ஆஸ்கார் 2020: வெல்லப்போகும் படங்கள் யாவை? திரைப்பட உலகத்தில் அனைவராலும் கருதப்படும் மிகப்பெரிய விருது இது. இதை அகாடமி விருது என்றும் அழைப்பார்கள்.
இதில் இந்திய திரைபடங்கள் அதிகம் தேர்வு செய்யப்படுவதில்லை. இதனால் இந்திய திரைப்படங்கள் தரம் குறைவு என்று அர்த்தமில்லை. அவர்கள் எப்பொழுது ஹாலிவுட் படங்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்கிறனர்.
ஆஸ்கார் 2020
சென்ற வருடம் ரசிகர்களாலும் விமர்சர்களாலும் பாராட்டப்பட்ட படங்கள் 1917, ஜோக்கர், பாராசைட், மேரேஜ் ஸ்டோரி, தி ஐரிஷ்மன் மற்றும் ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட்.
இந்தப் படங்கள் அதிக விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சிறந்த படத்துக்கான விருது கொரியன் திரைப்படம் பாராசைட் அல்லது 1917 வெல்லும் என எதிர்பார்க்கிறோம்.
சிறந்த ஃபாரீன் மொழி படத்துக்கான விருது பாராசைட் வெல்ல அதிக வாய்ப்பு உள்ளது. சிறந்த இயக்குனர் பாராசைட் படத்தை இயக்கிய போங்க் ஜூன் ஹூ அல்லது 1917 இயக்கிய சாம் மேண்டீஸ் வெல்ல வாய்ப்பு அதிகம்.
சிறந்த நடிகர் ஜோக்கரில் நடித்த ஜோக்கன் பீனிக்ஸ் அல்லது மேரேச் ஸ்டோரி படத்தில் நடித்த ஆடம் டிரைவர் வெல்ல வாய்ப்பு அதிகம்.
சிறந்த நடிகை மேரேச் ஸ்டோரியில் நடித்த ஸ்கார்லட் ஜோகன்சன் அல்லது ஜூடி படத்தில் நடித்த ரீனி ரீனி ஜெல்வேகர் வெல்லுவார்கள் என எதிர்பார்க்கிறோம்.
இதில் யார் வெல்லப்போகிறார்கள் என்று பிப்ரவரி 9-இல் நடக்கும் ஆஸ்கார் அகாடமி விருது விழா அன்று தெரிந்துவிடும்.
கொரோனா வைரஸ்: ரியல் ஹீரோ டாக்டர் லீ. சீனா மக்களின் கதாநாயகனாக மாறிய கண் மருத்துவர் லீ வென்லியாங். li wenliang wikipedia tamil.
சீனாவின் ஹீபெய் மாகாணத்தின் தலைநகர் வுஹானில் இருந்து பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுக்க 24 நாடுகளில் பரவியுள்ளது.
மொத்தம் 28,000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 650 பேர் பலியாகியுள்ளனர்.
ஆனால் இதை முன்பே அதாவது 8 பேருக்கு இருக்கும் போதே கண்டுபிடித்தவர் தான் கண் மருத்துவர் லீ வென்லியாங் (li wenliang).
முன்கூட்டியே கண்டுபிடித்து எச்சரித்த அவரும் தற்போது சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இருப்பினும் மக்கள் அவரை புகழின் உச்சியில் வைத்து பார்க்கின்றனர்.
li wenliang wikipedia tamil
வுஹான் சென்ட்ரல் மருத்துவமனையில் கண் மருத்துவரான லீ (34) தன்னிடம் வந்த நோயாளிகளை பரிசோதித்ததில் 10-ல் 8 பேருக்கு ஒரே மாதிரியான நோய் தொற்று இருப்பது கண்டு சக மருத்துவர்களை எச்சரிக்கை செய்துள்ளார்.
முதலில் லீ வென்லியாங் சார்ஸ் வைரஸ் திரும்ப பரவுவதாக சந்தேகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
அனைவரும் பாதுகாப்பா இருங்க இது மனிதர்கள் மூலம் பரவும் என்பதையும் வெளியிட்டுள்ளார்.
அரசின் மிரட்டல்
லீ தனது நண்பர்கள் மற்றும் சக மருத்துவர்களை எச்சரிக்கை செய்துள்ளார். அனைவரையும் முகக்கவசம் அணியும் படி வீசாட்டில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து பொது சுகாதார துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும்; சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இவ்வாறான பொய் தகவல்களை பகிர்வதை நிறுத்தும் படியும் கடிதம் பெற்று சென்றுள்ளனர்.
கொடூர கரோனா லீ இறப்பு
இந்நிலையில் லீ ஜனவரி 10-ம் தேதி காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து தன்னை பரிசோதித்து பார்த்த லீ தனக்கும் அந்த வைரஸ் தொற்று இருப்பதை உணர்ந்தார்.
ஜனவரி 12-ம் தேதி மறுத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது.
இந்நிலையிலும் அவர் தனது வீடியோ ஒன்றை வெளியிட்டார். லீ அதில் கூறியதாவது, மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்குமாறும் இது பரவக்கூடிய தொற்று வைரஸ் எனக் கூறினார். நேற்று அவர் உயிரிழந்தார்.
மக்களின் ஹீரோ
தற்போது சீன அரசு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் தங்கள் மன்னிப்பைக் கோரியுள்ளனர்.
தன் உயிர் போவதைப் பற்றிக்கூட கவலைப்படாமல் மக்களுக்காக இந்த தகவலை வெளியிட்ட லீயின் செயல் மக்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
மேலும் இதை மறைத்த சீன அரசின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். லீ தான் தங்கள் கதாநாயகன் என்றும் அவர் போன்ற மருத்துவர்கள் தான் நாட்டுக்குத் தேவை என்பது போன்ற கருத்துக்களை அவர் பதிவுக்கு கீழே தெரிவித்து வருகின்றனர்.
ODI மேட்ச் நாங்க தான்; பல்பு வாங்கியது இந்தியா. NZ vs IND 2nd Match. இந்திய vs நியூசிலாந்து. ஒரு நாள் தொடரை இழந்தது.
NZ vs IND 2nd ODI மேட்ச்
இந்திய vs நியூசிலாந்து ஒரு நாள் தொடரின் இரண்டாவது போட்டி இன்று ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்று முடிந்தது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து 50 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழந்து 273 ரன்கள் குவித்தது. மார்டின் குப்தில் 79, ராஸ் டெய்லர் 73 ரன்கள் அதிகபட்சமாக எடுத்தனர்.
தாகூர் 2, சாஹல் 3, ரவீந்திர ஜடேஜா 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர். நியூசிலாந்தை குறைவான ரன்களில் சுருட்டியதால், இந்தியா நிச்சயம் வெற்றி பெரும் எனக் கணிக்கப்பட்டது.
இந்திய அணி மோசமான பேட்டிங்
ஒப்பனர்கள் பிரித்வ் மற்றும் மயங்க் சரியாக விளையாடவில்லை. அவர்களுக்கு அடுத்து வந்த விராட் கோலியும் 15 ரன்களில் நடையைக்கட்டினார்.
கே.எல்.ராகுல் 4, ஜாதவ் 9 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இந்தியாவின் நம்பிக்கை வீரர்களை கட்டம் கட்டி தூக்கினர் நியூசிலாந்து பவுலர்கள்.
ஷ்ரேயாஸ் அய்யரும், ஜடேஜாவும் சற்று இந்திய அணியை தாங்கிப்பிடித்து அழைத்துச் சென்றனர். ஷ்ரேயாஸ் அய்யர் 52 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆகினார்.
இதோடு மேட்ச் முடிந்தது என்று நினைத்தால் ஷைனி சிறப்பாக பேட்டிங் செய்தார். நியூசிலாந்து பவுலர்களின் பந்துகளை நொறுக்கினார்.
49 பந்துகளில் 5 பவுண்டரி, 2 சிக்ஸர்கள் உட்பட 45 ரன்கள் அடித்தார். இந்தியாவின் வெற்றிக்கு 44 ரன்கள் தேவை என்று இருந்த நிலையில் ஷைனி அவுட் ஆகினார்.
பின்னர் வந்த சாஹல் சற்று கை கொடுக்க, ஜடேஜா அடித்து ஆடினார். சாஹல் தேவையில்லாத ரன் அவுட். இந்தியாவின் வெற்றிக்கு 22 தேவைப்பட்டது.
ஜடேஜா முயற்சி வீண். அவர் அடித்த ஷாட் கேட்ச் ஆனது. உலகக்கோப்பை போன்றே இந்தியாவை வெற்றியின் விளிம்பு வரை கொண்டு சென்று தோல்வியைத் தழுவினார்.
48.3 ஓவரில் இந்தியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 251 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்ற போட்டியில் பவுலிங் சொதப்பல், இப்போட்டியில் பேட்டிங் சொதப்பல் காரணமாக இந்தியா ஒருநாள் தொடரை இழந்தது.
இராமகிருஷ்ண தீர்த்த வரலாறு. திருப்பதியில் ஆண்டிற்கு ஒரு முறை அனுமதிக்கப்படும் அதிசய தீர்த்தம்! திருமலை திருப்பதி பகுதியில் இப்படி ஒரு அருமையான இடமா?
வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே பக்தர்களுக்கு அனுமதியா? பாவங்கள் தீர்க்கும் தை மாத பௌர்ணமி நீராடல் அதியசம்.
திருமலை திருப்பதி என்றதுமே நம் நினைவுக்கு வருவது கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஸ்ரீ வேங்கடேசன் ஆலயம் தான்.
ஏழுமலைப்பன் ஆட்சி செய்யும் ஏழு மலைகளில் எண்ணற்ற அதிசயங்களும் அற்பதமான இடங்களும் உள்ளன.
அதில் மிக முக்கியமாக தற்பொழுது தை மாத பௌர்ணமியில் மட்டுமே அனுமதி அளிக்கப்படும் “ஸ்ரீ இராமகிருஷ்ண தீர்த்தம்” ஆகும்.
பலரும் அறியாத பாவங்களைப் போக்கும் இப்புண்ணிய தீர்த்தமானது திருமலையில் ஸ்ரீீநிவாசன் கோயிலில் இருந்து வடக்கே சுமார் 6 மைல் தொலைவில் அமைந்துள்ளது. இதன் சிறப்புகளை பற்றி விரிவாக காண்போம்.
இராமகிருஷ்ண தீர்த்த வரலாறு
முற்காலத்தில் அடர்ந்த வனப் பகுதியான திருமலையில் இராம கிருஷ்ணன் என்கிற முனிவர் ஸ்ரீநிவாசனை நோக்கி தவம் புரிய திருமலைக்கு வந்தார்.
திருமலையின் வடக்கே உள்ள ஒரு வனப்பகுதியில் ஒரு குளம் அமைத்து அதன் அருகே தவம் இயற்றி வந்தார். பல ஆண்டுகள் தவம் புரிந்ததால் அவரை சுற்றி எறும்பு புற்று மூடியது.
தேவலோக அதிபதியான தேவேந்திரன் இதனை கண்டு முனிவரின் தவத்தை சோதிக்க எண்ணி வானில் இருந்து இடி மற்றும் மின்னலை முனிவர் மீது இறக்கினான்.
ஆனால் தவ வலிமையால், அந்த முனிவர் மீது படாமல் இடி வேறு இடத்தில் விழுந்தது. முனிவரின் தவத்தில் மகிழ்ந்த பெருமாளும் தோன்றினார்.
எறும்பு புற்று உடைந்து முனிவர் வெளியே வந்து. ஸ்ரீநிவாசனை பணிந்தார். அவர் அமைத்த அப்புண்ணிய குலத்தில் பௌர்ணமியில் நீராடும் மக்களுக்கு சகல பாவங்களும் நீங்க வேண்டும் என்று வரம் கேட்க பெருமாளும் வரமளித்தார்.
அன்று முதல் முனிவரின் பெயராலே இராமகிருஷ்ண தீர்த்தம் என அழைக்கப்படுகிறது.
தை மாத பௌர்ணமி நீராடல்
அடர்ந்த மலைப் பகுதி மற்றும் வன விலங்குகளால் மக்களின் பாதுகாப்பு கருதி இத்தீர்த்ததிற்கு செல்ல எல்லா பௌர்ணமியும் அனுமதி இல்லை.
ஆந்திர வனத் துறையினர் கட்டுபாட்டின் கீழ் “தை மாத பௌர்ணமி” அன்று மட்டும் காட்டுப் பகுதியில் நடைப்பயணமாக சென்று இராமகிருஷ்ண தீர்த்தத்தில் நீராட அனுமதி வழங்கப்படுகிறது.
இயற்கையான மலைகள் காடுகளுக்கு இடையே அமைந்த அற்புதமான இடமாகும். இது ஒரு அதிசய தீர்த்தம் என்றே கருதப்படுகிறது.
திருமலையில் இருந்து செல்லும் வழி
திருமலை திருப்பதியில் இருந்து பேருந்து மூலம் பாபவிநாசம் அணையை அடைந்து. அங்கிருந்து அணை பாலத்தை கடந்து மலை ஏறத் துவங்க வேண்டும்.
தேவஸ்தானத்தின் மூலம் உணவு, நீர், மருத்துவ வசதி அனைத்தும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
2020 இல் இராமகிருஷ்ண தீர்த்த பயணம்
இந்த ஆண்டு பிப்ரவரி 9 ஆம் நாள் ஞாயிற்றுக் கிழமை காலை 6 முதல் மாலை 6 வரை இராமகிருஷ்ண தீர்த்ததிற்கு செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கரடுமுரடான காட்டு வழி என்பதால் சற்று கவனமாக பயணிக்க வேண்டும்.
எல்லா வருடமும் இராமகிருஷ்ண தீர்த்தம் செல்லும் பக்தர்கள் வருகை ஆயிரம் ஆயிரமாக அதிகரித்த வண்ணம் உள்ளது என்று திருமலை தேவஸ்தான நிர்வாகம் கூறுகிறது.
செல்லும் வழி முழுதும் குடிநீர் வசதி தற்காலிக பயனிற்காக ஏற்படுத்தப்பட்டுள்ளது. செல்லும் வழியில் வற்றாத சுனை ஒன்று இருக்கும்.
வெயில் காலத்திலும் குளிர்ச்சி மாறாமல் இருக்கும். செல்பவர்கள் தவறாமல் அதை தரிசிக்கவும்.
இராமகிருஷ்ண தீர்த்தத்தில் நீராடி ஸ்ரீநிவாசனை தரிசித்தால் பாவங்கள் தொலைவதுடன் எண்ணிய காரியம் அனைத்தும் ஈடேறும் என்பது பலரின் அனுபவரீதியான உண்மை ஆகும்.
முன்னாள் இந்தியாவால் நிர்வகிக்கப்பட்ட காஷ்மீர் முதலமைச்சர் ஒரு சர்ச்சைக்குரிய தடுப்புச் சட்டத்தின் கீழ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
மெக்பூபா முஃப்தி மற்றும் ஒமர் அப்துல்லா
இந்திய அரசாங்கம் காஷ்மீர் பகுதியின் தன்னாட்சி உரிமையை அகற்றிய பின்னர், ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் மெக்பூபா முஃப்தி மற்றும் ஒமர் அப்துல்லா ஆகிய இருவரையும் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
விவாதத்திற்கு பெயர்போன பொது பாதுகாப்பு சட்டம் (PSA) இரண்டு ஆண்டுகள் வரை பொறுப்பின்றி காவலில் வைக்க அனுமதிக்கிறது.
அவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதில் இருந்து அவர்களைப் பற்றிய தகவல் மறைமுகமாகவே இருந்து வந்த நிலையில் இரு தலைவர்களும் வியாழனன்று விடுதலை செய்யப்பட உள்ளனர்.
மெக்பூபா முஃப்தியின் ட்விட்டர் கணக்கை இயக்கும் முஃப்தியின் மகள், “சர்வாதிகார” நடவடிக்கை என தனது ட்வுட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
திரு அப்துல்லாவிடம் இருந்து எந்த வார்த்தையும் இல்லை. PSA உடைய விமர்சகர்கள் இது கடுமையான சட்டம் என விமர்சனம் கொடுத்துள்ளனர்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாரதீய ஜனதா கட்சி (BJP) தலைமையிலான அரசாங்கம், அந்த பிராந்தியத்தின் சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்த நாட்களில், உள்ளூர் அரசியல்வாதிகள் மற்றும் வணிகர்கள் உட்பட, ஆயிரக்கணக்கான மக்களை கைது செய்ததாக நம்பப்படுகிறது.
பிராந்தியத்திற்கு வெளியே உள்ள நகரங்களில் பலர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். எம். பி. முப்தியின் மக்கள் ஜனநாயகக் கட்சியில் (PDP) உள்ள ஆதாரங்கள், பி.ஜே.பி “முக்கிய அரசியல்வாதிகளை குற்றவாளி” என்று கூறுகிறது.
காஷ்மீரின் மக்களை அவர்கள் எவ்வளவு காலம்தான் ஒடுக்க முடியும்? அவர்கள் ஒரு அழுத்தம் நிறைந்த குக்கர் போன்ற நிலைமையை உருவாக்கி வருகிறார்கள்.
காஷ்மீரில் நடந்தது என்ன?
“இந்தியாவிற்கு ஆதரவான அரசியல்வாதிகள்” மோடியால் “நான் காட்டிக் கொடுக்கப்படுகிறேன்” என்று உணர்வார்கள்.
ஏனெனில் காஷ்மீரின் கதவடைப்புக்குள் அந்த பிராந்தியத்தின் தகவல் தொடர்பு இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது.
பி.ஜே.பி இந்த முடிவை தற்காத்து நிற்பது, சட்டம் ஒழுங்கை நிலைநாட்டடுவதற்காக என்று கூறி வருகிறது.
எளிதில் தொலைபேசிகள், இணைய பயன்பாடுகள் ஆகியவை பகுதியளவு மீட்கப்பட்டாலும், காஷ்மீரில் இன்னும் எத்தனை பேர் காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரியவில்லை.
சிறப்பு அந்தஸ்து
இந்த பிராந்தியம், இந்திய அரசியலமைப்பு உத்தரவாதம் அளித்த ஒரு சிறப்பு அந்தஸ்தை அனுபவித்தது.
அது நிரந்தர வசிப்பிட, சொத்து உடைமை மற்றும் அடிப்படை உரிமைகள் பற்றிய தனது சொந்த விதிகளை உருவாக்க அனுமதித்தது.
அது பெரும்பாலும் காஷ்மீர் உடனான இந்தியாவின் மூர்க்கமான உறவை அடிப்படையாகக் கொண்டது. முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியமான காஷ்மீர் இந்தியாவில் இணைந்தது.
அதன் சிறப்பு அந்தஸ்தை அகற்றிவிட்டு, அதை இரண்டு கூட்டாட்சி நிர்வாகப் பகுதிகளாகப் பிரித்த முடிவு அப்பகுதியில் பரந்த எதிர்ப்புக்களை தூண்டிவிட்டது.
காஷ்மீர் ஏன் சர்ச்சைக்குரிய விஷயம்?
இந்தியாவும் பாக்கிஸ்தானும் தனது பகுதி என்று கூறும் ஹிமாலயன் பிராந்தியமாகும். ஒரு காலத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் என்ற சுதேச மாநிலமாக இருந்தது.
ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியின் முடிவில் பிளவுபட்ட பின்னர் அது 1947-ல் இந்தியாவுடன் இணைந்தது.
அதற்கு பின்னர் அந்தப் பகுதிகளில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் போர் நிறுத்த உடன்படிக்கை செய்து கொண்டனர்.
இந்திய ஆட்சிக்கு எதிராக பிரிவினைவாத கிளர்ச்சியை ஏற்படுத்துவதன் காரணமாக 30 ஆண்டுகளாக இந்தியா ஆளும் பக்கத்தில் ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் வன்முறைகள் நடந்துள்ளன.
இப்போது என்ன நடந்தது?
ஆகஸ்ட் முதல் சில நாட்களாக காஷ்மீரில் சந்தேகத்திற்கு இடமான அறிகுறிகள் காணப்பட்டன.
பத்தாயிரக்கணக்கான கூடுதல் இந்திய துருப்புக்கள் நிறுத்தப்பட்டனர். ஒரு பெரிய இந்து யாத்திரை இரத்து செய்யப்பட்டது.
பள்ளிகளும் கல்லூரிகளும் மூடப்பட்டன. சுற்றுலாப் பயணிகள் வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டனர்.
தொலைபேசி மற்றும் இணையப் பணிகள் நிறுத்திவைக்கப்பட்டன மற்றும் பிராந்திய அரசியல் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டனர்.
இந்திய அரசியலமைப்பின் 370 வது பிரிவு
இந்திய அரசியலமைப்பின் 35-வது பிரிவு சில சிறப்பு சலுகைகளை மாநில மக்களுக்கு கொடுத்தாலும் அது எப்போது வேண்டுமானாலும் ஒதுக்கப்பட்டுவிடும் என்று இருந்தது.
அந்த அரசாங்கம் அந்த 370 ஆவது பிரிவு, ஏறத்தாழ 70-ஆண்டுகளாக இந்தியாவுடன் காஷ்மீரின் சிக்கல் வாய்ந்த உறவுகளின் அடிப்படையாக இருந்த 370-ன் ஒரு பகுதியாகும்.
370-ஆவது பிரிவு எவ்வளவு முக்கியமானது?
தனது சொந்த அரசியல் அமைப்பு, தனிக்கொடி மற்றும் சட்டங்களை இயற்றுவதற்கு சுதந்திரம் மற்றும் அரசுக்கு ஒரு குறிப்பிட்ட அளவு தன்னாட்சி உரிமை வழங்கப்படுவதற்கு அந்தக் கட்டுரை அனுமதித்தது.
வெளிநாட்டு விவகாரங்கள், பாதுகாப்பு மற்றும் தகவல் ஆகியவை மத்திய அரசாங்கத்தின் பாதுகாப்பைப் கொண்டிருந்தன.
இதன் விளைவாக ஜம்மு மற்றும் காஷ்மீர் நிரந்தர குடியிருப்பு, சொத்து உரிமை மற்றும் அடிப்படை உரிமைகள் தொடர்பான அதன் சொந்த விதிகளை உருவாக்க முடியும்.
அது மாநிலத்திற்கு வெளியில் இருந்து சொத்துக்களை வாங்குவதையோ அல்லது அங்கேயே நிலைநிறுத்துவதையோ தடுக்க முடியும்.
சர்ச்சையாக்கும் இந்தியா
மோடியின் காஷ்மீர் மீதான சிறப்பு சட்டம் ஏன் சர்ச்சைக்குரிய நிலையில் இருக்கிறது என்பதை இந்தியா காட்டிக் கொடுத்துவிட்டது என முன்னாள் முதலமைச்சர் கூறுகையில், முஸ்லிம்கள் பெரும்பான்மை பிராந்தியமான காஷ்மீர் இந்தியாவின் பிரிவினையில் இணைவது என்பது மட்டுமே காஷ்மீரில், இந்தியா கொண்டுள்ள உறவை ஆதாரமாகக் கொண்டிருக்கிறது.
அரசாங்கம் ஏன் அதை செய்தது?
பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்து தேசியவாத பாரதிய ஜனதா கட்சி நீண்ட காலமாக 370 வது விதியை எதிர்த்ததுடன், 2019 தேர்தல் அறிக்கையில் அதைத் திரும்பப் பெற்றது.
“காஷ்மீரை இணைப்பதற்கு ஒதுக்கப்பட வேண்டும் என்றும், இந்தியாவின் ஏனைய பகுதிகளில் அதே அடிப்படையில் அதனை நிலைநாட்ட வேண்டும் என்றும் அவர்கள் வாதிட்டனர்.
ஏப்ரல்-மே பொதுத் தேர்தலில் அதிகாரத்திற்கு திரும்பிய பின்னர், அரசாங்கம் அதன் உறுதிமொழியில் எந்த நேரத்திலும் நடிக்கவில்லை.
திங்களன்று நடவடிக்கை பற்றி குறைகூறுபவர்கள், இந்தியா இப்பொழுது எதிர்கொள்ளும் பொருளாதார மந்தநிலையுடன் அதை இணைத்துள்ளனர்.
இது அரசாங்கத்திற்கு அதிகம் தேவைப்படும் திசைமாற்றத்தை அளிக்கிறது என்று கூறுகின்றனர்.
காஷ்மீரியின் மனநிலை
பெரும்பாலான கஷ்மீரிகள், பிஜேபி இறுதியாக முஸ்லிம் பெரும்பான்மை பிராந்தியத்தின் மக்கட்தொகை தன்மையை மாற்ற விரும்புகிறது என்று பலர் நம்புகின்றனர்.
உள்துறை மந்திரி அமித் ஷா பாராளுமன்றத்தில் அறிவித்தார். பெரும்பாலான இந்தியர்களுக்கு அது வியப்பு என்றாலும், இந்த முடிவை எடுப்பதற்கு அரசாங்கம் சில தயாரிப்பை செய்திருக்கும்.
காஷ்மீர், பாக்கிஸ்தான் ஆகியவற்றில் பி.ஜே.பி கடுமையானதாக இருப்பதைக் காட்ட மோடி விரும்பும் விருப்பத்துடன் இந்த நடவடிக்கை பொருந்துகிறது.
மோடியின் விதிமீறல்
அரசியலமைப்பின்படி, 370 வது பிரிவு “மாநில அரசாங்கத்தின்” உடன்பாட்டுடன்தான் மாற்றப்பட முடியும்.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஒரு வருடத்திற்கும் மேலாக மாநில அரசு அதிகமாக இல்லை.
கடந்த ஆண்டு ஜூன் மாதம், அன்றைய முதலமைச்சரான மெக்பூபா முஃப்தியின் (Mehbooba Mufti) அரசாங்கம் ஒரு சிறுபான்மையாக குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியா (federal rule) ஆளுநர் பதவியை அமல்படுத்தியது.
இதில் கூட்டாட்சி அரசாங்கம் அதன் ஆட்சியை விதித்த ஆளுநரின் ஒப்புதலை மட்டுமே பெற வேண்டியிருந்தது.
மாற்றங்களை கொண்டு வர அதன் உரிமைகளுக்கேற்ப அது உள்ளது என்றும், கடந்த காலத்தில் கூட்டாட்சி அரசாங்கங்களால் இது போன்ற முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும் அரசாங்கம் கூறுகிறது.
வல்லுனர்கள் கருத்து
ஒரு அரசியலமைப்பு வல்லுனர் சுபாஷ் காஷ்யப் செய்தி நிறுவனத்திடம் இந்த உத்தரவு “அரசியலமைப்பு முறையில் ஒலித்தது” என்றும், “எந்த சட்ட, அரசியலமைப்பு பிழையும் அதில் காணப்படவில்லை” என்றும் கூறினார்.
மற்றுமொரு அரசியலமைப்பு வல்லுனர் AG Noorani கூறுகையில், அது “ஒரு சட்டவிரோத முடிவு, மோசடி செயலுக்கு ஒப்பாகும்” என்று கூறினார்.
எதிர்ப்பு அரசியல் கட்சிகள் சட்டத்தை சவால் செய்ய முடியும் ஆனால் காஷ்மீர் பல இந்தியர்களுடன் மனமுட்டி மோதும் பிரச்சினை ஆகும்.
நிர்பயா கற்பழிப்பு வழக்கு: தள்ளி செல்லும் தூக்கு தண்டனை? நிர்பயா இறந்து 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் இன்னும் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படவில்லை.
நிர்பயா கற்பழிப்பு வழக்கு
கடந்த 2012 ஆம் ஆண்டு நிர்பயா என்ற மாணவி ஓடும் பேருந்தில் கற்பழிக்கப்பட்டு கொலை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்க பட்டு தூக்கு தண்டனை விதிக்கபட்டது.
கொலையாளிகளைத் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரிய வழக்கில் ஏற்கனவே குற்றவாளிகளுக்கு அனைத்து சட்ட நிவாரணங்களையும் பயன்படுத்த ஒரு வாரம் காலம் அவகாசம் வழங்கபட்டுள்ளது.
எனவே, இந்த மனு விசாரணைக்கு ஏற்புடையது அல்ல எனக்கூறி திகார் சிறை நிர்வாகம் சார்பில் தொடர்ந்த வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
உலக அளவில் இந்தியா குறித்த தாக்கத்தை ஏற்படுத்திய மிக முக்கிய வழக்குகளில் நிர்பயா வழக்கும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது .
பெண்கள் போராட்டம்
சம்பவம் நடந்த காலத்தில் நாடும் முழுவதும் பெண்கள் மற்றும் அரசியல் கட்சிகளும் பெரிய அளவில் போராட்டம் நடத்தின. ஏன்? உலக அளவில் நிர்பயா விவகாரம் எதிரொலித்தது.
நமது நாட்டில் எத்தனையோ பாலியல் வழக்குகள் இருந்தாலும் நிர்பயா விவகாரம் தலைநகரில் நடந்த காரணத்தினால் நாடு முழுவதும் பேசப்பட்டது. அதுமட்டுமின்றி பெண்கள் பாதுகாப்பு குறித்த பொது விவாதங்களும் நடந்தன.
நிர்பயா நிதி
நடைபெற்ற போராட்டங்களின் பயனாக மத்திய அரசு நாடு முழுவதும் பெண்கள் பாதுகாப்புக்காக ‘நிர்பயா நிதி’ என்ற திட்டத்தை வருடந்தோறும் நிதி ஒதுக்கி செயல் படுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தூக்குதண்டனை மேல்முறையீடு
இதனிடையே குற்றவாளிகளின் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த டெல்லி பாலியல் விரைவு நீதிமன்றம் குற்றம் சாற்றப்பட்ட அனைவருக்கும் தூக்கு தண்டனை விதித்து உத்தரவிட்டது.
இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றம் என அனைத்து வகையிலும் மேல்முறையீடு குற்றவாளிகள் தரப்பில் செய்யப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் வாதங்களை கேட்டறிந்த உச்சநீதிமன்றம் குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனையை உறுதி செய்தது.
7 ஆண்டுகள் இன்னும் தண்டனை கிடைக்கவில்லை
ஏற்கனவே சட்ட நடைமுறைகள் நிறைவடைய கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் தூக்கு தண்டனையில் இருந்து தப்புவதற்காக குற்றவாளிகள் ஒவ்வொருவராக சட்ட நிவாரணிகளை பயன்படுத்தி வந்தனர்.
முதலில் கருணை மனு, பின் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது இன்னும் முடிந்த பாடில்லை.
இது ஒருபுறம் இரண்டாவது முறையாக கடந்த 1 தேதி தூக்கிலிடப்படுவதாக இருந்த அனைவரும் நீதிமன்ற உத்தரவால் தப்பி பிழைத்தனர்.
இதனை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அவர்கள் அனைவரையும் தனித்தனியே தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிபதிகள் நிராகரித்து குற்றவாளிகளுக்கு ஒரு வார காலம் அவகாசம் வழங்கி தீர்ப்பளித்தனர்.
திகார் சிறை நிர்வாகம்
இந்த நிலையில்தான் குற்றவாளிகளை தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் தொடர்ந்த வழக்கினை டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பினை மேற்கோள்காட்டி கீழ் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேலும், தனது உத்தரவில் டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த ஒருவார கால அவகாசம் நிறைவடைந்த பிறகு மீண்டும் இந்த மனுவை தாக்கல் செய்யலாம் என தெரிவித்துள்ளது முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது .
எனினும், டெல்லி உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மத்திய அரசின் சார்பில் தாக்கல் செய்த மனு உச்ச நீதிமன்றத்தில் வரும் 11 தேதி விசாரணைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.
கல்வியில் நல்ல முன்னேற்றம் காணும் நாள். வியாபாரிகளுக்கும் பெரும் லாப முன்னேற்றம் உண்டு. பெண்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் அசௌகரியங்கள் தீரும்.
சந்திரன் ராசிக்கு மூன்றில் இருப்பதால் தகவல் தொடர்புத் துறை சார்ந்தவர்களுக்கு முன்னேற்றம். இளைஞர்களுக்கு கணினித் துறையில் வேலை கிட்டும். நண்பர்களோடு பேசுகையில் நிதானம் தேவை. விளையாட்டு விபரீதமாகலாம்.
நல்ல தனவரவுடைய நாளாகக் காணப்படுகிறது. நிதானமான போக்கு தேவைப்படுகிறது. வேலை பார்க்குமிடத்தில் மேலதிகாரியை பகைத்தல் கூடாது.
அதிர்ஷ்ட எண்: 4 அதிர்ஷ்ட நிறம் : காக்கி வண்ணம்.
ராசியிலே சந்திரன் சஞ்சரிப்பதால் சற்று கவனம் தேவை. வெற்றியடையும் நாளாகக் காணப்பட்டாலும் சிறிது வேலைப்பளு அதிகம் இருக்கும். பொறுமையுடன் வேலையில் ஈடுபடுவது சாலச் சிறந்தது.
நல்ல நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும் நாளாகக் காணப்படுகிறது. தாய் தந்தையரின் நலத்தைக் கவனித்துக் கொள்வது மிக அவசியம். தந்தையாரின் உடல்நலத்தைப் பேணுவது சிறந்தது. உங்கள் உடல்நலத்தையும் கவனித்துக் கொள்ளுங்கள்.
மிகச் சிறந்த லாபகரமான நாளாகக் காணப்படுகிறது. வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டு. பிள்ளைகளால் பெருமைகள் கூடி வரும். பெண்களுக்கு மாமியாரால் பிரச்சனை உண்டு.
அதிர்ஷ்டம் கொட்டும் நாள். எந்த வாய்ப்புகள் வந்தாலும் தவிர்க்காமல் ஏற்றுக் கொள்வது நலம். சிறிய வேலையாக இருந்தாலும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக அந்த வேலையைச் செய்து காட்ட வேண்டும். பெண்களுக்கு குடும்பத்தில் சந்தோஷம் பெருகும்.
தந்தைவழி உறவுகளால் அனுகூலம் உண்டு. வெளிநாட்டு தொடர்பான அனைத்து விஷயங்களும் வெற்றி பெறும். வியாபாரத்தில் வெற்றி உண்டு. தூரதேசத்தில் வசிப்பவர்கள் பற்றிய பயம் நீங்கும்.
இன்று நீங்கள் மிகவும் உணர்ச்சிவசப்படுவீர்கள். நண்பர்களுடன் உணர்ச்சிவசமாகப் பேசி மகிழ்வீர்கள். அதேநேரம் உணர்ச்சிவசப்படாமல் அறிவுக்கு வேலை கொடுத்து பணியாற்றினால் இன்று எதிலும் வெற்றி கிட்டும்.
நண்பர்களிடத்தில் உள்ள பகைமையை மறந்து மனம் களிக்க வேண்டிய நாள். அவசரப்பட்டு நல்ல நண்பர்களை இழந்து விட வேண்டாம். எதிலும் விட்டுக் கொடுத்துப் போக வேண்டிய நாளாகக் காணப்படுகிறது.
மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய நாள். ஆறுபடை முருகன் வீட்டில் ஒன்றை வழிபடுவது நல்லது. வெளிநாட்டில் இருப்போர் ஓம் சரவணபவ என உச்சரித்தால் உயர்வடையலாம்.
அதிர்ஷ்ட நிறம் : இலைப்பச்சை வண்ணம், அதிர்ஷ்ட எண்: 5
பூர்வ புண்ணிய அனுக்கிரகம் முழுமையாகக் கிடைக்கக் கூடிய நாள். எல்லா அதிர்ஷ்டமும் கிடைக்கக் கூடிய நாளாகக் காணப்படுகிறது. குலதெய்வ வழிபாடு இன்னும் குதூகலத்தை அதிகப்படுத்தும்.
டெல்லியில் நாளை நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் (Delhi Assembly Election) பாஜக நிர்வாகிகள் தொண்டர்கள் காலை 10 மணிக்குள் வாக்களிக்குமாறு அமைச்சர் அமித்ஷா வேண்டுகோள்.
சட்டப்பேரவைத் தேர்தல் விவரம்
டெல்லியில் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கும் 13,750 வாக்குச்சாவடிகளில் நாளையும் (8ம் தேதி), 11-ம் தேதியும் தேர்தல் நடைபெற உள்ளது.
இதில் கடந்த 5 ஆண்டுகளாக தாம் செய்த நல்ல விஷயங்களைக் கூறி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி பிரச்சாரம் செய்து வருகிறது.
மும்முனைப் போட்டி
அதே சமயம் காங்கிரஸ் மற்றும் பாஜகவும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறது. 2014-க்கு பிறகு காங்கிரஸ் டெல்லியில் ஆட்சியை பிடிக்கவில்லை.
அதேபோல பாஜக 1998-ம் ஆண்டுக்கு பின் இன்றும் டெல்லியில் ஆட்சியை பிடிக்கவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. இதனால் இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது.
கருத்துக்கணிப்பு
பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி ஆகிய மூன்றுக்கும் இடையே பலத்த போட்டி இருந்தாலும் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் பெரும்பாலானோர் ஆம்ஆத்மி கட்சிதான் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று தெரிவித்துள்ளனர்.
அமித்ஷாவின் வேண்டுகோள்
இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கையில், டெல்லியில் வாக்குரிமை உலக பாஜகவினர் அனைவரும் காலை 10 மணிக்குள் வாக்களிப்பதை உறுதி செய்துகொள்ளுமாறும், இது கட்சியின் வெற்றிக்கு வழி வகுக்கும் எனவும் தெரிவித்ததாக கூறியது.
அதேபோல நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் காலை 6 மணிக்கே வாக்குச்சாவடிக்கு வருகை தர வேண்டும்.
அதோடுமட்டும் இல்லாமல் வாக்குப்பதிவு முடியும் வரை கண்ணும் கருத்துமாக இருந்து பாஜக அதிக வாக்குகள் பெற்று வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் அமித்ஷா கேட்டுக் கொண்டதாக தெரிவித்தது.
மலையாளப்படங்களின் மீது நம் தமிழ்நாட்டு சினிமா ரசிகர்களுக்கு எப்போதுமே தனி ஈர்ப்பு உள்ளது.
படத்தின் எளிமையான கதைக்களம்; கதைகளை படமாக்கும் விதம், படத்தின் எதார்த்த தன்மை; கதையின் நாயகர்கள், நாயகிகளின் கதாப்பாத்திர வடிவமைப்பு என்ற காரணங்கள் நீண்டு கொண்டிருக்கிறது.
இருப்பினும் திரைப்படம் நன்றாக இருக்கிறது என்பதுதானே அடிப்படையாக இருக்க முடியும்!
இப்படி மலையாள சினிமாக்களை மேலும் நேசிக்க ஒரு காரணமாய் அமைந்த திரைப்படம்தான் “கும்பளங்கி நைட்ஸ் (kumbalangi nights)”.
இப்படம் திரைக்கு வந்து இன்றுடன் ஒரு வருடம் ஆகிறது (one year of kumbalangi nights). இப்படத்தை பார்த்த பெரும்பாலனவர்களுக்கு கும்பளங்கி நைட்ஸ் தான் 2019-ன் ஃபேவரைட் திரைப்படம்.
கும்பளங்கி நைட்ஸ் (Kumbalangi Nights)
ஃபகத் பாசில், செளபின், ஷேன், ஶ்ரீநாத், மெத்யூ தாமஸ், அன்னா பென் மற்றும் இன்னும் பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.
கதையை ஒருவர் எழுத மற்றொருவர் இயக்கியது இப்படத்தில் நிகழ்ந்திருக்கிறது. ஆம்!ஷ்யாம் புஷ்கரன் என்பவர் திரைக்கதை எழுத மது என்பவர் இப்படத்தை இயக்கினார்.
படத்திற்கு சுஷின் ஷ்யாம் என்பவர் இசையமைத்திருக்கிறார். மேலும் சிறப்புத் தோற்றத்தில் ரமேஷ் திலக்கும் இப்படத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தில் நான்கு சகோதரர்களின் வாழ்வியலையும், அவ்வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் ஏக்கம், அழுகை, காதல், புன்னகை, சகோதரத்துவம், நட்பு எனப் பல உணர்வுகள் கலக்க சொல்லியிருக்கிறார்கள்.
நான்கு சகோதரர்கள்
ஒரு பக்கம் நான்கு சகோதரர்கள் மட்டும்தான். வீட்டில் சொல்லிக்கொள்ளும் படியான வேலைகள் இல்லை. குறிக்கோள்களும் இல்லை.
வெறுமனே சுத்திக்கொண்டு இருக்கிறார்கள். அவ்வப்போது வலை வீசி மீன் பிடிக்கவும் செல்வார்கள். இளையவன் மட்டும் பள்ளியில் படிக்கிறான்.
முதல் இரு சகோதரர்களுக்கு ஒரே வயது. ஊரில் இருந்து ஒதுக்குப்புறமாக அமைந்த ஆறுக்கறுகில் கட்டிமுடிக்கப்படாத வீடு என்றுதான் கதையின் நிலை ஆரம்பிக்கிறது.
மற்றொரு பக்கம் முடித்திருத்தும் தொழில், சுத்தக்காரர், புதியதாக கல்யாணமானவர், மிஸ்டர் பர்ஃபக்ட் என்று சொல்லும் அளவிற்கு இருக்கிறார் பகத் பாசில்.
இவரின் மனைவியின் தங்கைதான் அன்னா பென். அன்னா பென்னை காதலிக்கிறார் . நான்கு சகோதரர்களில் மூன்றாம் சகோதரான ஷேன்.
இவ்வாறாக பகத் பாசிலும் நான்கு சகோதரர்களுகும் கணக்ட்செய்யப்படுகிறார்கள். ஆனால் இது மட்டுமே கதையல்ல!
மூன்று பெண்கள்
சகோதர்கள் வாழ்வில் மூன்று பெண்கள் வருகிறார்கள். தேவதைகள் வருகையால் வாழ்வில் மாற்றம் ஏற்படுகிறது.
ஆனால், தேவதைகளால் ஏற்பட்ட மாற்றம் போல் அதுகாட்டப்பட்டிருக்காது. இச்செயல் படத்தின் மிகப்பெரிய பலம்.
படத்தின் காட்சிகள் திணிக்கப்படவில்லை. கதைக்கேற்ப அதுவாய் நிகழ்கிறது. மழை வந்த பின்னான செடிகளின் செழித்த நிலைப்போல!
படத்தில் உள்ள அனைத்து பெண்களுமே பாராட்டப்படக்கூடியவர்கள். நடிப்பிற்காக என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். அவர்களின் கதாப்பாத்திர வடிமைப்பு அப்படியானது.
எட்டமுடியாத உயரத்தில் பெண்களை வைத்துவிட்டோ, வெறுமனே அழகாகவோ, எதேனும் ஒன்றில் சாதித்தபடியோ இப்பெண்கள் காட்டப்படவில்லை.
சதாரணப் பெண்களை சதாரணமாகத்தான் காட்டியிருக்கிறார்கள். ஆனால், நாம் படத்தை பார்க்கும்போது அவர்கள் எவ்வளவு அசாத்தியமானவர்கள் என்பது புலப்படும்.
படம் முடிந்த பின் குறைந்தபட்சம் சில நிமிடங்களாவது நம் வீட்டுப் பெண்களை வியப்பாக பார்க்கும் எண்ணம் வரும்.
இயல்பான நடிப்பு
நடிகர்கள் அனைவரும் தங்களுக்கு நடிக்கத் தெரியும் என்பதற்காக ஓவர் ஆக்டிங் செய்யாமல் கதையில் தன் கதாப்பாத்திரத்தின் அளவை உணர்ந்து அதற்கேற்ப நடித்திருக்கிறார்கள்.
குறிப்பாக படத்தில் செளபினும், பாசிலும் நடிக்கவே இல்லை இயல்பாகத்தான் இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை நமக்கு தரும் வகையில் உள்ளது அவர்களின் நடிப்பு.
படத்தின் ஆரம்பத்திலே நம்மை கட்டியணைக்கிறது இசையும் காட்சிகளும். படத்தில் கதை நகர நகர கதாப்பாத்திரங்களின் தோரனைகள் பிடித்துப்போகிறது.
அனைத்து கதாப்பாத்திரங்களையுமே நம் வாழ்வில் நாம் எங்கேயாவது பார்த்திருப்போம்! அப்படியில்லையெனில் நிச்சயம் கேள்வியாவது பட்டிருப்போம்.
படத்தில் உள்ள அனைத்து எமொஷனல் காட்சிகளும் வொர்க் ஆகியிருக்கிறது என்பது கதையின் உச்சம்.
திரைப்படம் வெளியாகி ஒரு வருடம் ஆகிய நிலையில், இப்பொழுதும் பலர் தன் சோக சமயங்களில் இப்படத்தை பார்த்து இன்புறுகிறேன் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டபடியேதான் உள்ளனர்.
பார்க்காமல் இருந்தால் நீங்களும் நிச்சயம் பார்க்கலாம். அமேசான் ப்ரைமில் ஓடிக்கொண்டிருக்கிறது.
மலையாள சினிமாக்களை மேலும் இரசிக்க ஒரு காரணமாய் “கும்பளங்கி நைட்ஸ்“
எடப்பாடி ஆட்சியில் பல டெட்பாடிகள்: இந்த அவலம் தேவை தானா? அமைச்சர் தங்கமணியும் அரச கஜானாவும்! டாஸ்மாக் விலை உயர்வு ஒரு பார்வை.
குடிமக்களுக்கு ஓர் சோகமான செய்தி ஆமாம்ப்பா நிஜமாவே குடிமக்களுக்குத்தான், குடிக்கும் மக்களுக்கு. அரச கஜானாவை நிரப்ப உங்க குடியில கை வச்சிட்டாங்கப்பா சரக்கு விலையை ஏத்திட்டாங்கோவ்
மது விலை உயர்ந்தால் தமிழக அரசுக்கு ரூ.2500 கோடி வருவாய் கிடைக்கும்ன்னு அமைச்சர் தங்க மணி பேட்டி கொடுத்துள்ளார்.
மதுவிலை ஏற்றம்
தமிழகம் முழுக்க 5,300 மதுக்கடைகளை தமிழக அரசே டாஸ்மார்க் என்ற பெயரில் நடத்தி வருகிறது.
இதன் மூலம் வருடத்திற்கு 25 ஆயிரம் கோடிக்கு மேல் வருமானமும் கிடைக்கிறது. விழாக்காலங்களில் இந்த வருவாய் இரண்டு மூன்று மடங்கு அதிகமாக இருக்கும்.
இந்த வருவாயைத் தான் அரசு பல முக்கியத் திட்டங்களுக்குச் செலவு செய்வதாக கூறிவருகிறது.
இந்நிலையில் 2017-ம் ஆண்டு மது பாட்டில்களின் விலை உயர்த்தப்பட்ட நிலையில் இன்று மீண்டும் விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
அமைச்சர் தங்கமணி கூறியதாவது,
டாஸ்மாக் விலை உயர்வு. மது விலை உயர்வு குறித்து நாமக்கல்லில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஆண்டு ஒன்றுக்கு மது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த 5 கோடி செலவு ஆகின்றது.
அதனால் மதுவிலை உயர்வு மூலம் 2500 கோடி வருவாய் கிடைக்கும் எனவும் கூறினார். இந்த ஆண்டு மின் உற்பத்தி அதிகமானதால் மின் தட்டுப்பாடு இருக்காது எனவும் கூறினார்.
எடப்பாடி ஆட்சியில் பல டெட்பாடிகள்
5 கோடி செலவுக்கு 2500 கோடி மூலம் ஈடுகட்ட நினைக்கின்றது அரசு. இதற்கு அந்த மதுபானக் கடைகளை மூடி விட்டால் என்ன?
குடி உடல் நலத்திற்கு கேடு என அந்தப் பாட்டிலில் எழுதி வெளியிடுகின்றனர். சினிமா படங்களில் இடம்பெறச் செய்கின்றனர்.
பள்ளி பாடப்புத்தகத்தில் கூட உள்ளது. இவ்வளவு விழிப்புணர்வு செய்தும் குடிப்பழக்கம் ஒழிந்ததா? இல்லையே பள்ளி மாணவிகள் பீர் பாட்டிலுடன் டிக்டாக் செய்யும் அவலம் அரங்கேறி உள்ளது.
அரசு கஜானாவை நிரப்ப, சாராயம் விற்கலாம். தமிழகத்தையே குடிக்க வைத்து அழிக்க நினைக்கலாம். அது தவறில்லை. ஒரு சினிமாவில் காட்சி இடம் பெற்றால் அது தவறாம்.
சரி, சரக்கு விலையை ஏற்றினால் குடிமகன்கள் திருந்தி விடுவார்களா? குடுக்க கூடுதலாக பணம் கேட்டு மனைவியும், குழந்தைகளையும் துன்புறுத்தும் அவலம் நிச்சயம் அதிகமாகும்.
எடப்பாடி ஆட்சியில் பல டெட்பாடிகள் என்று நாளைய வரலாறு பேசும். இந்த அவலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தேவை தானா?