Home Blog Page 245

கே‌கே‌ஆர் அணியின் பலம் பலவீனம்; கோப்பையை மூன்றாவது முறை வெல்லுமா?

0
கே‌கே‌ஆர் அணியின் பலம் பலவீனம்
கே‌கே‌ஆர் அணியின் பலம் பலவீனம்

கே‌கே‌ஆர் அணியின் பலம் பலவீனம்; கோப்பையை மூன்றாவது முறை வெல்லுமா?

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மூன்றாவது முறையாக கோப்பையை வெல்ல ஆயத்தமாகி வருகிறது.

நடிகர் ஷாருக்கான் உரிமையாளரான இந்த அணியில் 2008ஆம் ஆண்டு கங்குலி தலைமை தாங்கினார்.

2008 2009 2010 ஆம் ஆண்டு சொதப்பலான ஆட்டத்தால் லீக் போட்டியுடன் வெளியேறியது. 2011 ஆம் ஆண்டு கௌதம் கம்பீர் இந்த அணிக்கு கேப்டன் ஆனார்.

அந்த வருடம் ஐபிஎல்லில் ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது கொல்கத்தா. 2012ஆம் ஆண்டு வெற்றி நடையில் கம்பீர நடை போட்டு இறுதி ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

2013ஆம் ஆண்டு லிக் போட்டியுடன் வெளியேறிய இந்த அணி, 2014 மீண்டும் தன் விஸ்வரூபத்தை காட்ட ஆரம்பித்தது.

இறுதிப் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மீண்டும் இரண்டாவது முறையாக சாம்பியன் ஆனது.

2015 மற்றும் 2019ஆம் ஆண்டு லீக் போட்டியுடனும், 2016, 2017, 2018 ஆம் ஆண்டு ப்ளே ஆப் சுற்றுடன் வெளியேறியது.

கடந்த பன்னிரண்டு சீசன்களில் சவுரவ் கங்குலி, மெக்குல்லம், கிறிஸ் கெயில், டேவிட் ஹஸி, ரிக்கி பாண்டிங், மேத்யூஸ், இஷாந்த் சர்மா, அஜித் அகர்கர், அஜந்தா மென்டிஸ், பிராடு ஹாட்ஜ்,

மோர்னி மோர்க்கல், உத்தப்பா, கொல்டர் நைல் போன்ற ஜாம்பவான்கள் விளையாடிய இந்த அணி பலமுறை லீக் போட்டி உடனே வெளியேறியது தான் மிகப்பெரிய சோகம்.

கே‌கே‌ஆர் அணியின் பலம் பலவீனம் 

இந்த ஆண்டு பல அதிரடி வீரர்களை இந்த அணி வாங்கியுள்ளது, பேட் கம்மின்ஸ் 2020 ஆம் ஆண்டு ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் ஆவார், 15.5 கோடி இவரது விலை.

இந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஆக நித்திஷ் ராணா, ஷப்னம் கில், சித்தேஷ் லேட், அயன் மோர்கன் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்களாக இந்த அணி ஆன்ட்ரே ரசல், பேட் கம்மின்ஸ், சுனில் நரைன், கிரீஸ் கிரீன் உள்ளனர்.

விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் மற்றும் தாம் பென்டன் வீரர்களும், பந்துவீச்சாளர்களாக குருனே, குல்திப் யாதவ், கிருஷ்ணா, சந்தீப் வாரியர்ஸ், வருன் சக்ரவர்த்தி, பெர்குசன் போன்ற வீரர்கள் உள்ளனர்.

தினேஷ் கார்த்திக் இந்த அணியை திறம்பட வழிநடத்தி வருகிறார் இந்த அணியின் பலவீனமே பார்ட்னர்ஷிப் அமைத்து பேட்டிங் செய்யாதே.

இந்த அணியின் பயிற்சியாளராக கடந்த ஆண்டு நியமிக்கப்பட்ட இந்த அணியின் முன்னாள் அதிரடி வீரர் பிரெண்டன் மெக்கல்லம் ஆவார்.

இந்த அணியில் இளம் வீரர்கள் இருந்தாலும், கடந்த ஆண்டு உலகக் கோப்பையை இங்கிலாந்து அணிக்கு வாங்கித்தந்த ஐயன் மோர்கன் இந்த அணியில் இருப்பது மிகப்பெரிய பலமே.

ஐபிஎல் போட்டி என்று சொன்னாலே சிக்ஸர் தான் அதற்குப் பெயர் போனவர் தான் ஆன்ட்ரே ரசல், பவுளராக வளம் வந்த சுனில் நரேன் கொல்கத்தா அணியில் ஓப்பனராக இறங்கி பந்துவீச்சாளர்களை பின்னி பெடலெடுத்து வருகிறார்.

கடந்த சீசன்களில் கிரிஸ் லின் மற்றும் சுனில் நரேன் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கி துவம்சம் செய்வார்கள். ஆனால் தற்போது கிறிஸ் லின் இந்த அணியில் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

3

Oppo Reno 3 Pro; என்னது ஆறு கேமேரா கொண்ட ஒஃப்போ மொபைலா?

0
Oppo Reno 3 Pro
Oppo Reno 3 Pro

Oppo Reno 3 Pro; என்னது ஆறு கேமேரா கொண்ட ஒஃப்போ மொபைலா?

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒப்போ ஆறு காமிரா கொண்ட புதிய ஃபோன் ஒப்போ ரேனோ 3 ப்ரோவை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

44 மேக பிக்சல் கொண்ட இரட்டை ஃப்ரண்ட் காமிரா வசதியை இந்த மொபைல் கொண்டுள்ளது. உலகத்திலையே 44எம்பியில் செல்ஃபி எடுக்கும் முதல் ஸ்மார்ட்போன் இதுவாகும்.

மேலும் இந்த மாடலில்  MediaTek Helio P95 processor, 4,025mAh பேட்டரி திறன் மற்றும் 30W VOOC திறன் கொண்ட பாஸ்ட் சார்ஜிங் வசதியும் உள்ளது.

இந்த மாடெல் மூன்று கலர்களில் கிடைக்கிறது. அரோரா புளு, மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்கை ஒயிட் ஆகிய நிறங்களில் கிடைக்கிறது.

Oppo Reno 3 Pro Price

இதில் 8GB RAM and 128GB storage தலா ரூ.29,990 மற்றும் 256GB storage with 8GB RAM தலா ரூ.32,990 ஆகும்.

மேலும் நடு இரவில் நச்சுனு  செல்ஃபி மற்றும் AI noise cancellation வசதியும் கொண்டுள்ளது.

3

Modi Quit Social Media; சமூக வலைதளங்களை கைவிடும் மோடி

0
Modi Quit Social Media
Modi Quit Social Media

Modi Quit Social Media; சமூக வலைதளங்களை கைவிடும் மோடி

சமூக வலைதளங்கலான பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ரம் மற்றும் யுட்யூப் ஆகியவைகளில் இருந்து நீங்க விடை பெறுவதாக மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்க்கு பிறகு மோடிதான் ட்விட்டரில் அதிக பாலோவேர்ஸ் (53 மில்லியன்) வைத்துள்ளார். சமூக வலைத்தளங்களில் அடிக்கடி பதிவும் செய்வார்.

இது குறித்து ராகுல் காந்தி

முதலில் வெறுப்புணர்வை பரப்புவதை நிறுத்துங்கள் பிறகு சமூக வலைதளங்களை நிறுத்தலாம் என ட்விட்டரில் ரிப்ளை அளித்துள்ளார்.

 மோடி பக்தர்கள் சோகம்

நீங்கள் இல்லாத இடத்தில் எங்களுக்கு என்ன வேலை என #NoModiNoTwitter என ஹஷ்டக் ட்விட்டரில் பரப்பி வருகின்றனர். நீங்கள் இல்லை என்றால் அனைத்து சமூக வலைதளங்களையும் கைவிடுவதாக பதிவிட்டு வருகின்றனர்.

 

3

கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா? – வைரமுத்து ஆவேசம்

0
கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா? வைரமுத்து ஆவேசம்

கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா? இருவரையும் ஏன் ஒன்றாக ஒப்பிட்டு பேசுகின்றீர்கள் என வைரமுத்து ஆவேசம் கலந்து பேசியுள்ளார்.

திராவிட முன்னேற்ற கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை விழா சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பாரி முனை, ராஜா அண்ணாமலை அரங்கத்தில் கொண்டாடப்பட்டது.

இதில் கலந்துகொண்ட வைரமுத்து திமுக வளர்ந்து வந்த பாதை குறித்தும், கருணாநிதி எப்படி திமுகவை வழி நடத்துகிறார். ஸ்டாலின் எப்படி வழி நடத்துகிறார் என்பது குறித்து பேசினார்.

கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா?

கருணாநிதியும் ஸ்டாலினும் ஒண்ணா. இருவரும் வெவ்வேறு சிகரங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசுவது தவறு.

ரோஜா பூவுடன் மல்லிகை பூவையோ சாமந்தி பூவையோ, தாமரை பூவையோ ஒப்பிட முடியாது. ஏன் ரோஜா பூவுடன் இன்னொரு ரோஜா பூவை ஒப்பிட முடியாது.

அந்த ரோஜாவே வேறு. அது பிறந்த சூழல் வேறு, மலர்ந்த சூழல் வேறு. மற்றொரு ரோஜா பிறந்த சூழல் வேறு வளர்ந்த சூழல் வேறு. எனவே இரண்டையும் ஒப்பிட முடியாது.

அதேபோன்றே கலைஞரும் ஸ்டாலினும். இருவரும் வெவ்வேறு சிகரங்கள். இருவரின் காலகட்டங்கள் வேறு வேறு.

கலைஞர் காலத்தில் ஆரியமும் ஹிந்தியும் தான் எதிரிகள். இன்று காலம் மாறி உள்ளது. தமிழகம் பல கூறாக துண்டாடப்படுகிறது.

3

RajaParvai Trailer: ராஜபார்வை டிரைலர் வெளியீடு!

0
RajaParvai Trailer

RajaParvai Trailer: ராஜபார்வை டிரைலர் வெளியாகியுள்ளது. த்ரில்லர் கதையை மையப்படுத்திய ராஜபார்வை படத்தில் வரலட்சுமி சரத்குமார் கண்பார்வை அற்றவராக நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னனி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வந்த போடா போடி படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தைத் தொடர்ந்து, தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, நிபுணன், சத்யா, சண்டக்கோழி 2, சர்கார், மாரி 2, நீயா 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

தமிழைத் தவிர, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார்.

RajaParvai Trailer

இந்த நிலையில், தற்போது ராஜபார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். அதிலும், கண்பார்வை தெரியாத ஒருவராக நடித்து வருகிறார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த டிரைலரில், ஒரு புறம் பல ரௌடிகளை புரட்டி எடுத்து, உடற்பயிற்சியும் செய்கிறார் வரலட்சுமி சரத்குமார். மற்றொரு புறம் போலீசார் யாரை தேடிக்கொண்டிருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது.

கண்பார்வையற்ற கதாபாத்திரம்

முழுக்க முழுக்க த்ரில்லர் கதையை மையப்படுத்திய இப்படத்திற்கு அதிகளவில் வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கு முன்னதாக மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வந்த சைக்கோ படத்தில் உதயநிதி ஸ்டாலின் கண்பார்வையற்றவராக நடித்து ஹீரோயினை சைக்கோவிடமிருந்து காப்பாற்றுவார்.

தற்போது அதே போன்ற ஒரு கதாபாத்திரத்தில்தான் வரலட்சுமி சரத்குமாரும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Gypsy Sneak Peek: ஸ்டேஷனில் நடக்கும் சம்பவம்!

ராஜபார்வை படத்தில் வரலட்சுமி சரத்குமாருடன் இணைந்து ரவி கலே, பரத் ரெட்டி, சுமித்ரா, தலைவாசல் விஜய், பிளாக் பாண்டி ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

ஜேகே இந்தப் படத்தை இயக்கியுள்ளார். ரவி பஸ்ரூர் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இவர் இதற்கு முன்னதாக கேஜிஎஃப் படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இந்தப் படம் திரைக்கு வருகிறது.

வெல்வெட் நகரம்

அதற்கு முன்னதாக வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வெல்வெட் நகரம் வரும் 6 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்தப் படத்துடன் இணைந்து காலேஜ் குமார், எட்டுத்திக்கும் பற, ஜிப்ஸி, இந்த நிலை மாறும், பொன் மாணிக்கவேல் ஆகிய படங்களும், இம்சை அரசி, முரட்டு சிங்கம் ஆகிய டப்பிங் படங்களும் திரைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

3

சிரியா ரஷ்யா கூட்டணி; பின்வாங்கிய துருக்கி

0
சிரியா ரஷ்யா கூட்டணி

சிரியா ரஷ்யா கூட்டணி; பின்வாங்கிய துருக்கி, துருக்கி பாதுகாப்பு அமைச்சர் லூசி கூறியதாவது

துருக்கி சிரியா மோதலில் சிரியாவுக்கு ஆதரவாக ரஷ்யா வந்ததால் ரஷ்யாவுடன் எங்களுக்கு மோதும் எண்ணம் இல்லை என துருக்கி  அருவித்துள்ளது.

இருந்தாலும் சிரியா மீதான தங்கள் தாக்குதலை நிறுத்தபோவதில்லை எனவும் தெரிவித்துள்ளது.

துருக்கி பாதுகாப்பு அமைச்சர் லூசி கூறியதாவது

இட்லிப் மாகாணத்தில், எங்களது படையினர் மீது சிரியா இராணுவம் கடந்த மாதம் 27ஆம் திகதி நடத்திய விமானத் தாக்குதலில் 33 வீரர்கள் உயிரிழந்தனர்.

இதனால் சிரியா மீதான எங்கள் தாக்கம் ஒரு போதும் குறையாது என்று தெரிவித்துள்ளார். இருந்தாலும் சிரியாவுக்கு ஆதரவாக வரும் ரஷ்யாவுடன் மோதும் எண்ணம் இல்லை.

மேலும் சிரியா எல்லைக்குள் துருக்கி தனது படைகளை குவித்து வைத்துள்ளது. சிரியா படைகளை பழிவாங்கும் விதமாக துருக்கி விமானதாக்குதல்கள் நடத்திவருகிறது.

ஒரு பக்கம் சிரியா மற்றும் ரஷ்யா படைகள் இட்லிப் மாகாணத்தில் ஒன்று சேர்ந்து ஆயத்தமாகி வருகின்றது.

3

80 பேருக்கு கொரோனா பாதிப்பா? பீதியில் ஹைதாராபாத் மக்கள்

0
ஹைதாராபாத் மக்கள் 80 பேருக்கு கொரோனா பாதிப்பா

80 பேருக்கு கொரோனா பாதிப்பா? பீதியில் ஹைதாராபாத் மக்கள். ஹைதராபாத்தில் கொரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டதாக சந்தேகித்து 80 பேர் கண்காணிக்கப்பட்டுள்ளனர்.

மீண்டும் கொரோனா

நேற்று வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்த மூன்று பேருக்கு கொரோனா நோய் தொற்று உள்ளதை கண்டறிந்து தீவிர சிகிச்சை அளித்து வருகின்றன அந்தந்த மாநில அரசுகள்.

ஹைதராபாத் மென்பொறியாளர்

துபாயில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கான மாநிலத்திற்கு வந்த மென்பொறியாளர் கொரோனா வைரஸ் கிருமியால் பாதிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

பூனே ஆய்வுக்கூடமும் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை உறுதி செய்தது.  இதனால் அவர் சிறப்பு கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

80 பேருக்கு கொரோனா பாதிப்பா?

இந்நிலையில் அவர் வெளிநாட்டில் இருந்து வந்தபோது அவர் பயணம் செய்த பேருந்தில் உடன் பயணம் செய்தவர்கள் மற்றும் குடும்பத்தினர் உட்பட 80 பேரை தீவிர கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அவர்களுக்கும், கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் எனச் சந்தேகித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

3

Aruvaa Story: அருவா கதை இதுதானாம்!

1
Aruvaa Story

Aruvaa Story: அருவா கதை இதுதானாம்!

Aruvaa Story: அருவா படத்தில் சூர்யா நடிக்க இருக்கிறார். அருவா படத்தின் படப்பிடிப்பு வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருக்கிறது. இப்படத்தை ஹரி இயக்குகிறார்.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யா உடன் இணைந்து, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடக்க இருப்பதாக தெரிகிறது.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா39 ஆவது படத்தை யார் இயக்குகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது பதில் கிடைக்கும் வகையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அருவா அப்டேட்

அதன்படி, சூர்யா39 ஆவது படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார் என்றும், இந்தப் படத்திற்கு அருவா என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக, ஞானவேல்ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார்.

இது சூர்யா – ஹரி இணையும் 6ஆவது படம். இது ஹரியின் 16ஆவது படம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இவர், சூர்யா – ஹரியுடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் படத்தை தொடங்கி, ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடித்து இந்த ஆண்டின் தீபாவளிக்கு வெளியீடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக #Suriya39 என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இதற்கு முன்னதாக, சூர்யாவின் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். இந்த 5 படங்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

அதனால், சூர்யா – ஹரியின் கூட்டணியில் உருவாகும் சூர்யா39 அருவா படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், சூர்யா39 அருவா படத்தின் கதை குறித்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதன்படி, இரு சகோதர்களுக்கு இடையில் நடக்கும் கதைதான் அருவா. வேல் படத்திற்குப் பிறகு இந்தப் படம் ஒரு நல்ல குடும்ப பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று உணர்வதாக தெரிவித்துள்ளார்.

மேலும், ஆக்‌ஷன் படமாக இருக்கும், ஆனால், சிங்கம் மாதிரி இருக்காது. உண்மையில், உணர்ச்சிப்பூர்வமான ஒரு படமாக இருக்கும். அனல் அரசு படத்திற்கு சண்டைக்காட்சிகள் அமைக்கிறார்.

இதற்கு முன்னதாக கார்த்தியை வைத்து இயக்குநர் ஹரி அருவா கதையை உருவாக்க இருந்ததாக வதந்தி பரவியது.

ஆனால், அந்தப் படம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு விளக்கம் கொடுத்த ஞானவேல் ராஜா இது வேறுபடம் என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம், இராமேஸ்வரம், திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பை நடத்த ஹரி மற்றும் படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65ஆவது படமான தளபதி65 படத்தை இயக்க இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

3

தேர்வரைகளில் AL கருவிகள்; இனி பார்த்து எழுத இயலாதா? கலங்கும் மாணவர்கள்

0
தேர்வரைகளில் AL கருவிகள்
Artificial Intelligence Machine for Exam Hall

தேர்வரைகளில் AL கருவிகள்; இனி பார்த்து எழுத இயலாத? கலங்கும் மாணவர்கள்

தேர்வரைகளில் மாணவர்கள் முறைகேடாக நடந்து கொள்ளாமல் பார்த்துக்கொள்வதற்காக ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் சாஃப்ட்வேர் கொண்ட மெஷின் பயன்படுத்த முடிவு.

Artificial Intelligence Machine for Exam Hall

சென்னையில் இருக்கும் டாக்டர் எம்‌ஜி‌ஆர் பால்காலைக்கழகம் முதலில் பயன்படுத்த முடிவு. சென்ற வருடம் சி‌சி‌வி‌டி காமிராக்கள் மூலம் தேர்வரையை கண்காணித்து வந்தனராம்.

இது குறித்து அப்பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் கூறியதாவது ‘சென்ற ஆண்டு சி‌சி‌டி‌வி காமிரா உபயோகப் படுத்தினோம். இந்த வருடம் முதுகலை மாணவர்கள் தேர்வில் AL கருவிகள் உபயோக படுத்த உள்ளோம்’.

தேர்வு அறையில் இரு மாணவர்கள் பேசிக்கொண்டாலோ அல்லது கண்காணிப்பாளர் விடைகளை சொல்லிக்கொடுத்தாலோ உடனடியாக இந்த சாப்ட்வேர் எங்களுக்கு தகவல் தந்துவிடும்.

இதன் மூலம் எங்களால் தேர்வு முறைகேடுகளை தவிர்க்க இயலும்.

3

Maanaadu: தீம் பார்க்கில் மாநாடு படப்பிடிப்பு!

0
Maanaadu Song Shoot

Maanaadu: மாநாடு படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாநாடு படத்தின் பாடல் காட்சிக்காக படக்குழுவினர் சென்னை தீம் பார்க்கில் பிரமாண்ட அளவில் செட் அமைத்து படமாக்கி வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் நடிகர் சிம்புவும் ஒருவர். இவருக்கு என்று தனி ரசிகர்களே உண்டு. கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ள சிம்பு, காதல் அழிவதில்லை படத்தின் மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து தம், அலை, கோவில், குத்து, மன்மதன், தொட்டி ஜெயா, சரவணா, வல்லவன், காளை, சிலம்பாட்டம், விண்ணைத்தாண்டி வருவாயா, வானம், ஒஸ்தி, போடா போடி, வாலு, இது நம்ம ஆளு, அச்சம் என்பது மடமையடா, அன்பானவன் அசராதவன் அடங்காதவன், செக்க சிவந்த வானம், காற்றின் மொழி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் வந்தா ராஜாவாதான் வருவேன். இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு. படத்தின் டைடிலுக்கு ஏற்பவே திரும்ப வந்தார்.

தற்போது மஹா என்ற படத்திலும், மாநாடு என்ற படத்திலும் பிஸியாக நடித்து வருகிறார். அண்மையில், மாநாடு படத்திற்கு பூஜை போடப்பட்டு படப்பிடிப்பு தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நடக்குமா, நடக்காதா என்று அனைவருமே ஆவலாக காத்திருந்த படம்தான் மாநாடு. இந்தப் படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.  இப்படத்தின் போஸ்டர் கடந்தாண்டே வெளியிடப்பட்டது.

ஆனால், அதன் பிறகு சிம்பு மற்றொரு படப்பிடிப்பில் பிஸியானதால், மாநாடு படப்பிடிப்பு தடைபட்டது. இதையடுத்து, இந்தப் படத்தில், சிம்புவிற்குப் பதிலாக மற்றொரு நடிகர் நடிப்பார் என்று தகவல் வந்தது.

ஆனால், மாநாடு படப்பிடிப்பு நடக்கவே நடக்காது என்று கூறியவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலும் இன்று மாநாடு படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.

இதில், வெங்கட் பிரபு, சிம்பு, தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, கல்யாணி ப்ரியதர்ஷன், இயக்குநர் பாரதிராஜா, பிரேம்ஜி அமரன், நடிகர் மனோஜ் ஆகியோர் பலர் கலந்து கொண்டனர்.

இதனால், சிம்பு ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். அதோடு, வந்தா ராஜாவாதான் வருவேன் படத்தின் போது அதிகளவில் தனது உடல் எடையை கூட்டியிருந்த சிம்பு, இந்தப் படத்திற்காக தனது எடையை வெகுவாக குறைத்து சும்மா கெத்தா வந்திருக்கிறார்.

இப்படத்தில் அப்துல் காலிக் என்ற இஸ்லாமிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசையமைக்கிறார். தற்போது சென்னையில், தீம் பார்க்கில் மாநாடு படப்பிடிப்பு நடந்து வருகிறது.

அதுவும் பாடல் காட்சி என்று கூறப்படுகிறது. பாடல் காட்சிக்காக தீம் பார்க்கில் பிரமாண்ட அளவில் செட் அமைக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்தப் புகைப்பட்த்தில் சிம்பு சிரித்தபடி, பாடல் காட்சிக்கான காஸ்டியூமில் இருந்தவாறு கையில் டீ கப் வைத்திருக்கிறார். இவருக்கு அருகில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3