Home Blog Page 249

Aruva Movie: ஹரி கூட்டணியில் சூர்யா ‘அருவா’ வீச்சு

0
Aruvaa Movie சூர்யா அருவா

Aruvaa Movie: ஹரி கூட்டணியில் சூர்யா அருவா வீச்சு. suriya new movie title aruva. சூர்யாவின் புதிய படத்தின் பெயர் அருவா. கோலிவுட் செய்திகள்.

சூர்யாவிற்கு கடந்த காலமாகவே படங்கள் மிகப்பெரிய வெற்றிபெறவில்லை. அடுத்ததாக சூறரைப் போற்று படத்தின் ட்ரெய்லர் படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இயக்குனர் ஹரிக்கும் கடைசியாக வந்த சாமி 2 படம் சரியாக அமையவில்லை. ஹரி இயக்கத்தில் சூர்யா ஆறு, வேல், சிங்கம் 1, சிங்கம் 2, சிங்கம் 3 படங்களில் நடித்தார். படங்களும் மிகப் பெரிய வெற்றிகளைப் பெற்றது.

அடுத்தாக இந்த கூட்டணி மீண்டும் இணைகிறது. ஸ்டுடியோ கிரீனின் சமூக வலைத்தள பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு உள்ளனர்.

Aruvaa Movie – சூர்யா அருவா

அந்த அறிக்கையில், “சூர்யா நடிக்கும் 39-வது படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக K.E ஞானவேல் ராஜா தயாரிக்கிறார்.

இப்படத்தை இயக்குனர் ஹரி இயக்குகிறார். இப்படத்திற்கு ‘அருவா’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.

இது சூர்யா, இயக்குனர் ஹரி இணையும் 6-வது படம். இயக்குனர் ஹரியின் 16-வது படம்.
இசை டி.இமான், இவர் சூர்யாவுடனும், இயக்குனர் ஹரியுடனும் முதல் முறையாக இணைகிறார்.

ஏப்ரல் மாதம் படப்பிடிப்பு தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பை முடித்து, 2020 தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய திட்டமிட்டு உள்ளனர்.

ஞானவேல் ராஜா, சூர்யாவை வைத்து இதுவரை ஆறு படங்களை தயாரித்துள்ளார். சூர்யாவும் ஞானவேல் ராஜாவும் இணையும் ஏழாவது படமாகும்.

ஹரி, சூர்யாவை ஆறு மற்றும் வேல் படத்தில் அருவா தூக்க வைத்து, சிங்கம் சீரிஸ் படங்களில் கண்ணியமான போலிஸ் அதிகாரியாக தோன்றவைத்து, மறுபடியும் அருவா எடுக்க வைக்கிறார்.

இந்த தீபாவளி சூர்யா ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

3

Master Sethupathi: விஜய்க்கு நச்சுன்னு 1,35,263-வது முத்தம்

0
Master sethupathi மாஸ்டர் அப்டேட் விஜய்

Master Sethupathi: விஜய்க்கு நச்சுன்னு 1,35,263-வது முத்தம். மாஸ்டர் படபிடிப்பு தளத்தில் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தார். vijay sethupathi kiss to vijay

மாஸ்டர் படப்பிடிப்பு நாளையுடன் முடியும் நிலையில், தளபதி விஜய்க்கு நடிகர் விஜய் சேதுபதி தனது 1,35,263 ஆவது முத்தத்தை நச்சுன்னு கொடுத்துள்ளார். அப்போது மற்ற நடிகர்கள் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர்.

Master Sethupathi

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். வரும் ஏப்ரல் 9-ஆம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இப்படம் திரைக்கு வருகிறது.

விறுவிறுப்பாக நடந்து வந்த படப்பிடிப்பு நாளையுடன் முடிவடைந்து போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் தொடங்கப்படும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் அறிவித்திருந்தார்.

விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோ தனது எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனத்தின் மூலம் இப்படத்தை தயாரித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இப்படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ஸ்ரீமன் ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

சமீபத்தில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வைரலானது.

விஜய் சேதுபதியின் முத்த பழக்கம்

பொதுவாக, நடிகர்கள், எந்த ரசிகர்கள் கேட்டாலும், அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொள்வது, கை கொடுப்பது மட்டுமே செய்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள்.

ஆனால், விஜய் சேதுபதி மட்டும் வித்தியாசமானவர். ஆம், எந்த ரசிகர் கேட்டாலும், அவர்களது கன்னத்தில் முத்தம் கொடுப்பதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்.

நானும் ரௌடி தான், சேதுபதி, தர்மதுரை, இமைக்கா நொடிகள், பேட்ட, சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றார்.

ஹீரோவாக மட்டுமல்ல, சிறப்புத் தோற்றம் என்று எந்தவொரு ரோலாக இருந்தாலும், அதில் தனது பங்களிப்பை கொடுக்கக்கூடியவர்.

இவ்வளவு ஏன், ரஜினிகாந்த் நடிப்பில் வந்த பேட்ட படத்தில், அவருக்கு வில்லனாகவே நடித்துள்ளார். தற்போது, விஜய்க்கு வில்லனாக மாஸ்டர் படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

மாஸ்டர் படப்பிடிப்பு நிறைவு

நாளையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு முடியும் நிலையில், விஜய்க்கு அழுத்தமாக ஒரு முத்தம் கொடுத்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.

இதுவரை ஆயிரம், பத்தாயிரம் அல்ல, அதற்கும் மேலாக 1,35,262 முத்தங்கள் வரை கொடுத்துள்ளார்.

விஜய்க்கு முத்தம் கொடுத்த விஜய் சேதுபதி

விஜய்க்கு முத்தம் கொடுத்ததன் மூலம் 1,35,263 முத்தங்கள் வரை கொடுத்த ஹீரோ என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

விஜய்க்கு முத்தம் கொடுக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அப்போது, மற்ற நடிகர்கள், லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கைதட்டி ஆரவாரம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

WWCT20I WIw vs ENGw: அரையிறுதிக்குள் நுழைந்தது இங்கிலாந்து

0
WWCT20I WIw vs AUSw

WWCT20I WIw vs ENGw: மகளிர் உலகக்கோப்பை டி20 போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி இங்கிலாந்து அரையிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது.

மார்ச்.1: 7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும், பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது

WWCT20I WIw vs ENGw

சிட்னி மைதானத்தில்  பிரிவு ‘பி’ யில் நடைபெற்ற 16வது லீக் போட்டியில் இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது

சிவையர் அரைசதம்

முதலில் ஆடிய இங்கிலாந்து அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 143 ரன்கள் எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக சிவைர் 57, வெய்ட் 29, ஜோன்ஸ் 23, நைட் 17 ரன்கள் எடுத்தனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் செல்மான், ஃபளட்சர், முஹமது மற்றும் டெய்லர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியினர், இங்கிலாந்தின் சுழல் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மடமடவென விக்கெட்டுகளை இழந்தனர்.

இங்கிலாந்து வெற்றி

வெஸ்ட் இண்டீஸ் அணியினர் அதிரடியாக ஆடக் கூடியவர்கள். ஆனால் இந்த போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி போராட்டம் இல்லாமல் 17.1 ஓவர்களில் 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானதால் இங்கிலாந்து அணி 46 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீசை வீழத்தியது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கிபி 20 ரன்கள் டெய்லர் மற்றும் கூப்பர் தலா 15 ரன்கள், மேத்யூஸ் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

இங்கிலாந்து அணி தரப்பில் எக்கிள்ஸ்டோன் 3 விக்கெட்டும், கிளென் 2 விக்கெட்டும், ஷரோப்சோலே மற்றும் மாடி வில்லியர்ஸ் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து அணி அருமையாக பந்து வீசினர் மற்றும் அருமையாக பில்டிங்கும் செய்தனர்.

இங்கிலாந்து அணியின் நெடாலி சிவையர் ஆட்டநாயகன் விருதை வென்றார்

அரையிறுதியில் இங்கிலாந்து

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதியில் நுழைந்தது பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணி அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு இந்தியா, தென் ஆப்பிரிக்கா தகுதி பெற்றது. நடப்பு சாம்பியன் அணி இங்கிலாந்து என்பது குறிப்பிடத்தக்கது.

உலககோப்பை புள்ளி பட்டியல்

பிரிவு ஏ

TEAM  P    W     L   P
IND   :   4     4     0   8
AUS  :   3     2     1   4
NZ    :   3     2     1   4
SL    :   3     0     3   0
BAN  :   3     0     3   0

பிரிவு  பி

TEAM     P    W     L    P
ENG   :    4     3     1    6
RSA    :   3     3     0    6
PAK    :    3     1     2    2
WI     :    3     1     2    0
THAI   :    3     0     3    0

3

Mookuthi Amman First Look: மூக்குத்தி நயன்தாரா!

0
Mookuthi Amman First Look மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் நயன்தாரா

Mookuthi Amman First Look: நாயன்தாரா மூக்குத்தி அணிந்து மூக்குத்தி அம்மனாக நடித்துள்ளார். மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அவதாரம் எடுத்த நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாராவின் நடிப்பில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் நடிகை நயன்தாரா. தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில், ரஜினியுடன் இணைந்து நடித்த தர்பார் படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மூக்குத்தி அம்மன்

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.

மூக்குத்தி அம்மன் படத்தின் மூலம் ஆர்.ஜே. பாலாஜி இயக்குநராக அவதாரம் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Mookuthi Amman First Look

மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

நேற்று முதல் டுவிட்டரில் #MookuthiAmman என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நயன்தாராவின் ஒரு முகம்

ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தாரா தலையில் கிரீடம் வைத்திருப்பது போன்றும், மூக்குத்தி அணிந்திருப்பது போன்றும், அம்மனுக்கு பிடித்த நிறமான மஞ்சள், பச்சை நிறங்களில் சேலை அணிந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது.

அதோடு, நயன்தாராவின் இடதுபுறம் முகம் மட்டும் தெரியும் படி போஸ்டரில் புகைப்படம் அமைந்துள்ளது.

இதற்கு முன்னதாக நயன்தாரா இதுபோன்ற ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இல்லை என்று கூறப்படுகிறது.

ஆனால், இதற்கு முன்னதாக, விஜயசாந்தி, மீனா, ரோஜா, கேஆர் விஜயா, பானுப்ரியா என்று மாஸ் நடிகைகள் பலரும் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலங்களில் உருவாக்கப்பட்ட பக்தி படங்களில் ஜெயலலிதா உள்ளிட்ட பல நடிகைகள் சக்தி, பார்வதி போன்று அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

விரதம் இருந்த நயன்தாரா

மூக்குத்தி அம்மன் படத்தின் படப்பிடிப்பிற்காக நயன்தாரா விரதம் இருந்துள்ளார். மேலும், அவர் அசைவ உணவுகளையும் சாப்பிடவில்லையாம். முழுக்க முழுக்க தன்னை படத்திற்காகவே அர்ப்பணித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

இந்தப் படத்திற்காக அவர் அதிகளவில் சம்பளமும் வாங்கியுள்ளாராம். கோடை விடுமுறையை முன்னிட்டு இந்தப் படம் திரைக்கு வரும் என்று கூறப்படுகிறது.

3

Suriya39: சூர்யா39 படத்திற்கு அருவா என்று டைட்டில் வைத்த இயக்குநர் ஹரி!

0

சூர்யா நடிப்பில் உருவாக இருக்கும் அவரது 39 ஆவது படம் குறித்து முக்கியமான அறிவிப்பு ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் சூரரைப் போற்று. இப்படத்தில் சூர்யா உடன் இணைந்து, அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, கருணாஸ், ஜாக்கி ஷெராஃப், காளி வெங்கட் ஆகியோர் பலர் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி படம் திரைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு உரிமையை சன் டிவி நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாதத்தின் இரண்டாவது வாரத்தில் நடக்க இருப்பதாக தெரிகிறது.

ஏர் டெக்கான் நிறுவனத்தின் நிறுவனர் ஜிஆர் கோபிநாத்தின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைத் தொடர்ந்து சூர்யா 39 ஆவது படத்தை யார் இயக்குகிறார் என்ற கேள்வி எழுந்தது. இதற்கு தற்போது பதில் கிடைக்கும் வகையில், அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி, சூர்யா39 ஆவது படத்தை இயக்குநர் ஹரி இயக்குகிறார் என்றும், இந்தப் படத்திற்கு அருவா என்றும் டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பாக, ஞானவேல்ராஜா இந்தப் படத்தை தயாரிக்கிறார். இது சூர்யா – ஹரி இணையும் 6ஆவது படம். இது ஹரியின் 16ஆவது படம். இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இவர், சூர்யா, ஹரியுடன் முதல் முறையாக இணைந்துள்ளார்.

வரும் ஏப்ரல் மாதம் படத்தை தொடங்கி ஒரே கட்டமாக படப்பிடிப்பு நடத்தி முடித்து இந்த ஆண்டின் தீபாவளிக்கு வெளியீடு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக #Suriya39 என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாகி வருகிறது.

இதற்கு முன்னதாக, சூர்யாவின் ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2, சிங்கம் 3 ஆகிய படங்களை இயக்குநர் ஹரி இயக்கியுள்ளார். இந்த 5 படங்களுக்கும் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு கிடைத்தது.

அதனால், சூர்யா – ஹரியின் கூட்டணியில் உருவாகும் சூர்யா39 அருவா படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இயக்குநர் சுதா கொங்கரா இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 65ஆவது படமான தளபதி65 படத்தை இயக்க இருப்பதாக தெரிகிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பும் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

3

Master Second Single: மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் எப்போது தெரியுமா?

0

விஜய் நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் எப்போது வெளிவரும் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கைதி இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் மாஸ்டர். விஜய்யின் நெருங்கிய உறவினர் சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி கிரியேட்டர்ஸ் நிறுவனம் மாஸ்டர் படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.

சமீபத்தில் மாஸ்டர் படத்தில் இடம்பெற்றுள்ள குட்டி ஸ்டோரி பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உலகம் முழுவதும் வெளியானது.

மாஸ்டர் படத்தில் விஜய்யுடன் இணைந்து விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், நாசர், சஞ்சீவ், கௌரி கிஷான், பிரிகிதா சகாயா, அழகம் பெருமாள் ஆகியோர் உள்பட ஏராளமான சினிமா பிரபலங்கள் நடித்துள்ளனர்.

வரும் ஏப்ரல் 9 ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், படப்பிடிப்பு முழுவதும் நடந்து முடிந்துள்ளது. இதையடுத்து தற்போது போஸ்ட் புரோடக்‌ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடக்க இருக்கிறது.

இந்த நிலையில், மாஸ்டர் படத்தின் இரண்டாவது சிங்கிள் டிராக் குறித்து தயாரிப்பு நிறுவனம் முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, விரைவில், மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக் வரும் என்று தெரிவித்துள்ளது.

அதோடு, மாஸ்டர் மாதம் தொடங்கிவிட்டது. இனி, அடுத்தடுத்து, மாஸ்டர் இரண்டாவது சிங்கிள் டிராக், மாஸ்டர் இசை வெளியீடு, மாஸ்டர் டிரைலர் அப்டேட் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாவது சிங்கிள் டிராக சூப்பர் கூல் டிராக்காக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னதாக, படப்பிடிப்பின் கடைசி நாளின் போது விஜய் சேதுபதி, விஜய்க்கு முத்தம் கொடுத்து அசத்தியுள்ளார். இது படக்குழுவினர் பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முத்தம் விஜய் சேதுபதி கொடுத்த 1,35,263 ஆவது முத்தம் என்று கூறப்படுகிறது.

மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து விஜய், தனது 65 ஆவது படத்தில் இயக்குநர் சுதா கொங்கரா உடன் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. மாஸ்டர் படம் வெளியான பிறகு தளபதி65 படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என்று தெரிகிறது.

இதே போன்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 என்ற படத்தை இயக்குகிறார். இந்தப் படத்தின் பூஜை வரும் 5 ஆம் தேதி சென்னையில் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.

தலைவர்169 படத்தை கமல் ஹாசன் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தின் மூலம் தயாரிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

WWCT20I SAWvsPW; பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி

0
WWCT20I SAWvsPW
PERTH, AUSTRALIA - FEBRUARY 23: South Africa celebrates after taking the wicket of Danni Wyatt of England during the ICC Women's T20 Cricket World Cup match between England and South Africa at WACA on February 23, 2020 in Perth, Australia. (Photo by Will Russell-ICC/ICC via Getty Images)

WWCT20I SAWvsPW; பாகிஸ்தானை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது தென் ஆப்பிரிக்கா மகளிர் அணி, வோல்வர்ட் அரைசதம், தென் ஆப்ரிக்கா மகளிர் அணி வெற்றி, அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்.

7வது இருபது ஓவர் மகளிர் உலகக்கோப்பை ஆஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் தேதி தொடங்கியது.

பத்து அணிகள் பங்கு பெற்று இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு பிரிவு-ஏ வில் ஆஸ்திரேலியா, இந்தியா, வங்கதேசம், இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளும்,

பிரிவு – பி யில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, மேற்கு இந்திய தீவுகள், தாய்லாந்து, தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகளும் விளையாடுகிறது

சிட்னி மைதானத்தில்  பிரிவு ‘பி’ யில் நடைபெற்ற 15வது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் WWCT20I SAWvsPW மோதியது.

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது

வோல்வார்ட் அரைசதம்

பாகிஸ்தானின் கட்டுக்கோப்பான பந்துவீச்சால்  தென் ஆப்பிரிக்கா மகளிரணி ரன் எடுக்க திணறினார்கள், 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்சமாக
வோல்வார்ட் 53 ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றார். காப் 32, டு பிரிஷ் 17, சுனே லோஸ் 12 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

பாகிஸ்தான் தரப்பில் பய்க் 2விக்கெட்டும், ஷா, தார், அன்வர் மற்றும் அமின் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தென்னாபிரிக்கா மகளிர் அணி வெற்றி

137 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. 17 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக கேப்டன் சவாரியா கான் 31 ரன்கள், சாவைத் 17 ரன்கள், ரியாஸ் 39 ரன்கள் எடுத்தனர்.

தென்ஆப்பிரிக்கா அணி தரப்பில் மஃபா, இஸ்மாயில், நைய்கிரிக் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். தென்னாப்பிரிக்கா அணியில் அரை சதம் அடித்த லோரா வெல்வட் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

INDWvsSLW-WWCT20I; இலங்கையை வீழ்த்தியது இந்தியா

அரையிறுதி வாய்ப்பை இழந்த பாகிஸ்தான்

இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்க அணி விளையாடிய மூன்று போட்டிகளிலும் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது. தென்ஆப்பிரிக்கா அணி பிரிவு ‘பி’ல் புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது.

பாகிஸ்தான் அணி இந்த தோல்வியின் மூலம் உலகக் கோப்பை அரையிறுதி வாய்ப்பை இழந்தது, கடைசி போட்டியில் இங்கிலாந்திடம் தோற்றது குறிப்பிடத்தக்கது.

வருகிற மார்ச் 3ம் தேதி இரு அணிகளும் கடைசியில் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி தாய்லாந்த் அணியையும், தென் ஆப்பிரிக்க அணி வெஸ்ட் இண்டீஸ் அணியை எதிர்கொள்கிறது.

இன்று நடக்க உள்ள மற்றொரு போட்டியில் இதே மைதானத்தில் இங்கிலாந்து மகளிர் அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மகளிரணி மோதுகிறது இருவருக்குமே இந்த போட்டி முக்கியமானதாக இருக்கும்.

WWCT20I ENGw vs PAKw: இங்கிலாந்திடம் பாகிஸ்தான் தோல்வி

உலககோப்பை புள்ளி பட்டியல்

பிரிவு ஏ

TEAM      P    W     L   P
IND   :   4     4     0   8
NZ    :   2     1     1   2
AUS  :   3     2     1   4
SL    :   3     0     3   0
BAN  :   2     0     2   0

பிரிவு  பி

TEAM     P    W     L    P
RSA   :   3     3     0    6
ENG   :    3     2     1    4
PAK   :    3     1     2    2
WI    :    2     1     1    0
THAI  :    3     0     3    0

3

Raghava Lawrence: திருநங்கைகளுக்கு வீடு கட்டித்தரும் ராகவா லாரன்ஸ்: அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதியுதவி!

0

தனது தொண்டு நிறுவனத்தின் 15 ஆவது ஆண்டின் தொடக்கத்தில் அடியெடுத்து வைத்துள்ள ராகவா லாரன்ஸின் முதல் முயற்சியாக திருநங்கைகளுக்கு வீடு கட்டிக்கொடுக்கும் திட்டத்திற்கு நடிகர் அக்‌ஷய் குமார் ரூ.1.5 கோடி நிதியுதவி அளித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர், இயக்குநர்களில் ஒருவராக இருப்பவர் ராகவா லாரன்ஸ். படங்களில் நடிப்பதோடு மட்டுமல்லாமல், இலவசமாக கல்வி, மருத்துவ உதவி, மாற்றுத்திறனாளிகளுக்கு நடனம், பிள்ளைகளால் கைவிடப்பட்ட வயதானவர்கள் என்று பலருக்கும் உதவும் வகையில், தனது பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இதன் மூலம் எத்தனையோ பேர் பயனடைந்துள்ளனர்.

இந்த நிலையில், இந்த தொண்டு நிறுவனம் தொடங்கப்பட்ட 15 ஆண்டுகள் ஆன நிலையில், இதனை சிறப்பிக்கும் வகையில், பல புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிட்டுள்ளார். அதாவது, இந்த 15 ஆவது ஆண்டின் தொடக்கம் முதல் திருநங்கைகளுக்கு என்று வீடு கட்டித்தர திட்டமிட்டுள்ளார். இதற்காக நிலம் வழங்கப்பட்டு, நிதியுதவி பெறப்பட்டு அதன் மூலம் வீடு கட்டவும் திட்டமிட்டுள்ளார்.

இதன் காரணமாக, பாலிவுட்டில் உருவாகி வரும் லக்‌ஷ்மி பாம் படத்தின் படப்பிடிப்பின் போது அக்‌ஷய் குமாரிடம் இது குறித்து அவர் பேசியுள்ளார். இதையடுத்து, உடனடியாக, மேற்கொண்டு என்ன ஏது என்று எதுவும் கேட்காமல், ரூ.1.5 கோடியை நிதியுதவி அளித்துள்ளார்.

யாரெல்லாம், நிதியுதவி அளிக்கிறார்களோ அவர்கள் எல்லாம் எங்களுக்கு கடவுள்தான். அந்த வகையில், எங்கள் எல்லோருக்கும் அக்‌ஷய் குமார் கடவுள்தான். அவரது இந்த உதவிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், இதன் மூலம் இனி இந்தியா முழுவதும் உள்ள திருநங்கைகளுக்கும் வீடு கட்டித்தரப்படும் என்று தெரிவித்துள்ளார். திருநங்கைகளுக்கு என்று வீடு கட்டும் முயற்சியின் முதல் பகுதியான பூமி பூஜை குறித்த தேதி விரைவில், அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் காஞ்சனா 3. இப்படத்திற்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி, காஞ்சனா 3 படத்தின் ரீமேக்கில் அக்‌ஷய் குமார் நடிப்பதாகவும், ராகவா லாரன்ஸ் இயக்குவதாகவும் அறிவிக்கப்பட்டது. இப்படத்திற்கு லக்‌ஷ்மி பாம் என்றும் டைட்டில் வைக்கப்பட்டு படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில், அக்‌ஷய் குமாருக்கும், ராகவா லாரன்ஸுக்கும் இடையில் கருத்து வேறுபாடு காரணமா பிரச்சனை எழுந்தது. இதன் காரணமாக லக்‌ஷ்மி பாப் படத்திலிருந்து ராகவா லாரன்ஸ் விலகுவதாக தகவல் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், தற்போது படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது.

3

Mookuthi Amman Posters; போஸ்டரில் தெய்வீகமாக காட்சியளிக்கும் நயன்தாரா

0
Mookuthi Amman Posters

Mookuthi Amman Posters; போஸ்டரில் தெய்வீகமாக காட்சியளிக்கும் நயன்தாரா நயன்தாராவின் ஒரு முகம், மூக்குத்தி அம்மன் இரண்டாவது லுக் போஸ்டர்.

நயன்தாராவின் மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகர் ஆர்.ஜே.பாலாஜி இயக்குநர் அவதாரம் எடுத்தப் படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் நயன்தாரா முன்னணி ரோலில் நடிக்கிறார்.

வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் மூலம் ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். இதற்கு முன்னதாக இந்த நிறுவனம் கோமாளி, எல்கேஜி, தேவி 2, பப்பி உள்பட பல படங்களை தயாரித்துள்ளது.

நயன்தாரா

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகை நடிகை நயன்தாரா தொடர்ந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்கள், மாஸ் ஹீரோவுக்கு ஜோடியாகவும் நடித்து வருகிறார்.

அண்மையில், ரஜினியு விஜயுடன் இணைந்து நடித்த தர்பார், பிகில் படங்கள் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.

மூக்குத்தி அம்மன்

இப்படத்தைத் தொடர்ந்து அடுத்து, ரஜினியின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார். இந்தப் படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் விறுவிறுப்பாக நடித்து வருகிறார்.பக்தி படம் என்பதால், இந்தப் படத்திற்காக விரதமும் இருந்துள்ளார். அதே சமயத்தில், அசைவ உணவுகளையும் தவிர்த்துள்ளார் என்று கூறப்படுகிறது.

படப்பிடிப்புக்கு முன்பாக, கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோயிலில் காதலன் விக்னேஷ் சிவனுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

டுவிட்டரில் டிரெண்ட்

மூக்குத்தி அம்மன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ள நிலையில், Mookuthi Amman Posters என்ற ஹேஷ்டேக் டிரெண்டாகி வருகிறது. இதையடுத்து, படத்தின் 2 ஆவது போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது.

நயன்தாராவின் ஒரு முகம்

மூக்குத்தி அம்மன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் நயன்தார தலையில் கிரீடம் வைத்திருப்பது போன்றும், மூக்குத்தி அணிந்திருப்பது போன்றும், அம்மனுகு பிடித்த நிறமான மஞ்சள், பச்சை நிறங்களில் சேலை அணிந்திருப்பது போன்றும் காட்டப்பட்டுள்ளது. அதோடு, நயன்தாராவின் இடதுபுறம் முகம் மட்டும் தெரியும் படி போஸ்டரில் புகைப்படம் அமைந்துள்ளது.

மூக்குத்தி அம்மன் 2 ஆவது லுக் போஸ்டர்

இதையடுத்து, வெளியான 2 ஆவது லுக் போஸ்டரில் நயன்தாரா தனது வலது கையில் சூலாயுதத்துடன் இருப்பது போன்ற புகைப்படம் இடம் பெற்றுள்ளது. இதுவரை நயன்தாரா த்ரில்லர் படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக, விஜயசாந்தி, மீனா, ரோஜா, கேஆர் விஜயா, பானுப்ரியா என்று மாஸ் நடிகைகள் பலரும் அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பிளாக் அண்ட் ஒயிட் சினிமா காலங்களில் உருவாக்கப்பட்ட பக்தி படங்களில் ஜெயலலிதா உள்ளிட்ட பல நடிகைகள் சக்தி, பார்வதி போன்று அம்மன் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

3

ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை நன்றாக தான் உள்ளது; அவரின் மகன்

0
ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை

ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை நன்றாக தான் உள்ளது; அவரின் மகன், ஆர் சுந்தரராஜனின் தமிழ் சினிமா பங்களிப்பு, ரஜினி-சுந்தரராஜன் சர்ச்சை.

நடிகர், இயக்குநர், திரைக்கதை எழுத்தாளர் என்று பல திறமைகளைக் கொண்ட ஆர்.சுந்தரராஜனின் உடல்நிலை குறித்து தகவல் வெளிவந்தது.

இதை முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது மகன் ஃபேஸ்புக் பக்கத்தில் என்னோட அப்பா நன்றாகத்தான் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

ஆர் சுந்தரராஜனின் தமிழ் சினிமா பங்களிப்பு 

அன்று சிந்திய இரத்தம், அம்மன் கோயில் கிழக்காலே, ராஜாதிராஜா, எங்கிட்ட மோதாதே, சுயம்வரம் என்று ஏராளமான படங்களை இயக்கியுள்ளார் ஆர்.சுந்தரராஜன்.

இதே போன்று நட்புக்காக, குசேலன், பெரிய இடத்து மாப்பிள்ளை, சூர்யவம்சம், மே மாதம், மேகத்துக்கும் தாகம் உண்டு, ராசாமகன், பரதன், எல்லாமே என் ராசா தான் உள்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், ஆர்.சுந்தரராஜன் அண்மையில் ரஜினிகாந்த் குறித்து தவறான கருத்துக்களை பொதுவெளியில் பேசினார்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தான் ரஜினிகாந்த் ரசிகர்கள், ஆர்.சுந்தரராஜன் இறந்துவிட்டதாக தகவல் பரப்பிவிட்டதாக கூறப்படுகிறது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாகத்தான் அவரது மகன் சமூக வலைதள பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

ரஜினி-சுந்தரராஜன் சர்ச்சை

ரஜினிகாந்த் அரசியல் அறிவிப்பு வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. அப்படியிருக்கும் போது அவர் கட்சி தொடங்கி முதல் கூட்டத்தை கோவையிலும் 2 ஆவது கூட்டத்தை திருப்பூரிலும் நடத்துவார்.

ஆனால், அதற்குள் அவர் இறந்துவிடுவார். அந்தளவிற்குத்தான் அவரது உடல்நிலையும் இருக்கிறது என்று பொதுவெளியில் பேசக்கூடாத வார்த்தையை பேசி ரஜினி ரசிகர்களின் கோபத்திற்கு உள்ளாகியுள்ளார்.

இந்த நிலையில், தான் ஆர்.சுந்தரராஜன் இறந்துவிட்டதாக வதந்திகள் பரவியது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவரது மகன், அசோக் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அதில், எனது அப்பா நன்றாகத்தான் இருக்கிறார். சென்னையில் ஒரு படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் என்று பதிவிட்டுள்ளார்.

அப்போது சுந்தரராஜனும், அவரது மகனும் காரில் சென்று கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகமே எதிர்க்கும் பிரச்சனைகளுக்கு நேர் எதிரான கருத்துக்களை ரஜினிகாந்த் தெரிவித்து வருகிறார். மேலும், சிஏஏவுக்கு எதிராக தற்போது மத்திய அரசுக்கு எதிராக விமர்சனம் வைத்துள்ளார்.

அதோடு, டெல்லி வன்முறையையும் வன்மையாக கண்டித்து குரல் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது ரஜினிகாந்த் சிறுத்தை சிவா இயக்கத்தில் அண்ணாத்த படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இதில், மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி ஆகியோர் உள்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.

இப்படத்தைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர்169 படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கிறார்.

இப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது என்று அண்மையில் அறிவிப்பு வெளியானது. அதோடு, வரும் 5 ஆம் தேதி தலைவர்169 படத்தின் பூஜை நடக்க இருப்பதாக தகவல் பரவியது குறிப்பிடத்தக்கது.

3