Home Blog Page 265

லோக்சபா அமளி: ஹர்ஷ்வர்தன் – மாணிக்கம் தாகூர் மோதல்

0
லோக்சபா அமளி ஹர்ஷ்வர்தன் மாணிக்கம் தாகூர்

லோக்சபா அமளி: ஹர்ஷ்வர்தன் – மாணிக்கம் தாகூர் மோதல். பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இடையேயான சர்ச்சை பேச்சுகள் தொடர்பாக லோக்சபாவில் பெரும் அமளி.

சமீபத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருவதாகவும் இன்னும் சில காலங்களில் பிரதமர் வெளியே வந்தால் இளைஞர்கள் வேலை கிடைக்காத கோபத்தில் அவரை கம்பால் அடிக்க தயங்க மாட்டார்கள் எனவும் தெரிவித்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

மோடியும் பதிலடியும்

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் நேற்று லோக்சபாவில் பேசும்போது ராகுல் காந்தியை ட்யூப்லைட் என்று பொருள்படும் வகையில் பேசினார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இன்று லோக்சபாவில் பாஜக எம்பிக்கள் ராகுலுக்கு எதிராக கோஷமிட்டனர்.

இதனிடையே மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் பேசுகையில் ராகுலின் வார்த்தையை கண்டிப்பதாக கூறினார்.

பதிலுக்கு காங்கிரஸ் எம்பிக்களும் எழுந்து நின்று கோஷமிட்டுக் கொண்டே ஹர்ஷ்வர்தன் இருக்கையை நோக்கி நகர ஆரம்பித்தனர்.

அருகில் இருந்த காங்கிரஸ் எம்பியான மாணிக்கம் தாகூர் மிக அருகில் செல்லவும் பிஜேபி எம்பிக்கள் ஹர்ஷ்வர்த்தனை சுற்றி நின்று கொண்டனர் பாதுகாப்பு வளையம் போல. இதனால் அவையில் பரபரப்பு ஏற்பட்டு அவை ஒத்தி வைக்கப்பட்டது.

ராகுல் காந்தி கருத்து

இதன்பின் பத்திரிகையாளர்களைச் சந்தித்த ராகுல்காந்தி, வயநாட்டில் மருத்துவக்கல்லூரி இல்லாததை பற்றி கேட்டால் ஹரஸ்வரதன் அரசியல் பேச ஆரம்பித்து விட்டார்.

தான் பேசினால் பிஜேபிக்கு பிடிக்காது என்பதால் பிரச்சனை செய்கின்றனர். மாணிக்கம் தாகூர் எதுவும் செய்யவில்லை வேண்டுமானால் வீடியோ பாருங்கள் எனக் கூறினார்.

சபாநாயகரிடம் புகார்

அமைச்சர் பிரகலாத் ஜோஷி கூறுகையில், காங்கிரசின் விரக்தி அவர்களை வன்முறையை கையில் எடுக்க வைக்கிறது என்றார்.

இரு கட்சிகளும் சபாநாயகரிடம் புகார் அளித்தனர். மீண்டும் அமளி நிலவியதால் சபாநாயகர் அவையை திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தார்.

3

தைப்பூச விழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது?

1
தமிழ் கடவுள் முருகன் தைப்பூசம்

தைப்பூச விழா எவ்வாறு கொண்டாடப்படுகிறது? தைப்பூசத்தின் சிறப்பு என்ன? தைப்பூசம் எங்கு பிரபலமாக கொண்டாப்படுகிறது? தமிழ் கடவுள் முருகன் தை பூசம்.

தைப்பூசத்தின் சிறப்பு

உத்தராயண புண்ணிய காலத்தின் ஆரம்ப மாதமாகிய தை மாதத்தில் எண்ணற்ற விழாக்களும் விரதங்களும் அமையப்பெற்றுள்ளன. இதிலிருந்தே தை மாதம் எவ்வளவு சிறப்புமிக்க மாதம் என்பதை அறியலாம்.

அந்த வகையில் தை மாதத்தில் 27 நட்சத்திரங்களில் எட்டாவது நட்சத்திரமாக விளங்கக்கூடய பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியுடன் கூடிய சுப தினமே “தைப்பூச திருநாள்” ஆகும்.

இது தமிழ் கடவுள் முருகன் அவர்களுக்கு உகந்த தினமாகும்.

தைப்பூசத்தின் சிறப்பு

தைப்பூசத்தின் சிறப்பு

உலகம் தோன்றியது இந்த தைப்பூச தினத்தில் தான் என்று கூறப்படுகிறது.

சக்தியின் அம்சமான சந்திரன் தைப்பூசத்தன்று கடகராசியில் ஆட்சி பலத்தோடு சஞ்சரிக்கின்றார். அதேபோல் மகரத்தில் சிவ அம்சமான சூரியன் இருப்பார்.

இருவரும் ஒருவருக்கொருவர் முழு பலத்தோடு பார்த்துக்கொள்வர். எனவே தைப் பூசமானது மிக சிறப்புமிக்க தினமாக திகழ்கிறது.

திருவாதிரையில் தனித்து நடம் புரியும் சிவப்பெருமான் தைப்பூசத்தில் சக்தியுடன் இணைந்து ஆனந்த நடனம் புரிவதாக கூறப்படுகிறது.

தமிழகத்தில் தொன்று தொட்டு தைப்பூச விழாவானது கொண்டாடப்படுகிறது. குறிப்பாக முருகனுக்கு அன்றைய தினத்தில் விழா நடத்துகிறார்கள்.

தைப்பூசத்தில் அறுபடை வீடுகள் மட்டுமின்றி அனைத்து இடங்களிலும் உள்ள முருகன் கோவில்களிலும் விழா நடைப்பெறுகிறது.

பழனி தைப்பூச விழா

தைப்பூச விழா தமிழ் கடவுள் முருகன்

திருவாவினன்குடி என்று கூறப்படுகின்ற பழனியில் பத்து நாட்கள் தைப்பூச விழாவானது விமர்சியாக கொண்டாடப்படுகிறது.

தினமும் முருகப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் நான்கு ரத வீதியில் வளம் வருவார்.

முக்கிய நிகழ்வாக 7-ஆம் நாள் தேரோட்டமும், 10 ஆம் நாள் தெப்போற்சவமும் நடைபெறும்.
இந்த பத்து தினங்களும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்வர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து நடைப்பயணமாக காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் குவிவர்.

பால் காவடி, பன்னீர் காவடி, மயில் காவடி, வேல் காவடி, பறவை காவடி, மச்ச காவடி, புஷ்ப காவடி, தீர்த்த காவடி என காவடிகள் வரிசை வரிசையாக வந்த வண்ணம் இருக்கும்.

பூசம் குருவிற்கு உரிதான நட்சத்திரம் ஆகும். இந்நாளில் சிவனிற்கே குருவான ஆதி குரு குமரப் பெருமானை வணங்கினால் சகல சம்பத்தும் கிடைக்கும்.

வடலூரில் தைப்பூச விழா

தைப்பூச விழா

வடலூரில் வள்ளலார் அமைத்த சத்திய ஞான சபையில் தைப்பூசதன்று ஏழு திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காண்பிக்கப்படும். இதை காண லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிவர்.

மற்ற மாதப் பூச தினத்தன்று ஆறு திரைகள் மட்டுமே விலக்கப்படும். தைப்பூசத்திற்கு அடுத்த நாள் புனர்பூசதன்று தான் வள்ளலார் அருட்பெருஞ்சோதியுடன் இரண்டறக் கலந்தார்.

அன்றைய தினத்தில் வடலூருக்கு அருகில் உள்ள மேட்டுகுப்பத்தில் வள்ளலார் திருகாப்பிட்டு கொண்ட அறையானது சன்னல் வழியாக காண்பிக்கப்படும்.

சமயபுரத்தில் தைப்பூச விழா

தைப்பூசத்தின் சிறப்பு தைப்பூசம்

சக்தி திருத்தலமான திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலில் 11 நாட்கள் தைப்பூச விழா கொடியேற்றத்துடன் துவங்கி வெகு சிறப்பாக நடக்கும்.

முக்கிய நிகழ்வாக தைப்பூசத்தன்று சமயபுர மாரியம்மனின் அண்ணான ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் தங்கையான மாரியம்மனிற்கு சீர் வழங்கும் வைபவம் வெகு விமர்சியாக கொள்ளிடக் கரையில் நடைபெறும்.

 

அயல்நாடுகளில் தைப்பூச விழா

தமிழ் கடவுள் முருகன் தைப்பூசம்

தைப்பூசமானது இந்தியா மட்டுமின்றி சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரீசியஸ், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் உள்ள முருகன் கோவில்களில் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

மலேசியா பத்து மலை முருகன் கோயிலில் வெகு விமர்சியாக தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது. விதவிதமான அலகு குத்தியும், காவடி எடுத்தும் மலேசிய மக்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்துகின்றனர்.

2020-இல் தைப்பூசம்

இந்த ஆண்டு தைப்பூசமானது பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி சனிக்கிழமை வருகின்றது.

இந்நாளில் நாமும் விரதமிருந்து முருகப் பெருமானை திருக்கோயில்கள் சென்று வணங்கி எல்லா வளங்களும் பெற்று இன்புற்று வாழ்வோம்.

3

7/2/2020 ராசிபலன்: தின ராசிபலன் – Horoscope Tamil

1
7/2/2020 ராசிபலன்: தின ராசிபலன் - Horoscope Tamil

7/2/2020 ராசிபலன்: தின ராசிபலன் – Horoscope Tamil இன்றைய மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ராசிப்பலன்கள்.

மேஷ ராசிப்பலன்

உற்சாகமாக செயல்படும் நாள். பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் இருப்பது பலமே. ஆலயம் தொழுது நல்லதைக் கூட்டும் நாள்

அதிர்ஷ்ட எண்: 6, அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.

ரிஷப ராசிப்பலன்

எண்ணங்கள் ஈடேறும் நாளாகக் காணப்படுகிறது. வெளிநாட்டு வேலை முயற்சிகள் சிறப்பான நற்பலனை வழங்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாப முன்னேற்றம் உண்டு

அதிர்ஷ்ட நிறம்: பவளம் அதிர்ஷ்ட எண்: 9

மிதுன ராசிப்பலன்

சந்திரன் ராசியில் இருப்பதால் டென்ஷன் அதிகரிக்கும். இருந்தாலும் தாராளமான தனவரவு உண்டு. தலைவலி லேசாக எட்டிப்பார்க்கும். உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்: 3, அதிர்ஷ்ட நிறம் : தேன் வண்ணம்.

கடக ராசிப்பலன்

இன்றைய நாளில் பகல் பொழுதுகளில் செலவினங்கள் கூடும். குடும்ப உறவுகளிடையே விட்டுக் கொடுத்து செல்வது அவசியம். வேலை சம்மந்தமாகப் பயணம் ஏற்படும். மாணவர்கள் படிப்பில் ஜொலிப்பீர்கள்

அதிர்ஷ்ட நிறம்: காக்கி வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

சிம்மம் ராசிப்பலன்

பணத்தைச் சேமிக்கும் நாளாகக் காணப்படுகிறது. நல்ல பணப்புழக்கம் கிடைக்கக் கூடிய நாள். திரைப்படத் துறையில் இருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமையும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, அதிர்ஷ்ட எண் : 7

கன்னி ராசிப்பலன்கள்

மிகவும் நல்ல நாளாகக் காணப்படுகிறது. நல்ல வேலை கிடைக்கும் அதுவும் உள்நாட்டிலேயே கிடைப்பது குறிப்பிடத்தக்கது. தாயாரால் நன்மை அதிகம் உண்டு. கடனைத் தவிர்ப்பது நலம்.

அதிர்ஷ்ட நிறம்:மஞ்சள் அதிர்ஷ்ட எண்: 3

துலாம் ராசிப்பலன்கள்

இன்றைய நாள் பொன்னான நாளாகக் காணப்படுகிறது. தரும காரியங்கள் நிறைய செய்ய வேண்டும். அகத்திக்கீரை வாங்கி பசுவிற்கு தானமிடுதல் சிறப்பு. வயிற்று வலி வரலாம்.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிகப்பு வண்ணம், அதிர்ஷ்ட எண் : 9

விருச்சிக ராசிப்பலன்

மிகவும் நல்லநாளாகக் காணப்படுகிறது. பிற்பகலுக்கு மேல் சுபமாக இருக்கும். காலை வேளையில் யாரிடமும் பகைமை காட்ட வேண்டாம். வங்கி ஊழியர்கள் பண விவகாரங்களில் கவனமாக இருப்பது நலம்.

அதிர்ஷ்ட நிறம் : பால்வெள்ளை வண்ணம், அதிர்ஷ்ட எண் : 6

தனுசு ராசிப்பலன்கள்

எதிலும் ஈடுபாட்டோடு செயல்பட்டு வெற்றி பெறும் நாள். திருமணம் சம்மந்தப்பட்ட காரியங்களில் நல்ல முடிவுகள் எட்டப்படும். புகழ் கௌரவம் கூடி வரும் நாள்.

அதிர்ஷ்ட நிறம் : மரகதம் வெள்ளை , அதிர்ஷ்ட எண் : 5

மகர ராசிப்பலன்

சிறப்பு வாய்ந்த நாளாகக் காணப்படுகிறது. நல்ல தொழில் முன்னேற்றம் உண்டு. வயதானோர் தன் உடல்நலத்தையும். தன் துணை உடல் நலத்தையும்.நன்கு பார்த்துக் கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : முத்து, எண் : 2

கும்ப ராசிப்பலன்கள்

நல்ல திருப்தியான பலன்களை அடையக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. உங்கள் குழந்தைகள் வாழ்வில் முன்னேற்றம் ஏற்படும். பணப்புழக்கம் திருப்திகரமானதாக இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : மாணிக்க வண்ணம், அதிர்ஷ்ட எண்: 1

மீனம் ராசிப்பலன் :

சொத்து சுகம் வாங்கி மகிழக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம். நல்ல வேலை கிடைத்திடும் நாள். பிஸினஸ் தொடர்பான விவகாரங்கள் சுமுகமாக தீர்க்கபடும்.

அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை, அதிர்ஷ்ட எண் : 5

7/2/2020 ராசிபலன் Horoscope Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம். நேற்றைய ராசிபலன்

3

IT Video Link: ஐடி வீடியோ லிங்க் தேடுபவரா நீங்கள்?

0
IT Video Link

IT Video Link: ஐடி வீடியோ லிங்க் தேடுபவரா நீங்கள்? IT Girl Video Memes and Ashan Birthday Celebration. ஐடி ரைடு விஜய் வேண்டாம். வீடியோ லிங்க் வேண்டும்.

சமீபமாக தமிழ் மீம் கிரியேட்டர்கள் சிலர் தவறான வழியில் தங்கள் பாலோயர்களை வழிநடத்தி வருகின்றனர்.

ஒரு மீம் கிரியேட்டர் என்பவர், ‘நவீன புரட்சிப்போராளி’ என்று பல்வேறு நாடுகளில் வர்ணிக்கப்பட்டு வருகின்றனர்.

இருந்த இடத்தில் இருந்து நாட்டின் பிரதமரை கேள்வி கேட்டு அதிரச் செய்யும், அஞ்ச செய்யும் பவர் மீம் கிரியேட்டர்களுக்கு உண்டு.

தற்பொழுது 18 பிளஸ் என்ற மீம் பேஜ்கள் பெருகிக்கொண்டே வருகிறது. இவர்கள் தங்கள் பேஜ்களுக்கு அதிக பாலோயர்கள் வேண்டும் என்பதற்காக சில வேண்டாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

Ashan Birthday Celebration

கடந்த மாதம் ஆஷன் பிறந்த நாள் கொண்டாட்டம் என்ற தலைப்பில் மீம்களை சகட்டு மேனிக்கு கிரியேட் செய்து வெளியிட்டனர்.

அந்த வீடியோ லிங்க் வேண்டும் என்றால் பாலோ செய்ய வேண்டும் என பலரை கட்டாயப்படுத்தி உள்ளனர்.

இதனால் பலர் பாலோ செய்து அவர்களின் பாலோயர்கள் எண்ணிக்கை எகிறியது. இதே பாணியை மீண்டும் மீண்டும் செய்து வருகின்றனர்.

IT Video Link

Ashan Birthday Celebrationஇன்று ஐடி வீடியோ லிங்க் இருக்கு என்று சும்மா கிடக்கும் பாலோயர்களை உசுப்பி விட்டு ஆபாச மற்றும் பாலியல் தூண்டல்களை உண்டு செய்கின்றனர்.

இதை பாலோயர்களும் முக்கியமான, வாழ்க்கையில் முன்னேர வைக்கும் வீடியோ என நினைத்து கூகுள், வாட்ஸாப், டிவிட்டர், பேஸ்புக் என அனைத்திலும் தேடி அழைகின்றனர்.

போலீஸ் கண்காணிப்பு

சமீபத்தில் தான் தமிழகத்தில் சிறுமி ஆபாச வீடியோ பார்த்தாலும், வெளியிட்டாலும் குற்றம் என போலீஸ் தரப்பில் இருந்து செய்தி வெளியிடப்பட்டு கைது நடவடிக்கைகளும் நடந்தது.

அப்படி இருந்தும் பலர், பலரின் அந்தரங்க வீடியோக்கள் வெளியாகியுள்ளது என சமூக வலைத்தளங்களில் லிங்க் வேண்டுமா என அனுப்பி விபரீதம் புரியாமல் விளையாடி வருகின்றனர்.

உங்களையும், உங்கள் பக்கங்களையும் போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வீடியோ அனுப்புவர், லிங்க் கேட்பவர் இருவருமே போலீஸ் பிடியில் சிக்குவது உறுதி.

உங்களில் எண்ணங்கள், செயல்களை தீய வழியில் செல்லாமல் பாதுகாப்பதே மிகவும் நல்லது. அதையும் மீறி புதைகுழியில் தான் விழுவேன் என்றால்? அது உங்கள் விருப்பம்.

பெண்கள் உங்களுக்கு பாலியல் தொல்லை நேர்ந்தால் காவலன் ஆப் மூலம் புகார் தெரிவியுங்கள்.

3

அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்த கெஜ்ரிவால்

0
அமித்ஷாவுக்கு அழைப்பு கெஜ்ரிவால்

அமித்ஷாவுக்கு அழைப்பு விடுத்த அரவிந்த் கெஜ்ரிவால் – டெல்லி தேர்தல் இறுதிகட்ட அனல் பறக்கும் பிரச்சாரம்.

டெல்லி தேர்தல் 2020

தலைநகர் டெல்லியில் வருகிற 8 தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தேர்தல் பிரச்சாரம் இன்றுடன் நிறைவடைய உள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் பிரச்சாரம்

இதனிடையே நேற்று தேர்தல் பொதுக்கூட்டத்தில் பேசிய டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மீ கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர்  அமீத்ஷாவை பொது விவாதம் செய்ய வருமாறு அழைப்பு விடுத்திருப்பது தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி சட்ட சபை தேர்தலில் இந்த முறை எந்த தேர்தலிலும் இல்லாதவகையில் அனைத்து அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் மக்களுக்கு பல்வேறு இலவச திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதுமட்டுமின்றி அண்மையில் நிறைவேற்ற பட்ட குடியுரிமை சட்ட திருத்தமும் இந்த தேர்தலில் விவாத பொருளானது குறிப்பிடத்தக்கது.

அமித்ஷாவுக்கு அழைப்பு

இதற்கிடையேதான் நேற்று தேர்தல் பிரச்சார பொது கூட்டத்தில் உரையாற்றிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தங்களுடைய தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றுள்ள இலவச திட்டங்களை விமர்ச்சிக்கும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் பொது கூட்டத்தில் விவாதம் செய்ய தயார் என அறிவித்துள்ளார்.

மேலும் அவர் அமித்ஷாவிடம் டெல்லி  வளர்ச்சிக்காக பாஜக கடந்த ஐந்து வருடத்தில் செய்த திட்டங்களை கூற முடியுமா எனவும் வினவியுள்ளார்.

மேலும் குடியுரிமை சட்டதிருத்தத்தின்  மூலம் பொது அமைதியை உள்துறை அமைச்சர் அமித்ஷா சீர்குலைத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.

அதுமட்டுமின்றி காவி கூட்டம் ஏன் இலவச திட்டங்களை எதிர்க்கிறது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் .

மேலும் பேசிய அவர் டெல்லியில் உள்ள ஷாஹீன் பாக் சாலையில் குடியுரிமை சட்டத்தை   எதிர்த்து கடந்த இரண்டு மாத காலமாக போராடி வருபவர்களை கண்டு கொள்ளாதது ஏன் எனவும் வினவியுள்ளார்.

இதன் மூலம் பாஜக மிகவும் கீழ்த்தரமான அரசியலில் ஈடுபடுவதாக விமர்சனம் செய்துள்ளார்.

டெல்லி மக்கள் கடந்த ஐந்து வருடத்தில் பிஜேபி கட்சி தங்களின் நலனுக்காக என்ன செய்தது என கேட்பதாகவும் தெரிவித்துள்ளார், அதுமட்டுமின்றி தங்கள் கட்சி வெற்றி பெற்றால் தாம்தான் முதலமைச்சர் எனவும் மாறாக பாஜக வெற்றி பெற்றால் யாரை முதல்வர் ஆக்குவார்  எனவும் வினவியுள்ளார்.

மேலும் டெல்லி மக்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை எனவும் ஆவேசமாக தெரிவித்துள்ளார், கடந்த செவ்வாய் கிழமை பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை நேற்று மாலைக்குள் முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்து அறிவியுங்கள் என சவால் விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .

கருத்துக் கணிப்பு முடிவுகள்

இதனிடையே பிரபல ஊடகங்கள் மற்றும் கருத்து கணிப்பு நடத்தும் நிறுவனங்கள் இணைந்து நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி அமோக வெற்றி பெறும் என தெரியவந்துள்ளது.

மேலும் பல்வேறு இணைய தளங்களும் இதனையே வெளிப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பிரச்சாரம் நிறைவு

இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம்  இன்று மாலை ஐந்து மணியுடன் நிறைவு பெற்றது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே, குடியுரிமை சட்டத்தினை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டங்கள் நடை பெற்று வருவதால் வாக்குப்பதிவின்போது ஏற்படும் அசம்பாவிதங்களைத் தடுக்க துணை ராணுவம் களம் திறக்கப்பட்டுள்ளது.

3

விஜய் வீடு: சல்லடை போட்டு சலித்த இன்கம் டாக்ஸ்…

0
விஜய் வீடு இன்கம் டாக்ஸ்

விஜய் வீடு: சல்லடை போட்டு சலித்த இன்கம் டாக்ஸ்… நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை சோதனை: விடிய விடிய விஜய்யிடம் விசாரணை.

விஜய்யிடம் விசாரணை

‘பிகில்’ திரைப்பட சம்பளம் தொடர்பான சந்தேகத்தில் நடிகர் விஜய் வீட்டில் இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை. நடிகர் விஜய்யிடமும் விசாரணை நடத்தியுள்ளனர்.

‘பிகில்’ சம்பள சர்ச்சை

விரல் விட்டு எண்ணக்கூடிய மிக முக்கிய நடிகர்களில் ஒருவர் விஜய் சமீபத்தில் அவர் நடித்த திரைப்படமான ‘பிகில்’ வசூலில் சாதனை படைத்து பாக்ஸ் ஆபீசில் முதல் 10-க்குள் வந்தது.

வசூல் வேட்டையில் சாதனை படைத்த பிகில் படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் குறித்த சந்தேகம் எழுந்துள்ளதால், வருமான வரித்துறையினர் விஜய்யின் அலுவலகம் மற்றும் வீடுகளில் 2-வது நாளாக இன்றும் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சோதனைக்கு காரணம்

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து விஜய் நடித்த படம் தான் ‘பிகில்’ வசூல் வேட்டையில் முதல் 10 இடங்களுக்குள் வந்தது.

இந்நிலையில் பட தயாரிப்பு நிறுவனம் ஏஜிஎஸ் வருமான வரித்துறைக்கு தாக்கல் செய்த கணக்கில் நடிகர் விஜய்க்கு கொடுத்த ஊதியம் குறித்து கணக்கு காட்டியுள்ளது.

அந்த கணக்கும் நடிகர் விஜய் கொடுத்த கணக்கும் முரண்பாடாக இருப்பதாக கூறப்படுகிறது.

விஜய்யிடம் விசாரணை

இதையடுத்து வருமானவரித்துறை நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்களில் சோதனை நடத்த தொடங்கியது.

நேற்று நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்த விஜய்யை சந்தித்த வருமானவரித்துறை அதிகாரிகள், விஜய்யின் தனிப்பட்ட அறையினை சோதனை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர்.

அவரை நெய்வேலியிலிருந்து சென்னை பனையூரில் உள்ள அவரது வீட்டிற்கு இரவு 9 மணிக்கு அழைத்து வந்தனர்.

பத்திரிக்கையாளர்களைக் கண்டவுடன் விஜய் முகத்தை மறைத்துக் கொண்டார். காருக்குள் பதுங்கிக் கொண்டார்.

அதுமட்டுமின்றி அவரிடம் இன்கம் டாக்ஸ் பற்றி விடிய விடிய விசாரணை நடத்தப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் மற்றும் விஜய்யின் வீட்டை அங்குலம் அங்குலமாக சல்லடை போட்டு சலித்து பல டாக்குமெண்டுகளைக் கைபற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

32 இடங்களில் சோதனை (நடிகைகள் உள்பட)

நடிகர் விஜய்யின் வீடு மற்றும் அலுவலகங்கள் மட்டுமின்றி தயரிப்பாளர், நடிகைகள் என மொத்தம் 32 இடங்களில் சோதனை நடத்தியுள்ளனர் வருமான வரித்துறையினர்.

ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்கள் (கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ்), வீடுகள், சினிமா தயாரிப்பு, திரைப்பட விநியோகம், மதுரை தெற்கு மாசி வீதியில் உள்ள பைனான்சியர் வீடு என தி.நகர், வில்லிவாக்கம், நாவலூர், மதுரைவாயில் ஆகியவற்றில் உள்ள அலுவலகம், தியேட்டர் ஆகியவற்றில் ஒரே நேரத்திலும், மற்றும் நடிகைகள் சமந்தா, நயன்தாரா வீட்டிலும் சோதனைகள் நடைபெற்றது.

அன்புச்செழியன் அதிமுக பிரமுகர் கம் பைனான்சியர்

இதுமட்டுமின்றி மதுரை காமராஜர் சாலை தெப்பக்குளம் கனி தெருவை சேர்ந்த அன்புச்செழியன் என்பவரின் வீடு அலுவலகங்களிலும் சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இவர் சென்னையில் கோபுரம் பிலிம்ஸ் என்ற பெயரில் நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர் தாயார் வீடு மதுரை கீரைத்துறையில் உள்ளது.

அங்கும் சோதனை நடைபெற்று வருகிறது. இவர் பைனான்சியர் மட்டுமல்ல அதிமுக பிரமுகர் என்பது குறிப்பிட்டத்தக்கது.

3

பனி பாறைகள் உருக காரணம் – அச்சுறுத்தும் ஆய்வு

0

பனி பாறைகள் உருக காரணம் என்ன? கிரீன்லாந்தின் பனிப்பாறைகள், அடியில் உருகி வருகிறது. இதனால் விஞ்ஞானிகள் ஆய்வு அச்சுறுத்தும் விதமாக உள்ளது.

பனி பாறைகள் உருக காரணம் என்ன?

கிரீன்லாந்தின் பனிக்கட்டிகளின் மேற்பரப்பு உருகுவதற்கு அதிக காற்று வெப்பநிலை பங்களிக்கிறது என்பதை விஞ்ஞானிகள் நீண்ட காலமாக அறிந்திருக்கிறார்கள்.

ஆனால் ஒரு புதிய ஆய்வு கீழே இருந்து பனியைத் தாக்கத் தொடங்கிய மற்றொரு அச்சுறுத்தலைக் கண்டறிந்துள்ளது. பரந்த பனிப்பாறைகளுக்கு அடியில் நகரும் சூடான கடல் நீர், அவை இன்னும் விரைவாக உருகுவதற்கு காரணமாகிறது.

வடகிழக்கு கிரீன்லாந்தில் 79 ° வடக்கு பனிப்பாறை என்றும் அழைக்கப்படும் நியோகால்ஃப்ஃப்ஜெர்ட்ஸ்ஃபோர்டன் பனிப்பாறையின் பல “பனி மொழிகளில்” ஒன்றை ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்களால் (natural Geoscience)இதழில் இந்த கண்டுபிடிப்புகள் திங்களன்று வெளியிடப்பட்டன.

50 மைல் நீளமுள்ள பனிப்பாறை நாவின் மற்றொரு பார்வை, உருகும் நீரோடைகள் கடலை நோக்கிச் செல்வதைக் காட்டுகிறது.

ஒரு பனி நாக்கு என்பது நிலத்தின் பனியில் இருந்து உடைக்காமல் தண்ணீரில் மிதக்கும் பனியின் ஒரு துண்டு. இந்த விஞ்ஞானிகள் ஆய்வு செய்த மிகப்பெரிய ஒன்று கிட்டத்தட்ட 50 மைல் நீளம் கொண்டது.

அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து சூடான நீர் நேரடியாக பனிப்பாறை நோக்கி பாயக்கூடிய ஒரு மைல் அகலத்திற்கு மேல் நீருக்கடியில் ஒரு நீரோட்டம் இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது, இது பனியுடன் தொடர்பு கொள்ள அதிக அளவு வெப்பத்தை கொண்டு வந்து பனிப்பாறை உருகுவதை துரிதப்படுத்துகிறது.

“தீவிரமான உருகுவதற்கான காரணம் இப்போது தெளிவாக உள்ளது” என்று ஆராய்ச்சியாளர்கள் குழுவை வழிநடத்திய ஜெர்மனியில் உள்ள ஆல்ஃபிரட் வெஜனர் நிறுவனத்தின் கடல்சார் ஆய்வாளர் ஜானின் ஷாஃபர், கண்டுபிடிப்புகள் குறித்த வெளியீட்டில் தெரிவித்தார்.

கிரீன்லாந்தின் பனிப்பாறைகள் ஒன்றின் அருகே இதேபோன்ற மின்னோட்டமும் பாய்கிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்தனர், அங்கு ஒரு பெரிய பனி நாக்கு சமீபத்தில் கடலில் உடைந்தது.

கிரகத்திற்கு வெப்பமான பெருங்கடல்கள் என்றால் என்ன

கிரீன்லாந்தின் பனிக்கட்டியிலிருந்து பெரும் இழப்பு தற்போது உலகளவில் கடல் மட்ட உயர்வுக்கு மிகப்பெரிய ஒற்றை இயக்கி ஆகும்.

மேலும் டிசம்பர் மாதம் nature இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, கிரீன்லாந்தின் பனிக்கட்டி தற்போது 1992 இல் இருந்ததை விட ஏழு மடங்கு வேகமாக உருகி வருகிறது.

இந்த பனிக்கட்டி உலக கடல் மட்டத்தை 24 அடிக்கு மேல் உயர்த்த போதுமான தண்ணீரைக் கொண்டுள்ளது.

கடந்த கோடையில் ஆர்க்டிக்கின் பெரும்பாலான வெப்பநிலை வெப்பநிலையை அனுபவித்தது.

இதனால் கிரீன்லாந்தின் பனிக்கட்டியானது ஒரே நாளில் 11 பில்லியன் டன் மேற்பரப்பு பனியை கடலுக்கு இழக்க நேரிட்டது என்று விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

இது 4.4 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு சமம். ஜூலை மாதத்தில் மட்டும், கிரீன்லாந்தின் பனிக்கட்டி 197 பில்லியன் டன் பனியை இழந்தது.

சுமார் 80 மில்லியன் ஒலிம்பிக் நீச்சல் குளங்களுக்கு சமமானதாக டேனிஷ் வானிலை ஆய்வு நிறுவனத்தின் காலநிலை விஞ்ஞானி ரூத் மோட்ராம் கூறுகிறார்.

நீர் வெப்பநிலையும் 2019 ஆம் ஆண்டில் பதிவுகளை முறியடித்தது. கடந்த ஆண்டு கடல் வெப்பநிலை 1981-2010 சராசரியை விட 0.075 டிகிரி செல்சியஸ் என்று அட்வான்ஸஸ் இன் வளிமண்டல அறிவியல் இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு கூறுகிறது.

உலகின் பெருங்கடல்களால் இன்று உறிஞ்சப்படும் வெப்பம் கடந்த 25 ஆண்டுகளில் ஒவ்வொரு நொடியும் சுமார் ஐந்து ஹிரோஷிமா குண்டுகளை அவற்றில் வீழ்த்துவதற்கு சமம் என்று ஆய்வின் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

காலநிலை நெருக்கடியின் விளைவாக வெப்பமான பெருங்கடல்கள் அதிக மழையை உருவாக்கும் திறன் கொண்ட சூறாவளி போன்ற தீவிர வானிலை நிகழ்வுகளையும் உருவாக்குகின்றன.

கடல் வெப்பம் கடல் வாழ்வின் ஸ்திரத்தன்மையை பாதிக்கிறது, இது உலகின் பல பகுதிகளிலும் மீன் பிடிப்புகள் குறைவதற்கு வழிவகுக்கும். இது ஒரு முதன்மை உணவு மூலமாக கடலை சார்ந்துள்ளது.

3

6/2/2020 Horoscope: இன்றைய ராசி பலன்: தின ராசிபலன்

0
6/2/2020 Horoscope இன்றைய ராசி பலன்: தின ராசிபலன்: 5/2/2020.

6/2/2020 Horoscope Tamil Today: இன்றைய ராசி பலன் மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம், சிம்மம்,கன்னி, துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் தின ராசிபலன் இன்று.

மேஷம் ராசிபலன்

மிகவும் தைரியமான நாளாகக் காணப்படுகிறது. பெண்களுக்கு எதிலும் நெலிவு சுலிவு பார்த்து இருக்க வேண்டிய நாள். லாவகமாக வரும் எதிர்ப்புகளையெல்லாம் சமாளிக்கும் நாள்.

அதிர்ஷ்ட எண்: 5, அதிர்ஷ்ட நிறம்: இலைப்பச்சை.

ரிஷபம் ராசிபலன்

மிகவும் சந்தோஷமான நாள். எதிர்பார்த்த அனைத்தும் கைகூடும் நாளாகக் காணப்படுகிறது. ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழும் நாள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, அதிர்ஷ்ட எண்: 6

மிதுன ராசிபலன்

கொஞ்சம் பரபரப்பாக இயங்கக் கூடிய நாள். வாந்தி மயக்கம் போன்றவை இருக்கும். ராசியில் சந்திரன் சஞ்சரிப்பதில் உடல்நலத்தில் அக்கறை தேவை.

அதிர்ஷ்ட எண்: 9, அதிர்ஷ்ட நிறம் : மரகதம்.

கடக ராசிபலன்

மிகவும் மகிழ்ச்சியான நாள். எல்லாமே நலமாக வாய்க்கும். வெளிநாடு செல்வது, அங்கு வேலைவாய்ப்புகான முயற்சியில் முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம்: தேன் வண்ணம், அதிர்ஷ்ட எண் : 4

சிம்மம் ராசிபலன்

கணவன் மனைவி இடையே சிறு சிறு வாக்குவாதங்கள் ஏற்பட்டு சண்டை சச்சரவாக மாறலாம். அதனால் பொறுமை தேவை. திருமகளை வழிபடுவது நலம் பயக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: காக்கி, அதிர்ஷ்ட எண் : 5

கன்னி ராசிபலன்

சந்திரன் பத்தில் இருப்பது வேலை, தொழிலில் வெற்றியைக் காட்டுகிறது. வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். யாரிடமும் வீண் வாதங்கள் வேண்டாம். கன்னிப் பெண்களுக்கு நினைத்ததை வாங்கி மகிழ நல்ல காலம்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, அதிர்ஷ்ட எண்: 7

துலாம் ராசிபலன்

பாக்யம் சிறக்கும் நாள். நல்ல அதிர்ஷ்டம் மேலாக இருந்து விரும்பிய அனைத்தும் கிடைக்கக் கூடியதாக இருக்கிறது. பெண்களால் குடும்பம் சுபிட்சமடையும்.

அதிர்ஷ்ட நிறம் : சந்தன வண்ணம், அதிர்ஷ்ட எண் : 3

விருச்சிக ராசிபலன்

குடும்பம் மேன்மையுறும். சந்திராஷடமம் இருப்பதால் குரு பாரப்பதால் பாதகம் ஏதுமில்லை. வியாபாரிகளுக்கு முன்னேற்றம் உண்டு.

அதிர்ஷ்ட நிறம் : அடர்சிவப்பு, அதிர்ஷ்ட எண் : 9

தனுசு ராசிபலன்

வீட்டில் விருந்தினர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். நட்பு வட்டம் பன்மடங்கு பெறுகும். நினைத்தது எல்லாம் மிகச் சிறப்பாக நடக்கும்.

அதிர்ஷ்ட நிறம் : பால் வெள்ளை , அதிர்ஷ்ட எண் : 6

மகரம் ராசிபலன்

இளைஞர்களுக்குப் பொன்னான நாள். வேலை வாய்ப்புகளில் நல்ல முன்னேற்றம் நிச்சயம் உண்டு. அரசியல்வாதிகளுக்கு நன்மையுண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம் : மரகதம், எண் : 5

கும்ப ராசிபலன்

உங்கள் குழந்தைகள் நலம் கருதி, நன்றாக உழைப்பீர்கள். வியாபாரம் அமோக லாபம் பெறும். அனைத்திலும் நல்ல உழைப்பைச் செலுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு, அதிர்ஷ்ட எண்: 2

மீனம் ராசிபலன்

பெற்ற தாயாரின் உடல் நலத்தில் அதிக கவனம் தேவை. வண்டி வாகனங்களை பராமரிப்பில்லாமல் எடுத்துச் செல்லக் கூடாது. மாணவர்கள் படிப்பில் அதிக அக்கறை கொள்ள வேண்டும்.

அதிர்ஷ்ட நிறம் : பச்சை, அதிர்ஷ்ட எண் : 1

6/2/2020 Horoscope Tamil Today. இன்றைய ராசி பலன், தின ராசிபலன் ஆகியவற்றை படித்து வளம்பெற மிஸ்டர் புயல் இணையம் சார்பாக வாழ்த்துகிறோம். நேற்றைய ராசிபலன்

3

குஜ்ஜர் எங்கள் கட்சி இல்லை; அமித்ஷா சதி – ஆம் ஆத்மி மறுப்பு

0
குஜ்ஜர் எங்கள் கட்சி இல்லை; அமித்ஷா சதி - ஆம் ஆத்மி மறுப்பு

கபில் குஜ்ஜர் எங்கள் கட்சி இல்லை; அமித்ஷா சதி – ஆம் ஆத்மி மறுப்பு. துபாக்கியால் சுட்ட நபர் எங்கள் கட்சி என சொல்வது அமித்ஷா செய்த சதி என ஆம் ஆத்மி குற்றம் சுமத்தி உள்ளது.

டெல்லி: ஷாஹீன்பாக் என்ற இடத்தில் குடியுரிமைத் திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டம் நடந்தபோது, அப்பகுதியில் துப்பாக்கி சூடு நடந்தது.

துப்பாக்கியால் சுட்ட நபர் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினர் என டெல்லி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நாள் நெருங்கி உள்ள நிலையில் போலீசார் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த ஜனவரி 30-ம் தேதி அன்று ஜாமியா மில்லியா கல்லூரி அருகே குடியுரிமை சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் பேரணி நடத்தினர்.

அப்போது அங்கு திடீரென தோன்றிய ஒரு மர்ம நபர் பேரணியில் ஈடுபட்ட மாணவர்களைப் பார்த்து சரமாரியாக சுட்டனர்.

இச்சம்பவத்தை தொடர்ந்து, குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக சாலையை ஆக்ரமித்து 49-வது நாளாக பெண்கள் போராட்டம் நடத்திய இடத்திலும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.

இந்தமுறை துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் மடக்கிப்பிடித்தனர். அவருடைய பெயர் கபில் குஜ்ஜர் என்பது தெரியவந்தது.

இது பற்றி டெல்லி போலீஸ் குற்றப்பிரிவு துணை ஆணையர் ராஜேஷ் தேவ் கூறியதாவது,  “கபில் குஜ்ஜர் மொபைல் போனில் ஆம் ஆத்மி தலைவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இருந்தது. மேலும் குஜ்ஜரின் தந்தை ஆம் ஆத்மியை சேர்ந்தவர் என்பதை அவரே ஒப்புக்கொண்டு விட்டார்” என ராஜேஷ் தெரிவித்தார்.

ஆனால் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் இது அமித் ஷாவின் திட்டமிட்ட சதி. தேர்தல் நேரத்தில் அவர்கள் பெயர் அடிபடாமல் இருக்க ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு ஆம் ஆத்மி மீது பழிபோடுகின்றனர். எனக் கூறினார்.

3

Yennai arinthal – என்னை அறிந்தால் 5 years Celebration

0
Yennai arinthal - என்னை அறிந்தால் 5 years Celebration

Yennai arinthal – என்னை அறிந்தால் 5 years Celebration. என்னை அறிந்தால் 5 வருட கொண்டாட்டம். 5 Years of Yennai Arinthaal.

என்னை அறிந்தால் (Yennai arinthal) திரைப்படம் தனது ஐந்தாவது பிறந்தநாளை கொண்டாடுகிறது ! ஆம்! என்னை அறிந்தால் திரைப்படம் வெளியாகி இன்றுடன் ஐந்து வருடங்கள் (5 years Celebration) ஆகிறது.

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் அஜித்குமார், அருண்விஜய், த்ரிஷா, அனுஷ்கா, விவேக் அவர்கள் நடித்து ஹாரிஸ் ஜெயராஜ் அவர்களின் இசையில் A.M.ரத்னம் அவர்கள் தயாரித்த திரைப்படம்தான் ‘என்னை அறிந்தால்’.பிப்ரவரி ஐந்துடன் இப்படம் வெளியாகி ஐந்து வருடங்கள் ஆகிறது.

சத்யதேவ் மற்றும் விக்டருக்கு இடையேயான விருவிருப்பான மோதலையும்; சத்யாவுக்கும் ஹேமானிக்காவுக்கும் இடையேயான காதலையும்; சத்யாவுக்கும் ஈஷாவுக்கும் இடையேயான அன்பையும்; தேன்மொழிக்கு, சத்யதேவ் மீது உள்ள காதலையும் கெளதம் வாசுதேவ் மேனன் அவர்கள் நமக்கு காண்பித்து இன்றுடன் ஐந்து வருடங்கள் ஆகிறது.

சத்யதேவ் மற்றும் விக்டர்

சத்யதேவ் எனும் கதாப்பாத்திரத்தில் அஜித்குமார் அவர்கள் கச்சிதமாக பொருந்திருப்பார். விக்டர் கதாப்பாத்திரத்தில் அருன்விஜய் தன் நடிப்பால் வெடித்திருப்பார்.

சத்யதேவ் மற்றும் விக்டர் கதாபாத்திரம்  நண்பர்களாக காட்டப்பட்டு பின்பு விரோதிகளாக காட்டப்படும்.

திரைப்படத்தின் இறுதிகட்ட காட்சிகளில் விக்டர் பேசும் ஒவ்வொரு வசனமும் அனல் பறந்தது. விக்டர் இப்படியென்றால் மறுபக்கம் சத்யதேவ் தனது வசனங்களின் மூலம் அந்த அனலை படம் பார்ப்பவர்களின் உள்ளுக்குள் கடத்தும் வகையில் கொளுத்திவிட்டிருப்பார். படத்தின் மிகப்பெரிய பலமாக பார்க்கப்பட்டது சத்யதேவ் மற்றும் விக்டர் கதாப்பாத்திரம்தான்.

சத்யதேவும் ஹேமானிக்காவும்

ஹேமானிக்காவாக த்ரிஷா இப்படத்தில் நடித்திருப்பார். கெளதம் வாசுதேவ் மேனன் படத்தில் இயல்பாகவே நடிப்பவர்கள் அழகாக இருப்பார்கள். ஆனால் த்ரிஷா இன்னும் ஒருபடி மேல் சென்று பேரழகாக இருந்தார்கள்.

சத்யாவும்,ஹேமாவும் நண்பர்களாக பழகி பின்பு காதலர்களாக கண்டறியப்படுவார்கள். சத்யா ஹேமாவை நோக்கி  “கல்யாணம் பண்ணிக்கலாமா” என்று கேட்கும் காட்சிகளில் உள்ள முழு உரையாடல்களும் படத்தின் அழகுப்பகுதி .

“என்ன அழவைக்குற ஹேமா,அது உன்னால மட்டும்தான் முடியும் வேற!”

“நமக்கு ஈஷாவ தவிர வேற குழந்தையே வேணாம்.என்ன மெடிக்கல் ஷாப்புக்கு அடிக்கடி ஓடிக்கிட்டே இருக்கனும் ! அது ஒன்னுதா பிரச்சினை “

“என்னோட ஒரு பாதி உன்கிட்ட இருக்கு” போன்ற வசனங்கள் அழகு .

சத்யாவும் ஹேமானிக்காவும்தான் படத்தின் ஆதிக்காதல்!

சத்யாவும் ஈஷாவும்

ஈஷாவாக அனிகா சுரேந்திரன் நடித்திருப்பார்கள். கனக்கச்சிதம் இந்த கதாபாத்திரத்திற்கு இவர்.சத்யாவுக்கு மகளாக இப்படத்தில் வருவார்.

ஆம்! தன்னால் பிறந்த பெண் இல்லை ஆனால் ஈஷா சத்யாவுக்கு மகள்தான். சத்யா ஈஷாவுக்கு அப்பாதான். இதுதான் படத்தின் அன்பு.

இருவர்களுக்கும் இடையேயான உரையாடல்கள் சிரிப்புகளென படத்தில் நிஜ அப்பாவையும் மகளையும் நாம் பார்க்கலாம். ஒவ்வொரு முறையும் ‘சத்யா’ என்று ஈஷா கூப்பிடும் பொழுதுகளும் அழகுதான்.

சத்யாவும் தேன்மொழியும்

தேன்மொழியாக நடித்திருப்பார் அனுஷ்கா. விமானத்தில் தேன்மொழி சத்யாவை கண்டதும் சில வசனங்களை தனக்குள் சொல்லுவார். காபி ஷாப்பில் சத்யாவின் அழகை பற்றி வருணிப்பார்.

இரு இடங்களிலுமே அனுஷ்காவின் கண்கள் வசனங்களுக்கு ஏற்ப நடித்திருக்கும் வசனங்கள் அக்காட்சிகளில் வாழ்ந்திருக்கும். சத்யாவை ஒருதலையாக காதலிப்பதாக தேன்மொழி காட்டப்படுவார்.

‘தல’ பாராட்டப்பட வேண்டியவர்

தல என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித்குமார் போன்ற பெரிய நடிகர்கள் இப்படியான கதைக்களங்களில்  இப்படியாண பாணியில் நடித்தது மிகவும் பாராட்டக்குறியது.

அஜித் அவர்களை வழக்கம்போல் எதிர்பார்த்தவர்களுக்கு இப்படம் ஏமாற்றத்தைக் கொடுத்ததும் உண்மைதான். அதேசமயம் பலருக்கு இப்படியான அஜித் நல்ல சர்ப்ரைஸாக இருந்தார் என்பதும் உண்மை.

ஹாரிஸ் ஜெயராஜின் இசையும் பாடல்களும் இப்படத்தில் பன்மடங்கு நன்றாக இருக்கிறது. குறிப்பாக ‘அதாரு ஊதாரு’ பாட்டிற்கு இப்போது வரை குத்தாட்டம் போட்டு கொண்டுதான் இருக்கிறார்கள.

‘உனக்கென்ன வேணும் சொல்லு’ பாடலை மகள்களுக்காகவும், மகன்களுக்காகவும் தந்தைகள் பாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.

3