும்போது ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தார். ஆனால், ரோகித் சர்மா கேப்டன் என்கிற முறையில் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்தார்.

அடுத்து வந்த ரெய்னாவும் 2 பந்துகளில் ரன் ஏதும் எடுக்காமல் வெளியேற, ராகுல் தன் பங்கிற்கு 16 பந்துகளில் 24 ரன்கள் எடுத்து நடையைக்கட்டினார். ரோகித் சர்மா 56 ரன்களில் வெளியேறினார்.

மனிஷ் பாண்டே மற்றும் விஜயசங்கர் பொறுப்புடன் விளையாடுகிறோம் என்ற நோக்கில் டி20 போட்டியை ஒருநாள் போட்டி போல் விளையாடி அணியின் ரன் உயர்வை ஆமை வேகமாக எடுத்துச் சென்றார்கள். மணிஷ் பாண்டே 27 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

தினேஷ் மாஸ் எண்ட்ரி

தினேஷ் கார்த்திக் 18-வது ஓவரில் முதல் பந்தில் களமிறங்கினார், அப்பொழுது அணிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை இருந்தது.

வங்கதேச அணி வீரர் ரூபல் ஹுசைன் 19 ஓவரை வீச, அந்த ஓவரின் முதல் பந்தை தினேஷ் கார்த்திக் எதிர்கொண்டார்.

முதல் பந்தை சிக்சருக்கு அனுப்ப, இரண்டாவது பந்தில் நான்கு ரன்கள் அடித்தார், மூன்றாவது பந்தை சிக்சருக்கு அனுப்பினார்.

நான்காவது பந்தை ரன் எதுவும் எடுக்காமல், ஐந்தாவது பந்தில் 2 ரன்கள் எடுத்து, கடைசி பந்தில் 4 ரன்கள் எடுத்தார்.

அந்த ஓவரில் 22 ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை ஒரே ஓவரில் வெளுத்து அணியின் ரன்னை 155 ரன்கள் ஆக உயர்த்தினார்.

இந்தியா வெற்றி

கடைசி ஒரு ஓவரில் 10 ரன்கள் இந்தியாவிற்கு தேவையாக இருந்தது. வங்கதேச அணி வீரர் சௌமியா சர்க்கார் 20 வது ஓவரை வீச வந்தார்.

முதல் பந்தை எதிர்கொண்ட விஜயசங்கர் அகல பந்தாக அமைந்தது மீண்டும் வீச முதல் பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் அடுத்த பந்தில் ஒரு ரன் எடுத்தார்.

மூன்றாவது பந்தை எதிர்கொண்ட தினேஷ் கார்த்திக் மீண்டும் ஒரு ரன் எடுத்தார், நான்காவது பந்தை விஜய் சங்கர் பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார்.

அடுத்த பந்தில் விஜய் சங்கர் சிக்சருக்கு அனுப்பும் விதத்தில் மேலே தூக்கி அடித்து கேட்ச் கொடுத்து 19 பந்தில் 17 ரன்கள் வெளியேறினார்.

அடுத்ததாக வாசிங்டன் சுந்தர் களத்திற்கு வந்து பந்துவீச்சு முனையில் இறங்கினார். ஆட்டத்தின் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவை இருந்தது.

இந்தியா இறுதிப் போட்டியில் வாழ்வா சாவா என்ற கடைசி பந்தை எதிர்கொண்டார் தினேஷ் கார்த்திக்.

நீண்ட நேரம் எடுத்துக்கொண்டு சவுமியா சர்க்கார் பந்துவீச ஓடிவந்தார். இலங்கை ரசிகர்களும், இந்திய ரசிகர்களும் எழுந்து நின்றுவிட்டனர்.

வங்கதேசமா? இந்தியாவா? என்று எண்ணிக்கொண்டு சவுமியா சர்க்கார் வீச அதை தினேஷ் கார்த்திக் ஆப் சைடு பிளாட் சிக்சருக்கு தூக்கி, அந்த பந்து இறுதியில் கோட்டை தொடும் வரை பதட்டத்துடன் ரசிகர்கள் பார்க்க, பந்து சிக்சர் ஆக மாறி இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

கடைசி வரை ஆட்டமிழக்காமல் தினேஷ் கார்த்திக் 8 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரி என 29 ரன்கள் எடுத்தார்.

இந்த ஆட்டத்தின் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து இந்தியா வெற்றி பெற்றதும் விஜயசங்கர் பெருமூச்சுவிட்டு அவரது கிரிக்கெட் வாழ்க்கையை தினேஷ் கார்த்திக் காப்பாற்றினார்.

வங்கதேச தரப்பில் ரூபல் ஹுசைன் 2 விக்கெட்டும், ஷகிப் அல் ஹசன், இஸ்லாம், ரகுமான், சர்க்கார் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

ரசிகர்கள் வெறியட்டம்

இந்திய அணி வெற்றி பெற்றதும் இலங்கை ரசிகர்கள் அனைவரும் வங்கதேச அணியை பார்த்து நாகினி நடனமாடி அவர்களின் வெற்றி கொண்டதை அவர்களுக்கு செலுத்தினார்கள்.

ஏற்கனவே தோல்வியடைந்த வேதனையிலிருந்த அவர்கள், ரசிகர்களை பார்த்து மேலும் வேதனை அடைந்தார்கள்.

இது வங்கதேச அணிக்கு தேவையா என்று கேட்டால் தேவைதான் அவர்கள் ஒரு போட்டி வெற்றி பெற்று விட்டாலே மற்றவர்களை மட்டம் தட்டி கொண்டாடுவதிலும், ரசிகர்களை கேலி செய்து கொண்டாடுவதும், புதுமை என்ற பெயரில் கேவலமாக கொண்டாடுவதே கையாண்டு வந்தனர்.

அதற்கு தக்க பதிலடியாக இந்த நிடஹஸ் டிராபி இறுதி போட்டியில் இலங்கை ரசிகர்கள் கொடுத்த பாம்பு நடனமே.

ஆட்டநாயகன் விருது தினேஷ் கார்த்திக்கும் தொடர் நாயகன் விருதை வாஷிங்டன் சுந்தரும் வாங்கினார்கள். கோப்பையை ரோகித் சர்மா வாங்கி நம் இந்திய இளம் படை கையில் ஒப்படைத்தார்.

தினேஷ் கார்த்திக், டோனிக்கு முன்னாள் இந்திய அணியில் இடம் பிடித்து நீண்ட நாள் இடைவெளிக்கு பிறகு இந்திய அணிக்கு திரும்பி மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தார்.

3

18/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

18/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று உங்கள் ஆசைகள் நிறைவேறும் நாளாக இருக்கும். பணிகளில் நல்ல அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பண வரவு அபரிமிதமாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

புத பகவானை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

ரிஷப ராசிபலன்

இன்று செய்யும் காரியங்கள் அனைத்திலும் பொறுமையாக இருக்க வேண்டும். பணியிடத்தில் சுமூகமான சூழல் இருக்காது. குடும்பத்தில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. தனலாபம் குறைவாக இருக்கும்.

பெருமாளிற்கு விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

மிதுன ராசிபலன்

இன்று புத்துணர்ச்சி மிக்க நாளாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரச்சனைகள் சுமுகமாக முடியும். நிதிநிலை சிறப்பாக இருக்கும். ஆரோக்கியத்தில் குறையில்லை.

சிவ பெருமானை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

கடக ராசிபலன்

இன்று எதிர்பாராத நன்மைகள் கிடைக்கும். பணிகளில் அதிர்ஷ்டமான நாளாக இருக்கும். இல்லத்தில் பதட்டமான சூழல் நிலவும். வியாபாரத்தில் லாபம் சற்று மந்தமாக இருக்கும். கால்வலி ஏற்பட வாய்ப்புண்டு.

சந்திர பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

சிம்ம ராசிபலன்

இன்று வாழ்வின் மாற்றங்கள் பல நிகழும். பணியில் பொறுமையாக இருக்க வேண்டும். குடும்பத்தில் அனுசரித்து செல்ல வேண்டும். தன வரவு மகிழ்ச்சிகரமாக இருக்காது. உடற்பயிற்சி அவசியம் தேவை.

புத பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று சிறப்பான பலன்கள் கிடைக்கும். ஆன்மீக ஈடுபாடு நல்ல பலன்கள் தரும். பணியில் வெற்றி நிச்சயம். குடும்பத்தில் திருப்தியான சூழல் நிலவும். லாபகரமான நாளாக இருக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகாலட்சுமியை வழிபட நன்மைகள் கிடைக்கும்.

துலா ராசிபலன்

இன்று வீடு வாங்கும் திட்டங்கள் நிறைவேறும். பணியில் விளைவுகள் நன்மையாக இருக்கும். குடும்பத்தில் நல்லுறவு மேம்படும். நிதி வளர்ச்சி சாதகமாக இருக்கும். உடல் ஆற்றல் சிறப்பாக இருக்கும்.

பெருமாளிற்கு விளக்கேற்றி வழிபட கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்று பொறுப்புகள் அதிகமாக இருக்கும். ஆன்மீக ஈடுபாடு நன்மை அளிக்கும். பணியில் சில பிரச்சனைகள் சந்திக்க நேரிடும். துணையிடம் அன்பான அணுகுமுறை தேவை. பொருளாதார நிலை மந்தமாக இருக்கும். தூக்கமின்மையால் சோர்வுடன் இருப்பீர்கள்.

தன்வந்திரி பகவானை விளக்கேற்றி வழிபட நன்மைகள் வரும்.

தனுசு ராசிபலன்

இன்று முக்கிய முடிவுகள் எதுவும் எடுக்க வேண்டாம். ஆன்மீக பாடல்கள் கேட்பதால் மனம் அமைதி பெறும். பணியில் கவனம் தேவை. உறவுகளில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு. தனலாபம் போதுமான அளவு இல்லாத நாளாகும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை.

விநாயகரை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

மகர ராசிபலன் 

இன்று நீங்கள் அமைதியாக இருக்க வேண்டிய நாளாகும். பணியிடத்தில் நகைச்சுவை உணர்வுகளை வெளிபடுத்த வேண்டிய நாள். வீட்டில் பூசல்கள் வர வாய்ப்புண்டு. வியாபாரத்தில் சிக்கல் வரலாம். கண்களில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

கருடனை விளக்கேற்றி வழிபட மன பலம் கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

இன்றைய நாள் முழுதும் இனிமையான சூழல் நிலவும். வேலைகள் சுலபமாக முடியும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பணவரவு திருப்தியாக இருக்கும். உடல்நிலையில் எந்த குறையும் இல்லை.

மகாலட்சுமியை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

மீன ராசிபலன் 

இன்று உங்களின் முயற்சி அதிமாக தேவையான நாளாகும். பணியிடம் மாற்றம் பெற வாய்ப்புண்டு. வீட்டில் உற்சாகம் குறையும். பணவரவு மிகவும் குறையும். தேக பலம் குறைந்து சோர்வுடன் இருப்பீர்கள். வெயிலில் செல்வதை தவிர்க்கவும்.

பெருமாள் கோயில் கட்டாயம் சென்று வரவும்.

18/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம்: தனுஷ் படக்குழு!

0
Dhanush Jagame Thandhiram

Dhanush; அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம்: தனுஷ் படக்குழு! அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம் என்று தனுஷ் படக்குழு அறிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது.

சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

இந்தியாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

மக்களிடையே கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக இன்று முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. திரையரங்குகளும் மூடப்பட்டுள்ளன. சினிமா பிரபலங்களும் கொரோனா வைரஸ் குறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், இந்த வாரம் கிட்டத்தட்ட 10 படங்கள் வெளியாக இருந்தது. அனைத்து படங்களுமே தள்ளி வைக்கப்பட்டுள்ளது. நேற்று சந்தானம் நடிக்கும் புதிய படத்தின் பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு துவங்கியது.

அதற்குள்ளாகவே நிறுத்தப்பட்டு, ஏப்ரல் மாதத்திற்கு தள்ளி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கொரோனா வைரஸ் குறித்து தனுஷின் ஜகமே தந்திரம் படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, COVID19 வைரஸால் ஏற்பட்ட உலகளாவிய தொற்றுநோயால், YNot Studios, நிறுவனத்தின் நிலைமை மேம்படும் வரை அனைத்து படங்களுக்கான நிர்வாக, போஸ்ட் புரோடக்‌ஷன், விளம்பர பணிகளை நிறுத்தி வைக்கிறது.

அனைவரும் ஆரோக்கியத்தோடு இருக்க விரும்புகிறோம் என்று பதிவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஒருவர் திடீர் மயக்கம் அடைய என்ன காரணம்?

7
நரம்பு மண்டலம் திடீர் மயக்கம் faint abruptly

ஏன் மக்கள் திடீர் மயக்கம் (faint abruptly) அடைகிறார்கள். மருத்துவக்காரணங்கள் நிறைய உள்ளன. ஆயினும் நாம் எடுத்துக் கொள்கின்ற விதம் பலவகை.

திடீர் மயக்கம் அடைவதால் அவர்கள் மனம் மற்றும் நரம்பு மண்டலம் பாதிக்கப்படும். பொதுவாக காலை உணவை தவிர்ப்பதாலும் மயக்கம் ஏற்படும். மன அழுத்தத்தினாலும் ஏற்படும் வாய்ப்புள்ளது.

ஆக்ஸிஜன் மூளை வரை செல்வது தடைபடும் வாய்ப்புள்ளது. குறைவான இரத்த அழுத்தம் காரணமாகவும் மயக்கமடையும் வாய்ப்புகள் உள்ளன.

நுரையீரல் காரணமும் உள்ளது ஆக்ஸிஜன் தேவை குறைவாக உள்ளதால் மூளைக்கு செல்வது தடைபட்டு தலைசுற்றல், வாந்தி, மயக்கம் போன்ற விளைவுகள் ஏற்படும்.

சுவாசிப்பது அதிகமாகும் பொழுதும் மயக்கமடையலாம், நுரையீரல் அல்லது இரத்தம் சரியாக செல்லாமல் இருப்பதால் கார்பன் மோனாக்ஸைடு விஷமாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.

இதயத்துடிப்பு அதிகமாகும் பொழுது நமது மூளைக்கு அதிகமான ஆக்ஸிஜன் கொண்டு செல்கிறது. இதனால் குறைவான இரத்த அழுத்தம் மற்ற பாகங்களுக்கு செல்கின்றது.

இதனால் மூளை அதிகப்படியான இரத்தத்தை மற்ற பாகங்கள் ஏற்கப்படும். இதயத்துடிப்பு அதிகமானால் அதிக இரத்த அழுத்தம் ஏற்படும் இதன் விளைவு கோமாவிற்கு செல்லும் வாய்ப்பு ஏற்படும். அல்லது தசை வீக்கம் மற்றும் மயக்கம் ஏற்படும்.

Faint Abruptly மூலக்காரணம்:- நரம்பு மண்டல பாதிப்பு Autonomous nervous system (ANS), Neurally mediated syncope (NMS)

ANS:-

உடல்நிலை செயல்களை கட்டுப்படுத்தி இதயதுடிப்பு, செரிமானம் பாதிப்புகளை உண்டாக்கும்.

NMS:-

இதயத்துடிப்பை மெதுவாகவும், சீரான வகையில் மூளைக்கு ஆக்ஸிஜனை கொண்டு செல்லவும் பயன்படுகிறது.

NMS மற்ற காரணிகள்

திடீர் அதிர்ச்சி, இரத்ததை பாதிக்கும். விரும்பத்தாக காரணங்களினாலும் பாதிப்பு ஏற்படும் மயக்கத்திற்கு காரணம் அதிர்ச்சி தரக்கூடிய காரணம் ரொம்ப காலம் நிற்பதாலும், அதிகப்படியான வெப்ப சூழ்நிலையில் வாழ்வதாலும் மயக்கம் ஏற்படும்.

அதுமட்டுமல்லாமல் வறட்சி, நீரிழிவு காரணம், வயிற்றழச்சல், அதிகப்படியான மருத்துகளை உட்கொள்தல், மது உட்கொள்தல் போன்றவையும் திடீர் மயக்கத்திற்க்கு காரணமாகும்.

3

இவர்தான் காலேஜ் டீன்: வைரலாகும் விஜய் ஐடி கார்டு!

0
Vijay ID Card

Master Vijay ID Card; ஓஓ இவர்தான் தான் காலேஜ் டீனாக்கும்: வைரலாகும் காலேஜ் ஐடி கார்டு! விஜய்யின் ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய் அணிந்திருக்கும் ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master Vijay ID Card). வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதற்கு முன்னதாக வரும் 22 ஆம் தேதி மாஸ்டர் டிரைலர் வெளியாக இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு மாஸ்டர் இசை வெளியீட்டு விழா நடந்தது. இதில், மாஸ்டர் படக்குழுவினர் கலந்து கொண்டு பேசினர்.

விஜய்யும் வழக்கம் போல் கதை சொன்னார். ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவர் கோட் சூட்டில் வந்தார். நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காக இவ்வாறு வந்ததாக குறிப்பிட்டார்.

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.

ஆனால், பலரும் அறியாத ஒன்று அவர், கல்லூரியில் மாணவர்களின் டீன். மாஸ்டர் படத்தில் விஜய் அணிந்திருக்கும் ஐடி கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்யின் கதாபாத்திரம் ஜான் துரைராஜ் என்றும், செயிண்ட் ஜெப்பேரிஸ் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியில் மாணவர்களின் டீனாக பணியாற்றுகிறார் என்றும் அந்த ஐடி கார்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த ஐடி கார்டில், விஜய் கண்ணாடி அணிந்திருப்பது போன்ற அவரது பழைய புகைப்படம் இடம்பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

3

இவரையும் விட்டு வைக்கவில்லை; கொரோனா கைவரிசை

0
கொரோனா கைவரிசை
கோசோ தஷிமா

இவரையும் விட்டு வைக்கவில்லை கொரோனா கைவரிசை

ஜப்பானில் திட்டமிட்டபடி ஒலிம்பிக் நடைபெறுமென கூறிய நிலையில் ஒலிம்பிக் துணை தலைவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவின் வூஹானில் கடந்த ஆண்டு டிசம்பரில், ‘கோவிட்-19’ எனும் கொரோனா வைரஸ் பரவியது. உயிர் பலி வாங்கி வரும் இந்த வைரஸ், சீனா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளுக்கும் பரவி வருகிறது.

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி தலைவர் தாமஸ் போச், ‘கொரோனா வைரசால் எந்தவித அச்சமும் இல்லை. டோக்கியோ ஒலிம்பிக் போட்டியை திட்டமிட்டபடி நடத்துவதுதான் எங்கள் நோக்கம்’ -எனத் தெரிவித்தார்.

ஜப்பான் ஒலிம்பிக் கமிட்டியின் துணைத்தலைவரான கோசோ தஷிமாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் கிரீஸில் பொதுமக்கள் யாரும் பங்கேற்காமலே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கொரோனா விளைவு: 2020 ஒலிம்பிக்கில் இந்தியா விளையாடுமா?

3

மீண்டும் சிம்பு – சுரேஷ் காமாட்சி இடையில் பஞ்சாயத்தா?

0
Simbu Maanaadu

Maanaadu; மீண்டும் சிம்பு – சுரேஷ் காமாட்சி இடையில் பஞ்சாயத்தா? சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படத்தின் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக சிம்பு நடிப்பில் உருவாகி வரும் மாநாடு படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் சிம்பு நடிக்கும் புதிய படம் மாநாடு. இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. தொடர்ந்து ஹைதராபாத்தில் கடந்த வாரம் முழுவதும் படப்பிடிப்பு நடந்தது.

உலகத்தை அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியிருப்பது கொரோனா வைரஸ். இதன் காரணமாக, தென்னிந்தியா முழுவதும் படப்பிடிப்பும், படங்கள் திரையிடப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், சிம்புவின் மாநாடு படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்படியிருக்கும் போது மீண்டும் சிம்புவிற்கும், சுரேஷ் காமாட்சிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டதாக தகவல் பரவி வருகிறது.

மேலும், இருவரையும் கலாய்த்து நெட்டிசன்கள் வீடியோ வெளியிட்டனர். தற்போது இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சுரேஷ் காமாட்சி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

இந்தியன் 2 படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் எங்களது சகோதர்கள் உயிரிழந்தவர்கள்.

அவர்களது இழப்பையே எங்களால் இன்னமும் தாங்கிகொள்ள இயலவில்லை. இந்த கொரோனாவுக்கா இடம் கொடுப்போம்?

அரசியல் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இந்தப் படத்தில் பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கல்யாணி பிரியதர்ஷன், ஒய்ஜி மகேந்திரன், மனோஜ் ஆகியோர் பலர் நடிக்கின்றனர்.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

கொரோனா வைரஸ்: யாரும் பயப்பட வேண்டாம்: பிரபலங்கள் கருத்து!

0
Corona Virus

Corona Virus; கொரோனா வைரஸ்: யாரும் பயப்பட வேண்டாம்: பிரபலங்கள் கருத்து! கொரோனாவுக்கு யாரும் படயப்பட வேண்டாம், மனதை மட்டும் திடப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பு இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் காரணமாக பள்ளி, கல்லூரி, ஷாப்பின் மால்ஸ், திரையரங்குகள் ஆகியவை மூடப்பட்டுள்ளன.

கொரோனா வைரஸ் குறித்து சினிமா பிரபலங்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

விஜய் சேதுபதி

கொரோனா வைரஸ் பற்றி யாரும் பயப்பட வேண்டாம். மனதை மட்டும் பலப்படுத்திக்கொள்ள வேண்டும். தைரியமாக இருக்க வேண்டும். மனிதனை காப்பாற்ற மனிதன் தான் வருவான். வேறு யாரும் வரமாட்டார்கள்.

கூடப்பிறந்த உறவினர்கள் கூட நம்மை தொட்டு பேசுவதற்கு தயங்கும் இந்த நேரத்தில் நம்மை பாதுகாத்து வரும் மருத்துவர்களுக்கு நன்றி என்று மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

ரம்யா சுப்பிரமணியம்

அனைவரும் வேலை செய்யும் இடங்களிலும் கை அழம்புவதற்கு liquid wash வைத்துக் கொள்ள வேண்டும். வெளியில் எங்கும் சென்று வந்தால் கைல் அலம்பும் வேண்டும்.

Tissue வாங்கி வைத்துக் கொண்டு அதனை பயன்படுத்த வேண்டும். யாரையும் ஒதுக்கி வைக்க வேண்டாம். அவர்களையும் நாம் பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

இவர்களைத் தொடர்ந்து சூர்யா, ஆர்யா, காஜல் அகர்வால் ஆகியோர் கொரோனா வைரஸ் குறித்து விழிப்புணர்வு சேலஞ்ச் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

விஷால்

கொரோனா வைரஸ்க்கு எதிரான இந்த போரில் அனைவரும் வலிமையாகவும், ஒற்றுமையாகவும் இருக்க வேண்டும். பாதுகாப்பாகவும், உட்புறமாகவும் இருக்க வேண்டும்.

கொரோனாவை ஒழிப்பதற்கு உயர்ந்த சுகாதாரத்தை பராமரிக்க இந்த செய்தி குறித்து அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும் என்று விஷால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

3

இன்று புனீத் ராஜ்குமார் பிறந்தநாள்!

0
HBD Puneeth Rajkumar

Puneeth Rajkumar; இன்று புனீத் ராஜ்குமார் பிறந்தநாள்! கர்நாடக நடிகர் புனீத் ராஜ்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

நடிகர் புனீத் ராஜ்குமார் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

சென்னையில் பிறந்தவர் நடிகர் புனீத் ராஜ்குமார் (Puneeth Rajkumar). ராஜ்குமார் மற்றும் பர்வதம்மா தம்பதியினருக்கு 5 ஆவது மற்றும் கடைசியாக பிறந்தவர்.

புனீத் ராஜ்குமார் 6 வயதாக இருக்கும் போது குடும்பத்தோடு மைசூருக்கு சென்றுவிட்டனர்.

6 மாத குழந்தையாக இருக்கும் போதே கன்னடத்தில் வெளியான பிரேமதா கனிகே என்ற படத்தில் நடித்தார். தொடர்ந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான அப்பு என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தற்போது புனீத் ராஜ்குமார் நடிப்பில் யுவரத்னா மற்றும் ஜேம்ஸ் ஆகிய படங்களில் உருவாகி வருகிறது.

கிட்டத்தட்ட 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். நடிகரைத் தொடர்ந்து தயாரிப்பாளராகவும், பாடகராகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், இன்றுதனது 45 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்து தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் புனீத் ராஜ்குமார் சார்….

புனீத் ராஜ்குமாரின் பிறந்தநாளை முன்னிட்டு #HBDPowerstar என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

3