Home Blog Page 266

டெல்லி தேர்தல்: அடிச்சி தூக்கும் ஆம் ஆத்மி கட்சி

2
டெல்லி தேர்தல்: அடிச்சி தூக்கும் ஆம் ஆத்மி கட்சி

டெல்லி சட்டமன்ற தேர்தல் கருத்துக்கணிப்புகள் ஆளும் ஆம் ஆத்மி கட்சிக்கு சாதகமாக உள்ளது. கெஜ்ரிவால் மீண்டும் பிரதமராக வர வாய்ப்புள்ளது.

டெல்லி சட்டமன்ற தேர்தல் 2020

தலைநகர் டெல்லியில் வருகின்ற 8 தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எனவே, பல்வேறு தேர்தல் வியூகங்களுடன் அரசியல் கட்சிகள், சூறாவளி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

குறிப்பாக தேர்தல் வித்தகர் என்றழைக்கப்படும் பீகாரைச் சேர்ந்த பிரசாந்த் கிசோருடன் ஆளும் ஆம் ஆத்மி கட்சி இணைந்து தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது.

அதே போன்று தேசிய கட்சியான பாஜகவும் தன் பங்குக்கு அனைத்து மட்டத்திலும் தேர்தல் பிரச்சாரத்தை செய்து வருகின்றன.

தேர்தல் வெற்றிக்காக அரசியல் கட்சிகளால் வெளியிடப்படும் தேர்தல் அறிக்கைகளும் அனைத்து கட்சிகளாலும் வெளியிடப்பட்டு விட்டன.

வரலாறு காணாத இலவச திட்டங்கள்

மேலும் இந்த முறை வரலாறு காணாத வகையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சியும் தேசிய கட்சிகளான பாஜகவும் காங்கிரஸும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மக்களுக்கு இலவசங்களைத் தருவதாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்துள்ளன.

அது மட்டுமின்றி அனல் பறக்கும் மதம் மற்றும் அண்மையில் கொண்டு வரப்பட்ட குடியுரிமை சட்டம் சார்ந்த பிரச்சினைகளும் பிரச்சார கூட்டங்களில் பேசப்பட்டு வருகின்றன.

இதனிடையே பிரபல ஆங்கில ஊடகமான டைம்ஸ் நவ் மற்றும் சந்தை ஆய்வு நிறுவனமான இப்ஸ்கொஸ் ஆகியவை இணைந்து நடத்திய தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் ஆளும் ஆம் ஆத்மீ கட்சி மீண்டும் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு சதவீதம்

மேலும் வாக்கு சதவீதப்படி சுமார் 52% வாக்குகளை ஆம் ஆத்மியும் 33% வாக்குகளை தேசிய கட்சியான பாஜகவும் பெறுகின்றன என தெரிய வந்துள்ளது.

மேலும் தொகுதி அடிப்படையில் பார்த்தால் மொத்தமுள்ள 70 தொகுதிகளில் சுமார் 52 முதல் 60 இடங்கள் வரை ஆம் ஆத்மி கட்சி பெறும் எனவும் மற்றும் சுமார் 10 முதல் 14 இடங்கள் வரை பாஜக பெறும் எனவும் முடிவில் தெரிய வந்துள்ளது.

இருப்பினும் ஆளும் ஆம் ஆத்மீ கட்சி சுமார் 2.8% வாக்குகளை இழக்கிறது எனவும் பாஜக 1.7% வாக்குகளை கூடுதலாகப் பெறும் எனவும் தெரியவந்துள்ளது.

முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆளும் ஆம் ஆத்மீ கட்சி சுமார் 2.8% வாக்குகளை இழந்து மிக சிறிய பின்னடைவை சந்திக்கும்.

எனினும் பெரும்பான்மைக்கு தேவையான 36 இடங்களை விட கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அதே போன்று தேசிய கட்சியான பாஜக இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விடவும் சுமார் 1.7% வாக்குகள் கூடுதலாக பெற்றாலும் வெறும் 10 முதல் 14 இடங்கள் வரை மட்டுமே வெல்ல முடியும் என்பது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

இது ஒரு புறம் இருந்தாலும் அண்மையில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத்திருத்த சட்டத்திற்கு டெல்லி வாழ் மக்கள் சுமார் 71% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்பதும் இந்த கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது.

ஆனால் இந்த ஆதரவு பாஜகவுக்கு வாக்குகளாக மாறவில்லை என்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.

மேலும் முந்தைய தேர்தல் முடிவுகளுடன் ஒப்பிடுகையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி சுமார் 2.8% வாக்குகளை இழந்து மிகச்சிறிய பின்னடைவை சந்திக்கும்.

எனினும் பெரும்பான்மைக்குத் தேவையான 36 இடங்களை விட கூடுதலாக 25 இடங்கள் கிடைக்கும் என்பது தெரிய வந்துள்ளது.

அதேபோன்று தேசிய கட்சியான பாஜக இந்த தேர்தலில் கடந்த தேர்தலை விடவும் சுமார் 1.7% வாக்குகள் கூடுதலாக பெற்றாலும் வெறும் 10 முதல் 14 இடங்கள் வரை மட்டுமே வெல்ல முடியும் என்பது இந்த கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.

நாடாளுமன்ற தொகுதிகள்

மேலும் தற்போதை சூழ்நிலையில் நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு வாக்கு பதிவு நடை பெற்றால் மீண்டும் பாஜகவே அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றும் எனவும் தெரிய வந்துள்ளது.

இதிலிருந்து சட்டமன்றத்தில் ஆம் ஆத்மீக்கும் நாடாளுமன்றத்தில் பாஜகவுக்கும் டெல்லி மக்கள் ஆதரவு தெரிவிக்கின்றனர் என்பது புலனாவதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

எனினும் தேர்தல் பிரச்சாரம் வரும் வியாழக்கிழமையுடன் நிறைவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

3

5-8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு

0
5-8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து - தமிழக அரசு அறிவிப்பு

5-8ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து – தமிழக அரசு அறிவிப்பு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழகத்தில் 5-ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடத்தப்படும் என்று இதுவரை அறிவித்து வந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை இன்று அதிரடியாக அந்த அறிவிப்பை ரத்து செய்தது.

அமைச்சர் செங்கோட்டையன் அறிக்கை

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று திடீர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் 5, 8-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு உள்ளது பழைய தேர்வு முறையே தொடரும் என்பதாகும்.

பள்ளிக்கல்வித்துறையின் அரசாணை

13.9.2019 அன்று பள்ளிக் கல்வித்துறை சார்பில் அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் மத்திய அரசின் அறிவிப்பை ஏற்றுக்கொண்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்புகளும் கடும் விமர்சனங்களும் வந்த வண்ணம் இருந்தது. இருப்பினும் இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாத தமிழக அரசு வரும் மார்ச் மாதம் தேர்வு தொடங்க விருப்பதாக அறிவிப்பை வெளியிட்டு மேலும் அனைவரையும் அதிர்ச்சியடையச் செய்தது.

பலத்த எதிர்ப்புகள்

தமிழகத்தில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்ற தமிழக அரசின் முடிவிற்கு எதிர்க்கட்சிகளும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

மேலும் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும் குற்றச்சாட்டுகள் எழுந்தது. எதையும் இதுவரை கண்டுகொள்ளாத அரசு திடீரென இன்று தனது முடிவை திரும்ப பெற்றுள்ளது.

அமைச்சரவைக் கூட்டம்

இந்த சூழ்நிலையில் தமிழ்நாடு அமைச்சரவை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று கூடியது.

இதன்பின்னர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பத்திரிக்கையாளர்களை சந்தித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில் அவர் கூறியவதாவது, கடந்த செபடம்பர் 13-ம் தேதி வெளியிட்ட அறிக்கையை ரத்து செய்வதாகவும் பழைய முறைப்படியே தேர்வுகள் நடைபெறும் என்பதாகும்.

3

ஒருநாள் போட்டி: இந்தியாவின் பாட்ஷா பழிக்கவில்லை

0
ஒருநாள் போட்டி: இந்தியாவின் பாட்ஷா பழிக்கவில்லை

ஒருநாள் போட்டி: இந்தியாவின் பாட்ஷா பழிக்கவில்லை. நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா 347 ரன்கள் குவித்தும் தோல்வியைத் தழுவியுள்ளது.

NZvIND T20

நியூசிலாந்து அணியை டி20 தொடரில் ஒரு போட்டியில் கூட வெற்றி பெற விடாமல் 5 போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்றது.

இதில் இரண்டு முறை சூப்பர் ஓவர் வரை சென்று மிகவும் த்ரில் சீரியசாக இந்த டி20 தொடர் அமைந்தது. பல சுவாரஸ்ய திருப்புமுனை கொண்ட தொடராக இது இருந்தது.

ஆனால், நடைபெற்று முடிந்த ஒருநாள் போட்டி தொடரின் முதல் போட்டியில் இந்தியாவின் பாட்ஷா பழிக்கவில்லை. நியூசிலாந்து வெற்றி பெற்றது.

NZvIND ODI 1st Match

நியூசிலாந்து vs இந்தியா முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 347 ரன்கள் எடுத்தது. சௌதி 2 விக்கெட்டுகளும்; கோலின், சோதி ஆகியோர் 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

ஷ்ரேயாஸ் அய்யர் முதல் சதம்

இன்றைய போட்டியில் ஒப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கிய பிரித்விஷா 20, மயங்க் அகர்வால் 32 ரன்களில் அவுட் ஆகினர்.

அதன்பிறகு விராட் கோலி ஸ்ரேயாஸ் அய்யர் இருவரும் இணைந்து ரன் வேட்டையை துவங்கினர். விராட் கோலி 51 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

ஷ்ரேயாஸ் அய்யர் – கே.எல்.ராகுல் ஜோடி மளமளவென ரன்களைக் குவித்து இந்தியாவின் ஸ்கோரை உயர்த்தினார்.

ஷ்ரேயாஸ் அய்யர் இன்றைய போட்டியில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். 103 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கே.எல்.ராகுல் இறுதிவரை நின்று ஆடி 88 ரன்கள் குவித்தார்.  மறுமுனையில் கேதர் ஜாதவ் 26 ரன்கள் எடுத்தார்.

ராஸ் டெய்லர் விஸ்வரூபம்

பின்னர் களம் இறங்கிய நியூசிலாந்து அணி ஆரம்பம் முதல் பொறுமையாக விளையாடியது. ரன் சற்று மந்தமாகவே வந்தது.

ஹென்றி  78 ரன்கள், குப்தில் 32 ரன்கள், பிலுண்டெல் 9 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தனர். ரஸ் டெய்லர் அந்த சமயத்தில் சற்று கடினமான கேட்ச் கொடுத்தார்.

ஆனால் அதை குப்தில் பிடிக்கமால் விட்டு விட்டார். அதன் பிறகு ரஸ் டெய்லர் விக்கெட்டை கைபற்றவே முடியவில்லை.

ஓவர்கள் குறையக் குறைய ராஸ் டெய்லர் ரன் வேட்டை அதிகரித்துக்கொண்டே இருந்தது. 48.1 ஓவரில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் இழந்து 348 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

டாம் லதம் 69 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இறுதிவரை களத்தில் நின்று நியூசிலாந்து அணியை வெற்றிபெற வைத்த ராஸ் டெய்லர் 84 பந்துகளில் 109 ரன்கள் குவித்தார்.

3

நாடோடிகள்: விஜய்க்கு வில்லன்‌ எஸ்.ஏ.சி.

0
நாடோடிகள்: விஜய்க்கு வில்லன்‌ எஸ்.ஏ.சி.

நாடோடிகள்: விஜய்க்கு வில்லன் எஸ்.ஏ.சி. விஜய் நடிக்க வேண்டிய பல சூப்பர் ஹிட் படங்கள் தவறிப்போனதற்கு காரணம் எஸ்.ஏ.சி. சமுத்திரக்கனி நாடோடிகள் பற்றி கூறியுள்ளார்.

நாடோடிகள் முதல் பாகம்

2009 ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் நாடோடிகள். இந்த திரைப்படம் வியாபார ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.

சமுத்திரக்கனி என்னும் இயக்குனருக்குள் இப்படியொரு திறமை இருக்கிறதா? என்று ஆச்சரியம் வர செய்தது மட்டுமல்லாமல், சசிகுமாருக்கு நடிகர் என்ற அங்கீகாரம் பெற்று தந்த திரைப்படம்.

இந்த திரைப்படத்தை உருவாக்குவதற்காக பல நடிகர்களுக்கு கதை சொல்லிருக்கிறார் சமுத்திரக்கனி. ஆனால் பல முன்னணி நடிகர்கள் நிராகரித்திருக்கிறார்கள்.

ஏனென்றால் அதற்கு முன்பு இவர் இயக்கிய உன்னை சரணடைந்தேன் மற்றும் நெறஞ்ச மனசு திரைப்படங்களின் படுதோல்வி முன்னனி நடிகர்களை நிராகரிக்க வைத்திருக்கிறது.

இருப்பினும் தன் கதையின் மீது உள்ள நம்பிக்கையால் தனக்கு வில்லன் வேடம் கொடுத்து தன்னை நடிகனாக முன்னிறுத்திய இயக்குனரை தன் கதையின் நாயகனாய் அதில் வெற்றியும் கண்டார் சமுத்திரக்கனி.

நாடோடிகள் படத்தில் நடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்ட முன்னணி நடிகரைப் பற்றி  சமீபத்திய பேட்டி ஒன்றில் சமுத்திரக்கனி கூறியுள்ளார்.

நாடோடிகள் கதையை நிராகரித்த எஸ்.ஏ.சி

இந்தக் கதையை உச்ச நடிகர் இளைய தளபதி விஜய் அவர்களிடம் சொல்வதற்கு சென்றேன். பொதுவாக விஜய் படங்களுக்கு அவருடைய அப்பா கதை கேட்பது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.

அதுபோலத்தான் விஜய்யின் தந்தை சந்திரசேகர் கதையை கேட்டு விட்டு; ‘தம்பி’, இதுபோன்ற கிராமத்து கதைகளில் நடிப்பதில்லை. அதுவும் நீங்க மூன்று ஹீரோ கதைக்களம் என்று கூறுவதால் இது தம்பிக்கு செட் ஆகாது என்று இந்த படத்தை தவிர்த்து விட்டார் சந்திரசேகர்.

தமிழ் சினிமா வட்டாரத்தில் ஒரு பேச்சு உண்டு. விஜய் நடிக்க வேண்டிய சூப்பர் ஹிட் திரைப்படங்கள் நழுவி போனதற்கு விஜய்யின் தந்தை தான் காரணம் என்ற பேச்சு உண்டு.

அதை நிரூப்பிக்கும் வகையில் சமுத்திரக்கனி சொல்லிருப்பது, இது உண்மைதான் போல என்று யோசிக்க வைக்கிறது. எது எப்படியோ? நாடோடிகள் போன்ற மெகா ஹிட் படத்தை விஜய் தவிர்த்தது வருத்தமான விஷயமே.

இதை அறிந்த விஜய் ரசிகர்கள் இப்படியொரு மெகாஹிட் படத்தை மிஸ் செய்து விட்டாரே நம் தளபதி என்று ஏங்கி வருகிறார்கள்.

பிம்பதிற்குள் நடிகர்கள்

பொதுவாகவே உச்சத்தில் இருக்கும் நடிகர்கள் ஒரு பிம்பத்திற்குக்குள் மாட்டி கொள்கிறார்கள். அதனால் தன்னை ரசிகர்கள் எப்படி பார்க்க விரும்புகிறார்களோ, அப்படியே பயணிக்க விரும்புகிறார்கள்.

இதை தவறு என்று சொல்லவில்லை. ஆனால் அவர்களுக்குள் இருக்கும் ஒரு நடிகனை இழந்து இமெஜ் என்ற வட்டத்துக்குள் சிக்கி தவிக்கிறார்கள்.

இதை ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா? என்ற எண்ணத்திலேயே நல்ல கதைகளை தவிர்த்து விடுகிறார்கள்.

நாயகன் போக்கில் கதை

உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் நல்ல கதைகளில் தங்களின் நடிகர்களைப் பார்க்க விரும்புகிறார்கள். ஆனால், நடிகர்கள் சரியாக வருமா என்ற தயக்கத்தில் நல்ல கதைகளைத் தவிர்த்து விடுகிறார்கள்.

நாயகன் போக்கில் கதை பயணிக்காமல், கதையின் போக்கில் நாயகனாய் பயணித்தால் அனைத்து தரப்பும் ரசிகர்களும் விரும்பும் நாயகனாய் மாறலாம் என்பது இதர ரசிகர்களின் கருத்து.

விஜய்க்கு வில்லன் எஸ்.ஏ.சி.

சமீபத்தில் விஜய்யின் டிராக் சற்று மாறியுள்ளது. பழைய இயக்குனர்களை ஓரங்கட்டிவிட்டு ஹிட் படங்கள் கொடுத்து வரும் புதுமுக இயக்குனர்களுடன் கைகோர்க்க துவங்கியுள்ளார்.

இது சற்று ஆரோக்கியமான விஷயம். இனி வரும் படங்களின் விஜய் வித்தியாசமான கதைகளில் நடிப்பார் என்றே தோன்றுகிறது.

பார்ப்போம் இனி விஜய்க்கு கிடைக்கும் நல்ல கதைகளை தடுக்கும் வில்லன்‌ எஸ்.ஏ.சி. ஆக இருக்கமாட்டார் என நம்புவோமாக.

3

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை

0
தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு பிரகதீஸ்வரர் ஆலயம் குடமுழுக்குகு நேரலை

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு நேரலை. பல்வேறு தொலைக்காட்சிகள் மற்றும் சமூக வலைத்தளங்களில் நேரலை காணலாம். பிரகதீஸ்வரர் ஆலயம் குடமுழுக்கு

பிரகதீஸ்வரர் ஆலயம் குடமுழுக்கு

தஞ்சை பெரிய கோவில் என்று அழைக்க கூடிய பிரகதீஸ்வர் ஆலயத்தில் 05 பிப்ரவரி 2020 ஆம் ஆண்டு அதாவது இன்று குடமுழுக்கு விழா மிக சிறப்பாக நடைபெறவுள்ளது.

கடந்த 1997 ஆம் ஆண்டு தஞ்சாவூர் பெரிய கோவிலில் குடமுழுக்கு விழாவின் போது மிக பெரிய தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் பலி, 200 கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

அதனால் இந்த வருடம் அதுபோல் அசம்பாவிதம் ஏதும் நேராமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப் படுத்தபட்டுள்ளது.

பெரிய கோவில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மோப்ப நாய்களின் உதவியுடன் வெடிகுண்டு சோதனை செய்யப்பட்டுள்ளது.

தஞ்சை வரும் அனைத்து பயணிகளின் உடைமைகள் 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்புடன் சோதனை செய்யப்பட்டு பின்னர் அனுமதிக்கபடுகின்றனர் .

300 அடி ஏணி

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழாவுக்காக, 300 அடி உயரமுள்ள ஏணியுடன் கூடிய, அதிநவீன ஹைட்ராலிக் பிளாட்பார்ம் தீயணைப்பு வாகனம், முதன்முறையாக வரவழைக்கப்பட்டுள்ளது.

தஞ்சை பெரிய கோவிலின் பின்புறம் 11, 900 சதுர அடி பரப்பளவில் மிகப்பெரிய யாக சாலை அமைக்கப்பட்டுள்ளது.

பின்லாந்து தீயணைப்பு வாகனம்

தீயணைப்பு மற்றும் மீட்புத்துறைக்காக பின்லாந்து நாட்டிலிருந்து 17 கோடி ரூபாய் மதிப்பில் இந்த வாகனம் வாங்கப்பட்டுள்ளது.

யாக சாலை பந்தலில் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தீ அணைப்பு வீரர்கள் தீயை அணைக்க கூடிய உபகரணங்களுடன் தயார் நிலையில் உள்ளனர்.

யாகசாலை பூஜை தொடங்கும் நாளில் இருந்து 10 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்காக பல சிறப்பு ஏற்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

புண்ணிய ஆறுகள் புனித நீர் 

கங்கை, யமுனா, கோதாவரி, தாமிரபரணி உள்ளிட்ட பல்வேறு புண்ணிய ஆறுகளில் இருந்தும் புனிதநீர் கொண்டு வரப்பட்டு பெரியகோவிலில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புனிதநீர் அனைத்தும் ஒன்றாக கலக்கப்பட்டு கலசங்களில் ஊற்றப்பட்டு யாகசாலையில் வைக்கப்படுகிறது.

தமிழக அரசு பெரிய கோவிலின் குடமுழுக்கு விழாவிற்கு அதிகஅளவு முன் எச்சரிக்கை ஏற்பாடுகள் செய்துள்ளது.

குடமுழுக்கு இன்று நேரலை

குடமுழுக்கு விழாவை தஞ்சாவூர் சென்று நேராக சென்று காண முடியவில்லை என்றால் கவலை வேண்டாம். இதை பல்வேறு தொலைக்காட்சிகள் நேரலையில் ஒளிபரப்பு செய்ய உள்ளனர்.

அதேபோல் சமூக வலைதங்கள் மூலமும் நேரடி ஒளிபரப்பு செய்ய பலர் முடிவு செய்துள்ளனர்.

3

Vaanam Kottatum – வானம் கொட்டட்டும்: பிப்ரவரி 7 முதல்

0
vaanam kottatum வானம் கொட்டட்டும்

Vaanam Kottatum – வானம் கொட்டட்டும் தியேட்டரில் பிப்ரவரி 7-ம் தேதி முதல் காட்சிகளாக கொட்டத்தொடங்குகிறது!

Vaanam Kottatum – வானம் கொட்டட்டும்

மணிரத்னம் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான “மெட்ராஸ் டாக்கீஸ்” தயாரித்துள்ள திரைப்படம் “வானம் கொட்டட்டும் “.

சரத்குமார், ராதிகா, விக்ரம்பிரபு, சாந்தனு, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற நடிகர் பட்டாளத்தை கொண்டுள்ளது இப்படம்.

மேலும், இப்படத்தின் மூலம் பிரபல பாடகர் “சித் ஶ்ரீராம்” இசையமைப்பாளராக அறிமுகமாகி இருக்கிறார். வெளிவந்த பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.

படத்தின் டீசரும் , ட்ரைலருமே ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான நல்ல  பிம்பத்தைதான் ஏற்படுத்தியுள்ளன.

கதை மணிரத்னம்

வானம் கொட்டட்டும் படத்தில் ஒரு அபூர்வம் நிகழ்ந்திருக்கிறது. அது என்னவென்றால் இப்படத்தின் கதை மணிரத்னம் அவர்களால் எழுதப்பட்டது.

ஆம்! அவர் எழுதிய கதையைத்தான் படமாக இயக்குகிறார் ‘தனா’. இவர் ஏற்கனவே படைவீரன் எனும் படத்தையும் இயக்கியுள்ளார். அதுமட்டுமில்லாது, இவர் மணிரத்னம் அவர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.

சரத்குமார் – ராதிகா ரீல் அண்ட் ரியல்

நிஜவாழ்வில் கணவன் மனைவியாக வாழ்ந்து வரும் சரத்குமார் மற்றும் ராதிகா இப்படத்திலும் கணவன் மனைவியாகவே நடிக்கின்றனர்.

பல வருடங்களுக்குப் பிறகு இருவரையும் ஒருசேர ஜோடியாக திரையில் காண்பதற்கும் அவர்களுக்கு இடையேயான உரையாடல்களைக் கேட்பதற்கும் ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

விக்ரம் பிரபு – சாந்தனு காம்பினேசன்

விக்ரம்பிரபுவுக்கும் சாந்தனுவுக்கும் இது ஒரு நல்ல படமாக அமையுமா? என்ற கேள்வியும் உள்ளது.

எனெனில், கடந்த சில காலங்களாக பெரிதாக பெயர் சொல்லும்படியாக இவர்கள் நடித்த எந்த திரைப்படமும் வெற்றி பெறவில்லை. இப்படம் அதை மாற்றினால் நன்றாக இருக்கும் என்பது பலரின் ஆசை.

ஐஸ்வர்யா ராஜேஷ் தொடர்ந்து தனது நடிப்பாலும்,தேர்ந்தெடுக்கும் படங்களாலும் ரசிகர்களை
கவர்ந்தபடியே இருக்கிறார். இப்படத்திலும் அவர் ரசிகர்களை கவர்ந்து செல்வாரா என்று பார்ப்போம்.

Vaanam Kottatum Sneak Peak

சமீபத்தில் வெளியான Vaanam Kottatum Sneak Peak வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

படக்குழு வெளியிட்ட இக்காட்சிகளில் வரும் வசனங்களும் காட்சியமைப்பும் அழகாக இருக்கிறது. அவ்வழகுக்கு பின்னனியில் பேரழுகு செய்கிறது இசை.

மணிரத்னம் இயக்காத படம்

ஏறத்தாழ பதினெட்டு வருடங்களுக்குப் பிறகு மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பு நிறுவனம் மணிரத்னம் இயக்காத ஒரு படத்தை வெளியீடுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

வானம் கொட்டட்டும் திரைப்படம் பிப்ரவரி ஏழாம் தேதி திரைக்கு வருகிறது. சினிமாக்களில் லாபத்தையும், ரசிகர்களிடமிருந்து பாராட்டையும் இத்திரைப்படம் கொட்டச்செய்கிறதா எனப் பொறுத்திருந்து பார்ப்போம்.

3

இன்றைய ராசி பலன்: தின ராசிபலன்: 5/2/2020

1
6/2/2020 Horoscope இன்றைய ராசி பலன்: தின ராசிபலன்: 5/2/2020.

இன்றைய ராசி பலன்: தின ராசிபலன்: 5/2/2020. மேஷம், ரிஷபம், மிதுனம்,  கடகம், சிம்மம், கன்னி, துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசி காரர்களே!

மேஷம் ராசிபலன்

சுபச் செலவுகள் அதிகரிக்கும். மனைவி குழந்தைகளுக்காக அதிகம் செலவு செய்ய நேரிடும். சிறு தொலைவு பயணங்களில் கவனம் தேவை. வீடு சார்ந்த கட்டட ஆலோசனை வெற்றி பெறும் நாள்

அதிர்ஷ்ட எண் – 1; நிறம் – மாணிக்கப் பச்சை.

ரிஷபம் ராசிபலன்

வேலைபார்க்கும் அலுவலகத்தில் மிகக் கவனமாக இருக்க வேண்டிய நாள். பொறுமையே இங்கு பிரதானமாகத் தேவைப்படுகிறது. வேலைகளில் பிறர் உங்களை குற்றம் சுமத்தும்படியாகிவிடும்.

அதிர்ஷ்ட எண் – 5; நிறம் – இலைப்பச்சை.

மிதுனம் ராசிபலன்

சந்திரன் ராசியிலேயே சஞ்சரிப்பதால் உடல்நலத்தில் மிகவும் அக்கறை தேவைப்படும் நாள். எதிரிகளின் பலம் அதிகரிக்கும் நாள். தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும்.

அதிர்ஷ்ட எண் – 5; நிறம் – வெள்ளை.

கடகம் ராசிபலன்

நன்மை பொருந்திய நாளாகக் காணப்படுகிறது. வேலை வாய்ப்பு கிடைக்கும் நாள். முயற்சித்தால் நல்ல வேலை கிட்டும். பழைய நண்பர்களை மீண்டும் சந்தித்து மகிழ்வதற்கான சந்தர்பம் அமையும்.

அதிர்ஷ்ட எண் – 9; நிறம் – பவள வண்ணம்.

சிம்மம் ராசிபலன்

மிகவும் சந்தோஷமான நாளாக அமையும். வெற்றிகளைக் குவிக்கும் நாளாகக் காணப்படுகிறது. மாலை நேரம் மிகுந்த நல்ல செய்திகள் வந்த வண்ணம் இருக்கும். எடுத்த காரியத்தில் வெற்றி.

அதிர்ஷ்ட எண் – 3; நிறம் – நீலம்.

கன்னி ராசிபலன்

அமோகமான நாள். தொலைதூரத்திலிருந்து நல்ல மகத்துவமான செய்திகள் வரும். ஆலய வழிபாடு நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.

அதிர்ஷ்ட எண் – 4; நிறம் – காக்கி

துலாம் ராசிபலன்

மிகவும் தீர்க்கமான சிந்தனைகள் மேலோங்கக் கூடிய நாள். காலை நேரத்தில் கோப தாபங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாலை நேரத்தில் சிறந்த மகிழ்ச்சிகள் காணப்படுகிறது.

அதிர்ஷ்ட நிறம் – 7; நிறம் – ரோஜாக்கலர்.

விருச்சிகம் ராசிபலன்

அற்புதமான வெற்றிகளைக் குவிக்கும் நாள். எல்லாவிதமான சௌகரியங்களும் அமைந்துவிடும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமையும்.

அதிர்ஷ்ட நிறம் – மஞ்சள், எண் – 4

தனுசு ராசிபலன்

மிகவும் உற்சாகமான நாள். பிசினஸ் தொடர்பான முன்னேற்றம் உண்டு. உங்கள் குழந்தைகளுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு கிடைக்கும். வேலை சம்மந்தமான காரியங்கள் கைகூடும்.

அதிர்ஷ்ட எண் – 9; நிறம் – அடர்சிவப்பு.

மகரம் ராசிபலன்

அரசல் புரசலான பேச்சைத் தவிர்ப்பது நலம். சுற்றியிருப்பவர்கள், நண்பர்கள், உறவினர்களிடத்தில் அடக்கமாகப் பேசுவது அவசியம். தொழிலில் வெற்றி உண்டு.

அதிர்ஷ்ட எண் – 6; நிறம் – வெள்ளை.

கும்பம் ராசிபலன்

கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். நாள்முழுக்க நமச்சிவாய நாமம் ஜபித்தல் நலம். இருப்பினும் காரியங்கள் அனைத்தும் கைகூடும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 5; நிறம் – மரகதம்.

மீனம் ராசிபலன்

பொன்னான நாள். நீண்டநாள் கவலைகள் தீரும் நாள். அனைத்திலும் வெற்றியும் மகிழ்ச்சியும் காணப்படுகிறது. எண்ணற்ற சந்தோஷங்கள் நிரம்பி வழியும் நாள்.

அதிர்ஷ்ட எண் – 2; நிறம் – ஊதா.

இன்றைய ராசி பலன்: தின ராசிபலன்: 5/2/2020. அனைவரும் பயன்பெற நலமுடன் இருக்க மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துக்கள். 4/5/2020 ராசிபலன் 

நாளைய ராசிபலன் 6/2/2020 Horoscope

3

NZ vs IND ODI 2020: இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா?

0
NZ vs IND ODI 2020 NewZealand vs India நியூசிலாந்து vs இந்தியா

NZ vs IND ODI 2020: இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? நியூசிலாந்து vs இந்தியா (NewZealand vs India) ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.

இந்தியா மற்றும் நியூசிலாந்து (NewZealand vs India) கிரிக்கெட் அணிகளுக்கு இடையே நடைபெற்ற டி-20 போட்டியைத் தொடர்ந்து இன்று முதல் ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.

விராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி டி-20 தொடரில் நியூசிலாந்தை 5-0 என்ற கணக்கில் முழு வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இந்தியா vs நியூசிலாந்து ஒரு நாள் போட்டி

இன்று ஹேமில்டனில் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் ஒரு நாள் போட்டி (NZ vs IND ODI 2020) தொடங்கவுள்ள நிலையில், இப்போட்டிகளில் இந்திய அணி தன்னுடைய அபார ஆட்டத்தைத் தொடருமா? என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

இன்று முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும், வரும் எட்டாம் தேதி முதல் இரண்டாவது ஒருநாள் போட்டியும், 11-ம் தேதி மூன்றாம் ஒருநாள் கிரிக்கெட் போட்டியும் நடைபெற உள்ளது.

இந்தியா vs நியூசிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் போட்டி

இதனைத் தொடர்ந்து 2 டெஸ்ட் போட்டிகளில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி விளையாட உள்ளது.

இப்போட்டிகள் வருகின்ற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா காயம் காரணமாக விலகல்

இதற்கிடையே கடந்த 3-ம் தேதி நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான கடைசி டி20 போட்டியில் ஆடிய இந்திய அணியின் துணைக்கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங் செய்யும் போது ஏற்பட்ட தசைப்பிடிப்பால் அவதிப்பட்டார். இதனால் 60 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

அதன்பின் காயம் காரணமாக பீல்டிங் செய்ய வரவில்லை. தசைப்பிடிப்பு முழுமையாகக் குணமடையாததால் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து ரோகித் சர்மா விலகியுள்ளதாக இந்திய அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரோகித் சர்மாவிற்கு எடுக்கப்பட்ட எம்.ஆர்.ஐ ஸ்கேனில் காயம் முழுமையாகக் குணமடையாததால் ஒருநாள் போட்டிகள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் அவருக்குப் பதிலாக மயங்க் அகர்வால் சேர்க்கப்பட்டுள்ளார் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.

தொடக்க வீரர் ரோகித்சர்மா காயத்தால் ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்டில் விலகி இருப்பது அணிக்கு மிகப்பெரிய பாதிப்பே என கிரிக்கெட் வட்டாரங்கள் கருதுகின்றன.

இதனால் லோகேஷ் ராகுலும், அகர்வால் தொடக்க ஆட்டக்காரர்களாகக் களம் இறங்குவார்கள். கேப்டன் விராட்கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், மனீஷ்பாண்டே ஆகியோரும் பேட்டிங்கில் நல்ல நிலையில் உள்ளனர்.

நியூசிலாந்து கேப்டன் விலகல்

அதிரடி ஆட்டக்காரரான ரோகித் சர்மாவினை தொடர்ந்து 3-வது டி20 ஆட்டத்தில் இடது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான முதல் இரு ஒருநாள் ஆட்டங்களிலிருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகியுள்ளார்.

இதனால் முதல் இரு ஒருநாள் ஆட்டங்களின் நியூசிலாந்து கேப்டனாக டாம் லதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

தற்போது ஓய்வில் உள்ள வில்லியம்சன், பிப்ரவரி 11 அன்று நடைபெறவுள்ள 3-ம் ஒருநாள் ஆட்டத்தில் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் இரு ஒருநாள் போட்டிகளிலிருந்து வில்லியம்சன் விலகலை அடுத்து, மார்க் சேப்மேன் நியூசிலாந்து ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

3

தஞ்சை பெரிய கோவில்: கோலாகல குடமுழுக்கு!

1

தஞ்சை பெரிய கோவில்: 23 ஆண்டுகளுக்கு பின் கோலாகல குடமுழுக்கு விழாவிற்கு ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெருவுடையார் கோவில் தயாராகி வருகிறது.

23 ஆண்டுகளுக்கு பிறகு தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு விழா வரும் 5-ம் தேதி (புதன்கிழமை) நடைபெறவுள்ளது. இதனால் தஞ்சை முழுவதும் விழாக்கோலமாய் காட்சி அளிக்கிறது.

தஞ்சை பெரிய கோவில்

தஞ்சை பெரிய கோவில்: கோலாகல குடமுழுக்கு!

ராஜராஜ சோழன் மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு, இன்றும் கட்டிடக்கலைக்கு உதாரணமாய் விளங்கும் தஞ்சை பெரிய கோவிலின் குடமுழுக்கு விழா வெற்றிகரமாக நாளை (5ம் தேதி) நடைபெற உள்ளது.

இதையடுத்து தஞ்சை முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அழகிய மின்விளக்குகளால் ஜொலிக்கும் நகரமாக மாறியுள்ளது தஞ்சை.

யாகசாலை பூஜைகள்

கும்பாபிஷேகம் புதன் காலை 9 மணி முதல் 10 மணிக்குள் நடக்க இருப்பதால் அதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27-ம் தேதி முதலே தொடங்கியது.

11,900 சதுர அடி பரப்பில் 110-யாக குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பூஜைகள் 1-ம் தேதி மாலை தொடங்கியது.

வெண்ணாற்றங்கரையில் இருந்து புனித நீர் கொண்டு வரப்பட்டு யாக சாலையில் வைக்கப்பட்டது. 1-ம் தேதி முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து தினம் நடைபெறும் பூஜை வரும் 5-ம் தேதி காலை 4.30-க்கு முடிவடையும் 8ம் பூஜையாக. பின்னர் 7 மணிக்கு தீபாராதனை மற்றும் 7.25-க்கு திருக்கலசங்கள் எழுந்தருளல் நடைபெற உள்ளது.

யாகசாலைக்கான சிறப்பு பொருள்கள்

யாகசாலை பூஜைக்கு என 1000 கிலோ அளவிலான 124 மூலிகைகளும், அபிஷேகத்திற்கான மலர்களும் பயன்படுத்தபட உள்ளன.

தினம் 1000 கிலோ அளவிற்கு செவ்வந்தி, சம்பங்கி, தாமரை, ரோஜா போன்ற மலர்களும், யாகத்திற்காய் வெள்ளை மிளகு, நன்னாரி வேர், அதிமதுரம், தேவதாரு கட்டை, லவங்கப்பட்டை, ஆடாதோடா, வலம்புரிகாய் போன்ற மூலிகைகளும் பயன்படுத்தப்பட உள்ளது.

வாகன வசதி

கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்யும் பணிகள் தொடர்ந்து கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

பொதுமக்களின் வசதிக்காக 21 இடங்களில் வாகன வசதி செய்யப்பட்டுள்ளது. 5 லட்சம் பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் குடிநீர், கழிவறை வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.

கோவிலுக்குள் 2 சக்கர ஆம்புலன்ஸ் சேவை வசதியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது பக்தர்களின் வசதிக்காக.

சிறப்பு பேருந்து மற்றும் ரயில் சேவை

கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்களுக்கு சிரமம் இல்லாமல் இருக்க சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

4-ம் தேதி முதல் 6-ம் தேதி வரை தஞ்சை – திருச்சி, தஞ்சை – மயிலாடுதுறை, தஞ்சை – திருவாரூர்; 5-ம் தேதி முதல் 7-ம் தேதி வரை காரைக்கால் – தஞ்சை ஆகிய வழித் தடங்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அதேபோல் 4-ம் தேதியிலுருந்து 6-ம் தேதி வரை டெமு ரயில் சேவை இயக்கப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குடமுழுக்கு விழாக் குழுவினர்

கும்பாபிஷேக ஏற்பாடுகள் அனைத்தையும் திருப்பணிக்குழு தலைவர் துரை திருஞானம்; திருப்பணிக்குழு உறுப்பினர்கள் அறிவுடை நம்பி, புண்ணிய மூர்த்தி, சரவணன்; கோயில் பரம்பரை அறங்காவலர் ராஜா பான்ஸ்லே ஆகியோர் இணைந்து செய்துள்ளனர். மாவட்ட நிர்வாகமும் இவர்களோடு இணைந்து பணிகளை மேற்கொண்டு வருகிறது.

சிறப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள்

1. பாதுகாப்பு ஏற்பாடுகளை தலைமை செயலாளர் சண்முகம், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பணிந்திர ரெட்டி, ஏடிஜிபி சைலேந்திர பாபு ஆகியோர் தினம் ஆய்வு செய்து வருகின்றனர்

2. அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு ஒவ்வொருவரும் தனித்தனியே கண்காணிக்கப்பட உள்ளனர்.

3. பாதுகாப்பு ஏற்பாடுகளில் 5,000-க்கும் மேற்பட்ட காவலர்கள், ஊர்க் காவல் படையினர், ஆயுதப் பாடையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

4. குறைகளை தெரிவிக்க “நம்ம தஞ்சை” என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளனர். இது கலெக்டர் அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களோடு தொடர்பு கொண்டு குறைகளை சொல்ல உதவி செய்யும்.

3

உலக புற்றுநோய் தினம் 2020: புற்றுநோய் புள்ளிவிவரம்

0
உலக புற்றுநோய் தினம் 2020: புற்று நோய் உருவாக என்ன காரணம்? புற்றுநோயை எவ்வாறு சரி செய்வது? புற்றுநோய் பற்றிய புள்ளிவிவரம்.

உலக புற்றுநோய் தினம் 2020 (world cancer day 2020): புற்று நோய் உருவாக என்ன காரணம்? புற்றுநோயை எவ்வாறு சரி செய்வது? புற்றுநோய் பற்றிய புள்ளிவிவரம்.

இவை இந்தியாவில் மிகவும் பொதுவான புற்றுநோய்கள்; நீங்கள் அறிந்திருக்க வேண்டிய உண்மைகள் மற்றும் புள்ளிவிவரங்கள்.

ஒவ்வொரு வருடமும் பிப்ரவரி 04 உலக புற்றுநோய் தினம் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று உலக புற்றுநோய் தினம் 2020 ஆண்டு.

உலகளவில் இறப்புக்கு புற்றுநோயானது இரண்டாவது முக்கிய காரணமாகும்.  நுரையீரல், மார்பகம், கர்ப்பப்பை, தலை, கழுத்து மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை இந்திய மக்களைப் பாதிக்கும் முதல் புற்றுநோய்கள்.

புகையிலை பயன்பாடு அதிக எண்ணிக்கையிலான புற்றுநோய் இறப்புகளுக்கு காரணமாகிறது . பல புற்றுநோய் இறப்புகளுக்கு நுரையீரல் காரணமாகும்.

உடலின் திசு அல்லது உறுப்புகளில் உள்ள உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியால் புற்றுநோய் ஏற்படுகிறது.

உலகளவில் இறப்புக்கு புற்றுநோய்தான் இரண்டாவது முக்கிய காரணம்.  மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், தோல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன.

அறிகுறிகள் புற்றுநோயின் வகையைப் பொறுத்தது.  ஆபத்து காரணிகளும் புற்றுநோயின் வகையைப் பொறுத்தது.

வாழ்க்கை முறை மற்றும் உணவில் ஆரோக்கியமான மாற்றங்கள் புற்றுநோயின் ஒட்டுமொத்த ஆபத்தை குறைக்க உதவும்.  இந்தியாவில் புற்றுநோய் வழக்குகளும் அதிகரித்து வருகின்றன.

புற்றுநோய் பற்றிய புள்ளிவிவரம்

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, புற்றுநோயால் ஏற்படும் இறப்புகளில் மூன்றில் ஒரு பங்கு 5 முன்னணி,  நடத்தை மற்றும் உணவு குறைபாட்டால் ஏற்படுகிறது:

அதிக உடல் நிறை குறியீட்டெண், குறைந்த அளவு  பழம் மற்றும் காய்கறி உட்கொள்ளல், உடல் செயல்பாடு இல்லாதது, புகையிலை பயன்பாடு மற்றும் ஆல்கஹால் பயன்பாடு போன்றவற்றால்  ஏராளமான புற்றுநோய் இறப்புகள் ஏற்படுகிறது.

ஏறக்குறைய 22% புற்றுநோய் இறப்புக்கு இது பொறுப்பாகும். ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலான புற்றுநோய் இறப்புகளுக்கு நுரையீரல், பெருங்குடல், வயிறு, கல்லீரல் மற்றும் மார்பக புற்றுநோய்கள் காரணமாகின்றன.

புற்றுநோயானது உயிரணுக்களின் அசாதாரண வளர்ச்சியின் விளைவாகும், இந்த வளர்ச்சி வெளிப்புற காரணிகள் மற்றும் மரபுரீதியான மரபணு ஆகிய இரண்டின் பங்களிப்பாக இருக்கலாம்.

WHO-வின் கணக்கின் படி, ஆறு இறப்புகளில் ஒன்று புற்றுநோயால் ஏற்படுகிறது. புற்றுநோயால் ஏற்படும் இறப்புகள் ஏறக்குறைய 70% குறைந்த மற்றும் நடுத்தர வருமான நாடுகளில் நிகழ்கிறது.

குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட 5 நாடுகளில் 1 பேருக்கு மட்டுமே புற்றுநோய் கொள்கையை இயக்க தேவையான தரவு உள்ளது.

புற்று நோய் உருவாக என்ன காரணம்?

சுற்றுச்சூழல், மரபணு மற்றும் வாழ்க்கை முறை காரணிகளின் கலவையானது புற்றுநோய்க்கு வழிவகுக்கும்.

இருப்பினும், புகையிலை மற்றும் புகையிலை பொருட்களின் பயன்பாடு இந்தியாவில் புற்றுநோய்க்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

வாப்பிங், புகைத்தல், காற்று மாசுபாடு, மெல்லும் புகையிலை, மது அருந்துதல், ஆகியவை இந்தியாவில் நுரையீரல் மற்றும் தலை மற்றும் கழுத்து புற்றுநோய்களுக்கு முக்கிய காரணிகளாகும்.

இந்தியாவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் மிகவும் பொதுவான வகை மற்றும் கர்ப்பப்பை, வாய்ப் புற்றுநோயாகும்.

புற்றுநோயை எவ்வாறு சரி செய்வது?

புற்றுநோயைக் கையாள்வது இரு வழி செயல்முறையாக இருக்க வேண்டும். மக்கள் தங்கள் வாழ்க்கை முறை பழக்கவழக்கங்கள் மற்றும் தேர்வுகள் குறித்து அதிக விழிப்புடன் இருக்க வேண்டும்.

நல்ல உணவு தேர்வுகளை செய்ய வேண்டும்.  அதேசமயம், எச்.பி.வி தடுப்பூசி அல்லது வழக்கமான சுகாதார பரிசோதனைகள்; கட்டிகளை சுய பரிசோதனை செய்தல்; சூரியனுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்ப்பது மற்றும் புகையிலை விற்பனை மற்றும் பயன்பாட்டை ஊக்கப்படுத்துதல் போன்ற புற்றுநோயைத் தடுப்பதை அல்லது முன்கூட்டியே கண்டறிவதை ஊக்குவிக்க நிலையான மற்றும் பெரிய அளவிலான முயற்சிகள் இருக்க வேண்டும்.

Disclaimer: ஆலோசனை உள்ளிட்ட இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை மட்டுமே வழங்குகிறது.  இது எந்த வகையிலும் தகுதிவாய்ந்த மருத்துவ கருத்துக்கு மாற்றாக இல்லை.  மேலும் தகவலுக்கு எப்போதும் ஒரு நிபுணரை அல்லது உங்கள் சொந்த மருத்துவரை அணுகவும்.

3