Home Blog Page 244

Dhanush: ஜகமே தந்திரம் மே 1ல் ரிலீஸ்!

0
Jagame Thandhiram Release Date

Dhanush ஜகமே தந்திரம் மே 1ல் ரிலீஸ் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் நடித்துள்ள ஜகமே தந்திரம் படம் வரும் மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் தனுஷ். துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து காதல் கொண்டேன், திருடா திருடி, சுள்ளான், புதுப்பேட்டை, பொல்லாதவன், யாரடி நீ மோகினி, மாப்பிள்ளை, 3, மாரி, மாரி 2, அசுரன் என்று வரிசையாக பல படங்களில் நடித்தார்.

அசுரன் படத்திற்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த எனை நோக்கி பாயும் தோட்டம் வெளிவந்து ஓரளவு விமர்சனம் பெற்றது.

ஜகமே தந்திரம் (Jagame Thandhiram)

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் பட்டாஸ். தற்போது, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஜகமே தந்திரம் Jagame Thandhiram என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

ஜகமே தந்திரம் படத்தில், தனுஷுடன் இணைந்து சஞ்சனா நடராஜன், ஐஸ்வர்யா லெட்சுமி, கலையரசன், சின்னி ஜெயந்த் ஆகியோர் உள்பட சினிமா பிரபலங்கள் பலரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

ஒய் நாட் ஸ்டூடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. சந்தோஷ் நாராயணன் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இதுவரை ஜகமே தந்திரம் குறித்து அறிவிப்பு வெளியாகாத நிலையில், முதல் முறையாக இப்படம் குறித்து முக்கிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.

ஜகமே தந்திரம் ரிலீஸ் தேதி

அதன்படி, வரும் மே 1 ஆம் தேதி ஜகமே தந்திரம் திரைக்கு வருகிறது. அன்று, ஜெயம் ரவியின் பூமி, சூர்யாவின் சூரரைப் போற்று, விஷாலின் சக்ரா ஆகிய படங்கள் வெளியாக இருக்கிறது.

மே 1 ஆம் தேதி தொழிலாளர் தினம் ஒருபுறம் இருக்க அன்று தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித் தனது 49 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.

இதனை முன்னிட்டு முன்னணி நடிகர்களின் படங்கள் திரைக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் கர்ணன் என்ற படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில் உள்ளது. விரைல், கர்ணன் படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

பத்திரிக்கையாளரான வரலட்சுமி சரத்குமார்!

0
Velvet Nagaram Sneak Peek

Velvet Nagaram வெல்வெட் நகரம் படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார். இப்படம் வரும் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வந்த போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

ராஜபார்வை

இந்த நிலையில், தற்போது ராஜபார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிலும், கண்பார்வை தெரியாத ஒருவராக நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரில், ஒரு புறம் பல ரௌடிகளை புரட்டி எடுத்து, உடற்பயிற்சியும் செய்கிறார் வரலட்சுமி சரத்குமார். மற்றொரு புறம் போலீசார் யாரை தேடிக்கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

Varalaxmi Sarathkumar கண்பார்வையற்ற கதாபாத்திரம்

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் கண்பார்வையற்றவராக நடித்துள்ளார். முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்திற்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வந்த சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்பார்வையற்றவராக நடித்து ஹீரோயினை சைக்கோவிடமிருந்து காப்பாற்றுவார்.

தற்போது அதே போன்ற ஒரு கதாபாத்திரத்தில்தான் வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராஜபார்வை படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து ரவி கலே, பரத் ரெட்டி, சுமித்ரா, தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

ஜேகே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரவி பஸ்ரூர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.

வெல்வெட் நகரம் Velvet Nagaram Sneak Peek

அதற்கு முன்னதாக வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வெல்வெட் நகரம் (Velvet Nagaram) வரும் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

அறிமுக இயக்குநர் மனோஜ் வெல்வெட் நகரம் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமார் பத்திரிக்கையாளராக நடித்துள்ளார்.

ஹீரோயினை மையப்படுத்தி இந்த படம் சைக்லாஜிக்கல் த்ரில்லர் கதையை சித்தரிக்கும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கொடைக்கானலில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேக்கர்ஸ் ஸ்டூடியோ நிறுவனத்தின் மூலம் அருண் கார்த்திக் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். கோலி சோடா 2 புகழ் அச்சு ராஜாமணி இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து ரமேஷ் திலக், நடிகை கஸ்தூரி, மாளவிகா சுந்தர், பிரகாஷ் ராகவன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வரும் 6 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள நிலையில், வெல்வெட் நகரம் படத்தின் ஸ்னீக் பீக் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

3

ஜெமினி மேம்பாலம் குண்டுவெடிப்பு; சென்னையில் பதற்றம்

0
ஜெமினி மேம்பாலம் குண்டுவெடிப்பு

ஜெமினி மேம்பாலம் குண்டுவெடிப்பு; சென்னையில் பதற்றம்

மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் ஜெமினி மேம்பாலத்தின் கீழ் சென்ற காரின் மீது நாட்டு வெடி குண்டை எரிந்துவிட்டு தப்பி ஓடினர். அது தரையின் கீழே விழுந்து வெடித்தது.

பெரிதும் சேதம் எதுவும் இல்லை. இருந்தாலும் அதை சுற்றிய பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது. மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

சென்னையில் இரண்டாவது முறை தேனாம்பேட்டை காவல் நிலையம் அருகில் நாட்டு வெடி வீசப்பட்டது பெரிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இன்று மாலை நான்கு மணியளவில் ஜெமினி பாலத்தின் இறக்கத்தில் சென்ற ஒரு காரை துரத்திக்கொண்டு மோட்டோர் சைக்கிளில் வந்தவர்கள் அதன் மீது குண்டு எரிந்துள்ளனர்.

அக்கம் பக்கத்தில் விசாரித்த பிறகு எந்த கார்மீது குண்டு வீசினார்களோ அந்தக்காரும் தப்பிச் சென்றுவிட்டது. காரை துரத்திக்கொண்டு வந்தவர்கள் காரில் உள்ளவர்கள்மீது வெடிகுண்டு வீசி கொல்லும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கலாம் இது வேறு எதுவும் காரணத்தோடு நடந்ததாக தெரியவில்லை எனவும் கூறியுள்ளனர்.

3

MK Stalin Gypsy; ஜிப்ஸிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

0
MK Stalin Gypsy

MK Stalin Gypsy; ஜிப்ஸிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

Gypsy ஜிப்ஸி சரியான படம் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

ஜிப்ஸி படம் வரும் 6 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், நுங்கம்பாக்கத்தில் சிறப்புக்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சிறப்புக் காட்சியை திமுக தலைவர் முக ஸ்டாலின் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஜிப்ஸி படத்தை பார்த்து ரசித்துள்ளார்.

ஜோக்கர் மற்றும் குக்கூ ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் உருவாகியுள்ள 3 ஆவது அழகான படைப்பு ஜிப்ஸி.

ஜீவா, நடாஷா சிங் ஆகியோர் முன்னணி ரோலில் நடித்துள்ளனர். முழுக்க முழுக்க, ரொமாண்டிக் கலந்த காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வரும் 6-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வரும் நிலையில், அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகியது. இந்த டீசர் முழுக்க முழுக்க வன்முறை, அரசியல், காதல் காட்சிகள் ஆகியவற்றை உள்ளடக்கியிருந்தது.

இதையடுத்து, இன்று ஜிப்ஸி படத்தின் நீக்கப்பட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டனர். இதற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஜிப்ஸி நீக்கப்பட்ட காட்சிகள்

அதில், தலைவர் சிலையை திறப்பதற்கு துணை முதல்வர் வருகை தருகிறார். இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாலையோரங்களில் யாரும் படுத்து உறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி சாலையோரங்களில் தங்கியவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், இவர்கள் யாருக்கும் ஆதார் கார்டு கிடையாது.

அதிலும் இந்த குதிரைக்காரன் மாவோயிஸ்டாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கான்ஸ்டபிள் கூறுகிறார். இதற்கிடையில், ஜீவாவுடன் கைதான ஒருவர் ஆதார் கார்டெல்லாம் கேட்கமாட்டாங்க, ஏடிஎம் கார்டு இருந்தால் தலைக்கு ரூ.100 மட்டும் போதும் என்கிறார்.

அவர், பாண்டியன் தியேட்டருக்கு படம் பார்க்க போனேன். தேசிய கீதம் பாடும் போது எழுந்திருக்கவில்லை என்று இங்கு ஸ்டேசனுக்கு அழைத்து வந்து ரூ.100 கொடு என்று டார்ச்சர் பண்ணுறாங்க என்று குறிப்பிட்டுள்ளார்.

Gypsy Sneak Peek: ஸ்டேஷனில் நடக்கும் சம்பவம்!

தேசியக் கீதம் ஒலிக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எங்களை எல்லாம் கைது செய்வதற்கு உங்களது உரிமை இல்லை என்று ஜீவா விளக்குகிறார்.

மேலும், நீதித்துறை சொல்வதை காவல்துறை கேட்பதில்லை, காவல்துறை சொல்வதை நீதித்துறை கேட்கமாட்டீங்குது. மக்கள் சொல்வதை எந்த துறையும் கேட்கமாட்டீங்குது என்றார்.

இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளேயிருந்து இன்ஸ்பெக்டர் வருகிறார். அவரைக் கண்டதும் கிளி திருடன் திருடன் என்று கத்த, கோபத்தில் கிளிக்கூண்டை எட்டி உதைக்கிறார் இன்ஸ்பெக்டர்.

இதற்கு யோவ், எவன் யாரு சிலையை திறந்து வைத்தால் எங்களுக்கு என்னய்யா என்று ஒரு வயதான பெரியவர் கேட்குகிறார். இதனால், ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அவரை தாக்குகிறார்.

இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஜீவா, இன்ஸ்பெக்டர் மீது கையை வைக்கிறார். அப்போது ஆங்கிலத்தில் Very Very Bad என்று கூறுவதோடு அந்த வீடியோ முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வீடியோ படத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. ஏனென்றால் இந்த வீடியோ காட்சியை தணிக்கைக் குழுவினர் நீக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், படத்திற்கு ஏ சான்றிதழே கிடைத்துள்ளது. இந்த நிலையில், ஜிப்ஸி படத்திற்கு சிறப்பு காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஜிப்ஸி சிறப்பு காட்சி பார்த்த மு.க ஸ்டாலின் (MK Stalin Gypsy)

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள ஃபோர் ஃப்ரேம்ஸ் அரங்கில் சிறப்புக் காட்சியை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்த்துள்ளார்.

அவருடன் திமுக துணைப் பொதுச்செயலாளர் பெரியசாமி, பொருளாளர் துரைமுருகன், ஏ.வ.வேலு ஆகியோரும் ஜிப்ஸி படத்தைப் பார்த்துள்ளனர்.

ஜிப்ஸி படத்தை பார்த்துவிட்டு மெய்சிலிர்த்துப் போன மு.க.ஸ்டாலின் சரியான நேரத்தில் சரியான படம் என்று படக்குழுவினரை பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக தனுஷ் நடிப்பில் வந்த அசுரன் படத்தைப் பார்த்த மு.க.ஸ்டாலின் இது படம் அல்ல பாடம் என்று குறிப்பிட்டிருந்தார்.

இதன் காரணமாக ஜிப்ஸி படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

3

Vaa Chellam: வா செல்லம் லிரிக் வெளியீடு!

0
Ponmagal Vandhal First Single

Ponmagal Vandhal First Single: வா செல்லம் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானதைத் தொடர்ந்து வா செல்லம் (Vaa Chellam) ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது.

தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று மாலை வெளியானது. இந்தப் போஸ்டரில் ஜோதிகா வழக்கறிஞராக இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

இதன் மூலம், இப்படம் பெண்களையும், குழந்தைகளையும் மையப்படுத்திய படம் என்றும், பெண்களுக்கு எதிராக சம்பவங்களை சுட்டிக்காட்டும் விதமாகவும் உருவாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, நடிகர் சிவக்குமாரின் மகளும், ஜோதிகாவின் நாத்தனாருமான பிருந்தாவின் பிறந்தநாளை முன்னிட்டு பொன்மகள் வந்தாள் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலான வா செல்லம் ஃபர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியாகியுள்ளது.

மாலை 5 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், வெளியாகவில்லை. தொழில்நுட்ப கோளாறு காரணமாக 7 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

எனினும், யூடியூப்பில் வா செல்லம் என்ற பாடலின் லிரிக் வீடியோ வந்துள்ளது. இந்தப் பாடலை பிருந்தா சிவக்குமார் பாடியுள்ளார்.

பொன்மகள் வந்தாள் Ponmagal Vandhal படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் 27 ஆம் தேதி பொன்மகள் வந்தாள் படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

3

பொள்ளாச்சி பாணியில் தென்காசி பாலியல் கும்பல்

1
தென்காசி பாலியல் கும்பல் காதல் மன்னன் கண்ணன் சிக்கியது எப்படி?

பொள்ளாச்சி பாணியில் தென்காசி பாலியல் கும்பல் ஒன்று பெண்களை வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து உள்ளது. காதல் மன்னன் கண்ணன் சிக்கியது எப்படி?

கோவை பொள்ளாச்சி பாலியல் கும்பல்

கோவை பொள்ளாச்சி பாலியல் கும்பல் இளம் பெண்களை காதல் வலையில் வீழ்த்தி வீடியோ எடுத்து மிரட்டி அவர்களின் வாழ்க்கையை சீரழித்தனர்.

இந்த நிகழ்வு தமிழகத்தையே உலுக்கியது. அந்த பெண்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என பலர் ஆதங்கப்பட்டு வருகின்றனர்.

டெல்லியில் நிர்பயா பாலியல் குற்றவாளிகளுக்கு இன்னும் தூக்குதண்டனை வழங்கப்படவில்லை என சமூக வலைதளங்களில் இந்திய சட்டத்தை விமர்சித்து வருகின்றனர்.

பொள்ளாச்சி கும்பலை போன்று தென்காசி டிக்டாக் கும்பல் ஒன்று பெண்களை மிரட்டி பணம் பறித்து போலீசிடம் சிக்கியுள்ளது. இந்த கும்பலின் தலைவன் காதல் மன்னன் கண்ணன்.

காதல் மன்னன் கண்ணன் சிக்கியது எப்படி?

தென்காசி மாவட்டம் சுரண்டை, அருணாசலபுரம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரின் மகன் கண்ணன் (19).

கண்ணன் டிக்டாக்கில் “காதல் மன்னன் கண்ணன்” என்ற பெயரில் கணக்கு துவங்கியுள்ளார். முதலில் தனியாக வீடியோ இட்டு வந்துள்ளார்.

அதன்பிறகு தன்னுடன் படிக்கு மாணவிகளிடம் நைசாக பேசி டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். பெண்கள் வீடியோவில் தோன்றியவுடன் இவரின் பாலோவர்கள் கூடியுள்ளது.

5 லட்சத்திற்கும் மேல் பாலோயர்களை கொண்டுள்ளார். இதனால் கண்ணனை ஏராளமான பெண்கள் தொடர்பு கொண்டு பேசியுள்ளனர்.

கிடைக்கும் நேரத்தில் கிடைத்த பெண்களுடன் டிக்டாக் வீடியோ எடுத்து வெளியிடுவதை வாடிக்கையாக கொண்டு உள்ளார்.

தென்காசி பாலியல் கும்பல்

ஒரு கட்டத்தில் இவருடன் பழகிய வசதியான பெண்களை ஆபாசமாக டிக்டாக் எடுத்து அதை வெளியிட்டு விடுவதாக மிரட்டியுள்ளார்.

லட்சக்கணக்கில் பணத்தை சுருட்டியுள்ளார். தொடர்ந்து ஒரு பெண்ணுக்கு பணம் கேட்டு தொல்லைகொடுக்கவே அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இதன் பின்பு உள்ளே புகுந்த போலீசார் கண்ணனை நையப்புடைத்துள்ளனர். அவரிடம் விசாரணை நடத்தியதில் அவரை போன்று இன்னும் சில பெணகளை வலையில் வீழ்த்த முயற்சித்தது தெரியவந்தது.

கண்ணனின் பாலியல் மிரட்டலுக்கு அவருடைய நண்பர்களும் உடந்தை என தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே கண்ணன் சிக்கிவிட்டதால் பல பெண்களின் வழக்கை காப்பற்றப்பட்டு உள்ளது.

3

Anushka: அனுஷ்காவுக்கு இவர் தான் மாப்பிள்ளையா?

0
Anushka Marriage

Anushka: அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாகவும், விவாகரத்தான இயக்குநரை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை அனுஷ்கா. சுந்தர் சி இயக்கத்தில் வந்த ரெண்டு படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். இப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வந்த வேட்டைக்காரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார்.

அதன் பிறகு சிங்கம், வானம், தெய்வ திருமகள், தாண்டவம், அலெக்‌ஷ் பாண்டியன், சிங்கம் 2, இரண்டாம் உலகம், லிங்கா, என்னை அறிந்தால், பாகுபலி, இஞ்சி இடுப்பழகி, தோழா, பாகுபலி 2 என்று பல படங்களில் நடித்துள்ளார். தமிழ் மொழியைத் தவிர தெலுங்கு மொழியில் அதிக படங்களில் நடித்துள்ளார்.

தற்போது நிசப்தம் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். அனுஷ்கா, ரஜினிகாந்த், விஜய், அஜித், சூர்யா, சிம்பு ஆகியோருடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். 38 வயதாகும் அனுஷ்காவிற்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

இதற்கு முன்னதாக பாகுபலி படத்தின் போது அனுஷ்காவிற்கும், பிரபாஸ்க்கும் இடையில் காதல் கிசுகிசு இருப்பதாக கூறப்பட்டது. இதை இருவரும் மறுத்தனர். பின்னர், பிரபல தொழிலதிபரை அனுஷ்கா திருமணம் செய்ய இருப்பதாக கூறப்பட்டது. ஆனால், அப்படி ஒன்றும் இதுவரை நடக்கவில்லை.

இதற்கிடையில், கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் டேட்டிங் சென்றதாகவும் செய்தி வெளியாகியது. மேலும், அவர் வட இந்தியர் என்றும், தென்னிந்திய அணி சார்பில் ரஞ்சி டிராபியில் விளையாடி வருகிறார் என்றும் கூறப்பட்டது.

அனுஷ்காவின் இஞ்சி இடுப்பழகி, சைஸ் ஜீரோ ஆகிய படங்களை தெலுங்கு இயக்குநரான பிரகாஷ் கோவலமுடி என்பவர் இயக்கியிருந்தார். இவரைத் தான் அனுஷ்கா திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. 44 வயதாகும் பிரகாஷ் கோவலமுடிக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவியை விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

எது எப்படியிருந்தாலும் இதுவும் ஒரு தகவல்தான். அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை எல்லாமே வதந்தியாகவும், செய்தியாகவுமே இருக்கும்.

3

Vijay Sethupathy; விஜய் சேதுபதிக்கு ஸ்ரீமன் முத்தம்!

0
Sriman Kiss Vijay Sethupathi

Vijay Sethupathy; விஜய் சேதுபதிக்கு ஸ்ரீமன் முத்தம்! விஜய் சேதுபதி-ஸ்ரீ மன்

சங்கத்தமிழன் படப்பிடிப்பின் போது நடிகர் ஸ்ரீமனுக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீமனுக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படம் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பில் வைரலாகி வருகிறது. ஆனால், சங்கத்தமிழன் படப்பிடிப்பின் போது தான் விஜய் சேதுபதி ஸ்ரீமனுக்கு முத்தம் கொடுத்துள்ளார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் திரைக்கு வரும் நிலையில்,

நேற்றுடன் படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்டுள்ளது. தற்போது  போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமீபத்தில் இப்படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி முதல் சிங்கிள் டிராக் வெளியாகி வைரலானது. இதையடுத்து, தற்போது இரண்டாவது சிங்கிள் டிராக் தயாராகி வருகிறது.

பொதுவாக, நடிகர்கள், எந்த ரசிகர்கள் கேட்டாலும், அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொள்வது, கை கொடுப்பது மட்டுமே செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

ஆனால், அதில் இவருக்கு மட்டும் விதிவிலக்கு. ஆம், எந்த ரசிகர் கேட்டாலும், அவர்களது கன்னத்தில் முத்தம் கொடுப்பதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார். அப்படிப்பட்ட நடிகர் யார் விஜய் சேதுபதிதான்.

நானும் ரௌடி தான், சேதுபதி, தர்மதுரை, இமைக்கா நொடிகள், பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் மூலம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

ஹீரோவாக மட்டுமல்ல, சிறப்புத் தோற்றம் என்று எந்தவொரு ரோலாக இருந்தாலும், அதில் தனது பங்களிப்பை கொடுக்கக்கூடியவர்.

இவ்வளவு ஏன், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில், அவருக்கு வில்லனாகவே நடித்துள்ளார். தற்போது, விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.

மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு பெறுவதற்கு முன்னதாக விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

விஜய்க்கு முத்தம் கொடுத்ததன் மூலம் 1,35,263 முத்தங்கள் வரை கொடுத்த ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

விஜய் சேதுபதி-ஸ்ரீ மன்

தற்போது படப்பிடிப்பு முழுவதும் முடிக்கப்பட்ட நிலையில், விஜய்யைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீமனுக்கு விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.ன்

இதற்கு முன்னதாக விஜய் சேதுபதி, ஸ்ரீமன் ஆகியோர் இணைந்து சங்கத்தமிழன் படத்தில் நடித்துள்ளனர்.

Vijay Sethupathy அப்போது தான் ஸ்ரீமனுக்கு முத்தம் கொடுத்துள்ளார். பதிலுக்கு ஸ்ரீமனும் விஜய் சேதுபதிக்கு முத்தம் கொடுத்து அசத்தியுள்ளார்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் தற்போது மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு பெற்றது. விஜய்யைத் தொடர்ந்து ஸ்ரீமனுக்கும் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்துள்ளார் என்று கூறி வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

தோனி ரெய்னா சென்னையில் வலை பயிற்சி

0
தோனி ரெய்னா
தோனி ரெய்னா

தோனி ரெய்னா சென்னையில் வலை பயிற்சி

வருகிற மார்ச் 29ம் தேதி 13 வது ஐபிஎல் தொடங்க உள்ள நிலையில் தோனி மற்றும் ரயில் நேற்று சென்னை வந்தனர்.

இன்று மார்ச் 3 ஆம் தேதியிலிருந்து அவர்கள் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐபிஎல் என்று சொன்னாலே எல்லோ ஆர்மி சென்னை சூப்பர் கிங்சுக்கு நம்ம தல தோனி மற்றும் சின்ன தல சுரேஷ் ரெய்னா தான் பக்கபலமாக இருந்து வருகிறார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2016 மட்டும் 2017 ஆம் ஆண்டு சூதாட்ட புகாரில் தடை வாங்கியது, அதனால் அந்த ஆண்டு தோனி புனே அணிக்கும்,

ரெய்னா குஜராத் அணிக்கும் சென்றார்கள் அதனால் மீண்டும் இருவரும் சேர்வார்களா என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்க்கப்பட்டது.

2018 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் மீண்டும் சென்னை பங்கேற்றபோது தோனியின் தலைமையின் கீழ் ரெய்னா விளையாடினார்.

2016 மட்டும் 2017 ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் அணிக்கு தலைவராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தோனியின் ரெய்னாவும் இன்றிலிருந்து சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர், அவர்கள் செல்லும் இடம் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது.

சென்னை ரசிகர்களுக்கு தோனி தல என்றால் ரெய்னா சின்னத் தல ஆவார்.

3

Gypsy Sneak Peek: ஸ்டேஷனில் நடக்கும் சம்பவம்!

1
Gypsy Sneak Peek

Gypsy Sneak Peek: ஜிப்ஸி படத்தின் புரோமோ வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. காவல் நிலையத்தில் என்ன நடக்கிறது என்பதை ஜிப்ஸி புரோமோ வீடியோ வெளிகாட்டியுள்ளது.

ஜோக்கர் மற்றும் குக்கூ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 3-ஆவது படைப்புதான் ஜிப்ஸி.

முழுக்க முழுக்க, ரொமாண்டிக் கலந்த காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக, நடாசா சிங் நடித்துள்ளார். மேலும், சன்னி வெயின், லால் ஜோஸ், சுஷீலா ராமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வரும் 6-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. அண்மையில் இப்படத்தின் டீசர் வெளியாகியது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டார்.

ஜிப்ஸி டீசர்

இந்த டீசரில், முதலில் எந்த அமைப்பு, மாவோயிஸ்டாக இருக்குமோ என்று குரல் எழும்புகிறது. இதற்கு நான் முதலில் மனிதன் என்று ஜீவாவின் குரல் கேட்கிறது.

அதன் பிறகு உனக்கு என்று ஒரு முகம் படைக்கப்பட்டிருக்கும். அது கூடிய விரைவில் உன் கைக்கு வரும் என்று கூறும் குரல் தான் கேட்கிறது.

Gypsy Teaser: ஜிப்ஸி டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா!

அதன் பிறகு ஹீரோ – ஹீரோயின் சந்திப்பு நிகழ்கிறது. அப்படியே அவர்களது காதல் காட்சிகள் தான் திரை முன்பு வந்து செல்கிறது.

இதையடுத்து, உள்ளே அரசியல் நுழைகிறது. இறுதியில், ஜீவாவின் காதல் ஜெயித்ததா? இல்லையா என்பதே கருவாக இருக்கும் என்று தெரிகிறது.

இடையில், போலீஸ் ஸ்டேசன், அரசியல் பிரவேசம், பிரச்சாரம், வன்முறை என்று கதை நகர்கிறது. ஒரு துப்பாக்கியால் ஒரு குரலை அடக்க நினைத்தால், ஓராயிரம் குரல் வெடிக்கும் என்று ஜீவா வசனம் பேசுகிறார்.

இறுதியில், பாடல் ஒலிக்கிறது. அதோடு டீசரும் முடிகிறது. இந்த டீசரைப் பார்த்தால் ஜாதி, அரசியல், காதல், வன்முறை போன்றவை இடம்பெற்றதாக தான் ஜிப்ஸி படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Gypsy Sneak Peek

இந்த நிலையில், ஜிப்ஸி படத்தின் ஸ்னீக் பீக் ஒன்று வெளியாகியுள்ளது. அதில், தலைவர் சிலையை திறப்பதற்கு துணை முதல்வர் வருகை தருகிறார்.

இதன் காரணமாக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சாலையோரங்களில் யாரும் படுத்து உறங்கக்கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதையும் மீறி சாலையோரங்களில் தங்கியவர்களை போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில், இவர்கள் யாருக்கும் ஆதார் கார்டு கிடையாது. அதிலும் இந்த குதிரைக்காரன் மாவோயிஸ்டாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது என்று கான்ஸ்டபிள் கூறுகிறார்.

இதற்கிடையில், ஜீவாவுடன் கைதான ஒருவர் ஆதார் கார்டெல்லாம் கேட்கமாட்டாங்க, ஏடிஎம் கார்டு இருந்தால் தலைக்கு ரூ.100 மட்டும் போதும் என்கிறார். அவர், பாண்டியன் தியேட்டருக்கு படம் பார்க்க போனேன்.

தேசிய கீதம் பாடும் போது எழுந்திருக்கவில்லை என்று இங்கு ஸ்டேசனுக்கு அழைத்து வந்து ரூ.100 கொடு என்று டார்ச்சர் பண்ணுறாங்க என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசியக் கீதம் ஒலிக்கும் போது மாற்றுத்திறனாளிகள் எழுந்து நிற்க வேண்டிய அவசியமில்லை என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எங்களை எல்லாம் கைது செய்வதற்கு உங்களது உரிமை இல்லை என்று ஜீவா விளக்குகிறார்.

நீதித்துறை vs காவல்துறை

மேலும், நீதித்துறை சொல்வதை காவல்துறை கேட்பதில்லை, காவல்துறை சொல்வதை நீதித்துறை கேட்கமாட்டீங்குது.

மக்கள் சொல்வதை எந்த துறையும் கேட்கமாட்டீங்குது என்றார். இப்படியெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் போது உள்ளேயிருந்து இன்ஸ்பெக்டர் வருகிறார்.

அவரைக் கண்டதும் கிளி திருடன் திருடன் என்று சொல்ல, கோபத்தில் கிளிக்கூண்டை எட்டி உதைக்க, யோவ், எவன் யாரு சிலையை திறந்து வைத்தால் எங்களுக்கு என்னய்யா என்று ஒரு வயதான பெரியவர் கேட்குகிறார். இதனால், ஆத்திரமடைந்த இன்ஸ்பெக்டர் அவரை தாக்குகிறார்.

இதையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாத ஜீவா, இன்ஸ்பெக்டர் மீது கையை வைக்கிறார். அப்போது ஆங்கிலத்தில் Very Very Bad என்று கூறுவதோடு அந்த வீடியோ முடிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இந்த வீடியோ படத்தில் இருக்கிறதா? இல்லையா? என்று கேட்டால், நிச்சயமாக இல்லை. ஏனென்றால் இந்த வீடியோ காட்சியை தணிக்கைக் குழுவினர் நீக்கிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3