Home Blog Page 320

ஸ்ரீதேவி பங்களா: தெறித்து ஓடிய ஜான்வியும், மேனேஜரும்! (வீடியோ)

0
ஸ்ரீதேவி பங்களா

ஸ்ரீதேவி பங்களா: தெறித்து ஓடிய ஜான்வியும், மேனேஜரும்! (வீடியோ)

மலையாள கண்ணழகி ப்ரியா பிரகாஷ் வாரியார் நடித்த புதிய படத்தின் ட்ரைலர் பொங்கல் அன்று வெளியானது.

அப்படத்தின் பெயரே ஸ்ரீதேவி பங்களா. படத்தில் ஸ்ரீதேவி என்ற பெயரில் நடித்துள்ளார். மை, மையில் என ஒரு குழந்தையிடம் சொல்கிறார்.

மது அருந்திவிட்டு அரை நிர்வாணமாக குளியலறையில் அழுவது போன்றும், இறந்து கிடப்பது போன்றும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.

போனி கபூர் அதிர்ச்சி

இந்த வீடியோவைப் பார்த்ததும் போனி கபூர் அதிர்ச்சியடைந்து விட்டார். ஸ்ரீதேவி பங்களா இயக்குனர் மீது வழக்கு தொடர்ந்துள்ளார். அப்படத்தை வெளியாகவிடாமல் தடுக்கப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.

அதேவேளை படத்தின் இயக்குனர், இது ஸ்ரீதேவின் கதையல்ல. கற்பனை கதையே. படத்தில் ஸ்ரீதேவி என்ற கதாப்பாத்திரம் மட்டுமே உள்ளது. இது ஸ்ரீதேவி பற்றிய கதையல்ல எனத் தெரிவித்துள்ளார்.

லைன்ஸ் கோல்டன் அவார்ட்

இந்நிலையில், மும்பையில் லைன்ஸ் கோல்டன் அவார்ட்ஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஸ்ரீதேவி மகள் ஜான்வி கலந்துகொண்டார்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதில் ஒருவர் ஸ்ரீதேவி பங்களாவைப் பற்றிக் கேள்விகேட்டார்.

ஜான்வி உடனே அதிர்ச்சியடைந்துவிட்டார். கேள்வி கேட்டவுடன் மேனேஜர் குறுக்கிட்டு இப்படி கேள்வி கேட்க வேண்டாம் எனக் கூறினார்.

அடுத்த நொடியே மேனேஜரும், ஜான்வி கபூரும் அங்கிருந்து தெறித்து ஓடினர்.

3

நான் ஆர்எஸ்எஸ்-யைச் சேர்ந்தவன்! உண்மையை உடைத்த பாண்டே

0
நான் ஆர்எஸ்எஸ்

நான் ஆர்எஸ்எஸ்-யைச் சேர்ந்தவன்! உண்மையை உடைத்த பாண்டே

ரங்கராஜ் பாண்டே தந்தி டி.வி.யில் இருந்து விலகியபின், தன்னுடைய யூடியூப் வலைத்தளத்தில் அவ்வப்போது அரசியல் குறித்த நிகழ்வுகளை தெரிவித்துவருகிறார்.

நேற்று, சுதேசி விழிப்புணர்வு மாநாட்டுக் கூட்டத்தில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மேடையில் பேசினார்.

சுதேசி என்பது இந்துத்துவா கருத்தியல் கொண்ட சங்கப் பரிவாரின் பொருளாதாரப் பிரிவாகும். இதுவும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.யைச் சேர்ந்த இயக்கமே.

அந்த மேடையில் பாண்டே பேசியதாவது, தான் ஆர்.எஸ்.எஸ்-சின் பொருளாதாரப் பிரிவில் பேச உள்ளேன். இனி என்னை மோடியின் ஆள் என முத்திரை குத்திவிடுவர்.

ஏற்கனவே, நான் மோடியால் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். ஏஜெண்ட் என முத்திரை குத்தி வதந்திகளை சமூகவலைதளங்களில் பரப்பினர்.

தற்பொழுது இந்த மேடையில் தோன்றியதால் இன்னும் அழுத்தமாக நான் ஆர்.எஸ்.எஸ்.யைச் சேர்ந்தவன் என்று கூறுவார்கள்.

சுதேசி, ஆர்.எஸ்.எஸ் தலைவராலோ அல்லது மோடியாலோ உருவாக்கப்பட்டது அல்ல. அதை உருவாக்கியவர் கரம்சந்த் மோகன்தாஸ் காந்தி.

ஏன்? நான் சுதேசி இயக்கத்தில் பேசுகிறேன், என்பதற்கு பதில் சொல்வதற்கும் இது ஏதுவாய் அமைந்துவிட்டது. இந்திய தேசியம் பேசுகிறவர்களைப் பலர் எதிரியாகப் பார்க்கிறார்கள்.

ஏனய்யா நீங்க மட்டும் தமிழ் தேசியம்னு பேசலாம். இவர்கள் இந்திய தேசியம் பற்றி பேசக்கூடாதா? என தமிழ் தேசியக் கட்சிகளுக்கு கேள்வி எழுப்பினார்.

சுதேசி என்பது புரியாத விசயம் ஒன்றும் இல்லை. அண்ணன் சீமான் பேசுவதற்கு பெயரே சுதேசி.

சீமான் சிறிய அளவில் பேசுகிறார். இவர்கள் மிகப்பெரிய அளவில் சுதேசி பேசுகிறார்கள் என கூறிமுடித்தார்.

3

கணவரால் தாக்கப்பட்ட சரண்யா மருத்துமனையில் அனுமதி

0
கணவரால் தாக்கப்பட்ட சரண்யா

கணவரால் தாக்கப்பட்ட சரண்யா மருத்துமனையில் அனுமதி

திண்டுக்கல் மாவட்டம் கப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் சரண்யா. வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவருடைய கணவர் சற்குணம், பெண் தோழி ஈஸ்வரியுடன் தகாத உறவில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் சரண்யா கணவரைக் கண்டித்துள்ளார். கோபமடைந்த கணவர் சரண்யாவை கீழே தள்ளி தாக்கியுள்ளார்.

இதைப் பக்கத்துக்கு வீட்டுக்காரர் மொபைலில் படம் பிடித்துவிட்டார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.

இந்நிலையில் சரண்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவர் வயிற்றில் பலமாக தாக்கி, மேலே ஏறி அமர்ந்ததால் வலி ஏற்பட்டுள்ளது.

இதனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். கணவர் சற்குணம் மீதும், அவருடைய காதலி ஈஸ்வரி மீதும் காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

3

அம்பானியின் அடுத்த திட்டம்: ஏசி, ப்ரிட்ஜ் 1 ரூபாய்!

0
அம்பானியின் அடுத்த திட்டம்

அம்பானியின் அடுத்த திட்டம்: ஏசி, ப்ரிட்ஜ் 1 ரூபாய்!

அம்பானியின் அடுத்த டார்கெட் அமேசான் மற்றும் பிளிப்கார்டு நிறுவனங்களை ஓரம் கட்டுவதே.

முகேஷ் அம்பானி, ஜியோ என்ற தொலைத்தொடர்பு நிறுவனத்தை துவங்கி பல செல்போன் நிறுவனங்களை நஷ்டமடையச் செய்தார். தற்பொழுது புதிய திட்டம் குறித்து தெரிவித்துள்ளார்.

வேகமாக வளர்ந்து கொண்டு இருக்கும் ஜியோ ப்ரீபெய்ட் சேவையில் 28 கோடி வாடிக்கையாளர்களுக்கு மேல் உள்ளனர்.

மேலும், ரிலையன்ஸ் நிறுவனத்தில் நாடு முழுவதும் 10000 ரீட்டெய்ல் கடைகள் உள்ளது.

புதிய திட்டம் 

ரிலையன்ஸ் மற்றும் ஜியோ சேவைகளை ஒன்றிணைத்து கூடிய விரைவில் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தகத்தை தொடங்கப்போவதாக அம்பானி தெரிவித்துள்ளார்.

மற்ற ஆன்லைன் வர்த்தக நிறுவனங்களான அமேசான், ப்ளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் ரீட்டெய்ல் கடைகள் எதுவும் கொண்டிருக்கவில்லை.

ரிலையன்ஸ் ட்ரெண்ட் என்ற வர்த்தக நிறுவனம் ஏற்கனவே முகேஷ் அம்பானிக்குச் சொந்தமாக உள்ளது.

அதனை ஆன்லைன் மயமாக்கலால் மேலும் அசுர வளர்ச்சியடைய முடியும் என வர்த்தகத்துறையினர் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

குஜராத்தில் மட்டும் 50 லட்சம் ரீட்டெய்ல் கடைகள் உள்ளது. அவற்றை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டுசெல்ல இது ஒரு சிறந்த வழி என அம்பானி தெரிவித்துள்ளார்.

இலவச அறிவிப்பு உண்டா?

அம்பானி முதன்முதலில் 501 ரூபாய்க்கு இரண்டு மொபைல் வழங்கினார். முகேஷ் அம்பானி, ஜியோ மூலம் ஆறு மாதம், ஒரு வருடம் என இலவசமாக சேவையை வழங்கினார் .

அதுமட்டுமல்லாமல், டிடிஎச், ஜியோ பைபர் இன்டர்நெட் சேவைகளும் இலவசமாக அளிக்கப்பட உள்ளது.

AJIO என்ற இணையதளம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது. இதை அனைவருக்கும் பிரபலப்படுத்த இலவச அறிவிப்புகள் வெளியிட வாய்ப்பு உள்ளதாம்.

ஆன்லைன் ஷாப்பிங் மூலம், வீட்டு உபயோகப்பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்களை 1 ரூபாய்க்கு அல்லது குறைந்த பணத்தில் ஆஃப்பர்களை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

3

காதலன் வீட்டுமுன் காதலி தர்ணா: கண்ணீர் மல்க கதறல்!

0
காதலன் வீட்டுமுன் காதலி

காதலன் வீட்டுமுன் காதலி தர்ணா: கண்ணீர் மல்க கதறல்!

சென்னை பூந்தமல்லியைச் சேர்ந்த ஆயிஷாவும் (21), குமணன்சாவடியைச் சேர்ந்த வினோத்குமாரும் (24) என்பவரும் ஒரே நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

முதலில் நட்பு, பின்பு காதல் என இருவரும் காதலிக்கத் துவங்கியுள்ளனர். பின்பு நெருங்கி பழகி உள்ளனர். இதில் ஆயிஷா இருமுறை கர்ப்பமடைந்து கருவைக் கலைத்துள்ளார்.

வினோத்தை திருமணம் செய்துகொள்ள, ஆயிஷா கட்டாயப்படுத்தி உள்ளார். வினோத் இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதனால் இரண்டு மாதங்களுக்கு முன் பூந்தமல்லி காவல்நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார். போலீசார் வினோத்தை பிடித்து விசாரித்துள்ளனர்.

காவல்நிலையத்தில் ஆயிசாவைத் திருமணம் செய்துகொள்வதாக வினோத் கூறியுள்ளார். மேலும், வினோத்தின் பெற்றோரும் அதற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதனால் போலீசார் வினோத்தை விட்டுவிட்டனர். மீண்டும் ஆயிஷா சில நாட்கள் கழித்து வினோத்தை தொடர்புகொண்டபோது, திருமணம் செய்துகொள்ளமாட்டேன் என அடம்பிடித்துள்ளார்.

இதனால் வினோத் வீட்டுவாசலில் உட்கார்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார் ஆயிஷா, கண்ணீர் மல்க வினோத் எப்படி எல்லாம் ஏமாற்றினார் எனத் தெரிவித்தார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வினோத் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால் அங்கிருந்து கலைந்து சென்றார்.

3

அஜித்திடம் தோற்றுவிட்டோமே: மனக்குமுறலில் ரஜினி

0
அஜித்திடம் தோற்றுவிட்டோமே

அஜித்திடம் தோற்றுவிட்டோமே: மனக்குமுறலில் ரஜினி

விஸ்வாசம், பேட்ட ஆகிய இரண்டு படங்கள் ரிலீசுக்கு முன்பே அடிதடியைத் துவங்கிவிட்டனர். டீசரில் பஞ்ச் வசனங்களைத் திணிக்க சமூக வலைதளங்கள் கொழுந்துவிட்டு எரிந்தது.

பொங்கலுக்கு தியேட்டர் பிடிப்பதிலும் இரு தயாரிப்பாளர்களுக்குள்ளும் பிரச்சனை கொழுந்துவிட்டு எரிந்தது. ஒருவருக்கொருவர் ரிலீஸ் தேதியைக்கூட மாற்ற முன்வரவில்லை.

விளைவு ஒரு படம் தியேட்டரில் உட்காரக்கூட இடம் இல்லாமல் ஓடிக்கொண்டிருக்கிறது. இன்னொரு படம் பாதி தியேட்டரே நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. பேட்ட ஹிட். விஸ்வாசம் மெஹா ஹிட்.

இதுதான் இருபடங்களின் வெற்றி நிலவரம். பேட்ட படத்தைவிட விஸ்வாசம் படம் 5 நாட்களுக்குமேல் 400, 300, 250  என்ற கணிக்கில் டிக்கெட் வசூலிக்கப்பட்டது.

பொங்கல் விடுமுறை துவங்கியது முதல் விஸ்வாசம் படத்தின் எல்லா காட்சிகளும் ஹவுஸ்புல். அப்போ வசூல் நிலவரம் எப்படி இருக்கும்னு பாத்துகோங்க.

இது ரஜினிக்கு பெரிய வருத்தத்தைக் கொடுத்துள்ளது. அரசியலில் குதிக்கும் முடிவில் இருந்த ரஜினி, இளைய நடிகருடன் வசூல் ரீதியாக தோல்வியைத் தழுவிவிட்டார்.

அரசியல் குதிப்பதற்குமுன் தன்னுடைய முழுபலத்தையும் மீண்டும் ஒருமுறை பரிசோதித்து பார்த்துக்கொள்ளவது நல்லது.

ரஜினியின் அரசியல் வாழ்க்கைக்கு அஜித்தே அரோகரா சொல்லிவிடுவார் போல உள்ளது.

3

திமுகவிடம் மண்டியிட முயல்கிறதா தேமுதிக?

0
திமுகவிடம்
picture credit: google

திமுகவிடம் மண்டியிட முயல்கிறதா தேமுதிக?

தேமுதிக கட்சியின் தலைவர் விஜயகாந்த் அரசியலில் குதித்தபோது, அடுத்த தலைமுறை முதல்வர், பத்து வருடத்தில் ஆட்சியைப் பிடிக்க வாய்ப்பு உள்ளது எனக் கூறப்பட்டது.

தமிழகம் முழுவதும் தனித்து நின்று, மற்ற கட்சிகளை அசர வைத்தார். ரஜினி வருவார் வருவார் எனக் காத்திருந்த நேரம் விஜயகாந்த் களத்தில் குதித்தார்.

இதனால், ரஜினி ரசிகர்களே பலர் விஜயகாந்த் கட்சியில் சேர்ந்தனர். கடந்த இரண்டு தேர்தல்களிலும் ஜெயலலிதா முதல்வராகியது விஜய்காந்த் மூலமே.

2011 தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன், தேமுதிக கூட்டணி வைத்தது. தேர்தல் முடிவில் ஜெயலலிதா முதலமைச்சரானார். விஜயகாந்த் எதிர்கட்சித் தலைவரானார்.

2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிகவை எப்படியாவது கூட்டணிக்கு இழுக்க முயன்றது திமுக. பழம் நழுவி பாலில் விழவில்லை.

இரவு கூட்டணிக்கு சம்மதம் தெரிவித்துவிட்டு காலையில் மக்கள் நலக்கூட்டணியில் இணைந்துவிட்டார்.

விஜயகாந்தை திமுகவுடன் சேரவிடாமல் இறுதி நிமிடத்தில் மக்கள் நலக்கூட்டணிக்குள் இழுத்தனர். இதனால் அத்தேர்தலில், தேமுதிகவுக்கு பெரும் பின்னடைவு.

திமுகவும் தோல்வியைத் தழுவியது. திமுக, தேமுதிக இருகட்சிகளின் வாக்குகளைச் சேர்த்தால் அதிமுகவைவிட அதிகம். விஜயகாந்தின் தவறான முடிவால், ஜெயலலிதா மீண்டும் முதலமைச்சரானார்.

இந்த தேர்தலில் அவரை மேடையில் காண்பதே அரிது. அவரால் சுத்தமாக பேசமுடியவில்லை. ஞாபக மறதியும் அதிகமாகிவிட்டது. எனவே இனி அவர் மேடையில் தோன்றுவது சாத்தியமில்லை.

பொங்கல் பரிசைக்கூட, விஜயகாந்தின் மகனே மேடையில் தோன்றி தேமுதிக தொண்டர்களுக்கு வழங்கினார்.

இம்முறை அதிமுக கட்சியே இரண்டாகப் பிளந்து ஊசலாடிக்கொண்டு இருக்கிறது. தமிழகத்தில் பெரிய கட்சி என்றால் திமுக என்ற ஒற்றை மரமே கண்ணில் தென்படுகிறது.

அதிமுக நிலைக்குமா? என்பது தேர்தலுக்குப் பிறகே முழுமையாகத் தெரியவரும். எனவே, தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கலாம் என யோசித்து வருகிறதாம்.

பாஜக கூட்டணிக் கதவுகள் திறந்தே உள்ளது எனக் கூறினாலும், அக்கட்சியுடன் தேர்தலை சந்திக்க தேமுதிக விரும்பவில்லை.

திமுகவே வரும் தேர்தலில் வெற்றி பெரும் என கருத்துக்கள் நிலவி வருகிறது. இதனால் திமுகவுக்கு, சுதீஷ் தூது அனுப்பி வருகிறாராம்.

நேரடியாக கேட்டால் மனம்போய்விடுமோ எனக்கருதி காங்கிரஸ் கட்சி மூலம் தூது அனுப்பி உள்ளனர். ஆனால் காங்கிரஸ் கட்சி கூட தேமுதிகவை ஒரு பொருட்டாக மதிக்கவில்லையாம்.

திமுக கட்சி தேமுதிகவை கெஞ்சிய காலம்போய்…. தேமுதிக கட்சி திமுகவிடம் மண்டியிடும் காலம் வந்துவிட்டது.

அரசியலில் எதுவம் நிரந்தரமில்லை என்பதற்கு இதுவே சான்று.

3

வரிசையில் நின்று பர்கர் வாங்கிய பில்கேட்ஸ்

0
வரிசையில் நின்று

வரிசையில் நின்று பர்கர் வாங்கிய பில்கேட்ஸ். புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல்.

உலகின் நம்பர் ஒன் பணக்காரர் பில் கேட்ஸ். இவர், பர்கர் வாங்குவதற்காக வரிசையில் நின்ற புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த 63 வயதான பில் கேட்ஸ், 95 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் நிறுவனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை வெறும் 8 டாலர் மதிப்புள்ள பர்கர் வாங்க சிவப்பு சொட்டர், க்ரே பேண்ட் அணிந்து சியாட்டில் (seattle) என்ற நகரில் உள்ள டிக்ஸ் ட்ரைவ் (dick’s drive) கடை முன்னே வரிசையில் நின்றுள்ளார்.

இந்தப் புகைப்படமானது முதலில் மைக்ரோசாப்ட் பேஸ்புக் குரூப்பில் போஸ்ட் செய்யப்பட்டது. இதுவரை 15000 லைக்குகளும் 12000 சேர்களும்  செய்யப்பட்டுள்ளன.

மற்ற பணக்கார பிரபலங்கள் போல் இல்லாமல், நிஜவாழ்க்கையில் எளிமையை விரும்புபவர் பில் கேட்ஸ் ஆவார்.

இவருடைய எளிமையால் இப்புகைப்படம் பயங்கரமாக சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

3

உலகக்கோப்பை: எந்தநிலையிலும் இறங்கி அடிக்கத் தயார்!

0
உலகக்கோப்பை

உலகக்கோப்பை: எந்தநிலையிலும் இறங்கி அடிக்கத் தயார்!

பலே ஃபார்ம் எம்‌.எஸ்.தோனி

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து முடிந்தது. இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.

முதல் போட்டியில் ஆமை வேகத்தில் விளையாடியதால் இந்தியா தோல்வியைத் தழுவியது என தோனியை அனைத்து ஊடகமும்  விமர்சனம் செய்தன.

வழக்கம் போல அமைதிகாத்த ‘கேப்டன் கூல்’ 2, 3-வது போட்டிகளில் முக்கியமான தருணத்தில் தொடர்ந்து அரைச்சதம் அடித்து அணியின் வெற்றிக்கு உதவினார் .

இந்த தொடரில் 3 அரைச்சதங்களுடன் மொத்தம் 193 ரன்கள் அடித்துள்ளார். தொடர்ந்து உலகின் நம்பர் ஒன் ப்னிஷர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார்.

2010-ம் ஆண்டிற்குப் பிறகு இத்தொடரில், தொடர்நாயகன் விருதை வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ரன்  சேசிங்கில் தோனி சராசரி 100க்கு மேல் வைத்துள்ளார். இவருக்கு அடுத்ததாக இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இருக்கிறார்.

2018 சிறப்பான ஆண்டாக அமையாவிட்டாலும் இந்த ஆண்டில் அருமையான தொடக்கத்தை வெளிப்படுத்தி அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலளித்துள்ளார்.

தோனியின் கருத்து,

பொதுவாகவே கடைசி ஓவர் வரை போட்டியைக் கொண்டு சென்று திரில்லாக சேஸ் செய்வதே தோனியின் வழக்கம்.

இந்தப் போட்டியில் விக்கெட் இல்லாமல் போனதால், மிகவும் பொறுமையாக ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது.

கேப்டன் கோலி மற்றும் கேதார் ஜாதவ் நல்ல பர்ட்னர்சிப் கொடுத்ததால் விக்கெட் சரிவு இல்லாமல் எளிதாக போட்டியை வெல்ல இயன்றது எனக் கூறினார்.

மேலும், உலக கோப்பை போட்டிகளில் தோனியின் பேட்டிங் பொசிஷன் பற்றி கேட்கையில்,

14 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் அணியின் வெற்றியை மட்டுமே கருத்தில் கொண்டுள்ளேன். அணியின் தேவைக்கு ஏற்ப எந்த இடத்திலும் களம் இறங்கி அடிக்கத் தயார் எனக் கூறியுள்ளார்.

3

குடும்பத்துடன் மாயமானார் நடிகர் அஜித்! – பரம ரகசியம்

0
குடும்பத்துடன் மாயமானார்

குடும்பத்துடன் மாயமானார் நடிகர் அஜித்! – பரம ரகசியம்

நடிகர் அஜித் வீடு சென்னை திருவான்மியூரில் இருந்தது. அங்கு அவ்வபோது ஏராளமான அஜித் ரசிகர்கள் திரண்டு வந்தனர்.

அதன்பிறகு அஜித், சுவரின் உயரத்தைக் கூட்டினார். அப்படியும் ரசிகர்கள் விடுவதாய் இல்லை. காலை முதல் மாலை வரை காத்துகிடந்த ரசிகர்கள் கூட உண்டு.

சமீபகாலமாக அஜித் அந்த வீட்டில் இல்லை. அவர் வீட்டைக்காலி செய்துவிட்டு வாடகை வீட்டில் குடியேறியதாக தகவல்கள் வெளியாகின.

ஆனால், அஜித் குடும்பத்துடன் புதிய வீட்டிற்குச் சென்றுவிட்டார். தற்பொழுது அவர் எந்த வீட்டில் வசிக்கிறார் என்பது எந்த நடிகர்களுக்கும் தெரியாது.

திரைத்துறையில் உள்ள எவருக்கும் தெரிந்துவிடாதபடி ரகசியமாக, சத்தமில்லாமல் புதிய வீட்டில் குடியேறிவிட்டார்.

காரணம், ஒருவருக்கு தெரிந்துவிட்டால் காத்துவாக்கில் ஒவ்வொரு நடிகருக்கும் தெரிந்துவிடும்.

பின்பு திரைத்துறையில் கசிந்துவிடும். அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்கள் காதிற்குச் சென்றுவிடும்.

அவர்களுக்குத் தெரிந்துவிட்டால் புதிய வீட்டிலும் ரசிகர்கள் தொல்லை அதிகமாகிவிடும்.

அவர்களை தவிர்க்கவும் மனமில்லை விரும்பிப் பார்த்தால் தமிழகமே படையெடுத்து வந்து விடும்.

எனவே தர்ம சங்கடமாகிவிடும். இதைத் தவிர்ப்பதற்காகவே வீட்டை மாற்றியுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் பல திரைப்பிரபலங்கள் விழாக்களுக்கு அழைக்க முயற்சித்துள்ளனர். அவர் வீடு மாற்றிய விஷயமே அதன்பிறகு தான் வெளியில் கசிந்துள்ளது.

தமிழ்சினிமா வட்டாரத்தில் துருவித்துருவி விசாரணை செய்தும் பலரும் தெரியவில்லை என்று தான் கூறி உள்ளனர்.

அஜித் குடும்பத்துடன் மயமாகி, தனித்து வசித்து வருகிறார். அவரைப் பார்க்கவேண்டும் என்றால் படப்பிடிப்பில் மட்டுமே சாத்தியம்.

3