Home Blog Page 241

கொல்கத்தா புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட்ட நாள்; வாரலாற்றில் இன்று மார்ச் 5

0
கொல்கத்தா புவியியல் ஆய்வு மையம்

கொல்கத்தா புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட்ட நாள்; வாரலாற்றில் இன்று மார்ச் 5.  today what special day in world – india – tamil.

1851ஆம் ஆண்டு கல்கத்தாவில் (இன்று கொல்கத்தா) இந்தியாவின் முதல் புவியியல் ஆய்வு மையம் நிறுவப்பட்டது.

உலகத்தில் மிகவும் பழமையான மற்றும் இந்தியாவில் இரண்டாவது பெரிய புவியியல் மையம் இதுவாகும்.

அந்த தருணங்களில் இந்தியாவிருக்கு நிலக்கரி, தாது, கனிமங்கள் மற்றும் சிமெண்ட் போன்றவை பற்றி ஆய்வு செய்ய அறிவிக்கை எடுக்க பலவித உதவிகள் இதன் மூலம் கிடைத்தது.

அப்போது அதிகபட்சமான நிலக்கரி எடுத்தது அதன் மூலம் நீராவி என்ஜின்கள் செயல்படுத்துவதற்கு மிகவும் உதவிகரமாக அமைந்தது.

வரலாற்றில் இன்று March 05. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

கொரோனா வைரஸ் பீதி: தங்கம் விலை கிடுகிடு உயர்வு

0
கொரோனா வைரஸ் பீதி தங்கம் விலை கொரோனா வைரஸுக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

கொரோனா வைரஸ் பீதி: இதனால் தங்கம் விலை கிடுகிடு உயர்ந்து கொண்டே செல்கிறது. கொரோனா வைரஸுக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

கொரோனா வைரஸ் பீதி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

சீனாவைப் போன்று அதிக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நிகழ்ந்தால் பொருளாதாரப் பாதிப்பு ஏற்படும்.

ஏற்கனவே சீனாவில் பொருளாதார மந்த நிலை நிலவி வருகிறது. உலகில் பல நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது.

கொரோனா வைரஸுக்கும் தங்கத்திற்கும் என்ன சம்பந்தம்?

கொரோனா வைரஸ் பாதிப்பால் மக்கள் வீதியில் நடமாட மாட்டார்கள். இதனால் பெட்டிக்கடை முதல் பொட்டிக் கடைகள் வரை வியாபாரம் பாதிக்கப்படும்.

எனவே, தொழிலதிபர்கள் வியாபாரத்தில் புதிய முதலீடுகளை செய்யமாட்டார்கள். அந்த பணத்தை தங்கத்தில் முதலீடு செய்வார்கள்.

கொரோனா மட்டுமல்ல வேறு எந்த ஒரு பிரச்சனையால் தொழில் பாதிக்கப்பட்டாலும் உடனடியாக தங்கம் விலை உயரும்.

இதற்கு காரணம் தங்கத்தை அதிகளவில் மக்கள் வாங்குவதால் தான். மீண்டும் இயல்பு நிலை திரும்பியவுடன் தங்கத்தை விற்று தொழிலில் முதலீடு செய்வார்கள்.

நேற்றைய தங்கம் விலை

புதன்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் …………….. 4,128

1 பவுன் தங்கம் …………….. 33,024

1 கிராம் வெள்ளி …………… 50.00

1 கிலோ வெள்ளி ………….. 50,000

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் …………………. 4,025

1 பவுன் தங்கம் ………………… 32,200

1 கிராம் வெள்ளி ……………… 48.50

1 கிலோ வெள்ளி …………….. 48,500

3

ரஜினி மக்கள் மன்றம்; மாவட்ட செயலார்கள் கூட்டம் சென்னையில் இன்று

0

ரஜினி மக்கள் மன்றம்; மாவட்ட செயலார்கள் கூட்டம் சென்னையில் இன்று ‘

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ரஜினிகாந்த் தலைமையில் சென்னையில் இன்று நடக்கிறது.

அரசியலுக்கு வருவது உறுதி என்பதை சொல்லிக்கொண்டே இருந்த ரஜினி இப்போது ஒவ்வொரு படியாக எடுத்து வைத்துக்கொண்டே வருகிறார்.

ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றாமாக மாற்றி இப்பொழுது மாவட்ட மக்கள் மன்ற கூட்டத்தை நடத்தி சில முக்கிய தகவல்களை பரிமாறிக்கொள்ள உள்ளார்.

சமீபத்தில் முஸ்லீம்கள் ரஜினியை சந்தித்து சி‌ஏ‌ஏ, என்‌பி‌ஆர், சி‌ஏ‌பி ஆகிய சட்ட திருத்தங்களால் வரும் விளைவுகளை பற்றி பேசினார்கள்.

அதன் பிறகு தனது ட்விட்டர் பக்கத்தில், ‘நாட்டின் ஒற்றுமைக்கும், அமைதிக்கும் என்னால் ஆன அனைத்துமுயற்சிகளையும் மேற்கொள்வேன்’ என்று ரஜினிகாந்த் பதிவிட்டிருந்தார்.

அதேநேரத்தில் அடுத்த மாதம் 14-ம் தேதிரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று தகவல்கள் வெளியாகிஉள்ளன.

3

நரேஷ் கோயல் பண மோசடி வழக்கில் சிக்கினார்

0
நரேஷ் கோயல்

நரேஷ் கோயல் பண மோசடி வழக்கில் சிக்கினார்

என்போர்ஸ்மெண்ட் டைரக்டரெட் முன்னாள் ஜெட் ஏர்வேஸ் மற்றும் ஏர்லைன்ஸ் மேலாளர் நரேஷ் கோயல் மீது பண மோசடி வழக்கு தொடர்ந்த்துள்ளது.

இந்த பணமோசடி வழக்கானது நரேஷ் கோயல் மீது மட்டுமில்லாமல் ஜெட் ஏர்வேஸ் மீது போடப்பட்டுள்ளது என வந்த சில தகவல்கள் உறுதிபடுத்துகின்றன.

Foreign Exchange Management Act இதன் கீழ் பண மோசடி வழக்கு தொடரபட்டதாகவும் மத்திய விசாரணை அதிகாரிகளால் விசாரிக்கப்படுவார் எனவும் தெரிவித்துள்ளனர்.

சென்ற வருடம் அவரது வீட்டில் நடந்த சோதனையில் 18 கம்பெனிகளுக்கான டாகுமெண்ட்ஸ் கிடைத்ததில் 5 வெளிநாட்டு நிறுவனங்களாகும்.

இதில் எவ்வளவு முறைகேடான பணப்பரிமாற்றம் நடைபெற்றது என இன்னும் கண்டறியவில்லையாம். வரும் ஏப்ரல் 17இல் ஜெட் ஏர்வேஸ் பணபிரச்சானையால் மூடப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

காரகோரம் நெடுஞ்சாலை: குலைநடுங்க வைக்கும் சாலை – கேள்வி பட்ருக்கியா?

0
காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram highway) உலகின் மிக நீளமான சாலை

காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram highway) சீனா – பாகிஸ்தான் நல்லுறவு நெடுஞ்சாலை. உலகின் மிக நீளமான சாலை. 1300 கிலோமீட்டர் தூரம் கொண்டது. மிகவும் ஆபத்தான சாலை.

காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram highway)

பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தில் ஆரம்பமாகிறது, குன்ஜேரப் கணவாய் வழியாக சென்று சீனாவை அடைகிறது.

இந்த நெடுஞ்சாலை சீனா எல்லையை சென்றவுடன் “சீனா தேசிய நெடுஞ்சாலை 314” ஆக மாறுகிறது.

உலகின் மிக நீளமான சாலை

உலகிலேயே மிக நீளமான தார்ச்சாலை கொண்ட நெடுஞ்சாலையாகும். அதனால் இது பல்வேறு நாட்டின் சுற்றுலா பயணிகளை கவர்கிறது.

இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தானின் குன்ஜேரப் பகுதியில் உள்ள மலைப் பகுதியை கடந்து செல்கிறது. அந்த மலைகள் கிட்டத்தட்ட கடல் மட்டத்திலிருந்து 4714 மீட்டர் (15,466 அடி) உயரம் கொண்டது.

இவ்வளவு உயரத்தில் இந்த தார்ச்சாலை கட்டமைக்கப்பட்டு உள்ளதால், அந்த பகுதியில் உள்ள மக்கள் இதை, எட்டாவது உலக அதிசயம் என்று கூறுவருகிறார்கள்.

ஆசிய கண்டத்தின் “ஆசிய நெடுஞ்சாலை 4” இதன் வழியாகவே செல்கிறது. 1959 ஆம் ஆண்டு இந்த நெடுஞ்சாலை பணி கள்கட்ட ஆரம்பித்து 1979 ஆம் ஆண்டு கட்டிமுடிக்கப்பட்டது.

1986 ஆம் ஆண்டு பொது மக்களுக்காக திறக்கப்ட்டது. இந்த நெடுஞ்சாலை பாகிஸ்தான் மற்றும் சீனா இரு நாடுகளும் இணைந்து தங்களுடைய அரசாங்க பொருளதார பணத்தில், இந்த நெடுஞ்சாலை கட்டப்பட்டது.

இந்த நெடுஞ்சாலை பணிகள் கட்டி முடிப்பதற்குள் 810 பாகிஸ்தானியர்கள், 200 சீனர்களும் உயிர் இறந்துள்ளனர்.

இவர்கள் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாத காரணத்தினால் இறந்துள்ளனர்.

வசந்த காலம் மற்றும் இலையுதிர் காலத்தில் சுற்றுலா பயணிகளை கவர கூடிய அளவிற்கு அதனுடைய வானிலை வசீகரமாக இருக்கும்.

ஆனால் கடும் பனி பொழிவு காரணத்தால் பனிக்காலத்தில் அரசாங்கத்தால் இந்த நெடுஞ்சாலை மூடப்படும்.

மழை காலங்களிலும் அதாவது ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு சாலைகள் தற்காலிகமாக மூடப்படும்.

குன்ஜேரப் கணவாய் பகுதியில், மே 1 முதல் டிசம்பர் 31 வரை மட்டுமே பயணிகள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.

2016-க்கு பிறகு பாகிஸ்தான் அரசாங்கம் வெளியூர் பயணிகளுக்கு பாதுகாப்பை அதிகரித்த காரணத்தால், 1.75 மில்லியன் சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

காரகோரம் நெடுஞ்சாலை (Karakoram highway) இரண்டு நாட்டின் மிகப்பெரிய நான்கு நதிகள் மற்றும் இரண்டு ஏரிகளை கடந்து செல்கிறது.

இந்தூஸ் நதி, ஹன்ஸா நதி, கில்ஜித் நதி, குன்ஜேரப் நதி, அட்டபத் மற்றும் கரகுல் ஏரி ஆகும். காரக்ககோரம் நெடுஞ்சாலையில் நாமும் ஒரு நாள் பயணிக்க தோன்றுகிறது.

3

5/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
5/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil

5/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

 

மேஷம் ராசிபலன்

எதிர்மறையான எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். பேச்சை குறைக்கவும்.

பணியாளர்களிடம் கவனமாக பேசவும். குடும்பத்தில் உணர்ச்சி வசப்பட்டு பேச வேண்டாம்.

நிதி நிலை மோசமாக இருக்கும். செரிமான கோளாறுகள் வர வாய்ப்பு உண்டு.

குரு பகவானுக்கு விளக்கு ஏற்றி வர நன்மை கிடைக்கும்.

ரிஷபம் ராசிபலன்

இன்று மகிழ்ச்சிகரமான நாளாக அமையும். சரியான திட்டமிடல் வெற்றியை தரும் வியாபாரம் சிறந்து விளங்கும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி கூடும். பிரச்சனைகள் தொலையும். நிதியில் வரவு அதிகம் இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

தட்சிணாமூர்த்திக்கு விளக்கேற்றி வர நற்பலன் கிடைக்கும்

மிதுன ராசிபலன்

சிறய பிரச்சனைகளை எளிதாக எடுத்து கொள்ளவும். அமைதி தேவை.

பணியில் கவனம் வேண்டும். கவனசிதறலை தவிர்க்கவும். தங்களின் உணர்வை துணையிடம் திணிக்காதீர்கள்.

சேமிப்பில் கவனம் வேண்டும். செலவு அதிகம் வரலாம். வயிறு கோளாறுகள் வரலாம்.

குருபகவானிற்கு விளக்கேற்றி வாருங்கள்

கடக ராசிபலன்

இன்று பதட்டமான நாளாக இருக்கும். பக்தி ஸ்லோகங்கள் படிக்கவும்.

சக பணியாளர்களிடம் பேச்சு வார்த்தைகளில் கவனமாக பேசவும். துணையிடம் மனம் திறந்து பேச கவலைகள் குறையும்.

லாபம் குறைவாக இருக்கும். கணுகாலிலும் தோளிலும் வலி ஏற்படலாம்.

நந்திக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மை வந்து சேரும்.

சிம்மம் ராசிபலன்

தங்களை தாங்களே உற்சாகமாக வைத்து கொள்ள வேண்டிய நாள். கவலைகளை புறக்கணிக்கவும்.

பணிகள் அதிமாக இருக்கும். துணையிடம் ஈகோ பிரச்சனைகள் வரலாம்.

பணவரவு திருப்திகரமாக இருக்காது. ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

அம்பிகையை வழிபட கவலைகள் குறையும்.

கன்னி ராசிபலன் 

இன்று மகிழ்ச்சியான நாளாக இருக்கும். நன்மைகள் வந்து சேரும். லாபகரமான நாள்.

மேலதிகாரியிடம் பாராட்டு கிடைக்கும். தங்கள் துணையிடம் நல்ல புரிதல் இருக்கும். தன வரவு நன்றாக இருக்கும்.

ஆரோக்கியம் நன்றாக இருக்கும். அவநம்பிக்கைகளை தவிர்க்கவும்.

குரு பகவானிற்கு விளக்கேற்றி வர நன்மைகள் கூடும்

துலாம் ராசிபலன்

புதிய தொடர்புகள் கிடைக்கும். மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள்.

சிக்கலான விஷயங்களை எளிதில் முடிப்பீர்கள். குடும்ப பிரச்சனைகள் தீரும்.

இன்பம் பெருகும். தன வரவு அதிகம். சிறந்த ஆற்றல் கிடைக்கும்.

தட்சிணாமூர்த்தியை வழிபட கூடுதல் பலன் உண்டு.

விருச்சிக ராசிபலன்

இன்று சிறந்த பலன்கள் கிடைக்கும். ஆனால் சற்று தாமதமாக கிடைக்கும். பொறுமை அவசியம்.

பணியில் திட்டம் தேவை. நாளிறுதியில் நல்ல பலன் உண்டு. துணையிடம் சிரித்து பேசுங்கள்.

பணவரவு சுமாராக இருக்கும். பயணத்தில் கவனம் தேவை. நரம்பு மண்டலத்தில் பிரச்சனை வரலாம்.

சரஸ்வதி தேவியை விளக்கேற்றி பூஜியுங்கள் நல்ல பலன் உண்டு

தனுசு ராசிபலன்

இன்று நீங்கள் பொறுமையாக செயலாற்ற வேண்டிய நாள். வாகனங்கள் ஓட்டுவதில் கவனம் தேவை.

பணியில் சிறு சிறு தவறுகள் நேரும். கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடுகள் வரலாம்.

பண வரவு குறைவாக இருக்கும். தோள் வலி அல்லது கை வலி ஏற்பட வாய்ப்புண்டு.

குரு பகவானிற்கு விளக்கேற்றி வழிபட நற்பலன்கள் கிடைக்கும்

மகரம் ராசிபலன் 

இன்று நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். திட்டமிட்ட பணிகள் நடைபெறும்.

பணியில் பாராட்டு கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பெருகும்.

பணப்புலக்கம் சிறப்பாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

பிரம்மனிற்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மை கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

மற்ற நாளை விட அருமையான நன்மைகள் வர வாய்புண்டு. சுய முன்னேற்றம் இருக்கும்.

பணியில் ஊக்க தொகை கிடைக்கும். இனிமையான பேச்சால் இல்லறம் சுகப்படும்.

லாபம் பெருகும். நல்ல உடல் வலிமை பெறுவீர்கள்.

குருமார்களின் ஆசீர்வாதம் பெற்று வாருங்கள்

மீனம் ராசிபலன் 

அவசர முடிவுகளை தவிர்க்கவும். யோசித்து செயலாற்ற வேண்டும்.

பணியிடத்தில் பொறுப்புகளை முடிப்பதில் தாமதம் வரலாம்.

கணவன் மனைவி இடையே அன்பான பேச்சு வேண்டும். பணத்தை கையாள சிந்தித்து செயலாற்றவும்.

முதுகு சம்மந்தமான பிரச்சனைகள் வரலாம்.

சிவ பெருமானை தரிசனம் செய்ய துன்பங்கள் அண்டாது.

5/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

முதல் டி20 இலங்கையை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

0

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் அணி 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

அதன்படி 3 ஒருநாள் போட்டி தொடரில் மூன்று போட்டிகளில் தோற்று வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கை அணியிடம் ஒயிட்வாஷ் ஆனது.

இரண்டு போட்டிகள் கொண்ட டி20 போட்டிகளில் முதல் போட்டி இன்று பல்லிக்கல்லே சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் 196 ரன்

டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.

சிம்மன்ஸ் 67 ரன்கள், பிராண்டன் கிங் 33 ரன்கள், பூரான் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

ரசல், பொல்லார்டு அதிரடி

அடுத்ததாக களமிறங்கிய ரசல் மற்றும் கிரன் பொல்லார்டு, இலங்கை அணியின் பந்துவீச்சை சிக்ஸர்கள் ஆக பறக்கவிட்டனர்.

ரசல் 14 பந்துகளில் 35 ரன்களும் பொல்லார்டு 15 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இவர்கள் இருவரும் சேர்ந்து 6 சிக்சர்கள் மற்றும் 5 பவுண்டரிகள் விளாசினார்.

இலங்கை தரப்பில் சண்டகன், மலிங்கா, ஹசரங்கா தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

இலங்கை தோல்வி

191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் 170 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

25 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட்இண்டீஸ் அணியிடம் இலங்கை அணி தோல்வி அடைந்தது.

ஓசன்னா தாமஸ் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இலங்கை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

இலங்கை அணி தரப்பில் குசல் பெரேரா 66 ஹசரங்கா 44, மேத்யூஸ் 10, திசாரா பெரேரா 11 ரன்கள் எடுத்தனர்.

மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

மேற்கிந்திய தீவு ஒக்ஷ தரப்பில் ஓசேனா தாமஸ் ஐந்து விக்கெட்டுகளும், பவல் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

5 விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஓசனை தாமஸ் ஆட்ட நாயகன் விருதை வென்றார்.

இதன் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் முன்னிலை வகிக்கிறது.

அடுத்த போட்டி

இரண்டாவது t20 போட்டி வருகிற மார்ச் 6 ஆம் தேதி, இதே மைதானத்தில் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.

3

Valimai Shooting Spot Video; தல அஜித் மாஸ் காட்டும் பைக் ரேஸ்

0
Valimai Shooting Spot Video

Valimai Shooting Spot Video; தல அஜித் மாஸ் காட்டும் பைக் ரேஸ்

வலிமை (Valimai) படத்தில் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை.

முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.

வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்

வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், டுவிட்டரில் வலிமை, அஜித், ஹெச் வினோத் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தின திதி நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

Valimai: வைரலாகும் வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்!

2
Valimai Shooting Spot Pictures

Valimai, Ajith வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை (Valimai) படத்தில் அஜித் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது வலிமை படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில், போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான படம் நேர்கொண்ட பார்வை. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய நேர்கொண்ட பார்வை படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து அஜித் மீண்டும் ஹெச் வினோத் – போனி கபூர் கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த கூட்டணியில் வலிமை படம் உருவாகி வருகிறது.

போலீஸ் கதையை மையப்படுத்திய வலிமை படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். மற்ற நடிகர், நடிகைகள் குறித்து அறிவிப்பு ஏதும் இதுவரை வெளியாகவில்லை.

யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். இதுவரை வலிமை படம் குறித்து எந்த அப்டேட்டும், படப்பிடிப்பு புகைப்படங்கள், வீடியோ என்று வெளியாகவில்லை. ஒரு சமயத்தில் அஜித்திக்கு பைக் ரேஸின் போது காயம் ஏற்பட்ட கட்டத்தில் வீடியோ வெளியானது. ஆனால், இதைத் தவிர வேறு எந்த புகைப்படமும் வெளிவரவில்லை.

Valimai Shooting Spot Pictures

இந்த நிலையில், தற்போது வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், இயக்குநர் ஹெச் வினோத் இருக்கும் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

சென்னை மீஞ்சூர் அவுட்டர் ரிங் ரோடு பகுதியில் வலிமை படத்தின் பைக் மற்றும் கார் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. இதில், பைக் ரேஸ்க்காக அஜித் பயன்படுத்தும் பைக் என்று ஒரு புகைப்படம் வெளிவந்துள்ளது.

வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்

வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில், டுவிட்டரில் வலிமை, அஜித், ஹெச் வினோத் ஆகிய ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகிறது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் நினைவு தின திதி நிகழ்வில் அஜித் கலந்து கொண்டார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படமும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வலிமை படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

விராட் கோலி-யின் “ஈ சாலா கப் நமதே” நிஜமாகுமா?

0
ஈ சாலா கப் நமதே ராயல் சேலஞ்சர்ஸ் விராட் கோலி கஜினி முகமது

விராட் கோலி-யின் “ஈ சாலா கப் நமதே”, ஒவ்வொரு ஆண்டும் இந்த மந்திரம் பலிப்பதில்லை. இருப்பினும் கஜினி முகமது போன்று விடாமல் படையெடுக்கிறது ராயல் சேலஞ்சர்ஸ்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல்லில் 12 வருடமாக ஒரே அணியில் விளையாடும் ஒரு சில வீரர்களில் விராட் கோலியும் ஒருவர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐந்து தடவை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதில் மூன்று முறை இறுதி ஆட்டத்திற்கு சென்றது.

ஆனால், அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை. ஐபிஎல்லில் உள்ள 8 அணிகளின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு அதிகப்படியான உணர்வுபூர்வமான ரசிகர்கள் உள்ளனர்.

விராட் கோலி, கிறிஸ் கெய்ல், ஏபி டிவில்லியர்ஸ், யுவராஜ் சிங், டேல் ஸ்டெயின் போன்ற வீரர்கள் இந்த அணிக்கு சீசன் சீசனாக மாறி வருகிறார்கள்.

அணியில் விளையாடும் போது நன்றாக விளையாடும் இந்த வீரர்கள் ராயல் சேலஞ்சர் வந்தவுடன் சொதப்பி விடுவார்கள்.

இதில், விராத் கோலியை தவிர மற்ற அனைத்து வீரர்களும் வெவ்வேறு அணிகளில் விளையாடியவர்கள்.

ஈ சாலா கப் நமதே

இந்த அணியின் ரசிகர்கள் கடந்த காலமாகவே ஐபிஎல் கோப்பையை வெல்ல ஒரு மந்திரச் சொல்லை பயன்படுத்தி வருகிறார்கள் அது “EE Sala Cup Namde”.

பெங்களூரு அணி விளையாடும் போது இந்த மந்திரக் கோஷத்தை ரசிகர்கள் கரகோஷம் செய்வார்கள்.

இந்திய அணியின் விராட் கோலி விளையாடும் போதும் மைதானத்தில் ரசிகர்கள் “ஈ சாலா கப் நமதே” என்று போஸ்டர் எழுதி வைத்திருப்பார்கள்.

இந்திய அணியை விராட் கோலி வழி நடத்தும்போது ஆக்ரோஷத்துடன் கேப்டன்ஷிப் செய்து வெற்றியாய் குவிப்பார்.

ஆனால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு என்று வந்தவுடன் மற்ற நாட்டு வீரர்களை கையாள்வதில் வீராட் கோலி சிரமப்படுகிறார். ஆனால் தான் ரன் சேர்ப்பதில் என்றும் கில்லாடியாக திகழ்கிறார்.

ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இதுவரை ஐந்து தடவை ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

அதில் இரு தடவை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது சர்வதேச கிரிக்கெட்டுக்கு நியூசிலாந்து அணிக்கு எப்படி உலக கோப்பை கனவாகவே உள்ளதோ அது போல ஐபிஎல் போட்டியில் பெங்களூர் அணிக்கு கோப்பை கனவாகவே உள்ளது.

பெங்களூரு அணி எப்போதுமே முதல் 7 ஆட்டங்களில் அதிக தோல்விகள் பெற்றுவிடும் கடைசி 7 போட்டிகளில் வெற்றிகளைப் பெற்று மற்ற அணி போட்டிகளின் வெற்றி/தோல்வி அடிப்படையில் பிளே ஆப் சுற்றுக்குள் நுழையும்.

இந்த அணியின் நிர்வாகம் வெளிநாட்டு அதிரடி வீரர்களை அதிக பணத்திற்கு வாங்கி குவிக்கும். ஆனால் என்னவோ இந்த அணிக்கு வந்தவுடன் அந்த வீரர்கள் ஃபார்ம் அவுட் ஆகி விடுவார்கள்.

இந்திய அணியில் காட்டும் ஆக்ரோஷத்தை விராட் கோலி பெங்களூரு அணியிடம் காட்டி இருந்தால் ஒருவேளை கோப்பையை வென்றிருக்கலாம். ஆனால் விராட் கோலி தன்னுடைய ஃபார்ம் முக்கியம் என்று விளையாடுவார்.

கஜினி முகமது

எத்தனை முறை தோற்றாலும் ராயல் சேலஞ்சர்ஸ் அணி தன்னுடைய வாசகத்தை மாற்றாமல் கஜினி முகமது போன்று விடாமல் முயற்சித்து வருகிறது.

ஐபிஎல் 2020: இந்த தடவையாவது தன் அணியை ஆக்ரோஷத்துடன் செயல்பட்டால் ரசிகர்கள் எழுப்பும் “ஈ சாலா கப் நமதே” என்ற மந்திரம் நிஜமாகும்.

3