Home Blog Page 214

கிரிக்கெட் ரிவைன்ட் : உலக கோப்பையை இலங்கை தொட்ட நாள் இன்று

0

உலக கோப்பையை இலங்கை தொட்ட நாள் இன்று

கத்துக்குட்டி இலங்கை

சிலோன் அணி என்ற பெயரில்  1926-27 ஆம் ஆண்டு விளையாடிய இலங்கை அணி. 1982 ஆம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்தை பெற்று கத்துக்குட்டி அணியாக வலம் வந்தது.

1975, 1979, 1983, 1987, 1992-ஆம் ஆண்டு உலககோப்பையில் பெரிதாக வெற்றிகள் பெறாமல் லீக் போட்டியோடு வெளியேறியது இலங்கை.

1996 உலககோப்பை

இந்தியா பாகிஸ்தான் இலங்கை மூன்று நாடுகளும் இணைந்து 1996 ஆம் ஆண்டு உலக கோப்பை போட்டியை நடத்தியது.

அர்ஜுனா ரணதுங்கா கேப்டனாகவும் அரவிந்த டீ சில்வா துணை கேப்டனாகவும் களமிறங்கிய இலங்கை அணியில் ஜெயசூர்யா, அட்டப்பட்டு, முரளிதரன், உபுல் சந்தனா,  சமந்தா வாஸ், குமார் தர்மசேனா போன்ற ஜாம்பவான்கள் விளையாடினார்கள்.

இந்திய அணி

அந்த காலகட்டத்தில் முகமது அசாருதீன் தலைமையில் இந்திய அணி பல வெற்றிகளை குவித்து வந்தது. சொந்த மண்ணில் உலக கோப்பை நடைபெறுவதால் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை அணிகளில் ஏதாவது ஒரு அணி வெற்றிபெறும் என நினைத்தார்கள்.

பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் அணி நடப்பு சாம்பியன் அணியாக களமிறங்கியது. அந்த அணியில் வாசிம் அக்ரம் தலைமையில் வக்கார் யூனிஸ், சைய்து அன்வர், ஜாவித் மியாண்டட், சொக்லைன் முஸ்தாக், இன்சமாம் உல் ஹாக் போன்ற வீரர்கள் கலந்து கொண்டார்கள்.

ஆஸ்திரேலியா அணி

கிரிக்கெட்டில் அசைக்கமுடியாத ஜாம்பவானான ஆஸ்திரேலியா அணியில் மார்க் டெய்லர் தலைமையில் மார்க் வாக், ஸ்டீவ் வாக், ரிக்கி பாண்டிங், ஷேன் வார்ன், மைக்கேல் ஸ்லேட்டர், ஸ்டார்ட் லா, கிளன் மெக்ராத்,  டேமியன் பிளமிங் போன்றவர்கள் களமிறங்கினார்கள்.

அனைவரும் எண்ணியது இந்த தடவை கண்டிப்பாக ஆஸ்திரேலியா  கோப்பையை வெல்லும்.

மும்பை பாதுகாப்பு

மும்பையில் நடந்த லீக் போட்டியில் இலங்கையும் ஆஸ்திரேலியா மோதுவதாக இருந்தது, ஆனால் மும்பையில் பாதுகாப்பு அச்சம் காரணமாக ஆஸ்திரேலியா அணி விளையாட மறுத்தது.

இதனால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றொரு லீக் போட்டியில் உலக கோபபையை நடக்கும் இந்தியாவும் இலங்கையும் மோதியது. 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை இலங்கை அணியை வீழ்த்தியது.

இந்த தொடர் முழுவதும் சச்சின் டெண்டுல்கர் தனது முழு திறமையுடன் விளையாடி தொடர்ந்து லீக் போட்டிகளில் இரண்டு சதங்கள் இரண்டு அரை சதங்கள் எடுத்தார்.

அரையிறுதி போட்டிகள்

இந்த உலக கோப்பையில் தான், முதல்முறையாக 12 அணிகள் பங்கு பெற்றது இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு அணியும் மற்ற ஐந்து அணிகளுடன்  விளையாட வேண்டும்.

பிரிவு ‘ஏ’ வில் இலங்கை அனைத்து போட்டியிலும் வென்று முதலிடத்தை பெற்றது.

இந்த உலகக் கோப்பையில் அரையிறுதிப் போட்டியில் இந்தியா, இலங்கை, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ் அணி தகுதி பெற்றது.

முதல் அரையிறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணி  கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்தது.

பல சர்ச்கைகளுடன் போட்டி முடிவுக்கு வந்தது ரசிகர்கள் செய்த குழப்பத்தால் இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் ஆஸ்திரேலிய அணியும் களம் கண்டது. ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதி போட்டி

மார்ச் 17 ஆம் தேதி 1996 ஆம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் கடாபி மைதானத்தின் 63 ஆயிரம் ரசிகர்கள் மத்தியில் இறுதிப்போட்டி தொடங்கியது.

மூன்றாவது முறை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா, இறுதிப் போட்டியில் முதன் முறையாக சந்திக்கும் இலங்கை அணியை எதிர்கொண்டது.

டாசில் வென்ற அர்ஜுனா ரணதுங்கா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

ஆஸ்திரேலியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 241 ரன்கள் எடுத்தது.

மார்க் டெய்லர் பெறுமை

ஆஸ்திரேலிய அணியின் அதிகபட்சமாக கேப்டன் இன்னிங்ஸ் ஆடிய மார்க் டெய்லர்  74 ரன்னும், ரிக்கி பாண்டிங் 45 ரன்னும், மைக்கேல் பெவன் 36 ரன்னும் எடுத்தனர்.

இலங்கை அணியின் அரவிந்த் டி சில்வா 3 விக்கெட்களை வீழ்த்தினார்.

242 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இலங்கை அணி 46.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 245 ரன்கள் எடுத்தது.

ரனதுங்கா சதம்

இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் முறையாக உலகச் சாம்பியன் பட்டத்தை வென்றது இலங்கை அணி.

இலங்கை தரப்பில் அதிக பட்சமாக துணைக் கேப்டன் அரவிந்த டீ சில்வா சதமடித்து 107 ரன்கள் எடுத்தார், குரு சிங்கா 62 ரன்கள், ரணதுங்கா 41 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வித்திட்டனர்.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் பிளம்மிங் மற்றும் ரைபிள் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

விருதுகள்

ஆட்ட நாயகன் விருதை அரவிந்த டீ சில்வா வென்றார் தொடர் நாயகன் விருதை சனத் ஜெயசூர்யா தட்டிச் சென்றார்.

இந்திய ரசிகர்கள் அப்போது இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இலங்கையின் அர்ஜுனா ரணதுங்கா தலைமையில் கோப்பையை அந்த அணி பெற்ற நாள் இன்று

3

Jyothika: பொன்மகள் வந்தாள் இசை வெளியீட்டு விழா ரத்து!

0
Ponmagal Vandhal Audio Launch

Ponmagal Vandhal Audio Launch; பொன்மகள் வந்தாள் இசை வெளியீட்டு விழா ரத்து! ஜோதிகாவின் நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் இசை வெளியீட்டு விழா ரத்து செய்யப்பட்டுள்ளது.

பொன்மகள் வந்தாள் இசை வெளியீட்டு (Ponmagal Vandhal Audio Launch) விழா ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

பெண்களை மையப்படுத்திய இந்தப் படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட், செகண்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் நல்ல வரவேற்பு பெற்றது.

வரும் 27 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் படம் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அறிவித்தபடி படம் திரைக்கு வருமா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது. காரணம், உலகத்தை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் (Corona Virus).

சீனா, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளில் கோரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக 1 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, ஐடி நிறுவனங்கள், இன்ஜினியரிங் நிறுவனங்கள் ஆகியவற்றிற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக திரையரங்குகளும் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படப்பிடிப்பும் நிறுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாக இந்த வாரம் திரைக்கு வரும் 10 படங்களின் ரிலீஸும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இன்று ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் படத்தின் இசை வெளியீடு நடக்க இருந்தது. ஆனால், அது ரத்து செய்யப்பட்டுள்ளது.

எப்போது நடைபெறும் என்பது குறித்து விரைவில் அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராட்சசி படத்திற்காக சிறந்த நடிகைக்கான jfw movie awards 2020 விருது வழங்கப்பட்டது. அதில், ஜோதிகா சிலம்பம் சுற்றி ரசிகர்களை வியக்க வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

திருநெல்வேலியில் செல்போன் சுவிட்ச்ஆப்; கொரோனாவை பரப்பிய மலையாளி

0

திருநெல்வேலியில் செல்போன் சுவிட்ச்ஆப்; கொரோனாவை பரப்பிய மலையாளி. கொரோனா பாதித்த ஒருவர் கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் புகுந்துள்ளார்.

கொரோனாவை பரப்பிய மலையாளி

நேற்று முன்தினம் திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில், காய்ச்சல் அறிகுறியுடன் அஜீஸ் என்பவர் வந்துள்ளார். கொரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்து உள்ளனர்.

அவரை கொரோனா பிரிவிற்கு மாற்ற ஏற்பாடுகள் நடந்துள்ளது. ஆனால் அந்த நபர் மருத்துவர்கள் கூறுவதை நம்பவில்லை.

தனக்கு சாதாரண காய்சல் தான் உள்ளது; வேண்டும் என்றே கொரோனா பீதியை கிளப்புவதாக நினைத்த அந்த நபர், நேராக அங்கிருந்து தப்பி ஓடி உள்ளார்.

கண்மூடி திறப்பதற்குள் அங்கிருந்து எஸ்கேப் ஆகியுள்ளார். கேரளாவில் இருந்தால் எப்படியும் பிடித்து விடுவார்கள் என நினைத்த அந்த நபர் தமிழகத்திற்குள் நுழைந்து உள்ளார்.

மருத்துவமனை வந்த அந்த நபர் கொடுத்த முகவரி மற்றும் செல்போன் எண்ணை ட்ராக் செய்ததில் போன் நாகர்கோவில்-திருநெல்வேலி நான்கு வழிச் சாலையில் பயணித்தது தெரியவந்துள்ளது.

திருநெல்வேலியை நெருங்கிய சமயத்தில் போன் எண் சுவிட்ச் ஆப் ஆகியுள்ளது. அவர் நேராக மதுரை சென்றாரா? சென்னை சென்றாரா? அல்லது திருநெல்வேலியிலேயே இறங்கிவிட்டாரா எனத் தெளிவாக தெரியவில்லை.

இந்த செய்தி நேற்று கேரளா ஊடங்கங்கள் பிரேக்கிங் செய்தியாக ஒளிபரப்பி உள்ளனர். இருப்பினும் தமிழகத்தில் இது குறித்து காவல் துறை விழிப்புடன் செயல்படவில்லை.

கேரளா பேருந்துகளை முறையாக சோதனை செய்யவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்து உள்ளது. அவருக்கு கொரோனா இருப்பது 100% உறுதியாகவில்லை.

இருப்பினும் பொதுமக்கள் முகம் தெரியாத நபர்களிடம் நெருங்கிப் பேசுவதை தவிர்க்கவும். கேரளா, கர்நாடகா எல்லையில் வசிப்பவர்கள் சற்று விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

2000 பேருக்கு கொரோனா பரப்பிய பெண்

சில தினங்களுக்கு முன்பு பெங்களூரு ஐடி ஊழியரின் மனைவி கொரோனா தொற்றுடன் டெல்லி வரை சென்று 2000 மேற்பட்ட நபர்களிடம் கொரோனாவை பரப்பியது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில் பொதுமக்கள் மருத்துவர்கள் கூறுவதை சற்று நம்பிக்கையுடன் கடைபிடியுங்கள். உங்களுக்கு உண்மையில் கொரோனா தொற்று இருந்து அது மற்றவர்களுக்கு பரவிடக்கூடாது என்ற மனநிலையில் உறுதியாக இருங்கள்.

நமக்கு வந்தது எல்லோருக்கும் வரட்டும் என்ற மனநிலையில் இருந்தால், நிச்சயம் இந்த நாடே அழியும் அபாயம் உருவாகும்.

3

சாய்னா நேவால் பிறந்தநாள் இன்று

0

இந்தியாவில் கிரிக்கெட் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் தவிர மற்ற விளையாட்டு போட்டிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நல்லா விளையாடினாலும் வெற்றிகள் பெற்றாலும் இங்கு உள்ள இந்திய ரசிகர்களை கவர்வது மிகவும் கடினமான ஒன்று .

சாய்னா நேவால்

இப்படி பேட்மிண்டன் போட்டியில் ஒலிம்பிக் பதக்கத்தை வாங்கி இந்தியாவுக்கு பெருமை சேர்த்து இந்திய ரசிகர்களையும், இந்திய மக்களையும் திரும்பி பார்க்க வைத்தவர்தான் சாய்னா நேவால்.

1990 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி ஹரியானா மாநிலத்தில் ஹிசார் என்னுமிடத்தில் ஹர்விர் சிங் நேவால் மற்றும் உஷாராணி நேவாலுக்கு பிறந்தவர்தான் சாய்னா நேவால்.

இவர் இந்தியாவின் ஒற்றையர் பிரிவு தொழில்முறை பேட்மிட்டன் வீராங்கனை ஆவார். இவர் முன்னாள் உலக தரவரிசையில் நம்பர் ஒன், 24 சர்வதேச பட்டம் மற்றும் 11 சூப்பர் சீரிஸ் பட்டம் பெற்றுள்ளார்.

தரவரிசை முதலிடம்

2009ஆம் ஆண்டு உலக தரவரிசையில் இரண்டாவது இடம் பிடித்த சாய்னா நேவால் 2015ஆம் ஆண்டு அதாவது ஆறு ஆண்டுகளுக்கு பிறகுதான் உலகத் தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்.

இந்திய வீராங்கனைகளில் முதலிடம் பிடித்த முதல் வீராங்கனை ஆவார். ஒட்டுமொத்த ஆண்கள் மற்றும் பெண்கள் தரவரிசையில் முதலிடம் பிடித்த இரண்டாவது வீரரும் ஆவார்.

இதற்கு முன்னாள் ஆண்கள் பிரிவில் பிரகாஷ் படுகோனே முதலிடத்தில் இருந்துள்ளார்

இவர் தனது வாழ்நாள் போட்டியில் 433 வெற்றிகளும் 195 தோல்விகளும் பெற்றுள்ளார்.

பதக்கங்கள்

இவர் ஒலிம்பிக் போட்டியில் ஒரு வெண்கல பதக்கம் வென்றுள்ளார் மூன்று முறை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டுள்ள இவர். தான் பங்கு பெற்ற இரண்டாவது முறை 2012-ம் ஆண்டு நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்த பதக்கத்தை வென்றார்.

உலகச் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளி மற்றும் வெங்கலம் வென்றுள்ளார். உபர் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு முறை வெண்கலம் வென்றுள்ளார்.

காமன்வெல்த் போட்டிகளில் 3 தங்கம் மற்றும் இரண்டு வெண்கலம் என்று மொத்தம் 5 பதக்கங்கள் வென்றுள்ளார்.

ஆசிய கேம்ஸ் போட்டியில் இரண்டுமுறை வெண்கலப் பதக்கமும், ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் மூன்று முறை வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.

பாரதிய ஜனதா இனைந்தார்

கடந்த சில காலங்களாகவே இவர் போட்டிகளில் பெரிதாக சோபிக்கவில்லை. தற்போது கடந்த ஜனவரி மாதம் 20ஆம் தேதி பாரதிய ஜனதாவில் இணைந்து அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். இன்று இவர் தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்

3

17/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

17/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

இன்று ஆன்மீக வழிபாடு அவசியம். பக்தி மட்டுமே உங்களின் நாளை மாற்றும். பணியில் நல்ல ஈடுபாடு இருக்கும்.

வீட்டில் பொறுமை அவசியம். பண புழக்கம் குறைவாக இருக்கும். தலைவலி வர வாய்ப்புண்டு.

முருகன் வழிபாடு நன்மை அளிக்கும்.

ரிஷப ராசிபலன்

இன்று மிகவும் முக்கியமான தீர்மானங்களை தவிர்க்கவும். பிராத்தனை நல்ல பலன்களை தரும்.

பணியில் இன்பமான சூழல் இருக்காது. வீட்டில் குழப்பமான சூழல் நிலவும். பணவரவு பெரிதாக இருக்காது. கண் எரிச்சல் ஏற்பட வாய்ப்புண்டு.

அங்காரக பகவானிற்கு விளக்கேற்றி வழிபட துன்பங்கள் தீரும்.

மிதுன ராசிபலன்

இன்று லாபகரமான நாளாக இருக்கும். பங்கு வர்த்தகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். பணியில் உற்சாகமான சூழல் இருக்கும்.

இல்லத்தில் மகிழ்ச்சி நிலவும். பிரச்சனைகள் தீரும். தன லாபம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இல்லை.

முருகப்பெருமான் வழிபாடு கூடுதல் பலன்களை தரும்.

கடக ராசிபலன்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். சிறந்த அறிவாற்றலுடன் இருப்பீர்கள். பணியில் திறம்பட செயலாற்றுவீர்கள்.

குடும்பத்தில் நல்லிணக்கம் ஏற்படும். தேவையான பணம் வந்து சேரும். உடல் ஆற்றல் மேம்படும்.

காளியம்மனை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

சிம்ம ராசிபலன்

இன்று பரப்பரப்புடன் இருப்பீர்கள். தியானம் அவசியம் தேவையாகும். தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு.

பணியில் கவனம் தேவை. குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் வரும். பண இழப்பு ஏற்படலாம். முதுகுவலி ஏற்பட வாய்ப்புண்டு.

அங்காரக பகவானை விளக்கேற்றி வழிபட கவலைகள் தீரும்.

கன்னி ராசிபலன் 

இன்று இன்ப துன்பங்கள் கலந்த நாளாக இருக்கும். நாள் இறுதியில் வெற்றி கிடைக்கும்.

பணியில் உழைப்பு தேவையாகும். வீட்டில் விவாதங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. வரவும் செலவும் சமமாக இருக்கும். தலைவலி ஏற்பட வாய்ப்புண்டு.

துர்கையை விளக்கேற்றி வழிபட நன்மைகள் வந்து சேரும்.

துலா ராசிபலன்

இன்று பயணங்கள் நிறைந்த நாளாக இருக்கும். பொறுமையாக இருங்கள். பணியில் வெற்றி கிடைக்க முயற்சிகள் அவசியம்.

உறவுகளில் விரிசல் ஏற்படலாம். இருப்பதை வைத்து இன்பமான வாழ்க்கை வாழ்வும். வீட்டில் தாய் தந்தை ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

சிவபெருமானை வழிபட கவலைகள் குறைந்து விடும்.

விருச்சிக ராசிபலன்

இன்று சிறப்பான நாளாக இருக்கும். தன்னம்பிக்கை மூலம் வெற்றி காண்பீர்கள்.

காதல் வலுவாக இருக்கும். பேச்சில் மட்டுமே கவனம் தேவை. வருமானம் சிறப்பாக இருக்கும். சூடு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்.

மாரியம்மனை விளக்கேற்றி வழிபட பிரச்சனை தீரும்.

தனுசு ராசிபலன்

உங்கள் சிந்தனையை கேளிக்கையில் செலுத்தவும். அன்பான பேச்சு வார்த்தை அவசியம். பணி சாதகமான இருக்காது.

குடும்பத்தில் கருத்து வேறுபாடு வரும். தேவையற்ற செலவுகள் வரலாம். இறை வழிபாடு அவசியம். தோல் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

முருகப்பெருமானை வழிபட பிரச்சனை குறையும்.

மகர ராசிபலன் 

இன்று பொறுப்புகளை முடிப்பதில் கவனமாக இருப்பீர்கள். சக பணியாளர்கள் இடைய சர்ச்சைகள் ஏற்படும்.

துணையிடம் நல்லுறவு இருக்காது. மோதல்கள் ஏற்படலாம். பணவரவு முன்பை விட குறையும். கால் வலி ஏற்படலாம்.

ராகு பகவானை தீபமேற்றி வழிபடுங்கள்.

கும்ப ராசிபலன்

இன்று இன்பத்தை வழங்கும் நாளாகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணியில் பாராட்டுகள் குவியும்.

துணையுடன் வெளியிடங்கள் சென்று வருவீர்கள். தொழிலால் நல்ல லாபம் கிடைக்கும். ஆரோக்கியம் குறையில்லை.

நாக தேவதையை விளக்கேற்றி வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.

மீன ராசிபலன் 

பணிகள் அதிகமாக இருக்கும். நாள் முழுதும் உழைக்க வேண்டிய நிலை இருக்கும். பணிகளை திட்டமிட்டு செய்ய வேண்டும்.

குடும்பத்தில் வாயால் பிரச்சனைகள் குவியும். பணவரவு போதுமானதாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் அவசியம்.

துர்கையை விளக்கேற்றி வழிபடுங்கள் கவலைகள் தீரும்.

17/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர்

21
நம் முன்னோர்கள்

கொரோனா போன்ற கிருமிகளை நம் முன்னோர்கள் எப்படி ஓட ஓட விரட்டினர். முன்னோர்கள் வைரஸ் போன்ற கிருமிகளிடம் இருந்து எப்படி பாதுகாத்துக்கொண்டனர் என இப்பதிவில் பார்க்கலாம்.

பழமையை மறந்தோம்

நம் முன்னோர்கள் ஒன்றும் மூடர்கள் இல்லை. இன்றைய சூழ்நிலையில் எதையெல்லாம் மூடநம்பிக்கை என்று தொலைத்திருக்கிறோமோ அதையெல்லாம் மறுபடியும் தேடி அலைந்து கொண்டுடிருக்கிறோம்.

நம் முன்னோர் உண்ணும் உணவு பழக்கத்தினை மாற்றி, துரித உணவில் இலயித்து ஆரோக்கியத்தை இழந்தோம். உடற்பயிற்சியை மறந்து தொப்பையை உண்டு செய்தோம்.

வீடியோ கேம்ஸ்கள் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டோம். அவன் பின்பற்றிய உடையை மறந்து கலாச்சார சீரழிவில் சிக்கிக்கொண்டு தவிக்கிறோம்.

தற்பொழுது ஆர்கானிக் உணவு என்றால் அதிக விலைகொடுத்து வாங்க வேண்டி உள்ளது. காரணம் ஒரு நேரத்தில் விவசாயிகள்  மற்றும் விவசாயத்தை மதிக்காமல் வயிற்றில் அடித்தது.

அதே போன்றே முன்னோர்கள் நடைமுறையைப் பின்பற்றாமல் டெங்கு, கொரோனா போன்றவற்றால் பாதிக்கப்படுகிறோம்.

இந்த பதிவு வரும்முன் எப்படி காப்பது என்று மட்டுமே. வந்த பின் எப்படி போக்குவது என்பது அல்ல.

கொரோனா வருவதற்க்கு முன்பே நம் முன்னோர் கற்றுக்கொடுத்த பாடங்கள் பல. அவற்றுள் சிலவற்றை இங்குகாணலாம்.

வெளியில் சென்றுவந்தால் கை, கால்களை, கழுவி  விட்டு உணவருந்துதல், பச்சைக் காய்கறிகளை,  உணவில் அதிகம் சேர்த்தல், பழவகைகளையும், சிறுதானியங்களையும் சிற்றுண்டியாக எடுத்துக்கொண்டது.

மாமிச வகை உணவுகளை தவிர்த்தல், இதில் கடைசியாக உள்ள காரணிதான் வைரசின் முக்கிய இடம். (பறவை, விலங்குகளிலிருந்து  இதுபோன்ற வைரஸ் தொற்றுகள் இதற்கு முன் அதிகம் பரவியுள்ளது)

வீட்டில் துணிகளை போடுவதற்கு என்ற இடம் அமைத்தது. வெளியிலிருந்து வருவோர் அந்த அறையைப் பயன்படுத்தி தங்களை சுத்தப்படுத்தி விட்டு வீட்டினுள் சென்றனர்.

வீட்டில் முற்றம் அமைத்து வீட்டிற்குள் நுழைந்த உடன் அங்கு சென்று சுத்தம் செய்து கொண்ட பின்பே வீட்டின் மற்ற அறைகளில் நுழைவார்கள்.

தற்பொழுது அடுக்குமாடி குடியிருப்பில் (New Apartment House) குடியிருக்க வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டது.

பெண்களை அந்த நாட்களில் தனியாக இருக்க வைத்தது அவர்களுக்கு உடல் ஆரோக்கிய உணவு பதார்த்தங்களை, தனி தலையணை (bed sheet and pillow) செய்து கொடுத்தது.

இதுபோன்ற காரணங்களினாலும், உடற்பயிற்ச்சி, நடைபயிற்சி கொடுத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்ததாலும் அவர்கள் ஆரோக்கிய வாழ்வு வாழ்ந்தனர்.

கொரோனா உயிர்பலி அதிகம் உள்ள நாடுகள்

கொரோனாவினால் அதிக உயிர்கள் பலியானது. சீனாவில், இரண்டாவது இடத்தில் இத்தாலியும், மூன்றாவது இடத்தில் ஈரானும், நான்காம் இடத்தில் தென்கொரியாவும் உள்ளன.

இதைத் தொடர்ந்து பிரிட்டன், ஸ்பெயின், ஜெர்மன் ஆகிய நாடுகளில் கொரோனா பரவிக்கொண்டிருக்கிறது.

சாம்பிராணி புகையினால் காற்றில் பரவும் கிருமிகள்  அழிந்துவிடுகின்றன. நெய்யிலும், சில எண்ணெயில் இருக்கும் சக்தி விஷகிருமிகள் பரவுவதை தடுக்கும்.

அதனால் தான், ஆலயத்தில் தீபமேற்றும் பழக்கம் உண்டாயிற்று. கோவில்களில் தரும் சில தீர்த்தங்களிலும் மருத்துவகுணம் உண்டு.

தர்ப்பைப்புல் என்கிற தாவரத்திலும் நோய்கிருமி பரவாது. வேப்பிலை, துளசி போன்ற இலைகளிலும் நோய் தடுப்பு சக்தி உண்டு.

இதையெல்லாம் மூடநம்பிக்கை எனத் தள்ளி வைத்ததன் விளைவு? கொரோனா, டெங்கு போன்ற வைரஸ்கள் நம்மை தாக்குகிறது. இதை வரும் முன் காக்கும் முறை நம்முன்னோர் பின்பற்றிய வாழ்க்கை முறை.

பொதுவாக சாம்பிராணி, தூபம் போடப்படும் வீடுகளில் தொற்றுக்கிருமிகள் பரவ வாய்ப்புகளில்லை. இது கடவுளிடம் விசுவாசம் கட்டுவதற்கு மட்டும் அல்ல. இதுபோன்ற நல்ல பாசிடிவ் வைபரேசன்கள் நம்மை சுற்றி இருக்க வேண்டும் என்பதற்கு தான்.

அதேபோல் நாம் குடிக்கும் நீர் சீரகம் சேர்க்கப்பட்டநீராக இருப்பதும், எந்த நீராக இருந்தாலும் கொதிக்க வைத்து குடிக்கும் பழக்கத்தைப் பின்பற்றினால் கொரோனா பாதிப்பிலிருந்தும் தப்பிக்கலாம்.

குறிப்பு:- இவை எல்லாம் கிருமிகள் வருவதற்கு முன் தற்காத்து கொள்ளும் பழங்கால வழக்கம். கிருமி நம்மை தாக்கிய பின் குணப்படுத்தும் மருந்துகள் அல்ல. இதை தெளிவாக புரிந்துகொண்ட பின்பற்றுங்கள்.

3

கொரோனாவால் காடன் ரிலீஸ் தள்ளி வைப்பு!

0

Kaadan Corona Virus; கொரோனாவால் காடன் ரிலீஸ் ஒத்தி வைப்பு! காடன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

ராணா டகுபதி நடிப்பில் உருவான காடன் படத்தின் ரிலிஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

உலகையே பீதிக்குள்ளாக்கியிருப்பது கொரோனா வைரஸ் (Corona Virus). சீனாவில் தொடங்கி, ஜப்பான், தென் கொரியா, தாய்லாந்து, தைவான் ஆகிய நாடுகளுக்கும் வேகமாக பரவி வருகிறது.

இந்த நாடுகளைத் தொடர்ந்து, இந்தியாவில் பரவாமல் தடுப்பதற்கு போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் காரணமாக, சினிமா படக்காட்சிகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. படப்பிடிப்பும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காடன் படம் வரும் ஏப்ரல் 2 ஆம் தேதி திரைக்கு வருகிறது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக ராணா டகுபதி நடிப்பில் உருவாகியுள்ள காடன் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஈரோஸ் இன்டர்னேஷனல் (Eros International) நிறுவனம் எப்போதும் பார்வையாளர்களின் ஆர்வம் அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதுகிறது.

ஆரோக்கியமான மற்றும் மகிழ்ச்சியான பார்வையாளர்கள் எப்போதும், கதைகளை தயாரிக்கவும், விநியோகிக்கவும் தூண்டுகிறார்கள். அவர்களது ஆர்வம் புதிய படங்களை தயாரிக்க முன்வைக்கிறது.

சமீபத்தில் கொரோனா வைரஸ் காரணமாக காடன் படத்தின் ரிலீஸ் தேதி தொடர்பாக இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

எங்களது பார்ட்னர்ஸ், கண்காட்சியாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் ஆரோக்கியத்துடனும், மகிழ்ச்சியுடனும் வாழ்வதற்கு நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்.

தொடர்ந்து நாட்டில் நடந்து வரும் சூழலை நாங்கள் கண்காணித்து வருகிறோம். இதனால், புதிய வெளியீட்டு தேதியுடன் திரும்பி வருகிறோம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா டகுபதி (Rana Daggubati) நடிப்பில் உருவாகி வரும் படம் காடன். தமிழில் காடன் என்று டைட்டில் வைக்கப்பட்ட இந்தப் படம் ஹிந்தியில் ஹாதி மேரே ஷாதி என்ற டைட்டிலிலும், தெலுங்கில் ஆரண்யா என்ற டைட்டிலிலும் வெளியாக இருக்கிறது.

இப்படத்தில் ராணா டகுபதியுடன் இணைந்து விஷ்ணு விஷால், புல்கீத் சாம்ராட், ஷ்ரீயா பில்கோன்கர், ஷோயா ஹூசைன் ஆகியோர் நடித்துள்ளனர்.

3

4ஆவது முறையாக விஜய் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணி!

1
Thalapathy 65

Thalapathy65; 4ஆவது முறையாக விஜய் – ஏஆர் முருகதாஸ் கூட்டணி! தளபதி65 படத்திற்காக விஜய் மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் உடன் இணைந்துள்ளார்.

விஜய் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி65 (Thalapathy65) படத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பிகில் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர் (Master).

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட இந்தப் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தணு, ஆண்ட்ரியா ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

சேவியர் பிரிட்டோ தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்து முடிந்தது.

அப்போது பேசிய விஜய், தனது வீட்டில் நடந்த ஐடி ரெய்டும் ஜாலியாகத்தான் இருந்தது என்றும், அஜித் (Nanbar Ajith) மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என்பதற்காகத்தான் கோட் சூட்டில் வந்ததாக குறிப்பிட்டார்.

படக்குழுவினர் பலருக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டார். இதையடுத்து, வரும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாஸ்டர் டிரைலர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது.

படம் வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து விஜய், தளபதி 65 படத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ், சுதா கொங்கரா, வெற்றி மாறன், மகிழ் திருமேனி ஆகியோர் உள்பட பலரிடம் கதை கேட்டு வந்ததாகவும், அதில் சுதா கொங்கரா கதை ஓகேவாக இருந்ததாகவும் கூறப்பட்டது.

ஆதலால், சுதா கொங்கரா இயக்கத்தில் விஜய் தளபதி65 படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை.

இந்த நிலையில், மீண்டும் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் தளபதி 65 படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இது துப்பாக்கி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

வரும் ஆகஸ்ட் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக ஏ.ஆர்.முருகதாஸ் – விஜய் கூட்டணியில் வந்த சர்கார் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த கூட்டணியில், கத்தி, துப்பாக்கி மற்றும் சர்கார் ஆகிய படங்கள் வெளியாகியுள்ளன.

3

Rajkiran: என்ன பெத்த ராசா ராஜ்கிரணுக்கு இன்று பிறந்தநாள்!

0
Rajkiran Birthday

Rajkiran; என்ன பெத்த ராசா ராஜ்கிரணுக்கு இன்று பிறந்தநாள்! ராஜ்கிரண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கீழக்கரையில், பிறந்தவர் நடிகர் ராஜ்கிரண் (Rajkiran). இவரது இயற்பெயர் காதர். என்ன பெத்த ராசா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 25க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார்.

தன்னோடு சினிமாவில் பிரபலங்களையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இவ்வளவு ஏன், வைகைப்புயல் வடிவேலுவை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தவரே இவர் தான்.

ஒரு நடிகரைத் தொடர்ந்து இயக்குநர், கதாசிரியர் மற்றும் தயாரிப்பாளராகவும் திகழ்ந்துள்ளார்.

இவரது நடிப்பில் வந்த என்ன பெத்த ராசா, அரண்மனைக் கிளி, வேங்கை, முனி, கிரீடம், சண்டக்கோழி, திருத்தனி, பாண்டவர் பூமி, என் ராசாவின் மனசிலே, நந்தா ஆகியவை குறிப்பிடத்தக்க படங்கள்.

இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். சினிமா பிரபலங்கள் பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அவர்களுடன் இணைந்து மிஸ்டர் புயல் இணையதளம் சார்பில் நாமும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வோம். பிறந்தநாள் வாழ்த்துக்கள் சார்….

3

கொரோனா வைரஸிற்கு தமிழர்களின் சாம்பிராணியே தடுப்பு மருந்து – அதிர்ச்சியில் பார்க்கும் உலகம்

0
Corona Virus Medicine கொரோனா வைரஸிற்கு தமிழர்களின் சாம்பிராணியே தடுப்பு மருந்து - அதிர்ச்சியில் பார்க்கும் உலகம்

Corona Virus Medicine found in Tamilnadu : கொரோனா வைரஸிற்கு தமிழர்களின் சாம்பிராணியே தடுப்பு மருந்து – அதிர்ச்சியில் பார்க்கும் உலகம்

Corona Virus : சீனாவின் வுஹான் மாகாணத்தில் தொடங்கி தற்போது உலகம் முழுவதும் மனிதர்களை ஆட்டிப்படைப்பதுதான் கொரோனா வைரஸ். இந்த வைரஸ் எதிலிருந்து மனிதர்களுக்கு பரவ தொடங்கியது என்று இன்றுவரை கண்டுபிடிக்கமுடியவில்லை.

இந்த வைரஸால் இறப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதால், இதனைக்கண்டு உலக நாடுகள் அச்சத்தில் உள்ளன. இதுவரை 5000க்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸால் இறந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

நம் முன்னோர்கள்

இந்த வைரஸ் குளிர்ந்த இடத்தில்தான் அதிகம் பரவுகின்றன எனவும் அதனை தடுக்க ஒருவரை ஒருவர் அருகில் நின்று பேசக்கூடாது, கை கொடுத்தல் கூடாது மற்றும் அனைவரும் மாஸ்க் உபயோகிக்கவேண்டும் என்று பல வழிமுறைகளை கூறி வருகிறது World Health Organization.

WHO ஆணையின்படி பொதுமக்கள் கூட்டமாக கூடுவதை தடுக்க முன்னெச்சரிக்கைகளை எடுத்துவருகிறது அரசு. பல விளையாட்டு போட்டிகளில் ரசிகர்கள் இல்லாமலே போட்டிகள் நடக்கின்றன. மேலும், பல போட்டிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Corona Virus Medicine :

இப்படி பல்வேறு தடுப்புமுறைகளை கூறினாலும் இதிலிருந்து குணப்படுத்த அல்லது இது பரவாமல் தடுக்க இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவேயில்லை.

சிறிது நாட்கள் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு கொடுக்கும் எதிர்ப்பு மருந்தை இதற்கு பயன்படுத்தி, தற்போது அந்த மருந்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இப்படிப்பட்ட இந்த வைரஸ் தற்போது இந்தியாவை தாக்க தொடங்கியுள்ளது. கொரோனாவிற்கு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் ஏற்பாடுகளும் மற்றும் அது பற்றிய விழிப்புணர்வும் மக்கள் மத்தியில் அரசு ஏற்படுத்தி வருகிறது.

இருப்பினும் டெல்லி, பெங்களூரு என்று இந்தியாவின் பல முக்கிய இடங்களில் மக்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சுவாசப்பாதையில் தொற்றை ஏற்படுத்தி சுவாசப்பிரச்சனையை உண்டு பண்ணுவதோடு, சிறுநீரகத்தொற்றையும் ஏற்படுத்தி சிறுநீரகத்தையும் செயலிழக்க செய்வதால் இது மிகவும் மோசமானதாகவுள்ளது.

இதற்கான தடுப்பு மருந்தை உலகமே தேடிவரும் இந்நேரத்தில், தமிழர்களின் பாரம்பரிய வழக்கமான சாம்பிராணி தான் இதற்கான தடுப்பு மருந்து ( Corona Virus Medicine ) என்று கூறியுள்ளார் பிரபல அறிவியல் ஆர்வமுடைய ஆன்மீகவாதி ஆசான்ஜி.

கொரோனா என்பது ஒரு Droplet Infection என்பதால் அது பரவ ஏதுவான சூழல் குளிச்சியான இடம் மட்டும்தான்.

தமிழகத்தில் ஏற்கனவே அதிகமான வெயில் இருந்தாலும் தமிழர்கள் பாரம்பரியமாக சாம்பிராணி போடும் பழக்கமே கண்ணனுக்கு தெரியாத கிருமிகளை அழிக்கத்தான்.

குளித்து முடித்து தலையில் சாம்பிராணி போடுவதும், கடைகளுக்கு பாய் சாம்பிராணி போடுவதற்கும் அற்புதமான காரணத்தையும் அதன்பின் இருக்கும் ஆழமான அறிவியலையும் எளிதாக எடுத்துரைத்துள்ளார்.

கொரோனா வைரஸ் முதலில் சுவாசக்குழாயில் தொற்றை ஏற்படுத்தி அதன்பின்பு உடலில் எதிர்ப்புசக்தியை குறைத்து மனிதர்களை வலுவிழக்க செய்கிறது.

நாம் உபயோகிக்கும் சாம்பிராணி நம்மை சுற்றியுள்ள காற்றினை சுத்தம் செய்து, அதனை சுவாசிப்பவற்கு சுவாசக்குழாயில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் அதனை சரிசெய்வதற்கான வேலையே செய்கிறது.

இந்த இரண்டு விஷியங்களே போதும் கொரோனவை அளிப்பதற்கு என்று கூறுகிறார். அறிவியல் பார்வையோடு கொரோனா பற்றி விளக்கும் அவரது வீடியோ இதோ,

இனிமேல் கொரோனா பற்றி யாரும் பதட்டப்படாமல் அதை எதிர்கொள்வதற்கான மனநிலையை மேம்படுத்திக்கொள்வோம்.
3