Home Blog Page 319

இந்திய அணியின் ரன் மெஷின்: கிளார்க் புகழ்ந்த அந்த வீரர் யார் தெரியுமா?

0
இந்திய அணியின் ரன் மெஷின்

இந்திய அணியின் ரன் மெஷின்: கிளார்க் புகழ்ந்த அந்த வீரர் யார் தெரியுமா?

வரலாற்றில் இதுவரை ஒருநாள் போட்டி விளையாடிய வீரர்களில் மிகச்சிறந்தவர் கோலி என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கிளார்க் தெரிவித்துள்ளார்.

30 வயதான இந்திய அணியின் கேப்டன் கோலி இதுவரை ஒருநாள் போட்டியில் 10385 ரன்களை வெறும் 219 போட்டிகளில் அடித்துள்ளார்.

சராசரி 59-க்கும் மேல்வைத்து 39 சதங்களும் அடித்துள்ளார். மின்னல் வேகத்தில் ரன் அடிப்பதால் ரன் மெஷின் என்று அழைக்கப்படுகிறார்.

விராத் கோலி தலைமையில் இந்திய அணி, ஆஸ்திரேலியா மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டியில் வரலாறு காணாத வெற்றிபெற்று உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கோலி களத்தில் அவ்வப்போது கோபத்தை வெளிப்படுத்தினாலும், போட்டியின் மீது கொண்டுள்ள ஈடுபாடும், சாதனைகளும் அளப்பரியது.

மேலும் கிளார்க், முன்னாள் இந்திய அணியின் கேப்டன் தோனியின் தற்போதைய ஃபார்ம் இந்திய அணிக்கு மேலும் வலுசேர்க்கும்.

அது மட்டுமில்லாமல் தோனி அணியின் இலக்கிற்கு ஏற்றாற்போல் பேட்டிங் செய்வார் என்பது அவருடைய இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டியின் இன்னிங்சை பார்க்கும் பொழுது தெளிவாக தெரிகிறது.

மேலும், ஹார்த்திக் பாண்ட்யாவின் பேட்டிங் இந்திய அணியின் மிடில் ஆர்டரில் கூடுதல் வலுசேர்க்கும். வருகின்ற உலக கோப்பை அணியில் இடம் பிடிப்பார் என்று நம்புகிறேன்.

உலக கோப்பையில் இந்தியஅணி தான் வெற்றி பெரும் என்று நம்புகிறேன் எனவும் கூறினார்.

3

அன்று திமுக.. இன்று பாஜக.. அதே துணிவு, அதே கம்பீரம் – அஜித் ரியல் ஹீரோ

0
அன்று திமுக.. இன்று பாஜக..

அன்று திமுக.. இன்று பாஜக.. அதே துணிவு, அதே கம்பீரம் – அஜித் ரியல் ஹீரோ

அஜித் எதற்காக மௌனமானாரோ, அதே அரசியலால் நேற்று மௌனம் கலைத்துள்ளார். அன்று கலைஞர்.. இன்று தமிழிசை…

அஜித் யாருக்கும் அடங்காத காட்டுக்குதிரை. அவருடைய வழியில் போகவிடும் வரை மட்டுமே அவர் சாது. தடுக்க நினைத்தால் அடங்கா குதிரையாக மாறிவிடுவார்.

அன்று பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஆட்சியில் இருந்தது திமுக. கட்டாயப்படுத்தியே வந்துள்ளேன் என்று அஜித் கலைஞர் முன்னிலையிலேயே மேடையில் கர்ஜித்தார்.

இப்படி ஒரு துணிச்சலை அன்று தான் தமிழகம் பார்த்தது. இப்படி ஒரு தில்லான நடிகர் கூட உண்டோ? என அஜித்தை அண்ணாந்து பார்த்தனர்.

நான் மானதிற்குள் மென்று முழுங்கியதை அஜித் தில்லாக கூறிவிட்டார் என்கிற தொனியில் இருந்தது ரஜினியின் கைதட்டல்.

அந்த சம்பவத்திற்கு பிறகு அஜித் முற்றிலுமாக பத்திரிக்கைகள், மீடியாக்கள், ரசிகர்கள் என எவரையுமே சந்திப்பதில்லை.

எந்த ஒரு விஷயம் என்றாலும் அஜித் வாய் திறப்பதே இல்லை. இன்று அவரின் மௌனம் கலைத்த பெருமை பாஜகவையே சேரும்.

அஜித் எதுக்குமே வாய் திறப்பதில்லை என்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்த நினைத்தார் தமிழக பாஜக தலைவர் தமிழிசை.

அடுத்த சில மணி நேரங்களிலேயே அஜித் கையப்பமிட்ட கடிதத்தை, அவருடைய பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா வெளியிட்டார்.

அஜித்திடம் இன்னும் அதே கம்பீரம், அதே துணிவு அந்த லெட்டரில் தென்பட்டது. “சிவனேன்னு போறவனை சொறிஞ்சு விட்ட கதையாகிவிட்டது” தமிழிசையின் நிலைமை.

3

அஜித் லெட்டர்: விஜய்யைக் குத்திக்காட்டினாரா?

0
அஜித் லெட்டர்

அஜித் லெட்டர்: விஜய்யைக் குத்திக்காட்டினாரா?

அஜித் படத்தில் தவிர, நேரில் பேசிவதை நிறுத்தி பல கலாம் கழிந்துவிட்டது. தற்பொழுது திடீரென அஜித்திடம் இருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது.

தன்னுடைய அரசியல் முடிவைப்பற்றி தெளிவாக விளக்கி ஒரு கடிதம் வெளியிட்டுள்ளார். ரசிகர்களுக்கும் சில அறிவுரைகளை வழங்கியுள்ளார்.

அந்தக் கடிதத்தில் உள்ள சில வரிகள் தற்பொழுது சமூக வலைதளங்களில் விவாதப்பொருளாக மாறியுள்ளது.

அந்த சர்சைக்கு உரிய வரிகள், “நான் சினிமாவில் தொழில் முறையில் வந்தவன். நான் அரசியல் செய்யவோ மற்றவர்களுடன் மோதவோ இங்கு வரவில்லை.

அரசியல் சார்ந்த எந்த வெளிப்பாட்டையும் நான் ரசிகர்களுக்கு தெரிவிப்பது இல்லை. அரசியலில் எனக்கு தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு உண்டு. அதை நான் யார் மீதும் திணிப்பது இல்லை.

மற்றவர்கள் கருத்தை என்மீது திணிக்கவிட்டது இல்லை. என் ரசிகர்களிடம் இதையே தான் நான் எதிர்பார்கிறேன்” எனக் குறிபிட்டுள்ளார்.

இந்த வார்த்தையை விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கு ஸ்பெசலாக அஜித் கூறியுள்ளார் என சமூக வலைதளங்களில் சர்ச்சை வெடித்து விட்டது.

அரசியல் பேராசை நடிகர். சொந்த விருப்பத்திற்காக ரசிகர்களை வளர்கிறார். ரசிகர் மன்றம் வைத்துள்ளார் என சிலர் ட்விட்டரில் அஜித் லெட்டரை இணைத்து வெளியிட்டுள்ளனர்.

அஜித் இதை பொதுவாக குறிப்பிட்டு இருக்கவே வாய்ப்பு உள்ளது. ஆனால் அதிலும் ஒரு சர்சையை உருவாக்கி ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

இப்படி பண்ணினா, பின்ன எப்படி இந்த மனுஷன் வாய் திறப்பாரு. வாய் திறந்தாலே அதுவே ஒரு சர்ச்சை ஆயிடும் போல.

3

அஜித் அரசியல் பிரவேசம்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு! – கையெழுத்துடன் கடிதம் உள்ளே..

0
அஜித் அரசியல் பிரவேசம்
படத்தில் இருப்பது அஜித் ரசிகர்கள் அதிமுகவுடன் இணைத்து அடித்த போஸ்டர்

அஜித் அரசியல் பிரவேசம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சில வருடங்களுக்குமுன் அஜித், அதிமுக கட்சியில் இணையப்போகிறார். ஜெயலலிதாவிற்கு பிறகு அஜித் அதிமுகவை வழிநடத்தப்போகிறார்.

அஜித்தை அரசியலில் ஈடுபடவைக்க ‘சோ’ போச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார் என செய்திகள் வெளியாகியது.

அந்த நேரத்தில், அஜித் எந்த ஒரு லெட்டர்களும் வெளியிடவில்லை. ஆனால் தற்பொழுது தன்னுடைய அரசியல் பிரவேசம் குறித்த லெட்டர் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது, அஜித் அந்த செய்திக்கு மறுப்பு தெரிவிக்கவில்லை.

அதேவேளை இன்று அவர் அரசியலில் ஈடுபடப்போவதில்லை என அதிகாரப்பூர்வமாக லெட்டர் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அஜித் தான் நடிக்க மட்டுமே வந்துள்ளேன். அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கில்லை. என்னுடைய எண்ணத்தை நான் யார் மீதும் திணிக்க மாட்டேன்.

ரசிகர்கள் எந்த அரசியல் கட்சிகளுடனும் இணைத்து என்னுடைய புகைப்படத்தை வெளியிடக்கூடாது.

மேலும், சமூக அக்கறையுடன், சட்டத்திற்கு உட்பட்டு நடந்துகொள்ள வேண்டும் என லெட்டர் வெளியிட்டுள்ளார்.

அஜித் வெளியிட்டுள்ள லெட்டர் கீழே இணைக்கப்பட்டுள்ளது.

3

பூ-பட்டி: உலகைக் கலக்கிய நாய்க்குட்டிகள் மரணம்!

0
பூ-பட்டி

பூ-பட்டி: உலகைக் கலக்கிய நாய்க்குட்டிகள் மரணம்!

பூ (Boo), பட்டி (Buddy) இரு நாய்க்குட்டிகளும் நல்ல நண்பர்கள். இவர்கள் புகைப்படங்களைப் பார்த்தாலே பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் எனத் தோன்றும்.

பட்டி அடர்த்தியான நீண்ட முடியை கொண்டு இருப்பான். பூ குறைந்த முடியுடன், குறைந்த உயரேமே கொண்டு வசீகர தோன்றம் உடையவள்.

இவர்களின் புகைப்படங்கள், வீடியோக்களை அவ்வபோது இவற்றின் எஜமானர் சமூக வலைதளங்களில் பதிவு செய்தார்.

இரண்டு நாய்க்குட்டிகளுக்கும் ஏராளமான ரசிகர் கூட்டம் உருவாகியது. பூ விடம் எதோ ஒரு ஈர்ப்பு சக்தி இருந்தது.

நாய்களை ரசிக்காதவர்கள் கூட அவளை ரசிப்பார். பார்த்தற்கு ஒரு பொம்மை நாயைப் போன்றே இருப்பாள்.

பட்டி 2017-ம் ஆண்டு தூங்கிக்கொண்டு இருந்தபோதே இறந்துவிட்டது. இதனால் பட்டியை காணாது பூ மிகுந்த மனவேதனையில் இருந்துள்ளது.

தற்பொழுது பூவும் இறந்துவிட்டது. பூவை வரவேற்க பட்டி சொர்க்கத்தில் காத்துக்கொண்டு இருப்பான் என அவற்றின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

முகநூலில் 16 மில்லியன் பலோயர்களைப் பெற்ற பூ, Boo – the life of the world’s cutest dog என்ற புத்தகத்தையும் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

3

90 கோடிக்கு தாலி: அதிரவைத்த அம்பானி மகள்!

0
90 கோடிக்கு தாலி

90 கோடிக்கு தாலி: அதிரவைத்த அம்பானி மகள்!

பாஜக ஆட்சி பீடத்தில் அமர்ந்தது யாருக்கு லாபமோ இல்லையோ, அம்பானி குடும்பத்திற்கு நல்ல லாபம்.

அம்பானியின் அசுர வளர்ச்சி என்ற சிறப்பை பாஜக அரசின் ஆட்சி பெற்றுள்ளது. மோடி எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அது அம்பானி குழுமத்திற்கு சாதகமாகவே உள்ளது என்கிற சர்சைகளும் அவ்வபோது நீடிக்கிறது.

அம்பானி வீட்டுக் குழந்தைகள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கூட பலத்த பாதுகாப்புடன் தான் வருவார்கள்.

16 கோடி மதிப்புள்ள காரில் தான் வெளியில் செல்வார்கள் என சமீபத்தில் வெளியான தகவலுக்கே பலர் வாயைப் பிளந்தனர்.

தற்பொழுது இஷா அம்பானியின் தாலி விலை 90 கோடி என்ற தகவல் பலருக்கு ஹார்ட் அட்டாக்கை கூட வரவழைக்க வாய்ப்பு உள்ளது.

சமீபத்தில் மகளின் கல்யாணப் பத்திரிகையை ராமேஸ்வர கோவில் வைத்து பூஜை செய்தார் அம்பானி.

அந்தப் பத்திரிக்கையே ஒரு பெரிய கிப்ட் பாக்ஸ் போல் இருந்தது. உள்ளே பாதம், பிஸ்தா மேலும் சில ஐட்டங்கள் இருந்தன.

சில நாட்களுக்கு முன்புதான் இஷா அம்பானியின் கல்யாணம் நடந்து முடிந்தது. இத்திருமணத்தில் பல முக்கியப்புள்ளிகள் கலந்து கொண்டனர்.

முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சச்சின் டெண்டுல்கர், அமிதாப் பச்சன், ரஜினிகாந்த் போன்ற பல அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இந்து முறைப்படி, சமஸ்கிருதத்தில் மந்திரங்கள் ஓத, அவர்களின் குல வழக்கப்படி சடங்கு சம்பிரதாயங்களுடன் திருமணம் நடந்து முடிந்தது.

ஆசியாவிலேயே அதிக செலவில் நடந்த திருமணம் என்ற சிறப்பை பெற்றுள்ளது. மொத்த செலவு ரூ.700 கோடியாம். தாலியின் மதிப்பு மட்டுமே 90 கோடி ரூபாய் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

3

ஆதார் மூலம் வெளிநாடு செல்லலாம்: விசா தேவையில்லை!

0
ஆதார் மூலம் வெளிநாடு

ஆதார் மூலம் வெளிநாடு செல்லலாம்: விசா தேவையில்லை!

மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஆதார் அட்டையைக் கிட்டதட்ட அனைத்து மக்களும் பயன்படுத்தத் துவங்கிவிட்டனர்.

இதில் பாதுகாப்பு குறைபாடு உள்ளது எனத் தகவல்கள் வெளியானாலும் ஆதார் தற்பொழுது தவிர்க்க முடியாத அடையாள அட்டையாக மாறிப்போனது.

அரசின் பல உதவிகளையும், நலத்திட்டங்களையும் பெறுவதற்கு ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது குறிப்பிட்ட நாடுகளுக்குச் செல்ல ஆதார் அடையாள அட்டை இருந்தால் மட்டும் போதும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

நேபாளதிற்கும், பூடான் நாட்டிற்கும் இனி விஷா இன்றி செல்லலாம் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, ஆதார் அட்டை மூலம் நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்தியர்கள் சென்று வந்தாலும் 15 வயதுக்கு கீழ், 60 வயதுக்கு மேல் உள்ளவர்கள் செல்லமுடியாத சூழல் நிலவி வந்தது.

பான் கார்டு, ஒட்டுநர் உரிமம், குடும்ப அட்டை, அரசு சுகாதார அட்டை ஆகியவற்றை எடுத்துச்செல்ல வேண்டியநிலை இருந்தது.

இனி, ஆதார் ஒன்று மட்டும் இருந்தால் போதுமானது என மத்திய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேபோன்று மற்ற நாடுகளுக்கும் ஆதார் மட்டும் போதுமானது என அறிவித்தால் பயனுள்ளதாக அமையும் என வெளிநாட்டுவாழ் இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

3

சன்பிக்சரை கதறவிட்ட ப்ளூசட்டை மாறன்!

0
சன்பிக்சரை

சன்பிக்சரை கதறவிட்ட ப்ளூசட்டை மாறன்!

யூடியூப் வலைத்தளத்தில் முதன்முதலில் தமிழ் படத்தை விமர்சனம் செய்தவர் பிரஷாந்த். அவருக்கு அடுத்து விமர்சகராக களத்தில் குதித்தவர் ப்ளூசட்டை மாறன்.

நீண்டகாலம் சினிமாவிற்குள்ளேயே இருந்து பழகிய முதிர்ந்த விமர்சகர். இவருடைய தாரக மந்திரமே 120 கொடுத்து டிக்கெட் எடுத்துருக்கேன். படத்தை விமர்சனம் செய்ய முழுத்தகுதி எனக்கு உண்டு என்பதே.

ஒரு சாதாரண ரசிகனின் கோபம், மாறனின் விமர்சனங்களில் தெரிந்தது. இதன் காரணமாகவே, சினிமா ஆர்வலர்கள் பலரை மாறனின் விமர்சனம் கவர்ந்தது.

மாறன் விமர்சனம் போட்டால்தான் படத்துக்கே போவோம் என அசைக்கமுடியாத ரசிகர் படையை கொண்டுள்ளவர்.

நீலச்சட்டையை மட்டுமே அணிந்து விமர்சனம் செய்வார். ஒரு படம் மோசமாக இருந்தால் பாரபட்சமே பார்க்காமல் கழுவி ஊற்றுவார்.

இவர் கையில் கிடைத்தால் அடிப்பதற்கு ஒரு பெரும் கூட்டமே ஒரு காலத்தில் அலைந்தது. ரஜினி, விஜய், அஜித் இந்த மூவரையும் பிசிறு இல்லாமல் கலாய்த்து தள்ளியவர்.

பல முன்னணி சேனல், ரேடியோ என அதிக சம்பளம் கொடுப்பதாக கூப்பிட்டும் போக மறுத்தார். எந்த ஒரு மீடியாவும் சுந்திரமாக விமர்சனம் செய்யவிடாது என்பது இவருடைய கருத்து.

யூடியூப் ஒன்றே நிரந்தரமானது என அதில் மட்டுமே விமர்சன வீடியோவை வெளியிடுவார். ஆரம்பத்தில் சொற்ப வருமானமே. ஆனால் தற்பொழுது லட்ச லட்சமாக வருவாய் ஈட்டுகிறார்.

சமீபத்தில் இவர் பேட்ட படத்தை பற்றி விமர்சனம் செய்தார். அதில் இரண்டாம்பாதி படுமோசம் என விமர்சித்து இருந்தார்.

இதனால் சன்பிக்சர் காப்பிரைட் நோட்டிஸ் மூலம் மாறனின் வீடியோவை முடக்கியது. அதன்பிறகு மாறனின் டீம் யூடியூப் நிறுவனத்துடன் போராடி வீடியோவை மீட்டனர்.

பொதுவாக யூடியூப்பில் விமர்சனத்திற்கு எல்லாம் காப்பிரைட் செய்யமுடியாது. இருப்பினும் எப்படி வீடியோ டெலிட் ஆனது என்பதே பெரும் விவதமாகியது. ஆனால், மீண்டும் யூடியூப் வீடியோ மீட்கப்பட்டுவிட்டது.

மாறனின் விமர்சனத்தால் சன்பிக்சரும் இறுதியில் கதறிவிட்டனர் என்பதுதான் வேடிக்கை.

3

சந்திர கிரகணம்: இத மட்டும் செய்துவிடாதீர்கள்!

0
சந்திர கிரகணம்

சந்திர கிரகணம்: இத மட்டும் செய்துவிடாதீர்கள்!

சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கலாம் என அறிவியல் கூறுகிறது. அதேவேளை சந்திரகிரகணம் நடைபெறும் நாளில், கதிர்வீச்சுகள் வீரியமாக இருக்கும்.

ஜோதிட சாஸ்திரங்கள் சந்திர கிரகணத்தின்போது, என்ன செய்யவேண்டும். என்ன செய்யக்கூடாது என சிலவற்றை அறிவுறுத்தியுள்ளது.

கிரகணத்தை கண்களால் பார்க்கக் கூடாது

எந்த கிரகணம் ஏற்பட்டாலும், அதைப் பார்க்கக்கூடாது என்பதே நம் மரபு. சந்திர  கிரகணத்தின்போது, மனிதனின் மனதுக்கும் உடலுக்கும் கேடுவிளைவிக்க கூடும் என இதிகாசங்களில் கூறப்பட்டுள்ளதாம்.

எப்போது சாப்பிட வேண்டும்

கிரகண நேரத்தில், சந்திரனின் கதிர் வீச்சு பூமியில் விழும். இதனால் அந்த நேரத்தில் சாப்பிடக்கூடாது.

கிரகணத்திற்கு முன்பே சாப்பிட வேண்டும் அல்லது கிரகணம் முடிந்தபின்பு சாப்பிட வேண்டும்.

கிரகணம் நடைபெறும்போது, உணவு உள்ள பாத்திரத்தில் சிறிது அருகம்புல்லை வைப்பது வழக்கம். இதனால் கிரகணத்தினால் உணவு பாதிக்கப்படாமல் இருக்கும்.

வெளியில் தலைகாட்டக்கூடாது

மனநலம் பாதிப்புக்குள்ளனவர்கள், கர்ப்பிணிகள், நோய்வாய்பட்டோர், கன்னிப்பெண்கள் கிரகணத்தின்போது வெளியில் தலைகாட்டாமல் இருப்பது நல்லது.

தவிர்க்க முடியாத காரணத்திற்காக வெளியே செல்ல நேரிட்டால், ஒரு சிறிய துணியில் நெல் அல்லது அரிசியை முடிந்துகொண்டு செல்லுங்கள். கிரகணம் முடிந்ததும் அதை ஆற்றிலோ கிணற்றிலோ கொட்டிவிட வேண்டும்.

வழிபாடு

கிரகணம் நடைபெறும்போது வழிபாடு செய்வதை தவிர்க்கவேண்டும். கோவில்களை கிரகத்தின்போது அடைத்தே வைத்திருப்பார்கள். வீட்டிலும் பூஜை செய்யாமல் இருப்பது நல்லது.

உடலுறவு கொள்ளக்கூடாது

கிரகண நேரத்தில் உடலுறவு கொண்டு கருவுற்றால், அக்குழந்தை குடும்பத்திற்கு ஆகாதாம். எனவே தம்பதிகள் கிரகண நேரத்தில் பிரிந்திருப்பது நல்லது.

சந்திரகிரணம் என்றால் என்ன? எப்படி உருவாகிறது? சூப்பர் மூன் என ஏன் அழைக்கப்படுகிறது?

3

மோடிக்குப் போட்டியாக மேலுமொரு டீக்கடைக்காரர்: என்ற பகவதியம்மே!

0
மோடிக்குப் போட்டியாக

மோடிக்குப் போட்டியாக மேலுமொரு டீக்கடைக்காரர்: என்ற பகவதியம்மே!

கேரளா மாநிலத்தைச் சேர்ந்தவர் விஜயன். இவரது மனைவி மோகனா. இருவரும் இணைந்து கொச்சியில், டீக்கடை நடத்தி வருகின்றனர்.

இதுவரை இருவரும், 12 வருடத்தில் 23 உலக நாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். 69 வயதான விஜயன், சிறு வயது முதலே உலகைச் சுற்றிப்பார்க்க ஆசைப்பட்டுள்ளார்.

டீக்கடையில் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டே மனைவியுடன் இதுவரை வெளிநாடுகளுக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

இதுவரை அமெரிக்கா, பெரு, அர்ஜெண்டினா, பிரேசில் என பல நாடுகளுக்குச் சென்றுவிட்டார். ஸ்வீடன், டென்மார்க், நார்வே ஆகிய நாடுகளுக்குச் செல்ல திட்டமிட்டுள்ளார்.

இதற்காக கணவனும், மனைவியும் மீண்டும் உழைக்கத்துவங்கி விட்டனர். டீக்கடையில் வேலையாட்கள் யாரும் இல்லை. இவர்களே எல்லாம்.

பயணம் மேற்கொள்ள போதிய பணமில்லை எனில் வங்கியில் கடன்பெற்று வெளிநாடு செல்வார்களாம். திரும்பி வந்தபின் வேலை செய்து கடனை அடைக்கின்றனர்.

டீக்கடை முழுவதும் வெளிநாடுகளில் எடுத்தக்கொண்ட புகைப்படங்களை மாட்டிவைத்து கடைக்கு வருபவர்களை வியக்க வைக்கின்றனர்.

இந்தியப் பிரதமர் மோடியும் டீ விற்று, முதலமைச்சராகி பின்பு பிரதமராகி இன்று உலக நாடுகளைச் சுற்றிவருவது குறிப்பிடத்தக்கது.

என்ற பகவதியம்மே இன்னிக்கே ஒரு டீக்கடை வைக்கணும்.

3