Home Blog Page 250

INDvsNZ 2nd Test: இந்தியா 242 ரன்களுக்கு ஆல் அவுட்

0
INDvsNZ 2nd Test இந்தியா vs நியூசிலாந்து

INDvsNZ 2nd Test: இந்தியா vs நியூசிலாந்து இரண்டாவது டெஸ்ட் போட்டி முதல் இன்னிங்க்ஸ் 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகியது.

இந்தியா vs நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி  டி20 தொடரை 5-0 என்ற கணக்கில் நியூசிலாந்தை ஒயிட் வாஷ் செய்தது.

அடுத்து நடந்த ஒருநாள் தொடரை 0-3 என்ற கணக்கில்  இந்தியாவை நியூசிலாந்து ஒயிட் வாஷ் செய்தது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து  இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில்  முதல் ஆட்டத்தில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.

INDvsNZ 2nd Test 

நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 242 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

பிரித்தி ஷா, புஜாரா, ஹனுமன் விஹாரி மூவரும் அரைச்சதம் அடித்தனர். நியூசிலாந்து தரப்பில் ஜேமிசன் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்து விக்கெட் சரிவு

அடுத்து ஆடிய நியூஸிலாந்து அணி முதல்நாள் இறுதியில் நிதானமாக ஆடினாலும் இரண்டாவது நாள் முதலே விக்கெட்டுகள் சரிவு தொடங்கியது. 177 ரன்கள் 8 விக்கெட்டை இழந்தது.

அடுத்து வந்த ஜேமிசன் பந்துவீச்சில் மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பாக ஆடினார். ஜேமிசன் துணையுடன் நியூசிலாந்து அணி 235 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

அந்த அணியின் ஜெனிஸ்டன் 49 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். நெயில் வாக்னர்க்கு அற்புதமான ஒரு கேட்ச் பிடித்தார் ஜடேஜா.

நியூசிலாந்து அணியில் அதிகபட்சமாக டாம் லதான் 60 ரன்கள். டாம் பெளண்டல் 30 ரன்கள், கிராண்ட் ஹோம் 26 ரன்கள், வாக்னர் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்கள்.

இந்தியா அபார பந்துவீச்சு

இந்திய தரப்பில் முகமது சமி 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும், ஜடேஜா 2 விக்கெட்டும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

7 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி தொடக்கமே விக்கெட் சரிந்தது.

பிரித்வி ஷா 14, மயங்க் அகர்வால் 3, புஜாரா 24 விராட் கோலி 14, ரகானே 9, நைட் வாட்ச்மேனாக களமிறங்கிய உமேஷ் யாதவ் ஒரு ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

ஹனுமன் விகாரி 5 ரன்கள் மற்றும் ரிஷப் பண்ட் ஒரு ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். நியூஸிலாந்து தரப்பில் போல்ட் 3 விக்கெட் வீழ்த்தினார்.

ஒரே நாளில் 16 விக்கெட்டுகள்

இன்றைய ஆட்டத்தில் இரு அணிகளும் சேர்த்து மொத்தம் 16 விக்கெட்டுகள் விழுந்துள்ளன.

இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி முதல் இன்னிங்சில் எப்படி விக்கெட் விழுந்ததோ ஒருசில விக்கெட்டுகளை தவிர மற்ற விக்கெட்டுகள் அப்படியே இரண்டாவது இன்னிங்சிலும் விழுந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று நாட்கள் மீதமுள்ள நிலையில் இந்திய அணி கைவசம் 4 விக்கெட்டுகள் மட்டுமே உள்ளது.

இந்தியா இந்த டெஸ்டில் வெற்றி பெறும் சதவீதம் குறைவே. ஆனால் ஆச்சரியம் நடக்குமா என்று நாளைய ஆட்டத்தில் பார்ப்போம்.

3

Gypsy Teaser: ஜிப்ஸி டீசரை வெளியிட்ட நடிகர் சூர்யா!

0
Gypsy Teaser

Gypsy Teaser: ஜீவா நடிப்பில் உருவாகியுள்ள ஜிப்ஸி படத்தின் டீசரை நடிகர் சூர்யா தற்போது வெளியிட்டுள்ளார். தமிழ் சினிமா செய்திகள்.

ஜோக்கர் மற்றும் குக்கூ ஆகிய படங்களை இயக்கியவர் இயக்குநர் ராஜூ முருகன். இவரது இயக்கத்தில் உருவாகியுள்ள 3-ஆவது படைப்புதான் ஜிப்ஸி. முழுக்க முழுக்க, ரொமாண்டிக் கலந்த காதல் கதையை மையப்படுத்தி இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக, நடாசா சிங் நடித்துள்ளார். மேலும், சன்னி வெயின், லால் ஜோஸ், சுஷீலா ராமன் ஆகியோர் பலர் நடித்துள்ளனர்.

வரும் மார்ச் 6-ஆம் தேதி இந்தப் படம் திரைக்கு வருகிறது. இந்த நிலையில், இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

இந்த டீசரில், முதலில் எந்த அமைப்பு, மாவோயிஸ்டாக இருக்குமோ என்று குரல் எழும்புகிறது. இதற்கு நான் முதலில் மனிதன் என்று ஜீவாவின் குரல் கேட்கிறது.

அதன் பிறகு உனக்கு என்று ஒரு முகம் படைக்கப்பட்டிருக்கும். அது கூடிய விரைவில் உன் கைக்கு வரும் என்று கூறும் குரல் தான் கேட்கிறது.

அதன் பிறகு ஹீரோ – ஹீரோயின் சந்திப்பு நிகழ்கிறது. அப்படியே அவர்களது காதல் காட்சிகள் தான் திரை முன்பு வந்து செல்கிறது.

இதையடுத்து, உள்ளே அரசியல் நுழைகிறது. இறுதியில், ஜீவாவின் காதல் ஜெயித்ததா? இல்லையா என்பதே கருவாக இருக்கும் என்று தெரிகிறது.

இடையில், போலீஸ் ஸ்டேசன், அரசியல் பிரவேசம், பிரச்சாரம், வன்முறை என்று கதை நகர்கிறது. ஒரு துப்பாக்கியால் ஒரு குரலை அடக்க நினைத்தால், ஓராயிரம் குரல் வெடிக்கும் என்று ஜீவா வசனம் பேசுகிறார்.

இறுதியில், பாடல் ஒலிக்கிறது. அதோடு டீசரும் முடிகிறது. இந்த டீசரைப் பார்த்தால் ஜாதி, அரசியல், காதல், வன்முறை போன்றவை இடம்பெற்றதாக தான் ஜிப்ஸி படம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

March Bank Holiday List; மார்ச் மாதம் பேங்க் விடுமுறை 13 நாட்காளா?

0

March Bank Holiday List; மார்ச் மாதம் பேங்க் விடுமுறை நாட்காளா? தேசிய விடுமுறைகள் பின்வருமாறு, பண்டிகை விடுமுறைகள்

மார்ச் மாதம் 2020 ஆம் ஆண்டில் ஏராளமான தேசிய மற்றும் மாநில விடுமுறைகள் வருவதால் வங்கிகள் அதிக பட்சம் 13 நாட்கள் வரை இய்ங்க வாய்ப்பு இல்லை.

இந்தியாவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய பண்டிகைகளில் ஒன்றான ஹோலி மார்ச் 10ஆம் தேதி வருகிறது. இதனால் பெரும்பான்மையான பகுதிகளில் வங்கி விடுமுறை ஆகும்.

March Month Bank Holiday List

இந்த மாதத்தில் மொத்தம் 8 தேசிய விடுமுறைகள் இந்த 8 நாளும் இந்தியா முழுவதும் வங்கிகள் இயங்காது.

தேசிய விடுமுறைகள் பின்வருமாறு

மார்ச் 1 – ஞாயிறு

மார்ச் 8 – ஞாயிறு

மார்ச் 10  – ஹோலி

மார்ச் 14 – இரண்டாவது சனிக்கிழமை

மார்ச் 15 – ஞாயிறு

மார்ச் 22 – ஞாயிறு

மார்ச் 28 – நான்காம் சனிக்கிழமை

மார்ச் 29 – ஞாயிறு

பண்டிகை விடுமுறைகள் 

மார்ச் 6 – சப்சர் குத்

மார்ச் 9 – ஹோளிக தகான்

மார்ச் 11 – ஹோலி

மார்ச் 25 – குதி ஃபத்வா

மார்ச் 27 – சற்குள்

இந்த 13 நாட்களும் எல்லா மாநிலத்திற்கும் பொருந்தாது. அந்தந்த மாநிலத்திற்கும் பண்டிகைக்கும் ஏற்ப வங்கி விடுமுறை நாட்கள் மாறுபடும்.

மிசோரம் மாநிலத்தில் மட்டும் மார்ச் 6 ஆம் தேதி வங்கி விடுமுறை ஆகும். இதே போல் மார்ச் 9ஆம் தேதி மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், உத்திர பிரதேசம் மற்றும் தெலுங்கானா மாநிலங்கள் மட்டும் விடுமுறை.

மார்ச் 25ஆம் தேதி குதி ஃபத்வா பண்டிகைக்கு ஜம்மு காஷ்மீர், கோவா, தமிழ்நாடு, தெலுங்கானா, மணிப்பூர், ஆந்திர பிரதேசம், கர்நாடகா மற்றும் மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் விடுமுறை.

ஜீ பிசினஸ் வெளியிட்ட அறிக்கையின் படி இது போக சம்பள உயர்வு கூறியும் இந்த மாதத்தில் பேங்க் விடுமுறை ஆகவும் வாய்ப்புகள் அதிகம்.

3

World Compliment Day; வரலாற்றில் இன்று மார்ச் 01

0
World Compliment Day

World Compliment Day; வரலாற்றில் இன்று மார்ச் 1. today what special day in world – india – tamil.

உலக பாராட்டும் தினத்தில் நாம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் அவர்கள் செய்யும் அல்லது முயற்சிக்கும் சிறிய சிறிய செயல்களுக்கும் பாராட்டுகளை தெரிவிக்க வேண்டும்.

World Compliment Day History

2011ஆம் ஆண்டு முதல் இது உலகமெங்கும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. ஹான்ஸ் பூர்ட்விலியத் என்பவரால் முதலில் தொடங்கக்கப்பட்டது.

பாராட்டு என்பது மிகவும் சக்தி மிகுந்த ஒன்று. ஒரு சாதாரண மனிதனின் செயல்திறனை அதிகாரிக்கும் தன்மை கொண்டது.

மேலும் பற்பல செயல்கள் செய்து வாழ்க்கையிலும் தரத்திலும் ஒரு மனிதன் முன்னேற பாராட்டு புகழ்ச்சி என்பது மிக அவசியம்.

அவ்வப்போது நம்மை சுற்றி இருக்கும் நம்முடன் வேலை செய்யும் அல்லது விளையாடும் நண்பர்களுக்கு உங்கள் பாராட்டுகளை தெரிவித்து அவர்களை ஊக்கப்படுத்துங்கள்.

உலக பாராட்டும் தினம் மார்ச் ஒன்றாம் நாள் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

வரலாற்றில் இன்று மார்ச் 01. இன்றைய நாள் சிறப்பு. today what special day in world – india – tamil. the day in the history

இந்த தலைப்புகளில் தொடர்ந்து ஒவ்வொரு நாளின் சிறப்புகளைப் பற்றி எழுதி வருகிறோம்.

அக்கட்டுரைகளைப் படித்து அன்றைய நாளின் சிறப்புகள் என்ன என்பதைப் பற்றியும், அது ஏன் உருவானது? எதற்காக கொண்டாடப்படுகிறது என்ற வரலாறு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.

3

Shruti Haasan: பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை உண்மையே

0
Shruti Haasan ஸ்ருதி ஹாசன் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை வெட்கப்படவில்லை

Shruti Haasan: ஸ்ருதி ஹாசன். தான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டது உண்மையே அதைப்பற்றி வெளியில் சொல்ல நான் வெட்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணிப் நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை ஸ்ருதி ஹாசன். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வந்த 7-ஆம் அறிவு படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

Shruti Haasan Love

அதன் பிறகு 3, பூஜை, புலி, வேதாளம், சிங்கம் 3 ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழைத் தவிர, ஹிந்தி, தெலுங்கு ஆகிய மொழிகளிலும் படங்களில் நடித்துள்ளார்.

இவர், லண்டனைச் சேர்ந்த நடிகரும், பாப் பாடகருமான மைக்கேல் கோர்சலே என்பவரை காதலித்து வந்தார்.

இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இதற்கிடையில், இருவரும் பிரிந்துவிட்டதாக செய்திகள் பரவியது.

இதை ஸ்ருதி ஹாசனும் தெளிவாக உறுதி செய்தார். இதையடுத்து, சினிமாவில் இருந்து ஒதுங்கியிருந்த ஸ்ருதி ஹாசன், தற்போது விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தின் மூலம் மீண்டும் எண்ட்ரி கொடுத்துள்ளார்.

பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை

இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் பல்வேறு விதமாக விமர்சனங்களை முன் வைத்தனர்.

சோறு துண்ணலையா? நன்றாக சாப்பிட்டு உங்களது உடல் எடையை கூட்டுங்கள். ஏன் இப்படி மெலுந்து இருக்கிறீர்கள் என்றெல்லாம் விமர்சித்தனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஸ்ருதி ஹாசன் கூறியிருப்பதாவது, ‘என்னைப் பற்றி மற்றவர்கள் என்ன கருத்துக்கள் பதிவிடுகிறார்கள் என்பதைப் பற்றி கவலைப்படுவதில்லை.

மற்றவர்கள் எப்படி என்று தீர்மானிக்க இங்கு யாரும் புகழ்பெற்றவர்கள் அல்ல. யாரும், யாரையும் இவர் அப்படி, அவர் இப்படி என்று ஒரு போதும் தீர்மானிக்க இயலாது.

இது என்னோட வாழ்க்கை. எனது முகம். ஆமாம், நான் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டேன்.

இதை சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. என்னை இன்னும் அதிகமாக நேசிக்க நான் தினமும் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

ஏனென்றால், எனது வாழ்க்கையில் அழகான காதல் கதை என்னிடமே உள்ளது. உங்களுக்கும் இருக்கும் என்று நான் நம்புகிறேன் என்று பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

பூம்பூம் அப்ரிடி பிறந்ததினம் இன்று

0
பூம்பூம் அப்ரிடி பிறந்ததினம்

பூம்பூம் அப்ரிடி பிறந்ததினம் இன்று. பாகிஸ்தான் அதிரடி ஆட்டக்காரர் என்று சொன்னால் உடனே நமக்கு ஞாபகம் வருவது அப்ரிடி தான்.

அதிரடி மன்னன் அஃப்ரீடி

2014 ஆண்டு முன்னாடி வரைக்கும் குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர் அப்ரிடி. 1996 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக 37 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார், 18 வருடமாக இந்த சாதனைக்கு சொந்தக்காரர் தான் அப்ரிடி.

2014 ஆம் ஆண்டு கோரி ஆண்டர்சன் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 36 பந்துகளில் சதமடித்து இவரது சாதனையை முறியடித்தார்.

கோரி ஆண்டர்சன்,ஆண்டர்சன் படைத்த சாதனையை கூட 2015 ஆம் ஆண்டு ஏபி டிவிலியர்ஸ் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 31 பந்துகளில் சதம் அடித்து முறியடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆப்ரிடி அனைத்து நாட்டு ரசிகர்களுக்கும் பிடித்தமானவர், சேவாக் வருகைக்கு முன்னால் வரைக்கும் அதிரடி என்றால் அது அப்ரிடி தான்.

பூம் பூம் அஃப்ரீடி

1980 ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டில் கைபர் பக்துன்வா எனும் ஊரில் பிறந்தவர் தான் ஷாகிப் சாதா முகமது சாகித் கான் அப்ரிடி. இவரை செல்லமாக பூம் பூம் அப்ரிடி என்று அழைப்பார்கள்.

ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் சாகித் அப்ரிடி முதலிடத்தில் இருக்கிறார் 398 போட்டிகளில் 351 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார்.

1996 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அறிமுகமாகி 2018 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி20 போட்டியுடன் விடைபெற்றார்.

27 டெஸ்ட் போட்டி 398 ஒருநாள் போட்டி 99 மற்றும் டி20 போட்டி விளையாடியுள்ளார்.
இவர் விளையாடிய 624 சர்வதேச போட்டிகளில் 11196 ரன்கள் சேர்த்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் 541 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆல்ரவுண்டர் ஆகவும் வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

3

Ponniyin Selvan: குதிரையிலிருந்து தூக்கி வீசப்பட்ட கார்த்தி

0
ponniyin selvan பொன்னியின் செல்வன் கார்த்தி

Ponniyin Selvan:  பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின் போது குதிரையில் அமர்ந்து வாள் சண்டை செய்த கார்த்தி குதிரையால் தூக்கிவீசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Ponniyin Selvan:  பொன்னியின் செல்வன்

மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பிரமாண்ட படம் பொன்னியின் செல்வன். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் முடிக்கப்பட்டது.

இதையடுத்து, தற்போது ஹைதராபாத் பகுதியில் 2-ம் கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கார்த்தி கலந்து கொண்டு நடித்து வருகிறார்.

அப்போது குதிரையில் இருந்தவாறு வாள் சண்டை போடும் காட்சி வந்துள்ளது. இதில், கார்த்தி நடித்துக்கொண்டிருந்த போது குதிரையிலிருந்து கயிறு மூலமாக அப்படியே தூக்கி வீசப்பட்டதாக தெரிகிறது.

இதில், பலத்த காயம் ஏற்படாமல், லேசான காயத்துடன் உயிருக்கு ஆபத்தின்றி தப்பியுள்ளார்.

இப்படத்தில், விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, த்ரிஷா, அதிதி ராவ் ஹைதரி, சரத்குமார், விக்ரம் பிரபு, ரியாஷ் கான், ரகுமான், ஐஸ்வர்யா லட்சுமி, மோகன் ராமன், கிஷோர், லால் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரோடக்‌ஷன்ஸ் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகிறது.

ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த ஆண்டின் இறுதிக்குள் படத்தை முடிக்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனராம்.

இதையடுத்து, வரும் 2021-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கு முன்னதாக கார்த்தி நடிப்பில் கைதி மற்றும் தம்பி ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகியுள்ளது.

இதில், கைதி படத்திற்கு கிடைத்த வரவேற்பும், விமர்சனமும் தம்பி படத்திற்கு கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மைகாலமாக படப்பிடிப்பு தளங்களில் விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் கிரேன் அறுந்துவிழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்து குறித்து விசாரணை நடந்து வரும் நிலையில், சென்னை சாலிகிராமம் பகுதியிலுள்ள சினிமா படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு தளம் முழுவதும் தீயில் எரிந்துள்ளது.

எனினும், இது குறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறையினர் விரைந்து சென்று தீயை முற்றிலும் அணைத்துள்ளனர்.

ஆனால், படப்பிடிப்பு தளத்தில் யாரும் இல்லாததால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது.

3

RSAvsAUS 1st ODI; 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி

0
RSAvsAUS 1st ODI

RSAvsAUS 1st ODI; 74 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்ரிக்கா வெற்றி

ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

டி20 போட்டியில் ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்காவில் தோற்கடித்து, தொடரை வென்றது.

அடுத்ததாக 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில், முதல் ஒருநாள் போட்டி பார்ல் நகரில் உள்ள போலாந்து பார்க் மைதானத்தில் நடைபெற்றது.

RSAvsAUS 1st ODI

டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
தென் ஆப்பிரிக்க அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மலன் மற்றும் டி காக் களம் இறங்கினார்கள்.

ஆஸ்திரேலியா பந்துவீச்சாளர் ஸ்டார்க் வீசிய முதல் ஓவரின் முதல் பந்திலேயே மலன் தனது விக்கெட்டை இழந்தார்.

தென் ஆப்பிரிக்கா 291

கேப்டன் டி காக் 15 ரன்கள், பவுமா 26 ரன்கள், வெர்ரினே 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அந்த அணியின் கிளாஸன் மற்றும் மில்லர் இருவரும் சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்த ஜோடி 149 ரன்கள் எடுத்தது. 50 ஓவர் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 7 விக்கெட் இழப்புக்கு 291 ரன்கள் சேர்த்தது.

தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக கிளாஸ் 123 ரன்களும் மில்லர் 64 ரன்கள் சேர்த்தனர் ஆஸ்திரேலியா அணி தரப்பில் பேட் கம்மின்ஸ் 3 விக்கெட்டும் ஸ்டார்க் 2 விக்கெட்டும் ஹாலிவுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

RSAvsAUS T20: டி20 தொடரை வென்றது ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா தோல்வி

292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய ஆஸ்திரேலியா 45.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் 74 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.

ஆஸ்திரேலியா அணியில் வார்னர் 25, பின்ஸ் 10, ஸ்மித் 76, லோபுசானே 41, மிச்செல் மார்ஸ் 16, ஆர்சி ஷார்ட் 18 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்கள்.

தென் ஆப்பிரிக்கா தரப்பில் லுங்கி நெகிடி 3 விக்கெட்டும் நாட்ஜே மற்றும் ஷாம்சி தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர் இந்த வெற்றியின் மூலம் 3 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் 1 – 0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா முன்னிலை வகிக்கிறது

114 பந்துகளில் 123 ரன்கள் சேர்த்த ஹய்ன்றிச் கிளாசன் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

இரண்டாவது ஒருநாள் போட்டி வருகிற மார்ச் 4ஆம் தேதி புளும்போர்டின் நகரில் இந்திய நேரப்படி மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.

3

தியேட்டர் இல்லாததால் தள்ளிப்போன பரமபதம் விளையாட்டு!

0
பரமபதம் விளையாட்டு

த்ரிஷா நடித்த பரமபதம் விளையாட்டு படம் திரையரங்கம் கிடைக்காமல் ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு இன்று வெளியாவதிலிருந்து தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

த்ரிஷா 60:

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் நடிகை த்ரிஷா. இவர் சினிமாவிற்கு வந்து கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.

அண்மையில், சிம்புவுடன் இணைந்து நடித்த விண்ணைத்தாண்டி வருவாயா படம் வெளியாகி 10 ஆண்டுகள் ஆனதை ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

பரமபதம் விளையாட்டு

இந்த நிலையில், திருஞானம் இயக்கத்தில் 24 ஹவர்ஸ் புரோடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பரமபதம் விளையாட்டு வெள்ளி அன்று வெளியாக இருந்தது.

இது த்ரிஷாவின் 60 ஆவது படம். ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்திற்கு போதிய திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக தேதி குறிப்பிடாமல் படத்தின் ரிலீஸை படக்குழுவினர் தள்ளி வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திரௌபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், காதலில் கட்டுமரமாய், கல்தா, இரும்பு மனிதன் ஆகிய படங்களுடன் இப்படமும் வெளியாக இருந்தது.

ஆனால், த்ரிஷாவிற்கு வந்த சோதனையோ என்னவோ? பரமபதம் விளையாட்டு வெளியாகவில்லை.

புரோமோஷன் நிகழ்ச்சி

இதற்கு முன்னதாக நடந்த படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளாதது ஒரு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

ஹீரோயினை மையப்படுத்திய இந்தப் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியின் ஹீரோயினே கலந்து கொள்ளவில்லை என்றால் என்ன செய்வது என்று பட தயாரிப்பாளரும், நடிகருமானப் சிவா கூறியிருந்தார்.

மேலும், நான் இன்னும், படம் பார்க்கவில்லை. ஆனால், பலரும் படம் பற்றி நல்லவிதமாகவே கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

விளம்பர நோக்கத்தோடு இல்லாமலும், மாஸ் ஹீரோ இல்லாமலும் உருவாக்கப்பட்ட இப்படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் த்ரிஷா கலந்து கொள்ளாதது வருத்தம் அளிக்கிறது.

பொதுவாக, நடிகர், நடிகைகளுக்கு சம்பளம் பேசும்போது எல்லாவிதமான கண்டிஷன்களுக்கு சம்மதம் தெரிவித்துதான் படங்களில் ஒப்பந்தம் செய்யப்படுகிறார்கள்.

அப்படியிருக்கும் போது விளம்பர நிகழ்ச்சியில் மட்டும் கலந்து கொள்ளாத நிலையில், அவரது சம்பளத்தில் இருந்து ஒரு பகுதியை படத்தின் தயாரிப்பாளருக்கு திருப்பித்தர வேண்டும் என்று தயாரிப்பாளர் சங்கத்தின் சார்பாக த்ரிஷாவைப் எச்சரிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு படம் ரிலீசாகும் நேரத்தில் அதன் வெளியீட்டு தேதியிலிருந்து தள்ளிப்போவது கோலிவுட் சினிமாவில் காலம் காலமாக நடந்து வருகிறது.

இது த்ரிஷாவிற்கு மட்டும் நடப்பதில்லை. மாஸ் ஹீரோக்களின் படங்களும் பிரச்சனை காரணமாக பின்வாங்கியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

டசன் டசனாக தமிழ் சினிமாவில் புதிய படங்கள் எடுக்கப்பட்டு வந்த வண்ணம் உள்ளது. ஆனால் ரிலீஸ் தேதி கிடைப்பதில் தான் சிக்கல் ஏற்படுகிறது.

3

விக்ரமின் கோப்ரா ஃபஸ்ட் லுக் பயமுறுத்தியதா?

0
Cobra First Look Release கோப்ரா ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

விக்ரம் நடித்துக் கொண்டு இருக்கும் படம்தான் கோப்ரா. கோப்ரா ஃபஸ்ட் லுக் ரிலீசானது. பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் ஏழு வேடத்தில் உள்ளார்.

டிமான்டி காலனி இமைக்காநொடிகள் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து தான் இந்தப் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்கிறார்.

அந்நியன் படத்தில் விக்ரம் மூன்று கெட்டப்பில் நடித்து அசத்தியிருந்தார். அது வெற்றியும் பெற்றது. அதற்கு முன்னால் சேது, காசி போன்ற படங்களில் தன்னை வருத்திக்கொண்டு நடித்தார்.

சங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த இரண்டாவது படம்தான் 2015 ஆம் ஆண்டு வெளியான ஐ திரைப்படத்தில் விக்ரம் தன்னை முழுமையாக சங்கரிடம் ஒப்படைத்து நடித்தார்.

முதுகு கோணலாகவும் ஜிம் பாடி பாடிபில்டராக நடித்திருந்தார். ராஜபாட்டை என்ற படத்தில் ஒரு பாட்டில் அதிக கெட்டப்பில் வந்திருப்பார் விக்ரம்

டைரக்டர்களுக்கு பிடித்தமான ஒரு நடிகர் தன் உடம்பை வருத்திக் கொண்டு நடிப்பதில் வல்லமை மிக்கவர். ஆனால் கதை தேர்வில் தான் எங்கோ கோட்டை விடுகிறார்.

கடைசியாக விக்ரமுக்கு படங்கள் எதுவும் சரியாகப் போகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடைசியாக வந்த 10 எண்றதுக்குள்ள, ஸ்கெட்ச், இருமுகன், கடாரம் கொண்டான், சாமி ஸ்கொயர் போன்ற படங்கள் சுமாராகவே ஓடியது.

தமிழ் நாட்டில் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது அவரைப் பிடிக்காதவர்கள் இருக்க வாய்ப்பே இல்லை.

இந்த நிலையில் பிப்ரவரி 28-ஆம் தேதி மாலை கோப்ரா பர்ஸ்ட் லுக் வெளியானது. பர்ஸ்ட் லுக்கில் விக்ரம் பல கெட்டப்பில் தோன்றி அசத்தியிருந்தார்.

ஃபர்ஸ்ட் லுக்கை பார்த்தவுடனே ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் ஆர்வம் தொற்றிக்கொண்டது. விக்ரம் வழக்கம் போல தன் உடம்பை வருத்திக் கொண்டு இந்த படத்தில் நடித்திருக்கிறார் என்று தெரிகிறது.

பார்த்த உடனே விக்ரம் தானா என்பது கண்டுபிடிப்பது கடினம். அந்த அளவுக்கு ரசிகர்களை பயமுறுத்திருக்கிறது இந்த கோப்ரா.

டிமான்டி காலனி, இமைக்காநொடிகள் படங்கள் நல்ல கதையம்சத்துடன் இயக்கியிருந்தார் அஜய் ஞானமுத்து. ஆகையால் இப்படமும் நல்ல கதையோட இருக்கும் என்பது சந்தேகமே இல்லை.

3