Home Blog Page 247

Jyothika: அஜித்தை பின்பற்றும் ஜோதிகா!

0
Jyothika's Ponmagal Vandhal

Jyothika: ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் வழக்கறிஞராக நடித்திருந்தார். இதே போன்று தற்போது பொன்மகள் வந்தால் படத்தில் அவரைப் போன்று நடிகை ஜோதிகாவும் வழக்கறிஞராக நடிக்கிறார்.

நேர்கொண்ட பார்வை

இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் நேர்கொண்ட பார்வை. முழுக்க முழுக்க பெண்களை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டிருந்தது.

இப்படத்தில் அஜித் வழக்கறிஞராக கம்பீரமான தோற்றத்தில் நடித்திருந்தார். பாலிவுட்டில் அமிதாப் பச்சன் நடிப்பில் வந்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இப்படம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ரங்கராஜ் பாண்டே, டெல்லி கணேஷ், ஆண்ட்ரியா தைராங் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் வலிமை படத்தில் பிஸியாக நடித்து வருகிறார்.

ஜோதிகா – Jyothika

இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தைப் போன்று நடிகை ஜோதிகாவும் பொன்மகள் வந்தாள் படத்தில் கம்பீரமான தோற்றத்தில் வழக்கறிஞராக நடித்து வருகிறார்.

பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக்

இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்க்கும் பொழுது, இந்தப் படம் முற்றிலும் பெண்களை மையப்படுத்திய படமாகவும், குறிப்பாக சமூகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய படமாகவும் இருக்கும் என்று தெரிகிறது.

தமிழ் சினிமா வழக்கறிஞர்கள்

இதற்கு முன்னதாக நடிகை அம்பிகா, லட்சுமி, அனுஷ்கா, நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், அஜித், விஜய், கமல் ஹாசன்,ரகுவரன், மன்சூர் அலிகான், கார்த்திக், சரத்குமார், ராதிகா ஆகியோர் பலர் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஜோதிகாவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கறிஞராக நடித்து வரும் ஜோதிகாவிற்கு தல ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பொன்மகள் வந்தாள் படத்தை இயக்குநர் ஜேஜே ப்ரட்ரிக் இயக்கி வருகிறார்.

இப்படத்தில் ஜோதிகாவுடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.

த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.

3

Ponmagal Vandhal First Look: வழக்கறிஞராக மிரட்டும் ஜோதிகா

1
Ponmagal Vandhal First Look ஜோதிகா பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக்

Ponmagal Vandhal First Look: பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்தில் ஜோதிகா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக்

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து சிறிது காலம் ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார்.

இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது.

தற்போது ஜேஜே ப்ரட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில், இவருடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார்.

த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது. இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.

Ponmagal Vandhal First Look

இன்று மாலை 5 மணிக்கு பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்ன் வெளியாகியுள்ளது.

இந்தப் போஸ்டரில் ஜோதிகா வழக்கறிஞராக இருப்பது போன்று காட்டப்பட்டுள்ளது. அவரது பின்புறம் ஏகப்பட்ட பத்திரிக்கைகளில் வெளிவந்துள்ள செய்திகள் இடம்பெற்றிருந்தது.

இதை வைத்து பார்க்கும் போது இந்தப் படம் முற்றிலும் பெண்களை மையப்படுத்திய படமாகவும், குறிப்பாக சமூகத்தில் குழந்தைகள், பெண்களுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை மையப்படுத்திய படமாக இருக்கும் என்று தெரிகிறது.

இதற்கு முன்னதாக நடிகை அம்பிகா, லட்சுமி, அனுஷ்கா, நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், ஜெய் சங்கர், அஜித், விஜய், கமல் ஹாசன் ஆகியோர் பலர் வழக்கறிஞர்களாக நடித்துள்ளனர்.

அந்த வரிசையில் தற்போது நடிகை ஜோதிகாவும் களமிறங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகும் ஜோதிகா – சூர்யா இருவரது கூட்டணியில் படங்கள் வெளியாகி வருகிறது.

ஆனால், என்ன ஜோடியாக இல்லை. ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும், ஜாக்பாட் ஆகிய படங்களை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரித்துள்ளது. பொன்மகள் வந்தாள் படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம்தான் தயாரிக்கிறது.

சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா39 என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அருவா என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் முதல் முறையாக இமான் இணைந்துள்ளார். படத்திற்கு இமான்தான் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் ஒரேகட்டமாக படப்பிடிப்பு முடித்து வரும் தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3

Master மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு: செல்ஃபி எடுத்துக்கொண்ட படக்குழு!

0

Master மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு தற்போது வெற்றிகரமாக நிறைவு பெற்றதைத் தொடர்ந்து படக்குழுவினர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். மாஸ்டர் படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார் என்று தெரிகிறது.

பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடித்து வரும் படம் மாஸ்டர். கார்த்தியின் கைதி படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.

விஜய்யின் உறவினரான சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் இந்தப் படத்தின் குட்டி ஸ்டோரி லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது. மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக ரஜினியின் பேட்ட படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்திருந்தார். இதே போன்று, இந்தப் படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, மாஸ்டர் படத்திலும் விஜய்க்கு வில்லனாகவும் நடித்துள்ளார்.

மேலும், சாந்தனு, ஆண்ட்ரியா, நாசர், ஸ்ரீமன், ரமேஷ் திலக், சுனில் ரெட்டி, ரம்யா சுப்பிரமணியன் ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திர பிரபலங்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

விஜய் கல்லூரி பேராசிரியராகவும், மாளவிகா மோகனன் கல்லூரி மாணவியாகவும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு இந்தப்படம் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், ஏற்கனவே இப்படம் இன்னும் 48 மணிநேரத்தில் முடிக்கப்படும் என்று லோகேஷ் கனகராஜ் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதன்படி, தற்போது மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு முடிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, படக்குழுவினர் ஒன்றாக இணைந்து புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளனர். இதில், லோகேஷ் கனகராஜ், ஸ்ரீமன், பிரேம், கௌரி கிஷான், ஸ்டண்ட் சில்வா மாஸ்டர், ஸ்ரீநாத், சாந்தனு ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மாஸ்டர் படப்பிடிப்பு முடிக்கப்பட்டதைத் தொடர்ந்து படத்தின் போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், குட்டி ஸ்டோரி சிங்கிள் டிராக்கை தொடர்ந்து, இரண்டாவது சிங்கிள் டிராக் விரைவில் வெளிவரும் என்று அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில், ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட லோகேஷ் கனகராஜ் படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி வரும் காட்சிகள் அப்படியே நெருப்பாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். இதைக்கேட்ட விஜய் ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்து ஆரவாரம் செய்துள்ளனர். வி

ஜய் படத்தைத் தொடர்ந்து இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்க இருக்கிறார். வரும் மார்ச் முதல் வாரத்தில் அதுவும் 5 ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதே போன்று விஜய்யும் தனது 65 ஆவது படத்தில் சுதா கொங்கராவுடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் வெளியான பிறகு இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

Bro Agathiyan; வைரலாகும் பாஸ்டர் அகத்தியன் வீடியோ

0
Bro Agathiyan

Bro Agathiyan; வைரலாகும் பாஸ்டர் அகத்தியன் வீடியோ

15 வருடங்களுக்கு முன்னாள் பாஸ்டர் அகத்தியர் மதங்களை வைத்து காமெடி செய்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

என்னதான் மதங்கள் மொழிகளைப் பற்றி பேசினாலும் நாம் அனைவரும் மதம், மொழி, மற்றும் நாடு கடந்து மனிதர்கள் என்பதை ஒரு நாள் உணர்வோம் என்று அழுத்தி ஆழமாக கூறுகிறார்.

நம்முடைய கலாச்சாரம், மொழிகளை பற்றி அதிகம் பேசினாலும் அதில் நாம் பின்பற்றும் வரம்பு மீறிய செயல்களையும் நமக்கு சுற்றி காட்டுகிறார்.

குறிப்பாக கிறிஸ்தவ மதத்தில் பின்பற்றப்படும் முட்டாள்தனமான செயல்களை கிண்டல் செய்து ஸ்டண்ட் அப் காமெடி எல்லாம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார்.

அவர் பேசும் தருணங்களில் அவருக்கு எதிர்ப்பு அதிகமாக இருந்தாலும் தற்பொழுது மக்களின் எண்ணங்களும் வளர்ச்சியும் மாறியதால் பெரும்பாலானோர் அவருடைய கருத்துகளை பாராட்டியுள்ளனர்.

3

குடியுரிமை திருத்த சட்டம்  2019 – பாதிப்பு யாருக்கு?

0
குடியுரிமை திருத்த சட்டம்  2019

குடியுரிமை திருத்த சட்டம்  2019: இந்தியாவின் சமீத்திய அடையாளமாக போராட்டங்கள் மாறுவதற்கு காரணமான குடியுரிமை திருத்த சட்டம் குறித்த உண்மை தகவல்களைதெரிந்து கொள்வோம்.

குடியுரிமை திருத்த சட்டம்   கடந்த 2019 டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற பட்டது. குடியுரிமை சட்டம் 1955 இல் மேற்கொண்ட  திருத்த சட்டம்

இந்திய குடியுரிமை:

இந்த புதிய திருத்தத்தின் படி அண்டைநாடுகளில் இருந்து பல்வேறு காரணங்களால் 2014  டிசம்பர் 31 க்கு  முன்  வரை இந்திய எல்லைக்குள்   நுழைந்த இந்து, சீக்கியம், புத்தம், ஜெயின், பார்சி மற்றும் கிறிஸ்துவம் ஆகிய சிறுபான்மை மதத்தை சேர்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும்.

இஸ்லாமிய நாடுகள்:

பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து  வரும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களுக்கு புதிய சட்டத்தின் படி இந்திய குடியுரிமை வழங்கப்பட மாட்டாது .

இந்த புதிய சட்டதிருத்தமானது இதற்கு முன்னர் குடியுரிமை சட்டத்தில் செய்யபட்ட  மாற்றங்களில் இருந்து  வேறுபடுவதற்கு காரணம் வரலாற்றில் முதல் முறையாக மதத்தை ஒரு காரணியாக கொண்டிருப்பது எனலாம் .

இந்த புதிய குடியுரிமை சட்டம் கடந்த ஜனவரி மாதம் 10  தேதியில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளதாக அரசு அறிவித்துள்ளது

பாரதிய ஜனதா கட்சி தேர்தல் வாக்குறுதி:

முன்னதாக குறிப்பிட்ட இந்த திருத்தமானது கடந்த ஆண்டு நடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது ஆளும்  மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் தேர்தல் வாக்குறுதியாக மக்களுக்கு வழங்க பட்டிருந்தது என்பது மிக முக்கிய காரணமாகும் .

இந்த புதிய சட்டத்திருத்தம் காரணமாக புதியதாக இயல்பு குடியுரிமை பெற தேவையான காலம் 11 ஆண்டுகளில் இருந்து ஐந்து ஆண்டுகளாக குறைந்துள்ளது

இதன் காரணமாக தற்போதைய உளவுப்பிரிவின் தகவல்படி சுமார் 30000  பேர் உடனடியாக குடியுரிமை பெற தகுதி பெறுகின்றனர்

குடியுரிமை திருத்த சட்டம் 2016 மசோதா:

பாரதிய ஜனதா கட்சியால் முதன்முதலில் கடந்த 2016  ஆண்டு குடியுரிமை திருத்த சட்டம் 2016 மசோதா அறிமுகப்படுத்தப்பட்டது .

இந்த மசோதா பாகிஸ்தான் , பங்களாதேஷ் , ஆப்கானிஸ்தான் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து வரும் முஸ்லீம் அல்லாதவர்களுக்கு குடியுரிமை வழங்க வகை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது .

மேற்சொன்ன மசோதா கீழ்வையில் நிறைவேற்றப்பட்டு மேலவைக்கு அனுப்பப்பட்டது , இருப்பினும் அப்போது இருந்த அரசியல் சூழ்நிலைகளால் ராஜ்ய சபையில் கிடப்பில் போடப்பட்டது .

இதனையடுத்துதான் கடந்த 2019 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் தேர்தல் வாக்குறுதியாக அறிவிக்கப்பட்டு தற்போது  நிறைவேற்ற பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

பொது சிவில் சட்டம் :

பாஜகவின் தேர்தல் வாக்குறுதிகளான காஷ்மீர்  பிரிவு 370 நீக்கம் , ராமர்கோயில் கட்டுதல் , குடியுரிமை சட்டம் , விவசாய வருமானம் இரட்டிப்பு , பொது சிவில் சட்டம் போன்ற முக்கிய ஐந்து திட்டங்களில் நான்கு அம்சங்கள் நிறைவடைந்துவிட்ட நிலையில் அடுத்ததாக பொது சிவில் சட்டம் கொண்டு வரக்கூடும் என எதிர்பார்க்க படுகிறது

இந்த சட்டத்தில் மேலும் மியான்மர் நாட்டின் ரொஹின்யா அகதிகள் , திபெத்திய அகதிகள் , இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கப்படுவது குறித்து எந்த அம்சமும் இல்லை .

ஈழத்தமிழ் அகதிகள்:

குறிப்பாக இலங்கை இந்துக்களான ஈழத்தமிழ் அகதிகள் கடந்த 1980  முதல் 1990  வரையான காலத்தில் இந்தியாவில் தங்க அரசு அனுமதி வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது .

அதே போன்று திபெத்திய புத்த மத அகதிகளுக்கு கடந்த 1950  முதல் 1960  வரையான காலத்தில் இந்தியாவில் தங்க அனுமதி வழங்கப்பட்டது

தேசிய குடிமக்கள் பதிவேடு:

குடியுரிமை சட்டமானது தேசிய குடிமக்கள் பதிவேடு உடன் தொடர்புடையதாக கருதப்படுகிறது,இருப்பினும் தேசிய குடிமக்கள் பதிவேடானது அமல்படுத்தப்படும் இந்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது .

குடியுரிமை சட்டத்தால் இந்தியாவை சேர்ந்த எந்த மதத்தினருக்கும் பாதிப்பு ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது

3

நிலத்தடி நீர் வரைமுறை; உச்ச்நீதிமன்றம் கூறியது என்ன?

0
நிலத்தடி நீர் வரைமுறை

நிலத்தடி நீர் வரைமுறை; உச்ச்நீதிமன்றம் கூறியது என்ன?

முறைப்படி அனுமதி வாங்காத தனியார் கேன் குடிநீர் ஆலைகள் அனைத்தும் சீல் வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தண்ணி தட்டுப்பாடு காரணமாக ஒரு 20லிட்டர் கேன் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. மதி வாங்காத தனியார் கேன் குடிநீர் ஆலைகள் அனைத்தும் சீல் வைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சென்னையில் தண்ணி தட்டுப்பாடு காரணமாக ஒரு 20லிட்டர் கேன் விலை ரூ.60 வரை விற்பனை செய்யப்படுகிறது. கோடைக்காலத்தில் சென்னை அல்லோலப் படப்போகிறது.

நிலத்தடி நீர் எடுக்கும் வரைமுறைகள்

அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி, பாதி அபாயகரமான பகுதி, சராசரியான பகுதி என 4 விதமாக நிலத்தடி நீா் எடுப்பதற்கு குறுவட்டம் பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீா் எடுக்க முடியாத பகுதியாகும். அந்த இடங்களில் தண்ணீர் எடுக்க தடை.

இதில் அதிகம் சுரண்டப்படும் பகுதி, அபாயகரமான பகுதி ஆகிய 2 இடங்களிலும் தண்ணீா் எடுக்க முடியாத பகுதியாகும். அந்தப் பகுதிகளில் குடிநீர் உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி உண்டு.

3

டெல்லி கலவரம்; இந்தியாவிற்கு அவமானம்

0
டெல்லி கலவரம்
அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ்

டெல்லி கலவரம்; இந்தியாவிற்கு அவமானம், அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ், டெல்லி கலவரம் காரணம் யார்?

அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த  வேட்பாளர்  பெரின் சந்தர் டெல்லி வன்முறை குறித்து மிகவும் கடுமையாக விமர்சம் செய்துள்ளார்.

அரசுமுறை பயணமாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் இந்தியாவுக்கு கடந்த 24  தேதி குஜராத் தலைநகர் அகமதாபாத் நகருக்கு வருகை புரிந்தார்.

அவர் இந்தியாவுக்கு வந்த சில மணி நேரங்களில் வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை சட்ட எதிர்ப்பு பிரிவினருக்கும் ஆதரவு பிரிவினருக்கும் இடையே நடந்த வன்முறை ஏற்பட்டு பின் பெரும் கலவரமாக மாறியுள்ளது.

இந்த கலவரம் காரணமாக இதுவரை 46  பேர் கொல்லப்பட்டனர் மேலும் 300  நபர்கள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

இருப்பினும் இதுவரை பதற்றம் தனியாததால் பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கி இயல்பு வாழ்க்கை பெரும் சிரமமாக உள்ளதாக அங்கிருந்து வெளிவரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் 

இந்த வன்முறை தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் இந்த பிரச்சினைக்கு தீர்வு இந்தியாவிடம் உள்ளதாகவும் தெரிவித்திருந்தார்

இதனிடையே வரும் நவம்பரில் நடைபெற உள்ள அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிட இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த  வேட்பாளர்  பெரின் சந்தர் டெல்லி வன்முறை குறித்து மிகவும் கடுமையாக விமர்சம் செய்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இந்தியாவில் தலைமை பண்புகளில் ஏற்பட்ட தோல்வியின் வெளிப்பாடு டெல்லி வன்முறை ஆகும் என்று  கூறியுள்ளார். இதனால் இந்தியாவுக்கு தலைகுனிவு ஏற்படும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்

டெல்லி கலவரம் காரணம் யார்?

உலகின் முதல் நிலைநாட்டின் அதிபர் வருகையின் போது உள்நாட்டு சுயநல அரசியல் வாதிகளின்  வெறுப்புணர்வால்  திட்டமிட்டு நடத்தப்பட்ட சதித்திட்டம் என்றும் அரசியல் நோக்கர்கள்  கருதுகின்றனர்.

இதனிடையே கலவரம் குறித்த நிலவரம் தொடர்பாக விவாதிக்க டெல்லி சட்டமன்றம் நேற்று கூடியது  இதில்  பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வன்முறை என்பது முட்டாள்களின் செயல் என்று கலவரக்காரர்களை கண்டித்துள்ளார்.

கலவரம் தொடர்பான வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் கெஜ்ரிவால் நேரில் சென்று பார்வையிட உத்தரவிட்ட நிலையில் நேற்று இரவு பாதிக்கப்பட்ட பகுதி மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்

மேலும் வன்முறை உருவாக்கும் வகையில் பேசியதாக பாஜக தலைவர் மீது வழக்கு தொடர டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி அதிரடி உத்தரவிட்டுள்ளார்

இதன் காரணமாக நீதிபதி இரவோடு இரவாக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் என்று கூறப்படுகிறது

டெல்லி கலவரம் குறித்த நிலவரத்தை ஐநா பொதுச்செயலாளர் கூர்ந்து கவனித்து வருவதாக அவரின் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்

மேலும் வன்முறையில் உயிழந்த தலைமை காவலர் குடும்பத்திற்கு 1 கோடி நிதி உதவி அளித்துள்ளார் , குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க பரிசீலிப்பதாக டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்

எனினும் டெல்லியில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்க பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ்

டெல்லி வன்முறை தொடர்பாக இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்காவிலும் பல அரசியல் தலைவர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகிறது .

ஜனநாயக கட்சியை சேர்ந்த அதிபர் வேட்பாளர் பெர்னி சாண்டர்ஸ் டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறைகள் குறித்து மனித உரிமையை மதிக்காத தலைமைகளால் உருவானதாக தெரிவித்துள்ளார்.

இன்னொரு வேட்பாளரான செனேட்டர் மார்க் வார்னர்  மதப்பாகுபாட்டை தவிர்க்க வேண்டும் எனவும் கருத்து கூறி வருகின்றனர்.

இதனால் டெல்லி வன்முறை  உள்நாட்டிலும் மட்டுமல்லாமல் உலகளவில் பேசு பொருளாகி உள்ளது இந்தியாவிற்கு தலைகுனிவாக அமைத்துள்ளது

 

3

கரோனா தாக்கம்; ஈரானில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவர முயற்சி

0
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர்

கரோனா தாக்கம்; ஈரானில் இருக்கும் இந்தியர்களை அழைத்துவர முயற்சி

ஈரானில் கரோனா வைரஸ் பரவி வருவதால் ஈரானில் இருக்கும் இந்தியர்களை மீட்டு இந்தியாவிற்கு அழைத்துவர இந்தியா வரப்போவதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் கூறியுள்ளார்.

ஈரானைச் சுற்றியுள்ள தீவுகளில் 300 தமிழக மீனவர்கள் மற்றும் மொத்தம் 500க்கும் மேற்பட்ட இந்தியா மீனர்களை காக்க வேண்டும் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.

சீனா, கொரியாவை தொடர்ந்து ஈரானிலும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல இடங்களில் விமான போக்கு வரத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மார்ச் 1ஆம் தேதி ஜெயசங்கர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சரகத்தில் இது குறித்து பேசி வருவதாக பதிவிட்டுள்ளார்.

3

Meera Mithun: பாத்ரூம் வீடியோ வெளியிட்ட மீரா மிதுன்!

1

Meera Mithun மீரா மிதுன் கவர்ச்சியான புகைப்படங்களையும், வீடியோக்களையும் வழக்கமாக கொண்டுள்ளார். தற்போது கூட பாத் டிரெஸில் பாத்ரூமில் இருந்து கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை நெட்டிசனர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மாடலாக தனது வாழ்க்கையை தொடங்கியவர் மீரா மிதுன். மாடலாக இருந்து கொண்டு சினிமாவில் அறிமுகமானார்.

இயக்குநர் ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெற்றி, எம்.எஸ்.பாஸ்கர், அபர்ணா பாலமுரளி ஆகியோர் பலர் நடித்த 8 தோட்டாக்கள் படத்தில் மீரா மிதுனுக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மது என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, ரம்யா கிருஷ்ணன், கீர்த்தி சுரேஷ், கலையரசன் ஆகியோர் பலர் நடித்திருந்தனர்.

இந்தப் படத்தில் இனியனாக வரும் கலையரசனுக்கு மனைவி கதாபாத்திரத்தில் மீரா மிதுன் நடித்திருந்தார். இதே போன்று இயக்குநர் சந்துரு கேஆர் இயக்கத்தில் வந்த போதை ஏறி புத்தி மாறி என்ற படத்திலும் நடித்துள்ளார்.

இந்த நிலையில், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் தமிழ் நிகழ்ச்சியின் 3 ஆவது சீசனில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியின் மூலம் பலரது எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பெற்றார்.

அதோடு, பிரபலமும் ஆனார். இந்நிகழ்ச்சியின் போது ஒரு போட்டியாளராக கலந்து கொண்ட சேரன் தன்னை தவறான முறையில் தொடுவதாக அவர் மீது குற்றம்சாட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய மீரா மிதுனுக்கு போதுமான சினிமா வாய்ப்பு அமையவில்லை. இதனால், தொடர்ந்து கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார்.

அதோடு, தன்னைப் பார்த்துதான் மற்ற நடிகைகளும் போட்டோஷூட் நடத்துவதாக பரபரப்பாக குற்றம் சாட்டினார். இந்த நிலையில், தான் உடலில் ஒட்டு துணி கூட இல்லாமல் ஒரு நிர்வாணமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தில் உடல் முழுவதும் கருப்பு நிற மேக்கப்பில் இருப்பது போன்றும், உடலில் ஒரு துணி கூட இல்லாத நிலையிலும் கழுத்து, காது, கை மற்றும் விரலில் மட்டும் நகைகள் அணிந்தவாறு இருக்கிறார்.

பிராண்டுகள், வார இதழ்கள் மற்றும் பத்திரிக்கைகள் என்று ஒவ்வொரு போட்டோஷூட்டும், பிரபலமான சூப்பர் மாடல்களால் தான் செய்யப்படுகிறது.

மாடலே இல்லாதவற்கள் ஏன் போட்டோஷூட் செய்து இந்திய பேஷன் சீனை குறைக்கிறார்கள் என்று எனக்கு புரியவில்லை என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை வைத்து மீரா மிதுனை நெட்டிசன்கள் கடுமையாக சாடினர். அதற்குள், மற்றொரு வீடியோ ஒன்றை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஆம், குளியலறைக்குள் இருந்து கொண்டு பாத் டிரெஸில் நின்றபடி போஸ் கொடுத்துள்ளார். அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதற்கு நீண்ட நேர குளியலுக்கு பிறகுதான் மகிழ்ச்சி கிடைக்கிறது என்றும், மற்றொன்றில் தவறான அர்த்தம் இருப்பது போன்றும் கேப்ஷன் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த வீடியோதான் சமூக வலைதளங்களில் அதிகளவில் வைரலாகி வருகிறது.

3

Padmaja Actress; இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

0
Padmaja Actress

Padmaja Actress; இளம் நடிகை தூக்கிட்டு தற்கொலை!

Padmaja பத்மஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பத்மஜாவிற்கு ஒரு மகன் இருக்கிறான்.

சென்னை திருவொற்றியூரில் இளம் நடிகை ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூரில் உள்ள காலடிப்பேட்டை பகுதியில் வசித்து வந்தவர் துணை நடிகை பத்மஜா. இவர், சினிமாவிலும், விளம்பரங்களிலும் துணை நடிகையாக நடித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், நேற்று வீட்டின் கதவு நீண்டநேரமாக பூட்டியே இருந்துள்ளது. இதனால், சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பத்மஜா மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதன் காரணமாக, திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் பத்மஜாவின் செல்போன் மூலமாக தங்களது முதல்கட்ட விசாரணையை தொடங்கினர். இதில், பத்மஜா தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக, பெங்களூருவில் உள்ள தனது சகோதரிக்கு வாட்ஸ் அப்பில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், அழுதுகொண்டே தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக தெரிவித்துள்ளார். பத்மஜாவின் சொந்த ஊர் ஆந்திராவின் நெல்லூர். இவர், கடந்த 3 மாதங்களுக்கு முன்புதான் சென்னை வந்து திருவொற்றியூரில் உள்ள ஒரு வீட்டில் தங்கியுள்ளார்.

பத்மஜா (Padmaja Actress) கல்யாண வாழ்க்கை

பத்மஜாவும், பவன் என்பவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2 வயதில் ஒரு மகன் இருக்கிறான். இந்த நிலையில், பத்மஜாவிற்கும், பவனுக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக பவன் வீட்டை விட்டு ஆந்திரா சென்றுள்ளார் என்றும், குழந்தையை பத்மஜாவின் உறவினர்கள் தூக்கி சென்றுவிட்டனர் என்றும் கூறப்படுகிறது.

இதனால், தனிமையில் வாழ்ந்து வந்த பத்மஜா ஒரு கட்டத்தில் உறவுக்கார வாலிபரை வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இதனால், வீட்டு உரிமையாளர் பத்மஜாவை கண்டித்து வீட்டை உடனடியாக காலி செய்யுமாறு சத்தம் போட்டதாக கூறப்படுகிறது.

மனமுடைந்த பத்மஜா வீட்டை விட்டு இல்லாமல், உலகத்தை விட்டு சென்றுவிடலாம் என்று முடிவு செய்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதற்கிடையில், பத்மஜாவுடன் தங்கியிருந்த வாலிபரை காணவில்லை என்று அக்கம் பக்கத்தினர் கூறியுள்ளனர். பத்மஜா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து அவரது கணவர் மற்றும் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அவர்களிடம் அடுத்தகட்ட விசாரணை மேற்கொண்ட பிறகு பத்மஜாவின் தற்கொலைக்கான காரணம் குறித்து தெரியவரும் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், துணை நடிகை தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

3