Home Blog Page 246

Alexander Graham Bell Birthday; வரலாற்றில் இன்று மார்ச் 02

0
Alexander Graham Bell Birthday
Alexander Graham Bell

Alexander Graham Bell Birthday; வரலாற்றில் இன்று மார்ச் 02, Alexander Graham Bell History, கிரகாம்பேல் கண்டுபிடிப்புகள். today what special day in world – india – tamil.

தொலைபேசி கண்டுபிடிப்பில் தனக்கென்று ஒரு பெயரை நிலைநாட்டி சென்ற ஒரு உன்னத மனிதர் தான் அலெக்சாண்டர் கிரகாம்பெல் பிறந்த தினம் (Alexander Graham Bell Birthday) வரலாற்றில் இன்று.

Alexander Graham Bell History

1847ஆம் ஆண்டு மார்ச் 3ஆம் தேதி ஸ்காட்லாந்தில் இருக்கும் எடின்பர்க் மாகாணத்தில் பிறந்தார். இவரின் பெற்றோருக்கு இரண்டாவது குழந்தை ஆகும்.

இவருக்கு இரு சகோதரர்கள் இருவருமே காசநோயால் இறந்துவிட்டனர். சிறுவயதிலே தனக்கென்று ஒரு தனித்திறமை இருப்பதை உணர்ந்தார் பெல்.

இவருடைய அம்மாவும் காது கேளாதவராக இருந்தது இவருக்கு வாழ்வில் ஒரு அதிர்ஷ்டமாக அமைந்தது. இறுதியில் இவர் காது கேளாதொருக்கு என ஒரு தனி அறக்கட்டளை ஆரம்பித்தார்.

நண்பனுடன் தானிய ஆலையில் இருக்கும் பொழுது இயந்திரங்கள் மெதுவாக இயங்குவதை கண்ட பெல் வீட்டிற்கு சென்று மிகவும் வேகமாக இயங்கும் இயந்திரத்தை உருவாக்கினார்.

Alexander Graham Bell History
Alexander Graham Bell History

கிரகாம்பேல் கண்டுபிடிப்புகள்

இவரின் தொலைபேசி கண்டுபிடிப்பும் பெல் டெலிகாம் கம்பெனி தொடங்கியதும் உலகம் முழுவதும் புகழ்பெற காரணமாக அமைந்தது.

காது மற்றும் வாய் பேச முடியாத இவர் தன்னுடைய குடும்பத்தின் உதவுயுடன் தொலைபேசி கண்டுபிடிப்பை நிறைவு செய்தார்.

இவர் தாமஸ் ஆல்வா எடிசன் கூடவும் சேர்ந்து வேலை செய்துள்ளார். தொலை பேசி போக இவர் பறக்கும் இயந்திரங்கள், விரைப்படகு என மொத்தம் 18 காப்புரிமை (Patent) வைத்துள்ளார்.

வரலாற்றில் இன்று March 03. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

நிர்பயா குற்றவாளிகள்: தூக்கிலிட முடியாது – நீதிமன்றம்

0
நிர்பயா குற்றவாளிகள் தூக்குதண்டனை

நிர்பயா குற்றவாளிகள்: நிர்பயா வழக்கில் தூக்குதண்டனை வழங்கப்பட்ட குற்றவாளிகளை தூக்கிலிடமுடியாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சட்டத்தை பயன்படுத்தி தப்பிப்பு

எந்த வழக்கிலும் இல்லாத அளவிற்கு நிர்பயா பாலியல் குற்றவாளிகள் சட்டத்தின் சலுகைகளைப் பயன்படுத்தி தப்பித்துக்கொண்டே உள்ளனர்.

நான்கு பேரையும் ஒரே நேரத்தில் தூக்கிலிட வேண்டும் என்ற ஒரு உத்தரவை நீதிமன்றத்தில் பெற்றுவிட்டனர்.

இதன்பிறகு ஒருவர் பின் ஒருவராக ஜனாதிபதிக்கு கருணை மனு அளிப்பது, உடல்நலக்குறைவு எனக் காரணம் சொல்வதுமாக இருந்து வருகின்றனர்.

எல்லாம் முடிந்து மார்ச் 2-ம் தேதி நேற்று இவர்களை தூக்கிடவேண்டும் என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் நால்வரில் ஒருவரான பவன் குப்தாவின் கருணை மனுவால் தள்ளிப்போய் விட்டது.

கருணை மனு மீது ஜனாதிபதி முடிவு எடுக்கப்பட்ட பின்னர் மறுதேதி அறிவிக்கப்படும் என நீதிமன்றம் கூறியுள்ளது.

குற்றவாளிகள் உந்துகோல்

பாலியல் குற்றம் செய்தவர்கள் சட்டத்தின் ஓட்டையைப் பயன்படுத்தி தூக்கிலிருந்து தப்பமுடியும் என இந்த வழக்கு உதாரணமாக அமைந்துவிட்டது.

நிர்பயா குற்றவாளிகளைப் போன்று கூட்டு பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் கருணை மனுவை காரணம் காட்டி தப்ப முடியும் என மற்றவர்களுக்கும் இது உந்துகோலாக அமையும்.

3

Master Shooting Wrap: இனி வசந்த காலம்: சாந்தனு டுவீட்!

1
Master Shooting Wrapped சாந்தனு டுவீட்

Master Shooting Wrap: மாஸ்டர் படப்பிடிப்பு முடிவு பெற்றுள்ளது. படக்குழுவினருடன் செல்ஃபி எடுத்து இனி வரும் காலம் வசந்த காலம் என்று சாந்தனு டுவீட் செய்துள்ளார்.

Master Shooting Wrap

விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் மாஸ்டர் படத்தை இயக்கி வருகிறார்.

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, சாந்தனு, ஆண்ட்ரியா, நாசர், ஸ்ரீமன், ரமேஷ் திலக், சுனில் ரெட்டி, ரம்யா சுப்பிரமணியன், பிரேம், கௌரி கிஷான், பிரிகிதா ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

129 நாட்கள் மாஸ்டர் படப்பிடிப்பு

வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி மாஸ்டர் படம் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு நேற்றுடன் நிறைவு பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 129 நாட்கள் இடைவேளையே இல்லாமல் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.

சாந்தனு டுவீட்

இதையடுத்து, படக்குழுவினர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இது குறித்து நடிகர் சாந்தனு கூறுகையில், இந்த அழகான தருணத்திற்காக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி.

இந்த வாய்ப்பு கொடுத்த விஜய் அண்ணா, சேவியர் பிரிட்டோ சார், லலித்குமார் சார், ஜெகதீஷ் டார்லிங் ஆகியோருக்கும் நன்றி.

இனி வரும் காலம் வசந்த காலம். விரைவில் வருகிறோம் மக்களே என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விஜய் சேதுபதி முத்தம்

மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு பெறுவதற்கு முன்னதாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, விஜய்க்கு கன்னத்தில் முத்தமிட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலானது. இது விஜய் சேதுபதி கொடுத்த 1,35,263 ஆவது முத்தம் என்று கூறப்படுகிறது.

கல்லூரி மாணவியா?

மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராகவும், மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாகவும் நடித்து வருவதாக செய்திகள் பரவி வருகிறது.

அண்மையில் கூட மாளவிகா மோகனன் கல்லூரிக்கு வருவது போன்ற புகைப்படம் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது.

குட்டி ஸ்டோரி

சமீபத்தில் இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது.

எங்கு பார்த்தாலும் இந்த பாடல் தான் கேட்டுக்கொண்டிருக்கிறது. விஜய் வீட்டில் நடந்த வருமான வரித்துறையினர் சோதனையைத் தொடர்ந்து குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியானது. இந்தப் பாடல் விஜய்க்கும் பொருந்தும் என்று கூறப்படுகிறது.

2ஆவது சிங்கிள் டிராக்

இதற்கிடையில், குட்டி ஸ்டோரி சிங்கிள் டிராக்கை தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் டிராக் விரைவில் வெளிவரும் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அண்மையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அப்படியே நெருப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதைக்கேட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்துள்ளனர்.

விஜய் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

வரும் மார்ச் முதல் வாரத்தில் அதுவும் 5 ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று விஜய்யும் தனது 65 ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.

மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

மீண்டும் கொரோனா; இந்தியாவில் வெறியாட்டம் தொடருமா?

0
மீண்டும் கொரோனா corona virus

மீண்டும் கொரோனா வைரஸ் (corona virus) இந்தியாவிற்குள் நுழைந்தது. மூன்று பேரை பாதித்துள்ளது. இந்தியாவிலும் கொரானா வைரஸின் வெறியாட்டம் தொடருமா?

கேராளாவில் கொரோனா

சில மதங்களுக்கு முன்பு கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

சில நாட்களிலேயே கொரோனா வைரஸ் தொடரில் இருந்து அவர்கள் பூரண குணமடைந்துவிட்டதாக பின்னர் தகவல்கள் வெளியானது.

மீண்டும் கொரோனா

இத்தாலியில் இருந்து டெல்லி வந்த பயணி ஒருவருக்கும், ராஜஸ்தான் வந்த இன்னொருவருக்கும், துபாயில் இருந்து தெலுங்கான வந்த பயணி ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு உள்ளது.

இந்திய அரசு கொரோனாவை இந்தியாவிற்குள் நுழையவிடாமல் தடுக்க விழிப்புடன் செயல்பட்டாலும் கோரோனா சத்தம் இல்லாமல் இந்தியாவிற்குள் வந்துவிட்டது.

பொதுமக்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் அலட்சியமாக இருக்காமல் கொரோனா தொற்று அறிகுறிகள் இருப்பது போன்று உணர்ந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.

(corona virus) கொரோனா வைரஸ் அறிகுறிகள் என்ன? எப்படி அதை தடுப்பது? இந்த செய்தியைப் படிக்க கிளிக் செய்யவும்

3

சென்னை வந்தது சிங்கம்; ரசிகர்கள் கொண்டாட்டம்

0
சென்னை வந்தது சிங்கம் மகேந்திர சிங் தோனி

சென்னை வந்தது சிங்கம்; ரசிகர்கள் கொண்டாட்டம். மகேந்திர சிங் தோனி சென்னை வந்த விமான நிலைய வீடியோவை டிவிட்டரில் வெளியிட்டு உள்ளனர்.

சென்னை வந்தது சிங்கம்

13-வது ஐபிஎல் போட்டி வருகிற மார்ச் 29-ம் தேதி தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி நேற்று மார்ச் 2-ஆம் தேதி பயிற்சிக்காக சென்னை வந்தடைந்தார்.

பைக்கில் பின்தொடர்ந்த ரசிகர்கள்

இவர் வருவதை அறிந்த ரசிகர்கள் சென்னை விமான நிலையத்தில் பயங்கர வரவேற்பு அளித்தனர். தோனி தங்கும் ஹோட்டல் வரை ரசிகர்கள் பைக்கில் ‘தோனி, தோனி’ என்று கத்தியவாறு பின்தொடர்ந்து சென்றனர்.

2019-ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை போட்டிக்கு பிறகு இந்த ஐபிஎல்லில் 8 மாதங்கள் கழித்து தோனி களம் இறங்க உள்ளார்.

இவருடன் சுரேஷ் ரெய்னாவும் இன்று பயிற்சியில் ஈடுபட சென்னை வந்தடைந்தார். தோனி விமான நிலையத்தில் இருந்து வந்த சில காட்சிகளை சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் 0.59 நொடிகள் ஓடக்கூடிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இதை அதிகமாக பகிர்ந்து வருகிறார்கள். என்ன இருந்தாலும் நம்ம தல தோனி பேட்டிங்கை தொலைக்காட்சியில் நேரடியாக ஆடி பார்த்து ரொம்ப நாளாச்சு.

தடைகள் தாண்டி சாம்பியன்

இந்த ஐபிஎல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு விருந்தாக இருக்கும். 2 ஆண்டுகள் தடை வாங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, மீண்டு வந்து 2018-ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் ஐதராபாத்தை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியில் இறுதி ஆட்டத்தில் மும்பை அணியிடம் கடைசி பந்தில் ஒரு ரன்னில் தோற்றுப்போனது சென்னை அணி.

அகில இந்திய ரசிகர் பட்டாளம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு தமிழகத்தில் மட்டும் இல்லை, இந்தியா முழுவதும் அதிக ரசிகர் கொண்ட அணியாக விளங்க காரணம் தல தோனி.

தோனி மஞ்சள் நிற டி-சார்ட் போட்ட போதும், எல்லோ (yellow) ஆர்மி ரசிகர்கள் ஆர்ப்பரிக்க தொடங்கி விடுவார்கள்

சில ஆண்டுகளாகவே தோனியின் பேட்டிங்கில் முன்புபோல் ஆக்ரோஷம் இல்லை என பலர் விமர்சித்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்த ஐபிஎல் அமையும் என்பது சந்தேகமே இல்லை.

தோனி சென்னையில் சில நாட்கள் மட்டும் பயிற்சி மேற்கொள்வார். 2020-ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் முதல் போட்டியே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மும்பை இந்தியன்ஸ் அணி மார்ச் 29-ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகிறது.

முதல் போட்டியே பரம எதிரியான மும்பை உடன் மோதுவதால் ரசிகர்களுக்கு போட்டி விருந்தாக அமையும். நம்ம தல தோனிக்கு விசில் போடு

3

இன்றைய ராசி பலன்கள் – 03/03/2020 – horoscope tamil

0
இன்றைய ராசி பலன்கள் - 03/03/2020 ஜோதிடம் தமிழ்

இன்றைய ராசி பலன்கள் – 03/03/2020 – horoscope tamil. Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன். ஜோதிடம் தமிழ்.

Daily Horoscope Astrology Tamil Today

மேஷம்

பதட்டமான சூழ்நிலை உருவாகும். கணவன் மனைவி இடையே ஈகோ பிரச்சனை உண்டாக நேரிடும். பணியில் கவனம் தேவை. தேவையற்ற விவாதங்களை தவிர்க்கவும்.

வீண் செலவுகள் உண்டாகலாம். மன அமைதி குறையும். தியானம் செய்ய வேண்டும். அங்காரகனுக்கு விளக்கு ஏற்றி வர நன்மை கிடைக்கும்.

ரிஷபம்

எதிர்மறையான எண்ணங்கள் உருவாக நேரிடும். அதை மாற்றி நேர்மறையான எண்ணங்களை உருவாக்க வேண்டும்.

வேலையில் நுணுக்கமாக இருப்பீர்கள். உங்கள் துணையுடன் ஏற்படும் பூசல்களை சமாளிக்க வேண்டி இருக்கும்.

உணர்ச்சி வசப்படுதலை தவிர்க்கவும். அரோக்கியத்தில் கவனம் தேவை. துர்கைக்கு விளக்கேற்றி வர நற்பலன்கள் பெறலாம்.

மிதுனம்

இன்று ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக இருக்கும். மனதை அமைதியாகவும் சமநிலையுடனும் வைக்க வேண்டிய நாள்.

உங்கள் துணை அவர்களின் உணர்வை திணிப்பர். அது சமாளிக்கும் மனநிலை வேண்டும்.

அலட்சியமான போக்கு வேண்டாம். பணம் இழக்க நேரிடும். குழந்தைகள் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

முருகனுக்கு நெய் தீபம் ஏற்றி வர நற்பலன் கிடைக்கும்.

கடகம்

உங்களுக்கு இந்த நாள் வெற்றிகரமாக அமையும். மிகவும் உற்சாகமாக இருப்பீர்கள். கொடுக்கப்பட்ட பணிகளை விரைந்து முடிப்பதற்கு ஏதுவான சூழல் உண்டாகும்.

கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். பண வரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியம் சிறந்து விளங்கும். அங்காரக பகாவனை வழிபட்டால் கூடுதல் பலன்களை தரும்.

சிம்மம்

சற்று அழுத்தமான சூழ்நிலை உண்டாகும். சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நாள். தன்னம்பிக்கை வளர்த்து கொள்ளுங்கள். பணியில் கவனம் தேவை.

கணவன் மனைவி ஒற்றுமை குறையும். வாக்குவாதம் தவிர்க்கவும். குடும்ப செலவுகள் அதிகரிக்கும். காலில் பிரச்சனைகள் வர வாய்ப்புண்டு.

முருகப்பெருமானை விளக்கேற்றி வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

கன்னி

சற்று கவலையான நாளாக இருக்கும். அன்றாட பணிகளை செய்வதிலும் சிக்கலான சூழல் உண்டாகும்.

பாதுகாப்பின்மையை உணர்வீர்கள். கணவன் மனைவியிடையே உள்ள ஒற்றுமையால் மன அமைதி உண்டாகும்.

சேமிப்பு அவசியம். மன அழுத்தம் உண்டாகும். உங்கள் துணையுடன் கோயில் சென்று வாருங்கள். காளி தேவியை வழிபடுங்கள் கவலைகள் குறையும்.

துலாம்

இன்று அமைதி மட்டுமே உங்களை நல்வழிபடுத்தும். நண்பர்களுடன் வீண் வாக்குவாதம் வேண்டாம். குறைந்த நேரத்தில் தங்கள் பணிகளை முடித்து நற்பேரு பெற இயலும்.

கணவன் மனைவி இடையே நல்ல சுமுகமான நிலை உண்டாகும். பணவரவு நன்றாக இருக்கும். ஆரோக்கியத்தில் சிறிதௌ கவனம் தேவை.

மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட நல்லதே நடக்கும்.

விருச்சிகம்

இன்று வெற்றிகரமான நாளாக இருக்கும். மகிழ்ச்சி வந்து சேரும். தைரியம் மேம்படும். பணியில் நல்ல மாற்றங்கள் மற்றும் பாராட்டு கிடைக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். திருப்திகரமான நாளாக இருக்கும். சேமிப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். விநாயகரை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

தனுசு

சில முக்கியமான காரியங்கள் துவங்க நல்ல நாளாக இருக்கும். தொட்டதெல்லாம் துலங்கும்.

பணியில் கூடுதல் வரவு இருக்கும். திட்டமிடல் அவசியம். துணையிடம் நேர்மையான போக்கு அவசியம்.

பணவரவு நன்றாகவும் சில அதிர்ஷ்டமான விஷயங்கள் நடக்கும். ஆன்மீக பயணம் ஏற்படலாம். ஆரோக்கியம் குறைவில்லை. அம்பிகையை வழிபட கூடுதல் பலன் கிடைக்கும்.

மகரம்

அறிவு பூர்வமான விஷயங்கள் தங்களின் தினத்தை வளமாக்கும். பணிகள் சில கடுமையான நிலை உண்டாகலாம்.

மேலதிகாரிகளிடம் பாராட்டு பெறுவீர்கள். கணவன் மனைவி காதல் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். முதலீடுகள் தவிர்க்கவும்.

பல், செரிமான பிரச்சனை வரலாம். துர்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மை கிடைக்கும்.

கும்பம்

நல்ல பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். சதகமான நாளாக அமையும். துணையுடன் மகிழ்ச்சி நிலவும். சரியான முடிவுகள் கிடைக்கும். பிரச்சனைகள் முடிவுக்கு வரும்.

நிதி நிலை திருப்தியாக இருக்கும். ஆரோக்கியம் குறைவின்றி இருக்கும். மொத்ததில் பொன்னாளாக இருக்கும். சிவன் கோவில் சென்று தீபம் ஏற்றி வழிபட கூடுதல் பலன் உண்டு.

மீனம்

முன்னேற்ற பலன்கள் கிடைக்கும் . வண்டி வாகனம் வாங்க வாய்ப்புண்டு. வேலை சுமை குறையும். கவனச் சிதறல்களை தவிர்க்கவும். நட்புறவு மேம்படும்.

பணியில் பாராட்டு குவியும். கணவன் மனைவி அன்பு மேம்படும். உபரிபணம் கையில் இருக்கும். சேமிப்பு அவசியம்.

உபாதைகள் ஏதும் இருக்காது. சுகமான நாளாக இருக்கும். துர்கையை வழிபட கூடுதல் பலன் பெறலாம்.

இன்றைய ராசி பலன்கள் – 03/03/2020. Daily Horoscope Astrology Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஜோதிடம் தமிழ் படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம்.

3

சங்கர் மஹாதேவன் பிறந்தநாள்

0

மார்ச் 3: பின்னணி பாடகர் சங்கர் மகாதேவன் 52 வது பிறந்தநாள் இன்று. 1967 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3-ஆம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் பிறந்தவர் தான் சங்கர் மகாதேவன்.

இதுவரை இசையமைப்பாளராக 65 படம் மற்றும் ஆல்பத்திற்கு இசை அமைத்துள்ளார். இதில் ஆளவந்தான் மற்றும் விஸ்வரூபம் போன்ற கமல் படங்களுக்கும் இசையமைத்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சங்கர மகாதேவன் தனது குரலால் ரசிகர்களை ஈர்க்க கூடிய வல்லமை மிக்கவர். சங்கர்மகாதேவன், அர்ஜுன் நடித்த ரிதம் படத்தில் ‘தனியே தன்னந்தனியே’ என்ற பாடலில் அருமையாக நடனம் ஆடிக்கொண்டே பாடியவர் தான் சங்கர் மகாதேவன்.

தேசிய விருது வென்றவர்

கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் படத்தில் இடம்பெற்ற அஜித் மற்றும் தபு பங்குபெறும் ‘என்ன சொல்லப் போகிறாய்‘ பாடலைப் பாடிய சங்கர் மகாதேவன், இந்த பாட்டிற்காக தேசிய விருதையும் வென்றார்.

2011-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பாடலை இசையமைத்து பாடியவர் தான் சங்கர் மகாதேவன்.

இவரின் சில தமிழ் பாடல்கள்

இவரது காந்தக் குரலில் சங்கமம் படத்தில் ‘வராத நதிக்கரை ஓரம்’, முதல்வன் படத்தில் ‘உப்புக்கருவாடு, ஊற வச்ச சோறு’, பூவெல்லாம் உன் வாசம் படத்தில் ‘தாலாட்டும் காற்றே வா’, சமுத்திரம் படத்தில் ‘அழகான சின்ன தேவதை’, அள்ளித்தந்த வானம் படத்தில் ‘வாடி வாடி நாட்டுக்கட்ட’, ஜெமினி படத்தில் ‘கட்ட கட்ட நாட்டு கட்ட’ போன்ற பல ஹிட்ஸ் பாடல்களை பாடியுள்ளார்.

6 மொழியில் பாடியவர்

இவர் கன்னடம், மலையாளம், தமிழ், தெலுங்கு, மராத்தி, ஹிந்தி போன்ற மொழிகளில் பல பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்மஶ்ரீ விருது

2019 ஆம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது சங்கர் மகாதேவனுக்கு வழங்கப்பட்டது. நம் நாட்டின் குடியரசு தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் அவர்கள் பத்மஸ்ரீ விருதை சங்கர் மகாதேவனுக்கு வழங்கினார்.

தற்போது தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் பாட்டுப் போட்டியில் ஜட்ஜாக இருந்து வருகிறார்.

3

டெல்லியின் இளம் படை முதல் முறையாக கோப்பையை வெல்லுமா?

0
டெல்லியின் இளம் படை

2008 ஆம் ஆண்டு தொடங்கிய ஐபிஎல் போட்டி இதுவரை 12 சீசன்கள் நடைபெற்றுள்ளது  இதுவரை டெல்லி அணி மற்றும் பெங்களூர் அணி கோப்பையை வென்றதில்லை,  வலுவான அணி என்பதில் சந்தேகமே இல்லை.

ஜாம்பவான்கள் விளையாடிய அணி

டெல்லி கேபிடல்ஸ் அணி இளம் வீரர்களை கொண்ட அபாயகரமான அணி, 2008ம் ஆண்டு சேவாக், கவுதம் கம்பீர் போன்ற வீரர்கள் இந்த அணியில் விளையாடினார் ஏபி டிவில்லியர்ஸ், ஜெயவர்த்தனே, தில்சன், ஜாகிர் கான், கிளன் மேக்ஸ்வெல், யுவராஜ்சிங், ஜேபி டுமினி, ராஸ் டெய்லர், கெவின் பீட்டர்சன் போன்ற பல ஜாம்பவான்கள் விளையாடியும் அந்த அணியால் கோப்பையை வெல்ல முடியவில்லை.

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு ரசிகர்கள் இருக்கிறார்களோ இல்லையோ, ஆனால் ஹேடர்ஸ் என்று யாரும் கிடையாது என்பதே இந்த அணியின் சிறப்பு.

கவுதம் கம்பீர் கேப்டன்

2018 ஆம் ஆண்டு இந்த அணியின் கேப்டனாக கவுதம் கம்பீர் மீண்டும் நியமிக்கப்பட்டார்.

2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு கவுதம் கம்பீர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக கோப்பையை வென்று கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2018 ஆம் ஆண்டு டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பேற்று விளையாடிய கவுதம் கம்பீர், தொடர்ந்து தோல்விகளை சந்தித்தார் தனது கேப்டன் பொறுப்பை ஸ்ரேயாஸ் அய்யரிடம் கொடுத்துவிட்டு ஆடும் லெவனில்  விளையாடாமல் அமர்ந்தார்.

அந்த வருடம் டெல்லி அணி லீக் போட்டியிலேயே வெளியேறியது.

2018 ஆம் ஆண்டு அந்த அணியின் பயிற்சியாளராக ரிக்கி பாண்டிங் நியமிக்கப்பட்டார். அணியில் பல மாற்றங்கள் நடந்தது இளம் வீரர்களுக்கு ரிக்கி பாண்டிங் முக்கியத்துவம் கொடுத்தார்.

இளம்படை டெல்லி கேபிடல்ஸ்

ரிஷப் பந்த், ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்வி ஷா, விஜய் சங்கர், அபிஷேக் வர்மா போன்ற வருங்கால இந்திய அணியே இந்த அணியில் தான் உள்ளனர்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் வருகிற மார்ச் மாதம் 29-ம் தேதி தொடங்கவுள்ள நிலையில் டெல்லி அணி தங்களை தயார் படுத்தி வருகிறது

வரும் ஐபிஎல் இல் பல மாற்றங்களை செய்தது டெல்லி அணி

டெல்லி அணி வீரர்கள் விபரம்

பேட்ஸ்மேன்களாக ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் அய்யர், பிரித்திவி ஷா, அஜிங்கிய ரஹானே, ஜாசன் ராய், சிம்ரன் ஹெட்மையர் போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஆல்ரவுண்டர்களாக மார்க்கஸ் ஸ்டோனீஸ், அக்சர் படேல், கீமோ பால், கிறிஸ் வோக்ஸ் போன்ற வீரர்கள் உள்ளனர்.

அஸ்வின், ரகானே வருகை

கீப்பர் களாக அதிரடி ஆட்டக்காரர்கள் ரிஷப் பண்ட் மற்றும் அலெக்ஸ் கேரி இருக்கின்றார்கள்.

பந்துவீச்சிலும் இந்த அணி வலுவாகவே உள்ளது. ரவிச்சந்திரன் அஸ்வின், ரபாடா, அமித் மிஸ்ரா, இசாந்த் சர்மா, லிமிச்சேனே போன்ற வீரர்கள் உள்ளனர்.

ஸ்ரேயாஸ் அய்யர் சர்வதேச போட்டியில் முழு திறமையுடன் ஆடி வருகிறார், டெல்லி அணியின் கேப்டன் பொறுப்பை சிறப்பாகவே செய்து வருகிறார்.

இவருக்கு உறுதுணையாக முன்னாள் ஹைதராபாத் அணி கேப்டன் ஷிகர் தவான் போன்ற வீரர்கள் உள்ளனர்.
கடந்த வருடம் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இருந்த ரவிசந்திரன் அஸ்வின், இந்த வருடம் டெல்லி அணியில் இணைந்துள்ளார். அஜிங்கிய ரஹானேவும் ராஜஸ்தான் கேப்டனாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆக இந்த அணியில் மொத்தம் 4 கேப்டன்கள் விளையாட உள்ளனர்.
டெல்லி டேர்டெவில்ஸ் என்ற பெயரில் விளையாடிய இந்த அணி 2019 ஆம் ஆண்டிலிருந்து டெல்லி கேபிடல்ஸாக மாறியது.

பல இளம் படைங்களைக் கொண்ட  இந்த அணி, இந்த தடவை கட்டாயம் கோப்பையை வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் ஆடும் என்பதில் சிறிதும் சந்தேகமே இல்லை.

2008 ஆம் ஆண்டு சேவாக் இந்த அணியை மற்ற அணிகள் பயப்படும் அளவிற்கு உருவாக்கி வைத்திருந்தார்.  கடந்த ஐபிஎல் சீசன்களில் சென்னை அணி மற்ற அணிகளை விட டெல்லி அணியிடம் மட்டும்   போராடிய வெற்றி பெறும்.

2020ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் டெல்லி அணி தனது முதல் ஆட்டத்தை மார்ச் மாதம் 30 ஆம் தேதி  கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.

டெல்லி அணிக்கும், பெங்களூர் அணிக்கும் ஐபிஎல் கோப்பை இந்த வருடமாவது கிடைக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

3

டெஸ்ட் தரவரிசை: நியூஸிலாந்து 2வது இடத்திற்கு முன்னேற்றம்

0

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை நியூசிலாந்து அணி 2-0 என்ற கணக்கில் ஒயிட் வாஷ் செய்து வெற்றி பெற்றது. நியூசிலாந்து டெஸ்ட் தரவரிசை பட்டியலில் முன்னேறியுள்ளது.

நியூசிலாந்து தரவரிசை முன்னேற்றம்

இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி தரவரிசையில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வியை சந்திக்காமல் விளையாடி வந்த நிலையில், வெளிநாட்டு மண்ணில் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோற்று தன்னுடைய பலவீனத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது.

அணி தரவரிசையில் இந்தியா தொடர்ந்து 116 புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்துக்கு முன்னேறி உள்ள நியூஸிலாந்து 110 புள்ளிகளும், 108 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும், 105 புள்ளிகள் இங்கிலாந்து, 98 புள்ளிகள் தென்ஆப்பிரிக்கா அணி 4 மற்றும் 5-வது இடங்களில் இருக்கிறது.

முதலிடத்தை இழந்த விராட்

விராட் கோலி இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் சொதப்பியதால் அவரும் தன்னுடைய முதல் இடத்தை பறி கொடுக்க நேரிட்டது.

பேட்டிங் தரவரிசையில் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்திலும், 906 புள்ளிகளுடன் வீராட் கோலி 2-வது இடத்திலும், 853 புள்ளிகளுடன் கேன் வில்லியம்சனும், நான்கு மற்றும் ஐந்தாவது இடத்தில் மார்க்கஸ் லபுசேனே மற்றும் பாபர் அசாம் உள்ளனர்.

டெஸ்ட் சாம்பியன்ஷிபில் நியூசிலாந்து

இந்தியாவுக்கு எதிரான தொடரை வென்றதன் மூலம் நியூசிலாந்து அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் 180 புள்ளிகள் எடுத்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்தியாவுக்கு எதிராக தொடர்ந்து 2 டெஸ்டுகளிலும் வென்றதன் மூலம் அந்த அணிக்கு 120 புள்ளிகள் கூடுதலாகக் கிடைத்தன.

இந்த புள்ளி பட்டியலில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் 360 புள்ளிகளுடன் இருக்கிறது. இரண்டாவது இடத்தில் 296 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணிக்கு அடுத்த டெஸ்ட்

இந்திய அணி இனி ஆறு மாதத்திற்கு பிறகு தான் தனது அடுத்த டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவுடன் ஆஸ்திரேலிய மண்ணில் விளையாட உள்ளது.

நான்கு போட்டிகள் கொண்ட ஆஸ்திரேலியா தொடரில் ஒரு போட்டி பகல் இரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.

3

Nerkonda Paarvai: டுவிட்டரில் டிரெண்டாகும் நேர்கொண்ட பார்வை!

0
Nerkonda Paarvai

Nerkonda Paarvai: நேர்கொண்ட பார்வை டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. அஜித் வழக்கறிஞராக நடித்த படம் தான் நேர்கொண்ட பார்வை.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் வக்கீல்சாப் என்ற பெயரில் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது.

ஒரே நாளில் அஜித்திற்கு இப்படியெல்லாம் பாராட்டும், புகழும் கிடைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கமாட்டார்கள். இன்று காலை அஜித்தின் மகன் ஆத்விக் தனது 6ஆவது பிறந்தநாளை கொண்டாடினார்.

அஜித்தைப் போன்று ஜோதிகாவும் வழக்கறிஞராக நடிக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தின் தெலுங்கு ரீமேக்கான வக்கீல்சாப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் அஜித். இவரது தன்னம்பிக்கை, தைரியம், விடா முயற்சிக்கு என்று ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

நேர்கொண்ட பார்வை – Nerkonda Paarvai

இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கா இப்படம் உருவாக்கப்பட்டது.

இயக்குநர் ஹெச் வினோத் இப்படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தார். நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார்.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தைராங் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்திய இப்படத்திற்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, தற்போது மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் காம்பினேஷனில் வலிமை படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

போலீஸ் கதையை மையப்படுத்திய இப்படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்படுகிறது. தெலுங்கில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் கதாபாத்திரத்தில் பவன் கல்யாண் நடிக்கிறார்.

வக்கீல்சாப் ஃபர்ஸ்ட் லுக்

இது பவன் கல்யாணின் 26ஆவது படம். இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு வக்கீல்சாப் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இதனை முன்னிட்டு அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது. இன்று அஜித்தின் மகன் ஆத்விக் தனது 6ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு தல ரசிகர்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆத்விக்கின் 6ஆவது பிறந்தநாளை முன்னிட்டு மதுரை ரசிகரக்ள் சுவற்றில் சித்திரமாக ஆத்விக்கின் உருவ படத்தை வரைந்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். மேலும், பல ரசிகர்கள் அன்னதானம் வழங்கினர். இன்னும் சில ரசிகர்கள் மனிதநேயத்துடன் பலருக்கும் உதவி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜோதிகாவிற்கு தல ரசிகர்கள் வாழ்த்து

இது ஒருபுறம் இருக்க, நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தைப் போன்று ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தில் ஜோதிகாவும் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இதன் காரணமாக தல ரசிகர்கள் ஜோதிகாவிற்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

3