Home Blog Page 215

அத்துமீறி நுழைந்த விஜய் ரசிகர்களை வெளியேற்றிய போலீஸ்!

0
Vijay Fans Leela Palace

Vijay Fans Leela Palace; அத்துமீறியதால் விஜய் ரசிகர்கள் போலீஸ் இடையில் வாக்குவாதம்? விஜய்யைப் பார்க்க வந்த ரசிகர்களுக்கும், போலிசுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்படுவதற்கு முன்னதாக விஜய் ரசிகர்கள் தாங்களாகவே வெளியில் சென்றுள்ளனர்.

விஜய்யைப் பார்க்க சென்ற ரசிகர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் வாகுவாதம் ஏற்படுவதற்கு முன்னதாக விஜய் ரசிகர்கள் தாங்களாகவெ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

சென்னை லீலா பேலஸ் (Leela Palace) ஹோட்டலில் விஜய் நடித்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழா நடந்தது.

மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேசுகிறார் என்பதை நேரில் சென்று பார்ப்பதற்காக விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

ஆனால், அவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஏனென்றால், வழக்கத்திற்கு மாறாக கல்லூரியில் நடப்பதற்கு மாறாக சென்னை லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்தது.

மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழாவிற்கு குறைவான ரசிகர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கு காரணம் கடந்த முறை பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது ஏற்பட்ட விஜய் ரசிகர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.

இந்த செய்தி மீடியாவில் வெளிவர, விஜய்க்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இந்த முறை மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவை லீலா பேலஸ் ஹோட்டலில் நடத்தினர்.

சரி, வெளியில் நின்றாவது விஜய்யையும் (Vijay Speech), அவர் என்ன பேசுகிறார் என்பதையும் கேட்டுவிடலாம் என்று லீலா பேலஸ் ஹோட்டலுக்கு விஜய் ரசிகர்கள் வந்துள்ளனர்.

எனினும், அதிகளவில் உணர்ச்சிவசப்பட்ட விஜய் ரசிகர்கள் ஒரு கட்டத்தில் லீலா பேலஸ் ஹோட்டலுக்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசாரை கண்டதும் விஜய் ரசிகர்கள், தாங்களாகவே கலைந்து சென்றுள்ள்னர். இதனால், எந்தவித வாக்குவாதமும், அடிதடி சண்டையும் நடக்கவில்லை.

ஆனால், விஜய் ரசிகர்கள் அமைதி காக்காதது தான் சிறிது நேர சலசலப்பிற்கு காரணமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

Master Songs: மொத்தம் 12 பாடல்களில் 8 பாடல்கள் வெளியீடு!

0
Vijay Master Jukebox

Master Songs : மாஸ்டர் படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் கொண்ட மாஸ்டர் ஜூக்பாக்ஸ் ( Master Jukebox  ) வீடியோ வெளியீடு.

லீலா பேலஸ் ஹோட்டலில் நடந்த மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழாவில் பாடல்கள் அனைத்தும் வெளியிடப்பட்டுள்ளது.

Master Tamil Movie : விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். கல்வித்துறையில் நடக்கும் ஊழல், நீட் மாணவி அனிதாவின் தற்கொலை ஆகிய கதைகளை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். விஜய் சேதுபதியின் சகோதரியாக மாளவிகா மோகன் நடித்துள்ளதாக புதிய தகவல் வந்துள்ளது.

இதுவரை விஜய்யை எப்படியெல்லாம் பார்த்தோமோ அதைவிட வழக்கத்திற்கு மாறாக இந்தப் படத்தின் மூலம் பார்க்கலாம் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நேற்று பேசியிருந்தார்.

Master Audio : மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் (Master Trailer) வெளியாகும் தேதியும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, வரும் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இடம்பெற்றுள்ள ஒட்டு மொத்த பாடல்களும் ( master mp3 songs ) வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் ஜூக்பாக்ஸ் வெளியாகியுள்ளது.

Master Mp3 Songs

  1. வாத்தி கம்மிங் ( vaathi coming )
  2. அந்த கண்ண பாத்தாக ( antha kanna paathaaka )
  3. குட்டி ஸ்டோரி ( kutti story )
  4. குய்ட் பண்ணுடா ( Quit Pannuda )
  5. பீட் ஆப் மாஸ்டர் ( beat of master )
  6. பொளக்கட்டும் பர பர ( polakatum para para )
  7. போனா போகட்டும் ( pona pogatum )
  8. வாத்தி ரெய்டு ( Vaathi Raid )

இதுவரை, 10 லட்சத்திற்கும் அதிகமானோர் மாஸ்டர் ஜூக்ஸ்பாக்ஸை பார்த்து மகிழ்ந்துள்ளனர் என்கிறது தகவல்.

Official Master Jukebox Video :

3

கொரோனா விளைவு: 2020 ஒலிம்பிக்கில் இந்தியா விளையாடுமா?

0
கொரோனா விளைவு

கொரோனா விளைவு; 2020ல் நடக்கவிருக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்குமா இந்தியா

ஜப்பான் பிரதமர் திட்டமிட்டபடி 2020ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் அதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து வருகின்றன என தெரிவித்துள்ளார்.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக உலகமெங்கும் விளையாட்டு போட்டிகள், பார்ட்டிகள் மற்றும் திரையரங்குகள் முதலியை ரத்து செய்யப்பட்டுள்ளன.

வருகின்ற ஜூலை மாதம் ஜப்பானில் ஒலிம்பிக் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதனிடையே இந்தியா சார்பாக பங்கேற்க இருக்கும் ஒலிம்பிக் குழுவின் பயணங்களை தற்காலிமாக தடை செய்தது இந்திய அரசு.

கடந்த வாரம் கிரீஸில் பொதுமக்கள் யாரும் பங்கேற்காமலே ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

3

உலகை அச்சுறுத்தவிருக்கும் மற்றொரு பேராபத்து; 40 கோடி மக்கள் நிலை என்னவாகும்

0
40 கோடி மக்கள் நிலை

உலகை அச்சுறுத்தவிருக்கும் மற்றொரு பேராபத்து; 40 கோடி மக்கள் நிலை என்னவாகும்

புவி வெப்பமயலாதலால் அண்டார்டிகா மற்றும் ஐலந்து இடங்களில் உள்ள பனிக்கட்டிகள் மிக வேகமாக உருகி வருகின்றன.

அங்குள்ள பனிக்கட்டிகள் 1990களில் உருகியதைவிட ஆறு மடங்கு அதிகமாக உருகுவதாக புதிய ஆய்வொன்று சுட்டிக்காட்டுகிறது.

பூமி வெப்பம் அதிகரிப்பதால் 1992 – 2017 இடையிலான காலகட்டத்தில் மட்டும் 6.4 டிரில்லியன் டன் பனிக்கட்டிகள் உருகி உள்ளன. இதனால் 17.8 மி.மீ அளவுக்குக் கடல்மட்டம் உயர்ந்துள்ளது.

இது இப்படியே தொடருமானால் 2100ஆம் ஆண்டுக்குள் 40 கோடி மக்களின் எதிர்காலம் கேள்விகுறியாகும். சிறிய சிறிய தீவுகள் கடலில் மூழ்க வாய்ப்புகள் அதிகம்.

3

மிரட்டலான டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு!

0
Master Trailer Release Date

Master Trailer; மிரட்டலான டிரைலர் வெளியாகும் தேதி அறிவிப்பு! மாஸ்டர் டிரைலர் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

மாஸ்டர் படத்தின் டிரைலர் (Master Trailer) வெளியாகும் தேதியை தயாரிப்பாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

மாஸ்டர் இசை வெளியீட்டு (Master Audio Launch) விழா நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் எப்போது வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை லீலா பேலஸ் (Leela Palace) ஹோட்டலில் மாஸ்டர் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்தது.

அதில், மாஸ்டர் படக்குழுவினர் சினேகா பிரிட்டோ, சேவியர் பிரிட்டோ, ரம்யா சுப்பிரமணியம், சாந்தணு, கவுரி, அருண்ராஜா காமராஜ், விக்னேஷ் சிவன், அர்ஜூன் தாஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ், விஜய் சேதுபதி, விஜய் ஆகியோரும் பேசினர். லோகேஷ் கனகராஜ் பேசும் போதும், ஒவ்வொரு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருக்கும் ஒரு குட்டி ஸ்டோரி இருக்கிறது.

முதலில் வாத்தி என்றுதான் டைட்டில் வைத்ததாக துணை இயக்குநர்கள் அனைவருக்கும் சொல்லியிருந்தோம்.

ஆனால், அறிவிப்புக்கு பிறகு தான் எல்லோருக்குமே தெரியவந்தது. மாஸ்டர் என்று டைட்டில் சூப்பராக இருக்கிறது என்று அனைவரும் பாராட்டினார்கள்.

போஸ்டர் எப்படி இருக்கிறதோ, அதே போன்று டிரைலரும் பிரமாண்டமாக இருக்கும் என்றார். இதுவரை விஜய் எப்படி இருந்தாரோ, என்னெல்லாம் பேசியிருந்தாரோ அதெல்லாம் படத்தில் இருக்காது.

அதுக்கும் வித்தியாசமாக யாருமே எதிர்பாராத புதியதாக இருக்கும் என்றார். ஆக, மாஸ்டர் படத்தில் சிறப்பான சம்பவம் இருக்கு.

தொடர்ந்து பேசிய விஜய், படக்குழுவினர் ஒவ்வொருவரது பெயரையும் குறிப்பிட்டு அவர்களுக்கு நன்றியும், வாழ்த்தும் தெரிவித்தார்.

நண்பர் அஜித் மாதிரி உடை அணிந்து வர வேண்டும் என்று தான் கோடு சூட் அணிந்து வந்திருக்கிறேன் என்றார்.

இறுதியில், ரெய்டும் ஜாலியாகத்தான் இருக்கு என்று கூறி சந்தோஷப்பட்டுக் கொண்டார். நதியை வைத்து ஒரு கதை சொன்னார்.

அது போலத்தான் வாழ்க்கையும் என்றார். அவரவர் அவரவர் வேலையை பார்த்துட்டு போய்க்கிட்டே இருக்க வேண்டும் என்றார்.

கடைசியாக விஜய் சேதுபதிக்கு தனது அழுத்தமான முத்தத்தை கொடுத்து மகிழ்ந்தார்.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா வெற்றிகரமாக நடந்து முடிந்ததைத் தொடர்ந்து மாஸ்டர் டிரைலர் எப்போது வெளியாகும் என்பது குறித்து அறிவிப்பு வந்துள்ளது.

அதன்படி, வரும் மார்ச் 22 ஆம் தேதி மாலை 5 மணிக்கு மாஸ்டர் டிரைலர் வெளியாகும் என்று தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தங்களது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதைக் கேட்ட விஜய் ரசிகர்கள் சந்தோஷத்தில் கொண்டாடி வருகின்றனர். மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவின் போது #MasterTrailer, #ThalapathySpeech, #VijaySethupathi, #NanbarAjith ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் தாறுமாறாக டிரெண்டாகி வருகிறது.

3

கொரோனா தடுப்பூசி கண்டறிந்த அமெரிக்கா; முதல் பரிசோதனை இன்று

0
கொரோனா தடுப்பூசி

கொரோனா தடுப்பூசி கண்டறிந்த அமெரிக்கா; முதல் பரிசோதனை இன்று

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் 150000க்கும் மேல் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் 5000க்கும் மேலான உயிரழப்புகள் ஏற்பட்டுள்ளனர்.

இதற்கு தடுப்பூசி கண்டறிய உலகம் முழுவதும் போட்டி போட்டு இரவு பகலாக முயற்சி செய்து வருகின்றனர். இந்த நேரத்தில் இதற்கு தடுப்பூசி கண்டறிந்த அமெரிக்கா இன்று முதல் பரிசோதனை செய்ய உள்ளது.

ஓரிரு மாதத்திற்கு மக்களை பாதுக்காப்பில் வைக்கவே இது உதவுமாம். மேலும் இவை அனைத்துமே பரிசோதனை நிலையில் மட்டுமே உள்ளது. நடைமுறைக்கு வர இரண்டு ஆண்டுகள் வரை ஆகுமாம்.

இன்று கொரோனா பாதிப்பு இல்லாத நபருக்கு பரிசோதனை செய்ய உள்ளனர். மேலும் இதனால் எந்த வித பக்க விளைவு வராது என உறுதியாக கூறியுள்ளனர்.

3

பாறைக்கு அடியில் 4000 ஆண்டுகள் பழமையான நடன ஓவியம்

0
4000 ஆண்டுகள் பழமையான நடன ஓவியம்

பாறைக்கு அடியில் 4000 ஆண்டுகள் பழமையான நடன ஓவியம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஜிஞ்சுப்பள்ளியில் பாறைக்கு அடியில் 4000ஆண்டு பழமையான செஞ்சாந்து நடன கண்டறியப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் கோவிந்தராஜ் இதைப் பற்றி கூறும்பொழுது இது ஒரு அறிய வகை ஓவியம்.

இதுவரை அதிகமாக வெண்சாந்து ஓவியங்களே கண்டறியப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய செஞ்சாந்து ஓவியம் ஆகும். ஏறத்தாழ 4000 ஆண்டு பழமையான ஒன்றாகும்.

வட்ட வடிவில் வீடுகளும் அதன் மேல் குச்சி போன்ற பாறைகளும் அதை சுற்றி 200க்கும் மேற்ப்பட்டோர் நடனமாடுவது பொழும் அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் இவ்வளவு நீண்ட செஞ்சாந்து நடன ஓவியம் கண்டறியப்படவில்லை. இதன் அருகில் 1 கி.மீ. தொலை வில் ஆறு உள்ளதால் இங்கு ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மனிதர்கள் வாழ்ந்திருக்கிறார்கள்.

3

சதத்தில் சதம் அடித்த கிரிக்கெட்டின் கடவுள் – Cricket Rewind

0

சச்சின் டெண்டுல்கர் நூறாவது நூறு: வரலாற்றில் இன்று சதத்தில் சதம் அடித்த கிரிக்கெட்டின் கடவுள் – Cricket Rewind | cricket record break | Sports News in Tamil.

நீண்ட நாள் கனவு

சச்சினுக்கு நீண்ட நாள் கனவு, தான் விளையாடும் போது இந்திய அணி உலக கோப்பை வாங்கிட வேண்டும் என்பதே.

1983-ஆம் ஆண்டு கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி கோப்பையை வாங்கியது பிறகு உலக கோப்பையை தொட்டுக்கூட பார்த்ததில்லை.

2011 உலககோப்பை

இந்திய அணிக்கு தோனி தலைமை ஏற்று அதில் விளையாடிய சச்சின் டெண்டுல்கர் 2011 ஆம் ஆண்டு தன் கனவான உலகக்கோப்பையை தொட்டு உச்சி முகர்ந்தார்.

அந்த காலகட்டத்தில் சச்சின் மீது பல விமர்சனங்கள் எழுந்தன. சரியாக விளையாடவில்லை, அதிக பந்துகளை வீணடிக்கிறார்.

காயம் காரணமாக பல முறை அணியில் இருந்து விலகுகிறார். அவரை ஓய்வு பெறவேண்டும் என்று பிசிசிஐ கட்டாயப்படுத்தியது. இதை பலமுறை சச்சின் கூறியுள்ளார்.

ஆசிய கோப்பை

ஆனால் இதையெல்லாம் காதில் வாங்காமல் 2012-ஆம் ஆண்டு வங்கதேசத்தில் நடந்த ஆசியக் கோப்பை தொடரில் அணியில் இடம் பெற்றிருந்தார்.

2012-ஆம் ஆண்டு மார்ச் 16-ஆம் தேதி அதாவது 8 வருடத்திற்கு முன்பு இதே நாளில் டாக்காவில் நடைபெற்ற நான்காவது லீக் போட்டியில் இந்தியாவும் வங்கதேசமும் எதிர்கொண்டது.

வங்கதேச அணி டாஸ் வென்று முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர் கௌதம் கம்பீர், சச்சின் டெண்டுல்கர் களமிறங்கினார்கள்.

சச்சின் நூறுக்கு நூறு

5-வது ஓவரில் கம்பீர் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய விராட் கோலி சச்சினுடன் கூட்டணி அமைத்தார்.

இந்த இணை 30 ஓவர்கள் பேட்டிங் செய்து 148 ரன்கள் குவித்தது. விராத் கோலி 66 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதற்குமேல் அணியில் இடம் கிடைப்பது சந்தேகம் தான் சச்சின் டெண்டுல்கருக்கு இந்த தொடரை விட்டால் நூறாவது சதத்தை பூர்த்தி செய்ய முடியாது.

வங்கதேசத்துக்கு எதிரான இந்த போட்டியில் அதிக பந்துகளை எடுத்துக்கொண்டார் சச்சின் டெண்டுல்கர்.

அடுத்து களமிறங்கிய ரெய்னாவுடன் கூட்டணி அமைத்து விளையாடிய சச்சின் டெண்டுல்கர், 138 பந்துகளில் தனது 49-வது ஒருநாள் சதம் எடுத்து சர்வதேச அனைத்து விதமான போட்டிகளிலும் நூறாவது சதத்தை பூர்த்தி செய்து யாரும் அசைக்க முடியாத சாதனையை உருவாக்கினார்.

சச்சின் டெண்டுல்கர் சதம் எடுத்தவுடன் வழக்கம்போல பேட்டை தூக்கியும் முகம் வானம் பார்த்து தனது ஸ்டைலில் கொண்டாடினார். உலகமே அவரை கொண்டாடியது.

இதுவரை முதல்தர போட்டிகளில் மட்டுமே 100 சதங்கள் அடிக்கப்பட்டு இருந்தது சர்வதேச போட்டிகளில் 100 சதம் அடித்த முதல் வீரர் மற்றும் இன்று வரை ஒரே ஒரு வீரர் ஆவார்.

பல சதங்கள் சச்சின் டெண்டுல்கர் அடித்து இருந்தாலும் இந்த சதம் ஆமை வேக சதம் ஆகவே அமைந்தது.

வங்கதேசத்துக்கு சாதகம்

ரெய்னாவும் சச்சின் சேர்ந்து 80 ரன்களுக்கு மேல் எடுத்தனர். 47-வது ஓவரில் ரெய்னா ஆட்டமிழக்க அடுத்த பந்தில் சச்சின் டெண்டுல்கரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.

அங்கு கூடியிருந்த ரசிகர்கள் அனைவரும் எழுந்து நின்று கைதட்டி வரவேற்றனர். அந்த போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் எடுத்தது. சச்சின் டெண்டுல்கர் 147 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தார்.

சச்சின் டெண்டுல்கர் 100-வது சதத்தை எடுத்து இந்திய ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால் போட்டியின் முடிவு இந்தியாவிற்கு சோகமாகவே முடிந்தது.

வங்கதேசம் 49.2 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 293 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியது. இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருதை ஷகிப் அல் ஹசன் தட்டிச் சென்றார்.

பலரும் சச்சின் டெண்டுல்கர் சுயநலமுடன் ஆடுகிறார் என்று விமர்சனங்கள் வைத்தார்கள். அதற்கு ஏற்ப தனது நூறாவது சதத்தையும் விளையாடினார் சச்சின் டெண்டுல்கர்.

மற்ற சதங்கள் அனைத்தும் அணிக்காக இருந்தாலும் 100-வது சதம் சச்சினுக்காகவே இருந்தது. ஆட்டத்தின் முடிவும் அப்படியே அமைந்தது.

என்றோ சச்சின் நூறாவது சதத்தை (cricket record break) பூர்த்தி செய்திருக்க வேண்டும். காரணம், 90 – 99 ரன்களுக்குள் அதிக முறை விக்கெட்டை இழந்த வீரர் சச்சின் டெண்டுல்கர்.

3

சர்ச்சையின் சங்கம் சஞ்சய் மஞ்ச்ரேக்கரை நீக்கியது பிசிசிஐ

0
சஞ்சய் மஞ்சரேக்கர் சர்ச்சை

வீண் விவாதம், விதண்டாவாதம், சுயநல பேச்சுக்கள் என கடந்த சில ஆண்டுகளாக இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வர்ணனை அறையில் ஈடுபட்டுவந்தார்.

வீரர்களை இழிவுபடுத்தியும் வீரர்களை மட்டம் தட்டியும் சொந்த இந்திய நாட்டு வீரர்களை வம்புக்கு இழுப்பதும் வழக்கமாகவே வைத்திருந்தார் சஞ்சய் மஞ்ச்ரேக்கர்.

கடந்தாண்டு ஜடேஜாவை வம்புக்கிழுத்து அசிங்கப்பட்டு கொண்டார். ஐபிஎல் மும்பை அணிக்கு சாதகமாக பேசுவதும் மற்ற அணி வீரர்களை மட்டம் தட்டி பேசுவதை வழக்கமாக வைத்திருந்தார்.

கடந்த ஆண்டுகளில் வர்ணனையில் பல சர்ச்சைகளில் சிக்கி நெட்டிசன்களிடம் ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார்.

தான் பிரபலமாகும் நோக்கிலேயே மற்ற வீரர்களை இழிவுபடுத்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே பேசிவந்தார். கடந்த ஆண்டு ஹர்ஷா போகலேவிடம் வீண் விவாதங்கள் செய்து ஹரசாப போகலேவை வம்புக்கு இழுத்தார்.

இதுவரை பிசிசிஐ அவர் மீது எந்த நடவடிக்கை எடுக்காமலும், அறிவுரை சொல்லாமலும் அமைதி காத்து வந்தது.

கடந்த 12ஆம் தேதி இந்தியா வந்த தென் ஆப்பிரிக்கா முதல் ஒருநாள் போட்டி தர்மசாலாவில் நடைபெற இருந்தது. அந்த தொடரில் வர்ணனையாளர் குழுவில் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இடம் பெறவில்லை.

சுனில் கவாஸ்கர் சிவராமகிருஷ்ணன் போன்ற முன்னாள் வீரர்கள் இடம் பெற்றிருந்தனர்.

நீண்ட நாள் அமைதிக்கு பிசிசிஐ தற்போது சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீது நடவடிக்கை எடுத்து அவரை வர்ணனையாளர் குழுவில் இருந்து நீக்கியுள்ளது.

அடுத்து நடைபெறும் ஐபிஎல் போட்டியில் அவர் இடம்பெற மாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

சில நாட்கள் அமைதி காத்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிலளித்துள்ளார்.

“தான் வர்ணனை செய்வதை ஒரு மதிப்புக்குரிய வேலையாக தான் செய்தேன். நான் என் வேலையும் சரியாக தான் செய்தேன். கடந்த சில ஆண்டுகளாக எனது அனைத்து வர்ணனையும் பிசிசிஐக்கு பிடிக்காமல் இருந்திருக்கலாம் ஆகவே அவர்களின் முடிவுக்கு நான் மதிப்பு அளிக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

ஆக சர்ச்சைக்கு சங்கம் நடத்திய சஞ்சய் மஞ்ச்ரேக்கர் மீண்டும் வர்ணனைகள் அறையில் இடம் பெறுவாரா என்பது சந்தேகமே

1987 – 1996 ஆம் ஆண்டு வரை இந்தியாவிற்காக விளையாடி உள்ள சஞ்சய் மஞ்ச்ரேக்கர் 37 டெஸ்ட் போட்டிகளிலும் 74 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள 4037 ரன்கள் எடுத்துள்ளார்.

3

16/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0

16/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

மேஷ ராசிபலன்

பதட்டமான பேச்சு இருக்கும். சற்று பிரச்சனைகள் எதிர்கொள்ள வேண்டிய நாளாகும். வியாபார பயணங்கள் இருக்கும். பிராத்தனை அவசியம் தேவையாகும்.

துணையிடம் அகந்தை பேச்சுகள் வேண்டாம். வீட்டில் செலவுகள் அதிகரிக்கும். தோள்களில் வலி ஏற்பட வாய்ப்புண்டு.

சந்திர பகவானை விளக்கேற்றி வழிபடவும்.

ரிஷப ராசிபலன்

இன்றைய நாள் உங்களுக்குரிய நாளாகும். திறமையை வெளிபடுத்த வேண்டிய நாள். பணியில் வெற்றி நிச்சயம் கிட்டும்.

துணையிடம் அன்பு மேம்படும். உறவினர்கள் வருகையால் நன்மைகள் உண்டு. நகைச்சுவை கலந்த நாளாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டு. தேக பலத்தோடு இருப்பீர்கள்.

விநாயகரை வழிபட கூடுதலாக பலன்கள் உண்டு.

மிதுன ராசிபலன்

இன்றைய நாள் மிகவும் உற்சாகமாக இருக்கும். எதையும் தைரியமாக எதிர் கொள்வீர்கள். சக பணியாளர்கள் நட்புறவு மேம்படும்.

துணையிடம் காதல் அதிகரிக்கும். பண புழக்கம் அதிகமாகும். சேமிப்பு அவசியம். ஆரோக்கியத்தில் எந்த குறையும் இருக்காது.

சிவ பெருமானை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

கடக ராசிபலன்

இன்றைய செயல்கள் மந்தமாக இருக்கும். அதனை மாற்றி துடிப்புடன் இருப்பது உங்களின் கையில் உள்ளது. பணியில் உழைப்பு அவசியமாகும்.

கணவன் மனைவியிடையே புரிதல் நன்றாக இருக்காது. வாக்குவாதம் வரலாம். தனலாபம் தேவையான அளவு இருக்காது. இருமல், காய்ச்சல் போன்றவை வர வாய்ப்புண்டு.

அம்பிகையை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டு.

சிம்ம ராசிபலன்

இன்று தவறுகள் ஏற்பட வாய்ப்புண்டு. அதனை தாங்களே சரி செய்து கொள்ள வேண்டும். செயல்களை பொறுமையாக ஆற்ற வேண்டும்.

கணவன் மனைவியிடையே பேச்சில் கவனம் தேவை. பணவரவு அதிகமாக வர வாய்ப்பில்லை. தோல் எரிச்சல் வரலாம்.

விநாயகரை தேங்காய் எண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

கன்னி ராசிபலன் 

இன்று முன்னேற்றமான நாளாக இருக்கும். முயற்சி இருந்தால் போதும் வெற்றி வந்து சேரும். பணியில் கூடுதல் ஊக்கத் தொகை கிடைக்கும்.

கணவன் மனைவியிடையே அன்பு அதிகமாக இருக்கும். பண வரவும் சிறப்பாக இருக்கும். ஆற்றல் மிகுந்த நாளாக இருக்கும்.

மகாலட்சுமியை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

துலா ராசிபலன்

இன்று சோதனை மிகுந்த நாளாக இருக்கும். அதிகப்படியானப் பேச்சை குறைத்து கொள்ளவும். பணிகள் கடுமையாக இருக்கும்.

குடும்பத்தில் கருத்து வேறுபாடு இருக்கும். லாபம் குறைவானமாக இருக்கும். செலவுகளை குறைக்கவும். முதுகு வலி ஏற்படலாம்.

பெருமாளை விளக்கேற்றி வழிபட நன்மைகள் உண்டாகும்.

விருச்சிக ராசிபலன்

இன்று அனுபவ பாடம் கற்பீர்கள். ஆன்மீகத்தில் கவனம் செலுத்தவும். பணி வளர்ச்சிகள் அதிகமாக இருக்கும்.

குடும்பத்தில் வலுவான பிணைப்பு இருக்கும். சேமிக்கும் அளவு பணம் வந்து சேரும். உடல் நலத்தில் குறையில்லை.

சந்திர பகவானை வழிபட கூடுதல் நன்மைகள் உண்டு.

தனுசு ராசிபலன்

இன்று முக்கிய முடிவுகள் எதுவும் வேண்டாம். சுப காரிய பேச்சுகளை தள்ளி போடவும். பணியில் சிறு தவறுகள் ஏற்படலாம்.

வீட்டில் சுமூகமான நிலை இருக்காது. தங்களின் தைரியம் குறையும். நிதி நிலை மோசமாக இருக்கும். உணவில் கவனம் தேவை.

காமாட்சியம்மனை வழிபட துன்பங்கள் குறையும்.

மகர ராசிபலன் 

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக இருக்கும். நல்ல பலன்கள் பல வந்து சேரும். ஆன்மீக சிந்தனைகள் அதிகமாக இருக்கும்.

பயணங்கள் அனைத்தும் வெற்றியாக முடியும். கணவன் மனைவி பிரச்சனைகள் தீரும். பணவரவு சிறப்பாக இருக்கும். உடல் பலம், மன பலம் அதிகரிக்கும்.

விநாயகரை வழிபட கூடுதல் பலன்கள் உண்டு.

கும்ப ராசிபலன்

இன்று சாதகமான நாளாக இருக்கும். நல்ல வளர்ச்சி மிக்க நாளாக இருக்கும். பணியிடத்தில் பாராட்டுகள் நிறைய உண்டு.

துணையிடம் நட்புறவு மேம்படும். பண சிக்கல்கள் தீரும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அம்பிகையை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

மீன ராசிபலன் 

இன்று விட்டு கொடுத்து செல்ல வேண்டிய நாளாகும். கோபத்தை குறைக்க வேண்டும். சக ஊழியர்கள் இடையே கருத்து வேறுபாடு வரலாம்.

குடும்பத்தில் உணர்ச்சிகளை கட்டுபாட்டில் வைக்கவும். நிதி நிலை மந்தமாக இருக்கும்.  முட்டி வலி ஏற்பட வாய்ப்புண்டு.

சிவபெருமானை விளக்கேற்றி வழிபடுங்கள் தொல்லைகள் குறையும்.

16/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3