Home Blog Page 243

Australian Associated Press; 85 வயது செய்தி நிறுவனம் மூடப்பட்டது

0
Australian Associated Press

Australian Associated Press; 85 வயது செய்தி நிறுவனம் மூடப்பட்டது

ஆஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் 85 வருடம் இயங்கியும் வருகிற ஜூன் மாதத்தோடு முழுவதுமாக மூடப்போவதாக அறிவித்தது.

இதில் வேலை செய்த 170க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் சோகத்துடன் தங்கள் கருத்துகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர்.

Australian Associated Press History

1935ஆம் ஆண்டு கெய்த் முட்ரோச் என்பவரால் சிட்னியில் தொடங்கப்பட்டது. இதன் பெரும்பான்மையான பங்குகள் நியூஸ் கார்ப்பரேட் ஆஸ்திரேலியா, நைன் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் செவன் வெஸ்ட் மீடியா வைத்திருந்தது.

ஏன் ஆஸ்திரேலியன் அசோசியேட்டட் பிரஸ் மூடப்பட்டது?

இந்த நிறுவனம் மூடுவதற்கு முக்கிய காரணம் இதன் வெகுவான வாடிக்கையாளர்கள் குறைவு மற்றும் இலவசமாக அனைத்து செய்திகளை இணையத்தில் குடுத்தது தானம்.

இத்தனை வருடம் கழித்து நிறுவனத்தை மூடும் நிலை ஏற்பட்டது மனதிற்கு மிகுந்த வருத்தம் அளிக்கிறது என்று தற்போதைய தலைமை நிர்வாகி புரூஸ் டேவிட்சன் கூறியுள்ளார்.

3

இந்து, கிறிஸ்தவம், முஸ்லீம்-க்கு ஒரே கோயில்!

0
Raghava Lawrence Temple

Raghava Lawrence இந்து, கிறிஸ்தவம் மற்றும் முஸ்லீம் ஆகிய 3 மதங்களுமே வழிபடும் வகையில், கோயில் ஒன்றை ராகவா லாரன்ஸ் கட்ட இருப்பதாக அறிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல் தொண்டு நிறுவனம் (Larencce Charitable Trust) ஒன்றை நடத்தி வருகிறார்.

அதன் மூலம் இலவசமாக கல்வி, மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் என்று பலருக்கும் உதவி வருகிறார்.

ராகவா லாரன்ஸின் தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்டு 15 ஆண்டுகள் ஆன நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில், திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தர திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் முதலாவதாக ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார். இதன் மூலம் நாடு முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கு என்று சொந்தமாக வீடு கட்டித்தரவும் திட்டமிட்டுள்ளார்.

இதற்காக நிலம் வழங்கப்பட்டு, நிதியுதவி பெறப்பட்டு அதன் மூலம் வீடு கட்டித்தர திட்டம் வகுத்துள்ளார். யாரெல்லாம், நிதியுதவி அளிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள்தான்.

அந்த வகையில், எங்கள் எல்லோருக்கும் அக்‌ஷய் குமார் கடவுள்தான். அவரது இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Transgenders Home திருநங்கைகளுக்கு என்று வீடு கட்டும் முயற்சியின் முதல் பகுதியான பூமி பூஜை குறித்த தேதி விரைவில், அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதைத் தொடர்ந்து தற்போது இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்துவம் என்று அனைத்து மதத்தினரும் வழிபடும் வகையில் கோயில் ஒன்றை கட்ட இருப்பதாக அறிவித்துள்ளார்.

ஆம், ராகவேந்திரா சாமியின் (Raghavendra Swami Jayanthi) பிறந்தநாளை முன்னிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மதம் மற்றும் சாதி இந்த இரண்டினாலும் தான் மக்கள் பிரிக்கப்படுகிறார்கள். எம்மதமும் சம்மதம் என்று கருதும் அனைவரும் இங்கு வந்து வழிபாடு செய்யலாம்.

அவர்களுடன் இணைந்து நானும் வழிபடுவேன். பசிக்கும், நெருப்பிற்கும் சாதி, மதம் தெரியாது.

ஆதலால், பசி வந்தால் அனைவரும் சமமாக உணவருந்தும் வகையில், புதிதாக கட்டப்படும் கோயிலில் அன்னதானக் கூடம் அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இப்போதிலிருந்தே இதற்காக இடம் தேடி வருகிறேன். போதிய இடம் கிடைக்க வேண்டி அனைத்து கடவுளையும் பிரார்த்திக்கிறேன். எனக்கு உங்களது ஆதரவும், ஆசீர்வாதமும் வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, காஞ்சனா 3 படத்தின் ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிப்பதாகவும், ராகவா லாரன்ஸ் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.

இப்படத்திற்கு லக்‌ஷ்மி பாம் என்றும் டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில், அக்‌ஷய் குமாருக்கும், ராகவா லாரன்ஸுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமா பிரச்சனை எழுந்தது.

இதன் காரணமாக லக்‌ஷ்மி பாப் படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலகுவதாக தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் லக்‌ஷ்மி பாம் திரைக்கு வரயிருக்கிறது.

3

நடிகர் ராதாரவி & கார்த்திக்; பாஜகவில் சேருவது பற்றி ஆலோசனை

0
நடிகர் ராதாரவி & கார்த்திக்

நடிகர் ராதாரவி & கார்த்திக்; பாஜகவில் சேருவது பற்றி ஆலோசனை

தமிழகத்தில் இருந்து பாஜகவில் சேருவதற்கு பல நடிகர்கள் காத்துக்கொண்டு இருக்கின்றனர் என ராதாரவி தெரிவித்துள்ளார். இது குறித்து நடிகர் கார்த்திக்கிடம் பேசி வருவதாக கூறியுள்ளார்.

ஒரு புறம் பாஜக ஆதரவாளர்கள் குடியுரிமை சட்டத்தை ஆதரித்து போராட்டத்தை நடத்தி வருகின்றனர். மறுபுறம் அதை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் வெற்றிமாறன் உட்பட சில பிரபலங்களும் குடியுரமை சட்டத்தை எதிர்த்தனர். இது முஸ்லிம்களுக்கு மட்டுமல்ல அனைவருக்குமே எதிரான சட்டம் என்று இயக்குனர் வெற்றிமாறன் கூறினார்.

இந்நிலையில் நடிகர்கள் ராதாரவி மற்றும் கார்த்திக் பாஜகவில் சேருவது பற்றி காலந்தோசித்து வருகின்றனர்.

 

3

This Week Movie Release List; இந்த வாரம் திரைக்கு வரும் 6 படங்கள்!

0
This Week Movie Release List

This Week Movie Release List; இந்த வாரம் திரைக்கு வரும் 6 படங்கள்! March 6th Release Movies

Tamil Cinema, இந்த வாரம் வரும் 6 ஆம் தேதி 6 படங்கள் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 5 படங்கள் திரைக்கு வருகிறது.

அந்த வகையில் இந்த வாரம், வெல்வெட் நகரம், ஜிப்ஸி, பொன் மாணிக்கவேல், எட்டுத்திக்கும் பற, இந்த நிலை மாறும், காலேஜ் குமார், ஈவர் கரவாது ஆகிய படங்கள் வெளியாகிறது.

ஒவ்வொரு ஆண்டும் தமிழ் சினிமாவில் குறைந்தது 200க்கும் அதிகமான படங்கள் திரைக்கு வருகிறது. மாதந்தோறும் 15க்கும் மேற்பட்ட படங்கள் வந்து கொண்டே இருக்கிறது.

இதில், சிறிய பட்ஜெட் படங்கள் முதல் பெரிய பட்ஜெட் படங்கள் வரை கிட்டத்தட்ட 5க்கும் மேற்பட்ட படங்கள் வாரந்தோறும் திரைக்கு வருகிறது.

Upcoming Movies 2020 அந்த வகையில், வரும் 6 ஆம் தேதி வரலட்சுமி சரத்குமார், ஜீவா, சமுத்திக்கனி, பிரபு தேவா, பிரபு ஆகியோர் நடித்த படங்கள் திரைக்கு வருகிறது.

This Week Movie Release List

வெல்வெட் நகரம் Velvet Nagaram

அறிமுக இயக்குநர் மனோஜ் இயக்கத்தில், வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள படம் வெல்வெட் நகரம்.

வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். ஹீரோயினை மையப்படுத்தி இந்த படம் சைக்லாஜிக்கல் த்ரில்லர் கதையை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

மேக்கர்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் அருண் கார்த்திக் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கோலி சோடா 2 புகழ் அச்சு ராஜாமணி இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து ரமேஷ் திலக், நடிகை கஸ்தூரி, மாளவிகா சுந்தர், பிரகாஷ் ராகவன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வரும் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், வெல்வெட் நகரம் Velvet Nagaram படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. RajaParvai Trailer

ஜிப்ஸி Gypsy

ஜோக்கர் மற்றும் குக்கூ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 ஆவது அழகான படைப்பு ஜிப்ஸி.

ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். ரொமாண்டிக் கலந்த காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 6-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் நிலையில், அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகியது.

இந்த டீசர் முழுக்க முழுக்க வன்முறை, அரசியல், காதல் காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

Gypsy இதையடுத்து, ஜிப்ஸி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை Gypsy Sneak Peek படக்குழுவினர் வெளியிட்டனர். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

படத்தின் சிறப்புக் காட்சியை நேரில் பார்த்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் படக்குழுவினருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

மேலும், சரியான நேரத்தில் சரியான படம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

பொன் மாணிக்கவேல்

முகில் செல்லப்பன் இயக்கத்தில் பிரபு தேவா, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ள படம் பொன் மாணிக்கவேல்.

ஆக்‌ஷன் த்ரில்லர் கதையை மையப்படுத்திய இந்தப் படத்தில் பிரபு தேவா முதல் முறையாக போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார்.

மேலும், இது பிரபு தேவாவின் 50 ஆவது படம். அதனால், இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இமான் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

காலேஜ் குமார்

இயக்குநர் ஹரி சந்தோஷ் இயக்கத்தில் பிரபு, மதுபாலா, ராகுல் விஜய், பிரியா ஆகியோரது நடிப்பில் உருவாகியுள்ள ரொமாண்டிக் டிராமா காலேஜ் குமார்.

கன்னடத்தில் வெளியான காலேஜ் குமாரா என்ற படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் வெளியாக இருக்கிறது.

எட்டுத்திக்கும் பற

கீரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, முனீஷ்காந்த், சாந்தினி ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் எட்டுத்திக்கும் பற.

முற்றிலும் சாதி வெறிக்கு எதிரான படம். ஆணவக் கொலையின் கொடூரத்தை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. அதோடு, அதற்குரிய தீர்வையும் இந்தப் படம் தெளிவாக விளக்கியுள்ளது.

ஒருவரது காதலை வைத்து எப்படி அரசியல் செய்கிறார்கள் என்பதை இந்தப் படம் சித்தரித்துள்ளது.

3

அதிமுக மாநிலங்களைவை வேட்பாளர்கள் பட்டியலில் யார் யார்?

0
அதிமுக மாநிலங்களைவை வேட்பாளர்கள்

அதிமுக மாநிலங்களைவை வேட்பாளர்கள் பட்டியலில் யார் யார்?

ஏப்ரல் 2ஆம் தேதியுடன் நாடாளுமன்ற எம்பிக்களின் பதவிக்காலம் முடிவடைவதால் புதிய எம்பிக்களுக்கான தேர்தல் வருகிற 26ஆம் தேதி நடைபெறுகிறது.

இதற்கான மனுத்தாக்கல் 6ஆம் தேதி தொடங்கி 13ஆம் தேதி முடிவடைகிறது. அதிமுக சார்பில் இன்னும் பட்டியல் அறிவிக்கப்படவில்லை.

இருந்தாலும் கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி, கொள்கை பரப்புச் செயலாளர் தம்பிதுரை, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் இடம்பிடித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

தம்பிதுரை லோக் சபா தேர்தலில் தோல்வியை சந்தித்திருந்தாலும் டெல்லி அவருக்கு மிகவும் அத்துப்படி என்பதால் அவர் பெயரும் இடம்பிடித்துள்ளதாம்.

கூட்டணி கட்சிகளான தேமுதிக சுதீஷ், ஏ.சி. சண்முகம், ஜி.கே. வாசன் ஆகியோருக்கும் சீட்டு வழங்க முடிவு செய்துள்ளது.

3

Whatsapp Dark Mode; வந்துவிட்டது இதோ எப்படி ஆக்டிவேட் செய்வது

0

Whatsapp Dark Mode; வந்துவிட்டது இதோ எப்படி ஆக்டிவேட் செய்வது

நீண்ட நாளாக அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட வாட்ஸாப் டார்க் மோட் நேற்று இரவு வாட்ஸாப் நிறுவனம் வெளியிட்டது. இதில் பீட்டா மட்டுமில்லாமல் அனைத்து பயனளார்களுக்கும் கிடைக்கும்.

குறிப்பாக டார்க் மோட் இரவு நேரங்களில் வரும் அதிகபட்ச வெளிச்சங்களை குறைத்து கண்ணுக்கு வலி ஏற்படாமல் உதவி செய்யும். இதற்காக சிலர் 3rd பார்ட் ஆஃப் பயன்படுத்தி வந்தனர்.

வாசிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அதற்கு ஏற்றாற்போல் கலர் செட்டிங் இந்த டார்க் மோடில் செய்யப்பட்டுள்ளது.

ios மற்றும் ஆண்ட்ராய்டு இரு இயங்குதளங்களிலும் இந்த வசதி கொடுக்கப்பட்டு உள்ளது.

How to enable Whatsapp Dark Mode

iOS 13 மட்டும் அன்றாய்ட் 10 ஆகிய இரண்டில் மட்டும் உங்கள் சிஸ்டமில் டார்க் மோட் எனேபிள் செயலாம். அன்றாய்ட் 9பை அதற்கு கீழ் நீங்கள் வாட்ஸாப் செட்டிங்கில் எனேபிள் செய்ய இயலும்.

3

பிரியா பவானி சங்கர் காதலுக்கு முற்றுப்புள்ளி!

0
Priya Bhavani Shankar Love

Priya Bhavani Shankar, பிரியா பவானி சங்கர் காதல் வதந்தி குறித்து முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

பிரியா பவானி சங்கர் தன்னைப் பற்றி வந்த காதல் கிசுகிசு குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

தன்னைப் பற்றி வரும் காதல் கிசுகிசுவிற்கு நடிகை பிரியா பவானி சங்கர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகையாக இருந்தாலும் சரி, வளர்ந்துவிட்ட நடிகையாக இருந்தாலும் சரி அவர்களைப் பற்றி கிசுகிசு வந்து கொண்டேதான் இருக்கிறது.

காதல், திருமணம், குழந்தை, விவாகரத்து என்று அந்த நடிகையின் அப்போதைய டிரெண்டை பொறுத்து கிசுகிசு வந்து கொண்டே இருக்கிறது.

இளம் நடிகை என்றால், அவர் யாரையோ காதலிக்கிறார், இவரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றெல்லாம் வதந்தி வரும்.

Priya Bhavani Shankar Love

அந்த வரிசையில், தற்போது நடிகை பிரியா பவானி சங்கர் குறித்து புதிய வதந்தி பரவி வருவகிறது. ஆம், மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் கால்பதித்தவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இப்படத்தைத் தொடர்ந்து கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர், மாஃபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மையில், இயக்குநர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் ஆகியோரது நடிப்பில் மாஃபியா படம் வெளியானது.

இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்த நிலையில், பிரியா பவானி சங்கரும், எஸ்.ஜே.சூர்யாவும் காதலித்து வருவதாக தகவல் பரவியது.

மான்ஸ்டர் படப்பிடிப்பின் போது இருவருக்குள்ளும் நல்ல புரிதல் ஏற்பட்டதாகவும், அது தற்போது பொம்மை படப்பிடிப்பில் காதலாக மாறியதாகவும் தகவல் வந்த வண்ணம் இருக்கிறது.

பொம்மை படப்பிடிப்பின் போது எஸ்.ஜே.சூர்யா தனது காதலை தெரிவித்ததாகவும், அதற்கு பிரியா பவானி சங்கர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

பிரியா பவானி சங்கர் விளக்கம்

இதற்கு மறுப்பு தெரிவித்த எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி சங்கர் (Priya Bhavani Shankar) தனது தோழி என்று குறிப்பிட்டார். இதுவரை இந்த காதல் கிசுகிசு குறித்து பதிலளிக்காமல் இருந்த பிரியா பவானி சங்கர் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார்.

என்னையும், எஸ்.சூர்யாவையும் பற்றிய காதல் வதந்திக்கு நான் அவ்வளவாக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. உண்மையில் எங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை.

பொதுவாகவே ஒருவரைப் பற்றி கிசுகிசு வந்துவிட்டால் அவரது நண்பர்கள் தான் கேலியும், கிண்டலும் செய்வார்கள்.

அப்படி என்னைப் பற்றி வந்த கிசுகிசுவைப் பார்த்து எனது நண்பர்கள்தான் கிண்டல் செய்வார்கள். அதற்காகதான் நான் பயப்படுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

மாஃபியா படத்தைத் தொடர்ந்து பிரியா பவானி சங்கர் நடிப்பில், குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசட தபற, பொம்மை, வான், இந்தியன் 2 ஆகிய தமிழ் படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

3

தமிம் இக்பால் அதிரடி; ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்

0
தமிம் இக்பால் அதிரடி

தமிம் இக்பால் அதிரடி; ஜிம்பாப்வேயை வீழ்த்தியது வங்கதேசம்

வங்கதேசம் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜிம்பாப்வே அணி ஒரு டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, மற்றும் 2 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

ஜிம்பாப்வே டெஸ்ட் தோல்வி

டெஸ்ட் போட்டியில் ஏற்கனவே வங்கதேச அணி இன்னிங்ஸ் மற்றும் 106 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் லிட்டன் தாஸ் சதத்துடன் 320 ரன்கள் குவித்து 169 ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே வீழ்த்தியது.

இரண்டாவது ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக சில்கட் சர்வதேச மைதானத்தில் தொடங்கியது.

டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

வங்கதேசம் ரன்குவிப்பு

ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சை நாலாபுறமும் அடித்து நொறுக்கியது. முதல் ஆட்டத்தைப் போலவே இந்த ஆட்டத்திலும் 322 ரன்கள் குவித்தது.

அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் தமிம் இக்பால் அதிரடியாக ஆடி 158 ரன்கள் குவித்தார். ரஹீம் 55 ரன்கள், முகமதுல்லா 41 ரன்கள், மிதுன் 32 ரன்கள் எடுத்தனர்.

ஜிம்பாப்வே அணியில் மும்பா மற்றும் திரிபானோ தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

திரபானோ அதிரடி

323 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஜிம்பாப்வே அணி, முடிந்த வரை போராடி 4 ரன் வித்தியாசத்தில் வங்கதேச அணியிடம் தோல்வி அடைந்தனர்.

ஜிம்பாப்வே அணியில் அதிகபட்சமாக கம்முன்ஹுவே 51 ரன்கள், மதேவேறே 52 ரன்கள், ராசா 66 ரன்கள், மோட்டோ பூச்சி 34 ரன்கள் எடுத்தனர்.

இறுதியாக வெற்றிக்கு போராடி வெற்றி இலக்கின் அருகில் வந்து, கடைசி பந்தில் 6 ரன்கள் தேவைப்பட்ட போது திரிபானோ ஒரு ரன் மட்டுமே எடுத்தார்.

ஒன்பதாவதாக களமிறங்கிய திரிபானோ 28 பந்துகளில் 55 ரன்கள் குவித்தார், இதில் 5 சிக்சர்கள் அடங்கும்.

ஜிம்பாப்வே அணி 225 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்த போது திரிபானோ களமிறங்கினார். நம்பிக்கையை விடாமல் கடைசி போராடினார்.

நாம் ஜிம்பாப்வே அணியை பாராட்டியே ஆகவேண்டும், வங்கதேச அணிக்கு நாங்கள் சளைத்தவர்கள் இல்லை என்று வெற்றியின் மிக அருகில் வந்து தோல்வியடைந்தனர்.

வங்கதேசம் தரப்பில் தாஜுல் இஸ்லாம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

ஆட்டநாயகன் விருது

ஆட்டநாயகன் விருதை அதிரடியாக ஆடி 158 ரன்கள் குவித்த லிட்டன் தாஸ் வென்றார்.

இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இரண்டு போட்டிகளை வென்ற வங்கதேச அணி தொடரை வென்றது.

கடைசி ஒருநாள் போட்டி வருகிற மார்ச் 6ஆம் தேதி இதே மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக நடைபெறுகிறது.

3

காளி ஞானத்தின் வடிவமா? காளி வழிபாடு எப்படி தோன்றியது?

1
காளி ஞானத்தின் வடிவமா?

காளி ஞானத்தின் வடிவமா? காளி வழிபாட்டில் உள்ள ரகசியம் என்ன? யார் இந்த காளி தேவி? மந்திர, தந்திர தான்த்ரீகவாதிகளின் தேவதையா? பூஜித்தால் என்ன கிடைக்கும்?

காளி ஞானத்தின் வடிவமா?

சக்தி வழிபாட்டின் முதன்மை வழிபாடு காளி வழிபாடே ஆகும். தசமகா வித்யாவில் முதன்மையான ஸ்வரூபம் காளி தேவியே ஆவாள். இவளின் ரூபம் கிருஷ்ண ரூபம் ஆகும்.

இவள் பார்க்க அச்சுறுத்தும் வகையில் இருந்தாலும் இவளே ஞானத்தின் பிறப்பிடம் ஆவாள் மாயையில் இருந்து விடுதலை அளிக்கும் தாயாய் விளங்குகிறாள்.

காளியின் தோற்றம்

காளி ஞானத்தின் வடிவமா? காளி கோவில்கள்

காளி உக்கிரமான ரூபம் கொண்டதால் பலரும் அஞ்சுவர்.
பெரிய கண்கள், விரத்த சடை, கோரைப்பற்கள், ரத்தம் சொட்டும் நீண்ட நாக்கு, பதினெட்டு கரங்கள், முண்டமாலை, காலில் அசுரனை மிதித்த கோலம்.

பார்ப்பதற்கே மிரட்டுகின்ற தோற்றம். எவரும் கண்டு அஞ்சும் வண்ணம் வடிவம் கொண்டவள். உண்மையில் தாய்மையே வடிவானவள்.

இவளின் ரூபத்தை பின்வரும் தியான ஸ்லோகத்தில் காணலாம்

“ச்யாமாபாம் ரக்த வஸ்த்ராம் ஜ்வலா சிகயுதாம்
அஷ்டஹஸ்தாம் த்ரிநேத்ரம் சூலம் வேதாள கட்கம்
டமருக சகிதம் வாமஹஸ்தே கபாலம் அன்யே
கண்டாந்து கேடாம் அபய வரயுதாம் சாபஹஸ்தாம்
சு தம்ஷ்ட்ராம் சாமுண்டாம் பீமரூபாம்
புவன பயகரீம் பத்ரகாளீம் நமாமி!”

இரத்த வர்ண ஆடை, ஜ்வாலையுடைய சடை, எட்டு கரங்கள், மூன்று கண்கள், கையில் சூலம், வேதாளம், கட்கம், டமருகம், கபாலம், கேடயம், அபய வரத அஸ்தம் தாங்கி காட்சி அளிக்கிறாள் என்று கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் தொன்மையான காளி வழிபாடு

காலா” என்ற சமஸ்கிருத வார்த்தையே காளி என்றானது. காலத்தை நிர்ணயம் செய்து வழிநடத்துபவளே காளி ஆவாள். மகா காலனின் பத்தினி இவளே ஆவாள்.

தமிழகத்தில் தொன்மையான வழிபாடு காளி ஆகும். ஐவகை நிலங்களில் பாலை நிலத்திற்கான தெய்வம் கொற்றவை (காளி) ஆவாள்.

இன்று திராவிடர்கள் என்று கூறி தெய்வ வழிபாட்டை பற்றி பிரித்து பேசும் பலரும் மறுக்க இயலாத வழிபாடு காளி வழிபாடு ஆகும்.

காளியின் ரூபம் ஒப்பற்ற வர்ணிக்க இயலாத ரூபம் ஆகும்.

இவள் பெண்மையின் “ஆற்றல், சக்தி, வீரம், ஆளுமை, தாய்மை, அன்பு, கோபம்” ஆகிய அனைத்தையும் எடுத்துரைப்பதாக உள்ளவள்.

செயங்கொண்டார் எழுதிய கலிக்கத்து பரணியில் காளியின் தோற்றம் பற்றி கூறபட்டுள்ளது.

தேவிமகாத்மியத்தில் இவளை ஆனந்தம் என்று கூறி உள்ளனர். நரம்பு மண்டலத்திற்கான தேவதையும் இவளே.

காளியை கண்டால் காலனும் அஞ்சி நடுங்குவான் என்று இவளின் சிறப்பை விவரிக்கின்றது.

காளி ஞானத்தின் வடிவமா?

யார் இந்த காளி தேவி?

காளி தேவி ஞான ரூபம் ஆவாள் ஆணவம், கன்மம், மாயை அழித்து அறிவு சுடரை அளிக்கும் சக்தியாவாள்.

தாரா, நீல சரஸ்வதி, சாமுண்டி, திகம்பரா, பைரவி ஆகிய வடிவங்களில் பூஜிக்க படுகிறாள். ஒப்பற்ற கலை ஞானத்தை அளிப்பவள்.

விக்ரமாதித்யன் தீவிர காளி பக்தன் ஆவான். உஜ்ஐயினி காளியாக அவருக்கு சர்வ வல்லமையையும் அளித்த மகா சக்தி ஆவாள்.

வழிகாட்டிய காளி என்ற நாமத்தில் காரைக்கால் அம்மையாருக்கு ஆலங்காட்டிற்கு வழி சொன்னவள் இவளே ஆவாள்.

கவி காளி தாசர் இவளாளே கவித்துவம் அடைந்து சாகுந்தளம், மேக தூதம் போன்ற நூல்களை படைத்தார். காளியின் தாசர் ஆதலால் காளி தாசர் என பெயரும் கொண்டார்.

தட்சிணேஸ்வரத்தில் உள்ள தட்சிண காளியே இராமகிருஷ்ண பரமஹம்சருக்கு ஞானோபதேசம் செய்தாள்.

மகாகவி பாரதியும் சிறந்த காளி பக்தர் ஆவார். எனவே கவித்துவத்தில் சிறந்து விளங்கினார். அனைத்துமே காளி ரூபம் என்று கவிப் புனைந்தார்.

“ யாதுமாகி நின்றாய்-காளி!-எங்கும் நீதி றைந்தாய்;
தீது நன்மையெல்லாம்-நின்தன்-செயல்க ளன்றி யில்லை
போதும் இங்கு மாந்தர்-வாழும்-பொய்மை வாழ்க்கை யெல்லாம்
ஆதிசக்தி, தாயே! என் மீதருள் புரிந்து காப்பாய்”

என்று பாரதி காளியிடம் வேண்டுகிறார்.

இப்படி மிகப்பெரிய கலை ஞானம் பெற்ற பலரும் காளியின் அருள் பெற்றவர்களே ஆவார்.

காளி உபாசனை

காளி கோவில்கள்

காளி எளிதில் நம் வசப்படுபவள். தடுக்கி விழுந்த குழந்தை அம்மா என்று அழைத்ததும் ஓடி வரும் தாய் போல “அம்மா” என்ற கூப்பிட்ட குரலிற்கு ஓடி வந்து காப்பவள்.

காளியை உபாசனை செய்பவருக்கு வாக்கு பலித்தம், கலை, ஞானம் , அறிவு, ஆளுமை, தேஜஸ், பலம், ஆரோக்கியம், செல்வம், வசீகரம், சித்தி, மோட்சம் என அனைத்தும் கைக்கூடும்.

மந்திர தந்திரத்திற்கு கட்டுப்பட்டவள் என்பது உண்மையானாலும். அதைவிட ஒப்பற்ற அன்பு மற்றும் பக்திக்கு கட்டுபட்டவள்.

என்றும் நல்லவைகளுக்கு மட்டுமே இறுதி வரை துணை நிற்பாள்.

தமிழகத்தில் காளி கோவில்கள்

தமிழகத்தில் பல பகுதிகளில் காளிக்கு கோவில்கள் உள்ளன. திருவாச்சூர் மதுர காளி, உறையூர் வெக்காளி, சமயபுரம் இருகே உஜ்ஜயினி மாகாளி, சிதம்பரம் தில்லை காளி, திருவாலங்காடு வழிகாட்டிய காளி, கோவையில் வனபத்ர காளி, சேலத்திலே பத்ர காளி, திருமங்கலம் பத்ர காளி, திருவக்கரை வக்கிரகாளி, சென்னை காளிகாம்பாள், மடப்புரம் பத்ர காளி என்று பல கோவில்கள் இவளுக்கு அமைந்துள்ளன.

யார் இந்த காளி தேவி?

காளியை துதிப்போம்

காளியை கண்டு அச்சம் கொள்ள வேண்டாம். அவள் துஷ்டர்களை மட்டுமே அழிப்பவள். குழந்தை குணம் கொண்டவள். அன்னையாக அரவணைப்பவள்.

அன்னையாக அவளை துதித்து அவளின் அரவணைப்பிலே வாழ்ந்து சிறந்த ஞானம் பெற்று மோட்ச கதி அடைவோம்.

3

4/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil

0
4/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் - Horoscope Tamil
Zodiac astrology signs for horoscope, simple lineart illustration

4/3/2020 ராசிபலன்: இன்றைய தின ராசிபலன் – Horoscope Tamil; மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம்.

 

மேஷம் ராசிபலன்

இன்று மற்றவரிடம் பழகும் போது கவனமாக இருக்கவும். பலன்கள் தாமதமாக கிடைக்கும்.

பணியை பொருத்த வரை சற்று முயற்சிகள் தேவை. வீட்டில் அனைவரிடமும் அன்பான வார்தைகள் பேசவும். பணதட்டுப்பாடு இருக்கும்.

பண விஷயத்தில் சேமிப்பு வேண்டும். தொண்டையில் பிரச்சனை வரலாம். குளிர்வான உணவை தவிர்க்கவும்.

தன்வந்திரி பகவானுக்கு விளக்கு ஏற்றி வர நன்மை கிடைக்கும்.

ரிஷபம் ராசிபலன்

பயணங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சில் கவனம் வேண்டும்.

சக ஊழியர்கள் இடம் இணக்கம் தேவை. கணவன் மனைவி ஒற்றுமை குறையலாம். பதட்டத்தை தவிர்க்கவும்.

தேவையற்ற செலவு இருக்க வாய்ப்புண்டு. காலில் பிரச்சனைகள் வரலாம்.

புத பகவானிற்கு விளக்கேற்றி வர நற்பலன்கள் பெறலாம்

மிதுன ராசிபலன்

இன்று உங்களின் சௌகரியங்கள் குறையும். பணியில் கவனம் தேவை. விரைவில் பணியை முடிக்க இயலாது.

தங்களின் அன்பானவர்களிடம் சிறு பூசல்கள் ஏற்படும். கடன் வாங்க நேரிடும்.

அன்றாட பணிகளை முடிக்க சிக்கலான நிலை ஏற்படும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள்

கடக ராசிபலன்

இந்த நாள் இனிய நாளாக அமையும். மகிழ்ச்சி தானாக வந்து சேரும். பணிகளில் பாராட்டு கிடைக்கும்.

துணையுடன் அன்பாக இருப்பீர்கள். பணவரவு நன்றாக இருக்கும். சிறந்த காரியங்கள் ஆற்றுவீர்கள்.

ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

அனுமனை தரிசித்து வர இன்னும் சிறப்பாக இருக்கும்.

சிம்மம் ராசிபலன்

எந்த காரியமானாலும் செய்வதை யோசித்து செய்யவும். கொள்ளுங்கள். பணியில் மந்த நிலை ஏற்படும்.

கவலைகளை நினைக்க வேண்டாம். துணையுடன கருத்து வேறுபாடு வரும். இன்ப துன்பங்கள் கலந்த நாளாக இருக்கும்.

சேமிப்பு அவசியம் விரய செலவை தவிர்க்கவும். உணவில் கவனம் தேவை. தந்தையின் நலத்தில் பிரச்சனைகள் வரலாம்.

கருடனிற்கு விளக்கேற்றி வழிபடுங்கள்

கன்னி ராசிபலன் 

இன்று சவாலான நாளாக இருக்கும். வெற்றி பெற முயற்சியுங்கள். பணியில் சற்று சாவாலான நிலை ஏற்படும்.

துணையுடன் பயணம் செய்யுங்கள். வரவு செலவு இரண்டும் சமமாக இருக்கும்.

செரிமான கோளாறு வரலாம். உடல் வெப்பத்தை தூண்டும் உணவை தவிர்க்கவும்.

புத பகவானை வழிபடுங்கள் தொல்லைகள் குறையும்.

துலாம் ராசிபலன்

இன்று மந்தமான நாளாக இருக்கும். உத்தியோகத்தில் பிரச்சனைகள் வரலாம். வேறு வேலை தேட நேரிடும்.

அன்பானவர்களுடன் வாக்குவாதம் நேரும். நிதிநிலையில் முன்னேற்றம் இல்லை.

குடும்பத்தில் மருத்துவ செலவு வரலாம்.

பெருமாளுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நல்லதே நடக்கும்.

விருச்சிக ராசிபலன்

இன்றும் உங்களுக்கு வெற்றிகரமான நாளாக இருக்கும். புதிய நட்புறவு கிடைக்கும்.

பணியில் முன்னேற்றம் இருக்கும் மற்றும் பாராட்டு கிடைக்கும். கணவன் மனைவி பாசம் அதிகமாகும்.

திருப்திகரமான நாளாக இருக்கும். நிதிவளர்ச்சி அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும்.

மகாலட்சுமியை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்

தனுசு ராசிபலன்

இன்று வேளையில் கவனம் செலுத்துவீர்கள். நல்ல முடிகள் கிடைக்கும்.

வியாபாரம் சிறந்து விளங்கும். திருமண பேச்சுகள் நல்ல முடிவை எட்டும். பணம் வந்து சேரும்.

ஆரோக்கியம் சிறந்து விளங்கும். சிறப்பான நாளாக அமையும்.

அனுமனையை வழிபட கூடுதல் பலன் கிடைக்கும்.

மகரம் ராசிபலன் 

முக்கிய முடிவுகள் எடுக்க நல்ல நாள். வளரச்சிகரமான நாள்.

புதிய பணிகள் துவங்க ஏதுவாக இருக்கும். இல்லறத்தில் அன்பு மேம்படும். பயணங்கள் நன்மையை வழங்கும்.

நிதி சீராக இருக்கும். வரவு அதிகம். உடல் சோர்வு வர வாய்ப்புண்டு.

சக்கரதாழ்வாரை நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மை கிடைக்கும்.

கும்ப ராசிபலன்

இன்று மந்தமான நாளாக இருக்கும். கவலைகளை மறக்க கோயில் சென்று வாருங்கள்.

பணி சாதகமாக இருக்காது. வேலைச் சுமை அதிகரிக்கும். குடும்பத்தில் பூசல்கள் ஏற்படும். மனதில் அமைதி வேண்டும்.

பணவரவு சிக்கல் இருக்கும். சளி, தொண்டை தொடர்பன பிரச்சனைகள் வரலாம்.

புத பகவானை வழிபட நல்ல பலன் உண்டு.

மீனம் ராசிபலன் 

இன்று நல்ல பலன்கள் கிடைக்கும். ஊழியர்களிடம் நட்புறவு மேம்படும். பணியில் பாராட்டுகள் குவியும்.

கூடுதல் வருமானம் உண்டு. கணவன் மனைவி அன்பு மேம்படும். பணம் கையில் வந்து சேரும்.

சேமிக்க வேண்டிய நிலை தோன்றும். உடல் நலம் நன்றாக இருக்கும். பொன்னான நாளாக இருக்கும்.

விநாயகரை வழிபட கூடுதல் பலன் பெறலாம்.

4/3/2020 ராசிபலன் Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3