Home Blog Page 242

Biskoth First Look: பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

0
Biskoth First Look

Biskoth First Look; பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

Santhanam சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் புதிய படம் பிஸ்கோத். பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் Biskoth First Look போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

காமெடியனாக இருந்து ஹீரோவானவர்களில் நடிகர் சந்தானம் Santhanam ஒருவர். இவர், அஜித், விஜய், சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், ஆர்யா, ரஜினிகாந்த் ஆகியோருடன் இணைந்து பல படங்களில் காமெடியனாக நடித்துள்ளார்.

அறை எண் 305ல் கடவுள் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் என்று பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார்.

அண்மையில் இவரது நடிப்பில் வெளியான படம் டகால்டி. இதில், இவருடன் இணைந்து யோகி பாபுவும் நடித்திருந்தார். எனினும், அப்படி ஒன்றும் வரவேற்பு இல்லை.

தற்போது இவரது நடிப்பில் சர்வர் சுந்தரம், டிக்கிலோனா, பிஸ்கோத் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது.

பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் Biskoth First Look

இந்த நிலையில், பிஸ்கோத் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் (Biskoth First Look) போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

பிஸ்கோத் படத்தில் சந்தானம் மூன்று விதமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

ஆர் கண்ணன் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். பிஸ்கோத் (Biskoth) படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிசா பெர்ரி மற்றும் ஸ்வாதி முப்பாலா ஆகியோர் நடிக்கின்றனர்.

இவர்களுடன் இணைந்து சௌகார் ஜானகி, மொட்டை ராஜேந்திரன், ஆனந்தராஜ், ஆடுகளம் நரேன், லொள்ளு சபா மனோகர் ஆகியோர் நடிக்கின்றனர்.

Biskoth பிஸ்கோத் படம் முற்றிலும் காதல் கலந்த நகைச்சுவை கதையை மையப்படுத்தி உருவாகி வருகிறது.

இந்தப் படத்திற்காக சந்தானம் சிலம்பம் கற்று வருகிறார் என்று கூறப்படுகிறது.

பிஸ்கோத் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் சந்தானம், டூவீலரில் இருந்து பறந்து ஒரு கையால் துப்பாக்கியால் சுடுவது போன்றும், மற்றொரு கையில் சூட்கேஸ் வைத்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

மேலும், படம் ஏப்ரல் மாதம் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

Ajith போனி கபூர் வீட்டில் தல அஜித்!

0
Ajith at Boney Kapoor House

Ajith, Sridevi மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் திதி நிகழ்வில் தல அஜித் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் Ajith போனி கபூர் (Boney Kapoor) வீட்டிற்கு சென்ற வீடியோ மற்றும் அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் கொடி கட்டி பறந்தவர் நடிகை ஸ்ரீதேவி (SriDevi). தனது 4 வயது முதலே சினிமாவில் காலூன்றி வந்தார்.

தமிழில் கந்தன் கருணை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு மூன்று முடிச்சு படத்தின் மூலம் ஹீரோயினானார்.

தொடர்ந்து இந்திய சினிமாவில் புகழ்பெற்று விளங்கியதால் இந்திய சினிமாவின் முதல் பெண் சூப்பர்ஸ்டார் என்றழைக்கப்பட்டார்.

தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என்று பல மொழிகளில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இவர், பாலிவுட் தயாரிப்பாளர் போனி கபூரை திருமணம் செய்து கொண்டு சினிமாவில் இருந்து சிறிது காலம் விலகியிருந்தார்.

அதன் பிறகு இங்கிலிஸ் விங்கிலிஸ் என்ற படத்தின் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்தார். 2012 ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் அஜித் (Ajith) சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வந்த புலி படத்தில் நடித்தார். ஹிந்தியில் மாம் என்ற படத்திலும், ஜீரோ என்ற படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு துபாயில் நடந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அங்கு சென்றிருந்தார்.

ஆனால், எதிர்பாராத விதமாக அங்கு உயிரிழந்தார். அவரது 2ம் ஆண்டு நினைவு தினம் கடந்த பிப்ரவரி 24ம் தேதி. இந்த நிலையில், தற்போது ஸ்ரீதேவிக்கு திதி கொடுக்கும் நிகழ்வு சென்னை சிஐடி நகரில் உள்ள போனி கபூர் (Boney Kapoor House) இல்லத்தில் நடந்தது.

போனி கபூர் வீட்டில் அஜித் (Ajith, Boney Kapoor)

இதில், போனி கபூரின் குடும்பத்தினருடன் தல அஜித்தும் கலந்து கொண்டார். அஜித் தனது காரில் போனி கபூர் இல்லத்திற்கு செல்லும் வீடியோவும், அங்கிருந்து புறப்படும் வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

போனி கபூரின் குடும்பத்தினருடன் அஜித் புகைப்படம் எடுத்துக் கொண்டதும் சமூக வலைதளங்களில் உலா வருகிறது.

இதன் காரணமாக #Valimai (வலிமை) #HVinoth (ஹெச்வினோத்) #Ajith (அஜித்) ஆகிய ஹேஷ்டேக்குகள் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

தற்போது அஜித் இயக்குநர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் வலிமை Valimai படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார்.

இந்தப் படம் வரும் தீபாவளி பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. கடந்த ஆண்டு ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

3

பரதேசி பட அதர்வா ஸ்டைலில் கீர்த்தி சுரேஷ்!

0
Keerthy Suresh

Keethy Suresh, கீர்த்தி சுரேஷின் புதிய லுக் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தேசிய விருது நடிகை கீர்த்தி சுரேஷ். பைலட் என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் கால்பதித்தார்.

தமிழில் இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். தொடர்ந்து ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

பழம்பெரும் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார். இப்படத்திற்கு தேசிய விருதும் பெற்றார்.

கடந்தாண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்கார் படத்தில் நடித்திருந்தார். தற்போது மிஸ் இந்தியா, மரக்கார் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம், பென்குயின், குட் லக் சகி, அண்ணாத்த ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகி வரும் படம் மரக்கார் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம் (Marakkar: Arabikadalinte Simham).

இந்தப் படத்திற்காக தன்னை தயாரிபடுத்திக் கொண்ட கீர்த்தி சுரேஷின் புதிய தோற்றம் ஒரு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

16 ஆம் நூற்றாண்டில் கேரள நாட்டில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்கார் என்று போற்றப்பட்டனர்.

இவர்களில் வீர, தீரம் கொண்டவராக கருதப்பட்டவர் 4ஆவது குஞ்சலி மரைக்கார். தற்போது இவரது வாழ்க்கையை மையப்படுத்தி மரைக்கார் அரப்பிக்கடலிண்டே சிம்ஹம் என்ற படம் தயாராகி வருகிறது.

இதில், குஞ்சலி மரைக்கார் என்ற ரோலில் மோகன்லால் நடித்து வருகிறார். இவருடன் இணைந்து மஞ்சு வாரியர், கீர்த்தி சுரேஷ், அர்ஜூன், சுனில் ஷெட்டி ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

கீர்த்தி சுரேஷ் (Keerthy Suresh)

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளிலும் இந்தப் படம் வெளியாக இருக்கிறது. வரும் 26 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தில் கீர்த்தி சுரேஷ் ஆர்ச்சா என்ற ரோலில் நடித்துள்ளார்.

இந்த கதாபாத்திரத்திற்காக கேரளத்து பாரம்பரிய உடையுடனும், வித்தியாசமான ஹேர்ஸ்டைலுடனும் தோற்றமளிக்கிறார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதற்கு முன்னதாக இயக்குநர் பாலா இயக்கத்தில் அதர்வா நடிப்பில் வந்த பரதேசி படத்தில் அதர்வா வித்தியாசமான ஹேர்ஸ்டைல் வைத்திருப்பார்.

தற்போது அதே ஹேர்ஸ்டைலில்தான் கீர்த்தி சுரேஷ் இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

3

Malavika Mohanan; மீண்டும் பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன்!

0
Malavika Mohanan

Malavika Mohanan; மீண்டும் பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன்!

Master மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து நடிகை மாளவிகா மோகனன் மீண்டும் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். இப்படத்தைத் தொடர்ந்து நிர்னனயகம் என்ற படத்தில் நடித்தார்.

தொடர்ந்து நானு மாட்டு வரலட்சுமி என்ற கன்னட படத்திலும், பியாண்ட் தி கிளவுட்ஸ் என்ற பாலிவுட் படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வந்த பேட்ட படத்தில் அவருக்கு நடிக்கும் வாய்ப்பு வந்தது.

இதில் சசிக்குமாருக்கு மனைவியாக நடித்து ரசிகர்களின் நல்ல வரவேற்பைப் பெற்றார். எனினும், இதில் அவருக்கு குறைவான காட்சிகள் தான் இருந்தது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள மாஸ்டர் (Master) படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இப்படத்தின் 129 நாட்கள் படப்பிடிப்பு இடைவெளி இல்லாமல் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது. தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மாஸ்டர் படத்தில் மாளவிகா மோகனன் (Malavika Mohanan) கல்லூரி மாணவியாக நடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து (Malavika Mohanan Bollywood) பாலிவுட் படத்தில் மாளவிகா மோகனன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்தப் படத்தை ஃபர்ஹான் அக்தர் தயாரிக்கிறார். இதற்கு முன்னதாக, இவர், ரன்வீர் சிங்கின் குல்லி பாய் படத்தை தயாரித்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு தொடக்க இருக்கிறது என்றும், படத்தின் இயக்குநர் மற்றும் மற்ற நடிகர்கள், நடிகைகள் குறித்து அறிவிப்பு விரைவில் வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படம் முடிந்த பிறகு மீண்டும் தமிழ் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாக இருக்கும் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Corona Virus Outbreak; 28 பாசிட்டிவ் கொரோனா கேஸ்

0
Corona Virus Outbreak

Corona Virus Outbreak; 28 பாசிட்டிவ் கொரோனா கேஸ்

கேரளாவில் இருந்த 3 கொரோனா பேசண்ட் சேர்த்து மொத்தம் 28 பேருக்கு இந்தியாவில் கொரோனா பாசிட்டிவ் ரிசல்ட் என ஹெல்த் மினிஸ்டர் தான் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்தியாவிற்கு வந்த இத்தாலியன் பயணிகளில் 21இல் 14பேருக்கு கொரொனா வைரஸ் ரிசல்ட் பாசிட்டிவாக வந்துள்ளதாம். அதில் இந்திய டிரைவரும் ஒருவர் ஆவார்.

தெலுங்கானாவில் ஒருவரும் ஆக்ராவில் ஆறு பேரும்  மொத்தம் 28 நபர்களுக்கு கொரொனா உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்திய டைபெடன் பார்டெரில் இத்தாலி பயணிகள் அனைவரும் சவாலா எனும் இடத்தில் வைத்து ட்ரீட்மெண்ட் செய்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

80 பேருக்கு கொரோனா பாதிப்பா? பீதியில் ஹைதாராபாத் மக்கள்

மீண்டும் கொரோனா; இந்தியாவில் வெறியாட்டம் தொடருமா?

3

Ronaldo Mother; ரொனால்டோ தாயார் டோலராஸ் அவைரோ உடல்நல கோளாறு

0
Ronaldo Mother

Ronaldo Mother; ரொனால்டோ தாயார் டோலராஸ் அவைரோ உடல்நல கோளாறு

உலகில் தலைசிறந்த கால்பந்து ஆட்டகாரர் தான் கிறிஸ்டினோ ரொனால்டோ.

தனக்கேன தனி ரசிகர் பட்டாளமே வைத்துள்ளார். உலகம் முழுவதும் இவருக்கு அதிக ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.

போர்ச்சுகல் நாட்டில் பிறந்த இவர், சர்வதேச போர்ச்சுகல் நாட்டின் கால்பந்தாட்ட வீரர் ஆவார்.

Ronaldo Mother Health Condition

இவரது தாயார் டோலராஸ் அவைரோ பக்கவாதம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தனது தாயார் தற்போது நலமாக இருப்பதாக கிறிஸ்டினோ ரொனல்டோ தெரிவித்துள்ளார்.

ரொனல்டோ வெற்றிக்கு என்றும் உறுதுணையாக இருந்தவர் டோலராஸ் அவைரோ.

மதர் கரேஜ் ஃபரும் ஹிஸ் மதர்

இவரது தாயார் தான் டோலராஸ் அவைரோ.
இவர் “மதர் கரேஜ் ஃபரும் ஹிஸ் மதர்” என்ற சுயசரிதை புத்தக்கம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார்..

அதில் தான் கிரிஸ்டினோ ரொனால்டோ கருவில் இருந்த காலத்தில் கருவை கலைக்க முடிவு எடுத்து மருத்துவமனை சென்றேன், அங்கிருந்த மருத்துவர் மட்டும் அதை களைக்க மறுத்துவிட்டார், என்பதை நினைவு கூர்ந்துள்ளார்.

இந்த முடிவு எனது மகன் கிரிஸ்டினோ ரொனால்டோவுக்கும் தெரியும்.

பிறகு ரொனால்டோ என்னிடம் வந்து “நீங்கள் என்னை கலைக்க முடிவு எடுத்தீர்கள், ஆனால் நான் மட்டும் தான் வீட்டை தூக்கிபிடித்துக் கொண்டு இருக்கிறேன்” என்று கூறினார் என்று அவரது தாய் கூறிப்பிட்டுள்ளார்.

ரொனால்டோ கலந்து கொள்ளவில்லை

இந்த புத்தக வெளியீட்டில் கிறிஸ்டினோ ரொனால்டோ கலந்துக் கொள்ளவில்லை,
இதற்கு டோலராஸ் அவைரோ கிட்ட காரணம் கேட்கப்பட்டது.

அவர் ” ரியல் மட்ரீட்” அணிக்கு தயார் ஆகி கொண்டு இருப்பதால் ரொனால்டோவால் கலந்து கொள்ள முடியவில்லை என்று பதில் அளித்துள்ளார்.

அன்று அந்த மருத்துவர் செய்த சிறிய நல்லதுதான் இன்று மிக பெரிய கால்பந்தாட்ட ஜாம்பவான் உருவ காரணமாக இருந்துள்ளது.

கிறிஸ்டினோ ரொனால்டோவுக்கு என்று கால்பந்தாட்ட ஸ்டேயில் உள்ளது,.
ரீயல் மட்ரீட் கிளப் பில் கடந்த பத்து வருடத்தில் சிறந்த வீரர் ஆவார்.

போர்ச்சுகல் அணியில் விளையாடும் போது அணியை இவர் மட்டுமே வழி நடத்துவர், 75 சதவீதம் அந்த அணியில் கோல்யை ரொனால்டோ மட்டுமே அடித்திருப்பார்.

தங்கபந்து விருது 5 முறை

ஐந்து தடவை தங்க கல்பந்தான “பலூன் டி ஒர்” விருதை ரொனால்டோ வென்றுள்ளார், கடந்த ஆண்டு லியோனல் மெஸ்ஸி இந்த விருதை வென்றதன் மூலம் ஆறாவது தடவை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Cryptocurrency Legal In India; கிரிப்டோகரன்சி தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்

0
Cryptocurrency Legal India

Cryptocurrency Legal India; கிரிப்டோகரன்சி தடையை நீக்கிய உச்சநீதிமன்றம்

கிரிப்டோகரன்சி மீது இருந்த தடையை நீக்கி உச்சநீதிமன்றம் இந்தியாவில் லீகல் ஆக்கியது. இப்பொழுது இந்த டிஜிட்டல் பணத்தை யார் வேண்டுமானாலும் இந்தியாவில் வாங்கி விற்கலாம்.

2018ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஆர்‌பி‌ஐ தொடர்ந்த வழக்கின் பேரில் கிறிப்டோகரன்சி வரத்தகத்தை முழுவதுமாக தடை செய்தது.

பிட்காய்ன் போன்ற கரன்சிகளை வர்த்தகம் செய்வது மிகவும் ஆபத்தான ஒன்று. இதனால் சாமானிய மக்கள் ஏமாறுகிறார்கள். நிறைய ஃபினான்சியல் கம்பெனிகளும் பனத்திருட்டு செய்கிறார்கள் என ஆர்‌பி‌ஐ முறையீடு செய்தது.

ஆர்‌பி‌ஐக்கு கீழ் வரும் எந்த வங்கியும் கிரிப்டோகரன்சி முறையில் பண வர்த்தகம் செய்யக்கூடாது என அறிவித்தது.

RBI vs AIMAI 

The Internet and Mobile Association of India ஆர்‌பி‌ஐக்கு எதிராக தொடர்ந்த வழக்கில் கூறுகையில் கிரிப்டோகரன்சி பயனுள்ள ஒன்று சிறந்த மதிப்பும் கொண்டுள்ளது.

இன்று ஒரு பிட்காய்ன் கரன்சி இந்திய மதிப்பில் ரூ.6,46,077.23 ஆகும். எதிர்காலத்தை யோசித்து உச்ச்நீதிமன்றம் கிரிப்டோகரன்சி வைத்து வர்த்தகம்  அனுமதி அளித்தது.

3

Master Audio Launch: ரசிகர்கள் வர வேண்டாம்: விஜய் முடிவு!

0
Master Audio Launch

Master Audio Launch, Vijay மாஸ்டர் இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் வரவேண்டாம் என்று நடிகர் விஜய் வேண்டுகோள் வைத்துள்ளதாக தகவல் பரவி வருகிறது.

ரசிகர்கள் அடி வாங்குவதை தன்னால் பார்க்க முடியாது என்ற நோக்கத்தில் ரசிகர்கள் யாரும் இசை வெளியீட்டு விழாவிற்கு வர வேண்டாம் என்று விஜய் கூறியுள்ளதாக தகவல் வந்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது. ‘

இந்த நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து அவ்வப்போது தகவல் வந்து கொண்டே வருகிறது.

Master Audio Launch மாஸ்டர் இசை வெளியீடு

அதன்படி, சென்னையில் இசை வெளியீட்டு விழாவை நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், ஆதலால், கோயம்புத்தூரில் இசை வெளியீட்டு விழா நடக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனினும், இந்த மாதம் கண்டிப்பாக (Master Audio Launch) இசை வெளியீட்டு விழா நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, மாஸ்டர் டிரைலர், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் என்று அடுத்தடுத்து அப்டேட் வர இருக்கிறது.

Master Shooting Wrapped அண்மையில், 129 நாட்கள் படப்பிடிப்பை முடித்த படக்குழுவினர் போஸ்ட் புரோடக்‌ஷன் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், இசை வெளியீட்டு விழாவிற்கு ரசிகர்கள் யாரும் வர வேண்டாம் என்று விஜய் தெரிவித்துள்ளதாக தகவல் வந்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவில் தன்னை பார்க்க வரும் ரசிகர்கள் கூட்ட நெரிசல்களில் சிக்கக் கூடாது என்பதற்காகவும், காவல் துறையினரிடம் அடி வாங்கக் கூடாது என்பதற்காகவும் விஜய் இந்த முடிவு எடுத்துள்ளாராம்.

பொதுவாக சென்னையில் இசை வெளியீட்டு விழா நடத்தும் போது விஜய்யைப் பார்ப்பதற்கும், அவர் என்ன பேசுகிறார் என்பதை நேரில் சென்று கேட்பதற்கும் தனி ரசிகர்கள் கூட்டம் உண்டு.

Valimai: வைரலாகும் வலிமை படப்பிடிப்பு புகைப்படங்கள்!

அண்மையில், நடந்த பிகில் இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்களே ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது. இதனை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

இதையடுத்து, பிகில் இசை வெளியீட்டு விழாவிற்காக தாங்கள் பெற்ற ஒரிஜினல் டிக்கெட்டை கையில் வைத்துக்கொண்டு மீடியா முன்பு பேட்டி கொடுத்தனர்.  இது விஜய்க்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

மீண்டும் இது போன்று நடக்கக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாகவே விஜய் இந்த முடிவை எடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய் தளபதி65 படத்தில் நடிக்க இருக்கிறார்.

3

மகளிர் உலககோப்பை 2020: இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா அணி?

0
WWCT20I Updates மகளிர் உலககோப்பை 2020 அரையிறுதி போட்டி
womens world t20 updates

மகளிர் உலககோப்பை 2020 இறுதிப்போட்டிக்கு முன்னேறுமா இந்தியா அணி? WWCT20I semifinal match india women vs england women. அரையிறுதி போட்டி.

7வது இருபது ஓவர் மகளிர் உலககோப்பை 2020 ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,

பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் லீக் போட்டியில் விளையாடியது

பிரிவு ‘ஏ’ வில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் பிரிவு ‘பி’யில் இங்கிலாந்து மற்றும் தென் தென்னாப்பிரிக்கா அணிகள் அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

லீக் போட்டியில் இந்தியா 4 போட்டிகளிலும் வென்று புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்தது. WWCT20I Updates;

அரையிறுதி போட்டிகள்

நாளை மார்ச் 5 ஆம் தேதி காலை 9.30 மணிக்கு சிட்னி மைதானத்தில் இங்கிலாந்து அணியை இந்திய அணி (india women vs england women) முதல் அரையிறுதியில் எதிர்கொள்கிறது.

அதே மைதானத்தில் மதியம் 1.30 மணிக்கு ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்க அணியை இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் எதிர்கொள்கிறது.

இந்த உலகக்கோப்பையில் தோல்வியை சந்திக்காமல் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இந்திய அணி.

இந்தியாவின் பேட்டிங் மற்றும் பவுலிங்

ஷாபாலி வர்மாவை தவிர மற்ற வீரர்கள் ரன்கள் சேர்க்க திணறி வருகிறார்கள்.

இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவர் இந்த உலக கோப்பையில் பேட்ஸ்மேனாக பெரிதும் சோபிக்கவில்லை. சொற்ப ரன்கள் எடுத்து அவுட் ஆகி வெளியே ஆகிறார் .

ஸ்மிருதி மந்தனா, ரோட்டரிஹுஸ், ஷாபாலி வர்மா வீரர்களை தவிர மற்ற வீரர்கள் ரன் சேர்க்க சிரமப்படுகிறார்கள்.

இதில் ஷாபாலி வர்மா, சேவக் போல அதிரடியாக ஆடி, குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் சேர்த்து வருகிறார். இந்திய அணி பார்ட்னர்ஷிப் அமைப்பதில் கடினம் கொள்கிறது.

இந்திய அணி இந்த உலக கோப்பையை 80% பந்துவீச்சால் மட்டுமே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

முதல் இரண்டு விக்கெட்டுகள் விழுந்தால் அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுப்பது தான் பரிதாபம். இது பந்துவீச்சாளர்களுக்கு நெருக்கடியை கொடுக்கிறது.

சுழற்பந்து வீச்சாளர்கள் எதிரணிகளை அச்சுறுத்தி பந்து வீசுவது இந்தியாவின் பலம். எதிரணியினரை ரன் சேர்க்க விடாமல் திணற செய்து வருகிறார்கள்.

இங்கிலாந்தின் பலம்

இங்கிலாந்து அணியை பொருத்தவரை தான் விளையாடிய 4 லீக் போட்டிகளில் தென் ஆப்பிரிக்க அணியிடம் மட்டுமே தோல்வியடைந்தது.

மற்ற 3 போட்டிகளில் வெற்றி அடைந்தது. அவர்களிடம் வேயிட்,சிவைர், ஹீதர் நைட், ஜோன்ஸ், பிரான் வில்சன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் உள்ளனர்.

இவர்களும் பந்துவீச்சில் பலமாகவே உள்ளனர் கடந்து வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் இவர்கள் அற்புதமாக பந்து வீசியது குறிப்பிடத்தக்கது.

நாளை இந்த போட்டியில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது சுவாரஸ்யமாகவே உள்ளது.

மற்றோரு போட்டி

மற்றுமொரு போட்டியில் பலமாக ஆஸ்திரேலிய அணி, தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது.

தென் ஆப்பிரிக்க அணி தான் விளையாடிய நான்கு லீக் போட்டிகளில் மூன்று வெற்றியும் ஒரு போட்டி மழை குறுக்கிட்டு முடிவில்லாமல் போனது.

தென் ஆப்பிரிக்க அணி இந்த உலக கோப்பையில் அசுர பலத்துடன் களம் இறங்கியுள்ளது. அந்த அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சிலும் சிறப்பாக விளையாடி வருகிறது.

ஆஸ்திரேலிய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் அதற்கு கூடுதல் பலமே, இருந்தபோதும் இந்திய அணியுடனான முதல் லீக் போட்டியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானம் ஆஸ்திரேலியா அணிக்கு சாதகமாகவே உள்ளது ஆஸ்திரேலியா. அணியின் நட்சத்திர வீரர் எலிஸ் பெரி உலக கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார்.

இது சிறிய பின்னடைவாகவே கருதப்படுகிறது. மற்றபடி ஆஸ்திரேலியா பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாகவே உள்ளது. இந்த அணியின் பலவீனமாக இந்தியாவைப் போல் பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்யாதது.

இது மட்டும் சிறிய பின்னடைவு மற்றபடி சொந்த மண்ணில் விளையாடுவதால் இந்த போட்டியும் விறுவிறுப்பிற்கு பஞ்சமிருக்காது என்பதில் சந்தேகமே இல்லை.

3

Pooja Hegde: மீண்டும் தமிழுக்கு வரும் பூஜா ஹெக்டே!

0
Pooja Hegde Tamil Films

Pooja Hegde முகமூடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான ஹிந்தி நடிகை பூஜா ஹெக்டே விரைவில் தமிழ் சினிமாவிற்கு வர இருப்பதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பூஜா ஹெக்டே இந்தி நடிகை. இவர், கடந்த 2010 ஆம் ஆண்டிற்கான மிஸ் யுனிவர்ஸ் அழகிப் போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்தார்.

இதையடுத்து, இவருக்கு தமிழ் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பை மிஷ்கின் கொடுத்தார்.

ஆம், கடந்த 2012 ஆம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா, நரேன் நடிப்பில் வந்த முகமூடி என்ற படத்தின் ஹீரோயினாக அறிமுகமானார் Pooja Hegde. இப்படத்திற்கு அந்தளவு வரவேற்பு கிடைக்கவில்லை.

இதையடுத்து, தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் அதிக கவனம் செலுத்தினார். அண்மையில், இவரது தெலுங்கு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

எனினும், தமிழில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் அவரிடம் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

இதில் மெய்சிலிர்த்த பூஜா ஹெக்டே டுவிட்டரில் கூறியிருப்பதாவது: நான் தமிழில் நடிக்க வேண்டும் என்ற ரசிகர்களின் கோரிக்கையை பார்த்து வருகிறேன்.

இது எனக்கு ஆச்சரியமாகவும், மனதை தொடும் வகையில் வியப்பாகவும் இருக்கிறது. தமிழ் படங்களில் நடிக்க முயற்சித்து வருகிறேன். நல்ல கதைக்காக காத்திருக்கிறேன்.

அதற்காகத்தான் இவ்வளவு காலதாமதம் ஆகிவிட்டது. விரைவில் தமிழ் சினிமாவில் பார்க்கலாம் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவருக்கு தமிழில் சினிமா வாய்ப்புகள் அமைய மிஸ்டர் புயல்.காம் இணையதளம் மூலம் நாம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.

3