Home Blog Page 240

Peanut Month History; மார்ச் மாதம் பீனட் மாதமாக ஏன் கொண்டாடப்படுகிறது?

0
Peanut Month March

Peanut Month History; மார்ச் மாதம் பீனட் மாதமாக ஏன் கொண்டாடப்படுகிறது today what special day in world – india – tamil.

பீனட் என்பதை கிரவுண்ட் நட் எனவும் அழைப்பார்கள். இதற்கு தமிழில் நிலக்கடலை என்று பெயர். அமெரிக்காவில் மார்ச் மாதம் தேசிய பீனட் மாதமாக கொண்டாடப்படுகிறது.

அமெரிக்கர்களின் விருப்பமான ஸ்நாக்ஸில் இது ஒன்று. இதிலிருந்து எண்ணெய், பட்டர் மற்றும் பல்வேறு உணவில் இதன் கலவைகளை சேர்க்கிறோம்.

1941ஆம் ஆண்டு முதலில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில் பீனட் வாரமாக கொண்டாடப்பட்டது.

National Peanut Month March

1971இல் இருந்து பீனட் மாதமாக மாடப்பட்டு கொண்டாடப்படுகிறது. பீனட் என்னும் பெயர் 1600, 1700களில் அடிமையாக தோட்ட வேலை சேய்த ஆப்ரிக்கர்களை  plant “nguba” meaning “peanut” என்று வேலை ஏவுவார்களாம். இதுவே  நாளடைவில் பீனட் என பெயர் வார காரணமாகும்.

The Father of the Peanut

நிலக்கடலையே அதிகமாக பயிரிடுவதில் இருந்து அதை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து பிரபலமாக்கிய முனைவர் ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்பவதானம்.

இதனால் இவர் செல்லமாக ஃபாதர் ஆஃப் பீனட் என அழைக்கப்படுகிறார். 1925ஆம் ஆண்டு நிலக்கடலை எப்படி பயிறுடுவது அதன் முக்கியத்துவம் பற்றி ஒரு கட்டுரை வெளியிட்டாரம்.

வரலாற்றில் இன்று இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

நடிகை பார்வதி திருவொத்து; டைரக்ஷன் படிக்க அமெரிக்கா செல்ல முடிவு

0
நடிகை பார்வதி திருவொத்து

நடிகை பார்வதி திருவொத்து; டைரக்ஷன் படிக்க அமெரிக்கா செல்ல முடிவு

மலையாள முன்னணி நடிகையான பார்வதி திருவொத்து ஃபிலிம் டைரக்ஷன் படிக்க அமெரிக்கா செல்ல முடிவு எடுத்துள்ளாராம்.

தமிழில் பூ, மரியான் மற்றும் பெங்களூர் நாட்கள் ஆகிய படிங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து உயரே திரைப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

இவருக்கு டைரக்‌ஷன் மீது அதிக ஆசை ஏற்பட்டது. இதையடுத்து தான் நடிக்கும் மலையாள படங்களில் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்துள்ளார்.

இதன் மூலம் டைரக்‌ஷன் தொடர்பான நுணுக்கங்களை அவர் அறிந்துகொண்டார். முழுவதுமாக இதை கற்க அமெரிக்கா சென்று டைரக்ஷன் கோர்ஸ் கற்க முடிவு செய்துள்ளார்.

டைரக்ஷன் கற்பதற்காக மலையாளத்தில் வந்த இரண்டு பட வாய்ப்புகளையும் மறுத்து விட்டு 6 மாதம் கோர்ஸ் கற்க அமெரிக்கா செல்ல முடிவு செய்து விட்டாராம்.

3

செல்வராகவன் பிறந்தநாள் இன்று

0
செல்வராகவன் பிறந்தநாள்

செல்வராகவன் பிறந்தநாள். புதுகோட்டை, ஆயிரத்தில் ஒருவன் படங்கள் மூலம் இன்றும் நீங்க நினைவுகளுடன் ரசிகர்கள் மனதில் நிற்கும் இயக்குனர் செல்வராகவன்

செல்வராகவன் பிறந்தநாள் இன்று

மார்ச் 5ம் தேதி 1977 ஆம் ஆண்டு தேனியில் பிறந்தவர் தான் இயக்குனர். செல்வராகவன் இவரின் தந்தை பிரபல இயக்குனர் கஸ்தூரிராஜா அவர்கள் ஆவார்.

இவருடைய சகோதரர் பிரபல நடிகர் தனுஷ் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று. இவர் திரைக்கதாசிரியர் மற்றும் இயக்குனர் ஆவார்.

இவர் தமிழில் முக்கியமான இயக்குனர்களில் இவரும் ஒருவர். இவர் முதன் முதலில் அவரது தந்தை இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் திரைக்கதை ஆசிரியராக அறிமுகமானார்.

இந்த படம் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. பின்பு 2003-ஆம் ஆண்டு தனது சகோதரர் தனுஷை வைத்து காதல் கொண்டேன் என்ற படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார்.

அந்த படம்தான் தனுஷ் என்று நல்ல மார்க்கெட்டை உருவாக்கியது. திரைப்பட இசையிலும் யுவன் சங்கர் ராஜாவுக்கு தனி பாணியை உருவாக்கி தந்த படம்.

இந்தப் படம் விமர்சனம் ரீதியாக மட்டுமில்லாமல் வர்த்தக ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

பின்பு நடிகர் ரவிகிருஷ்ணா வைத்து 2004 ஆம் ஆண்டு 7ஜி ரெயின்போ காலனி என்ற படத்தை இயக்கினார்.

இந்தப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

இந்த படம் தெலுங்கிலும் 7-ஜி பிருந்தாவனம் காலனி என்று ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டு வெளியானது. மேலும் அதிக மொழிகளில் இந்த படம் ரீமேக் ஆனது.

புதுப்பேட்டை கேங்ஸ்டர் படம்

அடுத்து 2006-ஆம் ஆண்டு இவர் இயக்கிய படம் தனுஷ், செல்வராகவன், யுவன்சங்கர்ராஜா மூவரின் திரைப்பட வாழ்வில் மறக்க முடியாத ஒரு படமாக அமைந்தது.

கேங்ஸ்டர் பட உலகில் தனக்கென ஒரு சிறப்பு அந்தஸ்தை பிடித்தது இந்த படம். வடசென்னையை பிரதான களமாக கொண்டு இயக்கப்பட்ட புதுப்பேட்டை திரைப்படமானது.

இன்றும் கேங்ஸ்டர் படங்களுக்கு இது ஒரு முன்னோடி தான். குப்பத்தில் வாழும் ஒரு பள்ளி மாணவன் எப்படி ரவுடி ஆகிறான்.

பின்பு அரசியலில் தன்னை இணைத்துக்கொண்டு கோலாச்சிக்கிறான் என்று விறுவிறுப்பான திரைக்கதையின் மூலம் சொல்லப்பட்டது.

படத்தின் பாடல்களும் வழக்கம்போல பெரிதாக அனைவரையும் கவர்ந்தது. செல்வராகவன் தெலுங்கிலும் படம் இயக்கியுள்ளார்.

அந்தப் படம் பின்பு தமிழில் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் யாரடி நீ மோகினி என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

ஆயிரத்தில் ஒருவன் ஹிஸ்டாரிகல் பேண்டசி

சோழன் பாண்டிய கதைகளில் ஃபேண்டசி புகர்த்தி இயக்கப்பட்ட படம்தான் ஆயிரத்தில் ஒருவன்.

இந்த படமும் நல்ல வரவேற்ப்பை பெற்று, இந்த படத்திற்கு என்று தனி ரசிகர் பட்டாளமே இன்றளவும் உள்ளனர்.

அதன்பின் 2011 மற்றும் 2013 ஆம் ஆண்டு மயக்கம் என்ன, இரண்டாம் உலகம் போன்ற படங்களை இயக்கினார். நல்லவர் இந்த இரு படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறவில்லை

அதனால் நீண்ட இடைவெளிக்குப் பின்பு சூர்யாவை வைத்து என்ஜிகே படத்தை இயக்கினார்.

இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வர்த்தக ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது

தற்போது இவர் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகத்தை இயக்கும் திட்டத்தில் உள்ளார்.

இவர் இயக்குனராக மட்டுமல்லாமல் தன்னுடைய படங்களுக்கு பாடல் ஆசிரியராகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். இவர் இன்று தனது 44-வது பிறந்த நாளைக் கொண்டாடுகிறார்.

3

Ranji trophy Updates; இறுதி போட்டி குஜராத் – பெங்கால் அணிகள்

0
Ranji trophy Updates

Ranji trophy Updates; இறுதி போட்டி குஜராத் – பெங்கால் அணிகள்

ரஞ்சி போட்டி இறுதி ஆட்டத்தில் சௌராஷ்டிரா மற்றும் பெங்கால் அணிகள்.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 9 ஆம் தேதி தொடங்கிய 2019 மற்றும் 2020ம் ஆண்டுக்கான ரஞ்சிப் போட்டி இறுதிப்போட்டிக்கு வந்துள்ளது

இந்த வருடம் 38 அணிகள் பங்கு பெற்று மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு நான்கு அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

முதல் அரையிறுதி போட்டிகள் பெங்கால் மற்றும் கர்நாடகாவும், இரண்டாவது அரை இறுதிப்போட்டியில் சௌராஷ்டிரா மற்றும் குஜராத் அணிகள் மோதின.

பெங்கால் மற்றும் கர்நாடகா

முதல் அரையிறுதியில் அனுபவம் இல்லாத பெங்கால் அணி அபிமன்யு ஈஸ்வரன் தலைமையிலும்,  பல அனுபவ வீரர்களை கொண்ட கருண் நாயர் தலைமையில் கர்நாடகா அணிகளும் மோதின.

மஜூம்தார் சதத்துடன் பெங்கால் அணி முதல் இன்னிங்சில் 312 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய கர்நாடக அணி 122 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

பெங்கால் வெற்றி

190 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடர்ந்த பெங்கால் அணி 161 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது.

352 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய கர்நாடக அணி 177 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

இதன் மூலம் 174 ரன்கள் வித்தியாசத்தில் கர்நாடக அணியை பெங்கால் அணி வீழ்த்தியது.

முஜும்தார் ஆட்டநாயகன்

முதல் இன்னிங்சில் 149 ரன்கள் மற்றும் இரண்டாவது இன்னிங்சில் 46 ரன்கள் எடுத்த முஜும்தார் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

பெங்கால் அணி தரப்பில் முதல் இன்னிங்சில் இசாந்த் போரேல் 5 விக்கெட்டும், இரண்டாவது இன்னிங்சில் முகேஷ் குமார் 6 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

குஜராத் மற்றும் சௌராஷ்டிரா

மற்றொரு அரையிறுதிப் போட்டியில் குஜராத் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதின.

டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி சவுராஷ்டிரா, ஜாக்சன் சதத்துடன் 304 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

அடுத்து முதல் இன்னிங்சை ஆடிய குஜராத் அணி ரஜுல் பட் 71 ரன்கள் துணையுடன் 252 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

52 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை ஆடிய சௌராஷ்ட்ரா அணி வசுவாடா 139 ரன்கள் சதத்தில் 274 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டையும் இழந்தது.

சௌராஷ்ட்ரா வெற்றி

327 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய குஜராத் அணி பர்திவ் படெல் 93 மற்றும் காந்தி 96 ரன்கள் எடுத்தும் 234 ரன்கள் மட்டுமே எடுத்து, 92 ரன்கள் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணியிடம் தோல்வி அடைந்தது.

இரண்டாவது இன்னிங்சில் சதம் அடித்த ஆர்பிட் வசுவாடா ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இறுதிப்போட்டி

வருகிற மார்ச் 9ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் பெங்கால் மற்றும் சௌராஷ்டிரா அணிகள் மோதுகின்றன.

ரஞ்சி போட்டிகளில் இதுவரை பெங்கால் அணி இரு தடவையும், சவுராஷ்டிரா அணி இரண்டு தடவையும் கோப்பையை வென்றுள்ளது.

இதுவரையில் ரஞ்சி போட்டி

இதுவரை ரஞ்சி போட்டிகளில் மும்பை அணி 41 தடவை கோப்பையையும், இரண்டாமிடத்தில் உள்ள கர்நாடகா எட்டுத் தடவையும், தமிழ்நாடு இரு தடவையும் கோப்பையை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

3

South africa vs australia 2nd odi; தென் ஆப்பிரிக்கா வெற்றி

0
South africa vs australia 2nd odi

South africa vs australia 2nd odi; தென் ஆப்பிரிக்கா வெற்றி

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி 3 t20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது

மூணு டி20 போட்டிகளில் 2 ஒன்று என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணியை ஆஸ்திரேலியா வீழ்த்தி கோப்பையை வென்றது

முதலாவது ஒருநாள் போட்டியில் 74 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தியது

இரண்டாவது ஒருநாள் போட்டியிலும் போட்டி புலும்ஃபார்டின் மைதானத்தில் நேற்று நடந்தது

டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது

முதல் விக்கெட்டுக்கு வார்னர் மற்றும் பின்ச் 50 ரன்கள் சேர்த்து வார்னர் விக்கெட்டை இழந்தார்

ஆஸ்திரேலியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது 271 ரன்கள் எடுத்தது

ஆஸ்திரேலியா அணியின் அதிகபட்சமாக பின்ச் மற்றும் ஆர்சி ஷார்ட் தலா 69 ரன்கள் எடுத்தனர்.

வார்னர் 35 ரன்கள் மிச்செல் மார்ஸ் 36 ரன்கள் அலெக்ஸ் காரி 21 ரன்கள் எடுத்தனர் மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் விக்கெட்டை இழந்தனர்

தென் ஆப்ரிக்காவின் பந்துவீச்சாளர் லுங்கி நெகிடி பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்த ரசிகர்கள் என்பது குறிப்பிடத்தக்கது

தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி தெகிடி 6 விக்கெட்டும் 4ஜி 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்

272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி, முதல் ஓவரிலேயே அதிர்ச்சி காத்திருந்தது.

கடந்த சில காலமாக முழு திறமையுடன் விளையாடிக் கொண்டு இந்த டிகாக் இந்த போட்டியில் முதல் ஓவரின் 3-வது பந்தில் ரன் எதுவும் எடுக்காமல் மிட்செல் ஸ்டார்க் பந்தில் வெளியேறினார்.

தனது முதல் தொடரில் விளையாடும் ஜனேமேன் மலன் அற்புதமாக ஆடி ரன்களை சேர்த்தார்.

தனது இரண்டாவது போட்டியில், அதுவும் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சாதத்தை எடுத்து தென்னாபிரிக்க அணி வெற்றிக்கு உதவினார்.

தென்னாபிரிக்க அணி இறுதியில் 48.3 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 274 ரன்கள் எடுத்தது.

தென் ஆப்பிரிக்க அணி அதிகபட்சமாக ஜனேமேன் மலன் 129 ரன்கள், கிளாசென் 51 ரன்கள், ஸமட்ஸ் 47 ரன்கள், மில்லர் 37 ரன்கள் எடுத்தனர்.

ஆஸ்திரேலியா தரப்பில் ஜம்பா 2 விக்கெட்டும், மிட்சல் ஸ்டார்க் மற்றும் கம்மின்ஸ் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

ஆட்டநாயகன் விருதை சதமடித்த ஜனம் ஏன் மலன் மற்றும் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய லுங்கி நிகிடி இருவரும் பகிர்ந்து கொண்டனர்.

இதன்மூலம் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் இரண்டாவது போட்டியிலும் வீழ்த்தி, மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தொடரை வென்றது.

இதற்கு முன்பு நடந்த டி20 போட்டித் தொடரை இழந்ததற்கு தென்ஆப்ரிக்க அணி ஆஸ்திரேலியாவை பழிதீர்த்தது.

மூன்றாவது ஒருநாள் போட்டி வருகிற மார்ச் 7ஆம் தேதி போட்ச்ஸ்டோர்ம் மைதானத்தில் நடைபெறுகிறது.

3

தமிழகத்தில் கொரோனா; திருச்சியில் நான்கு பேர் சிறப்பு வார்டில் அனுமதி

0
தமிழகத்தில் கொரோனா
04/03/2020: Tiruchy, Tamil Nadu: A view of Corona isolation wards in Mahatma Gandhi Memorial Government Hospital in Tiruchy.Express/ MK Ashok Kumar, Senior Principal News Photographer

தமிழகத்தில் கொரோனா; திருச்சியில் நான்கு பேர் சிறப்பு வார்டில் அனுமதி

இந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அரசு தரப்பில் இருந்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது.

இதைக் கட்டுக்கொள் கொண்டுவர ஒவ்வொரு மாநிலங்களும் சிறப்பு வார்டுகளை ஏற்பாடு செய்து முன் எச்சரிக்கையோடு செயல்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா

நேற்று திருச்சி விமான நிலையத்தில் வந்து இறங்கிய ஒரு குழந்தையுடன் மூவருக்கு 100டிகிரிக்கு மேல் காய்ச்சல் இருந்ததால் அவர்கள் திருச்சி அரசு மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்டனர்.

மேலும் அவர்களை சிறப்பு வார்டில் வைத்து சிகிச்சை அளித்து ரத்த மாதிரிகளை டெஸ்ட்க்கு அனுப்பியுள்ளனர்.

கேரளாவில் இருந்த 3 கொரோனா பேசண்ட் சேர்த்து மொத்தம் 29 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் என ஹெல்த் மினிஸ்டர் தான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு வந்த இத்தாலியன் பயணிகளில் 21இல் 14பேருக்கு கொரொனா வைரஸ் ரிசல்ட் பாசிட்டிவாக வந்துள்ளதாம். அதில் இந்திய டிரைவரும் ஒருவர் ஆவார்.

தெலுங்கானாவில் ஒருவரும் ஆக்ராவில் ஆறு பேரும்  மொத்தம் 28 நபர்களுக்கு கொரொனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

மீண்டும் கொரோனா; இந்தியாவில் வெறியாட்டம் தொடருமா?

80 பேருக்கு கொரோனா பாதிப்பா? பீதியில் ஹைதாராபாத் மக்கள்

3

Vakeel saab: நேர்கொண்ட பார்வை அஜித்-யை மிஞ்சிய பவன் கல்யாண்

0
நேர்கொண்ட பார்வை அஜித் Vakeel saab பவன் கல்யாண் பெண்கள் இல்லை மார்ச் 8 மகளிர் தினம்

Vakeel saab: நேர்கொண்ட பார்வை அஜித்-யை மிஞ்சிய பவன் கல்யாண். ஒரு ஓரமாக கூட பெண்கள் இல்லை. முழு போஸ்டரிலும் Pawan Kalyan மட்டுமே ஆக்கிரமித்துள்ளார்.

பவன் கல்யாண் யார்?

பவன் கல்யாண் தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சிவியின் தம்பி. இவர் படங்கள் இரண்டு மூன்று வருடங்களுக்கு ஒரு முறையே வெளியாகும்.

இவர் படம் ரிலீஸ் என்றாலே ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் மாஸ் தான். மாஸ் என்ற ஒற்றை வார்த்தை மட்டுமே இவர் படங்களில் இருக்கும்.

தமிழில் வெளியான பத்ரி, குஷி ஆகிய ரீமேக் படங்களில் நடித்து தெலுங்கு திரையுலகின் முக்கிய நடிகராக உருவெடுத்தார்.

Pink Remake of Vakeel saab

அமிதாப் பச்சன் நடிப்பில் ஹிந்தியில் வெளியான பிங்க் படம் சூப்பர் ஹிட் அடித்தது. இதன் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை.

அமிதாப் கதாபாத்திரத்தில் அஜித் நடித்தார். நேர்கொண்ட பார்வை அஜித், படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் பிங்க் படத்தின் பர்ஸ்ட் லுக் போன்றே வடிவமைத்து இருந்தனர்.

ஆனால், அஜித் ரசிகர்களுக்கு என்றே ஒரு முரட்டு சண்டைக்காட்சி படத்தில் இடம் பெற்றது. இது நெகட்டிவ் மற்றும் பாசிட்டிவ் விமர்சனத்தை பெற்றது.

தெலுங்கின் வக்கீல் சாப் படம் ஒரு படி மேலே சென்று பர்ஸ்ட் லுக் போஸ்டரில் பவன் கல்யாண் (Pawan Kalyan) மட்டுமே உள்ளது போன்று வடிவமைத்து வெளியிட்டு உள்ளனர்.

போஸ்டரிலேயே பவன் கல்யாணை மட்டும் காட்டியுள்ளனர் என்றால், படத்தில் எத்தனை பைட்டிங் காட்சிகள் இருக்கப்போகிறது என்று கற்பனை செய்து கொள்ளுங்கள்.

மார்ச் 8 மகளிர் தினம்

மார்ச் 8 மகளிர் தினம் கொண்டாடப்பட உள்ளது. இந்த நேரத்தில் கதையின் முக்கிய பாத்திரங்கள் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் இல்லை.

இது பவன்கல்யாணின் பெண் ரசிகர்களிடையே சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மருந்திற்காவது மூன்று கதாநாயகிகளையும் ஒரு ஓரத்தில் வைத்து இருந்து இருக்கலாம்.

அதே நேரம் Pawan Kalyan கெட்டப், பேட்ட படத்தின் ரஜினி சாயலில் இருப்பதாகவும் தமிழ் ரசிகர்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.

ரஜினி+அஜித் கலந்த கலவையாக இப்படத்தில் நிச்சயம் நடித்திருப்பார் எனக் கூறிகின்றனர்.

3

சச்சின் பன்சால்; வரதட்சணை வழக்கு தொடுத்த பிலிப்கார்ட் நிறுவனர் மனைவி

0
சச்சின் பன்சால்

சச்சின் பன்சால்; வரதட்சணை வழக்கு தொடுத்த பிலிப்கார்ட் நிறுவனர் மனைவி

இந்தியாவின் மிகப் பிரபலமான பிசினஸ்மேன் சச்சின் பன்சால் பிலிப்கார்ட் நிறுவனத்தின் துணை நிறுவர் ஆவார்.

இவரின் மனைவி பிரியா பன்சால் மற்றும் மாமனார் இருவரும் சச்சின் மீது வரதட்சணை வழக்கு தொடுத்தனர்.

பிரியா பன்சால் கூறியதாவது;

என் அப்பாவிடம் கல்யாணதிற்கு 50 லட்சம் செலவும் செய்தது போக 11 லட்சம் ரொக்கமாக வரதட்சணையும் கேட்டு வற்புறுத்தியதாக போலீஸிடம் புகார்  தெரிவித்துள்ளார்.

மேலும்  20 October 2019 அன்று இதை காரணமாக வைத்து பாலியல் மற்றும் மனரீதியா என்னை துன்புறுத்தினார்கள் எனவும் போலீஸிடம் தெரிவித்தார்.

இது குறித்து கோரமங்கல போலீஸ் ஸ்டேஷனில் பிப்ரவரி 28ஆம் தேதி சச்சின் பன்சால் மற்றும் பிற மூன்று நபர் மீது எஃப்‌ஐ‌ஆர் பதிவு செய்து வழக்கு தொடுத்தார்.

 

3

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது இந்தியா

0
மகளிர் உலகக் கோப்பை

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டிக்கு  முன்னேறியது இந்தியா

7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,

பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் லீக் போட்டியில் விளையாடியது

பிரிவு ‘ஏ’ வில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பிரிவு ‘பி’யில் இங்கிலாந்து மற்றும் தென் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

அதன்படி இன்று இந்தியாவும் இங்கிலாந்தும் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த நிலையில் மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது.

நடுவர்கள் காத்திருந்து காத்திருந்து மழை நின்றால் ஆட்டம் ஆரம்பிக்கலாம், 10 ஓவர் வரை குறைத்து விளையாடலாம் என்று காத்திருந்தனர், ஆனால் மழை நின்றபாடில்லை.

நடுவர்கள், இங்கிலாந்து தலைவரிடமும் இந்திய அணி தலைவரிடம் பேசி ஆட்டத்தை கைவிடலாம் என்று முடிவெடுத்தனர்.

அதன்படி ஆட்டம் கைவிடப்பட்டது பிரிவு ‘ஏ’ புள்ளி பட்டியலில் இந்திய அணி லீக் போட்டிகளில் அனைத்து போட்டியிலும் வென்றதால் முதலிடத்தில் இருந்தது.

புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ள அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் என்பது உலக கோப்பை விதி.

அதன்படி இந்திய அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்திய அணி, இங்கிலாந்து அணிக்கு எதிராக வெற்றி பெற அதிக வாய்ப்புகள் இருந்தது .

இதே மைதானத்தில் இன்னும் சற்று நேரத்தில் மற்றுமொரு அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி எதிர்கொள்கிறது.

ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால் இந்த போட்டியிம் மழை காரணத்தால் கைவிடப்பட அதிக வாய்ப்புகள் உள்ளது.

அப்படி கை விடும் பட்சத்தில் தென்ஆப்பிரிக்கா அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும்.

ஆஸ்திரேலிய அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ள காரணத்தினால் உலக கோப்பை போட்டியில் இருந்து வெளியேறும்.

சொந்த மண்ணில் உலக கோப்பை போட்டியில் வெளியேறுவது ஆஸ்திரேலியா உள்ளூர் ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இரண்டாவது போட்டியில் மழை பெறும் பட்சத்தில் இறுதிப்போட்டியில், இறுதிப்போட்டியில் இந்தியா தென் ஆப்பிரிக்காவை சந்திக்கும், இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக உள்ளது.

3

Twitter Fleets Enable; ட்விட்டரில் எப்படி ஸ்டோரி வைப்பது?

0
Twitter Fleets Enable

Twitter Fleets Enable; ட்விட்டரில் எப்படி ஸ்டோரி வைப்பது?

இன்ஸ்டாக்ரம் மற்றும் பேஸ்புக் போல ட்விட்டர் முதன் முறையாக ப்ளீட் என்னும் ஆப்ஷன் கொண்டுவந்துள்ளது. இது ஸ்டோரி போலவே இயங்கும் 24 மணி நேரத்தில் மறைந்துவிடும்.

ட்விட்டர் ப்ளீட்டை (Twitter Fleets) உங்களால் ரீட்வீட் செய்ய இயலாது. இதை லைக் செய்ய இயலாது ஆனால் பிரைவேட் ரிப்ளை மட்டும் செய்ய இயலும்.

முதலில் பிரேசில் நாட்டில் மட்டும் சோதனை செய்து பார்க்கப்பட்டது. அதிகமாக பொது பதிவுகள் கலந்துரையாடல் என இல்லாமல் தங்கள் தின வாழ்க்கை நிகழ்வுகளை பதிவு செய்யவே இந்த ஆப்ஷன் கொண்டு வரப்பட்டதாம்.

பேஸ்புக் இன்ஸ்டாக்ரம் ஸ்டோரிஸ் மற்றும் ஸினப்ஜாட் ஸினப் போல ட்விட்டர் ப்ளீட் மூலம் அவ்வப்போது நிகழ்வுகள் அதிகம் பகிரப்படும் என எதிர்பார்க்கிறோம் என ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

பிரைவேட் ஜாட்க்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதால் பிற சமூக வலைதளங்கள் போல பயனாளர்கள் அதிக நேரம் செலவிட வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

3