Home Blog Page 248

Aadvik Ajith Birthday: தல ரசிகர்கள் வாழ்த்து!

0
Aadvik Ajith Birthday

Aadvik Ajith Birthday: தல ரசிகர்கள் வாழ்த்து! குட்டி தல ஆத்விக்

ஆத்விக் இன்று தனது 6 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். ஆத்விக் பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை டுவிட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அஜித் – ஷாலினி தம்பதியினரின் அன்புமகன் ஆத்விக் இன்று தனது 6ஆவது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், தல ரசிகர்கள் டுவிட்டரில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தல அஜித்துக்கு ரசிகர்கள் இல்லாத நாடே எங்கும் இல்லை. அந்தளவிற்கு ரசிகர்களை கொண்டுள்ளார். இவர், நடிகை ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.

கடந்த, 2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 ஆம் தேதி அஜித் – ஷாலினி திருமணம் நடந்தது. இதையடுத்து, கடந்த 2008 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி அனோஷ்கா பிறந்தார். 2015 ஆம் ஆண்டு மார்ச் 2 ஆம் தேதி ஆத்விக் பிறந்துள்ளார்.

இவர் பிறந்து 5 ஆண்டுகள் ஆன நிலையில், 5 வயதை கடந்து இன்று தனது 6 ஆவது வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

குட்டி தல ஆத்விக்

அஜித்துக்கு எப்படி ரசிகர்கள் இருக்கிறார்களோ அதே போன்று அவரது செல்லப்பிள்ளை ஆத்விக்கிற்கும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள்.

ஆத்விக்கின் 6ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சினிமா பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை ஏராளமானோர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

குட்டி தல ஆத்விக்

தனது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று இரவு ஆத்விக் பிறந்தநாள் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாளில் ஏராளமான குழந்தைகள் கலந்து கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதில், அஜித் யாரையோ எதிர்பார்த்து காத்திருப்பது போன்றும், ஷாலினி மட்டும் ஆத்விக் அருகில் நின்று கொண்டிருப்பது போன்று, ஆத்விக் தனது அக்கா அனோஷ்காவை அழைப்பது போன்றும் தெரிகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆத்விக்கின் பிறந்தநாளை முன்னிட்டு, தல ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி அசத்தியுள்ளனர். அதோடு, இயற்கையை வளப்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் நட்டும் வருகின்றனர்.

மேலும், விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் மனித நேயத்துடன் வயதான முதியோர்களுக்கு தங்களால் இயன்ற உதவிகளையும் செய்துள்ளனர்.

தொடர்ந்து, திருவள்ளூர் மாவட்ட ரசிகர்கள் டான் பாஸ்கோ அன்பு இல்லத்தில் அன்னதானத்திற்கும் ஏற்பாடு செய்துள்ளனர்.

அதோடு, தல எப்படி தமிழ் சினிமாவில் யாரும் தொட முடியாத உச்சத்தில் தன் கொடியைப் நாட்டினாரோ அதுபோல ஆத்விக் விளையாட்டில் உலக அளவில் தன் புகழை நிலை நாட்ட போகிறார் என்று குறிப்பிட்டுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஹெச் வினோத் மற்றும் போனி கபூர் தயாரிப்பில் உருவாகி வரும் வலிமை படத்தில் நடித்து வருகிறார்.

அண்மையில், படப்பிடிப்பின் போது பைக் ஓட்டும் காட்சியின் போது தவறி விழுந்த அஜித்திற்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார். வலிமை படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

3

பெண் கவிஞர் மீராபாய் மறைந்த தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 02

0
பெண் கவிஞர் மீராபாய்
Mirabai (1498–1546/1547)

பெண் கவிஞர் மீராபாய் மறைந்த தினம்; வரலாற்றில் இன்று மார்ச் 02.  today what special day in world – india – tamil.

தன்னுடைய எழுத்து திறமையால் இந்தியா முழுவதும் பிரபலமான பெண் கவிஞர் மீராபாய் நம்மை விட்டு மறைந்த தினம் வரலாற்றில் இன்று மார்ச் 02.

மீராபாய் தன் எழுத்து பயணத்தில் 1300 பக்திப் பாடல்கள் வரை எழுதியுள்ளார். இவர் ஸ்ரீ குரு ரவிதாசின் சீடர் என்பது குறிப்பிடதக்கது. கடவுள் கிருஷ்ணா மீது மிகுந்த பக்தி கொண்டவர்.

மீராபாய் வாழ்க்கை வரலாறு (Mirabai Life History)

1498ஆம் ஆண்டு ராஜஸ்தானில் நகவுர் மாவட்டத்தில் பிறந்தார். தன்னுடைய 6 வயதில் இருந்தே கடவுள் கிருஷ்ணா மீது அன்பு கொண்டு முழுநேரமும் அவரைப்பற்றியே பேசி கொண்டு இருப்பாரம்.

தன்னுடைய 16 வயதினிலே சித்தோர் மன்னன் போஜ் ராஜை மணமுடித்தார். ஆழும் மன்னரின் மனைவி என்பதால் நாடு முழுவது மதிப்பும் மரியாதையும் கிட்டி பிரபலமானார்.

மக்களுடன் அதிகமாக கலந்து உரையாடி பாடல், நடனம் என அனைத்து தரப்பு மக்களுடனும் தன்னுடைய நேரத்தை செலவிட்டு வந்தார்.

Mirabai Life History

திருமணமாகி இரண்டு வருடத்திலேயே தன் தந்தை, கணவர் இருவரையும் இழந்தார். தன் மாமனாரும் போரில் பெரிய காயம் பெற்று நடைபிணமாக கிடக்க நேரிட்டது.

இதனால் இவரை உடன் கட்டை ஏறும்படி அனைவரும் கூறியதால் அதை இருமுறை முயற்சி செய்தும் அவர் உயிர் பிழைத்து விட்டதாக அவருடைய காவியங்களில் உள்ளன.

தன்னுடைய 30 வயதில் கோட்டையை விட்டு வெளியேறி யாத்திரை செல்ல ஆரம்பித்தார். தன்னையே மறந்து கிருஷ்ணா பகவான் மீது அன்பு கொண்டு பாடல்களும் கவிதைகளும் எழுதி குவித்தார்.

இன்று வரை அவரின் பக்தி பாடல்கள் அனைவராலும் பாடப்படுகிறது. மீரா கிருஷ்ணன் மீது கொண்ட காதலால் துவர்காவில் இருக்கும் கிருஷ்ணன் கோவிலில் மறைந்து விட்டதாக கூறப்படுகிறது.

மார்ச் மாதம் 2ஆம் நாள் 1568ஆம் இவர் இறந்ததாக கூறுகின்றனர். ஆனால் அதிகாரப்பூர்வ சான்று எதுவும் இல்லை.

அவர் இறந்து 150 வருடங்கள் கழித்தே அவருடைய படைப்புகள் நிறைய கண்டுபிடிக்கபட்டதாக கூறப்படுகிறது.

வரலாற்றில் இன்று March 02. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

INDvsNZ 2nd Test; 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூ சிலாந்து வெற்றி

0
INDvsNZ 2nd Test
india vs nz second test

INDvsNZ 2nd Test:  7 விக்கெட்  வித்தியாசத்தில் நியூ சிலாந்து வெற்றி

இந்தியா vs நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில்  இந்தியாவை நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து  இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

INDvsNZ 2nd Test 

நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

பிரித்தி ஷா, புஜாரா, ஹனுமன் விஹாரி மூவரும் அரைச்சதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்து விக்கெட் சரிவு

அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி முதல்நாள் இறுதியில் நிதானமாக ஆடினாலும் இரண்டாவது நாள் முதலே விக்கெட்டுகள் சரிவு தொடங்கியது. 177 ரன்கள் 8 விக்கெட்டை இழந்தது.

அடுத்து வந்த ஜேமிசன் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடினார். ஜேமிசன் துணையுடன் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

இரண்டாவது இன்னிங்ஸ் இந்தியா அணி

முதல் இன்னிங்ஸ் போலவே கட கடவென்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய இந்தியா 90 ரன்களில் 6 விக்கெட்டை இழந்து இரண்டாம் நாளை கடந்தது.

பின்னர் இன்று களமிறங்கிய இந்தியா 124 ரன்களுக்கு அல் அவுட் ஆனது.  அதிகபட்சம் புஜரா 24 ரன்கள், பந்து வீச்சில் போல்ட் 4 விக்கெட், சௌதீ 3 விக்கெட் எடுத்தனர்.

நியூ சிலாந்து இரண்டாம் இன்னிங்ஸ்

பின்னர் 132 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூ சிலாந்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடக்க வீரர்கள் இருவரும் அரை சதமடித்து அணிக்கு வெற்றியை தேடி தந்தனர்.

டாம் லாதம் , பிளேண்டால் இருவரும் அரைசதம் பந்து வீச்சில் பும்ரா இரண்டு விக்கெட் எடுத்தார்.

3

Rajinikanth: அன்பு, அமைதி, ஒற்றுமையே நாட்டின் பிரதான நோக்கம்: ரஜினிகாந்த்!

0

நாட்டில் அன்பு, அமைதி, ஒற்றுமையே பிரதான நோக்கம் என்றும், அமைதியை நிலைநாட்ட தனது தகுதிக்குட்பட்ட அனைத்தையுமே செய்யத் தயாராக இருப்பதாக  ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் உச்சநட்சத்திரமாக இருப்பவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் களமிறங்க தயாராக உள்ளார்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தனது ஆன்மீக அரசியல் குறித்து அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அதன்பிறகு அரசியல் குறித்து எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. இதனால், பலரும் பலவிதமாக விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று தனது இல்லத்தில் தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து பேசினார். இதையடுத்து, தனது டுவிட்டர் பக்கத்தில், இன்று தமிழ்நாடு ஜமா அத்துல் உலமா சபை நிர்வாகிகளை சந்தித்து, அவர்கள் தரப்பு ஆலோசனைகளைச் கேட்டறிந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எப்போதும் அன்பும், ஒற்றுமையும் அமைதியுமே ஒரு நாட்டின் பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்ற அவர்களது கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். நாட்டில் அமைதியை நிலைநாட்ட என் தகுதிக்குட்பட்ட அனைத்தையும் செய்ய எப்போதும் தயாராக இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினிகாந்த், தர்பார் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார். இப்படத்தில், ரஜினியுடன் இணைந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, பிரகாஷ் ராஜ், சதீர்ஷ், கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர். வரும் அக்டோபர் 22 ஆம் தேதி அண்ணாத்த படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 படம் அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதில், தலைவர்169 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கயிருப்பதாகவும், மார்ச் முதல் வாரத்தில் 5 ஆம்  தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருக்கிறது என்றும் அறிவிக்கப்பட்டது.

அதோடு, படத்தை கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் முடிந்த பிறகு ரஜினிகாந்த் தீவிரமாக அரசியலில் கால்பதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

Ponmagal Vandhal: பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ் லுக் போஸ்டர் இன்று வெளியீடு!

0

ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் பொன்மகள் வந்தாள் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜோதிகா தனது திருமணத்திற்கு பிறகு நடிப்பில் இருந்து ஒதுங்கி இருந்தார். அதன் பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் மீண்டும் சினிமாவில் கால்பதித்தார். இப்படத்திற்கு கிடைத்த அமோக வரவேற்பைத் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவரது நடிப்பில் ராட்சசி, ஜாக்பாட், தம்பி ஆகிய படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது. தற்போது ஜேஜே பெட்ரிக் இயக்கத்தில், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜோதிகா நடிப்பில் உருவாகி வரும் படம் பொன்மகள் வந்தாள்.

இப்படத்தில், இவருடன் இணைந்து கே பாக்யராஜ், ஆர் பார்த்திபன், பிரதாப் போத்தன் ஆகியோர் பலர் நடித்து வருகின்றனர். கோவிந்த் வசந்தா படத்திற்கு இசையமைக்கிறார். த்ரில்லர் கதையை மையப்படுத்தி உருவாகி வரும் இப்படம் விரைவில் திரைக்கு வரயிருக்கிறது.

இந்த நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணிக்கு பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என்று நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யாவின் அடுத்தபடம் குறித்த அறிவிப்பு வெளியானதும், ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் குறித்து அறிவிப்பு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்குப் பிறகும் ஜோதிகா – சூர்யா இருவருரது கூட்டணியில் படங்கள் வெளியாகி வருகிறது. ஆனால், என்ன ஜோடியாக இல்லை. ஜோதிகா நடித்த 36 வயதினிலே, மகளிர் மட்டும், ஜாக்பாட் ஆகிய படங்களை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம்தான் தயாரித்துள்ளது.

பொன்மகள் வந்தாள் படத்தையும் சூர்யாவின் 2டி நிறுவனம்தான் தயாரிக்கிறது. சூரரைப் போற்று படத்தைத் தொடர்ந்து சூர்யா மீண்டும் ஹரி இயக்கத்தில் சூர்யா39 (Suriya39) என்ற படத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கு அருவா (Aruvaa) என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இவர்களுடன் முதல் முறையாக இமான் இணைந்துள்ளார். படத்திற்கு இமான்தான் இசையமைக்கிறார். வரும் ஏப்ரல் மாதம் ஒரேகட்டமாக படப்பிடிப்பு முடித்து வரும் தீபாவளி பண்டிகைக்கு படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

3

திரௌபதி படமாக முழுமையான நிறைவு தந்ததா?

0
திரௌபதி படம் எப்படி உள்ளது

திரௌபதி படமாக முழுமையான நிறைவு தந்ததா? சாதரண ரசிகனாக இல்லாமல் ஒரு சினிமா கலைஞனாக திரௌபதி படம் எப்படி உள்ளது எனப்பார்க்கலாம்.

திரௌபதி படம் எப்படி உள்ளது

கடந்த வாரம் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியான படம் தான் திரௌபதி, படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆனதில் இருந்து படம் பற்றி சாதி ரீதியாக பல ஆதரவுகள் பல எதிர்ப்புகள் கிளம்பின.

ஒரு வழியாக படமும் வெளியானது, க்ரவ்டு ஃபண்ட் மூலம் தயாரித்து வெளியான முதல் திரைப்படம். மோகன் இயக்கத்தில் ரிச்சார்ட் ரிஷி மற்றும் ஷீலா ராஜ்குமார் நடித்திருக்கும் படத்தில் ஜுபின் இசை அமைத்திருக்கிறார்.

நடிப்பில் சொதப்பிய திரௌபதி குழு

குறைந்த பட்ஜெட் படமா இருந்தாலும் படத்தில் நடிகர்கள் பேசும் போது வசனங்களுடன் ஒட்டவில்லை. சில நடிகர்களிடம் இயக்குனர் நடிப்பு வாங்கவேயில்லை.

திரௌபதி கதாபாத்திரத்திற்கு முதல் பாதியில் கொடுத்த பில்டப்புகள் அளவிற்கு கதாப்பாத்திரம் அழுத்தம் இல்லாதது பின்னடைவு. நடிகை பேசும வசனங்கள் மனப்பாடம் செய்து ஒப்பிக்கும் அளவிற்கு இருந்தது.

அது மட்டுமா டாக்டர் கதாபாத்திரம், யூடியூப்பர் கதாபாத்திரம், நடிகையின் தங்கை, வில்லன்கள், இரண்டு போலீஸ் கதாபாத்திரம் (இன்னும் போலிஸாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை) இவர்கள் நடிப்பு குறும்படத்தில் வருவது போல இருந்தது.

நடிகை பேசும் போது, தியேட்டகளில் படம் பார்க்கும் போது இடைவேளையில் வரும் அரசு விளம்பரங்களில் வருவது போலவே இருந்தது.

ஐஸ்பக்கெட் சேலஞ்ச் போன்று மரம் நடும் சேலஞ்ச் தியேட்டகளில் பொறுமையை சோதித்தது.

வேண்டுமென்றே திணிக்கப்பட்ட கருத்துகள்

படத்தில் கருத்து சொல்வதை தவறாக சொல்லவில்லை, கருத்து கருத்தாக படம் எடுத்தால் கதையின் சுவாரஸ்யம் குறைகிறது. முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பும் குறைந்துவிடும்.

மாநகரம், தெகிடி, உறியடி, பிட்சா போன்ற படங்களும் குறைந்த செலவில் எடுக்கப்பட்டது தான். அதில் நடிகர்களிடம் இயக்குனர்கள் நன்றாக வேலையை வாங்கி இருப்பார்கள். நடிக்கவும் வைத்து இருப்பார்கள்.

கதை, நல்ல நடிப்பு, பாடல்கள் மூலமே ஒரு படத்தின் வெற்றிகள நிர்ணயம் செய்யப்படுகிறது. சர்ச்சைகளாளும், அரசியல்வாதிகளும், வசூல் ரீதியாகவும் படத்தின் வெற்றி நிர்ணயம் செய்வது நாடக கலை பின்னோக்கி செல்கிறது.

திரைப்படமாக தோற்ற திரௌபதி

படத்தில் அருமையான, அழுத்தமான கதை இருந்தும் திரைக்கதையில் கோட்டைவிட்டனர். படத்தின் இறுதி காட்சிகள் உட்காந்து பார்க்கும் அளவிற்கு இல்லை, ரொம்ப நீளமாக இழுத்தார்கள்.

ஃபளாஷ் பேக் சீனில் நடிகையின் தங்கை படதிற்க்கு சென்றுதான் இருப்பார், அதற்குள் அவரது தந்தை உயிர் விடுவதெல்லாம் நம்பும் படியாக இல்லை.

திரௌபதியாக நடிகை என்ன செய்தார்? அவரது கதாப்பத்திரம் ஒரு போன் மட்டுமே வைத்து எதையும் செய்துவிடலாமா?

மக்களின் விழிப்புணர்வு காணொளி போல இருந்தது. நடிகர் ரிச்சார்ட் நடிப்பில் பெரிதாக தாக்கம் ஏற்படுத்தவே இல்லை.

இவரும் அதிக இடங்களில் வசனங்கள் பேசும் போது பாடி லாங்குவேஜ் செட் ஆகவே இல்லை. வாய்ஸ் கூட நகர்ந்தது. இதையெல்லாம் சரி செய்திருக்கலாம்.

படத்தில் விறுவிறுப்பு என்று ஒன்றுமே இல்லை, அனைவரும் எதிரப்பார்த்த படம், சினிமா ரசிகர்களை கொஞ்சம் கூட பூர்த்தி செய்யவேயில்லை.

படத்தின் இயக்குனர் சில சமூக வலைதளத்தில் பேசும் போதுகூட தன் இயக்குனர் சிறப்பை, நடிகரின் நடிப்பை, படத்தின் திரைக்கதையோ பேசவில்லை அதில் பிரச்சினை மற்றும் எதிர்ப்பாளர்களை மட்டுமே சாடி வருகிறார்.

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை எடுத்த விதம் அருமையாக இருக்கும், இயக்குனராக மோகன் தன் வேலையை சிறப்பாக செய்திருப்பார்.

ஆனால் திரௌபதியில் கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்ததால் படமாக தியேட்டர்களில் பார்க்கும் அளவிற்கில்லை.

3

இன்றைய ராசிப்பலன்கள்: 02/03/2020 ராசிபலன் – horoscope tamil

0
இன்றைய ராசிப்பலன்கள் 02/03/2020 ராசிபலன் horoscope tamil

இன்றைய ராசிப்பலன்கள்: 02/03/2020 ராசிபலன் – horoscope tamil. தின ராசிபலன் செய்திகள். தமிழ் ஜோதிட கணிப்பு பலன்கன். tamil zodiac

மேஷம்

திறமையான திட்டமிடல் வேண்டும். உங்கள் சௌகரியங்களில் சிக்கல் ஏற்படலாம். தவறாமல் கோயிலிற்கு செல்வது அமைதி அளிக்கும்.

வேலை சுமை அதிகரிக்கும். பதட்டமான சூழ்நிலை உருவாகும். பணவரவில் சிக்கல்கள் ஏற்படும்.

தொண்டை சம்மந்தமான பிரச்சனைகள் ஏற்படும். குளிர்ந்த உணவை தவிர்க்கவும். சற்று கவனமாக இருக்க வேண்டிய நாள்.

சிவ தரிசனம் செய்து வர நன்மை கிடைக்கும்.

ரிஷபம்

பேச்சில் கவனம் தேவை. கவனகுறைவான பேச்சால் பிரச்சனைகள் உண்டாகலாம்.

குறித்த நேரத்தில் பணிகளை முடிக்கவும். கணவன் மனைவி இடையே பூசல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

தேவையற்ற செலவினை தவிர்க்கவும். முதுகு சம்மந்தமான வலிகள் ஏற்படலாம். தியனாம் செய்து மனதை அமைதி படுத்தி கொள்ளுங்கள். அம்பிகையை தரிசனம் செய்து வர நற்பலன்கள் பெறலாம்.

மிதுனம்

இன்றைய நாள் மகிழ்ச்சிகரமாண நாளாக அமையும். பணிகளில் திட்டமிட்டு செயல்பட்டால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கணவன் மனைவி இடையே சற்று கோபத்தை குறைத்து கொள்ள வேண்டும். பணப்புலக்கம் சற்று குறைய வாய்ப்புண்டு.

கண்களில் எரிச்சல் ஏற்படலாம். உடலை குளிர்விக்கும் உணவுகளை எடுத்து கொள்ளுங்கள். விநாயகருக்கு தேங்காய் எண்ணையில் விளக்கேற்றி வழிபட வெற்றிகள் கிடைக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு சாதகமான நாள். உங்கள் விருப்பங்கள் நிறைவேறும், பயணங்களால் நன்மைகள் உண்டாகும்.

மேலதிகாரிகள் உங்களை பாராட்டுவார்கள். கணவன் மனைவி இடையே இன்பமான பேச்சு வார்த்தை நிகழும்.

நிதி வளர்ச்சி அதிகரிக்கும். பணம் வரவேண்டிய இடத்திலிருந்து தாமதமின்றி வரும். ஆரோக்கியமான நாளாக அமையும். மன தைரியம் அதிகரிக்கும்.

சந்திர பகாவனை வழிபட்டால் கூடுதல் பலன்களை தரும்.

சிம்மம்

இன்று துடிப்பான நாளாக இருக்கும். மகிழ்ச்சி பெருகும் மன அழுத்தம் குறையும். உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கும். பணிச்சூழல் சாதகமாக இருக்கும். பாராட்டுகளை பெறுவீர்கள்.

வீட்டில் அமைதி நிலவும். பணம் தேவைக்கு அதிகமாகவே இருக்கும். சேமிப்பு அவசியம். உடல் அரோக்கியம் மேம்படும். மொத்ததில் தங்களுக்கு சாதகமான நாளாக அமையும்.

சிவ பெருமானை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

கன்னி

கவனமாக இருக்க வேண்டிய நாள். உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். முக்கியமான முடிவுகள் யோசித்து எடுக்கவும்.

பணியில் தவறுகள் நேரலாம் கவனம் தேவை. பணிசுமை அதிகரிக்கும். கணவன் மனைவியிடையே தேவையற்ற விவாதம் வேண்டாம். பணப்பற்றாகுறை இருக்கும்.

தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் கவலைகள் குறையும்.

துலாம்

சற்று மந்தமான சூழ்நிலை இருக்கும். இருப்பினும் பொறுமையான அணுகுமுறை தங்கள் பணியை மேம்படுத்தும்.

கேள்விகள் பல தோன்றும் நாளாக இருக்கும். சக ஊழியர்களால் பிரச்சனைகள் வரலாம். தவறான புரிதல் கணவன் மனைவியிடயே வரலாம். நிதி நிலை சற்று மந்தமாகவே இருக்கும்.

வியாபாரத்தில் கவனம் தேவை. கால்களில் வலி ஏற்படலாம். தியானம் அவசியம். அம்பிகையை விளக்கேற்றி வணங்குங்கள் நல்லதே நடக்கும்.

விருச்சிகம்

பல நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுதல் அவசியம். புதிய எண்ணங்கள் உண்டாகும். தகுதிகள் மேம்படும்.

தனித்திறமைகள் வெற்றியைத் தரும். உங்களின் கடின உழைப்பிற்கு கூடுதல் வருவாய் கிட்டும். கணவன் மனைவி இடையே வாக்கு வாதங்கள் வேண்டாம்.

ஆரோக்கியமான நாளாக இருக்கும். முருகப்பெருமானை வழிபட கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

தனுசு

உங்களின் வேலைகள் எளிதாக முடியும். திட்டமிடல் நல்ல பலன்களை தரும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பாராட்டுகள் கிடைக்கும்.

ஆர்வக் கோளாறுகளை தவிர்க்கவும். கணவன் மனைவி இடையே பூசல்கள் ஏற்படலாம். நிதி நிலைமையில் மந்தம் இருக்கும்.

சேமிக்கும் பழக்கம் இருத்தல் வேண்டும். குழந்தைகளுக்கான மருத்துவ செலவு வரலாம். சந்திரனுக்கு தீபம் ஏற்றி வெண்ணிற மலர் சாற்றி வழிபடுங்கள் மனக்கவலை நீங்கும்.

மகரம்

இன்று தங்களை தாங்களே உற்சாகமாக வைத்து கொள்ளுதல் வேண்டும். சோர்வை நீக்கி புத்துணர்வோடு இருந்தால் வெற்றி நிச்சயம்.

திறமையாக பணியாற்ற நல்ல திட்டங்கள் தீட்ட வேண்டும். கணவன் மனைவியிடையே பிரச்சனைள் குறையும். அன்பான வார்த்தைகள் தங்களின் உறவை மேம்படுத்தும்.

பண இழப்பு ஏற்படலாம் கவனம் தேவை. தேவையற்ற உணவுகளைத் தவிர்க்கவும். செரிமான பிரச்சனைகள் வரலாம். பெருமாளிற்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள் நன்மை கிடைக்கும்.

கும்பம்

இன்று மிதமான நன்மைகள் தரும் நாளாக இருக்கும். பணிகளில் முன்னேற்றம் ஏற்பட சிந்தித்து செயலாற்றவும், கணவன் மனைவியுடன் புனித தலங்கள் செல்ல வாய்ப்பும் உண்டு.

ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம் இருக்கும். பணவரவு மிதமாக இருக்கும். வீண் செலவுகளைத் தவிர்க்கவும். உணவு கட்பாடு அவசியம். செரிமான கோளாறுகள் வரலாம்.

அருகில் உள்ள அம்மன் கோவில் சென்று தீபம் ஏற்றி வழிபடுங்கள்.

மீனம்

இன்று ஆன்மீகத்தில் நேரம் செலவிட நற்பலன்களை பெறலாம். பொறுமையான அணுகுமுறை அவசியம் வேண்டும்.

புதிய வேலை வாய்ப்புகளுக்கான சாத்தியங்கள் உண்டாகும். நேர்முகத் தேர்வுகளில் வெற்றி கிடைக்கும்.

கணவன் மனைவி ஒற்றுமை மேம்படும். அனைவரிடமும் நட்புறவு அவசியம். பண வரவு நன்றாக இருக்கும்.

நல்ல முறையில் செலவிட பணம் கையில் தங்கும். திடமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். மொத்தமாக தங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக இருக்கும்.

சந்திரசேகரரை சென்று தரிசித்தால் மேம்பட்ட பலன்கள் கிடைக்கும்.

இன்றைய ராசிப்பலன்கள்: 02/03/2020 ராசிபலன் – horoscope tamil. தின ராசிபலன் செய்திகள். தமிழ் ஜோதிட கணிப்பு பலன்கன். tamil zodiac மிஸ்டர் புயல் வாசகர்கள் தினமும் படித்து பயன்பெறுங்கள்.

3

Lokesh Pop Addy: நண்பர்களால் மறுவாழ்வு பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்!

0
Lokesh Pop Addy லோகேஷ் பாப்

Lokesh Pop Addy லோகேஷ் பாப்: நண்பர்களால் மறுவாழ்வு பெற்ற நிகழ்ச்சி தொகுப்பாளர்! தொலைக்காட்சி செய்திகள், டிவி நிகழ்சிகள், டிவி சீரியல் தொடர்கள்.

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் லோகேஷ் பாப் கை, கால் செயலிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். நண்பர்கள் திரட்டிய நிதியுதவியின் மூலம் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.

அதித்யா தொலைக்காட்சி விஜே

ஆதித்யா தொலைக்காட்சி சேனலில் காமெடி நிகழ்ச்சியில் கலக்கி அதன் பின்னர் நிகழ்ச்சி தொகுப்பாளராக வந்தவர் லோகேஷ் பாப் (Lokesh Pop Addy). இவருக்கு என்று ஏராளமான ரசிகர்களும் இருக்கின்றனர்.

இவர், இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோர் நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம் நானும் ரௌடி தான். இந்தப் படத்தில் சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், இவருக்கு திடீரென்று பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது இடது கை மற்றும் இடது கால் செயலிழந்துவிட்டது.

Master மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு: செஃல்பி எடுத்துக்கொண்ட படக்குழு!

இதையடுத்து, அவர் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு சிகிச்சை அளிக்க உடனடியாக ரூ.7 லட்சம் வரையில் தேவைப்படுகிறது என்று அவரது நண்பர்கள் சமூக வலைதளங்கள் மூலமாக உதவி கேட்டுள்ளனர்.

நண்பர்கள் நிதி உதவி

லோகேஷ் பாப்வின் நண்பரான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி தொகுப்பாளர் திருச்சி சரவணக்குமார் இந்த உதவியை கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரைத் தொடர்ந்து குட்டி கோபியும் சமூக வலைதளங்களில் உதவி கேட்க, நடிகர்கள், காமெடி நடிகர்கள் என்று பலரும் உதவி செய்து வருவதாகவும், போதுமான அளவிற்கு நிதியுதவி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக சன் நெட்வொர்க் மூலமாக முழு உதவியும் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

லோகேஷ் பாப்விற்கு அளிக்கப்பட்ட சிகிச்சையைத் தொடர்ந்து அவர் தற்போது நலமாக இருப்பதாகவும், நாளை பொதுப்பிரிவுக்கு மாற்றப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவரை பார்க்க விரும்புவோர்கள் நாளை பார்க்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். நண்பர்கள் செய்த உதவியால் அவர் மறுவாழ்வு பெற்று வந்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

3

Vodafone Idea New Prepaid Plan: வோடஃபோன் ரூ.249க்கு 3ஜி‌பி தினமும்

0
Vodafone Idea New Prepaid Plan

Vodafone Idea New Prepaid Plan; வோடஃபோன் ரூ.249க்கு 3ஜி‌பி தினமும், தொழில் நுட்ப செய்திகள், mobile recharge plan tamil news. mobile recharge offer.

ஜியோவுடன் போட்டி போட்டு தாக்குபிடிக்க இயலாமல் வோடாபோன் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ள ப்ரீபெய்ட் பிளானை மாற்றியது.

ஒரு புறம் வோடாபோன் நிறுவனம் மூடப்போவதாக பேச்சு அடி பட்டாலும் கடைசி வரை விடுவதாக இல்லை என வோடாபோன் மற்றும் ஐடியா முடிவு செய்து ப்ரீபெய்ட் பிளானை மாற்றியது.

ஏற்கனவே ஏ‌ஜி‌ஆர் பிரச்சனையில் சிக்கி தவித்தாலும் அதை பொருட்படுத்தாமல் ப்ரீபெய்ட் பிளானில் தினமும் 1.5 ஜி‌பி கூடுதலாக வழங்க முடிவு செய்துள்ளது.

வோடாபோன் நிறுவனம் ஏ‌ஜி‌ஆர் ட்யூ மொத்தம் 57000 கட்டுவதற்கு ஒப்புக்கொண்டுள்ளது. 15 வருட கால அவகாசமும் கேட்டுள்ளது.

Vodafone Idea New Prepaid Plan

ரூ.249 பிளான் 28 நாட்களுக்கு

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 28 நாட்கள்

ரூ.399 பிளான் 56 நாட்களுக்கு

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 56 நாட்கள்

ரூ.599 பிளான் 84 நாட்களுக்கு

டேட்டா -3 ஜிபி டேட்டா (முன்பு 1.5ஜிபி டேட்டா)

வரம்பற்ற இலவச உள்ளூர் மற்றும் தேசிய அழைப்புகள் அனைத்து நெட்வொர்க்

தினமும் 100 எஸ்எம்எஸ்

வேலிடிட்டி 84 நாட்கள்

கூடுதலாக இந்த மூன்று பிளானிலும் வோடஃபோன் பிளே மற்றும் ஜீ5 ஆப் சேவையை இலவசமாக வழங்க உள்ளது.

வோடாபோன் மற்றும் ஐடியா இணையும்பொழுது 440மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தனர். தற்போது 300மில்லியன் தான் இருக்கின்றனராம். அதை தக்க வைதுகொள்ளவே இந்த முயற்சி வோடாபோன் செய்துள்ளது.

3

Shalu Shammu: இன்ஸ்டாகிராம் புகைப்படத்தால் வெளியேறிய ஷாலு ஷம்மு!

0

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி கேங்க்ஸ்டெர்ஸ் நிகழ்ச்சியில் தனது இன்ஸ்டாகிராம் புகைப்படத்தை வெளியிட்டதால், கோபத்தில் ஷாலு ஷம்மு நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இயக்குநர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் சினிமாவில் பிரபலமானவர் நடிகை ஷாலு ஷம்மு. இந்தப் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

இப்படத்தைத் தொடர்ந்து தெகிடி, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், றெக்க, திருட்டு பயலே 2 ஆகிய படங்களில் நடித்துள்ளார். அண்மை காலமாக சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களையும், டான்ஸ் ஆடும் வீடியோக்களையும் பதிவிட்டு வருகிறார்.

ஷாலு ஷம்மு உடலை முழுவதும் பூக்களால் மறைத்து போட்டோஷூட் நடத்திய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதற்கு ரசிகர்கள் பலரும் விமர்சனம் செய்திருந்தனர்.

காமெடி கேங்ஸ்டெர்ஸ்

இந்த நிலையில், இவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் காமெடி நிகழ்ச்சியான காமெடி கேங்ஸ்டர்ஸ் என்ற நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வருகை தந்துள்ளார். இந்நிகழ்ச்சியை, மிர்ச்சி விஜய் மற்றும் பூர்ணிமா ரவி இருவரும் தொகுத்து வழங்கினர்.

மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்கள்

இந்நிகழ்ச்சியின் தொடக்கத்தில், மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவன்கள் சாப்பிடும் வரை போராட்டம் என்ற காமெடி ஷோவும், இரண்டாவதாக ராகவா லாரன்ஸின் காஞ்சனா 2 படத்தை விமர்சிக்கும் வகையில் ஒரு காமெடி ஷோவும் நடந்தது.

ஷாலு ஷம்மு

3ஆவதாக, ஷாலுவின் போட்டோவை வைத்து தான் இந்த ரவுண்டும் நடந்தது. இதில், ஷாலு ஷம்முவின் ஒவ்வொரு புகைப்படமும் இடம்பெற்றிருக்கும் போது விமர்சிக்கப்பட்டது. இதையடுத்து உடல் முழுவதும் பூக்கள் நிறைந்திருக்கும் புகைப்படத்தை வெளியிட்டனர்.

நிகழ்ச்சியைவிட்டு வெளியேறிய ஷாலு

இதைப் பார்த்த ஷாலு உடனடியாக கோபத்தில் அங்கிருந்து இதையெல்லாம் ஏன் போடுறீங்க…என்று கூறிவிட்டு அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார். ஆனால், அதன் பிறகு தொகுப்பாளர் பூர்ணிமா ரவி அவரை சமாதானப்படுத்தி மீண்டும் மேடைக்கு அழைத்து வந்தார்.

இதையடுத்து, ஆம், நான் இதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறேன். அதற்காக அதையெல்லாம் எடுத்து இப்படி செய்யலாமா? என்று கூறிவிட்டு, மீண்டும் நிகழ்ச்சியை தொடங்கினார்.

பிராங்க் செய்த ஷாலு ஷம்மு

இறுதியில் இது எல்லாமே பிராங்க் என்று கூறிவிட்டு எப்போதும் போல நிகழ்ச்சியை தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு அவரது புகைப்படத்தை நிறுத்திவிட்டனர்.

10 ரூபா டாக்டர்

4ஆவதாக ஒரு உண்மை சம்பவத்தை பிரதிபலிக்கும் வகையில், 10 ரூபா டாக்டரை அழைத்து வந்து அவரை பேச வைத்தனர். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்பது பழமொழி. உண்மையில், நோயில்லாமல் வாழ்வதே நிறைந்த செல்வம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மகிழ்ச்சியோடு வாழும் வாழ்க்கையே ஆரோக்கியமான வாழ்க்கை என்று கூறியுள்ளார். ஒட்டுமொத்த குழுவினரும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக் கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3